- Patikam: {3:30}
- Talam: Tiru Arataipperumpāḻi
- Paṇ: Kolli
- Title:
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1982
- Volume Number: 09
- Pages: 259-262
- Text entering: 98/09/11 (Ramya)
- Further editing: 2000/11/14 (SAS & jlc)
Note: This shrine is known by the name
of Harittuvāra Maṅkalam.
- {3:30}__1+
{$}
பைத்த பாம்பு அரைக் கோவணத் தோடு பாய்புலி
- wearing in the waist
a cobra with spreaded hood,
men's loin-cloth and the skin of a pouncing tiger.
- மொய்த்த பேய்கள் முழக்கம்(ம்)
முதுகாட்டிடை நித்தமாக(ந்) நடம் ஆடி
- dancing daily in the
old cremation ground while the pēy-s which
crowd round, play on instruments in a high pitch.
- [[(ம், ந்
are augmentations for rhythm.]]
- வெண்ணீறு அணி பித்தர் கோயில்
அரதைப்பெரும்பாழியே
- Arataipperumpāḻi is the
temple of Civaṉ who adorns himself with white
sacred ash.
- [[பாழி
means cavern, as the
Civaliṅkam, the presiding deity is known by
the name of pataḷecurar, this temple should
have got its name Arataipperumpāḻi]]
- {3:30}__2+
{$}
கயல சேல
கருங் கண்ணியர் நாள்தொறும் பயலை கொள்ளப் பலி தேர்ந்து உழல்
பான்மையார்
- Civaṉ who has the
nature of wandering to receive alms daily
while the ladies with black eyes, which are
like the carp and the carnatic carp,
have their complexion turning sallow (R).
- இயலை வானோர்
நினைந்தோர்களுக்கு எண் அரும் பெயரர் கோயில் அரதைப்பெரும்பாழியே
- Arataipperumpāḻi is
the temple of Civaṉ who has innumerable
names to count even for the celestials
who fix their thoughts on his nature
- [[நினைந்தோர்கள் ஆகிய வானோர்க்கும்]]
- {3:30}__3+
{$}
கோடல் சால(வ்) உடையார்
- Civaṉ has the habit
of receiving alms in large quantities.
- கொலையானையின் மூடல் சால(வ்) உடையார்
- covers himself
tightly with the skin of an elephant
which is capable of killing.
- முளி கானிடை ஆடல் சால(வ்) உடையார்
- dances very much
in the scorched cremation ground.
- அழகு ஆகிய பீடர்கோயில் அரதைப்பெரும்பாழியே
- Arataipperumpāḻi is
the temple if the great and beautiful god,
Civaṉ.
- [[The letter வ்
in the first three lines
are augmentation for `rhythm']]
- {3:30}__4+
{$}
மண்ணர், நீரார், அழலார்
மலி காலினார், விண்ணர்
- Civaṉ is the earth,
water, fire, air which is found everywhere
and the sky.
- வேதம் மெய்ப் பொருள் விரித்து ஓதுவர்
- will instruct his disciples
about the true meaning of the Vētam-s explaining them.
- பண்ணர்
- is music itself.
- பாடல் உடையார்
- has the nature of singing.
- ஒரு பாகமும் பெண்ணர்
கோயில் அரதைப்பெரும்பாழியே
- Arataipperumpāḻi is
the temple of Civaṉ who has on one half
completely a lady.
- {3:30}__5+
{$}
வாயின் மொழி மறையர்
- the words that come
out of Civaṉ's mouth is Vētam.
- மானொடு,
வெண்மழு, கறை கொள் சூலம் (ம்) உடைக்கையர்
- holds in his
hands a deer, a sharp battle-axe and
a trident which has stains.
- [[வெண்மழு
a white hot iron is another meaning.]]
- கார் ஆர்
தரும் நறை கொள் கொன்றை (1) நயந்தார்
- desired the
koṉṟai flowers which have honey
(fragrance) and blossom profusely
in rainy season.
- சென்னிமேல்
தரும் பிறையர்கோயில் அரதைப்பெரும்பாழியே
- Arataipperumpāḻi is
the temple of Civaṉ who placed on his head a crescent.
- [[Variant reading:
(1) நயந்தூர்தரும்]]
- {3:30}__6+
{$}
புற்று அரவம், புலித்தோல்
அரைக் கோவணம் தற்று
- wearing tightly on
the waist a cobra that lives in the anthill,
a tiger`s skin, and a men's loin-cloth.
- இரவில் நடம் ஆடுவர்
- will dance at night.
- தாழ்தரு சுற்று அமர் பாரிடம்
- the army of pūtam which
bow before him will be surrounding him
- [[அமர்
is used in the place (R)
of a finite verb like நேர்
in the Kuṟaḷ:
உறுவது சீர்தூக்கும்
நட்பும் பெறுவது, கொள்வாரும் கள்வரும் நேர்
(813), which is used in the
sense of நேர்வர்]]
- தொல்கொடியின் மிசைப்
பெற்றர் கோயில் அரதைப்பெரும்பாழியே
- Arataipperumpāḻi is
the temple of Civaṉ who has on his ancient
flag the figure of a bull.
- {3:30}__7+
{$}
அம் சுரி சங்கு துணை இறுத்து
- causing the beautiful
spiraling two conches to stay in the ear.
- அமர் வெண்பொடி (பூசி)
- smearing himself
with the white sacred ash which he
desires so.
- இணை இல்
ஏற்றை ஊர்ந்து ஏறுவரும்
- Civaṉ who rides
on a peerless bull with joy,
- [[உம்
is expletive.]]
- எரி கணையினால் முப்புரம் செற்றவர்
- and who destroyed the
three cites with an arrow spitting fire.
- கையினில் பிணையர்
கோயில் அரதைப்பெரும்பாழியே
- Arataipperumpāḻi is
the temple of Civaṉ who holds in his hand
a deer.
- {3:30}__8+
{$}
சரிவு இலா வல்
அரக்கன் தடந்தோள் தலை நெரிவில் ஆர(வ்) அடர்த்தார்
- Civaṉ pressed
completely by crushing the head and big
shoulders of the strong arakkaṉ who
never yielded in battles hiterto.
- நெறி மென் குழல்
அரிவை பாகம் அமர்ந்தார்
- desired as a half
a lady who has soft and curly tresses
of hair.
- அடியாரொடும் பிரிவு
இலாத கோயில் அரதைப்பெரும்பாழியே
- Arataipperumpāḻi is
the temple in which Civaṉ is never separated
from his devotees.
- {3:30}__9+
{$}
வரி அரா என்பு அணி மார்பினர்
- Civaṉ wears on
his chest a cobra with lines, and bones.
- நீர் மல்கும் எரி
அராவும் சடைமேற் பிறை ஏற்றவர்
- put on a crescent
on his catai which is like fire and
which is full of water.
- கரிய மாலோடு அயன்
காண்பு அரிது ஆகிய பெரியர் கோயில் அரதைப்பெரும்பாழியே
- Arataipperumpāḻi
is the temple of the great one whom Ayaṉ
along with black Māl found it difficult
to have a vision of.
- {3:30}__10+
{$}
நாண் இலாத சமண்
சாக்கியர் நாள்தொறும் ஏண் இலாத(ம்) மொழிய(வ்) எழிலாயவர்
- Civaṉ who rose
in esteem though camaṇar and cākkiyar
who had no sense of shame spoke words
which have no strength of arguments.
- [[எழில் - எழுச்சி)
rising in esteem;]]
- [[PP: நுண் மாண் நுழை புலம்
இல்லான் எழில் நலம் (Kuṟaḷ 407)]]
- சேண் உலாம் மும்மதில் தீ
எழச் செற்றவர்
- destroyed by making
fire rise in the three forts which wandered
in the sky.
- பேணு கோயில்
அரதைப்பெரும்பாழியே
- aratirupperumpāḻi is
the temple desired by him.
- {3:30}__11+
{$}
நீரின் ஆர் புன்சடை
நிமலனுக்கு இடம் எனப்பாரினார் பரவு அரதைப்பெரும்பாழியை
- about Arataipperumpāḻi
which the people of this world praise as
the place of the immaculate Civaṉ who has
on his ruddy catai water.
- சீரின் ஆர் காழியுள்
ஞானசம்பந்தன் செய் ஏரின் ஆர் தமிழ்வல்லார்க்கு இல்லை(ஆம்) பாவமே
- there will be
no sins to those who can recite the
beautiful tamiḻ verses composed by
ñāṉcampantaṉ in famous Kāḻi
- [[All the four இன்
are unnecessary
augmentation used in combination, as
of nouns and case endings, in which they
are absolutely necessary
(நீரார், பாரார் சீரார், ஏரார்
will do).]]