{4:39}__1+
{$} குண்டனாய்
Being low in character.
சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத் துண்டனே
Civaṉ who cut to pieces the delusion which I had by being associated with the camaṇar!
சுடர் கொள் சோதி
the light which has brightness!
தூநெறி ஆகிநின்ற அண்டனே
the god who is the pure path!
திருவையாறு அமர்ந்த தேனே
the honey that is in tiruvaiyāṟu!
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே
I, who am your serf wander telling the greatness of your feet and worshipping them.
[[Variant reading: அறிகின்றேனே ]]

{4:39}__2+
{$} பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி
carrying in the arms peacock's feathers and thinking it to be a big penance.
வாலிய தறிகள் போல மதி இலார்பட்டது என்னே
what a suffering those who had no intellect, and who were like white wooden posts, had undergone!
[[தறிகள் are compared to jains]]
[[PP: தறியார்... சமண் கையர்,
தறி போலாம் சமணர்
(Campantar, aṉpilalantuṟai, 10, irāmaṉatēccaram, 9)]]
வாலியார் வணங்கி ஏத்தும் திருவையாறு அமர்ந்த தேனோடு ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்தவாறே
my mind which rose with great joy enjoying the honey in tiruvaiyāṟu, worshipped and praised by Vāliyār; what a fine act it did!
[[From this we learn that Vāli worshipped in Tiruvaiyāṟu also]]

{4:39}__3+
{$} தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி
Being proud in the company of camaṇar who sit upon the mat placed on the ground and thinking it to be penance
[[தட்டு இடு சமணர் camaṇar [whose] dress is palmyra mats (??)]]
ஒட்டிடும் மனத்தீரே
my mind which bound yourself to that act!
உம்மையான் செய்து என்னே
what can I do with you!
மொட்டுஇடு கமலப் பொய்கைத் திருவையாறு அமர்ந்த தேனோடு ஒட்டிடும் உள்ளத்தீரே
my mind which is in union with the honey in Tiruvaiyāṟu which has natural tanks in which lotus puts forth buds!
உம்மை நான் உகந்திட்டேனே
I am immensely pleased with you.
[[Mind is spoken as a personal class of beings: மனத்தீரே, உம்மை]]

{4:39}__4+
{$} பாசிப்பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்குமாறு அறிய மாட்டேன்
I am not capable changing my mind which was in love with camaṇar of fruitless acts and dirty bodies and green teeth due to accumulation of filth in them.
தேசத்தார் பரவி ஏத்தும் திருவையாறு அமர்ந்ததேனை வாசத்தால் வணங்கவல்லார் வல்வினைமாயும் (அன்று, ஏ)
the irrestible karmams of those who bow,with fragrant flowers before the honey in tiruvaiyāṟu where the people of this world praise him in the second person and third person, will vanish; it is definite.
[[வாசம் residing in Tiruvaiyāṟu; residence in a shrine for a prescribed number of days is recommended in the local purāṇam]]

{4:39}__5+
{$} மெய்யில் கடுப்பொடி அட்டி
pouring the powder of gall-nut on the body.
கருதி ஓர்தவம் என்று எண்ணி
thinking it to be penance after mature thought
வடுக்களோடு இசைந்த நெஞ்சே
my mind which was united with all blemishes!
1. மதியிலிபட்டது என்னே
what a suffering you what had no intellect, had undergone!
மடுக்களில் வாளைபாயும் திருவையாறு அமர்ந்த தேனை அடுத்து நின்று உன்னு; நெஞ்சே-!
my mind! always think of approaching the honey in tiruvaiyāṟu where in the deep place of rivers the scabbard fish leaps
அருந்தவம் செய்தவாறு
it is equal to performance of severe penance
[[Variant reading: 1. மதியி]]

{4:39}__6+
{$} துறவி என்று அவம் அது ஓரேன் சொல்லிய செலவு செய்து
Having treaded the path which was ordained in the jain scripture without any benefit and doing the fruitless actions of the amaṇar thinking without examining they were ascetics who had renounced completely.
[[துறவி-துறவு renunciation;
மாதவி துறவிக்குக அயர்ந்து (Maṇimēkalai, 2-10-11)]]
[[துறவு துறவியென நின்றாற்போல அளவு அளவியென நின்றது' (Kōvaiyār, 10, Pērāciriyar)]]
உறவினால் அமணரோடும் உணர்விலேன் உணர்வு ஒன்று இன்றி
without understanding even a little I became attached to amaṇar and therefore I had no intelligence.
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திருவையாறு அமர்ந்த தேனை மறவு இலா நெஞ்சமே
my mind which did not forget the honey in Tiruvaiyāṟu surrounded by gardens which are abundant in honey!
நன்மதி உனக்கு அடைந்தவாறே
what a wonder you had good discrimination!

{4:39}__7+
{$} பல்லுரைச் சமணரோடு பலபல காலமெல்லாம் சொல்லிய செலவு செய்தேன்
I performed all deeds as ordained in the jain scriptures in company with the camaṇar who look at things from various points of view for very many years
நான் நினைந்தபோது சோர்வன்
when I think of that I get fatigued.
மல்லிகை மலரும் சோலைத் திருவையாறு அமர்ந்ததேனை எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனியவாறே
How sweet it is to think throughout night and day, about the honey in tiruvaiyāṟu which has gardens where jasmine blossoms.

{4:39}__8+
{$} ஏழை நெஞ்சே
my mind which has no intelligence!
மண்ணுளார் விண்ணுளாரும் பாவம் போக வணங்குவார்
people of this earth and celestials pay obeisance to Civaṉ in order to be free from sins.
தெண்ணிலா எறிக்கும் சென்னித் திருவையாறு அமர்ந்ததேனைக் கண்ணிணால் காணப்பெற்றுக் கருகிற்றே முடிந்தவாறே
what a wonder I fulfilled my desire by having a view, with my own eyes, the honey in tiruvaiyāṟu on whose head the spotless crescent shines giving clear light.

{4:39}__9+
{$} குருந்தம் அது ஒசித்தமாலும் குலமலர் மேவினானும் திருந்து நற்றிருவடியும்திருமுடி (உம்) காணமாட்டார்
Māl who broke the wild-lime tree and Piramaṉ who is on a superior (lotus) flower were unable to have a view of the holy flawless feet and head of Civaṉ.
[[குருந்து ஒசித்தமால்: Māl who hid himself in the wild-lime tree;
கொல்லை அம் சாரற் குருந்து ஒசித்த மாயவன் (Cilappatīkāram, 17-20)
குருந்தமொன்று ஒசித்தானொடு சென்று (periyāḻvar tirumoḻi 4-4-7)]]
அருந்தவ முனிவர் ஏத்தும் திருவையாறு அமர்ந்ததேனைப் பொருந்தி நின்று உன்னு; நெஞ்சே
my mind! think of the honey in tiruvaiyāṟu who is praised by sages who have done severe penances, by going near him.

{4:39}__10+
{$} அறிவு இலா அரக்கன் ஓடி அருவரை எடுக்கலுற்று முறுகினான்
The senseless arakkaṉ ran and lifted the great mountain and was in the height of his insolence.
முறுகக்கண்டு
seeing him to be such
மூதறிவாளன் நோக்கி
Civaṉ of great intellect knowing in his mind
நெரிந்துபோய் நிலத்தில் வீழச்சிறு விரலால் நிறுவினான்
pressed his small toe to make him fall on the earth, his body being crushed
திருவையாறு அமர்ந்ததேன் அருள்கள் செய்தான்
the honey in tiruvaiyāṟu gave him many kinds of grace by his compassion.
[[அறிவினால் may be taken as belonging to Civaṉ. It may also mean that Irāvaṇaṉ regained his sense realising his mistake and so Civaṉ granted his grace]]
[[This decade contains in every verse Nāvukkaracar having been a jain in his early age]]