{1:71}__1+
{$} பிறைகொள் சடையர்
Civaṉ has a crescent on his caṭai.
புலியின் உரியர்
wears a tiger's skin.
பேழ்வாய் நாகத்தர்
has a cobra of gaping mouth.
கறைகொள் கண்டர்
has a neck in which there is poison.
கபாலம் ஏந்தும்கையர்
holds in his hand a skull.
கங்காளர்
puts on his body a complete skeleton.
மறைகொள்கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி
feeling happy in the houses of great people when they sing the songs of vētam.
சிறைகொள்வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
is in Citticcaram of Naṟaiyūr where bees with wings drink honey sumptuously.

{1:71}__2+
{$} பொங்குஆர்சடையர்
Civaṉ has a caṭai which stands on end.
புனலர்
has water in it.
அனலர்
holds fire in his hand.
பூதம் பாடவே தம் காதலியும் தாமும் உடனாய்
himself being in company with his wife when the pūtams sing.
தனி ஓர்விடை ஏறி
riding on a single bull which is peerless.
கொங்கு ஆர்கொன்றை வன்னிமத்தம்சூடி
adorning himself with koṉṟai flowers having honey, leaves of indian mesquit and datura flowers.
குளிர்பொய்கைச் செங்கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சரத்தார்
is in citticcaram where in the cool natural tanks male swans of red legs and their females live together.

{1:71}__3+
{$} முடிகொள் சடையர்
Civaṉ has a caṭai coiled into a crown.
முளைவெண்மதியர்
has a crescent that is rising.
மூவாமேனிமேல்
on the body which shows no signs of aging.
பொடிகொள் நூலர்
wears a sacred thread rolling in the sacred ash.
புலியின் அதளர்
wears a tiger's skin.
புரிபுன்சடை தாழ
has a twisted golden caṭai that hangs low.
கடிகொள் சோலை வயல்சூழ் மடுவில் கயல்ஆர் இனம் பாய
when the species of Kayal (a kind of fish) leap in the deep places of pools which is surrounded by fields and fragrant gardens.
கொடிகொள் மாடக்குழாம் ஆர் நறையூர்ச் சித்தீச்சரத்தார்
is in citticcaram of naṟaiyūr which has a row of storeys which have flags.

{1:71}__4+
{$} பின்தாழ்சடைமேல் நகுவெண்தலையர்
Civaṉ has a laughing skull on the caṭai which hangs down on the back.
பிரமன் தலை ஏந்தி
holding the skull of Piramaṉ.
மின்தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒருகாதர்
wears on one ear a mens' ear-ring made of conch, in the body which defeats the brightness of the lightning.
பொன்தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் சென்று ஆர் செல்வத்திருஆர் நறையூர்ச்சித்தீச்சரத்தார்
is citticcaram in naṟaiyūr where wealth is flourishing and the fragrance of koṉṟai which is like gold, a kind of sedge which blossoms like gold, mastwood tree and champak, is wafted by the air to a long distance.

{1:71}__5+
{$} நீர் ஆர் முடியர்
Civaṉ has on his head water.
கறைகொள் கண்டர்
has a black neck.
மறைகள் நிறை நாவர்
his tongue is full of vētams.
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே
when the pious persons and people having mysterious powers sing and dance, as Civaṉ has a fame spread throughout the world.
தேர் ஆர் வீதி முழவுஆர் விழவின் ஒலியும் திசை செல்ல
the bustle of the festival in which muḻavu is played, and cars are drawn, reach the ends of the four directions.
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர்ச்சித்தீச்சரத்தார்
is in citticcaram in naṟaiyūr where eminent beauty is brilliant.

{1:71}__6+
{$} நீண்டசடையர்
Civaṉ has a long caṭai.
நிரைகொள் கொன்றை விரைகொள் மலர்மாலை
wears a garland of fragrant koṉṟai flowers which blossoms in a row.
தூண்டு சுடர்பொன் ஒளிகொள்மேனிப் பவளத்து எழிலார்
has the beauty of coral in the bright body which has the colour of gold which has brilliance always increasing.
வந்து ஈண்டு மாடம் எழில் ஆர்சோலை இலங்கு கோபுரம் தீண்டுமதியம் திகழும் நறையூர்ச்சித்தீச்சரத்தார்
is in citticcaram in naṟaiyūr where the moon which comes into contact with the tower which is prominent at a distance beautiful garden, and storeys which are close to each other, are situated.

{1:71}__7+
{$} குழல் ஆர்சடையர்
Civaṉ has a curly caṭai.
கொக்கின் இறகர்
wears a flower as white as the crane's feather.
கோலநிறம் மத்தம்
wears also a beautiful and bright datura flower.
தழல் ஆர்மேனித்தவள நீற்றர்
smears on his body which is red like fire, white holy ash.
சரிகோவணக்கீளர்
wears a mens' loin-cloth sliding down, which is tied to a strip of cloth used as a waist-band.
எழில் ஆர் நாகம் புலியின் உடைமேல் (1) இசைத்து விடைஏறி
riding on a bull, fastening a beautiful cobra on the dress of a tiger's skin.
கழல் ஆர்சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தார்
comes to make the Kaḻal and anklet of rare workmanship to make a sound and is in citticcaram.
[[Variant reading: (1) இசைந்து]]

{1:71}__8+
{$} கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலைமலை தன்னைவரை ஆர்தோளால் எடுக்க முடிகள் நெரித்து
crushing the heads when the king of ilaṅkai surrounded by sea with a coastline, lifted the mountain, Kayilai by his shoulders as strong as the mountain.
மனம் ஒன்றி உரை ஆர்கீதம் பாட நல்ல உலப்பு இல்அருள்செய்தார்
granted his unbounded good grace when he sang famous songs, concentrating his mind.
திரை ஆர் புனல்சூழ் செல்வ நறையூர்த் சித்தீச்சரத்தார்
such a god is in the temple in citticcaram in flourishing naṟaiyūr surrounded by water having waves.

{1:71}__9+
{$} நெடியோன் பிரமன் நேடிக்காணார்
Civaṉ could not be seen even though tall Māl and Piramaṉ searched him (in heaven and earth)
நினைப்பார் மனத்தாராய்
and at the same time dwelling in the minds of those who meditate on him.
அடியார் அவரும் அருமாமறையும் அண்டத்து அமரரும்
devotees and abstruse, great vētams and immortels in heaven.
முடியால் வணங்கி
paying obeisance by bending their heads.
குணங்கள் ஏத்தி
praising his qualities.
முதல்வா! அருள்' என்ன
when they pray, the origin of all things! grant your grace.
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தார்
is in the temple citticcaram in naṟaiyūr where the superior variety of red paddy grows like a jungle.

{1:71}__10+
{$} நின்று உண் சமணர்
camaṇar who eat their food standing.
நீண்ட போர்வையார் இருந்து உண் தேரர்
and tērar (buddhists) who cover their bodies with a long blanket and eat their food sitting.
ஒன்றும் உணரா ஊமர்வாயில் உரைகேட்டு உழல்வீர்காள்
people who wander listening to the words of those dumb persons who do not know anything!
கன்று உண்பயப்பால் உண்ணமுலையில்
when the calves drink the milk with desire from the udder.
கபாலம் அயல்(1) பொழிய
and overflows the vessel kept by the side.
சென்று உண்டு ஆர்ந்து சேரும்
gather in one place drinking the milk in the vessel and become satisfied.
நறையூர்ச் சித்தீச்சரத்தார்
Civaṉ is in citticcaram in naṟaiyūr; (go there)
[[Variant reading: (1) வழிய]]

{1:71}__11+
{$} குயில் ஆர் கோல மாதவிகள் குளிர் பூஞ்சுரபுன்னை செயில் ஆர் பொய்கை சேரும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரை
on Civaṉ in the temple, citticcaram in naṟaiyūr where the beautiful common delight of the woods, perched on wich cuckoos sing, and cool curapuṉṉai (nākaliṅkam tree) which grow by the side of fields and big tanks.
மயில் ஆர்சோலை சூழ்ந்த காழிமல்கு ஞானசம்பந்தன் பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே
the sins of those who are able to sing the songs which are pleasing to those who practise them and composed by flourishing Ñāṉacampantaṉ of Kāḻi surrounded by gardens where peacocks live, will perish.