- Patikam: {5:70}
- Talam: Tiruk Koṇṭīccuram
- Paṇ:
- Title: Tiruk Kuṟuntokai
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1981
- Volume Number: 8
- Pages: 83-86
- Text entering: 98/11/24 (Ramya)
- Further editing: 2001/11/19 (SAS & jlc)
- {5:70}__1+
{$}
- காளையர் தங்கள் பால் மண்டி
- being united with youths
- [[PP_: காளை
பதினாறு பிராயத்தான்;
takkayākapparaṇi, 5, old commentary.]]
- கண்டபேச்சினில் ஏச்சுணும்
மாதரைச் சேராதே
- without joining the
women who indulge in abuse according to
their fancy and pocketing their insults.
- சண்டியீச்சுவரர்க்கு அருள் செய்த
அக்கொண்டியீச்சுவரன் கழல் கூறுமே
- (People of this
world!) speak about the greatness of the
feet of that famous Koṇṭiyīccuravaṉ who
bestowed his grace on Caṇṭiyīccuravaṉ.
- {5:70}__2+
{$}
- சுற்றமும் துணை நல்
மடவாளொடு பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்
- the relations, the
good-natured lady who is the life-partner
and children that were born, have
given up loving me.
- குற்றம் இல்
புகழ்க் கொண்டீச் சுரவனார் பற்றலால் மற்று ஒரு
பற்று இல்லையே
- there is no
other support except the support of
Koṇṭiiccuravaṉar, of spotless fame.
- {5:70}__3+
{$}
- மாடு(தான்) அது இல்
எனின் மாநுடர் பாடு தான் செல்வாரில்லை
- if one has no
wealth people will not go near him.
- பல் மாலையால்
கூட நீர் சென்று கொண்டீச்சுரவனைப் பாடுமின் பரலோகத்து
இருத்தும்
- (People of this
world!) you sing about the fame of
Koṇṭīccuravaṉ, approaching him with
many garlands; he will fix you
permanently in the world of liberated
souls.
- {5:70}__4+
{$}
- தந்தை தாயொடு தாரம்
எனும் தளைப் பந்தம் ஆங்கு அறுத்து
- cutting the bondages
of father, mother and wife which bind you.
- பயில்வு எய்திய
- in order to attain
eternal life.
- கொந்து அவிழ் பொழில்
கொண்டீச்சுரவனைச் சிந்தை 1. செய்மின்கள் சேவடிசேர
- to reach the
lotus-red feet of the Lord in Koṇṭiccuram
which has gardens where bunches of flowers
unfold their petals, meditate on him.
(People of this world!)
- [[Variant reading:
1. செய்மினவனடிச்சேரவே,
செய்ம்மினவனடிசேரவே]]
- {5:70}__5+
{$}
- கேளுமின்
- (People of this
world!) listen to me.
- இளமை(ய்ய) அது கேடு வந்து
- having lost the
period of youth.
- ஈளையோடு இருமல்(ல்)
அது எய்தன் முன்
- before you get
cough and phlegm (the letters within
brackets are augmentation for metre)
- கோள்
1. அரவு அணி கொண்டீச்சுரவனை நாளும் ஏத்தித் தொழுமின்
- worship with
folded hands praising Koṇṭiccuravaṉ who
adorns himself with cobra which has the
nature of killing.
- நன்கு ஆகுமே
- it will do you
immense good.
- [[Variant reading:
1. அரா]]
- {5:70}__6+
{$}
- வெம்பு நோயும்
இடரும் வெறுமையும் துன்பமும் துயரும்(ம்) எனும் சூழ்வினை
- the fruits of
the Karmams that encircle us, ie; the
diseases which make the body hot,
mental sufferings, poverty, physical
sufferings and the sufferings that
one has to undergo by being born.
- கொம்பனார்
பயில் கொண்டீச்சுரவனை எம்பிரான் என வல்லவர்க்கு இல்லையே
- will not be
with those who are able to say our
Lord in Koṇtīccuram where ladies
who are like the tender supple
twigs of a plant are in large
numbers.
- {5:70}__7+
{$}
- அல்லலோடு அரு நோயில்
1. அழுந்தி நீர் செல்லுமா நினையாதே
- without thinking
about the right path, having sunken in
sufferings and incurable diseases.
(People of this world!)
- கனை குரல் கொல்லை
ஏறுடைக் கொண்டீச்சுரவனை வல்லவாறு தொழ வினைமாயுமே
- all your Karmams
will vanish if you worship Koṇṭiccuravaṉ
who has a bellowing bull which lives
in the forest tract, according to
your ability.
- [[Variant reading:
1. அழுந்து நீர்]]
- {5:70}__8+
{$}
- நாறு சாந்து அணி நல்
முலை மென் மொழி மாறு இலா மலை மங்கை ஓர் பாகமாக்
கூறனார் உறை கொண்டீச்சரம் நினைந்து
- thinking of
Koṇṭiccuram where Civaṉ who has as a half the
daughter of the mountain to whom none can
be compared, who has beautiful breasts
on which is smeared fragrant sandal-paste.
- ஊறுவார் தமக்கு ஊனம்
ஒன்று இல்லையே
- for those who
increase in their piety there will not
be the slightest defect.
- {5:70}__9+
{$}
- அயில் ஆர் அம்பு
எரி, மேருவில் ஆகவே
- using the fire
as the sharp-pointed arrow and the
mountain, mēru as the bow.
- எயிலாரும் பொடியாய்
விழ எய்தவன்
- Civaṉ shot an
arrow to reduce to ashes all those
who lived in the three forts.
- குயில் ஆரும் பொழில்
கொண்டீச்சுரவனைப் பயில் வாரும் பெருமை பெறும் பாலரே
- those who worship
Civaṉ in Koṇṭiccuram which has gardens
which has cuckoos in abundance, are
by nature great people.
- {5:70}__10+
{$}
- நிலையின் ஆர்
வரை நின்று எடுத்தான் தனை மலையினால் அடர்த்து விறல்
வாட்டினான், குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத்
தலையினால் வணங்கத் தவம் ஆகுமே
- paying obeisance
by lowering the head to the Lord in
Koṇṭīccuram which has gardens having
clusters of fruits, and who destroyed
the erst - while victory of the
arakkaṉ who lifted the mountain, firmly
fixed, with that mountain itself, is
equal to penance