- Patikam: {1:94}
- Talam: Tiru Ālavāy (Maturai)
- Paṇ: kuṟiñci
- Title: Tiru Irukkuk Kuṟaḷ
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1983
- Volume Number: 11
- Pages: 1-2
- Text entering: 97/12/03 (Vaidehi)
- Further editing: 99/09/04 (SAS & jlc)
- {1:94}__1+
{$}
நீலமாமிடற்று ஆலவாயினான் பால் (அது) ஆயினார்
- those who drew near Civaṉ in Ālavāy who
has a blue neck.
- ஞாலம் ஆள்வர் (ஏ)
- will rule over the world (as kings)
- {1:94}__2+
{$}
- (People of this world!)
- காலன் வீட (ஏ)
- to destroy Kālaṉ (the god of death).
- ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார் சீலமே சொலீர்
- speak always the easy approachable
nature of Civaṉ in Ālavāy who is the cause for coming into
existence of the seven worlds.
- {1:94}__3+
{$}
ஆலநீழலார், ஆலவாயிலார், காலகாலனார்பால் (அது) ஆமின் (ஏ)
- approach Civaṉ who is in Ālavāy, who is
under the shade of the banyan tree and who dealt death to
the god of death himself.
(People of this world!)
- {1:94}__4+
{$}
அந்தம்இல்புகழ் எந்தை ஆலவாய் பந்திஆர்கழல் சிந்தைசெய்மின் (ஏ)
- (People of this world!) fix your thoughts on
the feet of our father in Ālavāy, to which is fastened Kaḻal, and
who has limitless fame.
- {1:94}__5+
{$}
ஆடல் ஏற்றினார் கூடல் ஆலவாய் பாடியே மனம் நாடி வாழ்மின் (ஏ)
- (People of this world!) singing the fame
[of] Ālavāy which has another name Kūṭal, of Civaṉ who has a victorious
bull, lead your lives desiring earnestly that shrine.
- {1:94}__6+
{$}
அண்ணல் ஆலவாய் நண்ணினான்தனை எண்ணியே தொழத் திண்ணம் இன்பம் (ஏ)
- to worship with joined hands meditating on
Civaṉ who is in eminent Ālavāy, happiness is a certainty.
- {1:94}__7+
{$}
அம்பொன் ஆலவாய் நம்பனார் கழல் நம்பி வாழ்பவர் துன்பம் வீடும்(ஏ)
- the sufferings of those who live placing
their trust in the feet of Civaṉ who is in Ālavāy which has
beautiful gold, will vanish.
- {1:94}__8+
{$}
(1) அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் உரைக்கும்
உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மை (ஏ)
- it is a true fact that those who have a
heart which speaks sincerely about Ālavāy, the shrine of Civaṉ who
pressed the strength of arakkaṉ, will have mercy.
- [[(அரக்கனார்: ஆர்
is added to denigrate arakkaṉ]]
- [[Variant reading: (1)அரக்கனாள்வலி]]
- {1:94}__9+
{$}
அருவன் ஆலவாய் மருவினான்தனை இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்கும்(ஏ)
- the form of fire was rising higher and higher
when both Māl and Piramaṉ were praising Civaṉ who is in Ālavāy and
who has no form of his own.
- {1:94}__10+
{$}
ஆரம் நாகம் ஆம் சீரன் ஆலவாய்த் தேர் அமண் செற்ற வீரன் என்பர் (ஏ)
- wise people say that the famous Civaṉ
who has garlands of cobras is the valourous god, who destroyed
buddhists and amaṇar, in Ālavāy.
- {1:94}__11+
{$}
அடிகள் ஆலவாய்ப் பழகொள் சம்பந்தன் முடிவு இல் இன்தமிழ்
செடிகள் நீக்கும் (ஏ)
- the sweet and her lasting Tamiḻ verses
of Campantaṉ who is qualified to receive the grace of the God
in Ālavāy, will remove all evils.