{2:119}__1+
{$} தழைகொள் சந்தும் ஆகிலும் மயிற் பீலியும் சாதியின் பழமும் உந்தி
pushing the fruits of nutmeg, feathers of peacock, eagle-wood trees, and sandal-wood that grows luxuriantly
புனல் பாய் பழங்காவிரித் தென்கரை
on the southern bank of the old Kāviri in which the water flows.
நழுவுஇல் வானோர் தொழ நல்கு சீர்மல்கு நாகேச் சரத்து அழகர்பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே
beauty will come to those who can worship with joined hands and praise the feet of the beautiful god in Nākēccaram of increasing eminence which grants boons to the celestials who are not slack in worshipping god.
[[As Civaṉ is beautiful he grants beauty to his worshippers]]

{2:119}__2+
{$} பொன் ஓர் பாகம் அடைய
the lady being in one half,
சடையில் புனல் பேணிய வண்ணம் ஆன பெருமான்
the beautiful god who desired the water (of Kaṅkai) to stay in his catai
மருவும் இடம் நண்ணி
reaching his dwelling place
மண் உளார் நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சரம் கண்ணினால் காணவல்லார் அவர் கண் உடையார்களே
those who are able to see with their eyes Nākēccaram which the people of this world reach, and obtain all auspicious things by worshipping and praising it are really to be considered to possess eyes.

{2:119}__3+
{$} குறவர் கொல்லைப் புனம் கொள்ளை கொண்டு (ம்)
plundering completely the produce of the cultivated farm which lay fallow previously and belongs to Kuṟavar.
மணி குலவுநீர் பறவை ஆலப்பரக்கும் பழங்காவிரித்தென்கரை
situated on southern bank of the ancient Kāviri whose water in which precious stones are shining, spreads to make the birds to make a loud noise.
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து ஆகாய நாகேச்சரத்து இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு
to those who are able to worship with joined hands and praise the feet of the god in Nākēccaram which is beautiful by being surrounded by gardens where honey spreads its fragrance.
இடர் இல்லையே
there will be no sufferings
[[கொல்லை is the word to denote uncultivated land;
puṉam (புனம்) is the word used to denote it when it is cultivated;]]
[[PP_EXT: கொல்லை இரும்புனம் நெடிய என்னாது
(Akam, 89-17)]]
[[PP_EXT: புனமாகிய கொல்லையென்க; புனமென்பது முன்பு பயிராகியதனை; கொல்லையென்றது பயிரின்றித் தரிசாய்க் கிடந்த காட்டினை
(DO. old commentary)]]
[[PP_EXT: கொல்லை இரும்புனத்துக்குன்றி அடைந்த புல்
(Nālaṭiyār 178)]]

{2:119}__4+
{$} கூசம் நோக்காது
without caring for shyness,
[[கூசம்-கூச்சம் shyness; கூசம் ஒன்றும் இன்றி (Tiruccantu viruttam, 20); பேசுமின் கூசமின்றி (Tiruvāymoḻi, 10-2-4); கூசம் நீக்கி (Cuntarar tiruvetirkoḷāāti, 7); கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் (Campantar, Tiru Nāraiyūr (2) 8)]]
சொன்ன பொய்
lies which were spoken
கொடுவினை
cruel actions
குற்றமும்
and other faults
நாசம் ஆக்கும் மனத்தார்கள்
those who are determined to destroy these foregoing things.
வந்து ஆடும் நாகேச்சரம்
Nākēccaram to which they come and bathe in the holy tanks.
தேசம் ஆக்கும் திருக்கோயிலாக்கொண்ட செல்வன் கழல் நேசம் ஆக்கும் திறத்தார்கள்
those group of people who cherish with love the feet of the god who has as his brilliant temple (Nākēccaram)
அறத்தார்நெறிப்பாலரே
follow the path of rightousness and prepare themselves to attain eternal bliss.

{2:119}__5+
{$} வம்பு நாறும் மலரும் மலைப் பண்டமும் கொண்டு நீர்பைம்பொன் வாரிக்கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
situated on the southern bank of the ancient kāviri which washes away by its waves, carrying in large quantities flowers which spread new fragrance, and articles found in the mountain, and pure gold.
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
those who approach Nākēccaram where Civaṉ always stays.
உம்பர் வானோர்தொழச் சென்று உடன் ஆவதும் உண்மையே
reaching Civalōkam worshipped by the celestials who are in the upper world, and becoming one with god is true.

{2:119}__6+
{$} காளமேக(ந்) நிறக்காலனோடு அந்தகன் கருடனும் நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின்
if one remembers the sufferings undergone by Kālaṉ (god of death) who has the colour of the sable cloud, Antakācuraṉ, Karuṭaṉ, and Kāmaṉ who discharged arrows on Civaṉ, standing at a distance.
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம்
even if the planets and stars happen to be bad, they will do good to those who approach Nākēccaram where the master always stays.
குறிக்கொள் மின்
(people of this world!) fix this firmly in your minds.

{2:119}__7+
{$} வேய் உதிர்முத்தமொடு மத்தயானை மருப்பும் விராய்ப், பாய்புனல் வந்து அலைக்கும் பழங்காவிரித் தென்கரை
on the southern bank of the ancient Kāviri whose flowing water comes and erodes the bank, having in it mixed the tusk of the rutting elephant and pearls that fall from the bamboos
[[pearls are produced in bamboos in a poetical convention.]]
ஞாயிறும் திங்களும் கூடிவந்து ஆடும் நாகேச்சரம் மேயவன் தன் அடிபோற்றி என்பார் வினை வீடும்
the Karmams of those who say Let the feet of the god who is in Nākēccaram where the sun and the moon come and bathe joining together, protect us will perish.
[[சந்திரன்னொடு சூரியர் தாமுடன், வந்துசீர்வழிபாடுகள் செய்தபின் (Appar, Nākēccaram Tirukkuṟuntokai, 4)]]

{2:119}__8+
{$} இலங்கை வேந்தன் சிரம்பத்து இரட்டி எழில் தோள்களும் மலங்கி வீழ(ம்) மலையால் அடர்த்தான் இடம்
the place of Civaṉ who pressed down with the mountain the ten heads and twenty shoulders of the king of Ilaṅkai to fall distressed.
மல்கிய நலம் கொள்சிந்தையவர் நாள் தொறும் நண்ணும் நாகேச்சரம் வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயினமாயுமே
the sufferings of those who have the mind to go from left to right Nākēccaram which is approached daily by those who have the mind for increasing selfdenial.

{2:119}__9+
{$} கரிய மாலும் அயனும் அடியும் முடி(யும்) காண்பு ஒணா எரிஅது ஆகி நிமிர்ந்தான் இடம்
the shrine of Civaṉ who shot up as a column of fire and whose feet and head the black Māl and Ayaṉ could not find out.
ஈண்டு காவிரியின் நீர் வந்து அலைக்கும் கரைமேவும் நாகேச்சரம் பிரிவிலாத(வ்) அடியார்கள்
the devotees who do not leave Nākēccaram which is on the bank on which the increasing flood of the Kāviri is dashing
வானில் பிரியார்கள்
will not leave heaven. [[They will always be in heaven]]
[[Kāviri has been split into கா + விரி the former retained in the 2nd line and the latter at the beginning of the 3rd line. This is done to suit prosody, this is called vakaiyuḷi', scansion in disregard of speech-rhythm)

{2:119}__10+
{$} தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர் கட்டுரைக்கும் மொழி கொள்ளலும்
(People of this world) Do not accept the fabricated words of the cākkiyar, and of [the amaṇar] who carry in their hands a network of ropes suspended by a cord from the hand, in which is placed the ascetic's pitcher, and taking under their arms mats to sit upon.
வெள்ளில் அம்காட்டிடை நட்டிருட்கண் நடம் ஆடியநாதன் நாகேச்சரம் மட்டு இருக்கும் மலர்இட்டு அடிவீழ்வது வாய்மையே
it is an ever-truthful act to fall at the feet of the master in Nākēccaram who danced at the dead of night in the cremation ground where there are funeral biers, by placing flowers in which there is honey.
[[நடு+இருள் has become நட்டிருள் ]]

{2:119}__11+
{$} கந்தம் நாறும் புனற் காவிரித் தென்கரைக் கண்ணுதல் நந்தி சேரும் திருநாகேச்சரத்தின்மேல்
on Nākēccaram in which Nanti who has an eye on the forehead stays, which is on southern bank of the Kāviri whose water spreads a sweet smell.
ஞானசம்பந்தன் நாவில் பனுவல் இவைபத்தும் வல்லார்கள் போய்
those who are able to recite these ten verses that were in the mouth of Ñāṉacampantaṉ, will go after death,
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே
and are capable of reaching the world where our father Civaṉ dwells (Civalōkam)