- Patikam: {5:43}
- Talam: Tiru Nallam
- Paṇ:
- Title: Tiruk Kuṟuntokai
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1980
- Volume Number: 6
- Pages: 170-172
- Text entering: 98/11/13 (Ramya)
- Further editing: 2001/11/17 (SAS & jlc)
- {5:43}__1+
{$}
- ஏழைகாள்
- ignorant people!
- கொல்ல (த்தான்)
நமனார் தமர் வந்தக்கால்
- when the messengers
of the god of death come to take away
your lives.
- இல்லத்தார் செய்யல்
ஆவது என்?
- what is that
which people in the house (wife and
sons) can do to prevent it?
- நல்லத்தான்
- Civaṉ in Nallam.
- நமை ஆள் உடைய
என் கழல் சொல்ல (த்தான்) வல்லிரேல் துயர் தீரும்
- your sufferings
will cease if you are capable of praising
the feet of one who has us as his protege.
- {5:43}__2+
{$}
(ஏழைகாள்
ignorant people!)
- பொக்கம்
பேசிப் பொழுது கழியாதே
- without wasting
your life talking all kinds of lies.
- துக்கம் தீர்
வகை செல்லுவன்
- I shall tell
you the way to remove your sufferings.
- கேண்மின் (ஓ)
- please listen to me.
- தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன்
- Civaṉ who has
the colour of fire and who devastated
the sacrifice of takkaṉ.
- நக்கன்
- and who is naked.
- சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே
- it is good for you
to reach nallam in which he dwells.
- {5:43}__3+
{$}
- பிணி கொள்
வார் குழற் பேதையர் காதலால் பணிகள் மேவிப்
பயன் இலை
- there is no
good if you do the commands of the
women, on account of the love that
you place on them who have long
tresses of hair which captivate
your minds by their beauty.
- பாவிகாள்
- sinners!
- அணுகவேண்டில் அரன் நெறி ஆவது
- if you wish to
follow it is only the path shown by araṉ.
- நாதன் நகர் நல்லம் நணுகும்
- you reach nallam,
the city of the master.
- [[பிணிகொள் வார் குழல்
may also mean
long tresses of hair tied into a knot.]]
- {5:43}__4+
{$}
- தமக்கு நல்லது தம்
உயிர் போனால்
- if your life leaves
the useless body it is good for you.
(தமக்கு
-: the 3rd person
is used in the sense of 2nd person pronoun).
- இக்குரம்பை (தான்)
இமைக்கும் போதும் இராது
- This body will
not be stable even for a small time
taken for the winking of the eye
- உமைக்கு நல்லவன்
(தான்) உறையும் பதி
- the place where
the husband of Umai dwells.
- நல்லம் அடைவது நமக்கு நல்லது
- it is good for us
to reach his nallam and worship him there.
- {5:43}__5+
{$}
- உரை தளர்ந்து
உடலார் நடுங்கா முனம்
- before the body
quivers nd the speech falters (due to
old age).
- நரை விடை உடையானிடம்
நல்லமே பரவுமின்
- (people of this
world!) praise nallam, the place of Civaṉ
who has a white bull
- [[உடலார்: ஆர்
is used to disparage the body]]
- பணி மின்
- Bow before it
- பணிவாரொடு விரவுமின்
- join those
who bow to it.
- விரவாரை விடுமின்
- leave the
company of those who do not join
in worship.
- {5:43}__6+
{$}
- அல்லல் ஆக ஐம்பூதங்கள்
ஆட்டினும்
- even if the
five elements harass us to give
us sufferings.
- வல்லவாறு சிவாய நம
என்று நல்லம் மேவிய நாதன் அடி தொழ
- if we worship
the feet of the master who dwells in
nallam, uttering Civaya nama' (his
mantiram) according to our ability.
- வெல்லவந்த
வினைப் பகை வீடும்
- the enemy
of Karmams which came to conquer
us will meet with destruction.
- (People of this world!)
- {5:43}__7+
{$}
- மாதராரொடு
மக்களும் சுற்றமும் பேதமாகிப் பிரிவதன் முன்னமே
- before your
wife, children and relations disagree
with you and go away from you.
- நாதன் மேவிய
நல்லம் நகர் தொழப் போதுமின், எழுமின்
- start and go
to worship the city of nallam
where the master, Civaṉ dwells.
- புகல் ஆகுமே
- he is our refuge.
- {5:43}__8+
{$}
- நம்மை ஆள்
உடையான் இடம் நல்லம் சும்மை ஆர் மலர் தூவித் தொழுமின்
- (people of this
world!) worship scattering flowers on
which bees hum loudly, nallam, the
place of Civaṉ who has us as his
protege
- [[சும்மை = சுமை
the
ம்
may be taken
as an augmentation; சுமை
will mean loads.]]
- வெம்மையான வினைக்
கடல் நீங்கி நீர் செம்மை ஆய சிவகதி சேரலாம்
- you can attain
eternal bliss which is the right
thing, having crossed the cruel
ocean of Karmams.
- {5:43}__9+
{$}
- காலம்
ஆன கழிவதன் முன்னமே
- before the
remaining life passes away.
- ஏலு மாறு வணங்கி நின்று ஏத்துமின்
- praise for a
long time bowing, according to
your capacity.
- மாலும்
மாமலரானொடு மாமறை நாலும் வல்லவர் கோன்
இடம் நல்லம்
- nallam, the
place of the Lord of those who are
well-versed in the great four vetams,
Piramaṉ in the big (lotus) flower
and Māl.
- {5:43}__10+
{$}
- மல்லை மல்கிய தோள்
அரக்கன் வலி ஒல்லையில் ஒழித்தான் உறையும் பதி
- the place
where Civaṉ who quickly destroyed the
strength of the arakkaṉ who had
shoulders of increasing greatness.
- [[மல்லை-பெருமை
greatness;
- மல்லைக்கடல் மல்லைத்
தலசயனம் (periya tirumoḻi, 2-6-6);
- மல்லைச் செல்வ வடமொழி
மறைவாணர் (tiruvāimoḻi, 8-9-8);
- மல்லல் கடைக் குறைந்து ஐகாரம்
விரிந்து நின்றது
(Kōvaiyār, 368, pērāciriyar's commentary)]]
- நல்ல நல்லம்
எனும் பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வர்
- those who are
capable of saying
with their tongues the name of good Nallam
will attain blemishless eternal bliss.