{5:77}__1+
{$}
சீரியார் பயில் சேறையுட் செந்நெறி நாரி பாகன் தன் நாமம் நவிலவே
if one utters the names of Civaṉ who has a lady as a half in the temple Cenneṟi in Cēṟai where noble people are crowded.
புண்ணியம் பூரியாவரும்
all virtuous acts will come to him in full.
பொய்கெடும்
all false-hood will vanish.
கூரிதாய அறிவு கைகூடிடும்
his sharp intellect will prosper

{5:77}__2+
{$}
நெஞ்சமே
my mind!
மின்னுவார் சடை வேத விழுப்பொருள்; செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி மன்னுசோதி நம் பால் வந்து வைகவே
the light divine which is permanent in cenneṟi in cēṟai which has fields producing red variety of superior paddy, and the highest object of the vētams who has a long caṭai which glitters like lightning, to come to us and stay with us.
என்ன மாதவம் செய்தனை
what great penance you performed in the previous births!
[[cf. எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே, பந்தம் வீடு அவை ஆய பராபரன் அந்தம் இல் புகழ் ஆரூர் அரனெறி, சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே (nāvukkaracar, tiruvārūr tirukkuṟum tokai (2) 2)]]

{5:77}__3+
{$}
பிறப்பு மூப்புப் பெரும் பசி வான்பிணி இறப்பு 1. நீங்கி
as birth, old age, great hunger, big diseases and death leave us.
இன்பம் வந்து எய்திடும்
happiness will come to us of its own accord,
சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல் மறுப்பது இன்றி மனத்தினுள் வைக்க
if one places in his mind without forgetting the feet of the god in cenneṟi in cēṟai, when eminent people live
[[வைக்க நீங்கி, இன்பம் வந்து எய்திடும் is the syntactical link.]]
[[Variant reading: 1. நீங்கிடும்]]

{5:77}__4+
{$}
ஊமர்காள்
you who are dumb people!
மாடுதேடி
acquiring wealth
மயக்கினில் வீழ்ந்து
falling into confusion
நீ ஓடி எய்த்தும் பயன் இலை
there is no benefit when you get tired having run for the acquisition of wealth.
சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மின்
save yourselves by approaching the feet of the dancing god who dwells with desire in cenneṟi in cēṟai, where noble people live.

{5:77}__5+
{$}
நாளும் எண்ணி
counting the days of your life
1. எரி மயிர்க் கூற்றுவன்
the god of death who has hairs like fire.
2. துண் ணென் தோன்றின் துரக்கும் வழி கண்டேன்
I found out a way to drive him out if he appears before me to frighten me
திண்ணன் சேறைத் திருச் செந்நெறி உறை அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே?
the strong chief who dwells in wealthy cenneṟi in cēṟai is there to protect us; why should we be afraid of anything?
[[Variant reading: 1. எரி அயில் 2. துண்ணென்றொன்றின்.]]

{5:77}__6+
{$}
1. தப்பி வானம் தரணி கம்பிக்கில் என்?
what does it matter if the sky and the earth quake, changing from their positions?
ஒப்பு இல்வேந்தர் ஒருங்குடன் சீறில் என்?
what does it matter if all the kings who have no equals combine and be angry with us.
செப்பம் ஆம் சேறைச் செந்நெறி மேவிய அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே?
the father who dwells in cenneṟi in cēṟai and who is impartial is there to protect us; why should we be afraid of anything?
[[cf. வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும், தானம் துளங்கித்தலை தடு மாறில் என்! தண்கடலும் மீனம் படில் என்! விரிசுடர் வீழில் என்! வேலை நஞ்சு உண்டு ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே;
மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ் உலகும், விண்பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே, திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப் புலியூர்க், கண்பாவும் நெற்றிக் கடவுப் சுடரான் கழலிணையே (nāvukkaracar (general) taṉittiruviruttam, 8; pātirippuliyūr, 9)]]
[[Variant reading: 1. தப்பில் வானம்]]

{5:77}__7+
{$}
வைத்த மாடும்
the wealth that we earned and saved to fall back upon in times of adversity.
மடந்தை நல்லார்களும்
wives.
ஒத்து ஒவ்வாத உற்றார்களும்
and relations who are united with us if we are in affluent circumstances for all outward appearance and leave us when we are in straits, without real love at heart.
எண் செய்வார்
what help will they render when death overtakes us?
சித்தர்
Civaṉ who has the form of a mystic who has acquired eight mysterious powers.
சேறைத்திருச் செந்நெறி உறை அத்தர் (தாம்) உளர்
the father who dwells in tiruccenneṟi in cēṟai is there to protect us.
அஞ்சுவது என்னுக்கே
why should we be afraid of anything

{5:77}__8+
{$}
நெஞ்சமே
my mind!
குலங்கள் என் செய்வ
who good will noble lineage do to us?
1. குற்றங்கள் என் செய்வ
what harm will faults do to us?
துலங்கி நீ நின்று சோர்ந்திடல்
you do not be depressed in spirits being agitated in mind.
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய அலங்கனார் உளர்
the shining god who dwells with desire in cenneṟi in eminent cēṟai is there to protect us.
அஞ்சுவது என்னுக்கோ
why should we be afraid of anything?
[[Variant reading: 1. குற்றம் தான்]]

{5:77}__9+
{$}
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் விழ விடாவிடில்
if we do not leave the relations knowing that they do not really love us, (to make them leave us,)
1. வேண்டிய எய்த ஒணா
we cannot get the good things that will really be of great help to us.
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய அழகனார் உளர்
the beautiful Civaṉ who dwells with desire in cenneṟi in cēṟai which excells other shrines, is there to protect us.
அஞ்சுவது என்னுக்கே
why should we be afraid of anything?
[[Variant reading: 1. வேண்டியது]]

{5:77}__10+
{$}
பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான் வருந்த ஊன்றி
fixing the feet to make Irāvaṇaṉ who seized and held in his hands the mountain eminent by its fame in which Civaṉ was seated.
மலர் அடி வாங்கினான்
he gently took away the lotus feet.
திருந்து 1. சேறையில் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே
there will be no affliction to those who praise Civaṉ as the light divine that dwelt always with desire in cenneṟi in cēṟai which is perfect in every respect.
[[Variant reading: 1. சேறையுள்]]