{5:76}__1+
{$}
திருவின் நாதனும் செம்மலர் மேல் உறை உருவனாய்
Being himself Māl, the husband of Tiru, and the beautiful Piramaṉ who is seated on a red lotus flower.
உலகத்தின் உயிர்க்கு எலாம் கருவனாகி முளைத்தவன்
Civaṉ came into existence by himself as the embryo for all living beings in this world.
கானூரில் பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மின்
is the divine light which is the supreme god in Kāṉūr; (people of this world!) You realise this fact.

{5:76}__2+
{$}
பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி (1) உண்டு இறே என்று உகவன் மின்; ஏழைகாள்!
Ignorant people! Do not feel elated thinking Do we not have wives, children, great companions, and good wealth!
நீர் புண்டரீகப் பொதும்பரில் ஒதுங்கியே கானூர் முளையினைக் கண்டு கொண்மின்
you have a vision of the sprout in Kāṉūr detaching yourselves from the attachments of wordly things searching him in the recess of your heart which is like a lotus flower.
[[Note: all editions have the reading உண்டின்றே. It should be உண்டன்றே I think it should be உண்டிறே;]]
[[இறே a particle frequently used in vaishṇava religious writings and mostly occuring at the end of sentences to indicate that the subject mentioned is either (1) common knowledge or (2) one which must be known by all or (3) one that is emphatically so. A slight variation of this word as எறே is found in the old gloss on Akanāṉuṟu, 41-12.]]
[[Variant reading: (1) உண்டின்றே, உண்டிதே]]

{5:76}__3+
{$}
தாயத்தார் தமர் நல் நிதி என்னும் இம் மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்
(my mind!) Do not get confused falling into the illusion of agnates, relations and wealth by which one can do all good things.
கயாத்தே உளன் கானூர் முளையினை வினை மாய வாய் அத்தால் வணங்கீர்
worship the shoot in Kāṉūṟ which is hidden in your body and praise him with your sincere love, for the Karmams to perish. (The first two lines are addressed to his mind and the next two lines to the people of this world.)

{5:76}__4+
{$}
குறியில் நின்று உண்டு
Eating the food standing with the intention of begging.
கூறை இலாச்சமண் நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்
I caught hold of the feet which pervades everywhere, abandoning the religion of the camaṇar who are without clothes (naked)
அறியலுற்றிரேல்
if you desire to know.
கானூர் முளையவன்
Civaṉ who became self-existent in Kāṉūṟ.
என் சிந்தையே செறிவு செய்திட்டிருப்பது
is staying in my mind itself being united with it.

{5:76}__5+
{$}
பொத்தல் மண் சுவர்ப் பொல்லாக் குரம்பையை மெய்த்தன் என்று வியந்திடல்; ஏழைகாள்!
ignorant people! Do not wonder at the body which can be compared to a hut, which is ugly and is like a wall constructed with mud and having nine holes, as real.
[[மெய்த்தான் has become மெய்த்தன் for rhyme, the underlined letters are also augmentations for the same.]]
சித்தர் பத்தர்கள் சேர் திருக்கானூரில் அத்தன் பாதம் அடைதல் கருமமே
Reaching the feet of the father in Kāṉūṟ where persons of eight mystic powers and pious people throng, is that which most be done by us.

{5:76}__6+
{$}
கல்வி, ஞானக்கலைப் பொருள் ஆயவன்
Civaṉ who is education, spiritual wisdom, and the one who can be realised by a study of the arts.
செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை எல்லியும் பகலும் இசைவு ஆனவா(று) சொல்லிடீர், நும் துயரங்கள் தீரவே
sing night and day the praises of Civaṉ in Kāṉūr where wealth is increasing, according to your ability, so that your sufferings may leave you.

{5:76}__7+
{$}
நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும் காரும் (0) மாருதம் கானூர் முளைத்தவன்
Civaṉ who came into self-existence is himself the water, the earth the fire, the sun, the clouds and the air.
சேர்வும் ஒன்று அறியாது
knowing little the place where he stays.
(1) திசை திசை ஓர்வும் ஒன்று இலர் ஒடித்திரிவர்
people of this world will wander in all directions with little reflections.
[[Variant reading: (1) திகை திகை]]
[[NOTE_VAR: (0) MS had மாதரும்; I have corrected as மாருதம் according to PIFI and to another edition {jlc}]]

{5:76}__8+
{$}
ஓமத்தோடு அயன் மால் அறியாவண்ணம், வீமப் பேரொளியாய விழுப்பொருள்
the highest object that became the great dreadful fire that could not be known by Ayaṉ who performs sacrifices and Māl.
காமற் காய்ந்தவன்
Civaṉ who burnt Kāmaṉ
கானூர் முளைத்தவன்
came into self-existence in Kāṉūṟ
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே
my mind is the place which he thinks as affording protection.

VMS9.
(This verse is lost).

VMS10 / {5:76}__PIFI9+
{$}
கன்னி மாமதில் கானூர்க் கருத்தன்
Civaṉ as creator in Kāṉūr which has a big wall of enclosure which enemies are afraid of approaching and therefore does not know destruction
வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல் தன்னை வீழத்தனிவிரல் வைத்தவன்
is the one who placed a single toe to destroy the excessive strength of arakkaṉ who went and intentionally lifted the mountain of Civaṉ who adorned himself with leaves of indian mesquit, koṉṟai and yārcum.