அமிதசாகரனார் அருளிச்செய்த

யாப்பருங்கலக்காரிகை (yāpparuṅkalak kārikai)

மூலமும் குணசாகரர் உரையும்

MAIN


PAGE 1

கணபதி துணை

யாப்பருங்கலக் காரிகை

மூலமும் உரையும்

1. உறுப்பியல்

பாயிரம்

தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும்

1. (1) கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
    எந்த மடிக ளிணையடி யேத்தி யெழுத்தசைசீர்
    பந்த மடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின்
    கந்த மடிய வடியான் மருட்டிய தாழ்குழலே.

என்பது (2) காரிகை. 1நூல் உரைக்கு மிடத்து நூற்பெயரும், காரணமும், ஆக்கியோன் பெயரும், அளவும், பயனும் 2 உரைத்து உரைக்கற் பாற்று.

அற்றேல் இந்நூல் என்ன பெயர்த்தோ எனின், (3) பாளித்தியம் என்னும் 3 பாகத இலக்கணமும் (4) பிங்கலம் என்னும்


(1) கந்தம் மடிவு இல் - மணம் ஒழிதல் இல்லாத. கடிமலர் - புதுமலர். கண்ணார் நிழல் - இடம் மிக்க நிழல். பாவினம் - பாவும் இனமும். சந்தம் - அழகு.

(2) காரிகை - இலக்கணம் கூறும் கட்டளைக் கலித்துறை.

(3) பாளித்தியம் என்னும் பாகத இலக்கணம் - பாளித்தியம் என்னும் பிராகிருத மொழியின் இலக்கணம்; பிராகிருத மொழிகளுள் ஒன்றாகிய பாளி மொழியின் இலக்கணம் கூறும் நூல் போலும்.

(4) பிங்கலம் - பிங்கலாசாரியார் செய்தது. சந்தோவிசிதி - யாப்பிலக்கணம். பிங்கலச் சந்தஸ் ஸூத்ரம் என்று வழங்கும். சூத்திரமும் காரிகையுமாக உள்ளது; வேதாங்கமான யாப்பைப்பற்றி உரைப்பது; 'வடநூலுடையாரும் பிங்கலம் முதலிய சந்தோவிகிதிகளுள் விருத்தச்சாதி விகற்பங்களாற் கிடந்த


(பிரதிபேதம்) 1. யாதானமொரு நூலுரைக்கு. 2. எடுத்துரைத் துரைக்கற். 3. பிராகிருத.



PAGE 2

4 சந்தோவிசிதியும் போலக் (5) காரிகை யாப்பிற்றாய்க் (6) குண காங்கியம் என்னும் கருநாடகச் சந்தமேபோல மகடூஉ முன்னிலைத் தாய். அவையடக்கம் உடைத்தாய். (7) மயேச்சுரர் யாப்பே போல (8) உதாரணம் எடுத்தோதி இசைத்மிழ்ச் செய்யுட்டுறைக் கோவையே போலவும் (9) அருமறையகத்து அட்டக வோத்தின் வருக்கக் கோவையே போலவும் (10) 5உருபாவதாரத்திற்கு நீதகச் சுலோகமே போலவும் முதல் நினைப்பு உணர்த்திய 6 இலக்கியத்ததாய் வேதத்திற்கு (11) நிருத்தமும் வியாகரணத்திற்குக் (12) காரிகையும், (13) 7 அவிநயர் யாப்பிற்கு


உலகியற் சுலோகங்களின் மிக்குங் குறைந்தும் கிடப்ப இருடிகளாற் சொல்லப்படுவனவற்றை ஆரிடம் என்று வழங்குவர் எனக் கொள்க.' (யா. வி. சூ. 93, உரை.)

(5) காரிகை யாப்பு - இலக்கண விதிகள் சுலோக உருவத்தில் அமைந்தவை.

(6) குணகாங்கியம் - இது கன்னட மொழியில் முன்பு வழங்கிய யாப்பிலக்கண நூல்போலும். குணகங்கன் என்னும் அரசனுடைய தொடர்புடையதாக இருத்தலும் கூடும்.

(7) மயேச்சுரர் யாப்பு: மயேச்சுரர் என்னும் ஆசிரியர் இயற்றிய யாப்பிலக்கணம். யாப்பருங்கலத்துக்கு முன் இருந்த நூல் என்று தெரிய வருகிறது. யாப்பருங்கல விருத்திரையுரையில் உரையாசிரியர் அந்நூலிலிருந்து பல சூத்திரங்களை மேற்கோளாகக் காட்டுகிறார்.

(8) ஆசிரியர் உதாரணம் எடுத்தோதிய காரிகைகள் : 9, 11 13, 15, 18, 20, 22.

(9) வேதத்தின் உட்பிரிவாகிய அஷ்டகங்களின் பகுதிகளாகிய வருக்கங்களின் முதல் நினைப்பைத் தொடர்புபடுத்திச் சொல்லும் கோவை; இதற்கு அநுக்ரமணிகா என்றும் பெயர் உண்டு. 'அந்த முட்பட விருக்கும விருக்கின் வழியே - யாகி வந்தவவ் வருக்கமும் வருக்க முழுதும், வந்த வட்டகமு மொட்டரிய சங்கிதைகளும் - வாய்மை வேதியர்க டாம்விதி யெனும் வகையுமே (கலிங்கத்துப். இராச. 6)

(10) உருபாவதாரம் - வடமொழி வியாகரண நூல் : இதன் ஆசிரியர் தர்மகீர்த்தி என்பவர்; காலம் கி. பி. 9 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பர்; பாணினி செய்த அஷடர த்யாயீ என்ற சூத்திர ரூபமான வியாகரணத்திற்கு அந்நூல் வியாக்கியானம். நீதக சுலோகம் - முதல் நினைப்பைச் சேர்த்துச் சொல்லும் சுலோகம்.

(11) நிருத்தம் - வேதங்களுக்குரிய அங்கங்களுள் ஒன்று; வேதத்தில் வரும் சொற்களுக்குப் பொருள் உரைக்கும் நிகண்டு; யாஸ்கர் இயற்றியது.

(12) வடமொழியில் இலக்கண நூல்களுக்கு வசனத்தில் பாஷ்யம் உண்டு. அந்தப் பாஷ்யத்துப் பொருளைச் சுருக்கிச் சுலோக ரூபத்தில் புலப்


(பி - ம்.) 4. சந்தோபிசிதியும். 5. உரூபாவலங்காரத்திற்கு. 6. இலக்கண விலக்கியத்ததாய். 7. அபிநயனார்.



PAGE 3

(14) நாலடி நாற்பதும் போல யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் உடைத்தாகச் செய்யப்பட்டமையான் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து.

இந்நூல் யாது காரணமாகச் செய்யப்பட்டதோ எனின், பண்டையோர் உரைத்த தண்டமிழ் 3யாப்பிற் (15) கொண்டிலாத குறியினோரைக் குறிக்கொளுவுதல் காரணமாகவும், தொல்லைப் பனுவல் துணிபொருள் உணர்ந்த நல்லவை யோரை (16) நகுவிப்பது காரணமாகவும் செய்யப்பட்டது.

இந்நூல் யாவராற் செய்யப்பட்டதோ வெனின், ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகை ஆக்கித் தமிழ்ப்படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமிர்தசாகரர் என்னும் ஆசிரியராற் செய்யப்பட்டது.

இந்நூல் எவ்வளவைத்தோ எனின் ஓத்துவகையால் மூன்றும், காரிகை வகையால் நாற்பத்து நான்கும், கிரந்த வகையால் 9தொண்ணூறு கிரந்தமும் இருபத்தெட்டு எழுத்தும் எனக் கொள்க. அவற்றுள் ஒரு கிரந்தமாவது ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யு மாகிய முப்பத்திரண்டு எழுத்தும் எனக் கொள்க. அவற்றுள் நேரசை முதலாகிய காரிகை இருபத்தொன்றும் நிரையசை முதலாகிய காரிகை இருபத்துமூன்றும் எனக்கொள்க. அவற்றுள் நேரசை முதலாகிய காரிகை ஒன்றினுக்கு எழுத்து அறுபத்து நான்கும், நிரையசை முதலாகிய காரிகை ஒன்றினுக்கு எழுத்து அறுபத்தெட்டும் எனக்கொள்க. 10ஆக, இவ்விரு 11 திறமுங்

படுத்தும் சில நூல்கள் உண்டு. அவற்றைக் காரிகை என்பர். பாணினீயத்தின் வழி நூலாக ஹரிகாரிகா என்ற நூல் ஒன்று உண்டு. அதனை இயற்றியவர் பர்த்ருஹரி.


(13) அவிநயர் யாப்பு - ஐந்து இலக்கணங்களையும் சொல்லும் அவிநயம் என்னும் யாப்பதிகாரம்; அவிநயர் என்னும் ஆசிரியர் இயற்றியது.

(14) நாலடி நாற்பது - நக்கீரர் இயற்றியதாகச் சொல்வதுண்டு; இந்நூல் நாற்பது வெண்பாக்களால் அமைந்ததுபோலும்.

(15) கொண்டிலாத குறியினோர் - பொருள் விளக்கம் - பெறாதவர் என்றபடி; வடமொழி நடை.

(16) நகுவித்தல் - மகிழ்வித்தல்.


(பி - ம்.) 8. யாப்பைக். 9. தொண்ணூற்றெட்டுக். 10. ஆகவிரு. 11. திறத்தனுங்.



PAGE 4

கூட்டி உறழ இரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டெழுத்தாம் எனக் கொள்க. அவற்றுள் நேரசை முதலாகிய காரிகை ஒற்றொழித்து ஓரடிக்கு எழுத்துப் பதினாறும், நிரையசை முதலாகிய காரிகை ஒற்றொழித்து ஓரடிக்கு எழுத்துப் பதினேழும் எனக் கொள்க. என்னை?

            (17) ['அடியடி தோறு மைஞ்சீ ராகி]
            முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக்
            கடையொரு சீரும் விளங்கா யாகி
            நேர்பதி னாறே நிரைபதி னேழென்
            றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே.'

என்றார் ஆகலின்,

இந்நூலாற் பயன் யாதோ எனின், யாப்பு ஆராய்தல் பயன். யாப்பு ஆராயவே பாத் தாழிசை துறை விருத்தங்களால் ஆக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அவற்றின் 12 மெய்ம்மை அறிந்து விழுப்பம் எய்தி இம்மை மறுமை வழுவாமை

யாப்பெனினும், பாட்டெனினும், தூக்கெனினும், தொடர் பெனினும், செய்யுளெனினும் ஒக்கும். என்னை?

        'யாப்பும், பாட்டுந் தூக்குந் தொடர்பும் 13 செய்யுளை
            நோக்கிற் றென்ப நுணங்கி யோரே.'

என்றார் ஆகலின்.

இந்நூல் 14 உறுப்பிய லோத்துஞ் செய்யுளிய லோத்தும் ஒழிபிய லோத்தும் என மூன்று வகைப்படும். இவ் வோத்தென்ன பெயர்த்தோ எனின், எழுத்தும் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் என்னும் ஆறு உறுப்பினையும் உணர்த்திற்றாதலால் 15உறுப்பிய லோத்து என்னும் பெயர்த்து.

இவ்வோத்தினுள் 16இத்தலைக் காரிகை என்னுதலிற்றோ வெனின், சிறப்புப் பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று. என்னை?


பல பிரதிகளில் முதலடி இல்லை. சில பிரதிகளில் பின்னிரண்டடிகளே காணப்படுகின்றன.


(பி - ம்.) 12 மேன்மை. 13. செய்யுளென்று செப்பினர்புலவர். 14. உறுப்பியலும் செய்யுளியலும் ஒழிபியலுமென. 15. உறுப்பிய லென்னும். 16. இக்.



PAGE 5

        'வணக்க மதிகார மென்றிரண்டுஞ் சொல்லச்
    சிறப்பென்னும் பாயிர மாம்'

எனவும்,

        'தெய்வ வணக்கமுஞ் செயப்படு பொருளும்
    எய்த வுரைப்பது தற்சிறப் பாகும்'

எனவும் சொன்னார் ஆகலின்,

'கந்தமடிவில்..... தாழ்குழலே' என்பது - முருகு விரியும் மொய் மலர் அசோகின் கீழ் 17 அருகன் றனது அடி வணங்கி எழுத்தும் அசையுஞ் சீரும் தளையும் அடியுந் தொடையும் பாவும் பாவினமு மாமாறு உரைப்பன் தளிப்புரையுஞ் சிறுமெல்லடித்தகை நெடுங்குழற் றையலாய் என்றவாறு. இது பொழிப்புரை யெனக் கொள்க. என்னை?

        'பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப்
    பிண்ட மாகக் கொண்டுரைப் பதுவே'

என்றார் ஆகலின்.

'கந்த மடிவில்......இணையடி யேத்தி' என வணக்கம் சொல்லப்பட்டது; 'எழுத்......வினங் கூறுவன்' என அதிகாரம் கூறப்பட்டது.

        'வழிபடு தெய்வ வணக்கஞ் செய்து
    மங்கல மொழிமுதல் 18வழுவற வகுத்தே
    எடுத்துக் கொண்ட விலக்கண விலக்கியம்
    இடுக்க ணின்றி யினிது முடியும்'

இனி எழுத்து முதலாகிய எட்டினையுங் காரணக் குறியான் வழங்குமாறு:

        'எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத்
            தசைத்திசை கோடலி னசையே யசையியைந்து
    சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு
    19 தட்டு நிற்றலிற் றளையே யத்தளை

(பி - ம்) 17. அருகபரனை யடியிணை. 18 வகுத்தெடுத்துக்கொண்ட. 19. தட்டுற,



PAGE 6

        அடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு
    20 தொடுத்துமன் சேறலிற் றொடையே யத்தொடை
    பாவி நடத்தலிற் பாவே பாவொத்
    தினமாய் நடத்தலி னினமெனப் படுமே'

21 என்றார் ஆகலின்.

பந்தம் எனினும் தளை எனினும் ஒக்கும். என்னை?

    'பகுத்தெதிர் நிற்றலிற் பந்தந் தளையென
    வகுத்தனர் மாதோ வண்டமி ழோரே'

என்றார் ஆகலின்.

'பல்லவத்தின் சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே' என்பது பகடூஉ முன்னிலை.

ஏகாரம் ஈற்றசை யேகாரம்.

(1)

அவையடக்கம்

        2. (1) தேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக்
    கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்
    யானா நடாத்துகின் றேனென் (2) றெனக்கே நகைதருமால்
    ஆனா வறிவி னவர்கட் கென் னாங்கொலென் னாதரவே.

இ - கை. 1 நூலினது பெருந்தன்மையும் ஆசிரியனது பெருந் தன்மையும் தனது உள்ளக் குறைபாடும் உணர்த்திய முகத்தான் அவையடக்கம் உணர்த்.....று.

[தேன் நிறைந்த மணங்கமழ்கின்ற வேப்ப மாலையைத் தரித்த பாண்டியன் கேட்கத் தெளிந்த அருவி நீரையுடைய சந்த


(1) மீனவன் பாண்டியன்; கேட்ப - கேட்கத் தக்கதாக. கன்னி - அழிவின்மை. நூல் - இலக்கணம். நடாத்துதுல் - நிகழ்த்துதல் ; 'நவநீத னடத்தினனே' (நவநீதப் சிறப்.). என் ஆதரவு எனக்கே நகைதரும்; அறிவின் அவர்கட்கு என்னாங் கொல்?' பாண்டியன் அகத்தியர்பால் நூல் கேட்டமை அன்றகத்தியன்வாய் உரைதரு தீந்தமிழ் கேட்டோன்' (பாண்டிக்.)

(2) 'நன்னா வலர்முக நகைநாணாமே, என்னாலியன்றவை யியற்று மிந்நூலுன்' (நன். சங்கர, உரைச்சிறப. 15-6)


(பி - ம்.) 20. தொடுத்தன் முதலாயின. 21. எனவரும். : நூற்சிறப்பும் ஆசிரியரது.



PAGE 7

னச்சோலை சூழ்ந்த பொதியமலையில் எழுந்தருளி யிருக்கின்ற அரிய தவத்தினையுடைய முதலாசிரியராகிய அகத்தியமுனிவரால் அருளிச்செய்யப்பட்ட அழிவின்றி நிலைபெற்ற முத்தமிழுள் இயற்றமிழின் கூறாகிய யாப்பிலக்கண நூலை, யானும் அவாவினால் எனது புல்லிய நாவைக் கொண்டு சொல்லத் தொடங்கினேன். இது அறிவிலியாகிய எனக்கே நகையினை வினைக்குமாயின். குறை வில்லாத அறிவினை உடையவர்க்கு யாதாகுமோ! எ - று.]

ஏ : அசைநிலை. இழிவுசிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. 'யானா நடாத்துகின்றேன்' என்பதற்கு வேறு பொருள் கூறுவாரும் உளர்.

இதுவுமது

        3. (1) சுருக்கமில் கேள்வித் துகடீரி புலவர்முன் யான்மொழிந்த
    பருப்பொரு டானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப்
    பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும்பொன்னிறமாய்
    இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே.

இ - கை. புலவரது சிறப்புணர்த்திய முகத்தான் அவை யடக்க முணர்த்.... று.

[இ - ள். பனிதோய்ந்த நெடிய (2) இமயவரை இடத்தைச் சேர்ந்த இழிவாகிய கரிய காக்கைப்புள்ளும் (3) பொன்னிறம் உற்றிருக்கும் என்று பரந்த இவ்வுலகத்தவர் சொல்வர். இவ்வாறே குற்றந் தீர்ந்த அளவில்லாத நூற்கேள்வியை யுடைய புலவர்க்கு முன் குற்றமுடைய அறிவில்லாத யான் கூறிய சிறப்பில்லாத பிண்டப்பொருளும். சிறந்த நுண் பொருள் ஆம். எ-று.

அன்று, ஓ, ஏ, அசைநிலை.]


(3) (1) சுருக்க மில் கேள்வி - பரந்த கேள்வி யறிவு. துகள் - குற்றம், பருப்பொருள் - தூலாப் பொருள் ; சிறப்பில்லாதது இது ; 'பதர்ச் சொற் பருப்பொருள் பன்னுபு நீக்கிப், பொருட்சொன் னிரப்பும் புலவர்' (பெருங். 2. 4 ; 51-2) மால் - பெருமை. பொருப்பு - மலை.

(2) இமயமலையைப் பொன்மலை என்றல் மரபு : 'பொற்கோட்டிமயம்', 'பொன்படு நெடுங்கோட் டிமயம்' (புறநா. 2. 24, 39 : 14-5) ; 'புள்ளி மால்வரை பொன்னென நோக்கி' (கம்ப. ஆற்றுப். 4.)

(3) இமயம் சேர்ந்த காக்கை பொன்னிறம் பெறும் : 'கனக மலையருகே, போயின காக்கையு மன்றே படைத்தது பொன்வண்ணமே' பொன் வண்ணத். 100)



PAGE 8

எழுத்து

        4. குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே
    மறுவறு மூவின மைதீ ருயிர்மெய் மதிமருட்டுஞ்
    சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்
    அறிஞ ருரைத்த 1வளபு மசைக்குறுப் பாவனவே.

இ-கை. மேலதிகாரம் பாரித்த (1) எட்டனுள்ளும் அசைக்கு உறுப்பாம் 2எழுத்துக்களது பெயர் வேறுபாடு உணர்த்....று.

குறிலாவன : அ இ உ எ ஓ என இவை. என்னை?

        'அ இ உ,
    எ ஒ என்னும் மப்பா லைந்தும்
    ஓரள பிசைக்குங் குறிறெழுத் தென்ப'
(தொல். எழுத். சூ. 3.)

என்றார் ஆகலின். (2)

நெடிலாவன : ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என இவை. என்னை?

        'ஆ ஈ ஊ ஏ ஐ,
    ஓ ஒள வென்னு மப்பா லேழும்
    ஈரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப'
(தொல். எழுத். சூ. 4.)

என்றார் ஆகலின்.

ஆவியாவன: அகரமுதல் ஒளகார மீறாய்க் கிடந்த பன்னிரண் டெழுத்தும் எனக் கொள்க. ஆவி யெனினும் உயிர் எனினும் 3ஒக்கும். என்னை?


'பொன்னிறப் புறவுங் ககுநிறக் காக்கையும், மன்னுமா லிமய வரைப்புறஞ் சேர்ந்துழி, இருதிறப் பறவைக்கு மொரு திறனல்லதை, நிறம்வேறு தெரிப்ப துண்டோ' (குமர குருபர. 455. 24-7.)

(1) எட்டாவன : எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் என்பன.

(2) 'எகர ஒகரங்கள் புள்ளிபெற் றியலு மென்றார் அகத்தியனார்' என்ற தொடர் பலபிரதிகளில் இங்கே காணப்படுகிறது. வேறு சில பிரதிகளில் இத்தொடர் 'அகரமுதல்' என்ற சூத்திரத்தின் பின் காணப்படுகிறது


(பி - ம்.) 1. வளவு. 2. என்ற எழுத்துக்களது. 3. ஒக்கும், 'ஆவிதானே யுயிரெனப் படுமே' என்றாராகலின்.



PAGE 9

        (3) அகரமுத லௌகார விறுவாய்ப்
    பன்னீ ரெழுத்து முயிரென மொழிப'

என்றார் ஆகலின்.

குறுகிய மூவுயிராவன : குற்றியலிகரமும் குற்றிய லுகரமும் ஐகாரக் குறுக்கமும் என இவை.

[என்னை?

        'அவைதாம், குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும்
    ஆய்த மென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன'

என்றார் ஆகலின்.] இவை மேலே சொல்லுதும்.

ஆய்தமென்பது அஃகேனம். அஃகேனம் எனினும், ஆய்தம் எனினும், தனிநிலை எனினும், புள்ளி எனினும், ஒற்றெனினும் ஒக்கும்.

என்னை?

        'அஃகேன மாய்தந் தனிநிலை புள்ளி
    ஒற்றிப் பால வைந்து மிதற்கே'

என்றார் ஆகலின்.

வரலாறு

எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு எனவரும். (5) என்னை?

        'குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
        உயிரொடு புணர்ந்தவல் லாறன் மீசைத்தே'
(தொல். எழுத். சூ. 38.)

என்றார் ஆகலின்.

மெய்யாவன : ககர முதல் னகர ஈறாய்க் கிடந்த பதினெட் டெழுத்தும் எனக் கொள்க.

என்னை?


(3) 'அகரமுதல்' என்ப சில சுவடிகளில் இல்லை; தொல். எழுத். சூ. 8 அங்ஙனமே அமைந்துள்ளது.

(4) ஒரு பிரதியில் 'என்றார் மயேச்சுரர்' என்று காணப்படுகிறது. இஃது அவிநயனார் சூத்திரம் என்று கூறுவர் : யா. வி. சூ. 2. மேற்.

(5) இதன் பின் சில பிரதிகளில் 'அதுவும் சார்பிற் றோன்றும்' எழுத்து;



PAGE 10

(6) 'ககர முதல னகர விறுவாய்ப்
    பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப'

என்றார் ஆகலின்.

மெய் எனினும், உடம்பெனினும், உறுப்பெனினும், புள்ளி எனினும், ஒற்றெனினும் ஒக்கும். என்னை?

'மெய்யுடம் புறுப்பொற் றிவைதா மொருபொருள்
    செய்யு 4மென்று செப்பினர் புலவர்.'
    'மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்,'
(தொல். எழுத். சூ. 15.)
'எகர ஒகரத் தியற்கையு மற்றே,'
(தொல். எழுத். சூ. 16.)
'மெய்யி னியக்க மகரமொடு சிவணும்,'
(தொல். எழுத். சூ. 46.)
'மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும்'
(தொல். எழுத். சூ. 139.)

5 எனவுஞ் சொன்னார் ஆகலின்.

மெய்யே; ஏகாரம்: எண்ணேகாரம். என்னை?

'எண்ணே கார மிடையிட்டுக் கொளினும்
    எண்ணுக்குறித் தியலு மென்மனார் புலவர்.'
(தொல். சொல். சூ. 283.)

அதற்குச் சார்.....றெழுத்துக்கு முன்னாக வல்லின வெழுத்திற்குப் பின்னாக வருமாய்தம்' என்பது காணப்படுகிறது.

(6) 'ககர முதல' என்ற தொடர் சில பிரதிகளில் இல்லை; தொல். எழுத். சூ. 9. அங்ஙனமே உள்ளது. இச்சூத்திரத்திற்குப் பிரதியாகச் சில சுவடிகளில் 'ககரமுதல னகர வீறா, மும்மையின் வந்த மூவாறு முடம்பே' என்பதும் 'ககர வொற்றுமுத னகரவொற்றீறாப், பகருமொற் றெழுத்துப் பதினெட்டு மெய்யே' என்பதும் காணப்படுகின்றன.


(பி - ம்) 4. மென்மனார் தெரிந்திசினோரே. 5. என்றாராகலின்.



PAGE 11

மறுவறு மூவினமாவன: வல்லினம் மெல்லினம் இடையினம் என இவை. வல்லின மாவன : க ச ட த ப ற. மெல்லினமாவன:

ங ஞ ண ந ம ன. இடையினமாவன : ய ர ல வ ழ ள. என்னை?

'வல்லெழுத் தென்ப க ச ட த ப ற'
'மெல்லெழுத் தென்ப ங ஞ ண ந ம ன'
'இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள'
(தொல். எழுத். சூ. 19 - 21.)

என்றார் ஆகலின்.

6 மறுவறு மூவினம்' என்று சிறப்பித்த வதனால், அவை உயிர் மெய்யாகிய காலத்தும் அப்பெயரானே வழங்கப்படும் எனக் கொள்க. என்னை?

'விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்'

என்றார் ஆகலின்.

உயிர் மெய்யாவன : உயிரும் மெய்யுங் கூட்டி உச்சரிக்கப்படா நின்ற பன்னிரு பதினெட்டு இருநூற் றொருபத்தாறெழுத்தும் எனக் கொள்க. என்னை?

'உயிரீ ராறே மெய்ம்மூ வாறே
    அம்மூ வாறு முயிரொடு முயிர்ப்ப
    இருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே.'
'புள்ளி யில்லா வெல்லா மெய்யும்
    உருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலும்
    ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும்
    ஆயீ ரியல வுயிர்த்த லாறே.'
'மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே'
(தொல். எழுத். சூ. 17-18.)

என்றார் ஆகலின்.

'மைதீர் உயிர்மெய்' என்று சிறப்பித்த வதனால் ஏறிய உயிரின் அளவே உயிர்மெய்க்கும் அளவெனக் கொள்க. என்னை?

(7) உயிர்மெய்க் களவு முயிரள வென்ப'

என்றார்ஆகலின். (8)


(7) சில பிரதிகளில் இச்சூத்திரத்துக்குப் பதிலாக, 'மெய்யோ டியையினு முயிரியறிரியா' தொல். எழுத். 10. என்பது காணப்படுகிறது.

(8) இதன்பின் ஒரு பிரதியில், 'செந்தமிழ் எழுத்து ஆறாவன: எகர மொகரமாய்தம் ழகரம், றகர ளகரந் தமிழ் பொதுமற்றே' எனக்கொள்க' என்ற தொடர் காணப்படுகிறது.


(பி - ) 6. மூவினமென்னாது மறுவறுவென்று.



PAGE 12

'மதிமருட்டும் சிறுநுதல் பேர் அமர்க்கண் செய்ய வாய் ஐய நுண்ணிடையாய் எ-து. மகடூஉ முன்னிலை. என்னை?

        'இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்றும்
    அடங்காதா ரென்று மடங்கார் - தடங்கண்ணாய்
    உப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும்
    கைப்பறா பேய்ச்சுரையின் காய்'
(நாலடி. 116.)

எனப் பிறரும் தடங்கண்ணாய் என்று இடையே (9) மகடூஉ முன் னிலை சொல்லினாரும் உளரெனக் கொள்க.

மதி என்பது ஈண்டுப் 7பிறை; அஃது,

        (10) இருகோட் டொருமதி யெழில்பெற மிலைச்சினை'
(நக்கீரர் திருவெழுகூற்)

என்றாற்போலக் கொள்க. அல்லதூஉம், (11) அறிவினை மயக்குஞ் சிறுநுதன் முதலாகிய உறுப்புக்களை உடையாய் என்றுமாம்.

'அறிஞர் உரைத்த அளபும்' எ-து புலவராய் சொல்லப்பட்ட அளபெடைகளும் எ-று.

அளபெனினும் அளபெடை எனினும் புலுதம் எனினும் ஒக்கும். என்னை?

8 'அளபே புலுத மாயிரு பெயரும்
            அளபெடை யென்பரறிந்திசி னோரே'

என்றார் ஆகலின். அவை போக்கிச் சொல்லுதும்.

அசைக்கு உறுப்பாவன எ-து. இப்பதின்மூன்று 9 திறத்தெழுத்தும் அசைக்கு உறுப்பாவன எ-று.


(9) இலக்கணப் பாவில் மகடூஉ முன்னிலை வந்தமைக்கு உதாரணமாக இலக்கியச் செய்யுளில் அது வந்தமையைக் காட்டியது அத்துணைச் சிறப்பன்று போலும்.

(10) பிறையை மதி என்றமைக்கு இஃது உதாரணம்; மதி-பூர்ண சந்திரன்; பிறையின் இரு நுனிகளையும் கோடு என்றார். இருகோடும் ஒன்றுகூடின் மதியமாம்; 'கோடுகூடு மதியம்' (புறநா. 67:4.)

(11) நுதல் அறிவினை மயக்குதல் : 'பிறையென, மதிமயக் குறூஉ நுதலும்' (குறுந். 226); 'ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள், நண்ணாரு முட்குமென் பீடு' (குறள். 1088.)


(பி - ம்.) 7. பிறையை. 8. அளபொடு புலுத, அளபே புலுத; 9. வகை யெழுத்துக்களும்



PAGE 13

ஆவனவே; ஏகாரம்; ஈற்றசை யேகாரம்; தேற்றம் எனினும் அமையும். என்னை?

'தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே
            ஈற்றசை யிவ்வைந் தேகா ரம்மே'
(சிதால். சொல். சூ. 252.)

என்றார் ஆகலின்.

'குறினெடி லளபெடை யுயிருறுப் புயிர்மெய்
    வலிய மெலிய விடைமையோ டாய்தம்
    இ உ ஐ யென் மூன்றன் குறுக்கமோ
    டப்பதின் மூன்று மசைக்குறுப் பாகும்'

என்றார் காக்கை பாடினியாரும் எனக் கொள்க.

இனி மூவுயிர்க் குறுக்கமும் அளபெடைகளும் ஆமாறு சொல்லுதும்:

அவற்றுட் குற்றிய லுகரம் வருமாறு : நெடிற்கீழும், நெடி லொற்றின் கீழும், குறிலிணைக் கீழும், குறிலிணை யொற்றின்கீழும், குறினெடிற்கீழும், குறினெடி லொற்றின் கீழும், குற்றொற்றின் கீழும் என்று இவ்வேழிடத்து ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து உகரம் வந்தால் அது குற்றிய லுகரம் என்று வழங்கப்படும் எனக் கொள்க. என்னை?

'நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை
    ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென்
    (12) றேழ்குற் றுகரக் கிடனென மொழிப'
    (13) எழுவகை யிடத்துங் குற்றிய லுகரம்
    வழுவின்றி வரூஉம் வல்லா றூர்ந்தே'

என்றார் ஆகலின்.

வரலாறு

நாகு, காசு, காடு, காது, காபு, காறு என நெடிற்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.


(12) எழுவகை என்பதைப் பலர் மறுப்பர்: 'இதனை ஏழென்று கொள்வார்க்குப் பிண்ணாக்கு, சுண்ணாம்பு, ஆமணக்கு முதலியன முடியாமை உணர்க' (தொல். எழுத். சூ. 406, 320.) சிவஞான முனிவரும் இங்ஙனமே கூறுவர்; நன். சூ. 94.


(13) இது பல்காயனார் வாக்கு என்பார்; யா. வி. சூ. 2, உரை.



PAGE 14

நாக்கு, காச்சு, காட்டு, காத்து, காப்பு, காற்று என நெடி லொற்றின்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

வரகு, முரசு, முருடு, மருது, துரபு, கவறு எனக் குறிலிணைக் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

அரக்கு, பொரிச்சு, தெருட்டு, குருத்து, பொருப்பு, சிரற்று எனக் குறிலிணையொற்றின் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

அசோகு, பலாசு, மலாடு, கொடாது, புதாபு, விராறு எனக் குறினெடிற் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

தமாக்கு, தடாச்சு, பனாட்டு, கொடாத்து, புதாப்பு, விராற்று எனக் குறினெடிலொற்றின்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

நக்கு, கச்சு, கட்டு, கத்து, கப்பு, கற்று எனக் குற்றொற்றின் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

குற்றியலுகர வெழுத்து ஆறுவகைப்படும் என்பாருமுளர். அவையாவன: ஈரெழுத்தொருமொழி, உயிர்த்தொடர்மொழி இடைத்தொடர் மொழி, வன்றொடர் மொழி, மென்றொடர் மொழி, ஆய்தத் தொடர் மொழி என்றிவை. என்னை?

        'ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொடர்
    ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
    ஆயிரு மூன்றே யுகரங் குறுகிடன்'
(தொல். எழுத். சூ. 406.)

என்றார் ஆகலின்.

இனிக் குற்றியலிகரத்துக்குச் சொல்லுமாறு :

குற்றியலுகரம் திரிந்தும் திரியாதும் யகரமோடு இயைபின் கண் வந்த இகரம் குற்றிய லிகரமென்று வழங்கப்படும் எ-று. என்னை?



PAGE 15

        '(14) வல்லெழுத் தாறோ டெழுவகை யிடத்தும்
    உகர மரையாம் யகரமோ டியையின்
    இகரங் குறுகு மென்மனார் புலவர்'
    'யகரம் வரும்வழி யிகரங் குறுகும்
    உகரக் கிளவி துவரத் தோன்றாது'
(தொல். எழுத். சூ. 410.)

என்றார் ஆகலின்.

வரலாறு

நாகியாது, காசியாது, காடியாது, காதியாது, காபியாது, காறியாது என வரும். (15)

ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க.

10 இனி உகரம் திரியாது வந்த குற்றியலிகரம் : மியாவென்னும் முன்னிலை யசைச் சொல்லின் கண் மகரம் ஊர்ந்து நின்ற இகரம் குற்றியலிகரமென்று வழங்கப்படும் எ-று. என்னை?

        'குற்றிய லிகர நிற்றல் வேண்டும்
    யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்
    காவயின் வரூஉ மகர மூர்ந்தே'
(தொல். எழுத். 34.)

என்றார் ஆகலின்

வரலாறு

கேண்மியா, சென்மியா எனக் கொள்க.

இனி ஐகாரக் குறுக்கத்திற்குச் சொல்லுமாறு.

அளபெடுத்தற் கண்ணும் தனியே சொல்லுதற்கண்ணும் இன்றி 11 அல்லாத வழி வந்த ஐகாரம் தன்னளவிற் சுருங்கி (16) ஒன்றரை 12 மாத்திரையும் ஒரு மாத்திரையுமாகக் குறுகும்: 13 ஐகாரம் குறுகுமிடத்து முதலிடை கடையென்னும் மூவிடத்தும் குறுகும். என்னை?


(14) இஃது அவிநயச் சூத்திரம் என்பர் : யா. வி. 2. உரை.

(15) 'ஒழிந்தனவும்' என்றது ஏழு குற்றுகரங்களில் இங்கே காட்டிய நெடிற்கீழ் உகரங்கள் ஒழிந்த ஏனைய ஆறன்முன் யகரம் வந்து இகரமாகத் திரிந்த உகரங்கள்.

(16) நன்னூலார் ஐகாரக் குறுக்கத்துக்கு மாத்திரை ஒன்று என்பர். சூ. 99.


(பி - ம்) 10. இனித் திரியாது வந்த குற்றியலிகரம் வருமாறு. 11. யொழிந்த. 12. மாத்திரையாய்க் குறுகும். 13. அவை குறுகு.



PAGE 16

(17) அளபெடை தனியிரண் டல்வழி ஐஒள
            உளதா மொன்றரை தனிமையு மாகும்'

என்றார் ஆகலின்.

வரலாறு

ஐப்பசி, மைப்புறம் என மொழி முதற்கண் ஐகாரங் குறுகின வாறு; மடையன், உடைவாள் என மொழிக்கிடையின்கண் ஐகாரம் குறுகினவாறு; குவளை, தவளை, தினை, பனை என மொழிக் கிறுதியின்கண் ஐகாரம் குறுகினவாறு.

இனி அளபெடைக்குச் சொல்லுமாறு:

அளபெடை இருவகைப்படும். உயிரளபெடையும் ஒற்றள பெடையும் என. (18)

உயிருள் நெட்டெழுத்து ஏழும் அளபெடுக்கும். அவை அளபெடுக்கு மிடத்து ஐகாரம் இகரத்தோடு அளபெடுக்கும்; ஒளகாரம் உகரத்தோடு அளபெடுக்கும்; ஒழிந்தனவும் தமக்கு இனமாகிய குற்றெழுத்தோடு அளபெடுக்கும் எனக் கொள்க.

        'குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும்
    நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே'
    'ஐ ஒள வென்னு மாயீ ரெழுத்திற்
    கிகர வுகர மிசைநிறை வாகும்'

என்றார் தொல்காப்பியனார்.

(எழுத். சூ. 41-2.)

அவை நான்கிடத்தும் வந்து அளபெடுக்கும். நான்கிடமாவன: தனிநிலையும், முதனிலையும், இடைநிலையும், கடைநிலையும் எனவிவை. என்னை?


(17) இஃது அவிநயச் சூத்திரமென்பர்; யா. வி. சூ. 2 உரை: நன். சூ. 59 மயிலை சில பிரதிகளில் இச்சூத்திரத்திற்குமுன் 'முதலிடை கடையென மூன்றிடத் தொருசொல், அதனொடு குறுகு மைகார வெழுத்தே' என்ற வேறொரு சூத்திரமும் காணப்படுகிறது. இப்புதுச் சூத்திரம் சில பிரதிகளில், 'மொழிமுத லிடைகடை யெனமூன் றிடந்தும், அழியா தைகா ரங்குறு கும்மே' என்றுங் காணப்படுகிறது.

(18) இதன்பின் சில பிரதியில் 'என்னை, உயிரள பெடையெழுத் தொற்றள பெடையெழுத், தவையிரண் டென்ப வளபெடை யெழுத்தே' என்றார் ஆகலின்' என்ற தொடர் காணப்படுகிறது. இதிற் கண்ட சூத்திரம் வேறொரு பிரதியில் 'உயிரள பெடையு மொற்றள பெடையுமென், றாயிரண் டென்ப வளபெடை தானே' என்று காணப்படுகிறது.



PAGE 17

        'தனிநிலை முதனிலை யிடைநிலை யீறென
    நால்வகைப் படூஉமள பாய்வரு மிடனே'

என்றார் ஆகலின்.

வரலாறு

ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ எனத் தனிநிலை யளபெடை வந்தவாறு.

ஆஅலமரம், ஈஇரிலை, ஊஉரிடம், ஏஎரிகள், ஐஇயவி, ஓஒரிகள், ஒளஉவியம் என முதனிலை யளபெடை வந்தவாறு.

படாஅகை, பரீஇகம், கழூஉமணி, பரேஎரம், வளைஇயம், புரோஓசை, அநௌஉகம் என இடைநிலை அளபெடை வந்தவாறு.

கடாஅ, குரீஇ, கழூஉ, மிலேஎ, கடைஇ, அரோஒ, அரௌஉ என இறுதிநிலை யளபெடை வந்தவாறு.

உயிரளபெடை எழுத்து நோக்க ஏழாம், இடம்நோக்க நான்காம், எழுத்தும் இடமும் உறழ்ந்து நோக்க (19) இருபத்தெட்டாம் எனக் கொள்க.

இனி ஒற்றளபெடைக்குச் சொல்லுமாறு:

ஒற்றுக்களுள், ங ஞ ண ந ம ன வ ய ல ள வாய்தம் என்னும் பதினோரொற்றும் குறிற்கீழும் குறிலிணைக் கீழும் வந்து அளபெடுக் கும் எனக் கொள்க. என்னை?

        'ஙஞண நமன வயலள வாய்தம்
    எனுமிவை யீரிடத் தளபெழு மொரோவழி'
        'வன்மையொடு ரஃகான் ழஃகா னொழித்தாங்
    கன்மெய் யாய்தமோ டளபெழு மொரோவழி'

என்றார் ஆகலின்.

வரலாறு

மங்ங்கலம், பஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு, தெவ்வ்வர், வெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு என இவை குறிற்கீழ்ப் பதினோ ரொற்றும் அளபெழுந்தவாறு.

அரங்ங்கம், முரஞ்ஞ்சு, மருண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு,


(19) நன்னூலார் உயிரளபெடை இருபத்தொன்று என்பர் ; சூ. 61. கா.



PAGE 18

முரன்ன்று, (20) குரவ்வ்வை, அரைய்ய்யர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு என இவை பதினோ ரொற்றும் குறிலிணைக் கீழ் அளபெழுந்தவாறு.

(21) இவ்விருபத்திரண்டு புள்ளி யளபெடையும் செய்யு ளிடத்து அரிதாகவல்லது (22) பரவை வழக்கினுள் வாராவெனக் கொள்க. என்னை?

        மாத்திரை வகையாற் 14 றளைதம கெடாநிலை
    யாப்பழி யாமையென் றளபெடை வேண்டும்'

என்றார் ஆகலின்,

'அறிஞர் உரைத்த அளபும்' என்று சிறப்பித்த வதனாற் குற்றெழுத்து ஒரு மாத்திரை, நெட்டெழுத்து இரண்டு மாத்திரை, உயிரளபெடை மூன்று மாத்திரை, ஆய்தமும் மெய்யும் குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் ஓரோவொன்று அரைமாத்திரை, ஐகாரக் குறுக்கமும் (23) ஒளகாரக் குறுக்கமும் ஒரோவொன்று ஒன்றரை மாத்திரை, ஒற்றளபெடை ஒரு மாத்திரை, ஆய்தக் குறுக்கமும் மகரக் குறுக்கமும் ஒரோ வொன்று கான்மாத்திரை எனக் கொள்க.

        'ஒன்றிரண் டொருமூன் றொன்றரை யரைகால்
    என்றனர் பொழுதிவை யிமைநொடி யளவே'
    'கண்ணிமை 15 நொடியென வவ்வே மாத்திரை
    நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே'
(தொல். எழுத். சூ. 7)

(20) இதன்பின், 'குரவை என்ற வழி ஒற்றும் வரகு என்புழி ஆய்தமும் இலவெனினும் செய்யுட்கண் ஓசைகெட்டுழி வருவித்துக் கொள்ளுக' என்ற தொடர் ஒரு பிரதியிற் காணப்படுகிறது.

(21) நன்னூலார் புள்ளியளபெடை நாற்பத்திரண்டு என்பர்; சூ.61.

(22) பரவை வழக்கு - பரந்துபட்ட வழக்கு; என்றது உலக வழக்கை.

(23) காரிகையில் சொல்லப்படாத ஒளகாரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம், மரகக் குறுக்கங்களுக்கு இங்கே மாத்திரை கூறியது ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்' என்னும் உத்தியாலென்க. யாப்பருங்கலத்தில் இவை மூன்றினையும் கூட்டி ஆசிரியர் அசைக்கு உறுப்பாம் எழுத்துப் பதினைந்து என்பர். காரிகையில் கூறப்படுவன பதின்மூன்றே.


(பி - ம்.) 14. றளைதப. 15. கைந்நொடி யளவே.



PAGE 19

        'ஒற்றிற்கு மாத்திரை யொன்றே யளபெழுந்தாற்
    றெற்றக் குறியதுவே யாம்'
    '(24) உன்னல் காலே யூன்ற லரையே
    முறுக்கன் முக்கால் விடுத்த லொன்றே'

என்றார் ஆகலின்.

(4)
---

அசை

        5. குறிலே நெடிலே குறிலிணை யேனைக் குறினெடிலே
    நெறியே வரினு நிரைந்தொற் றடுப்பினு நேர்நிரையென்
    றறிவேய் புரையுமென் றோளி யுதாரண மாழிவெள்வேல்
    வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே.

இ - கை. (1) நிரனிறைப் பொருள்கோள் வகையான் (2) நேரசையும் நிரையசையும் ஆமாறும் அவற்றுக்கு உதாரணம் ஆமாறும் உணர்த்....று.

'குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறினெடிலே நெறியே வரினும் நிரைந்து ஒற்று அடுப்பினும் நேர்நிரை என்று அறி' எ - து. குற்றெழுத்துத் தனியே வரினும், நெட்டெழுத்துத் தனியே வரினும், குற்றெழுத்து ஒற்றடுத்து வரினும், நெட்டெழுத்து ஒற்றடுத்து வரினும், நேரசையாம் எ-று.

குறில் இணைந்து வரினும், குறினெடில் இணைந்து வரினும், குறில் இணைந்து ஒற்றடுத்து வரினும், குறினெடில் இணைந்து ஒற்றடுத்து வரினும் நிரையசையாம் எ-று.


(24) இதன்பின் சில சுவடிகளில் 'அரைநொடி யென்ப தியாதென வினவின், நொடிதரக் கூடிய விருவிர லளவே' என்ற சூத்திரம் காணப்படுகிறது.

(1) நிரனிறைப் பொருள்கோள் - பெயரும் வினையுமாகிய சொற்களையும் அவை கொள்ளும் பெயரும் வினையுமாகிய பயனிலைகளையும் வேறு வேறு நிரையாக (வரிசையாக) நிறுத்தி முறையானே இதற்கு இது பயனிலை என்பது தோன்றக் கூறுவதாம்; நன். சூ. 414.

(2) செய்யுளுக்கு எழுத்தெண்ணுங்கால் மெய்கள் தள்ளுண்டுபோம். அங்ஙனம் கணக்கிட்டு நேரசையைத் தனியசை என்றும் நிரையசையை இணையசை என்றும் காக்கை பாடினியார் முதலியோர் வழங்குவர். இந்நூலாசிரியரும் யாப்பருங்கலத்தில் இப்பெயர்களை ஆளுவர் ; யா. வி. சூ. 7, 9.



PAGE 20

        ['நெடில்குறி றனியா நின்றுமொற் றடுத்தும்
    நடைபெறு நேரசை நால்வகை யானே'
    'குறிலிணை குறினெடி றனித்துமொற் றடுத்தும்
    நெறிமையி னான்காய் வருநிரை யசையே'

என்பது யாப்பருங்கலம் (சூ. 6, 8,)]

'வேய்புரையும் மென்தோளி' எ-து. மகடூஉ முன்னிலை.

'உதாரணம் ஆழி வெள் வேல் வெறியே சுறா நிறம் விண்தோய் விளாம் என்று வேண்டுவரே' எ-து. நேரசைக்கு உதாரணம் ஆ, ழி, வெள், வேல் எனவும், நிரையசைக்கு உதாரணம் வெறி, சுறா, நிறம், விளாம் எனவும் சொல்லுவர் புலவர் எ-று. (3) அகலம் உரையிற் கொள்க. அகலம் எனினும் விரித்துரை எனினும் ஒக்கும். என்னை?

        அகல மென்ப தாசறக் கிளப்பின்
    விகல மின்றி விரித்துரைப் பதுவே'

என்றார் ஆகலின்.

'விண்டோய் விளாம்' என்று சிறப்பித்தவதனால் நேரசை ஓரலகு பெறும்; நிரையசை ஈரலகு பெறும் எனக் கொள்க.

வரலாறு

ஆ - எனத் தனிநெடில் நேரசை ஆயினவாறு; ழி - எனத் தனிக்குறில் நேரசை ஆயினவாறு; வெள் - எனக் குற்றெழுத்து ஒற்றடுத்து நேரசை ஆயினவாறு; வேல் - என நெட்டெழுத்து ஒற்றடுத்து நேரசை ஆயினவாறு; வெறி - எனக் குறில் இணைந்து நிரையசை ஆயினவாறு; சுறா - எனக் குறினெடில் இணைந்து நிரையசை ஆயினவாறு; நிறம் - எனக் குறில் இணைந்து ஒற்றடுத்து நிரையசை ஆயினவாறு, விளாம் - எனக் குறினெடில் இணைந்து ஒற்றடுத்து நிரையசை ஆயினவாறு


(3) அகலம் - விருத்தியுரை; என்றது யாப்பருங்கல விருத்தியை; 12-ஆங் காரிகை யுரையுள்ளும் இங்ஙனமே கூறுவர்; பலவிடங்களில் இங்ஙனமன்றி 'அவை யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க.' என்றும் கூறுவர்.



PAGE 21

இனி அவற்றுக்குச் செய்யுள் வருமாறு :

        '(4) போது சாந்தம் பொற்ப வேந்தி
    ஆதி நாதற் சேர்வோர்
    சோதி வானந் துன்னு வாரே.'

இது (5) நேரசை நான்கும் வந்த செய்யுள்.

        '(6) 1அணிநிழ லசோகமர்ந் தருணெறி நடாத்திய
    2மணிதிக ழவிரொளி வரதனைப்
    பணிபவர் பவநனி பரிசறுப் பவரே.'

இது (7) நிரையசை நான்கும் வந்த செய்யுள்.

        'குறிலே நெடிலே குறிலிணை குறினெடில்
    ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி
    நேரு நிரையு 3மென்றிசிற் பெயரே'

என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 315.)

        '(8) கோழி வேந்த னேரசை நிரையசை
    யாழ்புனல் 4வாழ்க்கை வெறிசுறா நிறங்குரால்'

என்று உதாரணம் எடுத்தோதினாரும் உளரெனக் கொள்க.

'குறிலே நெடிலே' என்னும் இக்காரிகை தன்னையே இலக் கியமாக அலகிடினும் இழுக்காதெனக் கொள்க.

(5)

(4) போது - மலர், சாந்தம் - சந்தனம். பொற்ப - பொலிவுபெற, ஆதிநாதன் - முதல் தீர்த்தங்கரர்.

(5) நேரசை நான்காவன: குறிலும் நெடிலும் தனித்து வருவன இரண்டு, ஒற்றொடு வருவன இரண்டு.

(6) வரதன் - அருகபரன், பவம் - பிறப்பு, பரிசு அறுந்தல் - பெருமையை அழித்தல், பணிபவர் பிறப்பின் பெருமையை அழிப்பவர்.

(7) நிரையசை நான்காவன : குறிலிணையும் குறினெடிலும் தனித்து வருவன இரண்டு, ஒற்றொடு வருவன இரண்டு.

(8) ஆ, ழி, வெள், வேல் - வெறி, சுறா, நிறம், விளாம் என்று இவ்வாசிரியர் காட்டியவாறு கோழி வேந்தன்....குரால் என்று பிறசொற்களை உதாரணம் காட்டினாரும் உளர் என்பதற்கு. இது மேற்கோள். கோ - ழி : வேந் - தன் - இந்நான்கும் நேரசை. வெறி சுறா; நிறம் - குரால் - இந்நான்கும் நிரையசை.


(பி - ம்.) 1. அணிகிளரசோ. 2. மணி நிழ லவி. 3. மென்றிசி னோரே. 4. வேட்கை.



PAGE 22

சீர்

        6. ஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம்
    நேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யானிறுப
    வாரசை மென்முலை மாதே 1வகுத்தவஞ் சிக்குரிச்சீர்
    ஓரசை யேநின்றஞ் சீராம் பொதுவொரு நாலசையே.

இ - கை. அவ்வசைகளாலாகிய (1) சீர்களது பெயர் வேறுபா டுணர்த்.....று.

'ஈரசை நாற்சீர் அகவற்கு உரிய' எ-து. (2) இரண்டசையின் ஆகிய நான்கு சீரும் ஆசிரிய வுரிச்சீர் எனப்படும் எ-று.

அகவல் எனினும் ஆசிரியம் எனினும் ஒக்கும். என்னை?

        'அகவ லென்ப தாசிரியப் 3பாவே'

என்றார் ஆகலின்.

'வெண்பாவினவாம் நேரசையால் இற்ற மூவசைச்சீர்' எ - து. (4) நேரசை இறுதியாகிய மூவசைச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர் எனப்படும் எ-று.

'நிரையான் இறுப வகுத்த வஞ்சிக்கு உரிச்சீர்' எ - து. (5) நிரையசை இறுதியாகிய மூவசைச்சீர் நான்கும் வெண்பா வஞ்சி யுரிச்சீர் எனப்படும் எ-று.

'வார் அசை மென்முலை மாதே' எ - து. மகடூஉ முன்னிலை.

'ஓரசையே நின்றும் சீராம்' எ-து. ஒரோவிடத்து நேரசை


(1) முறியாத சொல் சீராக வருவது சிறப்புடைச்சீர்; முறிந்தசொல் சீராக வருவது சிறப்பில்சீர். 'போது - சாந்தம் - பொற்ப' - இவை சிறப்புடைச் சீர்கள் - 'பரிசறுப் - பவரே' இவை சிறப்பில் சீர்கள்.

(2) நான்காவன : நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை என்பவை.

(3) இச்சூத்திரம் சங்கயாப்பு என்ற நூலைச் சேர்ந்தது: யா. வி. சூ. 27, 69, மேற்.

(4) நேர் இறுதியாகிய மூவசைச்சீர் நான்காவன : நேர்நேர்நேர், நிரை நேர் நேர், நிரை நிரை நேர், நேர் நிரை நேர் என்பன.

(5) நிரை இறுதியாகிய மூவசைச்சீர் நான்காவன : நேர் நேர் நிரை, நிரைநேர் நிரை, நிரைநிரைநிரை, நேர்நிரை நிரை என்பன.


(பி - ம்.) 1. வருபவஞ். 2. பெயரே.



PAGE 23

தானே நின்றும் சீராம்; நிரையசை தானே நின்றும் சீராம்; அவை (6) அசைச்சீர் எனப்படும் எ-று.

'பொது ஒரு நாலசையே' எ - து. நாலசையினாலாகிய சீர் (7) பொதுச்சீர் எனப்படும் எ-று.

'நான்கு' என்பதை எல்லாவற்றோடுங் கூட்டி (8) மத்திம தீப மாகப் பொருளுரைத்துக்கொள்க.

        'ஈரசை கூடிய சீரியற் சீரவை
    ஈரிரண் டென்ப வியல்புணர்ந் தோரே'
        'மூவசைச் சீருரிச் சீரிரு நான்கினுள்
    நேரிறு நான்கும் வெள்ளை யல்லன
    பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே'
        'நாலசைச் சீர்பொதுச் சீர்பதி னாறே'
        'ஓரசைச் சீருமஃ தோரிரு வகைத்தே'
(யா. வி. சூ. 11-14.)
        'நாலசை யானு நடைபெறு (10) மோரசை
    சீர்நிலை யெய்தலுஞ் சிலவிடத் துளவே.

என்றார் காக்கை பாடினியார்.

(6)
-----

(6) இவ்வாசிரியர் யாப்பருங் கலத்தில் அசைச் சீரையும் பொதுச்சீர் என்பர் (சூ.14.)

(7) சிறப்பின்மையின் பொதுச்சீர் என்று பெயர் பெற்றது! பொது. சிறப்பின்மையை அறிவிக்கும் சொல்; 'புலமிக் கவரைப் புலமை தெரிதல்......பொது மக்கட் காகாவாம்' (பழ.)

(8) மத்திம தீபம்: ஒரு சொல் இடையிலே நின்று செய்யுளிற் பலவிடத்தும் நின்ற சொற்களோடு பொருந்திப் பொருள் விளக்குவது. அணி வகைகளுள் இது தீவகவணியின் பாற்படும்; தண்டி. சூ. 40.

(9) இது பல்காயனார் செய்தது என்று யாப்பருங்கல விருத்தியாற் றெரிகிறது; சூ. 13, மேற்.

(10) ஓரசைச் சீர் பெரும்பான்மையும் வெண்பாவின் இறுதிக் கண்ணும் அம்போதரங்க உறுப்பின் இறுதிக் கண்ணும், வஞ்சி விருத்தம் முதலியவற்றின் இடையிலும் வரும்.



PAGE 24

சீர்களின் வாய்பாடு.

        7. தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற்
        காமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா
        வாமாண் கலையல்குன் மாதே 1வருபவஞ் சிக்குரிச்சீர்
        நாமாண் புரைத்த வசைச்சீர்க் குதாரண நாண்மலரே.

இ - கை. முறையானே (1) முதல் நான்கு சீர்க்கும் உதாரணம் ஆமாறுணர்த்....று.

'தேமா புளிமா கருவிளம் கூவிளம் சீர் அகவற்கு ஆம்'. எ - து. நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை ஆகிய தேமா, புளிமா, கருவிளம் கூவிளம் என்னும் நான்கு சீரும் ஆசிரியவுரிச் சீர்க்கு உதாரணமாம் எ-று.

'ஆம் கடை காய் அடையின் வெண்பாவிற்கு' எ - து அவற்றின் கடைக்கண், காய் என்னும் சொற்பெற்றுத் தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் எனவரும் நான்கு சீரும் வெண்பாவுரிச்சீர்க்கு உதாரணமாம் எ - று.

'அந்தம் கனியா வருப வஞ்சிக்கு உரிச்சீர். எ - து. அவ் வீர சைச் சீரின் இறுதிக்கண், கனி என்னுஞ் சொற்பெற்றுத் தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என வரும் நான்கு சீரும் வஞ்சியுரிச்சீர்க்கு உதாரணமாம் எ-று.

        'வாமாண் கலையல்குன் மாதே' எ - து. மகடூஉ முன்னிலை.
    'நாமாண் புரைத்த அசைச் சீர்க்கு உதாரணம் நாள் மலரே'

எ - து. 'ஒரோ விடத்து ஆம்' என்று (2) உரைக்கப்பட்ட ஓரசைச் சீர்க்கு உதாரணம் நாள் என்பதூஉம், மலர் என்பதூஉம் ஆம் எ - று. நாள் என்பது நேரசைச்சீர்க்கு உதாரணம், மலர் என்பது நிரையசைச் சீர்க்கு உதாரணம்.

இதனுள் 2ஆம் என்பதனை 3எல்லாவற்றோங் கூட்டி மத்திம 4தீபமாக்கிப் பொருளுரைத்துக் கொள்க.


(1) முதல் நான்கு சீர்: ஆசிரியவுரிச்சீர், காய்ச்சீர், கனிச்சீர், அசைச்சீர்; இம் முறை காரிகை 6-இல் கூறப்பட்டுள்ளது.

(2) இங்ஙனம் முன் காரிகை உரையில் உரைக்கப்பட்டது.


(பி - ம்.) 1. வகுத்தவஞ். 2. ஆமாம். 3. யெங்குமொட்டி 4. தீபமாகப்.



PAGE 25

        '(3) அம்ம் பவள்ள் வரிநெடுங்கண் ணாய்வஞ்சிக்
    கொம்ம் பவள்ள் கொடிமருங்குல் கோங்கின்
    அரும்ம் பவண்முலை யொக்குமே யொக்கும்
    கரும்ம் பவள்வாயிற் சொல்'

என்னும் இப் பொய்கையார் வாக்கினுள் ஒக்கும் என்பதனை 5மத்திம தீபமாக வைத்து எல்லாவற்றோடுங் கூட்டிப் பொருளுரைத்துக் கொண்டாற் 6போலக்கொள்க.

(7)

(3) இது செப்பலோசையிற் சிறிது வழுவி வந்த இன்னிசை வெண்பா ஆதலின வெண்டுறையாகும்.


(பி - ம்.) 5. எங்குமொட்டிப்பொரு. 6. போல விதனுள் ஆமென்பதனையு மெங்குமொட்டிப் பொருளுணர்ந்து கொள்க.

----


பொதுச்சீருக்கு வாய்பாடும் அசைச்சீர் பொதுச்சீர்கட்குத் தளைவழங்கு முறைமையும்

        8. தண்ணிழ றண்பூ நறும்பூ நறுநிழ றந்துறழ்ந்தால்
    எண்ணிரு நாலசைச் சீர்வந் தருகு மினியவற்றுட்
    கண்ணிய 1பூவினங் காய்ச்சீ ரனைய கனியொடொக்கும்
    ஒண்ணிழற் சீரசைச் சீரியற் சீரொக்கு மொண்டளைக்கே.

இ - கை. பொதுச்சீருக்கு உதாரணம் ஆமாறும் அவற்றது எண்ணும், பொதுச்சீரும் அசைச்சீரும் செய்யுளகத்து வந்தால் தளை வழங்கும் முறைமையும் உணர்த்.....று.

'தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்து உறழ்ந்தால் எண்ணிரு நாலசைச் சீர்வந்து அருகும்' எ - து. தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் நான்கினோடு தண்ணிழல், தண்பூ, நறும்பூ, நறுநிழல், என்னும் நான்கினையும் முறையானே கொணர்ந்து உறழ்ந்தாற் பதினாறு நாலசைச்சீர்க்கு உதாரணமாம் எ - று.

தேமா, புளிமா, கருவிளம் கூவிளம் என்பன (1) அதிகாரத்தால் வருவித் துரைக்கப்பட்டன.


(1) அதிகாரமாவது : எடுத்துக்கொண்ட அதிகாரம் இது வாதலின் இச் சூத்திரத்துள் அதிகரித்த பொருள் இதுவென அவ்வதிகாரத்தோடு பொருந்த


(பி - ம்.) 1. பூவிளகாய்ச்.



PAGE 26

அருகும் என்பதனால் அச்சீர் செய்யுளகத்து 2அரிதாக அன்றி வாரா எனக் கொள்க.

வரலாறு

1. தேமாந் தண்ணிழல் 2. புளிமாந் தண்ணிழல்
3. கருவிளந் தண்ணிழல் 4. கூவிளந் தண்ணிழல்

எனவும்,

5. தேமாந் தண்பூ 6. புளிமாந் தண்பூ
7. கருவிளந் தண்பூ 8. கூவிளந் தண்பூ

எனவும்,

9. தேமா நறும்பூ 10. கூவிள நறும்பூ
11. கருவிள நறும்பூ 12. கூவிள நறும்பூ

எனவும்,

13. தேமா நறுநிழல் 14. புளிமா நறுநிழல்
15. கருவிள நறுநிழல் 16. கூவிள நறுநிழல்

எனவுங் கொள்க.

'இனி அவற்றுள் கண்ணிய 3பூவினம் காய்ச்சீர் அனைய' எ-து. அந் நாலசைச் சீர் பதினாறனுள்ளும் பூ என்னுஞ் சொல் இறுதியாகிய நேரீற்றுப் பொதுச் சீரெட்டும் காய் என்னுஞ் சொல் இறுதியாகிய வெண்பாவுரிச்சீரே போலக் கொண்டு, வருஞ்சீர் முதலசையோடு ஒன்றியது வெண்டளையாகவும் ஒன்றாதது கலித்தளையாகவும் கொண்டு வழங்கப்படும் எ-று.

'இனி அவற்றுள் கண்ணிய 3பூவினம் காய்ச்சீர் அனைய' எ-து. அந் நாலசைச் சீர் பதினாறனுள்ளும் பூ என்னுஞ் சொல் இறுதியாகிய நேரீற்றுப் பொதுச் சீரெட்டும் காய் என்னுஞ் சொல் இறுதியாகிய வெண்பாவுரிச்சீரே போலக் கொண்டு, வருஞ்சீர் முதலசையோடு ஒன்றியது வெண்டளையாகவும் ஒன்றாதது கலித்தளையாகவும் கொண்டு வழங்கப்படும் எ-று.

'அசைச்சீர் இயற்சீர் ஒக்கும்' எ - து. நாள் மலர் என்னுஞ் ஓரசைச்சீர் ஆசிரியவுரிச்சீரே போலக் கொண்டு, வருஞ்சீர்


உரைக்க வேண்டுழி உரைத்தல். இங்கே அதிகரித்த பொருள் தேமா, புளிமா முதலிய நான்கும் எனக் கொள்க.


(பி - ம்.) 2. அருகியன்றி. 3. பூவிளகாய்.



PAGE 27

முதலசையோடு ஒன்றியது ஆசிரியத் தளையாகவும், ஒன்றாதது இயற்சீர் வெண்டளையாகவும் 4வழங்கப்படும் எ - று.

இயற்சீரெனினும் ஆசிரிய வுரிச்சீரெனினும் ஒக்கும். என்னை?

        '(2) இயற்சீ ரெல்லா மாசிரிய வுரிச்சீர்'

என்றார் ஆகலின்.

        'ஒண்டளைக்கே' எ-து. ஒள்ளிய தளை வழங்குமிடத்து எ - று.
    ஒண்டளை என்பதனை (3) இறுதி 5விளக்காகக் கொள்க.

'கண்ணிய பூவினம்' என்று சிறப்பித்த வதனால், வெண்பாவினுள் நாலசைச்சீர் வாரா; ஆசிரியத் துள்ளுங் குற்றுகரம் வந்துழி யன்றி வாரா; கலியுள்ளும் பெரும்பான்மையுங் குற்றுகரம் வந்தவழியன்றி வாரா; வஞ்சியுட் குற்றுகரம் வாராதேயும் வரப்பெறும்; வஞ்சியுள் இரண்டு நாலசைச் சீர் ஓரடியுள் அருகிக் கண்ணுற்று நிற்கவும் பெறும்; அல்லனவற்றுட் பெரும்பான்மையும் ஓரடியுள் ஒன்றன்றி வாரா; (4) இரண்டு வரினும் கண்ணுற்று நில்லா; 6பாவின்றுணைப் பாவினத்துட் பயின்று வாரா எனக் கொள்க.

'ஒண்ணிழற் சீர்' என்று சிறப்பித்தவதனால் நிழல் என்னுஞ் சொல் இறுதியாகிய நிரையீற்றுப் பொதுச் சீர் எட்டும் வஞ்சியுள் அல்லது வாரா எனக் கொள்க.

        'நாலசை யானடை பெற்றன வஞ்சியுள்
    ஈரொன் 7றிணைதலு மேனுழி யொன்றுசென்
    றாதலு மந்த நிரையசை வந்தன

(2) இது காக்கை பாடினியார் செய்த தென்பர் (யா. வி. சூ. 11, மேற்.)

(3) இறுதி விளக்காவது ஒரு சொல் ஈற்றிலே நின்று செய்யுளிற் பல விடங்களிலும் நின்ற சொற்களோடு பொருந்திப் பொருள் விளக்குவது; இது தீவக வணியின் பிரிவுகளுள் ஒன்று (தண்டி. சூ. 40;) கடைநிலைத் தீவகம் என்றும் வழங்கும்.

(4) நாலசைச்சர் இரண்டு வரின் அவற்றை ஈரசைச்சீர் நான்காகக் கொண்டு கணக்கிடுவர்; ஆதல் பற்றிக் 'கண்ணுற்று நில்லா' என்றார்.


(பி - ம்.) 4. கொண்டு வழங்கப். 5. விளக்காகப் பொருளுரைத்துக். 6. பாவினத்துள்ளும் பயின்று. 7. றணைதலு.



PAGE 28

        கூறிய வஞ்சிக் 8குரியன வாகலும்
    9 ஆகு மென்ப வறிந்திசி னோரே'

என்றார் காக்கை பாடினியார்.

இனி 10ஒரு சாரார்'. வெண்பாவினுள் அளவெழுந்தால் 11நாலசைப் பொதுச் சீர்வரு மென்பார் உளராயினும், அவ்வாறு அலகிட்டு உதாரண வாய்பாட்டான் ஓசையூட்டும் பொழுது, செப்பலோசை 12பிழைக்கு மென்பதூஉம், ஆண்டுச் சீருந்தளையும் 13சிதைய வாராமையின் அளபெடுப்பனவும் அல்ல, அளபெடுப்பினும் அளபெடைகள் (5) அலகு காரியம் 14பெறுவனவும் அல்ல வென்பதூஉங் காக்கைபாடினியார் முதலிய தொல்லாசிரியர் துணிவு; அதுவே இந்நூ லுடையார்க்கும் உடன்பாடு.

(8)

(5) இங்கே அலகு காரியம் பெறுதலாவது அவ்வளபெடையும் ஓரெழுத்தாகக் கருதப்பெற்றுப் பிறிதொரு சீராக நிற்றல். காரிகை 36-இல் 'பல்லுக்குத் தோற்ற' என்ற உதாரண வெண்பாவைக் காண்க.


(பி - ம்.) 8. குணத்தன, குரைத்தன. 9. ஆகுநவென்ப. 10. யொருசார் 11. நாலசைச்சீர். 12. யழிந்து பிழைக்கு. சிதையாமையான் அள 14. பெறுவனவல்ல.


----

சீர்கட்கு உதாரண முதற் குறிப்பு

        9. குன்றக் குறவ னகவல்பொன் னாரம்வெண் பாட்டுவஞ்சிக்
    கொன்று முதாரணம் பூந்தா மரையென்ப வோரைச்சீர்
    நன்றறி வாரிற் கயவரும் பாலொடு நாலசைச்சீர்க்
    கன்றதென் னாரள்ளற் பள்ளத்தி னோடங் கண் வானத்துமே.

இ ....... கை. முறையானே ஐந்து வகைப்பட்ட சீரானும் வந்த இலக்கியங்கட்கு முதனினைப்பு உணர்த்.....று.

'குன்றக் குறவன் அகவல்' எ - து :

        '(1) குன்றக் குறவன் காதன் மடமகள்
    வரையர மகளிர் புரையுஞ் சாயலள்

(1) வரையர மகளிர் - மலைகளிலே திரியும் தெய்வப் பெண்டிர். ஐயள் - அழகுடையவள்; வியக்கத்தக்கவள் எனினுமாம். மார்பிற் சுணங்கினள்.



PAGE 29

        ஐய ளரும்பிய முலையள்
    செய்ய வாயினண் மார்பினள் சுணங்கே.'
(ஐங்-255.)

இந் நேரிசை யாசிரியப்பாவினுள் நான்கு ஆசிரியவுரிச்சீரும் வந்தவாறு கண்டு கொள்க.

'பொன்னாரம் வெண்பாட்டு' எ - து :

        '(2) பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர்
    உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ
    மனனோடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப்
    புனனாடன் பேரே வரும்.'

இந்நேரிசை வெண்பாவினுள் வெண்பாவுரிச்சீர் நான்கும் வந்தவாறு கண்டு கொள்க.

'வஞ்சிக்கு ஒன்றும் உதாரணம் பூந்தாமரை' எ - து:

        '(3) பூந்தாமரைப் 1போதலமரத்
    தேம்புனலிடை மீன்றிரிதரும்
    வளவயலிடைக் களவயின் மகிழ்
    வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
    மனைச்சிலம்பிய 2மணமுரசொலி
    வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
    நாளும்
    3மகிழ மகிழ்தூங் கூரன்
    புகழ்த லானாப் பெருவண் மையனே.'

இக்குறளடி வஞ்சிப்பாவினுள் நான்கு வஞ்சியுரிச்சீரும் வந்தவாறு கண்டு கொள்க.

'ஓரசைச்சீர் நன்றறிவாரிற் கயவரும் பாலொடு' எ-து :

        'நன்றறி வாரிற் கயவர் திருவுடையார்
    நெஞ்சத் தவல மிலர்.'
(குறள், 1072.)

(2) கிள்ளி - சோழன். ஊழ் - முறை. கோழி - உறையூர். மனனோடு வாய் எல்லாம் நாடன்பேரே வரும்; நினைப்பும் சொல்லும் கூறப்பட்டன.

(3) களவயின் - நெற்களத்தில். வினைக்கம்பலை - வேலை செய்யுங்கால் எழும் ஒலி. சிலம்பல் - ஒலித்தல். வயலின் கம்பலைக்கு அயல். ஆனா - அமையாத.


(பி - ம்.) 1. போஒ தலமர. 2. மணமுரசொடு. 3. மகிழும்.



PAGE 30

இக்குறள் வெண்பாவினுள் இலர் என நிரையசை சீராயினவாறு கண்டு கொள்க.

        'பாலொடு தேன்கலந் தற்றே 4பணிமொழி
    வாலெயி றூறிய நீர்.'
(குறள், 1121.)

இக்குறள் வெண்பாவினுள் நீர் என நேரசை சீராயினவாறு கண்டுகொள்க.

'நாலசைச் சீர்க்கு அன்றதென்னார் அள்ளற் பள்ளத்தினோடு அங்கண் வானத்துமே' எ - து.

        '(4) அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு
    வேங்கைவாயில் 5வியன்குன்றூரன்'

என்னும் பழம் பாட்டினுள் 6நாலசைப் பொதுச்சீர் வந்தவாறு கண்டு கொள்க.

        (5) அங்கண்வானத் தமரரரசரும்
    வெங்களியானை வேல்வேந்தரும்
    வடிவார்கூந்தன் 7மங்கையருங்
    கடிமலரேந்திக் 8கதழ்ந்திறைஞ்சக்
    சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக்
    9கொங்கிவரசோகின் 10கொழுநிழற்கீழ்ச்
    செழுநீர்ப்பவளத் திரள்காம்பின்
    முழுமதிபுரையு முக்குடைநீழல்
    வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்

(4) அள்ளற் பள்ளம் - சேற்றை யுடைய வயல். வேங்கை வாயில் - புதுக்கோட்டை யருகிலுள்ளதோர் ஊர்.

(5) வடிவு - அழகு. கதழ்ந்து - அன்பு மிகுந்து. முக்குடை : சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசனம் என மூன்று குடைகள் அருகதேவருக்கு உண்டு. வெங்கண் - கொடிய. விளிவு - அழிவு. அனந்த சதுஷ்டயம் : அனந்த ஞானம், அனந்த தரிசனம், அனந்த வீரியம் அனந்த சுகம் என்னும் நான்கின் கூட்டம். இதனை சுத்தாத்ம ஸ்வரூபம், என்பர்; இதனை அடைதலே வீடுபேறு. ஆதி - அரூகபரன்,


(பி - ம்.) 4. பனிமொழி. 5. வியன்குன்றுரே. 6. ஓரடியினுள் இரண்டு நாலசைச்சீர் வந்தவாறு. இதனைக் குறளடி வஞ்சிப்பாவாக அலகிட்டுக்கொள்க. 7. மடமங்கையருங். 8. கலந். 9. கொங்கவி. 10. குளிர் நிழற்கீழ்.



PAGE 31

        பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப
    அனந்தசதுட்டய மவையெய்த
    நனந்தலையுலகுட னவைநீங்க
    மந்தமாருத மருங்கசைப்ப
    வந்தரதுந்துமி நின்றியம்ப
    விலங்குசாமரை யெழுந்தலமர
    நலங்கிளர்பூமழை நனிசொரிதர
    இனிதிருந்
    தருணெறி நடாத்திய வாதிதன்
    றிருவடி பரவுதுஞ் சித்திபெறற் பொருட்டே.'

இக்குறளடி வஞ்சிப்பாவினுட் பொதுச்சீர் பதினாறும் அடிதோறும் முதற்கண்ணே வந்தவாறு கண்டுகொள்க.

இதனுள் நேரீற்றுப் பொதுச்சீர் எட்டும் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றியது வெண்டளையாகவும் ஒன்றாதது கலித்தளையாகவுங் கொண்டு வழங்கப்படும் எ-று. நிரையீற்றுப் பொதுச்சீர் எட்டும் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றியதூஉம் ஒன்றாததூஉம் வஞ்சித்தளை என்று வழங்கப்படும். எ-று.

இவ்வாறு பிறரும் இலக்கியங்களை முதலடுக்கிச் சொன்னாரும் உளரெனக் கொள்க. என்னை?

        (6) 'குன்று கூதிர் பண்பு தோழி
    விளியிசை முத்துற ழென்றிவை யெல்லாந்
    தெளிய வந்த செந்துறைச் செந்துறை'

என்றார் காக்கைபாடினியார்.


(6) 'குன்று கூதிர்.....செந்துறைச் செந்துறை': 'ஓங்கெழின் முதலாக், குன்று கூதிர் பண்பு தோழி, விளியிசை முத்துற ழென்றிவை யெல்லாம், தெளிய வந்த செந்துறைச் செந்துறை' என்னு மிதனுள் 'ஓங்கெழில்' என்பழி, 'ஓங்கெழி லகல்கதிர் பிதிர்துணி மணிவிழ முந்நீர் விசும்பொடு பொருதலற' என்னும் பாட்டும், 'குன்று' என்புழி. ''குன்று குடையாக் குளிர்மழை 'தாங்கினான்' என்னும் பாட்டும், 'கூதிர்' என்புழி, ''கூதிர்கொண்டிருடூங்கும்'' என்னும் பாட்டும், 'பண்பு' என்புழி, ''பண்புகொள் செயன்மாலை'' என்னும் பாட்டும். 'தோழி' என்புழி, ''தோழி வாழி, தோழிவாழி, வேழமேறி வென்ற தன்றியும்' என்னும் பாட்டும், விளியிசை' என்புழி, ''விளியிசைப்ப விண்ஊக நடுங்க'' என்னும் பாட்டும்,



PAGE 32

தளை

        10. 1தண்சீர் தனதொன்றிற் றன்றளை யாந்தண வாதவஞ்சி
    வண்சீர் விகற்பமும் வஞ்சிக் குரித்துவல் லோர்வகுத்த
    வெண்சீர் விகற்பங் கலித்தளை யாய்விடும் வெண்டளையாம்
    ஒண்சீ ரகவ லுரிச்சீர் விகற்பமு மொண்ணுதசீலே

இ....கை. நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் தம்முள் ஒன்றுதலும் ஒன்றாமையுமாகிய (1) ஏழுதளையும் ஆமாறுணர்...று.

'தண்சீர் தனது ஒன்றில் தன்தளையாம்' எ-து. தன்சீர் நின்று தனது வருஞ்சீர் முதலசையோடு (2) ஒன்றுவது தன்றளையாம் எ - று.

எனவே, ஆசிரியவுரிச்சீர் நிற்ப ஆசிரியவுரிச்சீர் வந்து நேரா யொன்றுவது நேரொன்றாசிரியத்தளை; நிரையாயொன்றுவது நிரையொன்றாசிரியத்தளையாம் எ-று. வெண்பாவுரிச்சீர் நிற்பத்தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாம் எ-று. வஞ்சியுரிச்சீர் நிற்பத் தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளையாம் எ - று.

'தணவாத' என்று மிருத்துச் சொல்லியவதனால், தன் சீர்


'முத்துறழ்' என்புழி, ''முத்துற ழகவந்தேங்கி'' என்னும் பாட்டும் குறிப்பினான் முதனின்ற மொழியான் அறியவந்தன, (நன். சூ. 268, மயிலை.)

செந்துறைச் செந்துறை என்பது செந்துறை விரி மூன்றனுள் ஒன்று, மற்றவை வெண்டுறையும், வெண்டுறைச் செந்துறையுமாம். நாற்பெரும் பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இவையெல்லாம் செந்துறை எனப்படும். பாடற்கு ஏற்றது செந்துறையானாற்போல, ஆடற்கேற்றது வெண்டுறை எனப்படும். இவற்றின் விரிவை யாப்பருங் கலவிருத்தி ஒழிபியலிற் காண்க.

----

(1) தளைக்கப்படுவது தளை; தளை - கட்டு. நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாதும் வரும் தளை ஏழாம்.

(2) ஒரு சீர் தன் சீரோடு ஒன்றி வருவதனால் தோன்றுந் தளைகள் நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத் தளை, வெண்சீர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை என நான்காம்.


(பி - ம்.) 1. தன்சீர்.



PAGE 33

நிற்பப் பிறிதாகி வருஞ்சீர் முதலசையோ டொன்றுவதூஉம் தன்றளையே, (3) சிறப்பின்றாயினு மெனக் கொள்க.

'வஞ்சி வண்சீர் (4) விகற்பமும் வஞ்சிக்குரித்து' எ - து, வஞ்சியுரிச்சீர் நிற்பத் தன்வருஞ்சீர் முதலசையோ டொன்றாத தூஉம் ஒன்றாத வஞ்சித்தளையாம் எ - று.

'வண்சீர்' என்று சிறப்பித்த வதனால் வஞ்சியுரிச்சீர் நின்று பிறிதாகி வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் ஒன்றாத வஞ்சித்தளையே. சிறப்பின்றாயினு எனக் கொள்க.

'வல்லோர் வகுத்த வெண்சீர் விகற்பம் கலித்தளையாய்விடும்' எ - து வெண்பாவுரிச்சீர் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளையாம் எ - று.

'வல்லோர் வகுத்த' என்று மிகுத்துச் சொன்னவதனால் வெண்பா வுரிச்சீர் நிற்பப் பிறிதாகி வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் கலித்தளையே, சிறப்பின்றாயினும் எனக் கொள்க.

'வெண்டளையாம் ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும்' எ - து ஆசிரியவுரிச்சீர் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் இயற்சீர் வெண்டளையாம் எ - று.

'ஒண்சீர்' என்று சிறப்பித்த வதனால் ஆசிரிய வுரிச்சீர் நின்று பிறிதாகி வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் இயற்சீர் வெண்டளையே, சிறப்பின்றாயினுமெனக் கொள்க.

        'ஒண்ணுதலே' எ - து. மகடூஉ முன்னிலை.
    'இயற்சீர் ரிரண்டு தலைப்பெய றம்முள்
    விகற்ப மிலவாய் விரவி நடப்பின்
    அதற்பெய ராசிரி யத்தளை யாகும்'
        'இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள்
    விகற்ப வகையது வெண்டளை யாகும்'

(3) எந்தச்சீர் நின்றதோ அந்தச்சீரே பின்னும் வந்து ஒன்றுவதும் ஒன்றாததும் சிறப்புடைத் தளையாம். நின்றசீர் அன்றி வேற்றுச்சீர் வந்து ஒன்றுவதும் ஒன்றாததும் சிறப்பில் தளையாம்.

(4) விகற்பம் - வேறுபாடு. ஒன்றி வராமல் வேறுபட்டு வருவது விகற்பமாம்; ஒன்றாத வஞ்சித்தளை, இயற்சீர் வெண்டளை, கலித்தளை இம் மூன்றும் விகற்பமாகி வந்தவை.



PAGE 34

        'உரிச்சீ ரதனு ளுரைத்தவை யன்றிக்
    கலக்குந் தளையெனக் கண்டிசி னோரே'
        'வெண்சீ ரிறுதியி னேரசை பின்வரின்
    வெண்சீர் வெண்டளை யாகு மென்ப'
        'வெண்சீ ரிறுதிக் கிணையசை பின்வரக்
    கண்டன வெல்லாங் கலித்தளை யாகும்'
        'தன்சீ ரிரண்டு தலைப்பெய றம்முளொத்
    தொன்றினு மொன்றா தொழியினும் வஞ்சியின்
    பந்த மெனப்பெயர் பகரப் படுமே'

என்றார் காக்கைபாடினியாரும் எனக் கொள்க.

(10)
---

தளைகட்கு உதாரண முதனினைப்பு

        11. திருமழை யுள்ளா ரகவல் சிலைவிலங் காகும்வெள்ளை
    மருளறு வஞ்சிமந் 1தாநில மென்பமை தீர்கலியின்
    தெரிவுறு பந்தநல் லாய்செல்வப் போர்க்கதக் கண்ணனென்ப
    துரிமையின் கண்ணின்மை யோரசைச் சீருக் குதாரணமே.

இ - கை. அத்தளைகளான் வந்த இலக்கியங்களுக்கு முத னினைப்பு உணர்த்.....று.

'திருமழை யுள்ளா ரகவல்' எ - து :

அகவல்

        '(1) திருமழை தலைஇய விருணிற விசும்பின்
    2விண்ணதி ரிமிழிசை கடுப்பப்
    3பண்ணமைத் தவர்தேர் சென்ற வாறே.'

இது நிரையொன்றாசிரியத் தளையான் வந்த செய்யுள்.

அகவல்

        '(2) உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை
    அலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய்

(1) 'திருமழை....பண்ணமைத்' மலைபடு. 1-2. திருமழை - செல்வத்தை யுண்டாக்கும் மழை. இமிழ் - முழங்கும். கடுப்ப - ஒப்ப. பண்ணமைந்து - அலங்கரிக்கப்பெற்று. தேரின் அதிர்ச்சிக்கு மேகத்தின் இசை உவமை. 'பண்ணமைந் தவர்தேர்' காறும் நிரையொன்றாசிரியத்தளை.

(2) உள்ளார் கொல் - நினையாரோ. சிலம்பி பொதி - சிலந்தியின் நூலார் மூடப்பட்ட. முதலடி நேரொன் றாசிரியத் தளை.


(பி - ம்.) 1. தாநிலம் வந்துமை, 2. மண்ணதி, 3. பண்ணமைத்.



PAGE 35

        துகில்பொதி பவள மேய்க்கும்
    அகில்படு கள்ளியங் காடிறந் தோரே.'
(ஐங். தனிப். 2)

இது நேரொன்றாசிரியத் தளையான் வந்த செய்யுள்.

'சிலை விலங்காகும் வெள்ளை' எ - து :

நேரிசை வெண்பா

        (3) சிலைவிலங்கு நீள்புருவஞ் சென்றொசிய நோக்கி
    முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு
    தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோ
    கார்மாலை கண்கூடும் 4போது.'

இது வெண்சீர் வெண்டளையானும் இயற்சீர் வெண்டளை யானும் வந்த செய்யுள்.

'மருளறு வஞ்சி மந்தாநிலம்' எ - து:

வஞ்சிப்பா

        '(4) மந்தாநில 5மருங்கசைப்ப
    வெண்சாமரை புடைபெயர்தரச்
    செந்தாமரை நாண்மலர்மிசை
    யெனவாங்
    கினிதி னொதுங்கிய விறைவனை
    மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே.'

இது (5) மயக்கமற வகுத்த வஞ்சித்தளையுள் ஒன்றியதூஉம் ஒன்றாததூஉம் வந்த செய்யுள்.


(3) சில விலங்கு - வில் தோற்றோடுதற்குக் காரணமான. ஒசிய - வளைய. விலங்கிற்று - தழுவுதலினின்றும் நீங்கியது. கார்மாலை - கார்காலத்து மாலை நேரம்.

(4) மந்தாநிலம் - தென்றல். இறைவன் - அருகபரன். முதலிரண்டடிகளில் ஒன்றிய வஞ்சித்தளையும் மூன்றாமடியில் ஒன்றாத வஞ்சித்தளையும் வந்துள்ளன. 'எனவாங்கு' தனிச்சொல். இனிதி.....மகிழ்ந்தே:' சுரிதகம். வஞ்சிப்பா தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று இறுவது.

(5) மயக்கமற வகுத்த வஞ்சித்தளை - வஞ்சி யுரிச்சீரோடு வஞ்சியுரிச்சீரே புணருவதனால் வருந் தளை; மயக்கம் - கலப்பு. மயக்கமில்லாத கலித்தளை என்பதற்கும் இங்ஙனமே கொள்க. இவ்வஞ்சிப்பாவின் முதன் மூன்றடிகளிலும் வஞ்சியுரிச்சீர்களே வந்துள்ளமை காண்க.


(பி - ம்.) 4. போழ்து. 5. வந்தசைப்ப.



PAGE 36

['மருளறு' என்றதனால் வஞ்சித்தளையால் வந்த வஞ்சிப்பாச் சிறப்புடைத்து.]

'மைதீர் கலியின் தெரிவுறு பந்தம்.....செல்வப் போர்க் கதக் கண்ணன்' எ - து:

கலிப்பா

        '(6) செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
    முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
    எல்லைநீர் வியன்கொண்மூ விடைநுழையு மதியம்போல்
    மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்த் தொளித்ததே.'

இது மயக்கமில்லாத கலித்தளையான் வந்த செய்யுள்.

['மைதீர்கலி' யென்றவதனாற் கலித்தளையான் வந்த கலிப்பா (7) சிறப்புடைத்து.]

'நல்லாய்' எ - து. மகடூஉ முன்னிலை.

'உரிமையின் கணின்மை யோரசைச் சீருக்கு உதாரணமே:' எ - து :

வஞ்சி விருத்தம்

        'உரிமை யின்க ணின்மையால்
    அரிமதர் மழைக் கண்ணாள்
    செருமதி செய் தீமையாற்
    பெருமை 6கொன்ற வென்பவே.'

இம் (8) முச்சீரடி வஞ்சி விருத்தத்துள் 'மழை' என்னும் நிரையசைச்சீர் இயற்சீரேபோல நின்று, வருஞ்சீர் முதலசையோடு


(6) ஆழி - சக்கரப்படை. முல்லைத்தார் - வெற்றிமாலை ; பு, வெ. 222. முன்பெல்லாம் வெற்றியையே பெற்றவர் என்றபடி, கொண்மூ - மேகம். மருமம் - மார்பு ஆழியை யானைமேல் எறிதல்: 'கொல்யானை யணிநுத லழுத்திய வாழிபோல்' (கலி. 134.)

(7) 'செல்வப்போர்' என்ற இச் செய்யுளே சிறப்புடைய கலிப்பாவுக்கு உதாரணம்.

(8) வஞ்சிவிருத்தம் முச்சீரடியானே வருவது ஆதலின் 'முச்சீரடி' என்று இங்கே மிகுத்துக் கூறியது என்னையெனின், அசை சீராக வருதல் அரிதாகலின், 'இருசீரடியான் வந்த வஞ்சித்துறையோ இது' என்று மயக்கம் கொள்ளாமைக்கு என்க.


(பி - ம்.) 6. பொன்றுமென்பவே.



PAGE 37

ஒன்றாமையின் இயற்சீர் வெண்டளை யாயினவாறும், 'செய்' என்னும் அசைச்சீர் இயற்சீரேபோல நின்று வருஞ்சீர் முதலசையோடு நேரசையாய் ஒன்றினமையின் நேரொன்றாசிரியத் தளையாயினவாறும் கண்டுகொள்க. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

['உதாரணம்' என்பதனை இறுதிநிலை விளக்கெனக்கொள்க.]

(11)
----

அடி

        12. குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர்
    அறைதரு காலை யளவொடு நேரடி யையொருசீர்
    நிறைதரு பாத நெடிலடி யாநெடு மென்பணைத்தோட்
    கறைகெழு வேற்கணல் லாய்மிக்க பாதங் கழிநெடிலே.

இ - கை. அத் தளைகளான் வந்த அடிகளது பெயர் வேறுபாடு உணர்த்....று.

'குறள் இரு சீரடி' எ - து. இருசீரான் வந்த அடி. (1) குறளடி யெனப்படும் எ - று.

'சிந்து முச்சீரடி' எ - து. முச்சீரான் வந்த அடி சிந்தடி யெனப்படும் எ - று.

'நாலொருசீர் அறைதரு காலை அளவொடு நேரடி' எ - து. நாற்சீரான் வந்தஅடி அளவடியென்றும் நேரடியென்றும் வழங் கப்படும் எ - று.

[அளவடியெனினும் நேரடியெனினும் ஒக்கும்] 'அளவொடு நேரடி என்றவதனால் அளவடி மற்றை யெல்லா வடியினும் சிறப்புடைத்து.

'ஐயொருசீர் நிறைதரு (2) பாதம் நெடிலடியாம்' எ - து. ஐஞ்சீரான் வந்தவடி நெடிலடியென்று வழங்கப்படும் எ - று.


(1) குறளடி முதலியன காரணக் குறியின : மக்களில் தீரக் குறியானைக் 'குறளன்' என்றும், அவனின் நெடியானைச் 'சிந்தன்' என்றும், குறியனும், நெடியனும் அல்லாதானை 'அளவிற் பட்டான்' என்றும், அவனின் நெடியானை 'நெடியான்' என்றும், தீரநெடியானைக் 'கழியநெடியான்' என்றும் வழங்குவர் ஆதலின் இவ்வடிகட்கும் இவ்வாறே பெயர் சென்றதெனக் கொள்க.

(2) பாதம் - அடி.



PAGE 38

'நெடுமன் பணைத்தோள் கறைகெழு வேற்கண் நல்லாய்' எ - து மகடூஉ முன்னிலை.

'மிக்க பாதம் கழிநெடிலே' எ - து. ஐஞ்சீரின் மிக்க சீரான் வந்த அடியெல்லாங் கழி நெடிலடி எனப்படும் எ - று.

(3) அகலம் உரையிற் கொள்க.

        'குறளடி சிந்தடி யிருசீர் முச்சீர்
    அளவடி நெடிலடி நாற்சீ ரைஞ்சீர்
    நிரனிறை வகையா னிறுத்தனர் கொளலே'
        'கழிநெடி லடியே கசடறக் கிளப்பின்
    அறுசீர் முதலா வையிரண் டீறா
    வருவன பிறவும் வகுத்தனர் கொளலே'

என்பவை யாப்பருங்கலமெனக் கொள்க. (சூ. 24. 25)

        'இருசீர் குறளடி சிந்தடி முச்சீர்
    அளவடி நாற்சீ 1ரைஞ்சீர் நெடிலடி
    அறுசீர் கழிநெடி லாகு மென்ப'
        'எண்சீ ரெழுசீ ரிவையாங் கழிநெடிற்
    கொன்றிய வென்ப வுணர்ந்திசி னோரே'

என்றார் காக்கைபாடினியாரும்.

        '(4) [குறளொரு பந்த மிருதளை சிந்தாம்
    முத்தளை யளவடி நாற்றளை நெடிலடி
    மிக்கன கழிநெடி லென்றிசி னோரே'

என்றார் பிறருமெனக் கொள்க.]

(12)
----

(3) விரிவான பொருளை யாப்பருங்கல விருத்தியிரையிற் கண்டு கொள்ளுக' என்பது இத்தொடரின் பொருள்; காரிகை, 5-அடிக்.

(4) இச்சூத்திரம் தளையின் கணக்கைக் கொண்டு குறளடி முதலியவற்றை விளக்குகின்றது; பந்தம் - தளை.


(பி - ம்.) 1. ரறுசீரதனி, னிழிபு நெடிலடி யென்றிசி னோரே.



PAGE 39

அடிகளுக்கு உதாரண முதனினைப்பு

        13. திரைத்த விருது குறள்சிந் தளவடி தேம்பழுத்து
    விரிக்கு நெடிலடி வேனெடுங் கண்ணிவென் றான்வினையின்
    இரைக்குங் கணிகொண்டமூவடி வோடிடங் கொங்குமற்றுங்
    கரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர் கழிநெடிலே.

இ - கை. அவ்வடிகளான் வந்த இலக்கியங்கட்கு முதனினைப் புணர்த்....று.

திரைத்த விருது குறள் சிந்து எ - து :

வஞ்சித்துறை

        '(1) திரைத்த சாலிகை
    நிரைத்த போனிரைந்
    திரைப்ப தேன்களே
    விரைக்கொண் மாலையாய்'
(சூளா. சீயவதை. 172.)

இது குறளடியான் வந்த செய்யுள்.

வஞ்சிவிருத்தம்

        'இருது வேற்றுமை யின்மையாற்
    சுருதி மேற்றுறக் கத்தினோ
    டரிது வேற்றுமை யாகவே
    கருது1 வேற்றடங் கையினாய்'
(சூளா. சீயவதை. 170.)

இது சிந்தடியான் வந்த செய்யுள்.

'அளவடி தேம்பழுத்து' எ - து :

கலிவிருத்தம்

        '(2) தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
    மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்

(1) திரைத்த சாலிகை - சுருங்கிய கவசம். நிரந்து - வரிசையாகி. தேன்கள் இரைப்ப - வண்டுகள் ஒலிப்ப. விரை - நறுமணம். மாலையில் படிந்துள்ள வண்டுகளுக்கு மாலைக்கிடும் கவசம் உவமை.

(2) இனியநீர் மூன்று - கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்னும் மூன்றும் கலந்து ஊறிய நீர். அளிந்தன - கனிந்தனவாகிய. வேரி - தேன்.


(பி - ம்.) 1. வேற்றடக்கையினாய். வேற்றடங் கண்ணினாய்.



PAGE 40

        மாம்பழக் கனிகளு மதுத்தண் டீட்டமுந்
    தாம்பழுத் துளசில தவள மாடமே.'
(சூளா. நகரச். 14.)

இது அளவடியான் வந்த செய்யுள்.

'விரிக்கு நெடிலடி வென்றான் வினையின்' எ - து :

விருத்தக் கலித்துறை

        '(3) வென்றான் வினையின் 2றொகையாய விரிந்துதன்கண்
    ஒன்றாய்ப் பரந்த வுணர்வின் னொழியாது முற்றுஞ்
    சென்றான் றிகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
    நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்.'
(சூளா. காப்பு.)

இது நெடிலடியான் வந்த செய்யுள்.

'வேல்நெடுங் கண்ணி' எ - து. மகடூஉ முன்னிலை.

'இரைக்குங் கணிகொண்ட மூவடி வோடிடங் கொங்கு மற்றும்.......கழிநெடிலே' எ - து :

ஆசிரியவிருத்தம்

        'இரைக்கு மஞ்சிறைப் பறவைக ளெனப்பெய ரினவண்டு புடைசூழ
    நுரைக்க ளென்னுமக் 3குழம்புக டிகழ்ந்தெழ நுடங்கிய விலயத்தால
    திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக கரைமேல்வைத்
    தரைக்கு மற்றிது குணகடற் றிரையொடு பொருதல தவியாதே'
(சூளா. கல்யாணச். 51.)

என்பது அறுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.


(மதுத்தண்டு - கள்ளைப் பொதிந்து வைத்திருக்கும் மூங்கிற் குழாய்; 'நீடமை விளைந்த தேக்கட் டேறல்' (முருகு 195.) 'தழங்கு வெம்மதுத் தண்டும்' (சீவக. 863) தவளம் - வெண்மை.

(3) வினையின் தொகை ஆய வென்றான் : வெங்கண் வினைப்பகை வினி வெய்த..... அருணெறி நடாத்திய வாதி' (கா. 9. மேற்.) 'திகழும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி': வெம்புஞ் சுடரிற் சுடருந் திருமூர்த்தி' (சீவக. 2); 'பரிதியி னொருதர னாகி.......உயர்ந்த அற்புத மூர்த்தி' (நன். சிறப். 3-5.)

(4) இரைக்கும் - ஒலிக்கும். பறவைகள் : அறுகாற் பறவை என்பது வண்டுக்குப் பெயர். இலயம் - கலப்பு. இது கங்கையின் வருணனை.


(பி - ம்.) 2. றொகை நீங்க, றொகையாக, றொகையாகி 3. குழம்பு கொண்டுதீர்ந்தெழ.



PAGE 41

ஆசிரியவிருத்தம்

        (5) கணிகொண் டலர்ந்த நறவேங்கை யோடு கமழ்கின்ற காந்த ளிதழாலஅணிகொண் டலர்ந்த
    வனமாலை சூடி யகிலாவி குஞ்சி கமழ
    மணிகுண்ட லங்க ளிருபாலும் வந்து வரையாக மீது திவளத்
    துணிகொண் டிலங்கு சுடர்வேலி னோடு வருவானி தென்கொறுணிவே.'
(சூளா. அரசியற். 197)

இஃது எழுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

ஆசிரியவிருத்தம்

        '(6) மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரு நாண
    முழுதுலக மூடியெழின் முளைவயிர 4நாற்றித்
    தூவடிவி னாவிலங்கு வெண்குடையி னீழற்
    சுடரோயுன் னடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்
    சேவடிக டாமரையின் சேயிதழ்க டீண்டச்
    சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப்
    பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து
    புலங்கொளா 5வாலெமக்குப் புண்ணயர்தங் கோவே.'
(சூளா. துறவு. 64.)

இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

ஆசிரியவிருத்தம்

        (7) இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியி னெதிர்ந்த
    தானையை யிலங்கு மாழியின் விலங்கியோள்
    6 முடங்கல் வாலுளை மடங்கன் மீமிசை முளிந்து சென்றுடன்
    முரண்ட ராசனை முருக்கியோள்

(5) கணி - சோதிடம் : கார்ப்பருவத்தின் வருகையை அறிவிக்க இது மலர்வதனால் 'கணிகொண் டலர்ந்த வேங்கை' என்றார்; 'இளவேங்கை நாளுரைப்ப' ('திணைமாலை நூற். 20). வனமாலை - அழகிய மாலை.

(6) மூன்று வடிவினவாகிய குடை என்க. 'சுடரோய்' என்றது அருகபனை. புலம்கொளா - இவ்விஷயங்கள் எங்கள் அறிவுக்கு எட்டவில்லை.

(7) மடங்கல் - சிங்கம். முருக்கியோள் - அழித்தவள்.


(பி - ம்.) 4. நாறித். 5. வாலெமக்கெம். 6. முடங்குவாலுளை



PAGE 42

        வடக்கொண் மென்முலை நுடங்கு நுண்ணிடை மடந்தை
    சுந்தரி வளங்கொள் பூண்முலை மகிழ்ந்தகோன்
    தடக்கொ டாமரை யிடங்கொள் சேவடி தலைக்கு வைப்பவர்
    தமக்கு வெந்துயர் தவிர்க்குமே.'

இஃது ஒன்பதின் சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

ஆசிரியவிருத்தம்

        'கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு
    கூடி நீடு மோடை நெற்றி
    வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத
    நாத வென்று நின்று தாழ
    அங்க பூர்வ மாதி யாய வாதி நூலி
    னீதி யோது மாதி யாய
    செங்கண் மாலை காலை மாலை 7சேர்நர் சேர்வர்
    சோதி சேர்ந்த சித்தி தானே.'

இது பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

'மற்றும்' என்றதனாற் பதின்சீரின் மிக்க அடியான் வரப் பெறுவனவும் உளவெனக் கொள்க. அவை யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க.

(8) 'கரிக்கைக் கவான் மருப்பு ஏர்முலை மாதர்' எ - து மகடூஉ முன்னிலை.

இக் காரிகையுள் மகடூஉ முன்னிலையை இரண்டிடத்தே சொல்லியதூஉம் 'விரிக்கு நெடிலடி' யென்று சிறப்பித்ததூஉம் எண்சீரின் மிக்க சீரான் வந்த அடி சிறப்பிலவெனக் கொள்க என்று அறிவித்தற்கெனக் கொள்க.

        'இரண்டு முதலா வெட்டீ றாகத்
    திரண்ட சீரா னடிமுடி வுடைய
    இறந்து வரினு மடிமுடி வுடைய
    சிறந்த வல்ல செய்யு ளுள்ளே'

என்றார் காக்கை பாடினியார்.

(13)
---

(8) கரிக்கை கவான் - யானையின் துதிக்கையைப் போன்ற துடை மருப்பு - யானையின் தந்தம். ஏர் - அழகு.


(பி - ம்) 7. சென்று.



PAGE 43

அடிவரையறை

        14. வெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி மூன்றகவற்
    கெள்ளப் படாக்கலிக் கீரிரண் டாகு மிழிபுரைப்போர்
    உள்ளக் கருத்தி னளவே பெருமையொண் 1போதலைத்த
    கள்ளக் கருநெடுங் கட்சுரி மென்குழற் காரிகையே.

இ - கை. அவ்வடி வரையறையான் வந்த நான்கு பாவிற்கும் சிறுமை பெருமை உணர்த்......று.

(1) 'வெள்ளைக்கு இரண்டடி இழிபு' எ - து. வெண்பாவிற்கு இரண்டடியே சிறுமை எ - று.

'வஞ்சிக்கு மூன்றடி இழிபு' எ - து. வஞ்சிப்பாவிற்கு மூன் றடியே சிறுமை எ - று.

'மூன்றகவற்கு இழிபு' எ - து. ஆசிரியப்பாவிற்கு மூன்றடியே சிறுமை எ - று.

'எள்ளப்படாக் கலிக்கு ஈரிரண்டு ஆகும் இழிபு' எ - து. கலிப்பாவிற்கு நான்கடியே சிறுமை எ - று.

['இழிபு' எ - து சிறுமை எ - று.]

'உரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமை' எ - து. நான்கு பாவிற்கும் பெருமைக்கு எல்லை பாடுவோரது பொருண் முடிவு குறிப்பே, வரையறையில்லை எ - று.

'ஒண் போது அலைத்த கள்ளக் கருநெடுங்கண் சுரிமென் குழல் காரிகையே' எ - து. மகடூஉ முன்னிலை.

'எள்ளப்படாக் கலிக்கு' என்று சிறப்பித்தவதனால், (2) துள் ளலோசையிற் சிறிதும் வழுவாது நாற்சீர் நாலடியால் வருவது தரவு கொச்சகக் கலிப்பா என்றும், துள்ளலோசையிற் சிறிது


(1) வெண்பா வெள்ளையென்றும் வழங்கப்படும் ; 'வெள்ளைச் செந்துறை' 'செந்துறை வெள்ளை' போன்ற பெயர்களைக் காண்க.

(2) துள்ள லோசை சிறிதும் வழுவாது வருதல் - கலித்தளையே அமைந்து வருவது.


(பி - ம்) 1. பேரதுலைத்த, போர்தொலைத்த



PAGE 44

வழுவி நாற்சீர் நாலடியான் வருவது கலிவிருத்தம் என்றும் தெரிந்து உணரப்படும் எ - று.

'வெள்ளைக் கிரண்டாம் அகவற்கு மூன்று கலிக்கடி நான்கு எள்ளப்படா வஞ்சிப்பாவிற்கு மூன்றாம் இழிபு' என்று பாக்களை முறையிற் கூறாது தலை தடுமாற்றமாகக் காரிகை சொல்லவேண்டிய தென்னையோ வெனில், 'தலைதடுமாற்றத் தந்து புணர்ந்துரைத்தல்' என்பது தந்திரவுத்தியாகலின்; அது மயேச்சுரர் முதலாகிய வொருசாராசிரியர் வஞ்சிப்பா இரண்டடியானும் வரப்பெறும் என்றாரென்பதூஉம். ஆசிரியப்பா இரண்டடிச் (3) சுரிதகமாய் வரப்பெறும் என்பதூஉம் அறிவித்தற்கு எனக் கொள்க. என்னை?

        'வெண்பா வாசிரியங் கலியே வஞ்சியெனும்
    நண்பா வுணர்ந்தோர் நுவலுங் காலை
    இரண்டு மூன்று நான்கு மிரண்டுந்
    திரண்ட வடியின் சிறுமைக் கெல்லை'

என்றெடுத்து ஓதிய மயேச்சுரர் வஞ்சிச் சிறுமைக்குக் காட்டும் பாட்டு:

        'பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி
    வேந்தன் 2கழல் பரவாதவர் வினைவெல்லார்
    அதனால்
    அறிவன தடியிணை 3பரவப்
    பெறுகுவர் யாவரும் பிறவியி னெறியே.'

இதனை முச்சீர் வஞ்சியாக அலகிட்டு வஞ்சிப்பா ஆசிரியச் சுரிதகத்தான் இற்று இரண்டடியான் வந்தவாறு கண்டுகொள்க.

        '(4) ஒருதொடை யீரடி வெண்பாச் சிறுமை
    இருதொடை மூன்றா மடியி னிழிந்து

(3) சுரிதகம் - கலிப்பா, வஞ்சிப்பாக்களின் ஈற்றில் வரும் உறுப்பு. நீர்ச் சுழிபோலச் சுரிந்து முடிவதனால் சுரிதகம் எனப்படும். சுரிந்து முடிதலாவது முன் வந்த அடியளவிற் சுருங்கி முடிதல்.

(4) இரண் டடிகொண்டது ஒரு தொடை ஆதல்பற்றி 'ஒருதொடையீரடி, என்றார். தொடை - (மலர்களால்) தொடுக்கப்படும் மாலையே போல, அடிகளால் தொடுக்கப்படுவது. மூன்றாம் அடி - மூன்றாகிய அடிகள். மேலே,' நான்காம்


(பி - ம்.) 2. புகழ். 3. பரவிப்.



PAGE 45

        வருவன வாசிரிய மில்லென மொழிப
    வஞ்சியு மப்பா வழக்கின வாகும்,'
    `நான்கா மடியினு மூன்றாந் தொடையினுக்
    4தாழ்ந்து கலிப்பாத் தழுவுத லிலவே,'
    5 உரைப்போர் குறிப்பினை 6 நீக்கிப் பெருமை
    வரைத்தித் துணையென வைத்துரை யில்லென்
    றுரைத்தனர் மாதோ வுணர்ந்திசி னோரே.'

என்றார் காக்கை பாடினியாருமெனக் கொள்க.


(14) அடியினும் மூன்றாம் தொடையினும்' என்று வருவனவற்றுக்கும் இங்ஙனமே பொருள் கொள்க.


(பி - ம்) 4. தாழ்ந்த. 5. படைப்போர். 6. யன்றிப், நோக்கிப்.


---

அடிவரையறை உதாரண முதற்குறிப்பு

        15. அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு
    `ருறித்தாங் குரைப்பின் முதுக்குறைந் தாங்குறை யாக்கலியின்
    திறந்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை
    2புறத்தாழ் கருமென் குழற்றிரு வேயன்ன பூங்கொடியே.

இ.....கை. 3அவ்வடி வரையறையான் வந்த இலக்கியங் .....கட்கு முதனினைப் புணர்த்.....று.

`அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபு' எ - து :

        `அறத்தா றிதுவென வேண்டா சிலிகை
    பொறுத்தானோ டூர்ந்தா னிடை' 
(குறள், 37.)

இஃது இரண்டடியான் வெண்பாவிற்குச் சிறுமை வந்தவாறு.

`அகவற்கு இழிபு 4குறித்தாங்கு உரைப்பின் முதுக்குறைந்தாம்' எ - து :

        `(1) முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
    மலைய னொள்வேற் கண்ணி
    முலையும் வாரா முதுக்குறைந் தனளே.'

(1) முதுக்குறைந்தனள் - முதற்பூப்படைத்து பருவம் பெற்றாள் என்றபடி. முதுக்குறைதல் - அறிவு மிகுதல். மலையன் : ஒரு வள்ளல்; மலையமான் திரு


(பி - ம்.) 1. குறித்தாறுரைப். 2. `புறத்தான் வரு. 3. அந்நான்கு பாவிற்கும் அடிவரையான். 4. குறித்தாறுரைப்பின்.



PAGE 46

இது மூன்றடியான் ஆசிரியப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு.

        'குறையாக் கலியின திறத்தாறிது செல்வப்போர் எ - து :
    'செல்வப்போர்க் கதக்கண்ணன்....பாய்ந்தொளித்ததே.'
(கா. 11. மேற்.)

இது நான்கடியானே கலிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு.

'செங்கண் மேதி வஞ்சிச் சிறுமை' எ - து :

        '(2) செங்கண்மேதி கரும்புழக்கி
    அங்கணீலத் தலரருந்திப்
    பொழிற்காஞ்சி நிழற்றுயிலுஞ் செழுநீர்
    நல்வயற் கழனி யூரன்
    புகழ்த லானாப் பெருவண் மையனே.'

இது தனிச்சொற் பெற்றுச் சுரிதகத்தான் இற்று மூன்றடியான் வஞ்சிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு.

'புறத்தாழ் கருமென் குழல் திருவே அன்ன பூங்கொடியே' எ - து மகடூஉ முன்னிலை.


முடிக்காரி என்றும் சொல்லப்படுவான் ; புறநா. 123, 158. ஒள்வேல் - ஒள்ளிய வேலைப் போன்ற.

(2) மேதி - எருமை. பொழிற் காஞ்சி - சோலையிலுள்ள காஞ்சி மரம். ஆனா - அமையாத. தலைவனது பரத்தைமையை உள்ளுறை யுவமையால் விளக்கி அவனைப் பழிப்பது இச்செய்யுள்.


----

தொடை

அடிமோனை முதலிய ஐந்து

        16. எழுவா யெழுத்தோன்றின் மோனை யிறுதி யியைபிரண்டாம்
    வழுவா வெழுத்தொன்றின் மாதே யெதுகை மறுதலைத்த
    மொழியான் வரினு முரணடி தோறு 1மொழிமுதற்கண்
    அழியா தளபெடுத் தொன்றுவ தாகு மளபெடையே.

அடிமோனை யிணைமோனை பொழிப்புமோனை ஒரூஉமோனை கூழைமோனை மேற்கதுவாய்மோனை கீழ்க்கதுவாய்மோனை முற்று மோனை யெனவும்.


(பி - ம்) 1. முதன் மொழிக்கண்.



PAGE 47

அடியியைபு இணையியைபு பொழிப்பியைபு ஒரூஉவியைபு கூழையியைபு மேற்கதுவாயியைபு கீழ்க்கதுவாயியைபு முற்றியைபு எனவும்,

அடியெதுகை இணையெதுகை பொழிப்பெதுகை ஒரூஉ வெதுகை கூழையெதுகை மேற்கதுவா யெதுகை கீழ்க்கதுவா யெதுகை முற்றெதுகை எனவும்.

அடிமுரண் இணைமுரண் பொழிப்புமுரண் ஒரூஉமுரண் கூழைமுரண் மேற்கதுவாய் முரண் கீழ்க்கதுவாய்முரண் முற்று முரண் எனவும்,

அடியளபெடை இணையளபெடை பொழிப்பளபெடை ஒரூஉ வளபெடை கூழையளபெடை மேற்கதுலாயளபெடை கீழ்க்கதுவா யளபெடை முற்றளபெடை எனவும்.

அந்தாதித்தொடை இரட்டைத்தொடை செந்தொடையெனவுங் கிடந்த தொடையும் தொடை விகற்பங்களும் ஆமாறு உணர்த்துவான் எடுத்துக்கொண்டார்.

அவற்றுள் இக்காரிகை (1) அடிமோனையும், அடியியைபும், அடியெதுகையும், அடிமுரணும் அடியளபெடையும் ஆமாறு உணர்....று.

'எழுவாய் எழுத்து ஒன்றின் மோனை' எ - து. அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடிமோனைத் தொடை எனப்படும் எ - று.

எழுவாய் எனினும் ஆதி எனினும் முத லெனினும் ஒக்கும்.

மோனை எனினும் முதற்றொடை எனினும் ஒக்கும்,

'இறுதி யியைபு' எ - து. அடிதோறும் இறுதிக்கண் 2நின்ற


(1) எல்லாத் தொடை விகற்பங்களிலும் மோனையும் எதுகையுமே பாக்களுக்கும் பாவினங்களுக்கும் இன்றியமையாத சிறப்பினவாக உள்ளன. எதுகை மோனைகளைப்பற்றிய பிற செய்திகள் 41ஆம் காரிகையுட் கூறப்படுகின்றன. முரண் தொடையைப் பற்றிய பிற செய்திகள் 40ஆம் காரிகையுட் கூறப்படுகின்றன.


(பி - ம்.) 2. நின்ற சீரை முதற்சீராகக் கொண்டு அச்சீரின் முடி வெழுத்தானும், அசையானும், சீரானும் சொல்லானும் ஒன்றி.



PAGE 48

(2) எழுத்தானும் சொல்லானும் ஒன்றிவரத் தொடுப்பது அடியியைபுத் தொடை எனப்படும், எ - று.

'இரண்டாம் வழுவாவெழுத்து ஒன்றின்......எதுகை எ - து. அடிதோறும் முதற்கண் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடியெதுகைத் தொடை எனப்படும் எ-று.

(3) 'இரண்டாம் எழுத்து ஒன்றின் எதுை' யென்னாது, 'வழுவா எழுத்து' என்று சிறப்பித்தவதனால், இரண்டாம் எழுத்து ஒன்றி வரினும் முதலெழுத்தெல்லாம் தம்முள் ஒத்த அளவினவாய் வந்து, சுட்டென்பதற்குப் பட்டென்பது அல்லாது பாட்டென்பது எதுகை யாகாது; காட்டென்பதற்குப் பாட்டென்பது அல்லாது பட்டென்பது எதுகையாகாது எனக் கொள்க.

'மாதே' எ - து மகடூஉ முன்னிலை.

'மறுதலைத்த மொழியான் வரினும் முரண்' எ - து அடிதோறும் 3மொழிமுதற்கட் (4) சொல்லானும் பொருளானும் மறுதலைப்படத் தொடுப்பது அடிமுரண்டொடை எனப்படும் எ - று.

'மொழியான் வரினும்' என்ற வும்மையாற் 4பொருளானும் வரும் என்பதாயிற்று.

'அடிதோறும் எ - து. மத்திம தீபமெனக் கொள்க.

5 'மொழிமுதற்கண் அழியாது அளபெடுத்து ஒன்றுவதாகும் அளபெடையே எ - து அடிதோறும் 6 மொழிமுதற்


(2) எழுத்தான் ஒன்றிவந்ததற்கு உதாரணம். 'மொய்த்துடன் றவழும்' (கா. 20. மேற்.) என்பது. சொல்லான் ஒன்றி வந்ததற்கு உதாரணம், 'இன்னகைத் துவர்வாய்' (கா. 18. மேற்) என்பது.

(3) 'இரண்டாம் வழுவா வெழுத்து' என்று சிறப்பித்தவதனால், அடிக்கு எழுத்து எண்ணுங்கால் மெய்களை விட்டொழித்து எண்ணுவது போலன்றித் தொடைக்கு அவையும் கூட்டிக் கொள்ளப்படும் என்றவாறு.

(4) சொல் முரணுக்கு உதாரணம் 'சீறடிப் பேரல்குல்' சுருங்கிய நுசுப்பு பெருகுவடம்' 'குவிந்து விரிந்து' போன்ற தொடர்கள். பொருள் முரணுக்கு உதாரணம், 'இருள்பரந்தன்ன' என்ற செய்யுளின் (கா. 18 மேற்) முதல் நான்கு அடிகள்.


(பி - ம்.) 3. முதன்மொழிக்கட், 4. பொருளான் வரினுமென்ப. 5. முதன்மொழிக்கண், 6. முதன்மொழிக்கண்.



PAGE 49

கண் உயிரானும் ஒற்றானும் அளபெடுத்துத் தம்முள் ஒன்றிவரத் தொடுப்பது அளபெடைத் தொடை எனப்படும் எ - று.

'அழியாது' என்று மிகுத்துச் சொல்லியவதனால் நான்கு உயிரளபெடையும் இரண்டு ஒற்றளபெடையும் தம்முள் ஒன்றி வரத் தொடுப்பது சிறப்புடைத்தென்று உணர்க. தொடை விகற்பததுள் நான்கு உயிரளபெடையும் இரண்டு ஒற்றளபெடையும் தம்முள் மறுதலைப்படத் தொடுப்பினும் இழுக்காது.

        'முதலெழுத் தொன்றின் மோனை யெதுகை
    முதலெழுத் தளவோ டொத்தது முதலா
    அஃதொழித் 7தொன்றின வாகு மென்ப'

என்றார் பல்காயனார்.

        'இறுவா யொப்பினஃ தியைபென மொழிப'

என்றார் 8கையனார்.

        'மொழியினும் பொருளினு முரணுதன் முரணே'
(தொல். பொருள். சூ. 40,)

என்றார் தொல்காப்பியனார்.

        'அளபெடைத் 9தொடைக்கே யளபெடை யொன்றும்' 

என்றார் 10நத்தத்தனாரும் எனக் கொள்க.

(16)

(பி - ம்.) 7. தொள்றினாகு, 8. காக்கை பாடினியார், மயேச்சுரர். 9. தொடையே. 10. நற்றத்தனார்.


----

அந்தாதி, இரட்டை, செந்தொடை

        17. அந்த முதலாத் தொடுப்பதந் தாதி யடிமுழுதும்
    வந்தமொழியை வருவ திரட்டை வரன்முறையான்
    முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டாற்
    செந்தொடை நாமம் பெறுநறு மென்குழற் றேமொழியே.

இ.....கை. அந்தாதித்தொடையும் இரட்டைத்தொடையும் செந்தொடையும் ஆமாறு உணர்த்..று.

அந்த முதலாத் தொடுப்பது அந்தாதி' எ - து. அடிதோறும், ஓரடி இறுதிக்கண் நின்ற எழுத்தானும், அசையானும்,



PAGE 50

சீரானும், அடியானும் மற்றையடிக்கு ஆதியாகத் தொடுப்பது (1) அந்தாதித்தொடை எனப்படும் எ - று.

'அடிமுழுதும் வந்த மொழியே வருவது இரட்டை வரன் முறையான்' எ - து. ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது இரட்டைத்தொடை யெனப்படும் எ - து.

'வரன் முறையான்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் ஈற்றெழுத்தொன்று குறையினும் இழுக்காது; அது நாற்சீரின் மிக்கு வரப்பெறாதெனக் கொள்க.

'முந்திய மோனை முதலா முழுதும் ஒவ்வாது விட்டால் செந்தொடை நாமம் பெறும்' எ - து. மோனை முதலாகிய தொடையும் தொடை விகற்பமும் போலாமை வேறுபடத் தொடுப்பது (2) செந்தொடை எனப்படும் எ - று.

'முந்திய' என்று மிகுத்துச் சொல்லியவதனால் அசையுஞ் சீரும் தம்முள் மறுதலைப்படத் தொடுப்பது சிறப்புடைத்தெனக் கொள்க.

'நறுமென்குழல் தேமொழியே' எ - து. மகடூஉ முன்னிலை.

        'அடியுஞ் சீரு மசையு மெழுத்தும்
    முடிவு முதலாச் 1செய்யுண் மொழியினஃ
    தந்தாதித் தொடையென் றறியல் வேண்டும்'

2 எனவும்.


(1) இறுதியடியின் இறுதியும் முதலடியின் முதலும் ஒன்றாய் வருவது மண்டல வந்தாதி. அங்ஙனம் வாராதன செந்நடை யந்தாதி ஒரு நூலுள் நின்ற கவியின் ஈறும் வருங்கவியின் முதலும் ஒன்றிவருவதும் அந்தாதியே. அங்ஙனம் ஒருநூலுள் இறுதிச் செய்யுளின் இறுதியும் முதற்செய்யுளின் முதலும் ஒன்றி வருவது மண்டலித்து வந்ததாகும், இவ்வித முறையை நான்மணிமாலை, மும்மணிக்கோவை, அந்தாதி நூல்கள் முதலியவற்றிற் காண்க.

(2) காராட்டை வெள்ளாடு என்றல்போல் செம்மைப்படாத தொடையினைச் செந்தொடை என்றார். செயற்கைத்தொடை விகற்பங்களை வேண்டாது சீர், அசை முதலியவற்றால் இணங்கி வருவதால் செந்தொடையாயிற்று என்பாரும் உளர்.


(பி - ம்.) 1. செய்யுளின். 2. என்றார் நத்தத்தனார். ஒரு சொலடி...... திரட்டை யென்றார் மயேச்சுரர்.



PAGE 51

        'ஒருசொ லடிமுழுதும் வருவ திரட்டை'

எனவுஞ் சொன்னார் மயேச்சுரர்.

        'சொல்லிய தொடையொடு வேறுபட் டியலிற்
சொல்லியற் புலவரது செந்தொடை என்பர்'
(தொல். பொருள். சூ. 412.)

என்றார் தொல்காப்பியனாரும் எனக் கொள்க.

        'அசையினுஞ் சீரினு 3மிசையினு மெல்லாம்
    இசையா தாவது செந்தொடை 4தானே'

என்றார் 5காக்கை பாடினியார்.

(17)

(பி - ம்.) 3. மடியினு. 4. யென்ப. 5. கையனார், பல்காயனார்.


----

தொடை விகற்பங்களுக்கு முதனினைப்பு

        18. மாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக்
    கேவின் முரணு மிருள்பரந் தீண்டள பாஅவளிய
    ஓவிலந் 1தாதி யுலகுட னாமொக்கு மேயிரட்டை
    பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் 2பணிமொழியே.

இ.....கை. அடிமோனை முதலாகிய தொடைகளான் வந்த இலக்கியங்கட்கு முதனினைப் புணர்த்....று

'மாவும் புள் மோனை' எ - து :

ஆசிரியப்பா

        (1) மாவும் புள்ளும் 3வதிவயிற் படர
    மாநீர் விரிந்த பூவுங் கூம்ப
    மாலை தொடுத்த கோதையுங் கமழ
    மாலை வந்த வாடை
    மாயோ ளின்னுயிர்ப் புறத்திறுத் தற்றே.'

(1) மா - விலங்கு. வதி - வழி. விரிந்த பூ என்றது மாலைக் காலத்தில் குவியும் தாமரை முதலியவற்றை. கோதை இங்கே முல்லை மாலை. மாயோள் - மாமை நிறத்தை யுடையவள்; பெண்களுக்கு அழகைத் தருவது இந்நிறம். வாடை துயர்தருதல் : குறுந் 103, 110, 240, 277, 317, 332.


(பி - ம்) 1. தாதிக்குலகுட 2. பனிமொழியே. 3. வதுவையிற், வரிவயிற்.



PAGE 52

இஃது அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுத்தமையான் அடிமோனைத் தொடை.

`இயைபு இன்னகை' எ - து.

ஆசிரியப்பா

        `(2) இன்னகைத் துவர்வாய்க் கிளவியு மணங்கே
    நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே
    ஆடமைத் 4தோளி யூடலு மணங்கே
    அரிமதர் மழைக்கணு மணங்கே
    திருதுதற் பொறித்த திலதமு மணங்கே.'

இஃது அடிதோறும் 5 இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுத்தமையான் அடியியைபுத் தொடை.

`வடியேர் எதுகைக்கு' எ - து:

வெண்பா

        `(3)வடியேர்க ணீர்மல்க வான்பொருட்குச் சென்றார்
    கடியார் கனங்குழாய் காணார்கொல் காட்டுள்
    இடியின் முழக்கஞ்சி யீர்க்கவுள் வேழம்
    பிடியின் புறத்தசைத்த கை.'

இஃது அடிதோறும் இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுத்தமையான் அடியெதுகைத் தொடை.

`ஏவின் முரணும் இருள் பரந்து' எ - து;

        `(4) 6 இருள்பரந் தன்ன மாநீர் மருங்கின்
    நிலவுகுவித் தன்ன வெண்மண லொருசிறை
    இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை
    பொன்னி னன்ன நுண்டா திறைக்குஞ்

(2) கிளவி - சொல். அணங்கு - வருத்தம் தருவது சுணங்கு - தேமல். அமைத்தோளி - மூங்கிலைப்போன்ற தோள்களை யுடையவள்.

(3) வடி - மாவடுவின் பிளவு - கண் - தலைவியின் கண்கள். கவுள் - கன்னம். இடியோசை கேட்ட வேழம் பிடி நடுங்குமே என்று அஞ்சி அப்பிடியின் முதுகைத் தடவியது. சென்றார், கை காணார் கொல்.

(4) மாநீர் - கடல். அணங்கு - வருத்திக் கொல்லும் தெய்வமகள்,


(பி - ம்.) 4. தோளிக்கூடலு தோளிகூடலு. 5. இறுதிச் சீர்க்கண் நின்ற எழுத்தானுஞ் சொல்லானும். 6. இருள்விரிந்.



PAGE 53

        சிறுகுடிப் பரதவர் மடமகள்
    பெருமதர் மழைக்கணு முடையவா லணங்கே.'

இஃது அடிதோறும் 7முதற்கண்ணே மறுதலைப்படத் தொடுத்தமையான் அடிமுரண்டொடை.

`ஈண்டு அளபு ஆஅவளிய' எ - து :

பஃறொடை வெண்பா

        (5) `ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினோ
    டீஇ 3ரிரையுங்கொண் டீரளைப் பள்ளியுட்
    டூஉந் திரையலைப்பத் துஞ்சா திறைவன்றோள்
    மேஎ வலைப்பட்ட நம்போ னறுநுதால்
    ஓஒ வுழக்குந் துயர்.'

இஃது அடிதோறும் 9முதற்கண் 10அளபெடை ஒன்றிவரத் தொடுத் தமையான் அடியளபெடைத் தொடை.

11 `ஓவிலாந்தாதி உலகுடனாம்' எ - து :

ஆசிரியப்பா

        (6) `உலகுடன் விளக்கு மொளிதிக ழவிர்மதி
    மதிநல னழிக்கும் வளங்கெழு முக்குடை
    முக்குடை நீழற் பொற்புடை யாசனம்
    ஆசனத் திருத்த திருந்தொளி யறிவனவ்
    வாசனத் திருந்த திருந்தொளி யறிவனை
    யறிவுசே ருள்ளமோ டருந்தவம் புரிந்து
    துன்னிய மாந்தர தென்ப
    பன்னருஞ் சிறப்பின் விண்மிசை யுலகே.'

(5) ஆஅ அளிய - மிகவும் இரங்கத்தக்கன. அலவன் - நண்டு. பார்ப்பு - குஞ்சு. ஈஇர் இரை - நுண்ணிய உணவு. ஈஇர் அளைப்பள்ளியுள் - ஈரத்தோடு கூடிய சேற்று வளையுள். தூஉந்திரை - தூவுகின்ற அலைகள் - மேஎ வலைப்பட்ட - விரும்புதலாகிய வலையிலகப்பட்ட. அலவன் துஞ்சாது, துயர் உழக்கும், அலவனும் பார்ப்பும் அளிய.

(6) அறிவன் - அருகபரன். உலகு மாந்தரது என்ப. இச்செய்யுள் மண்டலவந்தாதி.


(பி - ம்) 7. சொல்லானும் பொருளானும் முதற்கண்ணே. 8. ரிரைக் கொண். 9. முதற்சீர்க்கண். 10. அளபெடுத் தொன்றி. 11. ஓவிலந்தாதிக்கு.



PAGE 54

இது (7) நான்கு 12 அந்தாதித் தொடையும் வந்த செய்யுள்.

'ஒக்குமே யிரட்டை' எ - து :

சிந்தியல் வெண்பா

        '(8) ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும்
    விளக்கினுட் சீறெரி யொக்குமே யொக்கும்
    குளக்கொட்டிப் பூவி னிறம்.'

இஃது ஓரடி முழுதும் ஒருசொல்லே வரத் தொடுத்தமையான் இரட்டைத் தொடை.

இறுதிச்சீர் ஏகாரத்தாற் குறைபடினும் இழுக்காது, இது நாற்சீரின் மிக்கு வரப்பெறாதெனக் கொள்க.

'பாவரும் செந்தொடை பூத்தவென்றாகும்' எ - து :

ஆசிரியப்பா

        '(9) பூத்த வேங்கை வியன்சினை யேறி
    மயிலின மகவு நாடன்
    நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.'

இது மோனை முதலாகிய தொடையுந் தொடை விகற்பமும் போலாமை வேறுபடத் தொடுத்தமையாற் செந்தொடை.

'பணி மொழியே' எ - து. மகடூஉ முன்னிலை.

(18)
----

(7) நான்கு அந்தாதித் தொடை : எழுத்தானும், அசையானும், சீரானும் அடியானும் வந்த நான்குமாம்.

(8) கொட்டிப்பூவின் நிறம் சிறிய எரி ஒக்கும்.

(9) கொடிச்சி - குறிஞ்சிநிலப் பெண். இச்செய்யுள் தொடை விகற்பமங்களுள் ஒன்றையும் பெறாமல் அகவலோசையோடு இயைந்து ஆசிரியப்பா ஆனவாறு காண்க.


(பி - ம்.) 12. அந்தாதியும்.



PAGE 55

முப்பத்தைந்து தொடை விகற்பம்

        19. இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொரூஉவாம்
    இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
    வருசீ ரயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
    வருசீர் முழுவது மொன்றின்முற் றாமென்ப மற்றவையே.

இ....கை. இணைமோனை முதலாகிய முப்பத்தைந்து 1 தொடை விகற்பமும் ஆமாறு உணர்த்.....று.

இருசீர் மிசை இணையாகும்' எ - து. முத லிருசீர்க்கண்ணும் மோனை முதவாயின (1) ஐந்தும் வரத்தொடுப்பது இணைத்தொடை எனப்படும் எ - று.

'பொழிப்பு இடையிட்டு' எ - து. முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ் சீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத் தொடுப்பது பொழிப்புத் தொடை எனப்படும் எ-று.

'ஒரூஉவாம் இருசீர்இடை இட்டது' எ - து. நடுவிருசீர்க் கண்ணுமின்றி, முதற்சீர்க்கண்ணும் 2நான்காஞ் சீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத் தொடுப்பது ஒரூஉத்தொடை எனப்படும் எ -று.

'ஈறிலி கூழை' எ - து. இறுதிச்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்றுசீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத் தொடுப்பது கூழைத்தொடை எனப்படும் எ - று.

(2) 'முதல் இறுவாய் வருசீர் அயலில மேல் கீழ் வகுத்த மைதீர் கதுவாய்' எ - து.

முதலயற் சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத்தொடுப்பது மேற்கதுவாய்


(1) ஐந்தும் : மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை என்னும் ஐந்தும்.

(2) 'முதல் வருசீர் அயலில மேல்வகுத்த கதுவாய், இறுவாய் வருசீர் அயலில கீழ்வகுத்த கதுவாய்' என்று நிரனிறை விரித்துப் பொருள் கொள்ளப்பட்டது.


(பி - ம்.) 1. தொடையுந் தொடை விகற்பமும், தொடையுமாமாறு, 2. இறுதிச்சீர்க்கண்ணும்.



PAGE 56

என்றும் ஈயற்றற்சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத்தொடுப்பது கீழ்க்கதுவாய் என்றும் வழங்கப்படும் எ - று.

இது நிரனிறை எனக் கொள்க. என்னை?

        'கடையயன் முதலயல் கதுவாய் கீழ்மேல்'

என்றார் 3அவிநயனார்.

முதலயற் சீர்க்கண் இல்லாததனைக் கீழ்க்கதுவாய் என்றும், ஈற்றயற் சீர்க்கண் இல்லாததனை மேற்கதுவாய் என்றும் 4 வேண்டினார் கையனார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு, 'மைதீர் கதுவாய்' என்று விதப்புரைத்தாரெனக் கொள்க.

'வருசீர் முழுவதும் ஒன்றின் முற்றாம்' எ - து 5 நான்கு சீர்க்கண்ணும் மோனை முதலாயின ஐந்தும் வரத் தொடுப்பது முற்றுத் தொடை எனப்படும் எ - று.

'மற்றவையே' என்பது இறுதி விளக்கெனக் கொள்க.

'சீர் முழுவதும் ஒன்றின் முற்றாம்' என்னாது 'வருசீர் முழுவதும்' என்று சிறப்பித்தது, இணைமோனை முதலாகிய (3) முப்பத்தைந்து தொடை விகற்பமும் அளவடிக் கண்ணே இவ்வாறு வழங்கப்படும் என்பதூஉம், இணையியைபு முதலாகிய விகற்பமும் இறுதிச்சீரே முதற்சீராகக் கொண்டு வழங்கப்படும் என்பதூஉம் அறிவித்தற்கெனக் கொள்க.

இயைபுத் தொடைக்கு ஏழு விகற்பமும் இறுதிச்சீர் முதலாகக் காட்டினார் கையனார் முதலாகிய ஒரு சார் ஆசிரியரெனக் கொள்க.


(3) முப்பத்தைந்து தொடை விகற்பமாவன : மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் ஐந்தனுள் ஒவ்வொன்றும் இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் ஏழனோடும் உறழ மொத்தத்தில் (7 x 5 = 35) முப்பத்தைந்தாதல் காண்க. இவற்றினோடு அடிமோனை முதலிய ஐந்தும் அந்தாதி, இரட்டை, செந்தொடை என்ற மூன்றும் கூட்டத் தொடை விகற்பங்கள் நாற்பத்து மூன்றாயின என்க.


(பி - ம்.) 3. பிறருமெனக் கொள்க. 4. சொன்னார், வழங்குவர். 5. எல்லாச் சீர்க்கண்ணும்.



PAGE 57

        'மோனை யெதுகை முரணியை பளபெடை
    பாத மிணையே பொழிப்போ டொரூஉத்தொடை
    கூழை கதுவாய் மிசையதூஉங் கீழதூஉஞ்
    சீரிய முற்றொடு சிவணுமா ரவையே,'
    'இருசீர் மிசைவரத் தொடுப்ப திணையே,'
    'முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே,'
    'சீரிரண் டிடைதபத் தொடுப்ப தொரூஉத்தொடை,'
    'மூவொரு சீரு முதல்வரத் தொடுப்பது
    கூழை யென்மனார் குறியுணர்ந் தோரே,'
    'முதலயற் சீரொழித் தல்லன மூன்றின்
    மிசைவரத் தொடுப்பது மேற்கது வாயே,'
    ஈற்றயற் சீரொழித் தெல்லாந் தொடுப்பது
    கீழ்க்கது வாயின் கிழமைய தாகும்,'
    'சீர்தொறுந் தொடுப்பது முற்றெனப் படுமே'
(யா. வி. சூ. 44, 42-48.)

என்றார் ஆகலின்

(19)
---

தொடை விகற்பங்கட்கு உதாரண முதனினைப்பு

        20. மோனை விகற்ப மணிமலர் மொய்த்துட னாமியைபிற்
    கேனை யெதுகைக் கினம்பொன்னி னன்ன வினிமுரணிற்
    கான விகற்பமுஞ் சீறடிப் பேர தளபெடையின்
    றாள விகற்பமுந் தாஅட்டாஅ மரைபென்ப தாழ்குழலே.

இ - கை. இணைமோனை முதலாகிய முப்பத்தைந்து தொடை விகற்பங்களான் வந்த இலக்கியங்கட்கு முதனினைப் புணர்த்....று.

'மோனை விகற்பம் அணிமலர்' எ - து :

ஆசிரியப்பா

        '(1) அணிமல ரசோகின் றளிர்நலங் கவற்றி (இணைமோனை) அரிக்குரற்
    கிண்கிணியரற்றுஞ் சீறடி (பொழிப்பு)

(1) கவற்றி - வருந்தச்செய்து. அரிக்குரல் கிண்கிணி - தவளையைப்போல் ஒலிசெய்கின்ற கிண்கிணி என்ற அணி; 'தவளைவாய பொலன்செய் கிண்கிணி



PAGE 58

        அம்பொற் கொடிஞ்சி நெடுந்தே ரகற்றி (ஒரூஉ)
    அகன்ற வல்கு லந்நுண் மருங்குல் (கூழை)
    அரும்பிய கொங்கை 1யவ்வளை யமைத்தோள் (மேற்கது)
    அவிர்மதி யனைய திருநுத லரிவை (கீழ்க்கது)
    அயில்வே லனுக்கி யம்பலைத் தமர்ந்த (முற்று)
    கருங்கய னெடுங்க ணோக்கமென்
    றிருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே.'

இதனுள் இணைமோனை முதலாகிய ஏழு விகற்பமும் முறை யானை வந்தவாறு கண்டுகொள்க.

'மொய்த்துடன் ஆம் இயைபிற்கு எ - து':

ஆசிரியப்பா

        (2) 'மொய்த்துடன்றவழு முகிலேபொழிலே (இணையியைபு)
    மற்றத னயலே முத்துறழ் மணலே (பொழிப்பு)
    நிழலே யினியத னயலது கடலே (ஒரூஉ)
    மாதர் நகிலே வல்லே யியலே (கூழை)
    வில்லே நுதலே வேற்கண் கயலே (மேற்கது)
    பல்லே தளவம் பாலே சொல்லே (கீழ்க்கது)
    புயலே குழலே மயிலே யியலே (முற்று) 
    அதனால்
    இவ்வயி னிவ்வுரு வியங்கலின்
    எவ்வயி னோரு மிழப்பர்தந்2நிறையே.'

இதனுள் இணையியைபு முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க.

'ஏனை யெதுகைக் கினம் பொன்னி னன்ன' எ - து :


(குறுந்.148) அகற்றி - வென்று. அந்நுண், அவ்வளை : அ - அழகு, அமை - மூங்கில், அனுக்கி, அலைத்து - வருத்தி. சிந்தையை அடி, அல்குல், மருங்குல், கொங்கை தோள். நுதல் அரிவை நோக்கம் திறைகொண்டன. இது தலைவன் பாங்கனுக்குக் கூறியது.

(2) வல் - சூதாடு கருவி. தளவம் - முல்லை. இவ்வயின் - இத்தகைய சிறந்த இடத்தில்; இடச்சிறப்பு : 1 - 3 அடி. இவ்வுரு - இத்தகைய சிறந்த உரு; உருச் சிறப்பு : 4-7 அடி, இது பாங்கன் கூற்று; செவ்வி செப்பல்.


(பி - ம்.) 1. அய்வளை. 2. நிலையே.



PAGE 59

ஆசிரியப்பா

        (9) 'பொன்னி னன்ன பொறிசுணங் கேந்திப் (இணையெதுகை)
    பன்னருங் கோங்கி னன்னலங் கவற்றி (பொழிப்பு)
    3 மின்னிவ ரொளிவடந் தாங்கி மன்னிய (ஒரூஉ)
    நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி (கூழை)
    என்னையு மிடுக்கண் டுன்னுவித் தின்னடை (மேற்கது)
    அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் (கீழ்க்கது)
    கன்னியம் புன்னை யின்னிழற் றுன்னிய (முற்று)
    4 மயிலேர் சாயல் வாணுதல்
    அயில்வே லுண்கணெம் மறிவுதொலைத் தனவே'

இதனுள் இணையெதுகை முதலாகிய ஏழு விகற்பமும் முறை யானே வந்தவாறு கண்டுகொள்க.

'இனி முரணிற்கு ஆன விகற்பமுஞ் சீறடிப் பேரது' எ - து :

ஆசிரியப்பா

        (4) 'சீறடிப் பேரக லல்கு லொல்குபு (இணைமுரண்)
    சுருங்கிய நுசுப்பிற் பெருகுவடந் தாங்கிக் (பொழிப்பு)
    குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து (ஒரூஉ)
    சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன் (கூழை).
    வெள்வளைத் தோளுஞ் சேயரிக் கருங்கணும் (மேற்கது)
    இருக்கையு நிலையு மேந்தெழி லியக்கமுந் (கீழ்க்கது)
    துவர்வாய்த் தீஞ்சொலு முவந்தெனை 5முனியாது (முற்று)
    என்று மின்னண மாகுமதி
    பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லோயே.'

இதனுள் இணைமுரண் முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க.

'அளபெடையின் தானவிகற்பமும் தாஅட்டாஅமரை' எ-து:

(3) வடம் - ஆரம். 1-4: ஏந்தி, கவற்றி, தாங்கி மன்னிய முலை. துன்னு வித்து பொருந்தச்செய்து. முலையால் வருந்தி. துன்னுவித்துத் துன்னிய வாணுதலின்கண்கள் எம் அறிவைத் தொலைத்தன.


(4) இஃது ஓம்படை; தோழியின் கூற்று.


(பி - ம்.) 3. மின்னவி. 4. மயிலே சாயல். 5. முனியாயென்று.



PAGE 60

ஆசிரியப்பா

        (5) 'தாஅட் டாஅ மரைமல ருழக்கிப் (இணையளபெடை)
    பூஉக் குவளைப் போஒ தருந்திக் (பொழிப்பு)
    காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் (ஒரூஉ)
    மாஅத் தாஅண் மோஒட் டெருமை (கூழை)
    தேஎம் புனலிடைச் சோஒர் பாஅன் (மேற்கது)
    மீஇ னாஅர்ந் துகளுஞ் சீஇர் (கீழ்க்கது)
    எஎ 6ராஅர் நீஇ ணீஇர் (முற்று)
    ஊரன் செய்த கேண்மை
    ஆய்வளைத் தோளிக் கலரா 7னாதே.'

இதனுள் இணையளபெடை முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க.

['தான விகற்பமும்' என்று சிறப்பித்தவதனால் (6) இரண்டள பெடையும் வரப்பெறும்; வரிற் றம்முண் மயங்காதே வர வொன்றும்.]

(20)

'தாழ் குழலே' எ - து. மகடூஉ முன்னிலை.

1.உறுப்பியல் முற்றும்
----

(5) 1-8 எருமை உழக்கி, அருந்தி, கறித்துப் போய், சோர் பாலை மீன் ஆர்ந்து உகளும் நீர் ஊரன். அலர் - பழிச்சொல்.

(6) இரண்டளபெடையும் ; உயிரளபெடை, ஒற்றளபெடைகள். இவை இரண்டும் இணைமோனை முதலியவற்றில் ஒன்றுடன் ஒன்று கலவாது என்றபடி.


(பி - ம்.) 6. னாஅ. 7. னாவே.



PAGE 61

உறுப்பியல் (1) முதனினைப்புக் காரிகை

        கந்தமுந் தேனார் சுருக்கமுங் காதற் குறில் குறிலே
    தந்தன வீரசை தேமாவுந் தண்குன்றத் தன்றிருவுங்
    கொந்தவிழ் கோதாய் குறடிரை வெள்ளை யறவெழுவாய்
    அந்தமு மாவு மிருசீரு மோனையு மாமுறுப்பே.

(1) இஃது உறுப்பியலில் ஆசிரியர் கூறிய காரிகைகளின் முதனினைப்புக் காரிகை. இஃது அடிவரவென்றும் வழங்கப்படும். இதனை இயற்றியவர் எவர் என்பது விளங்கவில்லை, முதனினைப்பை உணர்த்தும் செய்யுள் பிரதிதோறும் வேறுபட்டிருக்கிறது. அவ்வேறுபாடு வருமாறு :

கலித்துறை

        'கந்தமுந் தேனார் சுருக்கங் குறினெடி லாங்குறிலே
    தந்தன வீரசை தேமாந்தண் குன்றந்தண் சீரதிரும்
    அந்தண் குறடிரை வெள்ளைக் கறத்தெழு வாயொடந்த
    முந்திய மாவிரு மோனை யிருப துறுப்பியலே.'

அடிவர வாசிரியம்

        'கந்தந் தேனார் சுருக்கங் குறினெடில்
    குறிலே யீரசை தேமாந் தண்ணிழல்
    குன்றந் தண்சீர் திருமழை குறளிரு
    திரைத்த வெள்ளை யறத்தா றெழுவாய்
    அந்த மாவு மிருசீர் மோனை
    என்றிவை 1யிருபது முறுப்பிய லாகும்.'
----

(பி - ம்.) 1. நாலைந் துறுப்பிய லோத்தே.



PAGE 62

2. செய்யுளியல்

பாவுக்குரிய அடியும் ஓசையும்

        21. வெண்பா வகவல் கலிப்பா வளவடி வஞ்சியென்னும்
    ஒண்பா வடிகுறள் சிந்தென் 1 றுரைப்ப வொலிமுறையே
    திண்பா மலிசெப்பல் சீர்சா லகவல்சென் றோங்குதுள்ளல்
    நண்பா வளமந்த நலமிக தூங்க னறுநுதலே.

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் - வெண்பா, வெள்ளொத்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் ; ஆசிரியப்பா, ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் ; கலிப்பா, கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம்; வஞ்சிப்பா, வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம்; மருட்பா எனக் கிடந்த செய்யுட்களாமாறு உணர்த்துதலாற் செய்யுளிய லோத்து என்னும் பெயர்த்து.

இவ்வோத்தினுள் இத்தலைக் காரிகை என்னுதலிற்றோ எனின் - வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் நான்கு பாவிற்கும் அடியும் ஓசையு மாமாறு உணர்த்....று.

'வெண்பா அகவல் கலிப்பா அளவடி' எ - து. வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் 2நாற்சீரடியான் வரும் எ - று.

'வஞ்சி என்னும் ஒண்பா அடி குறள் சிந்து என்று உரைப்ப' எ - து. வஞ்சிப்பா இருசீரடியானும், முச்சீரடியானும் வரும் என்று சொல்லுவர் புலவர் எ - று.

'வஞ்சி என்னும் ஒண்பா' என்று சிறப்பித்தவதனால் வெண்பாவின் ஈற்றடியும் நேரசை யாசிரிய்பாவின் ஈற்றயலடியும், கலி வெண்பாவின் ஈற்றடியும் முச்சீரடியான் வரும்; இணைக்குற ளாசிரியப்பாவின் இடையடி இரண்டும் பலவும் குறளடியானும் சிந்தடியானும் வரும்; கலியினுள்ளும் ஒருசார் அம்போதரங்க வுறுப்பும் இருசீரடியானும் முச்சீரடியானும் வரப்பெறும்; அராகவுறுப்பு 3நாற்சீரின் மிக்கு வருவனவும் உள எனக் கொள்க:


(பி - ம்.) 1. றுரைப்பரொலி, 2. நாற்சீரோரடியான், 3. அளவடி முதலாக எல்லா வடியானும் வரப்பெறும்.



PAGE 63

இவை போக்கித் தத்தம் (1) இலக்கணச் சூத்திரத்துள்ளே காட்டுதும்.

        ['கலியொடு வெண்பா வகவல் கூறின்
    அளவடி யதனா னடக்குமன் னவையே'
    'சிந்தடி குறளடி யென்றிரண் டடியான்
    வஞ்சி நடக்கும் 4வழக்கின வாகும்'

என்பது யாப் பருங்கலம் (சூ 27 28.)]

'ஒலிமுறையே' எ - து. ஓசை முன்பு சொன்ன அடைவே எ - று.

'திண்பாமலி செப்பல் சீர்சால் அகவல் சென்றோங்கு துள்ளல் நண்பா அமைந்த நலமிகு தூங்கல்' எ - து. வெண்பா செப்ப லோசையான் வரும்;கலிப்பா துள்ளலோசையான் வரும்; வஞ்சிப்பா தூங்கலோசையான் வரும் எ - று.

'நறுநுதலே' எ - து மகடூஉ முன்னிலை.

'திண்பாமலி செப்பல்' என்று சிறப்பித்தவதனாற் செப்பலோசை மூன்று வகைப்படும். ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும் ஒழுகிசைச் செப்பலும் என, என்னை?

        (2) 'வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
    ஏந்திசைச் செப்ப லென்மனார் புலவர்.'
        'இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
    5 தூங்கிசைச் செப்ப லென்மனார் புலவர்.'
        'வெண்சீர் ரொன்றலு மியற்சீர் விகற்பமும்
    ஒன்றிய யாப்பே யொழுகிசைச் செப்பல்.'

[இவற்றுக்குச் செய்யுள் :

        யாநானு நாடாமா' லூராமா லென்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு.'
(குறள். 397.)

(1) இலக்கணச் சூத்திரம் என்றது காரிகைகளை.

(2) இவை மூன்றும் சங்கயாப்பு என்பது யாப்பருங்கல விருத்தியிற் கண்டது.


(பி - ம்.) 4. வழக்கினையுடைய, வழக்கினதென்ப. 5. மயக்கமில் புலவர் தூங்கிசையென்ப, மயக்கமி றூங்க லெனவகுத் தனரே



PAGE 64

இது வெண்சீர் வெண்டளையான் வந்தமையால் ஏந்திசைச் செப்பலோசை.

        'பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயி றூறிய நீர்.'
(குறள். 1121.)

இஃது இயற்சீர் வெண்டளையான் வந்தமையால் ஒழுகிசைச் செப்பலோசை.

        'கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா வுயிருந் தொழும்.'
(குறள், 290)

இஃது இரண்டு தளையும் விரவி வந்தமையால் ஒழுகிசைச் செப்பலோசை.

'சீர்சா லகவல்' என்று சிறப்பித்தவதனால் அகவலோசை மூன்று வகைப்படும். ஏந்திசை யகவலும் தூங்கிசை யகவலும் ஒழுகிசை யகவலுமென. என்னை?

        'நேர்நே ரியற்றளை யான்வரு மகவலும்
    நிரைநிரை யியற்றளை யான்வரு மகவலும்
    ஆயிரு தளையுமொத் தாகிய வகவலும்
    ஏந்த றூங்க லொழுக லென்றிவை
    ஆய்ந்த நிரனிறை யாகு மென்ப'

இவற்றுக்குச் செய்யுள் :

        'போது சாந்தம்.....................துன்னுவாரே,'
(கா. 5, மேற்)

இது நேரொன்றாசிரியத் தளையான் வந்தமையால் ஏந்திசை யகவலோசை.

        'அணிநிழ....................பரிசறுப்பவரே'
(கா. 5. மேற்)

இது நிரையொன் றாசிரியத் தளையான் வந்தமையால் தூங்கிசை யகவலோசை.

        'குன்றக் குறவன்...........சுணங்கே.'
(கா. 9. மேற்)

இஃது இரண்டு தளையும் விரவி வந்தமையால் ஒழுகிசை யகவலோசை

'சென்றோங்கு துள்ளல்' என்று சிறப்பித்த வதனாற் றுள்ள லோசை மூன்று வகைப்படும். ஏந்திசைத் துள்ளலும் அகவற் றுள்ளலும் பிரிந்திசைத் துள்ளலும் என. என்னை?



PAGE 65

        'ஏந்திசைத் துள்ளல் கலித்தளை யியையின்,'
        'வெண்டளை தன்றளை 5யென்றிவை யியையின்
    ஒன்றிய வகவற் றுள்ளலென் றோதுப.'
        'தன்றளை பிறதளை யென்றிவை யனைத்தும்
    7 பொருந்தி வரினே பிரிந்திசைத் துள்ளல்.'

[இவற்றுக்குச் செய்யுள் :

தரவு கொச்சகக் கலிப்பா

        '(3) முருகவிழ்தா மரைமலர்மேன் முடியிமையோர் புடைவரவே
    வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மன முடையார்
    இருவினைபோய் விழமுனியா வெதிரியகா தியை8யரியா
    நிருமலரா 9யறிவினராய் நிலவுவர்சோ தியினிடையே.'

இது கலித் தளையான் வந்தமையால் ஏந்திசைத்துள்ள லோசை

'செல்வப்போர்க்...........தொளித்ததே.

(கா. 11. மேற்.)

இது வெண்சீர் வெண்டளையும் கலித்தளையும் விரவி வந்தமை யால் அகவற்றுள்ளலோசை.

வஞ்சிப்பா

        (4) 'குடநிலைத் தண்புறவிற் கோவல ரெடுத்தார்ப்பத்
    தடநிலைய பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து
    வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் 10தேறப்போய்க்
    கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப,
    எனவாங்கு,

3. சினனார் - அருகபரன், காதி - முத்திக்குப் பாதகமாக உள்ள கர்மங்கள்; அவை ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், போகநீயம், அந்தராயம் என்பன. மனமுடையார் சோதி யி னிடையே நிலவுவர்.

4. குடம் - கண்ணனாடிய குடக்கூத்து; தயிர்த்தாழியுமாம். புறவு - முல்லை நிலம். மரம் - உழலைமரம், சீவக. 422, 713, 1226. காளைகளுக்கு மணிகட்டுதல் மரபு. ஆன் - பசு, ஏறு ஆர்ப்ப, பாய்ந்து, ஒரீஇ, ஏறப்போய், புல்லி முனையும் கான். இது தோழி தலைவியை ஆற்றுவித்தது.


(பி - ம்.) 6. யென்றிரண்டியையின். 7. பிரிந்து. 8. யெறியா. 9. யருவினராய். 10. தொன்றப்



PAGE 66

        ஆனொடு புல்லிப் பெரும்புதன் முனையுங்
    கானுடைத் தவர்தேர் சென்ற வாறே.'

இது பலதளையும் விரவி வந்தமையால் பிரிந்திசைத் துள்ள லோசை.]

'நண்பா வமைந்த நலமிகு தூங்கல்' என்று சிறப்பித்த வதனாற் றூங்கலோசை மூன்று வகைப்படும். ஏந்திசைத் தூங்கலும் அகவற்றூங்கலும் பிரிந்திசைத் தூங்கலும் என. என்னை?

        ஒன்றிய வஞ்சித் தளையே வரினும்
    ஒன்றா வஞ்சித் தளையே வரினும்
    '1 ஆயிரு தளையும் பிறவு மயங்கினும்
    ஏந்த லகவல் 12 பிரிந்திசைத் தூங்கலென்
    றாய்ந்த நிரனிறை யாகு மென்ப,'

[இவற்றுக்குச் செய்யுள் :

வஞ்சிப்பா

        '(5) வினைத்திண்பகை விழச்செற்றவன்
    வனப்பங்கய மலர்த்தாளிணை
    நினைத்தன்பொடு தொழுதேத்துநர் நாளும்
    மயலார் நாற்கதி மருவார்
    பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே'

இஃது ஒன்றிய வஞ்சித்தளையான் வந்தமையால் ஏந்திசைத் தூங்கலோசை.

வஞ்சிப்பா

        (6) 'வானோர்தொழ வண்டாமரைத்
    தேனார்மலர் மேல்வந்தருள்
    ஆனாவருள் கூரறிவனைக் கானார்

5 வனம் - நீர்; அழகுமாம். நாற்கதி: மக்கள், தேவர், நரகர், விலங்கு என்ற பிறவிகள்.

6. அருள்கூர் அறிவன் - அருகபரன், கான் ஆர் - மணம் மிகுந்த.


(பி - ம்.) 11. என்றிவையிரண்டும். 12. பிரிதலென்றிவை, யாய்ந்த



PAGE 67

        மலர்கொண் டேத்தி வணங்குநர்
    பலர்புகழ் முத்தி பெறுகுவர் விரைந்தே.'

இஃது ஒன்றாத வஞ்சித் தளையான் வந்தமையால் அகவற் றூங்க லோசை.

        'மந்தாநிலம்..........மகிழ்ந்தே.'
(கா. 11. மேற்.)

இது பலதளையும் விரவி வந்தமையால் பிரிந்திசைத் தூங்க லோசை.]

13 இவற்றிற்கு இலக்கியம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க.

1

(பி - ம்.) 13. இவற்றுக்கு விருத்தி யாப்பருங்.


----

உதாரண முதனினைப்பு

        22. வளம்பட வென்பது வெள்ளைக் ககவற் குகாரணஞ்செங்
    களம்படக் கொன்று கலிக்கரி தாயகண் ணார்கொடிபோற்
    றுளங்கிடை 1மாதே சுறமறி தொன்னலத் தின்புலபன்
    2றுளங்கொடு நாவல ரோதினர் வஞ்சிக் குதாரணமே.

இ - கை. அவ்வடியானும் ஓசையானும் வந்த இலக்கியங்கட்கு முதனினைப்புணர்த்....று.

'வளம்பட வென்பது வெள்ளைக்கு' எ-து :

        '(1) வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை
    அளந்தன போக மவரவ ராற்றான்
    விளங்காய் திரட்டினா ரில்லைக் - களங்கனியைக்
    காரெனச் செய்தாரு மில் ;
(நாலடி. 103)

இஃது அளவடியானும் செப்பலோசையானும் வந்தமையான் வெண்பா.


(1) வளம்பட - செல்வம் முதலியவற்றால் பெருமைபெற. போகம். சுகங்கள். ஆற்றான் அளந்தன - ஊழ்வினையால் அளவு செய்யப்பட்டன. விளங் - காயும் களங்கனியும் விதைவிதை வழியே பின்பும் அப்படிப் பலித்தல் அல்லது திரளவும் கறுக்கவும் செய்தாரில்லை.


(பி - ம்.) 1. மாதர். 2. றுளங்கொண்டு.



PAGE 68

அகவற்கு உதாரணம் செங்களம் படக்கொன்று' எ - து :

        (2) 'செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
    செங்கோ லம்பிற் செங்கோட் டியானைக்
    3கழறொடிச் சேஎய் குன்றங்
    குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.'
(குறுந். 1.)

இஃது அளவடியானும் அகவலோசையானும் வந்தமையான் ஆசிரியப்பா.

'கலிக்கு அரிதாய' எ - து :

        (3) 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்
    பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
    புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்
    பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்
    வருவர்கொல் வயங்கிழாய் வலிப்பல்யான் கேளினி'

இது தரவு.

        (i) அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற்
    கடியவே கனங்குழாய் காடென்றா ரக்காட்டுள்
    துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
    பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே.
        (ii) இன்பத்தி னிகந்தொரீஇ யிலைதீய்ந்த வுலவையால்
    துன்புறூஉந் தகையவே காடென்றா ரக்காட்டுள்

(2) கோல் - திரண்ட. கழல் தொடி - கழலவிட்ட வீரவளை - சேஎப் - முருகன். அம்பையும் யானையையும் வளையையுமுடைய சேய். குருதிப்பூ - செந் நிறமலர். குலை - பூங்கொத்து காந்தட்டு - காந்தளையுடையது. தோழி கையுறை மறுத்தது இது.

(3) அருளியோர்க்கு. தம்மை அருளவந்த அந்தணர் தாபதர் முதலியவர்களுக்கு. தெறுதல் - அழித்தல். புரிவு அமர் - மனம் பொருந்துதல் அமைந்த பொருள் அளித்தலும் தெறுதலும் புணர்ச்சியும் தரும் என. வலிப்பல் - துணிவேன். (i) துடிஅடிக்கயந்தலை - துடிபோலும் அடியையுடைய யானைக்கன்றுகள் (ii) உலவை - காய்ந்த மரக்கொம்புகள். (iii) கல் - மலை. வேய் - மூங்கில். கனைகதிர் - செறிந்த சூரிய கிரணங்கள். இனைநலம் - தலைவன் தலைவியை எண்ணி வருந்துவதற்குக் காரணமான நலங்கள்; இனைதல் - வருந்துதல் மகளிர்க்கு இடக்கண் துடித்தல் நன்னிமித்தம்.


(பி - ம்.) 3. கழறொடீஇச்.



PAGE 69

        அன்புகொண் மடப்பெடை யசைஇய வருத்தத்தை
    மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே.
        (iii) கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
    துன்னரூஉந் தகையவே காடென்றா ரக்காட்டுள்
    இன்னிழ லின்மையால் வருந்திய மடப்பிணைக்குத்
    தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே.

இவை மூன்றுந் தாழிசை.

        எனவாங்கு,

இது தனிச்சொல்

        'இனைநல முடைய கானஞ் சென்றோர்
    புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற்
    பல்லியும் பாங்கொத் திசைத்தன
    நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே.'
(கலி. 11)

இது சுரிதகம்.

இஃது அளவடியானும் துள்ளலோசையானும் வந்தமையால் கலிப்பா.

'கண்ணார் கொடிபோல் துளங்கிடை மாதே' எ - து. மகடூஉ முன்னிலை.

'சுறமறி தொன்னலத்தின் புலம்பென்று உளங்கொடு நாவலர் ஓதினர் வஞ்சிக்குதாரணம்' எ - து :

        (4) 'சுறமறிவன துறையெல்லாம்
    இறவீன்பன வில்லெல்லாம்
    மீன்றிரிவன கிடங்கெல்லாம்
    தேன்றாழ்வன பொழிலெல்லாம் என வாங்குத்
    தண்பணை தழீஇய விருக்கை
    மண்கெழு நெடுமதின் மன்ன னூரே.'

இஃது இருசீரடியானும் தூங்கலோசையானும் வந்தமையால் 3குறளடி வஞ்சிப்பா.


(4) சுற - சுறாமீன். மறிவன - துள்ளுவன. இறவு - இறாமீன். கிடங்கு - அகழி. பணை - வயல்.


(பி - ம்.) 4. இனநல. 5. வஞ்சிப்பா.



PAGE 70

        (5) 'தொன்னலகத்தின் புலம்பலைப்பத் தொடித்தோண்மேல்
    பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி
    இன்னலத்தகை யிதுவென்ன வெழில்காட்டிச்
    சொன்னலத்தகைப் பொருள்கருத்தி னிற்சிறந்தாங்கெனப்பெரிதும்
    கலங்கஞ ரெய்தி விடுப்பவுஞ்
    சிலம்பிடைச் செலவுஞ் 6சேணிவந் தற்றே.'

இது முச்சீரடியானும் தூங்கலோசையானும் வந்தமையால் 7சிந்தடி வஞ்சிப்பா.

'உதாரணமே' எ - து. இறுதி விளக்காகக் கொள்க.

(2)

(5) புலம்பு - தனிமை. பரிவு - துன்பம். அஞர் - துன்பம். பொருள் வயிற் பிரிந்து போகும் தலைவனுக்குத் தோழி சொல்லியது இது.

(பி - ம்.) 6. சேணிகந். 7. வஞ்சிப்பா.


- - -

குறள்வெண்பா, நேரிசைவெண்பா

        23. ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட்
    சீரிய வான்றனிச் சொல்லடி மூஉய்ச்செப்ப லோசைகுன்றா
    தோரிரண் டாயு மொருவிகற் பாயும் வருவதுண்டேல்
    நேரிசை யாகு நெரிசுரி பூங்குழ னேரிழையே.

இ - கை. குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, 1நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனவும் ; நேரிசை யாசிரியப்பா, இணைக்குற ளாசிரியப்பா, நிலைமண்டில வாசிரியப்பா, அடிமறிமண்டில வாசிரியப்பா எனவும் ; நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா, வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைச் கொச்சகக் கலிப்பா எனவும் ; குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா, எனவும் ; புறநிலை வாழ்த்து மருட்பா, கைக்கிளை மருட்பா, வாயுறை வாழ்த்து மருட்பா, செவியறிவுறூஉ மருட்பா எனவுங் கிடந்த பாவிகற்


(பி - ம்.) 1. சிந்தியல்வெண்பா வெனவும்.



PAGE 71

பங்களுள், செப்பலோசைத்தாய், ஈற்றடி முச்சீராய், ஏனையடி நாற் சீராய், வெண்சீரும் இயற்சீரும் வந்து வெண்டளை தட்டு, வேற்றுத் தளை விரவாது, காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டால் இறும் வெண்பாவினை (1) அடியானும் ஓசையானுந் தொடையானும் 2பெயர் வேறுபாடுணர்த்துவான் எடுத்துக்கொண்டார்.

அவற்றுள் இக்காரிகை குறள்வெண்பாவும், இருகுறள் நேரிசை வெண்பாவும், ஆசிடை நேரிசை வெண்பாவும் ஆமா றுணர்த்....று.

ஈரடி வெண்பாக் குறள்' எ - து. இரண்டடியால் வரும் வெண்பா குறள்வெண்பா எனப்படும் எ - று. (2) என்னை?

        'தொடையொன்றடியிரண் டாகி வருமேற்
    குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே'

என்றார் காக்கை பாடினியாரும் எனக் கொள்க.

வரலாறு

        உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
    கச்சாணி யன்னா ருடைத்து.'
(குறள், 667)
        'உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்.'
(குறள், 395)

இவை இரு (3) விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வந்த குறள் வெண்பா.

'குறட்பா இரண்டாய் இடைக்கட் சீரிய வான்றனிச் சொல்லடி மூஉய்ச் செப்பலோசை குன்றாது ஓரிரண்டாயும் ஒரு விகற்பாயும் வருவதுண்டேல் நேரிசையாகும்' எ - து. இரண்டு குறள் வெண்பாவாய் நடுவு முதற்றொடைக்கேற்ற தனிச் சொல்லால்


(1) அடியாற் பெயர் பெற்றவை குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா. ஓசையாற் பெயர் பெற்றவை நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, தொடையாற் பெயர்பெற்றது பஃறொடை வெண்பா.

(2) இதற்குமுன் 'அவை இனக்குறள் வெண்பாவும் விகற்பக் குறள் வெண்பாவும் என இரண்டாம் 'என்ற தொடர் ஒரு பிரதியிற் காணப்படுகின்றது. இனக்குறள் வெண்பா என்பது ஒருவிகற்பத்தால் வருவது.

(3) விகற்பம் - இங்கே எதுகை வேறுபாடு.


(பி - ம்.) 2. வேறுபாடுணர்த்.



PAGE 72

அடி நிரம்பிச் செப்பலோசை வழுவாது முதலிரண்டடியும் ஒரு விகற்பமாய்க் கடையிரண்டடியும் மற்றொரு விகற்பாய் வரினும் நான்கடியும் ஒரு விகற்பாய் வரினும் அவை இருகுற ணேரிசை வெண்பா எனப்படும். எ - று. என்னை?

        'குற்றிய லுகர 3முதற்குறள் வெண்பா
    முற்றி னிருகுற ணேரிசை யாகும்'

என்றார் ஆகலின்.

வரலாறு

        '(4) தடமண்டு தாமரையின் றாதா டலவன்
    இடமண்டிச் செல்வதனைக் கண்டு - பெடைஞெண்டு
    பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந்
    தூழி நடாயினா னூர்.'
        '(5) அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே
    பெரிய வரைவயிரங் கொண்டு - தெரியிற்
    கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார்
    பெரிய வரைவயிரங் கொண்டு.'

இவை இரண்டு குறள் வெண்பாவாய் நடுவு முதற்றொடைக் கேற்ற தனிச்சொல்லால் அடிநிரம்பிச் செப்பலோசை வழுவாது இருவிகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வந்தமையால் இருகுற ணேரிசை வெண்பா.

        'சீரிய வான் றனிச் சொல்' என்று சிறப்பித்தவதனால் முதற் குறட்பாவினோடு
    தனிச்சொல் இடை வேறுபட்டு விட்டிசைப் பின், ஒற்றுமைப்படாத உலோகங்களை
    ஒற்றுமைப்படப் (6) பற்றாசிட்டு விளக்கினாற்போல, முதற் குறட்பாவின் இறுதிக்

(4) தடம் - குளம். தாது - பூந்தாது. அலவன் - ஆண் நண்டு. பூழிக், கதவு - புழுதியாகிய கதவு. பெடை புலந்து கதவடைத்தது. ஊழிநடாயினான் - ஊழிக்காலம்வரை ஆணை செலுத்துபவன்.

(5) வரைகீண்டு - மலையைக் கல்லிப் பெயர்த்து. வரை வயிரம் - வயிரம் பற்றிய மூங்கில்.

(6) பற்றாசு - பொற்கொல்லர் நகைகளுக்கு இடும் பொடி; இராசி எனவும் படும்.


(பி - ம்.) 3. விறுதி முதற்குற, ளுற்றிடி னிருகுற ணேரிசை வெண்பா.



PAGE 73

கண் ஒன்றும் இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப்பட்டு இரு விகற் பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவனவும் உள ; அவை ஒருசா ராசிடை நேரிசை வெண்பா எனக் கொள்க.

வரலாறு

        (7) ' தாமரையின் றாதாடித் தண்டுவலைச் சேறளைந்து
    தாமரையி னாற்றமே தானாறும் - தாமரைபோற்
    கண்ணான் முகத்தான் கரதலத்தான் சேவடியெங்
    கண்ணார்வஞ் செய்யுங் கருத்து.'
        (8) 'கருமமு முள்படாப் போகமுந் துவ்வாத்
    தருமமுந் தக்கார்க்கே செய்யா - 4ஒருநிலையே
    முட்டின்றி மூன்று முடியுமே லஃதென்ப
    பட்டினம் பெற்ற கலம்.'
(நாலடி. 250)
        இவை 5இரண்டு குறள் வெண்பாவாய் நடுவு முதற்றொடைக் கேற்ற
    தனிச்சொல்லாய் இடை வேறுபட்டு முறையே இரண்டசை யானும் ஓரசையானும் ஆசிட்டு
    இரண்டு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசைவெண்பா.
        (9) 'ஆர்த்த வறிவின ராண்டிளைய ராயினும்
    காத்தோம்பித் தம்மை யடக்குப - மூத்தொறூஉம்
    தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோற்
    போத்தறார் புல்லறிவி னார்.'
(நாலடி. 351)
        (10) ' வஞ்சியே னென்றவன்ற னூருரைத்தான் யானுமவன்
    வஞ்சியா னென்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான்

(7) துவலை - துளி. சேவடி நாறும்.

(8) கருமம் - பொருளீட்டும் தொழில்கள். உள்படா - உள்பட்டுச் செய்து. துவ்வா - நுகர்ந்து. செய்யா - செய்து. அறம் பொருள் இன்பம் மூன்றும் கூறப்பட்டன. பட்டினம் - கடற்கரையூர்.

(9) ஆர்த்த - மனத்தின்கண் பிணிப்புண்ட, ஆண்டு - பிராயம். முத்தொறும் - முதிருந்தோறும். எருவை - நாணல் சாதி. போத்து - உட்புரை ; உள்ளே கூடாது இருப்பது.

(10) வஞ்சியேன் - வஞ்சி என்னும் ஊரினேன் ; வஞ்சளை செய்யேன் என்பது குறிப்புப் பொருள். வஞ்சியாய் - பெண்ணே. வஞ்சியார் கோ - வஞ்சி நகரில் உள்ளவர்களுக்குத் தலைவன்; சேரன் என்றபடி.


(பி - ம்) 4. ஒருமுறையே 5. முதற் குறட் பாவினோடு தனிச் சொல்லிடை வேறுபட்டு நின்று இரண்டசை.



PAGE 74

        வஞ்சியேன் வஞ்சியே னென்றுரைத்தும் வஞ்சித்தான்
    வஞ்சியாய் வஞ்சியார் கோ.'

இவை முதற் குறட்பாவின் இறுதிக்கண், முறையே ஓரசை, யானும் ஈரசையானும் ஆசிட்டு ஒரு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பா.

'நெரிசுரி பூங்குழல் நேரிழையே' எ - து. மகடூஉ முன்னிலை.

'வெண்பா வகவல் கலிப்பா அளவடி' என்னுங் காரிகையுள் வெண்பாச் செப்பலோசையால் வருமெனக் கூறி, ஈண்டுச் செப்ப லோசை குன்றாதென்றது கூறியது கூறிற்றாகாது; அஃது ஒரு சார் பிறபாக்களைத் தத்தம் உதாரண வாய்பாட்டால் ஓசையூட்டும் பொழுது தத்தம் ஓசையிற் சிறிது வழுவி வருவனவும் உளவாயினும், வெண்பாச் செப்பலோசையிற் சிறிதும் வழுவலாகாதென்பது யாப்புறுத்தற் பொருட்டாகவும், செப்பலோசையிற் சிறிது வழுவி வந்த நேரிசை இன்னிசை வெண்பாக்களை ஒரு புடை ஒப்புமை நோக்கி வெண்டுறைப்பாற்படுத்து வழங்கினும் இழுக்காதென்பது அறிவித்தற்கும் எனக் கொள்க. என்னை?

        'கூறியது கூறினுங் குற்ற மில்லை
    வேறொரு பொருளை விளக்கு மாயின்'

என்றார் ஆகலின்.

        'தத்தம் பாவினத் தொப்பினுங் குறையினும்
    ஒன்றொன் றொவ்வா வேற்றுமை வகையாற்
    பாத்தம் வண்ண மேலா வாகிற்
    பண்போல் விகற்பம் பாவினத் தாகும்'
        'குறட்பா விரண்டடி நால்வகைத் தொடையான்
    முதற்பாத் தனிச்சொலி னடிமூஉ யிருவகை
    விகற்பி 6னடப்பி னேரிசை வெண்பா'

என்றார் அவிநயனார்.

        'இரண்டா மடியி னீறொரூஉ வெய்தி
    முரண்ட வெதுகைய தாகியு மாகா

(பி - ம்) 6. நடத்த னேரிசை.



PAGE 75

        திரண்டு துணியா யிடைநனி 7போழ்ந்தும்
    நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா'

என்றார் காக்கைபாடினியார்.

        ['உருவுகண் டெள்ளா வுடையார் குறண்மட வாய்தடமண்
    டரிய வரைகீண் டிருகுற ணேரிசை தாமரையின்
    கருமமு மார்த்தவும் வஞ்சியுங் காமர் தனிச்சொன்முன்னா
    நெரிநுண் கருங்குழ னேரிழை யாசிட்ட நேரிசையே.'

இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே குறள்வெண்பாவிற்கும், இருகுறணேரிசை வெண்பாவிற்கும், ஆசிடை நேரிசைவெண் பாவிற்கும் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.] (3)


(பி - ம்.) 7. போழ.


- - -

இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா

        24. ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்
    இன்றி நடப்பினஃ தின்னிசை துன்னு மடிபலவாய்ச்
    சென்று 1நிகழ்வது பஃறொடை யாஞ்சிறை வண்டினங்கள்
    துன்றுங் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே.

இ - கை. இன்னிசை வெண்பாவும் பஃறொடை வெண்பாவு மாமாறு உணர்த்....று.

'ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி நடப்பின் அஃது இன்னிசை துன்னும்' எ - து, ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் வந்து நான்கடியாய்த் தனிச் சொலின்றி நடப்பின் அஃது இன்னிசை வெண்பா எனப்படும் எ-று.

வரலாறு

        (1) 'வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
    வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
    வைகலும் வைகற்றம் வாணாள்மேல் வைகுதல்
    2வைகலை வைத்துணரா தார்.'
(நாலடி. 39)

1. வைகலும் வைகல் - நாள்தோறும் கழிவு. வைகலை - நாட்களை. வைகும் என்று - கழியும் என்று. பொழுது போக்கலை இன்புறவாகக் கருதுவர் என்றபடி.


(பி - ம்.) 1. நிகழ்வ. 2. வைகலும்.



PAGE 76

 (2) 'துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப்
        பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
        அகடுற யார்மாட்டு நில்லாது செல்வம்
        சகடக்கால் போல வரும்.'
(நாலடி. 2.)

இவை நான்கடியாய்த் தனிச்சொலின்றி ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா.

        (3) 'கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
    பாய்மா வுடையா னுடைக்கிற்குந் 3தோமில்
    தவக்குட்டந் தன்னுடையா னீந்து மவைக்குட்டம்
    கற்றான் கடந்து விடும்.' )
(நான்மணி. 18)
        (4) ' இன்றுகொ லன்றுகொ லென்றுகொ லென்னாது
    பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
    ஒருவுமின் றீயவை யொல்லும் வகையான்
    மருவுமின் மாண்டா ரறம்.'
(நாலடி. 36)

இவை நான்கடியாய்த் தனிச்சொலின்றிப் பல விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா,ஒன்றல்ல வெல்லாம் பல என்பது தமிழ் நடையாகலின். என்னை?

        'ஒன்றல் லவைபல தமிழ்நடை வடநூல்
    இரண்டல் லவைபல வென்றிசி னோரே'

என்றார் ஆகலின்.

'ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடியாய்த் கனிச்சொல் இன்றி நடப்பின் அஃது இன்னிசை' என்னாது 'துன்னும்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் இரண்டாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று மூன்று விகற்பத்தால் வருவனவும், மூன்றா மடியின் இறுதி தனிச்சொற் பெற்று இரண்டு விகற்பத்தால் வருவனவும், அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்று வருவனவும், நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட்டு நான்கடியாய் வருவன


(2) துகள்தீர் - குற்றம்தீர்ந்த, பகடு நடந்த கூழ் - உழவுத்தொழிலாலே வந்த சோறு. அகடு உற - சாயாது ஒருபடிப்பட. 'சகடக்கால் போல' என்பது மேல்கீழாய் வருதல்.

(3) கலவர். மரக்கலங்களை யுடையவர். பாய்மா - குதிரை.

(4) ஒருவுமின் - நீங்குமின். மாண்டார் - மாட்சிமைப்பட்டவர்கள்.


(பி - ம்.) 3. தேரில்.



PAGE 77

வும் எல்லாம் இன்னிசை வெண்பா என்று பெயரிட்டு வழங்கப்படும் எ - று.

        '(5) அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந்
            திங்களுஞ் சான்றோரு மொப்பர்மற் - றிங்கண்
    மறுவாற்றுஞ சான்றோரஃ தாற்றார் தெருமந்து
    தேய்வ ரொருமா சுறின்.'
(நாலடி, 151.)
        '(6) மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்மில்
    ஒலியும் பெருமையு மொக்கும் - மலிதேரான்
    கச்சி படுவ கடல்படா கச்சி
    கடல்படுவ வெல்லாம் படும்,'

இவை இரண்டாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா.

        'வளம்பட ................... செய்தாரு மில்.'
(கா. 22, மேற்.)

இது மூன்றாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று இரண்டு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா.

        '(7) மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும்
            தவமிலா ரில்வழி யில்லைத் தவழும்
    அரசிலா னில்வழி யில்லை யரசனும்
    இல்வாழ்வா ரில்வழி யில்.' (நான்மணி. 48.)

இஃது அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்று நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட்டு வந்த இன்னிசை வெண்பா.

பிறவும் வந்தவழியே கண்டுகொள்க.

        'தனிச்சொற் றழுவல வாகி விகற்பம்
        பலபல தோன்றினு மொன்றே வரினும்
        இதன்பெய ரின்னிசை யென்றிசி னோரே'

(5) பாரிக்கும் - பரப்பும். தண்ணளியே பாரித்தலால் சான்றோரும் அன்னர். மன்: மிகுதிப்பொருளில் வந்த இடைச்சொல். தெருமந்து - மயங்கி,

(6) கச்சியில் கடல்படு திரவியமேயன்றி வேறு நிலங்களின் பொருள்களும் உள என்றபடி.

(7) சில பிரதிகளில் இச்செய்யுளுக்குப் பிரதியாக 'இன்னாமை வேண்டி......வெகுளிவிடல்' (நான்மணி. 17.) என்ற செய்யுளும், 'இஃது அடிதோறும் தனிச்சொற் பெற்றுவந்த இன்னிசை வெண்பா' என்ற தொடரும் காணப்படுகின்றன.



PAGE 78

        'ஒருவிகற் பாகித் தனிச்சொ லின்றியும்
    இருவிகற் பாகித் தனிச்சொ லின்றியுந்
    தனிச்சொற் பெற்றுப் பலவிகற் பாகியுந்
    தனிச்சொ லின்றிப் பலவிகற் பாகியும்
    அடியடி தோறு மொரூஉத்தொடை யடைநவும்
    எனவைந் தாகு மின்னிசை தானே'

என்றார் பிறருமெனக் கொள்க.

'அடிபலவாய்ச் சென்று நிகழ்வது பஃறொடையாம்' எ - து நான்கடியின் மிக்க பலவடியால் வருவது பஃறொடை வெண்பா எனப்படும் எ - று.

நேரிசை வெண்பாவிற்கும் இன்னிசை வெண்பாவிற்கும் நான்கடியே உரிமை சொன்னமையால் 'நான்கடியின் மிக்க வடியான் வருவது' என்பது (8) ஆற்றலாற் போந்த பொருளெனக் கொள்க.

        'வையக மெல்லாங் கழனியா வையகத்துச்
    செய்யகமே 4நாற்றிசையின் றேயங்கள் செய்யகத்து
    வான்கரும்பே தொண்டை வளநாடு வான்கரும்பின்
    சாறேயந் நாட்டுத் தலையூர்கள் சாறட்ட
    கட்டியே கச்சிப் புறமெல்லாங் கட்டியுட்
    டானேற்ற மாய சருக்கரை மாமணியே
    ஆனேற்றான் கச்சி யகம்'

இஃது அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்றுப் பல விகற்பத்தால் வந்த ஏழடிப் பஃறொடை வெண்பா.

        '(9) சேற்றுக்கா னீலஞ் செருவென்ற வேந்தன்வேல்
    கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல்'

(8) ஆற்றலாற் போந்த பொருள் - புத்தி நுட்பத்தினாற் கொண்ட பொருள்; 'செய்வேனோ என்பது வினாதல்; இவ்வோகார இடைச் சொற்கு எதிர்மறை முதலிய பொருள் விலக்கி ஆற்றலால் வினாப் பொருளே கொள்க' (நன். சூ. 386, சங்கர)

(9) மாவடர்கண் - மாவடுவைப் பொருத கண். ஆற்றுக்கால் ஆட்டியர் - மருதநிலப் பெண். ஆட்டியர் மாவடர் கண்கள் நீலம் வேல் பகழி கயல் இவைகளோடு தோற்றம் தொழில் வடிவு தடுமாற்றம் என்னும் இவைகளில் ஒத்தன.


(பி - ம்.) 4. நாற்றிசையுட் டேயங்கள்



PAGE 79

        தோற்றந் தொழில்வடிவு தம்முட் டடுமாற்றம்
    வேற்றுமை யின்றியே யொத்தன 6மாவடர்
    ஆற்றுக்கா லாட்டியர் கண்.ழு

இஃது 7ஐந்தடியான் ஒரு விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா.

        '(10) பன்மாடக் கூடன் மதுரை நெடுந்தெருவில்
    என்னோடு நின்றா ரிருவ ரவருள்ளும்
    பொன்னோடை நன்றென்றா ணல்லளே பொன்னோடைக்
    கியானைநன் றென்றாளு மந்நிலையள் யானை
    எருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன்
    றிருத்தார்நன் றென்றேன் றியேன்.ழு

இஃது ஆறடியான் வந்த பலவிகற்பப் பஃறொடை வெண்பா.

ஏழடியின் மிக்க பஃறொடை வெண்பா யாப்பருங்கலவிருத்தி யுள்ளும் தேசிகமாலை முதலியவற்றுள்ளும் கண்டு கொள்க.

'அடிபலவாய் நிகழ்வதுழு என்னாது, அடி பலவாய்ச் சென்று நிகழ்வதுழு என்று சிறப்பித்தவதனால், செப்பலோசையிற் சிறிது வழுவி வந்த பஃறொடை வெண்பாக்களை ஒருபுடை ஒப்புமை நோக்கி வெண்கலிப்பாற் படுத்து வழங்கினும் இழுக்காதெனக் கொள்க.

'சிறை வண்டினங்கள் துன்றுங் கரு மென் குழற் றுடி ஏர் இடைத் தூமொழியேழு எ - து. மகடூஉ முன்னிலை.

        'தொடையடி யித்துணை யென்னும் வழக்க
    முடையதை யன்றி யுறுப்புழி வில்லா
    நடையது பஃறொடை நாமங் கொளலேழு

என்றார் காக்கைபாடினியாரும் எனக் கொள்க.


(10) உலாப் போந்த தலைவனைக் கண்டு காதல்கொண்ட தலைவியின் கூற்று இது. அந்நிலையள் - நல்லள் என்றபடி. தார் - மாலை தியேன் - தீயேன் ; குறுக்கல் விகாரம்.


(பி - ம்.) 6. மரவேடர். 7. ஐந்தடியான் வந்த ஒரு விகற்பம்.



PAGE 80

உதாரண முதனினைப்பு

        'வைக றுகடீர் கடற்குட்ட மின்றுகொ லன்றுமங்கண்
    எய்து மலிதேர் வளம்பட வேமழை யின்னிசையாம்
    வையக மெல்லாம் பலவிகற் பேற்றது சேற்றுடனே
    பையர வல்குல்பன் மாடம் பஃறொடைப் பல்விகற்பே.

இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே முறைப்படியே இன்னிசை வெண்பாவிற்கும் பஃறொடை வெண்பாவிற்குங் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.

(4)
- - -

சிந்தியல் வெண்பா, வெண்பாவின் ஈற்றடி

        25. நேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால்
    நேரிசை யின்னிசைச் சிந்திய லாகு நிகரில் வெள்ளைக்
    கோரசைச் சீரு மொளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற
    சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே.

இ - கை. நேரிசைச் சிந்தியல் வெண்பாவும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவு மாமாறும், எல்லா வெண்பாவிற்கும் ஈற்றடி ஆமாறு முணர்த்....று.

'நேரிசை இன்னிசை போல நடந்து அடி மூன்றின் வந்தால் நேரிசை இன்னிசைச் சிந்தியல் ஆகும்' எ - து. நேரிசை வெண் பாவேபோல இரண்டாமடி யிறுதி தனிச்சொற் பெற்று இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் மூன்றடியால் வருவன வெல்லாம் நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும் எ - று. இன்னிசை வெண்பாவே போலத் தனிச்சொல்லின்றி ஒரு விகற்பாகியும் பல விகற்பாகியும் மூன்றடியால் வருவனவெல்லாம் இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும் எ - று, என்னை?

        'நேரிசைச் சிந்து மின்னிசைச் சிந்துமென்
    றீரடி முக்கா லிருவகைப் படுமே'

என்றார் பிறருமெனக் கொள்க.



PAGE 81

வரலாறு

        (1) நற்கொற்ற வாயி னறுங்குவளைத் தார்கொண்டு
    சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே - பொற்றேரான்
    1 பாலைநல் வாயின் மகள்.'
        '(2) அறிந்தானை யேத்தி யறிவாங் கறிந்து
    2 செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்ப - 3செறிந்தார்
    4 சிறந்தமை யாராய்ந்து கொண்டு.'

இவை இரண்டாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று இரு விகற்பத்தானும் ஒருவிகற்பத்தானும் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.

        '(3) சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
    யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
    கானக நாடன் சுனை.'
        '(4) நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்
    பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
    5பறநாட்டுப் பெண்டி ரடி.'
        '(5) முல்லை முறுவலித்துக் காட்டின மெல்லவே
    சேயிதழ்க் காந்த டுடுப்பீன்ற போயினார்
    திண்டேர் வரவுரைக்குங் கார்.'

இவை மூன்றடியாய்த் தனிச் சொல் லின்றிப் பல விகற்பத் தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.


(1) மாலையைக்கொண்டு வண்டினைப் புடைத்தல் : 'கற்பெனு மாலை வீசி நாணெனுங் களிவண்டோப்பி' (சீவக. 2073.)

(2) அறிந்தான் - கடவுள். செறிந்தார் - புலமை மிகுந்தவர். செறிந்தார் ஏத்தி அறிந்து ஆராய்ந்து கொண்டு உரைப்ப.

(3) சுரை - சுரைக்காய். சுனை - சுரை மிதப்ப அம்மி ஆழ யானைக்கு நிலை முயற்கு நீத்து என்ப என மாறிக் கூட்டுக.

(4) பாரி பறநாடு - பாரிவள்ளலின் பறம்பு நாடு. பறம்புநாட்டு மகளிரைப் பிறநாட்டு மகளிர் வணங்குவர் என்றபடி.

(5) துடுப்பு - காந்தள் மடல். போயினார் - தலைவியைப் பிரிந்து சென்ற தலைவர். முல்லை காட்டின, காந்தள் ஈன்ற, கார் போயினார் வரவுரைக்கும்.


(பி - ம்.) 1. மாலைநல். 2. சிறந்தார்க்குஞ். செறிந்தார்க்குஞ். 3. சிறந்தார். 4. செறிந்தமை. 5. அறநாட்டுப்.



PAGE 82

உதாரண முதனினைப்பு

        ['நற்கொற்ற வாயி லறிந்தா னையுநறும் பூங்குழலாய்
    சொற்பெற்ற நேரிசைச் சிந்திய லாஞ்சுரை யாழவம்மி
    நிற்றற் குரிய நறுநீல 6முல்லை முறுவலுமென்
    றெற்றப் படாதன வின்னிசைச் சிந்துக் கிலக்கியமே.'

இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே நேரிசைச் சிந்தியல் வெண்பாவிற்கும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்கும் முறையாகக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.]

'நிகரில் வெள்ளைக்கு ஓரசைச்சீரும் ஒளிசேர் பிறப்பும் ஒண் காசும் இற்ற சீருடைச் சிந்தடியே முடிவாம் என்று தேறுகவே' எ-து. எல்லா வெண்பாவிற்கும் நாளென்னும் நேரசைச் சீரானும், மலரென்னும் நிரையசைச் சீரானும், காசு பிறப்பென்னும் வாய்பாட்டாற் குற்றியலுகர மீறாகிய நேரீற் றியற்சீரானும் இற்ற முச்சீரடியே இறுதியாமென்று தெளிக. எ - று.

[வெண்பாவின் இறுதிச்சீர்க்குக் குற்றியலுகரம் ஈறாக வேறு உதாரணம் எடுத்தோதியதூஉம், மேல் ஓரசைச்சீர்க்கு உதாரணம் வேறுகாட்டிப் போந்ததூஉம் (கா. 7), வெண்பாவினை அலகிட்டு உதாரண வாய்பாட்டான் ஓசையூட்டும்பொழுது பிற வாய்பாட்டான் ஓசையூட்டலாகாதென்பது அறிவித்தற்கெனக் கொள்க.]

        '(6) பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயி றூறிய நீர்.'
(குறள், 1121.)

இது நீர் என்று நாளென்னும் ஓரசைச்சீரான் முடிந்தது.

        'நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
    நெஞ்சத் தவல மிலர்.'
(குறள், 1072)

இஃது இலர் என்று மலர் என்னும் ஓரசைச்சீரான் முடிந்தது.

        'கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
    சொல்லா நலத்தது சால்பு.'
(குறள், 984)

(6) கீழே வரும் 'பாலொடு' முதலிய நான்கு குறட்பாக்களும் இரண்டொரு பிரதிகளில் உதாரண வாய்பாட்டான் அலகிட்டுக் காட்டப் பெற்றுள்ளன.


(பி - ம்.) 6. நெய்தலு முல்லையுமென்.



PAGE 83

இது சால்பு என்று காசென்னும் வாய்பாட்டான் முடிந்தது.

        'அகர முதல வெழுத்தெல்லா மாதி
    பகவன் முதற்றே யுலகு.'

இஃது உலகு என்று பிறப்பென்னும் வாய்பாட்டான் முடிந்தது.

'நிகரில் வெள்ளைக்கு' என்று சிறப்பித்தவதனால் குறள் வெண்பாவினை (7) ஓரடி முக்காலென்றும், சிந்தியல் வெண்பாவினை ஈரடி முக்காலென்றும், நேரிசை வெண்பாவினை நேரிசை மூவடி முக்காலென்றும், இன்னிசை வெண்பாவினை இன்னிசை மூவடி முக்காலென்றும், பஃறொடை வெண்பாவினைப் பலவடி முக்காலென்றும் பெயரிட்டு வழங்குவர் ஒருசா ராசிரியர் எனக் கொள்க.

'ஒளிசேர் பிறப்பும் ஒண்காசும்' என்று சிறப்பித்தவதனால் காசு பிறப்பு என்னுங் குற்றியலுகர மீறாய் நேரீற்றியற்சீர் முடிவதுபோல முற்றியலுகர மீறாய் நேரீற்றியற்சீர் இறுதியாக வருவனவுமுள ஒருசார் வெண்பா எனக் கொள்க.

வரலாறு

        '(8) மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும்
    அஞ்சொன் மடவாட் கருளு.'

இது பிறப்பென்னும் வாய்பாட்டான் முற்றிய லுகர மீறாக இற்ற வெண்பா.

        ' 7 இனமலர்க் கோதா யிலங்குநீர்ச் சேர்ப்பன்
    புனைமலர்த் தாரகலம் புல்லு.'

இது காசென்னும் வாய்பாட்டான் முற்றியலுகர மீறாக இற்ற வெண்பா.

இவை செய்யுளியலுடையார் காட்டியவெனக் கொள்க.


(7) நான்கு சீர்களாலான அடியை அளவாகக் கொண்டு மூன்று சீர்களாலான வெண்பாவின் ஈற்றடியை முக்கால் என்றார்.

(8) இஃது ஒம்படை.


(பி - ம்.) 7. இனை,



PAGE 84

        'செப்ப லிசையன வெண்பா மற்றவை
    யந்தடி சிந்தடி யாகலு மவ்வடி
    யந்த மசைச்சீ ராகவும் பெறுமே'

என்பது யாப்பருங்கலம் (சூ. 57.)

        [மாவாழ் புலிவாழ் சுரமுள வாக மணியிறுவாய்
    ஓவா தளபெடுத் தூஉங் கெழூஉ முதாரணமாய்
    நாவார் பெரும்புகழ் நத்தத்தர் யாப்பி னடந்ததுபோல்
    தேய்வா முகரம்வந் தாலியற் சீருக்குச் செப்பியதே.

இக்காரிகைச் சூத்திரத்துள் ஓசையூட்டுதற் கருத்தாவது : 'மாவாழ்சுரம்' 'புலிவாழ்சுரம்' என்னும் வஞ்சியுரிச்சீ ரிரண்டும் உளவாகவைத்து, ஒரு பயனோக்கித் தூஉமணி. கெழூஉமணி என்றளபெடுத்து நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீர்க்கு உதாரணம் எடுத்துக் காட்டினார் நத்தத்தனார் முதலாகிய ஒருசா ராசிரியர். அதுபோல இந்நூலுடையாரும் தேமா, புளிமா என்னு மிரண்டு நேரீற் றியற்சீரு முளவாக. வெண்பாவின் இறுதிச்சீருக்கு உதாரண வாய்பாட்டான் ஓசையூட்டுதற் பொருட்டாகக் குற்றியலுகரம் ஈறாகிய காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டான் நேரீற்றியற்சீ ரீறாக வேறு உதாரண மெடுத்தோதினார் எனக் கொள்க.] (5)

- - - -

வெண்செந்துறை, குறட்டாழிசை

        26. அந்தமில் பாத மளவிரண் டொத்து முடியின்வெள்ளைச்
    செந்துறை யாகுந் திருவே யநன்பெயர் சீர்பலவாய்
    அந்தங் குறைநவுஞ் செந்துறைப் பாட்டி னிழிபுமங்கேழ்ச்
    சந்தஞ் சிதைந்த குறளுங் குறளினத் தாழிசையே.

இ.....கை. குறள் வெண்பாவிற் கினமாகிய துறையும் தாழிசையும் ஆமாறுணர்த்....று.

'அந்தமில் பாதம் அளவிரண்டு ஒத்து முடியின் வெள்ளைச் செந்துறையாகும்' எ - து. இரண்டடியாய்த் தம்முள் அள



PAGE 85

வொத்து வருவது 1வெண்செந்துறை என்றும் செந்துறை வெள்ளையென்றும் பெயரிட்டு வழங்கப்படும் எ - று.

'அந்தமில் பாதம்' என்று சிறப்பித்தவதனால் (1) விழுமிய பொருளும் ஒழுகிய வோசையு முடைத்தாய் வருவது எ - று. என்னை?

        'ஒழுகிய வோசையி னொத்தடி யிரண்டாய்
    விழுமிய பொருளது வெண்செந் துறையே'

என்பது யாப்பருங்கலம் (சூ. 63.)

வரலாறு

        'ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
    ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.' (முதுமொழிக்.)
        'கொன்றை வேய்ந்த செல்வ 2னடியிணை
    என்றுமேத்தித் தொழுவோ மியாமே.' (கொன்றைவேந்தன்)

இவை இரண்டடியாய் அளவொத்து ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளுமுடைத்தாய் வந்த வெண்செந்துறை.

'திருவே' எ - து மகடூஉ முன்னிலை.

'சீர் பலவாய் அந்தம் குறைநவும் செந்துறைப் பாட்டின் இழிபும் அங்கேழ் சந்தம் சிதைந்த குறளும் குறளினத் தாழிசையே' எ - து. நாற்சீரின் மிக்க பலசீரால் வந்த அடி இரண்டாய் ஈற்றடி குறைந்து வருவனவும், செந்துறை வெள்ளையிற் சிதைந்து வருவனவும், குறள் வெண்பாவிற் சிறிது செப்பலோசை சிதைந்து வருவனவும் குறள் வெண்பாவிற்கு இனமாகிய குறட்டாழிசை எனப்படும் எ - று.

குறட்டாழிசை எனினும் தாழிசைக் குறள் எனினும் ஒக்கும். இரண்டடி என்பது (2) அதிகாரத்தான் வருவித்


(1) விழுமிய பொருள் - சிறந்த பொருள். ஒழுகிய ஓசை - தட்டுத லில்லாத சீரிய ஓசை.

(2) குறட்பாவின் இனத்தைக் கூறுவது இங்கே அதிகாரம். குறட்பாவுக்கு அடியிரண்டாயினாற் போல அதன் இனங்கட்கும் இரண்டடியே கொள்ள வேண்டும் என்பது. அதிகாரம் இன்னதென்பது: (கா. 8. அடிக். 1)


(பி - ம்.) 1. குறள்வெண் செந்துறை. 2. னிணையடி



PAGE 86

துரைக்கப் பட்டது. சீர் வரையறுத்திலாமையால் எனைத்துச் சீரானும் வரப்பெறும் எனக் கொள்க. (3)

வரலாறு

        'நீல மாகட னீடு வார்திரை
    நின்ற போற்பொங்கிப் பொன்று 3மாங்கவை
    காலம்பல காலஞ் சென்றுபின்
    செல்வர் யாக்கை கழிதலுமே.'
        'நண்ணு வார்வினை நைய நாடொறும்
    நற்ற வர்க்கர சாய ஞானநற்
    கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே.'

இவை நாற்சீரின் மிக்க பலசீரான் வந்த அடி யிரண்டாய் ஈற்றடி குறைந்து வந்த குறட்டாழிசை.

        'பிண்டியி னீழற் பெருமான் பிடர்த்தலை
        மண்டலந் தோன்றுமால் வாழி யன்னாய்.'
        '(4) அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி
        மறுவறு பத்தினி போல்வையி னீரே.'

இவை விழுமிய பொருளும் ஒழுகிய வோசையு மின்றி இரண்டடியும் அளவொத்துச் செந்துறை வெள்ளையிற் சிதைந்து வந்தமையின் செந்துறைச் சிதைவுத் தாழிசைக் குறள்.

        'வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
    பண்டைய ளல்லள் படி.'

இது குறள் வெண்பாவிற் சிறிது செப்பலோசை சிதைந்து வந்த சந்த மழிந்த குறட்டாழிசை.


(3) இதன்பின் சில பிரதிகளில், 'என்னை? ''ஈரடியாகிச் சீர்பல மிடைந்தே, அந்தடி குறைந்து வந்தினி தொழுகும், திறப்பா டுடைய குறட்டா ழிசையே'' என்றார் ஆகலின்' என்ற பகுதி காணப்படுகிறது.

(4) கவுந்தி - குந்திதேச மன்னன்மகள்; பாண்டவரின் தாய். அறுவர்க்கு - சூரியன் முதலிய ஆறு பேருக்கு, அறுவரை - கன்னன் தருமன் முதலிய ஆறு பேரை.


(பி - ம்.) 3. மாங்கடை.



PAGE 87

        '(5) அந்தடி குறைநவுஞ் செந்துறைச் சிதைவும்
    சந்தழி குறளுந் தாழிசைக் குறளே'
        'உரைத்தன விரண்டுங் குறட்பாவினமே'

என்பன யாப்பருங்கலம் (சூ. 64. 65)

(6)

(5) அத்தடி - ஈற்றடி. சந்து அழி - சந்தம் சிதைந்த.


- - - -

வெண்டாழிசை. வெண்டுறை, வெளிவிருத்தம்

        27. மூன்றடி யானு முடிந்தடி தோறு முடிவிடத்துத்
    தான்றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்வெண்டாழிசையே
    மூன்றடி யாய்வெள்ளை போன்றிறு மூன்றிழி பேழுயர்பா
    ஆன்றடி தாஞ்சில வந்தங் 1குறைந்திறும் வெண்டுறையே.

இ.....கை, வெளிவிருத்தமும் வெண்டாழிசையும் வெண்டுறையும் ஆமாறு உணர்த்......று.

'மூன்றடியானும் முடிந்து அடிதோறும் முடிவிடத்துத் தான் தனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்' எ - து. மூன்றடியானும் முற்றுப் பெற்று அடிதோறும் இறுதிக்கண் ஒரு சொல்லே வருவது வெளிவிருத்தம் எனப்படும் எ - று.

'மூன்றடியானும்' என்ற உம்மையால் நான்கடியானும் வரப் பெறும் எனக் கொள்க. என்னை?

        'ஒருமூன் றொருநான் கடியடி தோறுந்
    தனிச்சொற் றழுவி நடப்பன வெள்ளை
    விருத்த மெனப்பெயர் வேண்டப் படுமே'

என்றார் காக்கைபாடினியார்.

['தண்டா விருத்தம்' என்று சிறப்பித்தவதனால் நாற்சீரடியுட் பட்டு அடங்காதே வேறாய் வருவது ஈண்டுத் தனிச் சொல் ஆவதெனக் கொள்க.]


(பி - ம்.) 1. குறைந்திடும்.



PAGE 88

வரலாறு

        '(1) கொண்டன் முழங்கினவாற் கோபம் பரந்தனவால் - என்செய்கோயான்
    வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால் - என்செய்கோயான்
    எண்டிசையுந் தோகை 2யியைந்தகவி யேங்கினவால் - என்செய்கோயான்,

இது மூன்றடியாய் அடிதோறும் இறுதிக்கண் 'என்செய் கோயான்' என்னுந் தனிச் சொற் பெற்று வந்த வெளி விருத்தம்.

        '(2) ஆவா வென்றே யஞ்சின 3ராழ்ந்தார் - ஒருசாரார்.
    கூகூ வென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
    மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் - ஒருசாரார்
    4 ஏகீர் நாய்கீ ரென்செய்து மென்றார் - ஒருசாரார்.'

இது நாலடியாய் அடிதோறும் இறுதிக்கண் 'ஒரு சாரார்' என்னுந் தனிச் சொற் பெற்று வந்த வெளி விருத்தம்.

'வெண்டாழிசையே மூன்றடியாய் வெள்ளை போன்றிறும்' எ - து. மூன்றடியாய் அவற்றின் ஈற்றடி வெண்பாவே போல முச் சீரான் இறுவது வெண்டாழிசை யென்றும், வெள்ளொத்தாழிசை யென்றும் பெயரிட்டு வழங்கப்படும். எ - று.

        'அடியொரு மூன்றுவந் தந்தடி சிந்தாய்
    விடினது வெள்ளொத் தாழிசை யாகும்'

என்பது யாப்பருங்கலம் (சூ : 66)


(1) கோபம் - இந்திர கோபப் பூச்சி. வரி - இசை. தளவம் - செம்முல்லை. தலைவி பருவங் கண்டு வருந்தியது இது. மூன்றடியான் வந்தமையால் சிந்தியல் வெண்பாவின் இனம் இது.

(2) ஆவா இரக்கங் குறித்து வந்தது. கூவிளி - கூப்பீடு. நாய்கீர் - வணிகரே. நான்கடியாய்த் தனிச்சொற் பெற்று வந்தமையால் இது நேரிசை வெண்பாவின் இனம்,


(பி - ம்.) 2. யிருந்தகவி, யிசைந்தகவி. 3. ராழாவொரு 4. ஏயீர்நாய்கீர்.



PAGE 89

வரலாறு

        'நண்பி தென்று தீய சொல்லார்
    முன்பு நின்று முனிவ செய்யார்
    அன்பு வேண்டு பவர்.'

5இஃது ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை.

'மூன்றிழிபு ஏழு உயர்பாய் ஆன்றடிதாம் சில அந்தங் குறைந் திறும் வெண்டுறையே' எ-து. மூன்றடிச் சிறுமையாய் ஏழடிப் பெருமையாய் இடையிடை நான்கடியானும் ஐந்தடியானும் ஆறடி யானும் வந்து, பின்பிற் சிலவடி சிலசீர் குறைந்துவருவன வெண் டுறையாம் எ - று.

'ஆன்றடிதாம்' என்று சிறப்பித்தவதனால் முன்பிற் சிலவடி ஓரோசையாய்ப் பின்பிற் சிலவடி மற்றோர் ஓசையாய் வருவனவும் உள. அஃது ஒரு சார் வேற்றொலி வெண்டுறை எனக் கொள்க.

        'மூன்றடி முதலா வேழடி காறும்வந்
    தீற்றடி சிலசில சீர்தப நிற்பினும்
    வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்'

என்பது யாப்பருங்கலம் (சூ - 67.)

வரலாறு

        (3) குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலை மேற்பாய
    அழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி
    கலுழ்வனபோ 6னெஞ்சழிந்து கல்லருவி தூஉம்
    நிழல்வரை நன்னாட 7னீப்பானோ வல்லன்.'

(3) இசைய - இசையையுடைய கோழ்இலைய - வழுவழுப்பான இலைகளையுடைய. அழல் எரி - அழலுகின்ற தீ. அளிய - இரங்கத்தக்கன. காந்தள் மலரை மந்திகள் தீயென்று மயங்கின. நான்கடி வெண்டுறையாதல் பற்றி இது இன்னிசை வெண் பாவின் இனம். ஐந்தடி முதலாக ஏறிய அடிகளையுடைய வெண்டுறைகள் பஃறொடை வெண்பாவின் இனம்.


(பி - ம்.) 5. இது மூன்றடியாய் ஆசிரியத் தளையால் வந்து சிந்தியல் வெண்பாவிற் சிதைந்தமையால் வெண்டாழிசை. பிறவும் வந்தவாறு கண்டு கொள்க. 6. நெஞ்சசைந்து, 7. நிற்பானோ



PAGE 90

இது நான்கடியாய் ஈற்றடி யிரண்டும் இவ்விருசீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.

        ' (4) தாளாள ரல்லாதார் தாம்பலராயக்கா லென்னா மென்னாம்
    யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
    பீலிபோற் 8சாய்த்துவிடும் பிளிற்றி யாங்கே.'

இது மூன்றடியாய் ஈற்றடி யிரண்டும் இவ்விருசீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.

        ' (5) முழங்குதிரைக் கொற்கைவேந்தன் 9முழுதுலகும்
    புரந்தளித்து முறைசெய் கோமான்
    வழங்குதிறல் வாண்மாறன் மாச்செழியன்
    றாக்கரிய வைவேல் பாடிக்
    10 கலங்கிநின் றாரெலாங் கருதலா காவணம்
    இலங்குவா ளிரண்டினா லிருகைவீ சிப்பெயர்ந்
    தலங்கன்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்
    11 பொலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்
    விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே.'

இஃது ஏழடியால் முதலிரண்டடியும் அறுசீராய் ஓரோசையாய், பின்பில் ஐந்தடியும் நாற்சீராய் வேற்றோசையாய் வந்த வேற்றொலி வெண்டுறை. ஐந்தடியானும் ஆறடியானும் வருவன யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க.

        'மூன்றடி யாய்வெள்ளை போன்றிறுந் தாழிசை மூன்றிழிபேழ்
    ஆன்றடி தாஞ்சில வந்தத் தடிக ளவைகுறைந்து
    தோன்றுந் துறைவெள்ளை தண்டா விருத்தந் தனிச்சொல்வந்து
    மூன்றடி யானு முடியு முடியுமோர் நான்கினுமே'

என்று வெண்பாவுக்கினமாகிய தாழிசை துறை விருத்தங்கட்கு முறையானே இலக்கணஞ் சொல்லாது தலை தடுமாற்றமாகக் காரிகை சொல்லவேண்டியது என்னையோவெனின், ஒருசார் வெண்டுறையின் ஈற்றடி ஒன்றொரு சீர் குறைந்து வருவனவுள


(4) தாளாளர் - முயற்சியுடையோர். பீலி - மயிலிறகு.

(5) தடம் கட்கே - விசாலமான கண்களுக்கே. புரிந்து - விரும்பி. இச் செய்யுள் கலம்பகத்துள் மதங்கு என்ற உறுப்பைச் சாரும்.


(பி - ம்.) 8. சாய்ந்துவிடும் பிலிற்றி. 9. முழுதுலகு மேவல் செய். 10. கலந்து நின். 11. புலங்கொள்.



PAGE 91

வென்பதூஉம், வெள்ளொத் தாழிசையின் முதலிரண்டடியும் நாற்சீரான் வருமென்பதூஉம், சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மேல் மூன் றடுக்கி வருவனவெல்லாம் வெள்ளொத் தாழிசை யென்ப தூஉம் அறிவித்தற்கெனக் கொள்க, 'தலைதடு மாற்றந் தந்துபுணர்ந் துரைத்தல்' என்பது தந்திர வுத்தி யாகலின்.

        '(6) வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்
    உறவுற வரும்வழி யுரைப்பன 12வுரைப்பன்மற்
    செறிவுறு தகையினர் சிறந்தன ரிவர்நமக்
    கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்
    பிறபிற நிகழ்வன பின்.'

இஃது ஐந்தடியாய் ஈற்றடி ஒன்றொருசீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.

வெள்ளொத் தாழிசையின் முதலிரண்டடியும் நாற்சீரானே வருவது 'நண்பிதென்று' என்னும் இலக்கியத்தே கண்டுகொள்க.

        (7) 'அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
    ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
    துன்னான் துறந்து விடல்
        'ஏடி யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
    கூடா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
    13 நீடான் துறந்து விடல்
        'பாவா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
    மேவா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
    காவான் துறந்து விடல்.'
இவை சிந்தியல் வெண்பா வொருபொருண்மேல் மூன்றடுக்கி வந்தமையால்
        வெள்ளொத் தாழிசை.

(6) உறவு உற வரும் வழி - நேயங்கொள்ளும் விதம். செறிவுறு - நெருங்கிப் பழகும். அரசர் முதலாயினாரிடம் பழகும் முறை கூறப்படுகிறது.

(7) சேட் சென்னி - ஒரு சோழன். ஒன்னார், கூடார், மேவார் என்பன பகைவரைக் குறிக்கும் சொற்கள். புறம் - இடம். ஏடி - தோழி; விளி, சேட்சென்னி கவர்ந்து துறந்துவிடல் அறங்கொல்.


(பி - ம்.) 12. வுரைப்பன் யான். 13. நாடான், நேடான்.



PAGE 92

        'ஈரடி முக்கா லிசைகொள நடந்து
    மூன்றுட னடுக்கித் தோன்றினொத் தாழிசை'

என்றார் மயேச்சுரரு மெனக் கொள்க.

உதாரண முதனினைப்பு

        [(8) கொண்டன் முழங்கின வாவா விருத்தங் குழலிசைய
    வண்டினம் வெண்டுறை தாளாண் முழங்கொடு தாழிசையே
    நண்பிதென்றார் கலி கொன்றைவெண் செந்துறை நீலநண்ணு
    பிண்டி யறுவர்வண் 14டார்குறட் டாழிசை பெய்வளையே.

இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே வெண்பா வினங் கட்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.] (7)


(8) 'வெறியுறு கமழ்கண்ணி' என்பதும், அன்னா யறங்கொல்' என்பதும் இவ்வுதாரண முதனினைப்புக் காரிகையில் இல்லை. முதலிற் கூறவேண்டிய குறள் வெண்பா வினத்தின் முதற்குறிப்புப் பின்னே கூறப்பட்டுள்ளது.


----

நால்வகை ஆசிரியப்பா

        28. கடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை காமருசீர்
    இடைபல குன்றி னிணைக்குற ளெல்லா வடியுமொத்து
    நடைபெறு மாயி னிலைமண் டிலநடு வாதியந்தத்
    தடைதரு பாதத் தகவ லடிமறி மண்டிலமே.

எ - து. அகவலோசையோ டளவடித்தாகியும், இயற்சீர் பயின்றும் அயற்சீர் விரவியும், தன்றளை தழுவியும் பிறதளை மயங்கியும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வருதலில்லா ஆசிரியப் பாவினை (1) அடியானுந் தொடையானும் ஓசையானும் பொருளானும் பெயர் வேறுபாடுணர்த்துவா னெடுத்துக்கொண்டார். அவற்றுள். இக்காரிகை நேரிசை யாசிரியப்பாவும், இணைக்குற ளாசிரியப்பாவும், நிலைமண்டில வாசிரியப்பாவும், அடிமறிமண்டில வாசிரியப்பாவு மாமாறுணர்த்....று


(1) அடியாற் பெயர்பெற்றது இணைக்குற ளாசிரியப்பா ; தொடையாற் பெயர்பெற்றது அடிமறிமண்டில வாசிரியப்பா ; ஓசையாற் பெயர் பெற்றது நேரிசை யாசிரியப்பா ; பொருளாய் பெயர் பெற்றது. நிலைமண்டில வாசிரியப்பா. மண்டிலம் - நாற்சீரைக்கொண்ட அடி ; தொல். பொருள். 427.


(பி - ம்.) 14 டார் வெறி தாழிசை.



PAGE 93

'கடை அயல் பாதம் முச்சீர் வரின் நேரிசை' எ - து. 1ஈற்றடி யின் அயலடி முச்சீரான் வரும் எனின் அது நேரிசை யாசிரியப்பா எனப்படும் எ - று. என்னை?

        '(2) அந்த வடியி னயலடி சிந்தடி
    வந்தன நேரிசை யாசிரி யம்மே'

என்பது யாப்பருங்கலம் (சூ. 71).

வரலாறு

        (3) 'நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
    நீரினு மாரள வின்றே சாரற்
    கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு
    பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.' (குறுந். 3)

இஃது 2ஈற்றடியின் அயலடி முச்சீரான் வந்தமையால் நேரிசை யாசிரியப்பா வெனக் கொள்க.

'காமரு சீர் இடை பல குன்றின் இணைக்குறள்' எ - து. முதலடி யும் ஈற்றடியும் ஒத்து இடையடிகள் 3இரண்டும் பலவும் ஒருசீர் குறைந்தும் இருசீர் குறைந்தும் வருவன (4) இணைக்குறளா சிரியப்பா எனப்படும் எ - று. என்னை?

        'அளவடி யந்தமு மாதியு 4மாகிக்
    குறளடி சிந்தடி 5யென்றாங் கிரண்டும்
    இடைவர நிற்ப திணைக்குற ளாகும்'

என்றார் காக்கை பாடினியார்.


(2) பல பிரதிகளில் இப்பகுதி. 'ஈற்றதனயலடி யொருசீர் குறைந்து, நிற்பது நேரிசை யாசிரியம்மே என்றாராகலின்' என்று காணப்படுகிறது. 'ஒருசீர் குறைந்து' என்பதற்கு, 'முச்சீராக' என்பது பிரதிபேதம்.

(3) நீர் - கடல். ஆர் அளவின்று - அருமை அளவின்று. சாரல் - மலைப் பக்கம். கோல் - கொம்புகள். தேன் இழைக்கும் - தேனைச் செய்யும்.

(4) நாற்சீரினும் குறைந்த சீரையுடைய சிந்தடியையும் குறளடியையும் இங்கே குறள் என்றார். இணை - இரண்டு. இணைக்குறள் - குறளடியும் சிந்தடியுமாகிய இரண்டு.


(பி - ம்.) 1. ஈற்றயலடி. 2. ஈற்றயலடி. 3. ஒருசீரும் இருசீரும் குறைந்து வருவன. 4. மாகக். 5. யென்றா விரண்டும்.



PAGE 94

'இணைக்குற ளிடைபல குறைந்திற லியல்பே' என்பது யாப்பருங்கலம் (சூ. 72).

வரலாறு

        (5) 'நீரின் றண்மையுந் தீயின் வெம்மையும்
    சாரச் சார்ந்து
    தீரத் தீரும்
    சார னாடன் கேண்மை
    சாரச் சாரச் சார்ந்து
    தீரத் தீரத் தீர்பொல் லாதே.'

இது முதலடியும் ஈற்றடியும் நாற்சீராய் இடையடி இருசீரானும் முச்சீரானும் வந்தமையால் இணைக்குறளாசிரியப்பா.

        '[சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
    பெரியகட் பெறினே
    யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
    சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே
    பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே
    என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
    அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
    நரந்த நாறுந் தன்கையாற்
    புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
    அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
    இரப்போர் கையுளும் போகிப்
    புரப்போர் புன்கண் பாவை சோர
    அஞ்சோனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
    சென்றுவீழ்ந் தன்றவன்
    அருநிறத் தியங்கிய வேலே
    ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
    இனிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்
    பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
    சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன்
    றீயாது வீயு முயிர்தவப் பலவே.'
(புறநா. 235)

இஃது இருசீரடியும் முச்சீரடியும் இடையிடை வந்தமையால் இணைக்குற ளாசிரியப்பா.]


(5) தீர்பு ஒல்லாது - விடுதல் இயலாது.



PAGE 95

'காமரு சீர்' என்று சிறப்பித்தவதனால் ஆசிரியப்பா நான்கிற்கும் ஏ என்னும் அசைச்சொல்லால் இறுவது சிறப்புடைத்து, பிறவெழுத்தானும் 6இறப்பெறு மாயினும் எனக் கொள்க.

        'அகவ லிசையன வகவல் மற்றவை
    ஏஓ ஈஆய் என்ஐயென் றிறுமே' (யா. வி. சூ. 67.)

7 என்றாராகலின்.

'எல்லாவடியும் ஒத்து நடைபெறுமாயின் நிலைமண்டிலம்' எ - து. எல்லாவடியும் தம்முள் ஒத்து நாற்சீரடியான் வருவது நிலைமண்டில வாசிரியப்பாவாம் எ - று.

வரலாறு

        ' (6) வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
    சார னாட செவ்வியை யாகுமதி
    யாரஃ தறிந்திசி னோரே சாரற்
    சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
    உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.'
(குறுந். 18.)

இஃது எல்லாவடியும் ஒத்து நான்குசீரான் வந்தமையால் நிலைமண்டில வாசிரியப்பாவெனக் கொள்க.

நிலைமண்டில வாசிரியப்பாவிற்கு என் என்னும் அசைச் சொல்லால் இறுவது சிறப்புடைத்து, மற்றொருசார் ஒற்றினானும் உயிரினானும் இறப்பெறுமாயினும் எனக் கொள்க.

        'ஒத்த வடித்தா யுலையா மரபொடு
    நிற்பது தானே நிலைமண் டிலமே'
        'என்னென் கிளவி யீறாப் பெறுதலும்
    அன்னவை பிறவு மந்த நிலைபெற
    நிற்கவும் ªÚà நிலைமண் டிலமே'

என்றார் காக்கை பாடினியார்.

'நடு ஆதி அந்தத்து அடைதரு பாதத்து அகவல் அடிமறி மண்டிலமே' எ - து. எல்லாவடியும் ஒத்து முதல் நடு விறுதி


(6) வேரல் - மூங்கில். பலவு - பலாமரம். செவ்வியை ஆகுமதி - வரைந்து கொள்ளும் பருவத்தை உடையையாகுக.


(பி - ம்.) 6. இறப்பெறுமெனக். 7. என்றார் காக்கை பாடினியார்.



PAGE 96

யாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் பிழையாது வருவது அடிமறிமண்டில வாசிரியப்பாவும் எ - று.

        (7) 'மனப்படு மடிமுத லாயிறின் மண்டிலம்'

என்பது யாப்பருங்கலம் (சூ. 73.)

        ''உரைப்போர் குறிப்பி னுணர்வகை யின்றி
    இடைப்பான் முதலீ றென்றிவை தம்முண்
    மதிக்கப் படாதன மண்டில யாப்பே'

என்றார் காக்கை பாடினியாரும் எனக் கொள்க.

வரலாறு

        (8) சூரல் பம்பிய சிறுகா னியாறே
    சூரர மகளி ராரணங் கினரே
    வார லெனினே யானஞ் சுவலே
    சார னாட நீவர லாறே.'

இஃது எல்லா வடியும் முதல் நடுவிறுதியாக வுச்சரிக்க ஓசையும் பொருளும் பிழையாது வந்தமையால் அடிமறி மண்டில வாசிரியப்பாவாம் எ - று.

       [நேரிசை யாகு நிலத்தினு மென்ப திணைக்குறட்பா
     8நீரின்றண் ணென்னு நிலைமைய தாநிலை மண்டிலப்பா
     வேரலென் றாகும் விரைமலர்க் கோதைவில் லேர்நுதலாய்
     சூரல்பம் பென்ப தடிமறி 9யாகத் துணிந்தனரே.

இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே ஆசிரியப்பா நான் கிற்குங் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.]

(8)

(7) இச்சூத்திரம் சில பிரதிகளில், 'மனப்படு மடிமுத லாயிறின் மண்டிலம், நிலைக்குரி மரபி னிற்கவும் பெறுமே' என்று காக்கைபாடினியார் வாக்காகக் காணப்படுகிறது.

(8) சூரல் - காலைச் சுற்றிக்கொள்ளத்தக்க சூரற்கொடி; பிரம்பு. சூரர மகளிர் - தெய்வப் பெண்கள். ஆரணங்கினர் - மிகுதியாகத் தாக்கி வருத்தக் கூடியவர், ஆறு - வழி.


(பி - ம்.) 8. நீரின் சிறிய நிலைமைய. 9. மண்டிலந் தூமொழியே.



PAGE 97

ஆசிரியப்பாவின் இனம்

        29. தருக்கிய றாழிசை மூன்றடி யொப்பன நான்கடியாய்
    எருத்தடி நைந்து மிடைமடக் காயு மிடையிடையே
    சுருக்கடி யாயுந் துறையாங் குறைவிறொல் சீரகவல்
    விருத்தங் கழிநெடி னான்கொத் திறுவது மெல்லியலே.

இ - கை. ஆசிரியத்தாழிசையும் ஆசிரியத்துறையும் ஆசிரிய விருத்தமு மாமாறுணர்த்.....று.

(1) 'தருக்கியல் தாழிசை மூன்றடி ஒப்பன' எ - து. மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரியத்தாழிசையாம் எ - று.

'தருக்கிய றாழிசை' என்று சிறப்பித்தவதனால் ஒருபொ ருண்மேல் மூன்றடுக்கி வருவன சிறப்புடைய, தனியே வரப்பெறு மாயினும் எனக் கொள்க.

        'மூன்றடி யொத்த முடிவின வாய்விடின்
    ஆன்ற வகவற் றாழிசை யாகும்'

என்பது யாப்பருங்கலம் (சூ. 75.)

        ['ஒத்த வொருபொருண் மூவடி முடியினஃ
    தொத்த ழிசையா முடன்மூன் றடுக்கின்'

என்றார் மயேச்சுரர்.]

வரலாறு

        ' (2) கன்று குணிலாக் 1கனியுதிர்த்த மாயவன்
    இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற்
    கொன்றையந் தீங்குழல் கேளாமோ தொழீ.
        ' பாம்பு கயிறாக் கடல்கடைந்த 2 மாயவன்
    ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயில்
    ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ.'

(1) தருக்கு இயல் தாழிசை - ஓசை இனிமை முதலிய நோக்கிப் பயில்வோர் தருக்குவதற்குக் காரணமான தாழிசை.

(2) குணில் - குறுந்தடி. நம் ஆனுள் - நம்முடைய பசுக்கூட்டத்தினிடம், எல்லி - பகல். கொன்றை, ஆம்பல், முல்லை என்பன சில கருவி.


(பி - ம்.) 1. கனியெறிந்த மாமாயன், கனியுகுத்த. 2. மாமாயன்.



PAGE 98

        'கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த 8மாயவன்
    எல்லிநம் மானுள் வருமே லவன்வாயின்
    முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ.'
(சிலப். ஆய்ச்.)

இவை மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை.

        '(3) வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை
    பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை
    நீனிற வண்ணநின் 4னிரைகழ றொழுதனம்.'

இது தனியே வந்த ஆசிரியத் தாழிசை.

[சீர் வரையறுத்திலாமையால் எனைத்துச் சீரானும் மூன்றடியாய் வரப்பெறும்.]

'நான்கடியாய் (4) எருத்தடி நைந்தும் இடை மடக்காயும். இடையிடையே சுருக்கடியாயும் துறையாம்' எ - து. நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைந்து வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வருவனவும், ஆசிரியத்துறை எனப்படும் எ - று.

'நான்கடியாய்' என்பதனை எல்லாவற்றோடுங் கூட்டியும், இடைமடக்கு என்பதனை (5) இருதலையுங் கூட்டி மத்திம தீபமாக்கியும் பொருளுரைத்துக் கொள்க.

சீர் வரையறுத்திலாமையால் எனைத்துச் சீரானும் அடியாய் வரப்பெறும் எனக் கொள்க.


(3) பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை - சந்திரனை - உண்டுபண்ணி அவனைக்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றினை; சந்திரன் திருமாலிடம் தோன்றினமை: 'எங்கண் மாதவ னிதயமா மலர்வரு முதயத் திங்கள்' (வி. பா. குருகுலச்) 1. சந்திரன் ஓஷதிகளையும் உயிர்களையும் வளர்ப்பவன்.

(4) எருத்தடி - ஈற்றயலடி. எருத்தடி நைந்து வரும் துறை நேரிசை யாசிரியப்பாவின் இனம்.

(5) இருதலையும் கூட்டலாவது : 'எருத்தடி நைந்து,' 'இடையிடையே சுருக்கடியாயும்' என்ற இரண்டனோடுங் கூட்டுவது.'


(பி - ம்.) 3. மாமாயன் 4. னிருகழ.



PAGE 99

        '(6) கரைபொரு 5கானியாற்றங் கல்லத ரெம்முள்ளி வருவி ராயீன்
    அரையிருள் யாமத் தடுபுலியே றஞ்சி யகன்று போக
    நரையுரு மேறுநுங் கைவே லஞ்சு நும்மை
    வரையர மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வார லையோ.'

இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறை.

'(7) 6வண்டுளர் பூந்தார் 7வளங்கெழு செம்பூட்சேஎய் வடிவே போலத்8, தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோர் யாரே9, தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம் பண்டைப் பதிவினவிப்பாங்கு 10படமொழிந்து படர்ந்தோ னன்றே,'

இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறை.

        '(8) கொன்றார்ந் தமைந்த குருமுகத் தெழினிறக்
    குருதிக் கோட்டன விருந்தடப் பெருங்கைக்
    குன்றாமென வன்றாமெனக்
    குமுறா நின்றன கொடுந்தொழில் வேழம்
    
    11 வென்றாங் கமைந்த விளங்கொளி யிளம்பிறைத்
    துளங்குவா ளிலங்கெயிற் றழலுளைப் பரூஉத்தாள்
    அதிரும் வானென வெதிருங் 12கூற்றெனச்
    சுழலா நின்றன சுழிகண் யாளி
    
    சென்றார்ந் தமைந்த சிறுநுதி வள்ளுகிர்ப்
    பொறியெருத் துறுவலிப் பலவுநா றழல்வாய்ப்

(6) கல் அதர் - மலைவழி. எம் உள்ளி - எம்மை நினைத்து. வரையா மங்கையர் - மலையில் வாழும் தெய்வ மங்கையர்.

(7) சேஎய் - முருகக் கடவுள். பிண்டித் தழை - அசோக மரத்தினது இலைகளால் ஆன ஓர் உடை விசேடம். மா வினவி - தான் தேடி வந்த விலங்கு அப்பக்கம் வந்ததா என்று கேட்டு தணத்தல் - நீங்குதல். தலைவியும் தோழியும் உரையாடல் இது.

(8) குருமுகம் ஒளி பொருந்திய முகம். பிறை எயிற்று அழல் உளைப் பரூஉத் தாள் யாளி. வான் - மேகம். ஆர்ந்து - நிறைந்து. நுதி - கூர்மை. பொறி எருத்து - புள்ளிகள் பொருந்திய பிடரி. புலிமான் ஏற்றை - ஆண்புலி. இறுவரை - பெருமலை. எறிகுறும்பு - கொள்ளை மிகுந்த பாலை நிலத்தூர். நோனார் - ஆற்றாதார் - கரவு - பிறரறியாமல் மறைந்துவரும் தொழில்.


(பி - ம்.) 5. கான்யாற்றங்....வருதி. 6. வண்டுளரும். 7. வரிவளைக்கைச் செம். 8, 9. தண்டளிர்ப்பூம், 10. படநடந்து, 11. வென்றார்ந்தமைந்த. 12. கான்றெனக்.



PAGE__100

        13 புனலாமென வனலாமெனப்
    புகையா நின்றன புலிமா னேற்றை
    
    என்றாங் கிவையிவை யியங்கலி னெந்திறத்
    தினிவரல் வேண்டலந் 14தனிவரல் விலக்கலின்
    இறுவரைமிசை யெறிகுறும்பிடை
    இதுவென்னென வதுநோனார்
    கரவிரவிடைக் களவுளமது கற்றோரது கற்பன்றே.'

இது முதலடியும் மூன்றாமடியும் பதினான்கு சீராய் அல்லாத அடியிரண்டும் பதினாறு சீராய் இடையிடை குறைந்து வந்த ஆசிரி யத்துறை.

        ' (9) இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா
    அரங்க மணிபொழிலா வாடும்போலு மிளவேனில்
    அரங்க மணிபொழிலா வாடுமாயின்
    மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்ச மென்செய்த திளவேனில்.'

இது நான்கடியா யிடையிடை குறைந்து 15இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறை.

        'கடையத னயலது கடைதபு நடையவும்
    நடுவடி மடக்காய் நான்கடி யாகி
    யிடையிடை குறைநவு மகவற் றுறையே'

என்பது யாப்பருங்கலம் (சூ. 76.)

'குறைவில் தொல் சீர் அகவல் விருத்தம் கழிநெடில் நான் கொத்து இறுவது' எ - து. கழிநெடிலடி நான்காய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரிய விருத்தமெனப்படும் எ - று.

['குறைவில் தொல் சீர்' என்று சிறப்பித்தவனால் எண் சீரின் மிக்க சீரால் வருமடி சிறப்பிலவெனக் கொள்க.]

        ' (10) விடஞ்சூ ழரவி னினடநுடங்க
    விறல்வாள் வீசி விரையார்வேங்

(9) தேன் - வண்டுகள். குயில் முழவாக, தேன் யாழாக, பொழில் அரங்கமாக இளவேனில் ஆடும். அகன்றார் நெஞ்சம் மரமா:

(10) மாதங்கி = மதங்கி - ஆடல் பாடல்களில் வல்ல ஒரு பெண். தாம் தாம் - தாள ஒத்தைக் குறிக்கும் ஒலி. தண்ணுமை - ஒரு தோற்கருவி விசேடம். தண்ணுமை தாந்தாம் என்னும்.


(பி - ம்.) 13. புனலாமெனக் கன. 14. தனிவர லெனத் தலைவிலக்கலின் 15. நடுவடி மடக்காய்.



PAGE__101

        கடஞ்சூழ் நாடன் 16காளிங்கன் கதிர்வேல் பாடு மாதங்கி
    வடஞ்சூழ் கொங்கை மலைதாந்தாம் வடிக்க ணீல மலர்தாந்தாம்
    தடந்தோ ளிரண்டும் வேய்தாந்தாம் என்னுந் தன்கைந் தண்ணுமையே'

என்பது அறுசீர்க் கழிநெடிலயான் வந்த ஆசிரியவிருத்தம்.

'கணிகொண் டலர்ந்த' (கா. 13.) என்பது எழுசீர்க் கழி நெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தம்.

'மூவடிவி னாலிரண்டு' (கா. 13.) என்பது எண்சீர்க் கழி நெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தம்.

'இடங்கை வெஞ்சிலை' (கா. 13.) என்பது ஒன்பதின்சீர்க் கழி நெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தம்.

'கொங்கு தங்கு' (கா. 13.) என்பது பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தம்.

பதின்சீரின் மிக்கு வருவனவெல்லாம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க.

        'கழிநெடி லடிநான் கொத்திறின் விருத்தமஃ
    தழியா மரபின தகவல தாகும்'

என்பது யாப்பருங்கலம் (சூ. 77.)

'மெல்லியலே' எ - து. மகடூஉ முன்னிலை.

'[17 கன்று குணில்வா னுறத்தா ழிசையாங் கரைபொருகான் என்றது வண்டுளர் பூந்தா ரிரங்கு குயின்முழவாக் கொன்றார்ந் தமைந்த வகவற் றுறைகுறை யாவிருத்தம் 18பின்றாழ் குழலி 19விடங்கணி மூவடி வாதியவே.'

இவ்வுரைச் சூத்திரக்காரிகையின் வழியே ஆசிரியப்பாவினங் கட்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.]

(9)

(பி - ம்.) 16. காளிம்பன். 17. கன்றொடு வானுறத் தாழிசையாகுங், கன்று குணிலாத்தாழிசை யாகும் 18. முன்றாழ். 19. விடஞ்சூழ் கணிகொண்ட மூவடிவே.

----


PAGE__102

நேரிசையொத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா

        30. தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய்
    நிரலொன்றி னேரிசை யொத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோன்
    மரபொன்று நேரடி முச்சீர் குறணடு 1வேமடுப்பின்
    அரவொன்று மல்குல தம்போ தரங்கவொத் தாழிசையே.

எ....கை. துள்ளல் ஓசைத்தாய், நேரீற்று இயற்சீரும் நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பா வுரிச்சீர்மிக்கு நேரடித்தாய், தன்றளையும் (1) அயற்றளையுந் தட்டுத் தரவு தாழிசை 2என்னும் முதலுறுப்பும் அராகம் அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகமென்னும் துணையுறுப்பு முடைத்தாய், (2) ஒத் தாழிசைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி என்னும் பெயர் வேறு பாட்டாற் கிடந்த கலிப்பாவினை (3) உறுப்பினானும் ஓசையானும் பொருளானும் பெயர் வேறுபாடு உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்.


(1) தளைதட்டு - தளை பொருந்தி.

(2) ஒத்தாழிசைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி என்பன கலிப்பாவின் மூன்று வகைகள். இவற்றுள் ஒத்தாழிசைக் கலிப்பா (i) நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா, (ii) அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா, (iii) வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என மூன்று வகைப்படும். வெண்கலிப்பா ஒன்றேயாம்; கலிவெண்பா அதன் இனத்தது என்றலுமாம். கொச்சக் கலிப்பா (i) தரவு கொச்சகக் கலிப்பா. (ii) தாவிணைக் கொச்சகக் கலிப்பா, (iii) சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, (iv) பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, (v) மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என ஐவகைப்படும்.

(3) உறுப்பினால் வந்த பெயர் : ஒத்தாழிசைக் கலிப்பா; ஒத்த தாழிசைகளை யுடையதென்பது பொருள்; ஒப்பு, எல்லாத் தாழிசையும் ஒரு பொருண்மேல் வருதல். ஓசையால் வந்த பெயர் ; வெண்கலிப்பா. பொருளால் வந்த பெயர் கொச்சகக் கலிப்பா. இவற்றின் பிரிவுகளில் மயங்கிசைக் கொச்சகம் என்பது பொருளால் வந்த பெயர்; மற்றவை உறுப்பினால் வந்த பெயர்.


(பி - ம்.) 1. வேமடுப்ப, தர, வந்தடுப்ப,தர 2. அராகம் அம்போ தரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஆறுறுப்பினையு முடைத்தாய்.



PAGE__103

அவற்றுள் இக்காரிகை (4) நேரிசை யொத்தாழிசைக் கலிப் பாவும், அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவும் ஆமாறு உணர்த்....று.

'தரவு ஒன்று தாழிசை மூன்று தனிச்சொல் சுரிதகமாய் நிரல் ஒன்றின் நேரிசை யொத்தாழிசைக்கலி' எ - து. முன்பு ஒரு தரவு வந்து, அதன்பின் மூன்று தாழிசை வந்து, அதன்பின் ஒரு தனிச்சொல் வந்து, அதன்பின் ஆசிரியப்பாவானும் வெண்பாவானும் ஒரு சுரிதக உறுப்புப் பெற்றுச் சொன்ன பெற்றியிற் றிரியாது வருமெனின் அது நேரிசை யொத்தாழிசைக் கலிப்பாவாம் எ - று.

(5) தரவு எனினும் எருத்தம் எனினும் ஒக்கும்.

(6) தாழிசை எனினும் இடைநிலைப்பாட்டு எனினும் ஒக்கும்.

(7) தனிச்சொல் எனினும், விட்டிசை எனினும், தனிநிலை எனினும், கூன் எனினும் ஒக்கும்.


(4) நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா மற்றெல்லாக் கலிப்பா வகைகளினுஞ் சிறப்புடையது என்பர்.

(5) கலிப்பாவின் முதலுறுப்பாகத் தரப்படுவது தரவு; 'தலைவனைத் தந்து நிற்பது' என்னலுமாம். எருத்தம் - தலைவனைத் தருவதற்கு எருத்தம் போன்றது; எருத்தம் - பிடரி; 'யானை யெருத்தம் பொலியக்.....சென்றாரும்' (நாலடி. 3.)

(6) தாழம்பட்ட இசையையுடையது தாழிசை; தாழம்பட்ட இசை; கீழ்ப்பட்ட ஓசை; உச்சஸ்தாயிக்கு மாறுபட்டது இது. இடை நிலைப்பாட்டு - தரவுக்கும் சுரிதகத்துக்கும் இடையில் நிற்கும் பாட்டு; முடிந்த பொருளைக் கொண்டிருத்தலின் பாட்டென்றார்.

(7) தனிச்சொல் - சுரிதகத்தோடும் அதற்குமுன்னே உள்ள உறுப்போடும் ஓசை முதலியவற்றிற் றொடர்பின்றித் தனியே நிற்கும் சொல். இரு சொல்லா லாகிய தொடர்மொழியாயினும் சொல்லெனப்படும். விட்டிசை ஓரோசையினின்று மற்றோரோசை விட்டு இசைக்கப்படுவதற்குக் காரணமாக உள்ளது. கூன் - நேர்மையாக வந்த ஓசை சுரிதகத்தோடு பொருந்தாமற் றடைப்பட்டு வளைதற்குக் காரணமாக உள்ளது; கூன் - வளைவு.



PAGE__104

(8) சுரிதகம் எனினும், அடக்கியல் எனினும், வைப்பு எனினும், வாரம் எனினும், போக்கியல் எனினும் ஒக்கும்.

        'தந்துமுன் நிற்றலிற் றரவே தாழிசை
    3 ஒத்தாழ் தலினஃ தொத்தா ழிசையே
    தனிதர நிற்றலிற் றனிச்சொல் குனிதிரை
    நீர்ச்சுழி போல நின்றுசுரிந் திறுதலிற்
    சோர்ச்சியில் புலவர் சுரிதக மென்பர்'

என்று காரணக்குறி சொன்னாரும் உளர்.

இனித் தரவு தாழிசைகட்கு அடி அளவு ஆமாறு. 'சுருங்கிற்று மூன்றடி' (கா. 42) என்னுங் காரிகையுட் போக்கிச் சொல்லுதும்.

வரலாறு

        '(9) வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
    தோணெடுந்தண் டகைதுறந்து துன்பங்கூர் 4பசப்பினவாய்ப்
    பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ'

இது தரவு,

        'சூருடைய 5நெடுங்கடங்கள் சொலற்கரிய வென்பவாற்
    பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே,
        'சேணுடைய 6கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவால்
    நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ 7நயமிலரே,
        'சிலம்படைந்த வெங்கானஞ் 8சீரிலவே யென்பவாற்
    புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே.

இவை மூன்றுந் தாழிசை.


(8) சுரிதகம் - உள்ளடங்கும் ஓசையை யுடையது; சுரிதல் - நீர்ச் சுழி போன்று சுருங்கி முடிதல். அடக்கியல் - உள்ளடக்கி இசைக்கப்படுவது. வைப்பு : ஈற்றில் வைக்கப்படுவது. வாரம் - வரம்பாக வுடையது. போக்கியல் செல்லுதலையுடையது.

(9) தகை - இயல்பு. பசப்பினவாய் - பிரிவால் ஏற்படும் நிறவேறுபாட்டை யுடையனவாய். வலிப்பவோ - துணிவார்களோ. சூர் - அச்சம், தெய்வமகளிர். கடங்கள் - பாலை நிலத்து வழிகள். பீர் - பசலை. சிலம்பு - மலை. புலம்பு - தனிமை.

(பி - ம்.) 3. ஒத்தாழ்ந்திறினஃ, ஒத்தாங்கிசைத்தலி னொத்தா. 4. பசப்பினவாம், பசப்பினவால். 5. கடுங்கடங்கள். 6. வெங்கானம். 7. நல்லவரே 8. செலற்கரிய வென்பவாற்.



PAGE__105

        எனவாங்கு,

இது தனிச்சொல்.

                'அருளெனு மிலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்
    பன்னெடுங் காலமும் வாழியர்
    பொன்னொடுந் தேரொடுந் தானையிற் பொலிந்தே.'

இது சுரிதகம்.

இது தரவு மூன்றடியாய்த் தாழிசை மூன்றும் இரண்டடியாய்த் தனிச்சொற் பெற்று மூன்றடி ஆசிரியச் சுரிதகத்தால் இற்ற நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா.

வெள்ளைச் சுரிதகத்தா லிற்றன யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க.

        'தரவு தாழிசை தனிச்சொற் சுரிதகம்
    எனநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி'

என்றார் காக்கை பாடினியார்.

        'தரவொன் றாகித் தாழிசை மூன்றாய்த்
    9தனிச்சொ லிடைகிடந்து சுரிதகந் தழுவ
    வைத்த மரபின தொத்தா ழிசைக்கலி'

என்றார் மயேச்சுரர்.

'நீர்த் திரைபோல் மரபு ஒன்று நேரடி முச்சீர் குறள்நடுவே 10மடுப்பின் அது அம்போதரங்க வொத்தாழிசையே' எ - து. கரைசாரக் கரைசார ஒருகாலைக் கொருகாற் சுருங்கிவரு நீர்த் தரங்கமே போல நாற்சீரடியும், முச்சீரடியும், இருசீரடியுமாகிய (10) அசையடிகளைத் தாழிசைக்கும் தனிச்சொற்கும் நடுவே 11கொடுத்துத் தரவு, தாழிசை, அம்போதரங்கம், தனிச்சொல். சுரிதகம் என்னும் ஐந்து உறுப்புடைத்தாய் (அவைசொன்ன பெற்றியின் திரியாது) வருமெனின் அது அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா என்று வழங்கப்படும் எ-று.


(10) அசையடி - அம்போதரங்க அடிகள்; அசையும் சீராகப் பயின்று வரும் அடி என்க. சொற்சீரடி என்பதும் அது.


(பி - ம்.) 9. தனிச்சொல் வந்து சுரிதகம். 10. மடுப்பது. 11. தொடுத்து.



PAGE__106

(11) அம்போதரங்க வுறுப்பு எனினும், அசையடி எனினும். பிரிந்திசைக்குறள் எனினும், சொற்சீரடி எனினும், எண் எனினும் ஒக்கும்.

'மரபொன்றும்' என்று சிறப்பித்தவதனால் அசையடிதான் 12அளவடி ஈரடியாய் இரண்டும், அளவடி ஓரடியாய் நான்கும், சிந்தடி ஓரடியாய் எட்டும், குறளடி ஓரடியாய்ப் பதினாறுமாய் வருவது சிறப்புடைத்து. (12) எட்டும் பதினாறுமென்று சொல்லப்பட்டன. 13நான்கும் எட்டுமாய் வருவனவுமுள எனக் கொள்க. இவற்றைப் பேரெண், அளவெண், இடையெண், சிற்றெண் என்ப.

        'ஈரடி யிரண்டு மோரடி நான்கும்
    முச்சீ ரெட்டு மிருசீ ரிரட்டியும்
    அச்சீர் குறையினு மம்போ தரங்கம்'
        'அனைய வாகிய வசையடி நான்குந்
    தனியொடு தாழிசை யிடைவரு மென்ப'

என்றார் ஆகலின்.

வரலாறு

        ' (13) கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக்
    கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய
    அழலவிர் சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத்
    தாரொடு முடிபிதிர்த்த தமனியப் பொடிபொங்க
        (11) அம்போதரங்கம் - நீர்அலை. தோன்றுமிடத்துப் பெரிதாக இருந்து கரையைச்
    சாரச் சாரக் குறைந்து போவது அலையின் இயல்பு. எண் : அளவடி ஈரடி ஓர்
    எதுகையாக இரண்டு வருவது பேரெண். அளவடி ஓரடி நான்கு வருவது அளவெண்.
    சிந்தடியாய் வருவது இடையெண். குறளடியாய் வருவது சிற்றெண்.

(12) எட்டும், பதினாறும் பாதியாக வருதல்போல் நான்கும் என்றதும் இரண்டாக வருவதும் உண்டு.

(13) உளைய - பிடரி மயிரையுடைய. நரசிங்கமூர்த்தியின் கண்களுக்குக் கடலில் எழும் கதிர் உவமை. கலி - கடல் இரண்டாந்தாழிசையிற் கூறப்படுவது சிசுபாலனுடன் மலைந்தது போலும். மூன்றாந்தாழிசையிற் கூறப்படுவது கண்ணன் கொல்லேறு தழுவி நப்பின்னையை மணந்த வரலாறு.


(பி - ம்.) 12. ஈரடியா லிரண்டும், ஓரடியால் நான்கும், சிந்தடியாலெட்டும் குறளடியாற் பதினாறுமாய். 13. சுருங்கிவரப் பெறுமாயினுமெனக் கொள்க.



PAGE__107

        14 வார்புன லிழிகுருதி யகலிட முடனனைப்பக்
    கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்;

இது தரவு.

        'முரசதிர் வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப்
    புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த 15 மறமல்லர்
    அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலஞ்சேரப்
    பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ.
        'கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க
    வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு
    மாணாதா ருடம்போடு மறம்பிதிர 16வெதிர்மலைந்து
    சேணுய ரிருவிசும்பிற் சிதைத்ததுநின் சினமாமோ.
        'படுமணி யினநிரை பரந்துட னிரிந்தோடக்
    கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு
    வெரிநாடு 17மருப்பொசிய 18வீழ்ந்துதிறம் வேறாக
    எருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ.

இவை மூன்றும் தாழிசை.

        'இலங்கொளி மரகத மெழின்மிகு வியன்கடல்
            வலம்புரித் 19தடக்கை மாஅல் நின்னிறம்.
        'விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
    பொருகளி றட்டோய் புரையு நின்னுடை.

இவை 20ஈரடி யிரண்டு அம்போதரங்கம்.

        'கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை
    தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை
    ஒலியிய லுவண மோங்கிய கொடியினை
    வலிமிகு சகட மாற்றிய வடியினை.

(14) இவை 21நாற்சீ ரோரடி நான்கு அம்போதரங்கம்.

        'போரவுணர்க் கடந்தோய் நீ
    புணர்மருதம் பிளந்தோய் நீ

(14) நாற்சீர் ஓரடி நான்கு என்றவை இங்கே இரண்டாக வந்தன.


(பி - ம்.) 14 வார்புனன் மார்பினில். 15. மறமன்னர். 16. வெதிர் கலங்கிச் 17. மருப்பொடிய. 18. வீழ்ந்ததுதன் திறம்வேறா. 19. தடக்கையின் மாய. 20. இரண்டும் பேரெண். 21. அளவெண்.



PAGE__108

        நீரகல மளந்தோய் நீ
    நிழறிகழைம் படையோய் நீ

இவை 22முச்சீ ரோரடி நான்கு அம்போதரங்கம்.

        (1) 	'ஊழி நீ 	(2) 	உலகு நீ
    (3) 	உருவு நீ 	(4) 	யருவு நீ
    (5) 	ஆழி நீ 	(6) 	யருளு நீ
    (7) 	அறமு நீ 	(8) 	மறமு நீ'.

இவை 23இருசீ ரோரடி யெட்டு அம்போதரங்கம்.

        என வாங்கு,

இது தனிச்சொல்.

        'அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன்
    தொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற்
    கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
    புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன்
    தொன்று முதிர்கட லுலக முழுதுடன்
    ஒன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே.'

இஃது ஆசிரியச் சுரிதகம்.

இஃது எட்டும் பதினாறும் என்று சொல்லப்பட்ட முச்சீரடியும் இருசீரடியும் நான்கும் எட்டுமாய்ச் சிறப்பில்லாத எண்ணடியான் வந்த அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா. எட்டும் பதினாறுமாய் வருவன யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க. ('நலங்கிளர்......ஓங்குக வெனவே' சூ. 83. மேற்.)

'அரவொன்று மல்குல்' என்பது மகடூஉ முன்னிலை.

        'நீர்த்திரை போல நிரலே முறைமுறை
    ஆக்கஞ் சுருங்கி யசையடி தாழிசை
    விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம்
    24 தாங்கிச் தழுவுந் தரவினோ டைந்தும்
    யாப்புற் றமைந்தன வம்போ தரங்கம்'

என்றார் காக்கை பாடினியார்.


(பி - ம்.) 22. இடையெண். 23. சிற்றெண். 24. தாக்கித் தொடுத்த



PAGE__109

உதாரண முதனினைப்பு

        [வாணெடுங் கண்பனி நேரிசை யாகும் மதர்த்திருண்டு
    சேணுற 25வோடிக் குழையிட றிச்செருச் செய்யும்விழி
    நாணுந் திருவு மறிவுஞ் செறிவு முடையநல்லாய்
    ஏணுங் கெடலரு மாமுனி யம்போ தரங்கமென்னே.

இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே முன்வந்த இலக் கியங்களை முதனினைத்துக் கொள்க.]

(10)

(பி - ம்.) 25. நீண்டு குழைமீது பாய்ந்து செயிர்த்துழைக்கண் நாணுற வண்குமி ழிற்சேரு மொண்க ணறு நுதலாய் காணுங் கெடலரு மாமுனி யம்போ தரங்கமென்றே.'


- - - -

வண்ணகவொத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா

        31. அசையடி முன்ன ரராகம்வந் தெல்லா வுறுப்புமுண்டேல்
    வசையறு வண்ணக வொத்தா ழிசைக்கலி வான்றளைதட்
    டிசைதன தாகியும் வெண்பா வியைந்துமின் பான்மொழியாய்
    1 விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே.

இ - கை. வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவும் வெண் கலிப்பாவும் ஆமாறுணர்த்....று

'அசையடி முன்னர் அராகம் வந்து எல்லா வுறுப்புமுண்டேல் வசையறு வண்ணக வொத்தாழிசைக் கலி' எ - து. அம்போதரங்க வுறுப்புக்கும் தாழிசைக்கும் நடுவே அராகவுறுப்புப் பெற்றுத் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்பினையும் உடைத்தாய் வருமெனின் அது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும் எ - று.

(1) அராகம் எனினும், 2அடுக்கியல் எனினும், முடுக்கியல் எனினும், வண்ணகம் எனினும் ஒக்கம். [என்னை?


(1) அராகம் - முடுகிச் சொல்லும் ஓசையை யுடையது. அடுக்கியல் - கருவிளச் சீர்களே பெரும்பாலும் பயின்று ஓசையடுக்குடன் இயல்வது. வண்ணகம் - முடுகியலோசையாகிய சந்தத்தை யுடையது.


(பி -ம்.) 1. விசையுறு. 2. அடுக்கிசை.



PAGE__110

        'அராக மென்ப தடுக்கியல் வண்ணகம்
    முடுக்கிய லெனவும் மொழிந்தனர் புலவர்'

என்றார் ஆகலின்.]

'வசையறு வண்ணகம்' என்று சிறப்பித்தவதனால் அராக வுறுப்புத்தான் அளவடி முதலாகிய எல்லாவடியானும் வரப்பெறும் எனக் கொள்க.

அடி வரையறையாவது : சிறுமை நான்கடியானும், பெருமை எட்டடியானும், இடை ஐந்தடியானும் ஆறடியானும் ஏழடியானும் வரப்பெறுமெனக் கொள்க. என்னை?

        'அளவடி முதலா வனைத்தினு நான்கடி
    முதலா 3விரட்டியு முடுகிய னடக்கும்'

என்றார் ஆகலின்.

வரலாறு

        'விளங்குபணிப் பசும்பொன்னின் 4விரித்தமைத்துக் கதிர்கான்று
    துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர நறும்பைந்தார்ப்
    பரூஉத்தடக்கை மதயானைப் 5பணையெருத்தின் 6மிசைத்தோன்றிக்
    குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்
    மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்குத்
    தாயாகித் தலையளிக்குந் தண்டுறை 7யூரகேள் ;

இது தரவு.

        'காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகி
    மாட்சியாற் 8றிரியாத மரபொத்தாய் கரவினாற்
    பிணிநலம் 9பிரிவெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய
    அணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ ;
        'அன்பினா லமிழ்தளைஇ யறிவினாற் பிறிதின்றிப்
    பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்
    பெருவரைத்தோ ளருளுவதற் கிருளிடைத் தமியையாய்க்
    கதிர்வளைத்தோள் 10கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ ;

(பி - ம்.) 3. விரட்டிசை. 4. விசித்தமைத்துக். 5. பகட்டெழினெரி குஞ்சிக். 6. மிசைத்தோன்றுங். 7. யூரநீ. 8. றணியாத, பிரியாத. 9. பெரிதெய்திப், பீரெய்தப். 10. குளிர்ப்பிக்கும், அதிர்ப்பிக்கும், வளைப்பிக்கும். பெரிதெய்தப்,



PAGE__111

        'பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகுந்
    தேங்காத 11கரவினையுந் தெளியாத விருளிடைக்கட்
    குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த்
    தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ ;

இவை மூன்றுந் தாழிசை.

        'தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்
    போதுறு 12நறுமலர் புதுவிரை தெரிதரு கருநெய்தல் விரிவன கழி
    தீதுறு திறமறு கெனநனி 13முனிவன துணையொடு பிணைவன துறை
    மூதுறு 14மொலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர் புடையது கடல்

இவை நான்கும் அராகம்.

        'கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனால்
    இடுங்கழி யிராவருதல் வேண்டாவெண் றுரைத்திலமோ
    'கருநிறத் 15துறுதொழிற் கராம்பெரி துடைமையால்
    இருணிறத் தொருகான லிராவார லென்றிலமோ ;

இவை நாற்சீர் ஈரடி யிரண்டு அம்போதரங்கம்.

        'நாணொடு 16கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே
    துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே
    அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே
    நயப்பொடு கழிந்தன்றா 17னனவனு நன்னுதற்கே ;

இவை நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்.

        'அத்திறத்தா லசைந்தன தோள்
    அலரதற்கு மெலிந்தன கண்
    பொய்த்துரையாற் புலர்ந்தது முகம்
    பொன்னிறத்தாற் போர்த்தன முலை
    அழலினா லசைந்தது நகை
    அணியினா லொசிந்த திடை

(பி - ம்.) 11. கரவினாற்றெளி. 12. நறுவிரை புதுமலர் விரிதரு. 13. துணையொடு நனைசினை பிணைவன. 14. மொழியொடு சுரிகெழு மொலிகலி முடிதொடர். 15. தெழுதொழிற். 16. கலந்தன்றாற். 17. னனவினு.



PAGE__112

        18குழலினா னிமிர்ந்தது முடி
    குறையினாற் கோடிற்று நிறை;

இவை முச்சீர் ஓரடி யெட்டு அம்போதரங்கம்.

        'உட்கொண்ட தகைத்தொருபால்
    உலகறிந்த வலத்தொருபால்
    கட்கொண்ட றுளித்தொருபால்
    கழிவெய்தும் படிற்றொருபால்
    பரிவுறூஉந் தகைத்தொருபால்
    19படர்வுறூஉம் பசப்பொருபால்
    இரவுறூஉந் துயரொருபால்
    இளிவந்த வெளிற்றொருபால்
    20மெலிவுவந் தலைத்தொருபால்
    விளர்ப்புவந் 21தடைந்தொருபால்
    பொலிவுசென் றகன்றொருபால்
    பொறைவந்து கூர்ந்தொருபால்
    காதலிற் 22கதிர்ப்பொருபால்
    கட்படாத் துயரொருபால்
    ஏதில்சென் 23றணைந்தொருபால்
    இயனாணிற் 24செறித்தொருபால்.

இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போதரங்கம்.

        எனவாங்கு,

இது தனிச்சொல்.

        இன்னதிவ் வழக்க மித்திற மிவணலம்
    என்னவு முன்னாட் டுன்னா 25யாகிக்
    கலந்த 23வண்மையை யாயினு நலந்தகக்
    கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்
    கற்பொடு காணிய யாமே
    பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே.'

இது சுரிதகம்.

இஃது ஆறுறுப்புங் குறைவின்றி வந்த வண்ணகவொத் தாழிசைக் கலிப்பா.


(பி - ம்.) 18. குழலினால் விரிந்தது. 19. படிவுறூஉம், பசப்புவந்தணைந் தொருபால். 20. மேலிவுறூஉந் தகைத்தொருபால். 21. தடர்த்தொருபால். 22. களிப்பொருபால். 23 றகன்றொருபால். 24. செறிவொருபால். 25. யாகில். 26. வண்மைய ராயினு.



PAGE__113

        'அச்சொலப் பட்ட வுறுப்போ 2டராகவடி
    வைத்த நடையது வண்ணக மாகும்'

என்றார் காக்கைபாடினியார்.

'வான் றளைதட்டு இசைதன தாகியும் வெண்பா இயைந்தும், விசையறு சிந்தடியால் இறுமாய்விடின் வெண்கலியே' எ - து. கலித்தளை தட்டுக் கலியோசை தழுவியும், வெண்டளை தட்டு வெள்ளோசை தழுவியும் வந்து ஈற்றடி முச்சீரான் இறுமெனின் அது வெண்கலிப்பா என்றும் கலிவெண்பா என்றும் பெயரிட்டு வழங்கப்படும் எ - று.

'இன்பால் மொழியாய்' எ - து. மகடூஉ முன்னிலை.

'விசையறு சிந்தடி' என்று சிறப்பித்த வதனால் வேற்றுத் தளை தட்டு அருகியும் வரப்பெறும் எனக் கொள்க.

வரலாறு

        'வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக்
    கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின்
    மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்தச்
    சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தஞ் சொன்முறையான்
    மனையறமுந் துறவறமு மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
    வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் 28டிவையுரைத்த
    தொன்மைசால் கழிகுணத்தெந் துறவரசைத் தொழுதேத்த
    நன்மைசால் வீடெய்து மாறு.'

இது (2) தன்றளையானும் துள்ளலோசையானும் வந்து ஈற்றடி முச்சீராய் வெண்பாப்போல முடிந்தமையான் வெண்கலிப்பா.

        ' (3) சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினா மாடும்
    மணற்சிற்றில் காலிற் சிதையா வடர்ச்சியபொற்
    கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி

(2) இது பெரும்பாலும் சலித்தளையாலும் சிறுபான்மை வெண்டளையாலும் துள்ளலோசை பெற்று வந்த வெண்கலிப்பா. இங்ஙனம் வருவது சிறப்பில் வெண்கலிப்பா. கலித்தளையானே வருவதும், வெண்சீர் வெண்டளையானே வருவதும் சிறப்புடை வெண்கலிப்பா. இருவகை வெண்டளைகளான் வருவது கலிவெண்பா.

(3) இது வெண்டளை பெற்றுப் பலவடிகளில் வந்தமையின் இதற்கும் பஃறொடை வெண்பாவுக்கும் வேற்றுமை என்னை எனின்; கலிவெண்பா அல்லது


(பி - ம்.) 27. டராகம். 28. டிவை யுரைத்துத்.



PAGE__114

        நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நாள்
    அன்னையும் யானு மிருந்தேமா லில்லுளே
    உண்ணுநீர் வேட்டே னெனவந்தாற் கன்னை
    அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்
    உண்ணுநீ ரூட்டிவா வென்றா ளெனயானும்
    தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை
    வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்
    டன்னா யிவனொருவன் செய்ததுகா ணென்றேனா
    அன்னை யலறிப் படர்தரத் தன்னையான்
    உண்ணுநீர் விக்கினா னென்றேனா வன்னையும்
    தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக்
    கடைக்கண்ணாற் கொல்வான்போ னோக்கி நகைக்கூட்டஞ்
    செய்தானக் கள்வன் மகன்.'
(கலி. 51.)

இது வெள்ளோசை தழுவி வெண்டளை தட்டுச் சிந்தடியா லிற்று ஒரு பொருண்மேல் வந்தமையாற் (4) கலிவெண்பா.

        'ஒருபொரு ணுதலிய வெள்ளடி யியலாற்
    றிரிவின்றி நடப்பது கலிவெண் பாட்டே'

என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 154.)

        'வெண்டளை தன்றளை யென்றிரு தன்மையின்
    வெண்பா வியலது வெண்கலி யாகும்'

என்றார் காக்கை பாடினியார்.

இனிப் பிற தளையான் வருமாறு :

        29'ஏர்மலர் நறுங்கோதை யெருத்தலைப்ப விறைஞ்சித்தன்
    வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருத்தியவென்
    தார்வரை யகன்மார்பன் றனிமையை யறியுங்கொல்
    சீர்மலி கொடியிடை சிறந்து.'

வெண்கலிப்பா என்னும் இது வெள்ளோசை தழுவிப் பெரும்பாலும் துள்ளலோசைத்தாய் வருவது. பஃறொடை வெண்பா செப்ப லோசைத்தாய் வருவது.

(4) பிற்காலத்துக் கலிவெண்பாக்களா லாகிய உலா, தூது முதலியன நேரிவை வெண்பாவோடொத்த இவ்விரண்டு அடிகள் ஒரு கண்ணியாக இரண்டாம் அடியினிறுதியிற் றனிச்சீர் பெற்றுப் பலகண்ணிகளால் முடிவன வாகும்.


(பி - ம்.) 29. ஏர்மலி.



PAGE__115

இஃது ஆசிரியத் தனையானும் கலித்தலையானும் வந்தமையால் வெண்கலிப்பா.

பிறவும் யாப்பருங்கல விருத்தியுட் காண்க.

உதாரண முதனினைப்பு

        (5) [நின்று விளங்கு மணிப்பசும் பொன்னிற மாறுறுப்பும்
    ஒன்றிய வண்ணக வொத்தா ழிசைக்கலி யோசைகுன்றாத்
    துன்றிய வாளார் மழையுஞ் சுடர்த்தொடீஇ யேர்மலரும்
    என்றிவை வெண்கலிப் பாவுக் கிலக்கிய மேந்திழையே.

இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே வண்ணக வொத் தாழிசைக் கலிப்பாவுக்கும் வெண்கலிப்பாவுக்கும் காட்டிய இலக் கியங்களை முதனினைத்துக் கொள்க.]

(11)

(5) 30, 31-ஆம் காரிகைகளின் உதாரண முதனினைப்பு எல்லாம் அமைந்து பின்வருமாறு முதனினைப்புச் செய்யுட்கள் இரண்டு இங்கே பல பிரதிகளிற் காணப்படுகின்றன

        'வாணெடுங் கண்ணென்ப நேரிசை யாகுமம் போதரங்கம்
    கேணெடுந் துன்பங் களையுங் கெடலரு வண்ணகமே
    பூண்முலை மாதே விளங்கு மணிவெண் கலியுரைப்பின்
    வாணுதல் வாளார் சுடர்த்தொடீஇ யேர்மலர் மற்றிவையே'
        'வளங்கெழு வாணெடுங் கண்ணுங் கெடலறு மாமுனியும்
    நலங்கிளர் நேரிசை யம்போ தரங்கவொத் தாழிசையே
    விளங்கு மணிப்பசும்பொன்னென்ப வண்ணகம் வெண்கலிப்பாத்
    துளங்கிய வாளார் சுடர்த்தொடீஇ யேர்மலர் சொல்லினரே.'

கொச்சகக் கலிப்பா வகை

        32. தரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய்
    மரபே யியன்று மயங்கியும் வந்தன வாங்கமைத்தோள்
    அரவே ரகலல்கு லம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக்
    குரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர் கொச்சகமே.

இ - கை. தரவு கொச்சகக் கலிப்பாவும், தரவிணைக் கொச்சகக் கலிப்பாவும், சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும், பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும், மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவும் ஆமாறுணர்த்....று.



PAGE__116

இதன் பொழிப்பு : ஒரு தரவு வந்தும், தரவு இரண்டாய் வந்தும், தாழிசை சில வந்தும், தாழிசை பல வந்தும். தரவு தாழிசை அராகம் அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஆறுறுப்பும் தம்முள் மயங்கியும், வெண்பாவினோடும் ஆசிரியத்தினோடும் மயங்கியும் வருவன எல்லாம் (1) கொச்சகக்கலிப்பாவாம் எ - று.

'சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்தல்' என்பது தந்திர வுத்தி யாகலான் தரவு கொச்சகம் 1முதலாகிய ஐந்து கலிப்பாவும் (2) அப்பெயரானே வழங்கப்படும் எனக் கொள்க.

['தாமும்' என்று சிறப்பித்தவதனால் தனிச்சொல்லும் சுரிதகமும் இடையிட்டு வரப்பெறுமெனக் கொள்க.]

'மரபே' என்று சிறப்பித்தவதனால் வரலாற்று முறைமையோடுங் கூட்டிக் கலிக்கு ஓதப்பட்ட ஆறுறுப்பும் மிக்குங் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் மயங்கியும் வண்ணமும் அடியும் தொடையும் மயங்கியும் கலியுள் வாராவென்ற நேரீற்று இயற்சீரும் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீரும் ஐஞ்சீரடியும் வந்து ஒத்தாழிசைக் கலிப்பாவினோடு ஒவ்வாது வேறுபட்டு வருவனவெல்லாம் கொச்சகக் கலிப்பா என்று வழங்கப்படும் எ-று.

'வாங்கமைத்தோள் அரவு ஏர் அகல் அல்குல் அம்பேர் நெடுங்கண் வம்பேறு கொங்கை குரவே கமழ் குழலாய்' எ - து. மகடூஉமுன்னிலை.


(1) கொச்சகம் : 'பல கோடுபட அடுக்கியுடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப; அது போலச் சிறியவும் பெரியவும் விராய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் செய்யப்படும் பாட்டதனைக் கொச்சகம் என்றார். இக்காலத்தார் அதனைப் பெண்டிர்க்குரிய உடையுறுப்பாக்கியும் கொய்ச்சகம் என்று சிதைத்தும் வழங்குப' (தொல். பொருள். சூ. 464, பேரா.)

(2) அவற்றுள் ஒரு தரவு வந்தால் தரவு கொச்சகக் கலிப்பா என்றும், தரவு இரண்டு வந்தால் தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்றும், சில தாழிசை வந்தால் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்றும், பல தாழிசை வந்தால் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்றும்' தரவு, தாழிசை முதலாகிய ஆறு உறுப்பும் தம்முள் மயங்கியும் வெண்பாவினோடும் ஆசிரியத்தோடும் மயங்கியும் வருவன வெல்லாம் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்றும் வழங்கப்படும்.


(பி - ம்.) 1. முதலாவுடையனவெல்லாம்.



PAGE__117

'கொச்சகமே' எ - து - இறுதி விளக்கெனக் கொள்க.

அவற்றுக்குச் செய்யுள் வருமாறு :

        'செல்வப்போர்க் கதக் கண்ணன்'
(கா. 11, மேற்)

என்பது தனிச்சொல்லும் சுரிதகமும் இல்லாத தன்றளையான் வந்த தரவு கொச்சகக் கலிப்பா.

        'குடநிலைத் தண்புறவிற்......சென்றவாறே'
(கா. 21, மேற்.)

என்பது தனிச்சொற் பெற்றுச் சுரிதகத்தால் இற்ற தரவு கொச்சகக் கலிப்பா.

        'வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய
    கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாம்
    கொடிபடு 2மணிமாடக் கூடலார் கோமானே.

இது தரவு.

        எனவாங்கு,

இது தனிச்சொல்.

        2'துணைவளைத்தோ ளிவண்மெலியத் தொன்னலந் துறப்புண்டாங்
    கிணைமலர்த்தா ரருளுமே லிதுவிதற்கோர் மாறென்று
    துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ.

இது தரவு.

        அதனால்,

இது தனிச்சொல்.

        'செவ்வாய்ப் பேதை யிவடிறத்
    தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே'

இது சுரிதகம்.

இஃது இடையிடை தனிச்சொற் பெற்றுச் சுரிதகத்தால் இற்ற தரவிணைக் கொச்சகக் கலிப்பா.

இனிச் சுரிதகம் இல்லாத தரவிணைக் கொச்சகக் கலிப்பா வந் துழிக் கண்டு கொள்க.

        (3)'பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்
    தோன்றிக், குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப்

(3)குரூஉக் கொண்ட - நிறத்தைக் கொண்ட. உச்சியார்....தேவர். அருவரையால் - பெருமை பொருந்திய மலையினால். பகை - இந்திரன் ஆயர் மீது


(பி - ம்.) 2. வரைமார்பிற். வரைமாடக்.



PAGE__118

        படைப்பரிமான் றோரினொடும் பரந்துலவு மறுகினிடைக்
    கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே.

இதுதரவு.

        ஆங்கொருசார்,

இது தனிச்சொல்.

        'உச்சியார்க் கிறைவனா யுலகெலாங் காத்தளிக்கும்
    பச்சையார் மணிப்பைம்பூட் புரந்தரனாப் பாவித்தார்
    3வச்சிரங் காணாத காரணத்தான் மயங்கினரே.
        ஆங்கொருசார்,
        'அக்கால மணிநிரைகாத் தருவரையாற 4பகைதவிர்த்து
    வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார்
    5சக்கரங் காணாத காரணத்தால் சமழ்த்தனரே.
        ஆங்கொருசார்,
        'மால்கொண்ட பகைதணிப்பான் மாத்தடிந்து மயங்காச்செங்
    கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார்
    வேல்கண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே.

இவை மூன்றுந் தாழிசை.

        அஃதான்று,

இது தனிச்சொல்.

        'கொடித்தே ரண்ணல் கொற்கைக் கோமான்
    நின்றபுக ழொருவன் செம்பூட் சேஎய்
    என்றுநனி யறிந்தனர் பலரே தானும்
    ஐவரு ளொருவனென் றறிய லாகா மைவரை யானை மடங்கா வென்றி
    மன்னவன் வாழியென் றேத்தத்
    தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே.'

இது சுரிதகம்.


கொண்ட பகை. சமழ்த்தனர் - நாணினர். செங்கோல் - சிவந்த அம்பு ஐவருள் ஒருவன் ;ஐவர் - மும்மூர்த்திகள், முருகன். இந்திரன்.


(பி - ம்.) 3. வச்சிரங்கைக். 4. பிணிதவிர்த்து. 5. சக்கரங்கைக்



PAGE__119

இஃது இடையிடை தனிச்சொற் பெற்று நான்கடித் தரவு ஒன்றும், மூன்றடித் தாழிசை மூன்றும், சுரிதகமுமாய் நேரிசை யொத்தாழிசைக் கலிப்பாவிற் சிறிது வேறுபட்டுத் தன்றளையான் வந்தமையாற் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.

        'தண்மதியேர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங்
    குண்மதியு முடைநிறையு முடன்றளர முன்னாட்கட்
    கண்மதியொப் பிவையின்றிக் காரிகையை நிறைகவர்ந்து
    பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ.

இது தரவு.

        இளநல மிவள்வாட விரும்பொருட்குப் பிரிவரயேல்
    தளநல முகைவெண்பற் றாழ்குழ றளர்வாளோ.
    
    தகைநல 6மிவைவாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல்
    வகைநல 7மிவள்வாடி வருந்தியில் லிருப்பாளோ.
    
    'அணிநல னிவள்வாட வரும்பொருட்குப் பிரிவாயேல்
    மணிநலன் மகிழ்மேனி மாசொடு மடிவாளோ.
    
    'நாம்பிரியோ மினியென்று நறுநுதலைப் பிரிவாயேல்
    ஓம்பிரியோ மெனவுரைத்த வுயர்மொழியும் பழுதாமோ.
    
    'குன்றளித்த திரடோளாய் கொய்புனத்தற் கூடியநாள்
    அன்றளித்த வருண்மொழியா லருளுவது மருளாமோ.
    
    'சில்பகலு மூடியக்காற் சிலம்பொலிச்சீ றடிபரவிப்
    பல்பகலுந் தலையளித்த 8பணிமொழியும் பழுதாமோ.

இவை ஆறும் தாழிசை.

        அதனால்,

இது தனிச்சொல்.

        'அரும்பெற லிவளினுந் தரும்பொரு ளதனினும்
    பெரும்பெற லரியன வெறுக்கையு மற்றே

(4) கண்மதி - கண்ணினால் மதிக்கப்படும். தள தல முகை - முல்லையின் நல்ல முகைகள். ஓம் பிரியோம் ; ஓம் : உடன்பாட்டை உணர்த்தும் சொல். அளித்த : உவம வாசகம்.


(பி - ம்.) 6. மிவள்வாடத். 7. மிவை வாடி. 8. பனிமொழியும்.



PAGE__120

        விழுமிய தறிமதி வாழி
    9தழுவிய காதலிற் றரும்பொருள் சிறிதே.'

இது சுரிதகம்.

இது நான்கடித் தரவும் இரண்டடித் தாழிசை ஆறும் தனிச் சொல்லும் நான்கடிச் சுரிதகமும் பெற்று வந்த பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.

        '(5) மணிகிளர் நெடுமுடி மாயவனுந் தம்முனும்போன்
    றணிகிளர் நெடுங்கடலுங் கானலுந் தோன்றுமால்
    நுரைநிவந் தவையன்ன நொய்ப்பறைய சிறையன்னம்
    இரைநயந் திறைகூரு மேமஞ்சார் துறைவகேள்.
        10 'மலையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக்
    11 கனலெனக் காற்றெனக் கடிதுவந் திசைப்பினும்
    விழுமியோர் வெகுளிபோல் வேலாழி யிறக்கலா
    தெழுமுன்னீர் பரந்தொழுகு மேமஞ்சார் துறைவகேள்.

இவை இரண்டும் தரவு.

        'கொடிபுரையு நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள்
    தொடிநெகிழ்ந்த தோள்கண்டுந் துறவலனே யென்றியால்.
        'கண்கவரு மணிப்பைம்பூட் கயில்கவைஇய சிறுபுறத்தோள்
    தெண்பனிநீ ருகக்கண்டுந் 12திரியலனே யென்றியால்,

(5) மணற் பரப்பினால் வெண்மையாகத் தோன்றும் கானல் பலராமனுக்கு உவமை. மாயவனையும் பலராமனையும் சமணர் தம் மதத்துப் பெரியோராகக் கருதுவர்.

நொய் பறைய - நொய்ம்மையான தூவியையுடைய. இறை கூரும் - தங்குதல் மிக்க. வேலாழி - கரை ; இருபெயரொட்டு. நுழை நுசுப்பு - நுண்ணிய இடை. கயில் கவைஇய சிறுபுறத்தோள் - கொக்கியோடு கூடிய கயிற்றை அணிந்த கழுத்தினள் என்றபடி. நாய்கன் - வணிகன். வீழ்சுடரின் நெய் - விளக்கச் சுவாலையிலிருந்து சொட்டும் நெய். அடும்பு அமல் இறும்பு - அடுப்பங் கொடிகள் நிறைந்த குறுங்காடு. திமில் - படவு. படவுகளுக்குக் குதிரைகள் உவமை. சுடரொளி மறை தொறும் - சூரியனொளி மறையும் போதெல்லாம். கால் - காற்று. தவிர்ப்பாய்மன் ; மன் - கழிவுப் பொருளது. காமக்கு - காமத்துக்கு. இன்பக்கு - இன்பத்துக்கு. பொறை - பாரம்.


(பி - ம்.) 9. கெழுமிய. 10. வரையென. 11. சுரையெனக் 12. தெரியலனே.



PAGE__121

        நீர்பூத்த நிரையிதழ்க்க ணின்றொசிந்த புருவத்தோள்
    பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே யென்றியால்.
    
    'கனைவரல்யாற் றிகுகரைபோற் கைநில்லா துண்ணெகிழ்ந்து
    நினையுமென் னிலைகண்டும் நீங்கலனே யென்றியால்.
    
    'கலங்கவிழ்ந்த நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப்
    புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால்.
    
    'வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோய் பொறுக்கலாத்
    தாழுமென் னிலைகண்டும் தாங்கலனே யென்றியால்.

இவை ஆறும் ஈரடித் தாழிசை.

        அதனால்,

இது தனிச்சொல்.

        'அடும்பம லிறும்பி னெடும்பனை மிசைதொறுங்
    கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு.
    
    'செறிதரு செருவிடை யெறிதொழி லிளையவர்
    நெறிதரு புரவியின் மறி தருந் திமில்.
    
    'அரைசுடை நிரைபடை விரைசெறி முரசென
    நுரைதரு திரையொடு கரைபொருங் கடல்.
    
    'அலங்கொளி ரவிச்சுட ரிலங்கொளி மறைதொறுங்
    கலந்தெறி காலொடு புலம்பின பொழில்.

இவை நான்கும் அராகம்.

        'விடாஅது கழலுமென் வெள்வளையுந் 13தவிர்ப்பாய்மன்
    கெடாஅது பெருகுமென் கேண்மையு நிறுப்பாயோ.
    
    'ஒல்லாது கழலுமென் னொளிவளையுந் 14தவிர்ப்பாய்மன்
    நில்லாது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ.
    
    'தாங்காது கழலுமென் றகைவளையுந் 15தவிர்ப்பாய்மன்
    நீங்காது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ.
    
    'மறவாத வன்பினேன் மனனிற்கு மாறுரையாய்
    துறவாத தமருடையேன் றுயர்தீரு மாறுரையாய்.
    
    'காதலார் 16 மார்பன்றிக் காமக்கு மருந்துரையாய்
    ஏதிலார் தலைசாய யானிற்கு மாறுரையாய்.

(பி - ம்.) 13-15. செறிப்பாய்மன். 16. மார்பின்றிக்



PAGE__122

        'இணைபிரிந்தார் 17மார்பின்றி யின்பக்கு மருந்துரையாய்
    துணைபிரிந்த தமருடையேன் றுயர்தீரு மாறுரையாய்.

இவை ஆறுத் தாழிசை.

        எனவாங்கு,

இது தனிச்சொல்.

        'பகைபோன் றதுதுறை
    பரிவா யினகுறி
    நகையிழந் ததுமுகம்
    நனிவாடிற் றுடம்பு
    தகையிழந் தனதோள்
    தலைசிறந் ததுதுயர்
    புகைபரந் ததுமெய்
    பொறையா யிற்றுயிர்.

இவை இருசீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்.

        அதனால்,

இது தனிச்சொல்.

        'இனையது நினையா லனையது பொழுதால்
    நினையல் வாழி தோழி தொலையாப்
    பனியொடு கழிக வுண்கண்
    என்னொடு கழிகவித் துன்னிய நோயே.'

இது சுரிதகம்.

இது தரவு இரண்டும், தாழிசை ஆறும், தனிச்சொல்லும் அராகம் நான்கும், பெயர்த்தும் ஆறு தாழிசையும், தனிச்சொல்லும், எட்டம்போதரங்க வுறுப்பும், தனிச்சொல்லும் பெற்று நான்கடிச் சுரிதகத்தால் இற்றுக் கலிக்கு ஓதப்பட்ட ஆறுறுப்பும் மிக்குங் குறைந்தும் பிறழ்ந்தும். உறழ்ந்தும் மயங்கியும் வந்தமையால் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

ஆசிரியத்தினோடும் வெண்பாவினோடும் மயங்கி வந்த மயங் கிசைக் கொச்சகக் கலிப்பா, 'காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்' (கலி. 39) என்னும் பழம்பாட்டினுள் மயங்கி வந்தவாறு யாப்பருங்கல விருத்தியுட் (சூ 86.) கண்டுகொள்க.


(பி - ம்.) 17. மார்பின்றி,



PAGE__123

இன்னும் 'மரபே' என்று சிறப்பித்தவதனால் தரவு, ஒரு போகு முதலாக வுடையனவற்றை எல்லாம் இதனால் பெயர் கொடுத்துக் கொச்சகமென்று வழங்கப்படும் எ - று.

        ' (6) எருத்தியலின்றி யிடைநிலை பெற்றும்
    இடைநிலை யின்றி யெருத்துடைத் தாகியும்
    எருத்த மிரட்டித் திடைநிலை பெற்றும்
    இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும்
    இடையு மெருத்து மிரட்டுற வந்தும்
    எருத்த மிரட்டித் திடைநிலை யாறா
    அடக்கிய லாறு மமைந்த வுறுப்பிற்
    கிடக்கை முறைமையிற் கிழமைய தாயும்
    தரவொடு தாழிசை யம்போ தரங்கம்
    முடுகியல் போக்கியல் என் றிவை யெல்லாம்
    முறைதடு மாற மொழிந்தமை யின்றி
    18 இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்து
    மற்றும் பிறபிற வொப்புறுப் பில்லன
    கொச்சக மென்னுங் குறிப்பின வாகும்'

என்றார் காக்கைபாடினியார்.

        'தரவே தரவிணை தாழிசை சிலபல
    வரன்முறை பிறழ வயற்பா மயங்கியும்
    தனிச்சொற் பலவா யிடையிடை நடந்தும்
    ஒத்தா ழிசைக்கலி யுறுப்பினிற் பிறழ
    வைத்த முறையான் வண்ணக விறுவாய்
    மயங்கி வந்தனவு மியங்குநெறி முறைமையிற்
    கொச்சகக் கலியெனக் கூறினர் புலவர்'

12 எனவும்,

        'ஓதப் பட்ட வுறுப்புவகை யெல்லாம்
    ஏதப் படாமற் கலக்கியல் பெய்தி
    மிக்குங் குறைந்தும் பிறழ்ந்து முறழ்ந்தும்
    வண்ணமு மடியுந் தொடையு மயங்கியும்

(6) எருத்தியல், எருத்து. எருத்தம் - தரவு. இடைநிலை - தாழிசை. அடக்கியல் - சுரிதகம். முடுகியல் அராகம். போக்கியல் - சுரிதகம்.


(பி - ம்.) 18. இடைநிலை. 19. என்றார் கையனார்.



PAGE__124

        அடுக்கிசை யந்தந் தொடுத்தன பல்கியும்
    கலிவயிற் கடிந்த சீரிடை மிடைந்தும்
    நாற்சீ ரிறந்த சீரொடு சிவணியும்
    முச்சீ ரிருசீ ரம்போ தரங்கம்
    அச்சீர் முடிவிடை யழிவில தழுவியும்
    கொச்சகக் கலியெனக் கூறவும் படுமே'

எனவும் சொன்னார் மயேச்சுரரும் எனக் கொள்க.

        'தரவின் றாகித் தாழிசை பெற்றும்
    தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும்
    (7) எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும்
    அடுக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகியும்
    யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது
    கொச்சக வொருபோ காகு மென்ப'

என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 461.)

இவற்றுக் கிலக்கியம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க.

        (8) [குடநிலைத் தண்புற விற்செல்வப் போர்முற் றரவுரைப்பின்
    வடிவுடை யாகுந் தரவிணை மன்னும் பரூஉத்தடக்கை
    அடிவரு சிஃறா ழிசைதண் மதிபஃ றாழிசையாம்
    மடவரன் மாதே மணிகிள ராகு மயங்கிசையே.

இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே கலிப்பாவிற்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.]

(12)

(7) எண் - அம்போதரங்க உறுப்பு.

(8) இங்கே இருத்தற்குரிய முதனினைப்புக் காரிகை. பிரதிதோறும் வேறுபட்டுள்ளது. சில வேறுபாடுகள் வருமாறு;

        குடநிலைத் தண்செல்வப் போர்க்கதக் கண்ணன் றரவுரைப்பின்
    வடிவுடை யாகுந் தரவிணை மன்னும் பரூஉத்தடக்கை
    இடமிக வாய்ச்சில தாழிசை தண்மதி யேர்பலவாய்
    மடலவிழ் கோதை மணிகிள ராகு மயங்கிசையே.
        தரவாங் குடநிலை யுஞ்செல்வப் போருந் தரவிணையாம்
    பரவார் வடிவுடைச் சிஃறா ழிசையே பரூஉத்தடக்கை
    வரவாய தண்மதி பஃறா ழிசையே மயங்கிசையேர்
    குரவார் குழலி மணிகிள ராகுமைங் கொச்சகமே.


PAGE__125

கலிப்பாவின் இனம்

        33. அடிவரை யின்றி யளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற்
    கடிதலில் லாக்கலித் தாழிசை யாகுங் கலித்துறையே
    நெடிலடி நான்கா நிகழ்வது நேரடி யீரிரண்டாய்
    விடினது வாகும் விருத்தந் திருத்தக மெல்லியலே.

இ - கை. கலித்தாழிசையும் கலித்துறையும் கலிவிருத்தமும் ஆமாறுணர்த்....று.

'அடிவரை யின்றி யளவொத்தும் அந்தடி நீண்டிசைப்பிற் கடிதலில்லாக் கலித் தாழிசையாகும்' எ - து - இரண்டடி முதலாய்ப் பலவடியானும் வந்து ஈற்றடி மிக்கு ஏனையடி தம்முள் அளவொத்தும் ஒவ்வாதும் வருமெனின் அது கலித்தாழிசை எனப்படும் எ - து.

[அளவொத்தும் என்ற உம்மையால் ஈற்றடி மிக்கு அல்லாத வடி அளவொத்தும் ஒவ்வாதும் வரப்பெறுமெனக் கொள்க,]

'கடித லில்லாக் கலித்தாழிசை' என்று சிறப்பித்தவதனால் அவை ஒருபொருண்மேல் மூன்றடுக்கி வருவது சிறப்புடைத்துத் தனியே வரப்பெறுமாயினும் எனக் கொள்க.

வரலாறு

        '(1) கொய்தினை காத்துங் குளவி யடுக்கத்தெம்
    1பொய்தற் சிறுகுடி வாரனீ யைய நலம்வேண்டில்'
        'ஆய்தினை காத்து மருவி யடுக்கத்தெம்
    மாசில் சிறுகுடி வாரனீ யைய நலம்வேண்டில்'
        'மென்றினை காத்து மிகுபூங் 2கமழ்சாரற்
    3குன்றச் சிறுகுடி வாரனீ யைய நலம்வேண்டில்.'

இவை இரண்டடியாய் ஈற்றடி மிக்கு ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி வந்தமையாற் கலித்தாழிசை.


(1) காத்தும் - காப்போம். குளவி அடுக்கத்து - காட்டு மல்லிகையையுடைய மலைச்சாரலில் வாரல் - வாராதே. இது தோழி கூற்று.


(பி - ம்.) 1. பொய்தீர். 2. கமழ்சோலைக். 3. குன்றிற்.



PAGE__126

        '(2) வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங்
    கேள்வரும் போழ்தி னெழால்வாழி வெண்டிங்காள்
    கேள்வரும் போழ்தி 4னெழாதாய்க் குறாலியரோ
    5நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்.

இது ஈற்றடி மிக்கு ஏனையடி மூன்றும் ஒத்துத் தனியே வந்த கலித்தாழிசை.

        'பூண்ட பறையறையப் பூத மருள
    நீண்ட சடையா னாடுமே
    நீண்ட சடையா னாடு மென்ப
    மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே.'

இஃது இரண்டாமடி குறைந்து, ஈற்றடி மிக்கு முதலடியும் மூன்றாமடியும் ஒத்து வந்தமையால், ஈற்றடி மிக்கு, ஏனையடிகள் ஒவ்வாது வந்த கலித்தாழிசை.

        'அடியெனைத் தாகியு மொத்துவந் தளவினிற்
    கடையடி மிகுவது கலித்தா ழிசையே'

என்பது யாப்பருங்கலம் (சூ. 87.)

        'அந்தடி மிக்குச் சிலபல வாயடி
    தந்தமு ளொப்பன தாழிசை யாகும்'

என்றார் காக்கை பாடினியார்.

'கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது' எ - து. ஐஞ்சீரடி நான்காய் [ஒத்து] வருவது (3) கலித்துறை எ - று.

வரலாறு

        'யானுந் தோழியு மாயமு மாடுந் துறைநண்ணித்
    தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்

(2) கேள் - உறவினர் ; என்றது தலைவனை. எழால் - தோன்றாதே. உறாலியர் - உறாது ஒழிக.

(3) கலித்துறை : இது கலிநிலைத்துறை என்றும், காவியங்களிற் பயின்று வருவதனால் காப்பியக்கலித்துறை என்றும் வழங்கும். ஐஞ்சீரடி நான்காய் எழுத்தெண்ணித் தொடுக்கப்படும் கட்டளைக்கலித்துறை இதனின் வேறுபட்டது. இதனுடைய இலக்கணத்தைக் காரிகை 1, உரையிற் காண்க.


(பி - ம்.) 4. னுறாதாய்க், னெழாலாய்க். 5. நீள்வரை.



PAGE__127

        தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேற்
    கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே.'
        'வென்றான் வினையின் ....நீங்கி நின்றார்.'
(கா. 13, மேற்.)

இவை நெடிலடி நான்காய் வந்தமையாற் கலித்துறை.

        'நெடிலடி நான்காய் நிகழ்வதுகலித்துறை'

என்பது யாப்பருங்கலம் (சூ. 88.)

        'ஐஞ்சீ ரடியி னடித்தொகை நான்மையோ
    டெஞ்சா தியன்றன வெல்லாங் கலித்துறை'

என்றார் காக்கை பாடினியார்.

'நேரடி ஈரிரண்டாய்விடின் அதுவாகும் விருத்தம்' எ - து. நாற்சீரடி நான்காய் வருமெனின் அது கலிவிருத்தம் எ - று.

        'அளவடி நான்கின கலிவிருத் தம்மே'

என்பது யாப்பருங்கலம் (சூ. 89.)

        நாலொரு சீரா னடந்த வடித்தொகை
    ஈரிரண் டாகி யியன்றன யாவையுங்
    காரிகை சார்ந்த கலிவிருத் தம்மே'

6 என்றார் காக்கை பாடினியார்.

வரலாறு

        'வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின்
    ஆய்தலி னொண்சுட ராழியி னான்றமர்
    வாய்தலி 7னின்றனர் வந்தென மன்னன்முன்
    நீதலை நின்றுரை நீள்கடை காப்போய்,
(சூளா, சீயவதைச். 87.)
        'தேம்பழுத் தினிய......தவள மாடமே.'
(கா. 13, மேற்,)

இவை நாற்சீர் நாலடியாய் வந்தமையாற் கலிவிருத்தம்.

'திருத்தகு மெல்லியலே' எ - து. மகடூஉ முன்னிலை.


(பி - ம்.) 6. என்றாரு முளரெனக் கொள்க. 7. னீடினர்.



PAGE__128

உதாரண முதனினைப்பு

        [கொய்நினை யாய்தினை மென்றினை வாள்வரி 8பூண்ட பறை
    எய்திய தாழிசை யானும்வென் 9றானுங் கலித்துறையே
    மைதிக ழோதி 10வடிவே னெடுங்கண் வனமுலையாய்
    மெய்திகழ் வேய்தலை தேம்பழுத் 11தென்ப விருத்தங்களே.

இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே கலித்தாழிசை கலித்துறை கலிவிருத்தங்கட்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.]


(பி - ம்.) 8. பூண்டகலிக் கெய்திய. 9. றான்றுறையேவிருத்தம். றானுந் துறைவிருத்தம். 10. வரிநெடுங் கண்ண வனமுலையாய், வரிநெடுங்கண்வன மென்முலையாய், 11. தாமென்று வேண்டுவரே.



வஞ்சிப்பாவும் இனமும்

        34. குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித்
    துறையொரு வாது தனிவரு மாய்விடிற் சிந்தடிநான்
    கறைதரு காலை யமுதே விருத்தந் தனிச்சொல்வந்து
    மறைதலில் வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே.

இ - கை. வஞ்சித்தாழிசையும் வஞ்சித்துறையும் வஞ்சி விருத்தம் வஞ்சிப்பாவுக்கு ஈறு ஆமாறும் உணர்த்....று.

'குறளடி நான்கின மூன்று ஒரு தாழிசை' எ - து. இரு சீரடி நான்காய் மூன்று செய்யுள் ஒரு பொருண் மேல் அடுக்கி வருமெனின் அது வஞ்சித் தாழிசை எனப்படும். எ - று.

'கோதில்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் அவை ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி வரினே தாழிசை யாவதெனக் கொள்க.

        'குறளடி நான்கவை கூடின வாகி
    முறைமையி னவ்வகை மூன்றிணைந் தொன்றாய்
    வருவன வஞ்சித் தாழிசை யாகும்'

என்றார் காக்கை பாடினியார்.

வரலாறு

        'மடப்பிடியை மதவேழம்
    தடக்கையான் வெயின்மறைக்கும்.


PAGE__129

        இடைச்சுர மிறந்தார்க்கே
    நடக்குமென் மனனேகாண்.
        'பேடையை யிரும்போத்துத்
    1தோகையால் வெயின்மறைக்கும்
    காடக மிறந்தார்க்கே
    ஓடுமென் மனனேகாண்.
        'இரும்பிடியை யிகழ்வேழம்
    பெருங்கையான் வெயின்மறைக்கும்
    அருஞ்சுர மிறந்தார்க்கே
    விரும்புமென் மனனேகாண்.'

இவை இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்றக்கி வந்தமையால் வஞ்சித் தாழிசை.

'கோதில் வஞ்சித் துறை ஒருவாது தனிவருமாய்விடின்' எ - து. இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் ஒன்றே வரின் அது வஞ்சித்துறை எனப்படும் எ - று.

வரலாறு

        'மைசிறந்தன மணிவரை
    கைசிறந்தன காந்தளும்
    பொய்சிறந்தனர் கரதலர்
    மெய்சிறந்திலர் விளங்கிழாய்.'
        'திரைத்த சாலிகை......................மாலையாய்.'
(கா. 13, மேற்.)

இவை இருசீரடி நான்கினால் ஒரு பொருண்மேல் தனியே வந்தமையால் வஞ்சித்துறை எனக் கொள்க.

        'குறளடி நான்மையிற் கோவை மூன்றாய்
    வருவன வஞ்சித் தாழிசை தனிவரிற்
    றுறையென மொழிப துணிந்திசி னோரே'

என்பது யாப்பருங்கலம் (சூ. 91,)

        ['ஒன்றின் னான்மையு முடைத்தாக் குறளடி
    வந்தன வஞ்சித்துறை யெனலாகும்.']

என்றாரும் உளரெனக் கொள்க.


(பி - ம்.) 1. கோடையால்.



PAGE__130

'சிந்தடி நான்கு அறைதரு காலை விருத்தம்' எ - து. முச்சீரடி நான்காய் வருவது வஞ்சிவிருத்தம் எனப்படும் எ - று.

        'சிந்தடி நான்காய் 2வருவது வஞ்சிய
    தெஞ்சா விருத்த மென்மனார் புலவர்'

என்பது யாப்பருங்கலம் (சூ. 92.)

வரலாறு

        'சோலை யார்ந்த சுரத்திடைக்
    காலை 3யார்கழ லார்ப்பவும்
    மாலை மார்பன் வருமாயின்
    நீல வுண்க ணிவள்4வாழும்.'
        ['இருது வேற்றுமை .......கையினாய்.']
(கா. 13, மேற்.)

இவை சிந்தடி நான்காய் வந்தமையான் வஞ்சிவிருத்தம்.

'தனிச்சொல் வந்து மறைதலில் வாரத்தினால் இறும் வஞ்சி' எ - து குறளடி வஞ்சிப்பாவும் சிந்தடி வஞ்சிப்பாவும் தனிச் சொற் பெற்று, ஆசிரியச் சுரிதகத்தால் இறும் எ - று.

'மறைதலில் வாரம்' என்று சிறப்பித்தவதனால் வஞ்சிப்பா ஆசிரியச் சுரிதகத்தால் இறுவது அல்லது வெள்ளைச் சுரிதகத்தால் இறப்பெறாதெனக் கொள்க.

        'தூங்க லிசையன வஞ்சி மற்றவை
    ஆய்ந்த தனிச்சொலோ டகவலி னிறுமெ'

என்பது யாப்பருங்கலம் (சூ. 90.)

வரலாறு

        'பூந்தாமரை...........பெருவண்மையனே'
(கா. 9. மேற்.)

என்னும் குறளடி வஞ்சிப்பா நாளுமென்னும் தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இற்றதெனக் கொள்க.

        '(1) கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன
    வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன

(1) கொடி வாலன - நீண்ட வால்களை யுடையன. குருநிறத்தன - மிக்கதிறத்தன. உளையன - பிடரிமயிரை யுடையன. பணை எருத்தின் - பருத்த


(பி - ம்.) 2. வருவன வஞ்சி எஞ்சா. 3. யார்ந்த கழலார்ப்ப. 4. வாழுமே.



PAGE__131

        பணையெருத்தி னிணையரிமா னணையேந்தத்
    துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
    எயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும்
    பயில்படுவினைப் பத்திமையாற் செப்பினோன்
    புனையெனத்
    திருவுறு திருந்தடி திசைதொழ
    விரிவுறு நாற்கதி வீடுநனி யெளிதே.'

இச்சிந்தடி வஞ்சிப்பா, புணையென' என்னும் தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இற்றதெனக் கொள்க.

        ['தொன்னலத்தின்.............சேணிவந்தற்றே'
(கா. 23. மேற்.)

என்னும் சிந்தடி வஞ்சிப்பா' எனப் பெரிதும்' என்னும் தனிச் சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தா லிற்றது.]

'அமுதே,' 'வஞ்சிக்கொடியே' என்பன மகடூஉ முன்னிலை,

        [' (2) மடப்பிடி பேடை யிரும்பிடி தாழிசை வாய்ந்ததுறை
    5 வடுப்புரை 6கண்மட வாய்மை சிறந்த திரைத்தவுமாம்
    மடற்றிகழ் சோலை யிருதுவு மாகும் விருத்தம் வஞ்சிக்
    7 கொடித்திகழ் பூந்தா மரைகொடி வாலன தொன்னலமே.'

இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே வஞ்சிப்பாவுக்கும் இனங்கட்கும் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக்கொள்க.]

(14)

பிடரியை யுடைய. அரிமான் - சிங்கம். நாற்கதி : காரிகை 9. அடிக். 5.

(2) அச்சுப் பிரதிகளில் இந்த உதாரண முதனினைப்புப் பின்வருமாறு உள்ளது :

        'மடப்பிடி பேடை யிரும்பிடி வஞ்சியின் றாழிசையாம்
    வடுப்புரை கண்ணினல் லாய்மை சிறந்தன வான்றுறையாம்
    தடப்பெருஞ் சோலை விருத்தம தாகுந் தயங்குவஞ்சிக்
    கொடித்தொடி பூந்தா மரைகொடி வால னுதாரணமே.'

(பி - ம்.) 5. தொடைக்குரி மைசிறந் தாங்குந் திரைத்தவஞ் சித்துறையாம், சுடர்த்தொடி சோலை யிருது விருத்தம்பூந் தாமரையும், அடுத்த கொடிவா லனதொன்னலம்வஞ்சி யாகுமின்னே, 6. கண்ணாய் திரைத்தவென் றாகுமொண் மைசிறந்த 7. தடத்திய பூந்தா மரைகொடி வாலன தானறியே.



PAGE__132

மருட்பா

        35. பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறைவாழ்த்
    தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை யூனமில்லா
    வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால்
    வண்பான் மொழிமட வாய்மருட் பாவென்னும் வையகமே.

இ....கை. புறநிலை வாழ்த்து மருட்பாவும், கைக்கிளை மருட்பாவும், வாயுறை வாழ்த்து மருட்பாவும், செவியறிவுறூஉ மருட் பாவும் ஆமாறு உணர்த்....று.

இதன் பொழிப்பு : புறநிலை வாழ்த்தும், கைக்கிளையும், வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉம் என்னும் நான்கு பொருண்மேலும் வெண்பா முதலாக ஆசிரியம் ஈறாக வருமெனின் அதனை மருட்பா வென்று வழங்குவர் புலவர் எ -று.

'வண்பால் மொழி மடவாய்' எ - து. மகடூஉ முன்னிலை.

        வெள்ளை முதலா வாசிரிய மிறுதி
    கொள்ளத் தொடுப்பது மருட்பா வாகும்'
        [கலிநிலை வகையும் வஞ்சி யும்பெறா]

1என்றார் காக்கைபாடினியார்.

வரலாறு

(புறநிலை வாழ்த்து மருட்பா)

        (2) தென்ற லிடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை
    முன்றின் முகைவிரியு முத்தநீர்த் தண்கோளூர்க்
    குன்றமர்ந்த கொல்லேற்றா 2னிற்காப்ப வென்றுந்
    தீரா நண்பிற் றேவர்
    சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே:'

இது 'வழிபடு தெய்வம் நிற் புறங்காப்பப் பழிதீர் செல்வ


(1) இவ்வடி தொல். பொருள், சூ. 422 இன் ஈற்றடியாகவும் காணப்படுகிறது.

(2) கொல் லேற்றான் - சிவன். இப்பாட்டின் ஈற்றிலுள்ள இரண்டும் ஆசிரியவடிகள். தெய்வத்தைப் புறம் நிறுத்தி வாழ்த்தலின் இது புறநிலை வாழ்த்தாயிற்று.


(பி - ம்.) 1. என்றார் ஆகலின்.



PAGE__133

மொடு ஒருகாலக் கொருகால் சிறந் பொலிவாய்' என்றமயால் புறநில வாழ்த் மருட்பா. என்னை?

        'வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப்
    பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்
    பொலிமி னென்னும் புறநில வாழ்த்தே
    கலிநில வகயும் வஞ்சியும் பெறாஅ.'
(தொல். பொருள். சூ. 422.)

என்றார் ஆகலின்.

(கைக்கிளை மருட்பா)

        ' (3) திருநுதல் வேர்வரும்புந் தேங்கோத வாடும்
    இருநிலஞ் சேவடியுந் தோயும் அரிபரந்த
    போகித ழுண்கணு மிமக்கும்
    ஆகு மற்றிவ ளகலிடத் தணங்கே.'
(பு. வெ. 287.)

இது துணிதலை நுதலிய ஒருதலக் காமம் ஆதலாற் (4) கக்கிள மருட்பா.

        'காட்சி முதலாக் கலவியி னொருதலை
    வேட்கயிற் புலம்புதல் கக்கிள யதான்
    கேட்போ ரில்லாக் கிளவிகள் பெறுமே'

என்றார் ஆகலின்.

'பாங்குடக் கக்கிள' என்று சிறப்பித்தவதனால் கக்கிள எல்லாப் பாவானும் வரப்பெறும். மருட்பாவென்னும் யாப்புற வில்ல என்க.

(வாயுற வாழ்த் மருட்பா)

        ' (5) பலமுறயு மோம்பப் படுவன கேண்மின்
    சொலன்முறக்கட் டோன்றிச் சுடர்மணித்தே ரூர்ந்
    நிலமுறயி னாண்ட நிகரில்லார் மாட்டும்

(3) கோத - மலர்மால. போகிதழ் - நீண்ட இமகளயுடய. அகலிடத் அணங்கு - மானிட மகளாகிய தெய்வம். இறுதியிலுள்ள இரண்டும் ஆசிரியவடிகள்.

(4) கக்கிள : ஒத்த தலவனும் தலவியும் முதன் முதற் சந்திக்கும் போ தொடக்கத்தில் ஒருவரிடம் தோன்றும் காதல்; இதன ஒரு மருங்கு பற்றிய கேண்ம என்பர்.

(5) விலங்கி - மாறுபட்டு. ஈற்றிலுள்ள இரண்டும் ஆசிரியவடிகள்.



PAGE__134

        சிலமுறை யல்லது செல்வங்க ணில்லா
    இலங்கு மெறிபடையு மாற்றலு மன்பும்
    கலந்ததங் கல்வியுந் தோற்றமு மேனைப்
    பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும்
    விலங்கிவருங் கூற்றை விலக்கலு மாகா
    அனைத்தாத னீவிருங் காண்டிர் - நினைத்தக்க
    கூறிய வெம்மொழி 2பிறழாது
    தேறிநீ ரொழுகிற் சென்றுபயன் றருமே.

இது மெய்ப்பொருளே சொன்னமையால் வாயுறை வாழ்த்து மருட்பா. என்னை?

        '(6) வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
    வேம்புங் கடுவும் போல வெஞ்சொற்
    றாங்குத லின்றி வழிநனி பயக்குமென்
    றோம்படைக் கிளவியின் வாயுறுத் 2தன்றே'
(பொருள், சூ. 424.)

என்றார் தொல்காப்பியனார்.

        '(7) பல்யானை மன்னர் முருங்க வமருழந்து
    கொல்யானை தேரொடுங் கோட்டந்து நல்ல
    தலையாலங் கானம் பொலியத் தொலையாப்
    படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர்
    அடுகளம் வேட்டோன் மருக வடுதிறல்
    ஆளி நிமிர்தோட் பெருவழுதி யெஞ்ஞான்றும்
    ஈர முடையையா யென்வாய்ய்ச்சொற் கேட்டி
    உடைய வுழவரை நெஞ்சனுங்கக் கொண்டு

(6) வாயுறை வாழ்த்து - மருத்து போன்ற வாழ்த்து ; வாயுறை - மருந்து. கடு - கடுக்காய். ஓம்படைக் கிளவி - பாதுகாத்துச் சொல்லும் சொல். வேம்பும் கடுவும் போல முதற்கண் தோன்றினும் பின்னர் நல்லன வாகி உறுதிபயக்கும் சொல்லை வெஞ் சொல் என்றார்.

(7) கோட்டந்து - கொள்ளுதலைச் செய்து. மருக - வழித் தோன்றலே. அனுங்கல் - கெடுதல். மழவர் - வீரர். மன்றம் மறுக - நியாய மன்றத்துப் பெரியார் வகுந்த. அவையார் - நீதிமன்றத்தோர் குழிசி - மிடா; என்றது சோற்றுக்கு ஆதாரமாக உள்ளதை. ஒட்டார் - பகைவர். இனனாகி. இனத்தவனாகி,


(பி - ம்.) 2. பிழையாது. 3, தற்றே,



PAGE__135

        வருங்கா லுழவர்க்கு வேளாண்மை செய்யல்
    மழவ ரிழைக்கும் வரைக்கா 4ணிதியீட்டம்
    காட்டு மமைச்சரை யாற்றத் தெளியல்
    5அமைத்த வரும்பொரு ளாறன்றி வௌவல்
    இனத்தைப் பெரும்பொரு ளாசையாற் சென்று
    மன்ற மறுக வகழாதி யென்று
    மறப்புற மாக மதுரையா ரோம்பும்
    அறப்புற மாசைப் படேற்க வறத்தால்
    அவையார் கொடுநாத் திருத்தி நவையாக
    நட்டார் குழிசி சிதையாதி யொட்டர்
    செவிபுதைக்குந் தீய கடுஞ்சொற் கவியுடைத்தாய்க்
    கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகிச்
    செற்றார்ச் செறுத்துநிற் சேர்ந்தாரை யாக்குதிநீ
    அற்ற மறிந்த வறிவினாய் - மற்றும்
    இவையிவை வீயா தொழுகி னிலையாப்
    பொருகட லாடை நிலமகள்
    ஒருகுடை நீழற் றுஞ்சுவண் மன்னே.'

இது வியப்பின்றி உயர்ந்தோர்கண் 6அவிந்தொழுகல் கடனென்று அரசர்க்கு உரைத்தமையாற் செவியறிவுறூஉ மருட்பா. என்னை?

        '(8) செவியுறைதானே,
    பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண்
    அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே'
(பொருள். சூ. 426.)

என்றார் தொல்காப்பியனார்.

'என்று இப்பொருண் மிசை' என்று மிகுத்துச் சொல்லியவதனால், இந் நான்கு பொருண்மேலு மன்றி மருட்பா வரப்பெறா வெனக் கொள்க. என்னை?

        'புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத்
    திறநிலை மூன்றுந் திண்ணிதிற் றெரியின்

(8) செவியுறை - செவிமருந்து. பொங்குதல் - பெருக்கம். அவிதல் - அடங்கி வாழ்தல். அடங்கி வாழ்வாருக்குப் புகழாதலான் இது வாழ்த்தின்பாற்பட்டது.


(பி - ம்.) 4. னிதியீட்டம். 5. படைத்த. 6. வியந்தொழுகல்.



PAGE__136

        வெண்பா வியலினு மாசிரிய வியலினும்
    பண்புற முடியும் 8பாவின வென்ப'
(பொருள். சூ. 473.)

என்றார் தொல்காப்பியனார்.

'பண்பார் புறநிலை' என்றும், 'ஒண்பாச் செவியறிவு' என்றும் சிறப்பித்தவதனால், புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉம் இவ்வாறன்றி வெண்பாவேயாயும் ஆசிரியமேயாயும் வரப்பெறும்; கலியும் வஞ்சியுமாய் வரப்பெறாவெனக் கொள்க.

'ஊனமில்லா வெண்பா' என்று சிறப்பித்தவதனால் வேற்று வண்ணம் விரவாது வெள்ளை வண்ணம் எல்லா வண்ணத்துள்ளுஞ் சிறப்புடைத்தாய் மங்கலமரபிற்றாய் அவ்வாறே வேற்றுத் தளையும் அடியும் விரவாமையின் எல்லாப் பாவினுள்ளும் வெண்பாச் சிறப் புடைத்தென்று முன்வைக்கப்பட்டது என்று கொள்க.

        'வேதவாய் மெய்ம்மகனும் வேந்தன் மடமகளும்
    நீதியாற் சேர்ந்து நிகழ்ந்த நெடுங்குலம்போல்
    (9) ஆதிசால் பாவு மரசர் வியன்பாவும்
    ஓதியவா றோத மருட்பாவென் றோங்கிற்றே.'
        'பண்ணுந் திறமும்போற் பாவு மினமுமாய்
    வண்ண விகற்ப வகைமையாற் - பண்மேற்
    றிறம்விளரிக் கில்லதுபோற் செப்ப லகவல்
    இசைமருட்கு மில்லை யினம்.'
        [' தென்ற லிடையுந் திருநுதல் வேர்வும் பலமுறையென்
    றொன்றிய பாவும்பல் யானையு மென்பவொண் போதமர்ந்த
    பொன்றிக ழோதி புறநிலை கைக்கிளை வாயுறைவாழ்த்
    தென்றிவற் றிற்குஞ் செவியறி விற்கு மிலக்கியமே.'

இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே மருட்பா நான்கிற்குங் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.

3. செய்யுளியலோத்து முற்றும்.


(9) ஆதிசால்பா - அந்தண சாதிப்பா ; என்றது வெண்பாவை. அரசர் வியன்பா - ஆசிரியப்பா.


(பி - ம்.) 8. பாங்கினவாகும்.



PAGE__137

செய்யுளியல் முதனினைப்புக் காரிகை (1)

        வெண்பா வளம்பட வீரடி யொன்றுட னேரிசையே
    கண்பானல் போன்மயி லந்தமின் மூன்றுங் கடைதருக்கி
    நண்பார் தரவொன் றசைதர வேயடி யோடுகுறள்
    பண்பார் புறநிலை செய்யு 1ளியலென்ப பாவலரே.

1.செய்யுளியல் முதனினைப்புக் காரிகை பிரதிதோறும் கீழ் வருமாறு வேறுபட்டுள்ளது :

கலித்துறை

        வெண்பா வளம்பட வீரடி யொன்றுட னேரிசைமேல்
    2நண்பாகு மந்தமின் மூன்றடி நண்ணுங் கடையயலும்
    தண்பா றருக்கிய 3லேதர வொன்றசை யேதரவே
    திண்பா வடிகுறள் பண்பார்மூ வைந்து செயுளியலே.

அடிவரவாசிரியம்

        வெண்பா வகவல் வளம்பட வீரடி
    ஒன்றும் பலவும் நேரிசை யந்தமில்
    மூன்றடி யானுங் கடையயற் பாதத்
    தருக்கிய றாழிசை தரவொன்று தாழிசை
    அசையடி முன்னர் தரவே
    அடிவரை குறளடி பண்பார் புறநிலையே.
        வெண்பா வளம்பட வீரடி யுருவுகண்
    டொன்றும் வைக னேரிசை நற்கொற்ற
    மாவா ழந்தமின் மூன்றடி கொண்டல்
    கடையய னேரிசை தருக்கிய கன்று
    தரவொன் றசையடி வளங்கெழு தரவே
    குடநிலை யடிவரை கொய்தினை குறளடி
    மடப்பிடி பண்பார் தென்றன்மூ வொன்பான்
    செய்யு ளியலெனச் செப்பிடு மோத்தே.

----


(பி - ம்.) 1. ளென்றோதுவர் பத்தைத்துமே. 2. எண்பாவ. 3. றாவொன்றசையடி.



PAGE__138

3. ஒழிபியல்

எழுத்துக்களின் புறனடை

        36. சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இ உ அளபோ
    டாரு மறிவ ரலகு பெறாமையை காரநைவேல்
    ஒருங் குறிலிய லொற்றள பாய்விடி னோரலகாம்
    வாரும் வடமுந் திகழு முகிண்முலை வாணுதலே.

எ....கை. இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் உறுப்பிய லோத்தி னுள்ளும் செய்யுளிய லோத்தினுள்ளும் சொல்லா தொழிந்த 1பொருளின் இயல்புகளை உணர்த்திற்றாதலால் ஒழிபிய லோத்து என்னும் பெயர்த்து.

இவ்வோத்தினுள் இத்தலைக் காரிகை என்னுதலிற்றோ எனின், ஒருசார் எழுத்துக்கட்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்....ற்று.

'சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இ, உ, அளபோடு ஆரும் அறிவர் அலகு பெறாமை' - என்பது சீருந் தளையுங் கெடவந்த விடத்துக் குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் உயிரளபெடையும் அலகு காரியம் பெறா எ - று.

'ஒற்றளபாய்விடின் ஓர் அலகாம்' என்றுரைத்தமையால், ஈண்டு உயிரளபெடையே கொள்ளப்பட்டது.

'சீரும் தளையும் சிதையிற் சிறிய இ உ அளபோடு அலகு பெறா' என்னாது 'ஆரு மறிவர்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் குற்றிய லிகரக் குற்றிய லுகரங்கள் ஒற்றியல்பினவாய் நிற்கும், உயிரள பெடை நெட்டெழுத்தியல்பிற்றாய் நிற்கும், அலகிடு மிடத்து எனக் கொள்க.

'எதிரது மறுத்தல்' என்னும் இலக்கணத்தாற் சீருந் தளையுந் 2திருந்த நிற்புழி சிறிய இ உ அளபோடு ஆரும் அறிவர் அலகு பெறுதல் என்பதாயிற்று. சீருந் தளையுங் கெடாமல் வந்த இடத்துக் குற்றியலிகரக் குற்றியலுகரம் உயிரளபெடைகள் அலகு காரியம் பெறும் எ - று.


(பி - ம்.) 1. பொருளை யுணர்த்தினமையின். 2. திருந்தி.



PAGE__139

இன்னும் 'ஆரும் அறிவர்' என்று சிறப்பித்தவதனால் அவை அலகு காரியம் பெறும் பொழுது குற்றியலிகரக் குற்றிய லுகரமும் குற்றெழுத்தின் பயத்தவாய் நின்று அலகு பெறும் எனக் கொள்க.

உயிரபெடைகள் அலகு காரியம் பெறுமாறு தத்தங் காரிகையுட் போக்கிச் சொல்லுதும்.

வரலாறு

வெண்பா

        ' (1) சிறுநன்றி யின்றிவர்க்கியாஞ் செய்தக்கா னாளைப்
    பெறுநன்றி மன்னும் பெரிதென் - றுறுநன்றி
    தானவாய்ச் செய்வதூஉந் தானமன் றென்பவே
    வானவா முள்ளத் தவர்.'

இதனுள், 'இன்றிவர்க்கியாம்' என்புழிக் குற்றிய லிகரம் வந்து [வெண்பாவினுள்] வஞ்சி யுரிச்சீராயிற்று. வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் விரவும் என்னும் ஓத்திலாமையால் வெண்பா அழிய நிற்கு மாதலின் ஈண்டுக் குற்றியலிகரத்தை இவ்விலக்கணத்தால் அலகு பெறா தென்று களையச் சீர் சிதையாதாம்.

குறள் வெண்பா

        'குழலினி தியாழினி தென்ப தம்மக்கள்
    மழலைச்சொற் கேளா தவர்.'
(குறள். 66.)
        'அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
    பொருளல்ல தவ்வூன் றினல்.'
(குறள். 254.)

இவற்றுட், 'குழலினி தியாழினி' தென்புழி ஆசிரியத்தளையும், 'அருளல்ல தியாதெனி' லென்புழிக் கலித்தளையும் வந்து 'வெள்ளைத் தன்மை குன்றிப் போஞ்சீர் கனி புகிற் புல்லாதயற்றளை' (கா. 38) என்னும் 3இலக்கணத்தோடு மாறுகொள்ளும் ஆதலான்


(1) பெரிது மன்னும் என்று. அவாய் - விரும்பி. வான் அவாம் உள்ளத்தவர் - விண்ணுலகை விரும்பும் மனத்தவர்.


(பி - ம்.) 3. இலக்கணத்தோடும், வெள்ளையுட் பிறதளை விரவா வல்லன, எல்லாத் தளையு மயங்கியும் வழங்கும்' (யா. வி. சூ. 32.) என்னும் இலக்கணத்தோடும்.



PAGE__140

ஈண்டுக் குற்றிய லிகரத்தை இவ்விலக்கணத்தான் அலகு பெறா தென்று களையச் சீருந் தளையுஞ் சிதையாவாம்.

இனி, உயிரளபெடைக்குச் சொல்லுமாறு :

வஞ்சிப்பா

        (2) கொன்றுகோடுநீடு 4குருதிபாயவும்
    5சென்றுகோடுநீடு செழுமலைபொருவன
    வென்றுகோடுநீடு விறல்வேழம்
    என்றுமூடுநீடு பிடியுளபோலும்
    அதனால்
    இண்டிடை யிரவிவ ணெறிவரின்
    வண்டுண் கோதை யுயிர்வா ழலளே.'

இக்குறளடி வஞ்சிப்பாவினுட் குற்றிய லுகரம் பல வந்து ஐயசைச் சீரும். ஆறசைச் சீரும் வந்தன; அவ்வாறு வருக என்னும் ஓத்தில்லாமையால் ஆண்டுக் குற்றுகரங்களை இவ்விலக்கணத்தால் அலகு பெறா என்று களையச் சீருந் தளையுஞ் சிதையாவாம்.

இனி, உயிரளபெடைக்குச் சொல்லுமாறு :

வெண்பா

        ' (3) பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
    சொல்லுக்குத் தோற்றின்னுந் 6தோன்றிலவால் - நெல்லுக்கு
    நூறோஒநூ றென்பா ணுடங்கிடைக்கு மென்முலைக்கும்
    மாறோமா லன்றளந்த மண்.'

இதனுள், 'நூறோஒ நூ' றென்புழிப் பண்ட மாற்றின்கண் அளபெடை (4) அநுகரணம் வந்து வெண்பாவினுள் நாலசைச் சீராயிற்று. அவ்வாறு வருக என்னும் ஓத்தில்லாமையால் இவ்


(2) கோடு - யானையின் தந்தம், மலையின் சிகரம், சங்கு, யானையின் மத்தகத்திற் சங்கம்; சீவக 2306 ஊடும் பிடி. இண்டு - ஒரு முட்செடி.

(3) முல்லை பல்லுக்குத் தோற்ற. இடையும் முலையும் மால் அளந்த உலகினும் பெருமையுடையன.

(4) அநுகரணம் - ஒலிக்குறிப்புக்கேற்ற எழுத்தில் ஒன்றும் பலவும் வந்து செய்யுளடியைப் பிழைபடா வண்ணம் நிரப்புவது.


(பி - ம்) 4. குருதி மாறவும், 5. சென்றுசென்றுநீடு. 6. தூற்றினவால்.



PAGE__141

வாறு அலகிட்டு உதாரண வாய்பாட்டால் ஓசை யூட்டும்பொழுது ஓசை யுண்ணாது செப்பலோசை அழிந்து நிற்குமாதலால் ஈண்டு உயிரளபெடையை இவ்விலக்கணத்தான் அலகு பெறாதென்று [களைந்து] நெட்டெழுத்தே போலக் கொண்டு அலகிடச் சீரும் தளையும் சிதையாவாம்.

வெண்பா

        ' (5) இடைநுடங்க வீர்ங்கோதை பின்றாழ வாட்கண்
    புடைபெயரப் போழ்வாய் திறந்து - கடைகடையின்
    உப்போஒ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவற்
    கொப்போநீர் வேலி யுலகு.'

இதனுள் 'உப்போஒ' என்புழிப் பண்டமாற்றிக்கண் அளபெடை யனுகரணம் வந்து கலித்தளை (6) தட்டு, 7அவ்வாறு வரும் இலக்கணம் இன்மையான் அலகிட்டு உதாரண வாய்பாட்டால் ஓசை யூட்டினும் ஓசை யுண்ணாது செப்பலோசை யழிந்து வருமாதலான், ஈண்டு உயிரளபெடையை [இவ்விலக்கணத்தால்] நெட்டெழுத்தே போலக் கொண்டு அலகிடத் தளை சிதையாதாம்.

இனிக் குற்றிய லிகரக் குற்றியலுகரங்கள் குற்றெழுத்தே போல நின்று அலகு பெறுமாறு.

வெண்பா

        ' (7) வந்துநீ பேரி னுயிர்வாழும் வாராக்கான்
    முந்தியாய் பெய்த வளைகழலும் - முந்தியாம்
    கோளானே கண்டநங் கோல்குறியா யின்னுமோர்
    நாளானே நாம்புணரு மாறு'

இதனுள் 'வந்துநீ' என்புழிக் குற்றியலுகரமும் 'முந்தியாய்' என்புழிக் குற்றியலிகரமும் சீர்தளை சிதையாமல் வந்து திருந்தி நிற்றலிற் குற்றெழுத்தின் பயத்தவாய் அலகுபெற்றவாறு கண்டு கொள்க.


(5) கடைகடையின் - முன்றில் தோறும்.

(6) தட்டு - ஒன்றி.

(7) யாய் - தாய். கோள் - கொள்கை. கோல் குறியாய் - கோல் அடையாளமாக.


(பி - ம்.) 7. வெண்பா வழிய நிற்கு மாதலின் ஈண்டு.



PAGE__142

[' இஉ இரண்டின் குறுக்கத் தளைதப
        நிற்புழி யொற்றாம் நிலைமைய வாகும்'
        'உயிரள பேழு முரைத்த முறையான்
        வருமெனி னவ்வியல் வைக்கப் படுமே'

என்றார் காக்கைபாடினியார்.]

'தளைசீர் வண்ணந் தாங்கெட வரினே
            குறுகிய விகரமுங் குற்றிய லுகரமும்
            அளபெடை யாவியு மலகியல் பிலவே

என்பது யாப்பருங்கலம் (சூ. 4.)

'ஐகாரம் நைவேல் ஓருங் குறிலியல்' எ - து. ஒன்றரை மாத்திரை என்று ஓதப்பட்ட, ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்தே போலக் கொண்டு அலகிடப்பெறும் எ-று.

'ஓரும்' என்பது இடைச்சொல்.

        'குறுமை யெழுத்தி னியல்பே யைகாரம்
    நெடுமையி னீங்கியக் கால்'

எனவும்,

        'ஈறு மிடையு மிணைந்து மிணையசை
    யாகுமை யென்ப வறிந்திசி னோரே'
(யா - வி. 9)

எனவுஞ் சொன்னார் ஆகலின்.

        8 'அன்னையை நோவ தவமா லணியிழாய்
    9 புன்னையை நோவன் புலந்து.'
        ' (8) நடைக்குதிரை யேறி நறுந்தார் வழுதி
    அடைப்பையாய் கோறா வெனலும் - அடைப்பையான்,
    சுள்ளற் சிறுகோல் கொடுத்தான் 10 றனைப்பெறினும்
    கொள்ளாதி யாங்காண் டலை.'
    'கெண்டையை வென்ற கிளரொளி யுண்கணாள்
    பண்டைய ளல்லள் படி.'

இவற்றுள் ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்தே போலக் குறிலோடும் நெடிலோடும் கூடி நின்று நிரையசை யாயின.


(8) அடைப்பையான் - வெற்றிலை பாக்குப் பெட்டியைத் தூக்கு பவன். கோல் தா எனலும். சுள்ளற் சிறு கோல் - சுள்ளென்று அடிப்பதற்கு ஏற்ற வளைந்த கோல். அதன்வேகம் நாம் காண்டலைக் கொள்ளாது.


(பி - ம்.) 8. அன்னையையா னோவ தெவன்மா. 9. புன்னையை யானோ' 10. றலைப்பெறினும், எள்ளாதியாங்கண்டிலம்.



PAGE__143

'ஒற்றளபாய்விடின் ஓர் அலகாம்' எ - து. ஒற்றுக்கள் அள பெழுந்தால் நேரசையாம் எ-று.

        'ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி
    வேறல கெய்தும் விதியின வாகும்'

என்றார் காக்கை பாடினியார்.

        ஒற்றுக்கள் அளபெழாவழி அலகுகாரியம் பெறா என்பதாம்.
    'தனிநிலை யொற்றிவை தாமல கிலவே
    யளபெடை யல்லாக் காலை யான'
(யா. வி. சூ. 3)

என்றார் ஆகலின்.

        'கார்க்கட னீர்த்திரையாய்க் கன்னற்கே கார்வடிவப்
    போர்க்களிறு வாளிதொட்ட போது.'

இதனுள் ஈரொற்று உடனிலையாய் நிற்பினுங் குற்றெழுத்தின் பயத்தவாய் அலகு பெறாவெனக் கொள்க. என்னை?

        'ஈரொற் றாயினு மூவொற் றாயினும்
    ஓரொற் றியல வென்மனார் புலவர்'

என்றார் ஆகலின்.

        (9) ['கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்.
(மலைபடு. 352.)
        'கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு
    பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ
    மின்ன் னுழைமருங்குன் மேதகு சாயலாள்
    என்ன் பிறமகளா மாறு.
        '(10) எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்
    வெஃஃ குவார்க்கில்லை வீடு.'

இவற்றுள் ஒற்றும் ஆய்தமும் அளபெழுந்து ஓரலகு பெற்றவாறு கண்டு கொள்க.

        [ 'இருவகை மருங்கினு மெய்யள பெழினே
    நிரைநேர் நேர்நே ராகுத லன்றி
    நிரைநிரை நேர்நிரை யாகுத லிலவே']

'வாரும் வடமுந் திகழு முகிண் முலை வாணுதலே' எ - து. மகடூஉ முன்னிலை.

(1)

(9) கண் தண் எனக் கண்டும்.

(10) எஃகு - வேல்; ஆயுதப் பொது. வெஃகுதல் - ஆசைப் படுதல்.



PAGE__144

அசையின் புறனடை

        37. விட்டிசைத் தல்லான் முதற்சுட் டனிக்குறி னேரசையென்
    றொட்டப் படாததற் குண்ணா னுதாரண மோசைகுன்றா
    நெட்டள பாய்விடி னேர்நேர் நிரையொடு நேரசையாம்
    இட்டத்தி னாற்குறில் சேரி னிலக்கிய மேர்சிதைவே.

இ - கை. ஒருசார் அசைகட்கு எய்தியதோர் இலக்கண முணர்த்....று.

'விட்டிசைத் தல்லான் முதற்கண் தனிக்குறில் நேரசை என்று ஒட்டப்படாது' எ - து. மேல் பொது வகையாய், தனிக் குறில் நேரசை என்றார் (கா. 1) ஆயினும், (1) விட்டிசைத்து நின்றபொழுதல்லது மொழிக்கு முதற்கண் நின்ற தனிக் குற்றெழுத்து நேரசை யாகாது. எனவே, விட்டிசையாத வழி மொழிமுதற்கண் தனிக்குறில், குறிலோடும் நெடிலோடும் கூடி நிரையசையாம் என்பதாயிற்று.

'அதற்கு உண்ணான் உதாரணம்' எ - து:

வெண்பா

        ' (2) உண்ணா னொளிநிறா னோங்கு புகழ்செய்யான்
    துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
    வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ
    இழந்தானென் றெண்ணப் படும்.'
(நாலடி. 9.)

இதனுள் அஆ என்புழி அருளின்கட் குறிப்பாய், விட்டி சைத்துக் குற்றெழுத்து மொழிக்கு முதற்கண் நேரசையாயினவாறும், அல்லாத வழி பிறவற்றின் குறிலோடும் நெடிலோடும் கூடி நிரையசை ஆயினவாறும் கண்டுகொள்க.

வெண்பா

        ' (3) வெறிகமழ் தண்புறவின் வீங்கி யுகளும்
    மறிமுலை யுண்ணாமை வேண்டிற் - பறிமுன்கை

(1) விட்டிசைத்தல் - வருமொழியோடு தொடர்தலின்றி வேறுபட்டு ஒலித்தல்

(2) ஒளி என்பது தான் உளனாய காலத்து விளங்குதல்; புகழ் என்பது தான் இறந்த பின்பும் உளதாம் பெயர். கொன்னே - பயனின் றியே, கொன்னே பொருள் காத்திருப்பானேல்' என்று கூட்டுக.

(3) புறவின் - முல்லை நிலத்தில். மறி - ஆட்டுக் குட்டி பறி - பனை



PAGE__145

        அஉ மறியா வறிவி லிடைமகனே
    நொஅலைய னின்னாட்டை நீ.'

இது தற்சுட்டின் கண்ணும் ஏவற் கண்ணும் வந்தது. 'அ உம் அறியா' என்பது அகரம், தன்னையே சுட்டினமையின்' தற்சுட்டு; 'நொ' என்பது 'இன்னதொன்றைச் செய்' என்றமையின் ஏவல்.

        'அ அவனும் இ இவனும் உ உவனுங் கூடியக்கால்
    எ எவனை 1வெல்லா ரிகல்?'

இது சுட்டின் கண்ணும் வினாவின் கண்ணும் வந்தது; இவற்றுள் 'அ அவனும், இ இவனும், உ உவனும்' என்பன சுட்டு; 'எ எவனை' என்பது வினா எனக் கொள்க.

4) இவ்வைந்தும் மொழி முதற்கண் விட்டிசைத்து வந்தன.

'விட்டிசைத்தல்லால் முதற்கண் தனிக்குறில் நேரசை யாகாது' என்னாது, 'ஒட்டப்படாது' என்று சிறப்பித்தவதனால் மொழிக்கு மூன்றிடத்தும் விட்டிசைத்து வந்து குற்றெழுத்து நேரசையாம் என்பதூஉம், விட்டிசைத்து நிற்பதுதான் குறிப்பின் கண்ணும், ஏவற் கண்ணும், தற்சுட்டின் கண்ணும், வினாவின் கண்ணும், சுட்டின் கண்ணும் என்பதூம், விட்டிசைத்து வந்த குற்றெழுத்து மற்றோர் எழுத்தினோடு கூடி நிரையசை ஆகாது என்பதூஉம் கொள்க.

        'அஇ உஎ ஒ இவை குறிய மற்றைய
    ஏழ்நெட் டெழுத்தா நேரப் படுமே'

என, தற்சுட்டின்கண் குற்றெழுத்து மொழிக்க மூன்றிடத்தும் விட்டிசைத்து நேரசை யாயிற்று. ஏவல் முதலியவற்றின்கண் நின்ற குற்றெழுத்து மொழிக்கு மூன்றிடத்தும் விட்டிசைத்து நேரசையாயினவாறு வந்தவழிக் கண்டு கொள்க.


யோலைப்பாய் ; 'பறிப்புறத் திட்ட பானொடையிடையன்' (நற், 142.) அஉம் - அ என்ற எழுத்தையும். நொ அலையல் - துன்பப் படுத்தாதே.

(4) ஐந்தும் என்றது, குறிப்பு, தற்சுட்டு. ஏவல், சுட்டு, வினா என்ற ஐந்தனிடத்தும் விட்டிசைத்து வந்த குற்றெழுத்தினை.


(பி - ம்) 1. வெல்வா ரிகல்.



PAGE__146

        'ஏவல் குறிப்பே தற்சுட் டல்வழி
    யாவையுந் தனிக்குறின் முதலசை யாகா
    சுட்டினும் வினாவினு முயிர்வரு காலை
    ஒட்டி வரூஉ மொருசாரு முளவே'

என்றார் மயேச்சுரர்.

'ஓசை குன்றா நெட்டளபாய்விடின் நேர் நேர்' எ - து. நெட்டெழுத்து அளபெடுத்து வருமெனின் அஃது இரண்டு நேரசையாக வைக்கப்படும் எ - று.

'ஓசை குன்றா' என்று மிகுத்துச் சொல்லியவதனால் மூன்று மாத்திரையின் மிக உச்சரிப்பினும் நேர் நேராக வைக்கப்படும் எ - று.

'நிரையொடு நேரசையாம் இட்டத்தினால் குறில் சேரின்' எ - து. குற்றெழுத்தினோடு புணர்ந்த நெட்டெழுத் அளபெடுத்து வந்தால் அவை. [இரண்டினையும் கூட்டி] நிரையசையும், நேரசையுமாக வைக்கப்படும் எ - று.

'இலக்கியம் ஏர் சிதைவே' எ - து.

குறள் வெண்பா

        ' (5) ஏஎர் சிதைய வழாஅ லெலாஅநின்
    சேயரி சிந்திய கண்'

என்னும் இப்பாட்டு நேர் நேர் ஆதற்கும், நிரை நேர் ஆதற்கும். இலக்கியம் எனக் கொள்க. இதனுள் 'ஏஎர்' என்பது நேர் நேராயிற்று; அழாஅல்' என்பதும், 'எலாஅ' என்பதும் நிரை நேராயின.

'இட்டத்தினால்' என்று சிறப்பித்தவதனால் பின்பு நின்ற குற்றெழுத்தினோடும் நெட்டெழுத்தினோடும் கூடி அளபெடை நிரையசை ஆகாதெனக் கொள்க.

        'தனிநிலை யளபெடை நேர்நே ரியற்றே
    இறுதிநிலை யளபெடை நிரைநே ரியற்றே'

என்றார் பிறருமெனக் கொள்க.

(2)

(5) ஏஎர் - அழகு. அழாஅல் - அழாதே. எலாஅ - தோழியே.



PAGE__147

சீர்க்கும் தளைக்கும் புறனடை

        38. மாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந்
    தாஞ்சீ ரடையா வகவ லகத்துமல் லாதவெல்லாந்
    தாஞ்சீர் மயக்குந் தளையுமஃ தேவெள்ளைத் தன்மைகுன்றிப்
    போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை பூங்கொடியே.

இ - கை. சீருந் தளையுஞ் செய்யுளகத்து நிற்பதோர் முறைமை யுணர்த்....று.

'மாஞ்சீர் கலியுட் புகா' எ - து - தேமா புளிமா என்னும் இரண்டு நேரீற்று இயற்சீரும் கலிப்பாவினுட் புகப்பெறா எ - று.

'கலிப்பாவின் விளங்கனி வந்து ஆம் சீர் அடையா' எ - து. கருவிளங்கனி கூவிளங்கனி என்னும் நிரை நடுவாகிய வஞ்சியுரிச் சீர் இரண்டும் கலிப்பாவினுட் புகப்பெறா எ - று.

'அகவலகத்தும்' எ - து. ஆசிரியப்பாவினுள்ளும் கருவிளங்கனி விளங்கனியென்னும் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் இரண்டும் புகப் பெறா எ - று.

'அல்லாத எல்லாம் தாம் சீர் மயங்கும்' எ - து. ஒழிந்த சீர் எல்லாப் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் புக்கு மயங்கப்படும் எ - று.

'தளையும் அஃதே' எ - து. நான்கு பாவிற் றளையும் எல்லாப் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் வந்து மயங்கப்படும் எ - று.

'வெள்ளைத் தன்மை குன்றிப் போம் சீர் கனி புகில்' எ - து. எல்லாச் சீரும் எல்லாப் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் புக்கு மயங்கப்பெறும் என்றார் ஆயினும், தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி என்னும் வஞ்சியுரிச்சீர் நான்கும் வெண்பாவினுட் புகப்பெறா, புகில் வெள்ளோசை யழிந்து வேறுபட்டு ஓசையுண்ணாது கெடும் எ - று,

'புல்லாது அயற்றளை' எ - து. எல்லாப் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் எல்லாத் தளையும் புக்கு மயங்கப்பெறும் என்றார் ஆயினும், வெண்பாவினுள் வெண்சீர் வெண்டளை ஒன்ற


(பி - ம்.) 1. செப்பலோசை.



PAGE__148

லும் இயற்சீர் வெண்டளை ஒன்றலும் அல்லது வேற்றுத்தளை விரவா எ - று.

'பூங் கொடியே' எ - து. மகடூஉ முன்னிலை.

வரலாறு

'குடநிலைத் தண்புறவில்....சென்ற வாறே' (கா. 21, மேற்.) என்னும் (1) தரவு கொச்சகக் கலிப்பாவினுள் நிரையீற்று ஆசிரிய வுரிச்சீரும் 2நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வந்து, வெண்டளையும் ஆசிரியத்தளையும் கலித்தளையும் வஞ்சித்தளையும் புக்கு மயங்கிய வாறு கண்டுகொள்க. நேரீற்று ஆசிரிய வுரிச்சீரும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வருதலில்லாமையும் கண்டு கொள்க.

ஆசிரியப்பா

        'நெடுவரைச் சாரற் குறுங்கோட்டுப் பலவின்
    விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் கடுவன்
    உண்டு சிலம்பேறி யோங்கிய விருங்கழைப்
    படிதம் பயிற்று மென்ப
    மடியாக் கொலைவி லென்னையர் மலையே.'

இவ்வாசிரியப் பாவினுள் தன்சீரும் வெண்சீரும் நேர் நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வந்து, தன்றளையும் வெண்டளையும் கலித்தளையும் வஞ்சித்தளையும் மயங்கி வந்தவாறு கண்டுகொள்க. நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வாராமையும் கண்டு கொள்க.

        'மண்டிணிந்த நிலனும்
    நிலனேந்திய விசும்பும்
    விசும்புதைவரு வளியும்
    வளித்தலைஇய தீயும்
    தீமுரணிய நீரும்'
(புறநா. 2.)
        3புன்காற் புணர்மருதின்
    4போதப்பிய புனற்றாமரை.'

(1) இது பிரிந்திசைந் துள்ளலோசைக்கு மேற்கோள். கா. 21 ; தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்று வந்த தரவு கொச்சகக் கலிப்பா; கா. 32, உரை.


(பி - ம்) 2. வெண்பாவுரிச்சீரும், நேர்நடு. 3. புன் காய்ப். 4. போதரும்பிய.



PAGE__149

        தேன்றாட் டீங்கரும்பின்
    பூந்தாட் புனற்றாமரை
    வார்காற் செங்கழுநீர்.'

இக்குறளடி வஞ்சிப்பாக்களுள் (2) தன்சீரும் வெண்சீரும் நேரீற்று இயற்சீரும் வந்து 5வஞ்சித்தளையும் வெண்டளையும், ஆசிரியத்தளையும் கலித்தளையும் 6விரவி வந்தவாறு கண்டுகொள்க.

['முழங்குதிரைக் கொற்கை வேந்தன்.....வேறாபவே' (கா. 27, மேற்) என்னும் வேற்றொலி வேண்டுறையுள் வஞ்சியுரிச்சீரும் இயற்சீரும் வெண்சீரும் வந்து, வஞ்சித்தளையும் ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு மயங்கியவாறு கண்டு கொள்க.]

கலி விருத்தம்

        ' (3) வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மவ்வல்
    நளிர்கொடியன நறுவிரையன நகுமலரன வகுளம்
    குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன 7கோங்கம்
    ஒளிர்கொடியன 8வுயர்தளிரன வொழுகிணரன வோடை.'
(சூளா. தூது. 4.)

இக்கலிவிருத்தத்துள் (4) நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் நேரீற்று இயற்சீரும் [வந்து வஞ்சித்தளையும், இயற்சீர் வெண்டளை யும்] மயங்கி வந்தவாறு கண்டுகொள்க.

நேரீற்று இயற்சீர் கலிப்பாவினுள் வாராத வாறும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும் வாராதவாறும், வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வாராத


(2) 'நிலனேந்திய விசும்பும்' என்ற தொடக்கத்து அடிகள் வஞ்சித்தளை வந்தவை; 'புன்காற் புணர்மருதின்', பூந்தாட் புனற்றாமரை' என்பன வெண்டளை வந்தவை; 'தேன்றாட் டீங்கரும்பின்', 'வார்காற் செங்கழுநீர்' என்பன ஆசிரியத்தளை வந்தவை; 'மண்டிணிந்த நிலனும்' என்பது கலித்தளை வந்தது.

(3) மவ்வல் - காட்டு மல்லிகை. வகுளம் - மகிழ மரம். குழை மாதவி - தளிர்களோடு கூடிய குருக்கத்திக்கொடி. இணர் - பூங்கொத்து. ஓடை - ஒரு மர விசேடம்.

(4) ஒவ்வோர் அடியிலும் ஈற்றிலுள்ள சீர் நேரீற்றியற்சீர்; மற்றவை நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர்கள்.


(பி - ம்.) 5. தன்றளையும். 6. மயங்கி. 7. கொகுடி. 8. வுயர்தளிரி னோடொழு, வுயர்திரளினோடொழு.


PAGE__150

வாறும் வேற்றுத்தளை மயங்காமையும் மேற்காட்டிய செய்யுள கத்துள்ளும் பிறவற்றுள்ளும் ஆராய்ந்து கண்டுகொள்க.

நேரீற்று இயற்சீர் வெண்கலியுள்ளும் கொச்சகக் கலியுள்ளும் வருதலும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் கொச்சகக் கலியுள் அருகி வருதலும் செய்யுளோத்தினுள்ளே சொல்லப்பட்ட தெனக் கொள்க.

வெண்பா

        ` (5) குலாவணங்கு வில்லெயினர் கோன்கண்டன் கோழி
    நிலாவணங்கு 9வெண்மணன்மே னின்று-புலாலுணங்கல்
    கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மையோ 10நீபிறர்
    உள்ளம்புக் காப்ப துரைழு

என்று இத்தொடக்கத்த வொருசார் வெண்பாவினுள் (6) வஞ்சி யுரிச்சீர் வந்தனவாலோ எனின் திருவள்ளுப்பயன், நாலடி நானூறு முதலாகிய கீழ்க்கணக்குள்ளும் முத்லொள்ளாயிரம் முதலாகிய பிற சான்றோர் செய்யுளுள்ளும் வஞ்சியுரிச்சீர் வாராமையானும், வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வருக என்னும் ஓத்தில்லாமையானும் வேற்றுத்தளை வெண்பாவினுள் விரவாமையானும், இத்தொடக்கத்தன குற்றமல்லது குணமாகாவென்பது காக்கை பாடினியார் முதலாகிய தொல்லாசிரியர் துணிவு; இதுவே இந் நூலுடையார்க்கும் உடன்பாடு.

        `இயற்சீர் 11நேரீற் றதன்றளை யுடைய
    கலிக்கியல் பிலவே காணுங் காலை

(5) குலா - மகிழ்ச்சியையுடைய. வணங்குவில் - வளைந்தவில். கண்டன் - சோழன். கோழி - உறையூர். நிலா வணங்கு மணல் - தன் ஒளியினால் நிலவைத் தாழ்த்தும் மணல்ழு என்றேனும், `நிலவானது தோற்று வணங்குகின்ற மணல்ழு என்றேனும் பொருள் கொள்வர். உணங்கல் - வற்றல். புள்காக்கின்ற - பறவைகளை ஓட்டுகின்ற, கோ - தந்தை. உள்ளம் புக்கு ஆப்பது - என் உள்ளத்திற் புகுந்து அதனைக் கட்டுவது.

(6) `கோவின்மையோழு என்பது வஞ்சியுரிச்சீர். இதனுள் `வின்மைழு என்பதை நடுவிலுள்ள மெய்யை நீக்கி, `விமைழு எனக் கொண்டு இச்சீரைப் பிற்காலத்தார் கூவிளங்காயாகக் கொள்வர். `சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுந் தான்கண்டுழு (நள.), `ஈதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ் ஞான்றும்ழு (தனிப்) என்னும் வெண்பா வடிகளில் இத்தகைய வஞ்சியுரிச்சீர் பயின்றுள்ளமை காண்க.


(பி - ம்) 9. நொய்மணன்மே. 10. நீபிறந்து 11. நேரீற்றுத்.



PAGE__151

        வஞ்சி யுள்ளும் வாரா வாயினும்
    ஒரோவிடத் தாகு மென்மனார் புலவர்'

என்றார் பல்காயனார்.

        'நிரைநடு வியலா வஞ்சி யுரிச்சீர்
    கலியினொ டகவலிற் கடிவரை யிலவே'
        'வெள்ளையுட் பிறதளை விரவா வல்லன
    எல்லாத் தளையு மயங்கியும் வழங்கும்'

என்பன யாப்பருங்கலம். (சூ. 16, 22.)

(3)
_ _ _

அடி மயக்கம்

        39. இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான்
    மயக்கப் படாவல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல்
    கயற்கணல் லாய்கலிப் பாதமு நண்ணுங் கலியினுள்ளான்
    முயக்கப் படுமுதற் காலிரு பாவு முறைமையினே.

இ.....கை. என்னுதலிற்றோவெனின் (1) அடிமயக்கம் ஆமாறு உணர்த்.....று.

'இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளான் மயக்கப்படாவல்ல' எ - து. - இயற்சீர் வெண்டளையான் வந்த வெண்பாவடியும் வஞ்சியடியும் ஆசிரியப்பாவினுள் மயங்கப் பெறும் எ - று. என்னை?

        'இயற்சீர் வெள்ளடி யாசிரிய மருங்கு
    நிலைக்குரி மரபி னிற்கவும் பெறுமே'

என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 374.)

        'வஞ்சி விரவ லாசிரிய முரித்தே
    வெண்பா விரவினுங் கடிவரை யிலவே'

என்றார் 1பல்காயனார்.


(1) அடிமயக்கம் - ஒருபாவுக்குரிய அடி மற்றொரு பாவில் பயின்று வருவது


(பி - ம்.) 1. நத்தத்தனார்.



PAGE__152

வரலாறு

ஆசிரியப்பா

        ' (2) எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
    உலைக்க லன்ன பாறை யேறிக்
    கொடுவில் லெயினர் பகழி மாய்க்குங்
    கவலைத் தென்பவவர் தேர்சென்ற வாறே
    அதுமற் றவலங் கொள்ளாது
    2நொதுமற் கழறுமிவ் வழங்க லூரே.
(குறுந். 12)

இந்நேரிசை யாசிரியப்பாவினுள், 'எறும்பி யளையிற் குறும்பல் சுனைய' என்பது இயற்றளை வெள்ளடி. அதனை,

குறள் வெண்பா

        'எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
    குறுந்தொடி யாஞ்செல் சுரம்'

என்று உச்சரித்து வெள்ளடியாமாறு கண்டுகொள்க.

        ' (3) 3இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம்
    உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித்
    தாமே யாண்ட வேமங் காவலர்
    இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
    காடு பதியாகப் போகித் தத்தம்
    நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தோரே
    அதனால்,
    நீயுங் கேண்மதி யந்தை வீயா
    துடம்பொடு நின்ற வுயிரு மில்லை

(2) எறும்பி அளையின் - எறும்பின் வளைகளைப் போல. உலைக்கல் - கொல்லனது உலைக்களத் துள்ள பட்டடைக்கல். பகழி மாய்க்கும் கவலைத்து - அம்புகளைத் தீட்டுதற்கு இடமாகிய கவர்த்த வழிகளை யுடையது. நொதுமல் கழறும் - அயற்றன்மையையுடைய சொற்களைக் கூறி இடித்துரைக்கும். அழுங்கல் - ஆரவாரம்.

(3) உடைமரத்தின் இலை மிகச் சிறியது. மடங்கல் - யமன். வெள்ளில் - பாடை. வியலுள் - அகன்ற இடத்தின்கண். விலங்குபலி - மாறுபட்ட பிச்சை. மிசையும் - உண்ணும்.


(பி - ம்.) 2. நொதுமலர்க் கழறும். 3. இருங்கடற் றானையொடு பெருநிலங்கவைஇ.



PAGE__153

        மடங்க லுண்மை மாயமோ வன்றே
    கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
    வெள்ளில் போகிய வியலு ளாங்கண்
    உப்பிலாஅ வவிப்புழுக்கல்
    கைக்கொண்டு பிறக்குநோக்கா
    திழிபிறப்பினோ னீயப்பெற்று
    நிலங்கல னாக விலங்குபலி மிசையும்
    இன்னா வைகல் வாரா முன்னே
    செய்ந்நீ முன்னிய வினையே
    முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே'
(புறநா. 363.)

இவ்வாசிரியப் பாவினுள் 'உப்பிலாஅ வவிப்புழுக்கல்' எனவும், 'கைக்கொண்டு பிறக்கு நோக்கா' எனவும், 'இழிபிறப்பினோ னீயப்பெற்று' எனவும் வஞ்சியடி விரவி வந்தவாறு கண்டுகொள்க.

['இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளான்] மயக்கப்படும்' என்னாது 'மயக்கப்படா வல்ல' என்று இருகால் விலக்கிச் சொன்னமையால் வெண்சீர் விரவிய இயற்றளை வெள்ளடியும் கலியடியும் ஆசிரியத்துள் அருகி வரப் பெறும் எனக் கொள்க.

வரலாறு

நேரிசையாசிரியப்பா

        ' (4) அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப்
    பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி
    ஏதின் மாக்களு நோவர் தோழி
    என்று நோவா ரில்லைத்
    தண்கடற் சேர்ப்ப னுண்டவென் லைக்கே.'

இவ்வாசிரியத்துள், 'அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டென' வென்பது வெண்சீர் விரவிய இயற்றளை வெள்ளடி. இதனை,


(4) மதியம் அரவின்வாய்ப்படுதல். சந்திரகிரகணம் உண்டாதல். பூசல் வாயா - ஆரவாரம் அற்ற. ஏதில் மாக்கள் - அன்னியர். சந்திர கிரகண காலத்தில் மக்கள் வருந்துதல் ஒழிய அம்மதியின் இடுக்கணைக் களைகுநர் இல்லை என்றவாறு; 'அரவுநுங்கு மதியினுக் குவணோர் போலக் களையாராயினுங் கண்ணினிது படீஇயர்' (குறுந். 395.) என்நலக்கு - என் நலம் அழிந்ததற்கு.



PAGE__154

குறள் வெண்பா

        'அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப்
    பொங்கிய பூசல் பெரிதுழு

என உச்சரித்து வெள்ளடியாமாறு கண்டுகொள்க.

ஆசிரியப்பா

        ' (5) குருகுவேண் டாளி கோடுபுய்த் துண்டென
    மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது
    மருள்பிடி திரிதருஞ் 4சாரல்
    அருளா னாகுத லாயிழை கொடிதே.'

இவ்வாசிரியத்துள் இரண்டாம் அடி கலியடி. இதனை.

        'மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது
    தீவழங்கு சுழல்விழிக்கட் சீயஞ்சென் றுழலுமேழு

என வுச்சரித்துக் (6) கலியடி யாமாறு கண்டுகொள்க.

'வஞ்சி மருங்கின் எஞ்சா அகவல் கலிப்பாதமும் நண்ணும்ழு எ - து. வஞ்சிப்பாவினுள் ஆசிரியவடியும் கலியடியும் வந்து மயங்கப்பெறும் எ - று.

'எஞ்சாவகவல்ழு என்று சிறப்பித்தவதனால் வஞ்சியுள் ஆசிரியவடி பயின்றுவரும், கலியடியும் அருகியன்றி வாரா எனக் கொள்க.

'கலிப்பாதமும்ழு என்ற உம்மையால் வஞ்சியுள் வெள்ளடியும் அருகிவந்து மயங்கப்பெறும்.

'கயற்கண் நல்லாய்ழு எ - து. மகடூஉ முன்னிலை.

பட்டினப்பாலை என்னும் (7) வஞ்சிநெடும் பாட்டினுள் ஆசி


(5) குருகு வேண்டு ஆளி - குருத்தை விரும்புகின்ற சிங்கம். 'குவட்டு மால்கரிக் குருகுதேர் அரிழு (கந்த. ஆற்றுப். 14.) உண்டென - களிற்றை உண்டதாக. மாவழங்கு - கொடிய விலங்குகள் திரிகின்ற. சாரவில் தலைவன் அருளாதவனாக இருத்தல் கொடிது. இது தலைவி கூற்று.

(6) கலிப்பாவினுள் இது தாழிசை என்னும் உறுப்பு.

(7) வஞ்சியடிகள் விரவிவந்தமையின்பட்டினப்பாலையை வஞ்சிநெடும் பாட்டு என்றும் கூறுவர்.


(பி - ம்.) 4. சோலை.



PAGE__155

ரியவடி பயின்றும் கலியடியும் வெள்ளடியும் அருகியும் வந்தனவும் உளவெனக் கொள்க.

        'நேரிழை மகளி ருணங்குணாக் கவரும்'
(பட்டினப், 22.)

என்ற இத்தொடக்கத்தன ஆசிரியவடி.

        'கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை'
(பட்டினப், 23.)

என்பது (8) இயற்றளை வெள்ளடி. இதனைக்,

குறள் வெண்பா

        ' (9) கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
    யாழிசூழ் வையக் கணி'

என உச்சரித்து வெள்ளடியாமாறு கண்டுகொள்க.

        'வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர் மலைந்தும்'
(பட்டினப். 64-5.)

என்பது கலியடி இதனை.

        'வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மலைந்தும்
    கயல்நாட்டக் கடைசியர்தங் காதலர்தோள் கலந்தனரே'

என வுச்சரித்துக் (10) கலியடியாமாறு கண்டுகொள்க.

'கவியினுள்ளான் முயக்கப்படும் (11) முதற்கால் இருபாவும் முறைமையினே ' எ - து. கலிப்பாவினுள் வெண்பாவும் ஆசிரியப்பாவும் புக்கு மயங்கப்படும் எ - று.

'முறைமையினே' என்பது - வரலாற்ற முறைமையோடுங் கூட்டி மயக்க முறைமை செய்து வழங்கப்படும் எ - று.

'காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்' (கலி. 38.) என்னும் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவினுள் வெண்பாவும் ஆசிரியப்பாவும் மயங்கி வந்தவாறு கண்டு கொள்க.


(8) இயற்றளை வெள்ளடி - இயற்சீர் வெண்டளையான் வந்த வெண்பாவடி.

(9) கனங்குழை - குழையை யணித்த பெண். வையக்கு - பூவுலகுக்கு.

(10) கலிப்பாவினுள் இது தாழிசை என்னும் உறுப்பு.

(11) வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி. எனக் கிடந்த வரன் முறையான் முன்பில் இரண்டும், 'முதற்கால் இருபா' எனப்பட்டன.



PAGE__156

        'வெண்பா விரவினுங் கடிவரை யின்றே'

என்றார் 5நத்தத்தனார்.

        'ஆசிரியப் பாவி னயற்பா வடிமயங்கும்
    ஆசிரியம் வெண்பாக் கலிக்கண்ணாம் - ஆசிரியம்
    வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் வெண்பாவின்
    ஒண்பா வடிவிரவா வுற்று.'
(நாலடி நாற்பது.)

இதனை விரித்துப் பொருளுரைத்துக் கொள்க.

(4)

(பி - ம்.) 5. நற்றத்தனார்.


_ _ _

அடிக்கும் தொடைக்கும் புறனடை

        40. அருகிக் கலியோ டகவன் மருங்கினைஞ் சீரடியும்
    வருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர் மற்றொருசார்
    கருதிற் கடையே கடையிணை பின்கடைக் கூழையுமென்
    றிரணத் தொடைக்கு மொழிவ ரிடைப்புண ரென்பதுவே.

இ.....கை ஒருசார் அடிக்கும் தொடைக்கும் எய்தியதோர் இலக்கண முணர்த்....று.

'அருகிக் கலியோடு அகவல் மருங்கின் ஐஞ்சீர் அடியும் வருதற்கு உரித்தென்பர் வான் தமிழ் நாவலர்' எ - து. ஒருசார் கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும் ஐஞ்சீரடியும் அருகி வரப்பெறும் என்று சொல்லுவர் புலவர் எ - று.

வரலாறு

        ' (1) அணிகிளர் 1சிறுபொறி யவிர்துத்தி மாநாகத் தெருத்தேறித்
    துணியிரும் பனிமுந்நீர்த் தொட்டுழந்து 2மலைந்தனையே.'

இக்கலிப்பாவினுள் முதலடியின் ஐஞ்சீர் வந்தவாறு கண்டு கொள்க.

நேரிசையாசிரியப்பா

        ' (2) உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
    ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா

(1) பொறி - புள்ளிகள். அவிர் துத்தி - விளங்குகின்ற படம். மலைந்தவன் கண்ணன். இது தாழிசை.

(2) உமணர் - உப்பு வாணிகர். சேர்ந்து கழிந்த - கூடிக் கடந்து சென்ற.


(பி - ம்.) 1. பொறியவிர். 2. மலர்ந்தனையே.



PAGE__157

        டின்னா வென்றி ராயின்
    இனியவோ பெரும 3தமியோர்க்கு மனையே'
(குறுந் 124.)

இவ்வாசிரியத்துள் முதலடி ஐஞ்சீரான் வந்தவாறு கண்டு கொள்க.

['சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே' (கா. 28. மேற்.) என்னும் இணைக்குறளாசிரியப்பாவினுள் ஐஞ்சீரடியும் வந்தவாறு கண்டு கொள்க.]

        'வெண்டளை விரவியு மாசிரியம் விரிவியும்
    ஐஞ்சீ ரடியு முளவென மொழிப'

என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 375.)

        (3) வெண்பாவினுள் ஐஞ்சீரடி வரப்பெறாதெனக் கொள்க.
    'ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும்
    வெண்பா யாப்பிற் குரிய வல்ல'

என்று நத்தத்தனார் அடிநூலினுள் எடுத்தோதினார்.

'மற்றொருசார் கருதில் கடையே கடையிணை பின்கடைக் கூழையும் என்று இரணத்தொடைக்கும் மொழிவர் இடைப்புணர் என்பதுவே' எ - து. ஒருசாராசிரியர் முரண்தொடையைக் கடைமுரணும், கடையிணை முரணும், பின்முரணும், கடைக் கூழை முரணும், இடைப்புணர் முரணும் என்று வேண்டுவர் எ - று.

இரணத் தொடை எனினும் பகைத்தொடை எனினும் முரண்டொடை எனினும் ஒக்கும். என்னை?


ஊர் பாழ்த்தன்ன - ஊர் பாழாகப் போனது போன்ற. ஓமை - ஒரு மர விசேடம், இது தோழி கூற்று.

(3) வெண்பாவினுள் ஒரோவிடத்து ஐஞ்சீரடியும் வருதலுண்டு - உ - ம் :

        உதிரந் துவரிய வேங்கை யுகிர்போல்
    எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்
    கின்பம் பயந்த விளவேனில் காண்டொறும்
    துன்பங் கலந்தழியு நெஞ்சு.
(ஐந்திணை ஐம். 31.)

இங்ஙனம் வருதல் பலர்க்கு உடன்பாடன்று.


(பி - ம்) 3. தமியேற்கு.



PAGE__158

        4' மொழியினும் பொருளினு முரணத் தொடுப்பின்
    இரணத் தொடையென் றெய்தும் பெயரே'
(காக்கை பாடினியார்.)
        'மொழியினும் பொருளினு முரணுதன் முரணே.'
(தொல். பொருள், சூ. 407; யா. வி. சூ. 38.)
        'மறுதலை யுரைப்பினும் பகைத்தொடை யாகும்'
(அவிநயனார்.)

எனவும் சொன்னார் ஆகலின்.

[கடைமுரணாவது அடிதோறும் இறுதிச்சீர் முரணத் தொடுப்பது. கடையிணை முரணாவது அடிதோறும் கடையிரு சீர் முரணத் தொடுப்பது. பின்முரணாவது இரண்டாஞ் சீர்க் கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் முரணத் தொடுப்பது. கடைக் கூழை முரணாவது முதற்சீர்க் கண்ணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் முரணத் தொடுப்பது. இடைப்புணர் முரணாவது நடு இருசீர்க் கண்ணும் முரணத் தொடுப்பது.]

வரலாறு

நேரிசை யாசிரியப்பா

        '5 கயன்மலைப் பன்ன கண்ணினை கரிதே
    தடமுலை திவளுந் தனிவடம் வெளிதே
    நூலினு நுண்ணிடை சிறிதே
    ஆடமைத் தோளிக் கல்குலோ பெரிதே'

இஃது அடிதோறும் கடைச்சீர் மறுதலைப்படத் தொடுத்த மையாற் கடைமுரண்டொடை.

நேரிசை யாசிரியப்பா

        ' (4) 6மீன்றேர்ந் தருந்திய கருங்கால் வெண்குருகு
    தேனார் ஞாழல் 7விரிசினைத் தொகூஉம்

(4) ஞாழல் - புலி நகக் கொன்றை. தொகூஉம் - கூட்டமாக இருக்கும். தவிர்ப்பவும் தவிரான் - நாம் தடுக்கவும் வாராமல் இரான். தேர் காணலம். பீர் - பசலை. சிறுநுதல் : விளி. பீர் ஏர் வண்ணம் பெரிது காண்டும்.


(பி - ம்.) 4. மொழியும் பொருளு முரணத். 5. கயலின் மலைந்த கண்ணிணை. 6. மீன்றேர்ந்து வருந்திய, மீனாய்ந் தருந்திய 7. விரிசினைக் குழூஉம்.



PAGE__159

        தண்ணந் துறைவன் றவிர்ப்பவுந் தவிரான்
    தேரோ காணலங் காண்டும்
    பீரேர் வண்ணமுஞ் சிறுதல் பெரிதே.'

இஃது அடிதோறும் கடை இரு சீரும் முரண்வரத் தொடுத்தமையாற் கடையிணை முரண்.

நேரிசை யாசிரியப்பா

        ' (5) சார லோங்கிய தடந்தாட் டாழை
    கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து
    தமிய மிருந்தன மாக நின்றுதன்
    நலனுடைப் பணிமொழி நன்குபல 8புகழ்ந்து
    வீங்குதொடிப் பணைத்தோ ணெகிழத்
    துறந்தோ னல்லனெம் மேனியோ தீதே.'

இஃது [அடிதோறும்] கடைச்சீரும் இரண்டாஞ்சீரும் மறுதலைப் படத் தொடுத்தமையாற் பின் முரண்.

நேரிசை யாசிரியப்பா

        ' (6) காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி
    பூவிரி சுரிமென் கூந்தலும்
    வேய்புரை தோளு மணங்குமா லெமக்கே.

இது முதற் சீரொழிந்த மூன்று சீர்க்கண்ணும் மறுதலைப் படத் தொடுத்தமையாற் கடைக்கூழை முரண்டொடை.

நிலைமண்டில வாசிரியப்பா

        '(7) 9போதுவிரி குறிஞ்சி நெடுந்தண் மால்வரை
    கோதையிற் றாழ்ந்த வோங்குவெள் ளருவி
    10காந்தளஞ் செங்குலைப் பசுங்கூ தாளி
    வேரல் விரிமலர் முகையொடு விரைஇப்

(5) நல்லன் - நல்லவன். இப்பாட்டினுள் ஐந்தாமடியிலும் வீங்குதல் நெகிழ்தல் முரணாக வந்தன.

(6) அணங்கும் - வருத்தும். ஆல் : அசை. எமக்கே - எம்மை : வேற்றுமை மயக்கம்.

(7) கோதை - மாலை. அருவிக்கு மாலை உவமை. கூதாளி - ஒரு மரவி சேடம். வேரல் - மூங்கில். விரைஇ - விரவி. அடி 2 - 4 இடைப் புணர் முரண்.


(பி - ம்.) 8. பயிற்றி. 9. போது விடு. 10 காந்தள்பசுங் குலைச் செங்கூதாளி.



PAGE__160

        பெருமலைச் சீறூ ரிழிதரு நலங்கவர்ந்
    தின்னா 11வாயின மினியோர் மாட்டே.'

இஃது இடை யிருசீர்க் கண்ணும் மறுதலைப்படத் தொடுத் தமையால் இடைப்புணர் முரண்டொடை.

இவ்வாறு சொன்னார் கையனார் முதலாகிய ஒருசாராசிரியர் எனக் கொள்க.

'இரணத் தொடைக்கும்' என்ற உம்மையான் ஒழிந்த மோனை எதுகை இயைபு அளபெடை யென்னும் நான்கு தொடைக்கும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. [ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்பது தந்திரவுத்தியாகலின்.] அவை யெல்லாம் யாப்பருங்கலவிருத்தியுட் கண்டு கொள்க.

(5)

(பி - ம்) 11. வாயி னினியோர், வாகுக வினியோர், வாயின வினியோர்


எதுகை மோனைகளுக்குப் புறநடை

        41. வருக்க நெடிலினம் வந்தா லெதுகையு மொனையுமென்
    றொருக்கப் பெயரா லுரைக்கப் படுமுயி ராசிடையிட்
    டிருக்கு மொருசா ரிரண்டடி மூன்றா மெழுத்துமொன்றி
    1நிரக்கு மெதுகையென் றாலுஞ் சிறப்பில நேரிழையே.

இ......கை ஒருசார் எதுகைக்கும் மோனைக்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்....று.

'வருக்கம் நெடில் இனம் வந்தால் எதுகையும் மோனையும் என்று ஒருக்கப் பெயரால் உரைக்கப்படும் எ - து. (1) வருக்கவெழுத்தும், நெடிலெழுத்தும், இனவெழுத்தும் எதுகையும் மோனையுமாய் வந்தால் அவற்றை வருக்க வெதுகை நெடி


(1) க, கா, கி, கீ.......கௌ இவை கவர்க்கம். இங்ஙனமே சவர்க்கம், டவர்க்கம் என மற்ற உயிர் மெய்களுக்கும் கொள்க.


(பி - ம்) 1. நிரைக்கு.



PAGE__161

லெதுகை இனவெதுகை என்றும், வருக்கமோனை நெடில்மோனை இனமோனை என்றும் பெயரிட்டு வழங்கப்படும் எ - று.

வரலாறு

இன்னிசை வெண்பா

        ' (2) நீடிணர்க் கொம்பர்க் குயிலாலத் தாதூதிப்
    2பாடுவண் டஞ்சி யகலும் 3பருவத்துத்
    தோடார் தொடிநெகிழ்த்தா ருள்ளார் 4படலொல்லா
    5பாடமை சேக்கையுட் கண்'

இது டகர மெய் வருக்க வெதுகை.

        'அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோ டூர்ந்தா னிடை.'
(குறள். 37.)

இது றகர மெய் வருக்க வெதுகை.

        'ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தா ரொருசாரார்'
(கா. 27, மேற்)

இது இரண்டாமெழுத் தொன்றாதாயினும் இரண்டா மெழுத்தின்மே லேறிய நெடிலொப்புமை நோக்கி நெடிலெதுகை என்று வழங்கப்படும்.

இனவெதுகை மூன்றுவகைப்படும், வல்லின வெதுகை மெல்லின வெதுகை இடையினவெதுகை என.

வரலாறு

        'தக்கார் தகவில ரென்ப தவரவர்
    எச்சத்தாற் காணப் படும்'
(குறள். 114.)

இது வல்லின வெதுகை.

        'அன்பீனு மார்வ முடைமை யதுவீனும்
    நண்பென்னு நாடாச் சிறப்பு.'
(குறள். 74.)

இது மெல்லின வெதுகை.


(2) இணர் - பூங்கொத்து. தொடி நெகிழ்த்தார் - வளையல் கழலும்படி மெலியச் செய்த தலைவர். உள்ளார் - நம்மை நினையார். பாடு அமை சேக்கை - பெருமை பொருந்திய பாயல். சேக்கையுள்கண் படல் ஒல்லா.


(பி - ம்.) 2. பாடும் வண். 3. பருவத்தும். 4. படலொல்லாப், படரொல்லார். 5.பாடாமைச்.



PAGE__162

        'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு.'
(குறள், 229.)

இஃது இடையின வெதுகை.

இனி வருக்கமோனை முதலாகிய மூன்று மோனையும் வருமாறு :

ஆசிரியப்பா

        ' (3) பகலேபல் 6பூங்கானக் கிள்ளை யோப்பியும்
    பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇப்
    பின்னுப் 7பிணியவிழ்ந்த நன்னெடுங் கூந்தல்
    பீர்ங்கப் பெய்து தேம்படத் 3திருத்திப்
    புனையீ ரோதி செய்குறி 9நசைஇப்
    பூந்தார் மார்ப புனத்துட் டோன்றிப்
    பெருவரை யடுக்கத் தொருவே லேந்திப்
    பேயு மறியா மாவழங்கு 10பெருங்காட்டுப்
    பைங்க ணுழுவைப் படுபகை 11யொரீஇப்
    பொங்குசினந் தணியாப் 12பூநுத லொருத்தல்
    போகாது வழங்கு மாரிரு ணடுநாட்
    பௌவத் தன்ன பாயிரு ணீந்தி
    இப்பொழுது வருகுவை யாயின
    நற்றார் மார்ப தீண்டலெங் கதுப்பே.'

இது பகரமெய் வருக்க மோனை.

        'ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
    ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.'
(முதுமொழிக்காஞ்சி.)

இது முதலெழுத்து ஒன்றாதாயினும் முதலெழுத்தின்மேல் ஏறிய நெடில் ஒப்புமை நோக்கி நெடில்மோனை என்று வழங்கப்படும்.

இனமோனை மூன்று வகைப்படும், வல்லின மோனையும் மெல்லின மோனையும் இடையின மோனையும் என.


(3) இதனுள் அடிதோறும் முதற்கண் பகர வருக்கவெழுத்துப் பன்னிரண்டும் முறையே வந்தவாறு காண்க.


(பி - ம்.) 6. பூங்கானற். 7. பிணியவிழ்ந் தன்ன நெடுங். 9. திருகிப். 9. நோக்கிப். 10. பெருங்காட்டுட். 11. வெரீஇப் பொருது; சினந் தணிந்த. 12. பூணுத.



PAGE__163

வரலாறு

ஆசிரியப்பா

        'கயலே ருண்கண் கலுழ நாளுஞ்
    சுடர்புரை திருநுதல் பசலை 13பாயத்
    திருந்திழை யமைத்தோ ளரும்பட ருழப்பப்
    போகல் 14வாழி யைய பூத்த
    கொழுங்கொடி 15யணிமலர் தயங்கப்
    பெருந்தண் 16வாடை வரூஉம் பொழுதே,'

இஃது எல்லாவடியும் முதற்கண்ணே வல்லெழுத்து வந்தமை யால் வல்லின மோனை. இது கையனார் காட்டிய பாட்டு.

மெல்லின மோனையும் இடையின மோனையும் வந்துழிக் கண்டு கொள்க.

        'வருக்க நெடிலினம் வரையா ராண்டே
    நெடிய பிறவு மினத்தினு மாகும்'

என்றாரும் உளர் எனக் கொள்க.

'வருக்கம் நெடில் இனம் வந்தால் எதுகையும் மோனையும் என்று உரைக்கப்படும்' என்னாது 'ஒருக்கப் பெயரான்' என்று சிறப்பித்த வதனால் ஒருசாராசிரியர் தலையாகு எதுகை இடையாகு எதுகை கடையாகு எதுகை என்றும், தலையாகு மோனை இடையாகு மோனை கடையாகு மோனை என்றும் வேண்டுவாரும் உளர் எனக் கொள்க. என்னை?

        'சீர்முழு தொன்றிற் றலையா கெதுகை
    யோரெழுத் தொன்றி னிடைகடை பிறவே.

என்றார் ஆகலின். மோனைக்கும் இவ்வாறே ஒட்டிக்கொள்க.

வரலாறு

        'சிலைவிலங்கு நீள்புருவம்'
(கா. 11. மேற்.)

என்னும் பாட்டு (4) சீர்முழுதொன்றி வந்தமையால் தலையா கெதுகை.


(4) சீர்முழுதும் ஒன்றிவரலாவது : ஒரு சீரின்கண் முதலெழுத் தொழிந்த மற்றையவை எல்லாம் ஒன்றிவருவது.


(பி - ம்.) 13. பாயா திருந்திழை. 14. வாழியரைய. 15. யளிமலர். 16. வாடையொடு வரூஉம்.



PAGE__164

        'அகர முதல..........யுலகு'
(கா. 25, மேற்.)

என்பதும்,

        'வடியேர்கண் ணீர் மல்க'
(கா. 18, மேற்.)

என்பதும் (5) ஓரெழுத்து ஒன்றி வந்தமையால் இடையாகெதுகை.

        'தக்கார் தகவிலர்'
(பக். 161)

என்பது (6) கடையா கெதுகை.

        'பற்றுக பற்றற்றான் பற்றினை யாப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு'
(குறள், 350)

இது சீர்முழுதும் ஒன்றி வந்தமையால் தலையாகு மோனை.

        'மாவும் புள்ளும் வதிவயிற் படர'
(கா. 18, மேற்.)

என்பது (7) இடையாகு மோனை.

        'பகலேபல் பூங்கானக் கிள்ளை யோப்பியும்'
(பக். 162)

என்பது (8) கடையாகு மோனை.

'உயிராசிடை யிட்டிருக்கும் ஒருசார் இரண்டடி மூன்றாம் எழுத்தும் ஒன்றி நிரக்கும் எதுகை என்றாலும் சிறப்பில' எ - து. உயிரெதுகை ஆசெதுகை இடையிட் டெதுகை [என்னும் எதுகையும்], இரண்டடி யெதுகை மூன்றாமெழுத் தொன்றெதுகை என்று இத்தொடக்கத்து ஒருசா ரெதுகையும் உள; ஆகிலும் அவை பெரியதோர் சிறப்பில எனக் கொள்க.

வரலாறு

ஆசிரியப்பா

        'துளியொடு மயங்கிய தூங்கிரு ணடுநாள்
    அணிகிளர் தாரோ யருஞ்சுர நீந்தி

(5) ஓர் எழுத்து என்றது இரண்டாம் எழுத்தினை.

(6) ஓரெழுத்தும் ஒன்றாது வருக்கம் நெடில் இனம் பற்றி வருவது கடையாகெதுகை எனக் கொள்க.

(7) முதலெழுத்து ஒன்றே ஒன்றி வருவதுஇடையாகுமோனை.

(8) வருக்க முதலிய மோனைகள் கடையாகு மோனை.



PAGE__165

        17வடியமை யெஃகம் வலவயி னேந்தித்
    தனியே வருதி 18 நீயெனின்
    மையிருங் கூந்த லுய்தலோ வரிதே.'

இஃது இரண்டாமெழுத் தொன்றாதாயினும் இரண்டாமெழுத் தின்மேலேறிய உயிர் ஒன்றி வந்தமையால் உயிரெதுகை. இது கையனார் காட்டிய பாட்டு.

இனி ஆசெதுகைக்குச் சொல்லுமாறு :

        'யரலழ வென்னு மீரிரண் டொற்றும்
    வரன்முறை பிறழாது வந்திடை 19 யுயிர்ப்பினஃ
    தாசிடை யெதுகையென் 20 றறையல் வேண்டும்'

என்றார்21 ஆகலின்.

வரலாறு

காப்பியக் கலித்துறை

        (9) 'காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்
    பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து
    தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
    ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே' (சீவக. 31)
    இது யகரவொற்று இடைவந்த (10) ஆசெதுகை.

கலிவிருத்தம்

        (11) 'மாக்கொடி 22மாணையு மவ்வற் பந்தருங்
    கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்
    பூங்கொடிப் பொதும்பரும் 23பொன்ன ஞாழலுந்
    தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொத்ததே.'
(சூளா. நாட்டு. 29)

இது ரகர வொற்று இடைவந்த ஆசெதுகை.


(9) காய் மாண்ட - காய் மாட்சியமைப்பட்ட. நெற்றி - உச்சி. தொடை - தேனிறால். வருக்கை - பலாப்பழம்.

(10) ஆசிடையிட்ட இருகுற ணேரிசை வெண்பாவிற் கூறப்படும் ஆசு வேறு; இங்கே கூறப்படும் ஆசு வேறு. அது பற்றாசு போன்ற ஒன்றும் இரண்டுமாகிய அசைகள். இது ய ர ல வ ழ ஒற்றுக்கள்.

(11) மாணை - ஒருவகைப் பூங்கொடி.


(பி - ம்.) 17. வடிவமை. 18. நீயென. 19. யுயிர்ப்பி னாசிடை. 20. றறியல் வேண்டும், றறிந்தனர் கொளலே. 21. கையனார். 22. யானையு. மாலையு. 23. புன்னை, கானன்.



PAGE__166

வெண்பா

        'ஆவே றுருவின வாயினு மாபயந்த
    பால்வே றுருவின வல்லவாம் - பால்போல்
    ஒருதன்மைத் தாகு மறநெறி யாபோல்
    உருவு பலகொள லீங்கு.'
(நாலடி, 118)

இது லகரவொற்று இடைவந்த ஆசெதுகை.

வெண்பா

        '(12) அந்தரத் துள்ளே யகங்கை புறங்கையா
    மந்திரமே போலு மனைவாழ்க்கை - 24யந்தரத்து
    வாழ்கின்றே மென்று மகிழன்மின் வாணாளும்
    போகின்ற 25பூளையே போன்று.

இது ழகரவொற்று இடைவந்த ஆசெதுகை.

        'ஆர்கலி யுலகத்து.........முடைமை'
(கா. 26. மேற்)

இது ரகர வொற்று இடைவந்த வல்லின வெதுகை.

இனி இடையிட்டெதுகை வருமாறு :

ஆசிரியப்பா

        'தோடா ரெல்வளை நெகிழ நாளும்
    நெய்த லுண்கண் பைதல் கலுழ
    வாடா வவ்வரி புதைஇப் பசலையும்
    வைக றோறும் பையப் பெருகின
    நீடா 26ரிவணெண நீமனங் கொண்டார்
    கேளார் கொல்லோ காதலந் தோழி
    வாடாப் பௌவ மறமுகந் தெழிலி
    பருவம் 27பொய்யாது வலனேர்பு வளைஇ
    ஓடா மலையன் வேலிற்
    கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே.'

இஃது அடியிடையிட்டு இரண்டாமெழுத்து ஒன்றி வந்தமை


(12) மந்திரம் - மாயம். அம் தரத்து - அழகிய பதவியில். பூளை - பூளைப் பஞ்சு. வாழ்நாளும் போகின்ற.


(பி - ம்.) 24. மந்தரத்துள். 25. பூளைபோற் பூத்து. 26. ரிவரென நீ மனங்கொண்டார், ரிவணேநீ மனங்கொண்டோர். 27. செய்து



PAGE__167

யால் இடையிட்டெதுகை. இது 28 தொல்காப்பியனார் காட்டிய பாட்டு.

        'தாஅ வண்ணம்.
        இடையிட்டு வந்த வெதுகைத் தாகும்'
(தொல். பொருள், 527.)

என்றார் ஆகலின்.

இனி இரண்டடி எதுகை வருமாறு :

இன்னிசை வெண்பா

        '(13) துவைக்குந் துளிமுன்னீர்க் கொற்கை மகளிர்
        அவைப்பதம் 29பல்லுக் கழகொவ்வா முத்தம்
        மணங்கமழ்தா ரச்சுதன் மண்காக்கும் வேலின்
        30அணங்கமுத மந்நலார் பாட்டு.

இது முதலிரண்டடியும் ஓரெதுகையாய்ப் பின்பிரண்டடியும் மற்றோர் எதுகையாய் வந்தமையால் இரண்டடி யெதுகை.

        'இரண்டடி யெதுகை திரண்டொருங் கியன்றபின்
        முரண்ட வெதுகையு 31 மிரண்டினுள் வரையார்'

என்றார் ஆகலின்.

மோனைக்கும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. 'ஒன்றின முடித்த றன்னின 32முடித்தல்' என்பது தந்திர வுத்தி ஆகலின்.

வரலாறு

கலிவிருத்தம்

        '(14) ஆகங் கண்டகத் தாலற்ற வாடவர்
        ஆகங் கண்டகத் தாலற்ற வன்பினர்

(13) அச்சுதல் - அச்சுதநந்தி ; இவனைப்பற்றி யா. வி. உரையின் சில பாடல்கள் வந்துள்ளன. 'அணங்கு மமுதமு மந்நலார் பாடல்' என்ற பாடத்தைக் கொண்டால் இது கலிவிருத்தம்.

(14) ஆகம் கண்டகத்தால் அற்ற ஆடவர் - தம் உடல்கள் கத்தியால் அற்று விழுந்த வீரர்களின். ஆகம்கண்டு - உடலைக் கண்டு. அற்ற அன்பினர் - தம்


(பி - ம்.) 28. கையனார். 29. பல்லினழ. 30. அணங்குமமுதமு.... பாடல், 31. மிரண்டல. 32. முடித்தலென், றின்ன வகையான் யாவையு முடியும் என்றார் ஆகலின்.



PAGE__168

        பாகங் கொண்டு பயோதரஞ் சேர்த்தினார்
        பாகங் கொண்டு பயோதர நண்ணினார்.'

இது முதலிரண்டடியும் ஒரு மோனையாய்ப் பின்னிரண்டடியும் மற்றொரு மோனையாய் வந்தமையால் இரண்டடி மோனை எனக் கொள்க.

இனி மூன்றாமெழுத் தொன்றெதுகை வருமாறு :

        'பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
        நன்மை பயக்கு மெனின்.'
(குறள், 292.)
        'பவழமும் பொன்னுங் குவைஇய முந்தின்
        திகழரும் பீன்றன புன்னை.'

இவை மூன்றாமெழழுத்தொன் றெதுகை.

'நிரக்கு மெதுகை' என்று சிறப்பித்தவதனால் விட்டிசை வல்லொற்றெதுகை என்றும், விட்டிசை மோனை என்றும் வேண்டுவாரும் உளரெனக் கொள்க.

வரலாறு

குறள் வெண்பா

        'பற்றிப் பலகாலும் பான்மறி யுண்ணாமை
        நொஅலைய னின்னாட்டை நீ.'

இது வல்லொற்று அடுத்தாற்போல விட்டிசைத்த 33குற் றெழுத்தோடு புணர்த்தமையால் விட்டிசை வல்லொற் றெதுகை.

        ['அ அவனும் இ இவனும் உ உவனுங் கூடியக்கால் எ எவனை வெல்லா ரிகல்.'

இது முதலெழுத்து விட்டிசைத்து வந்தமையால் விட்டிசை மோனை.]

இவை எல்லாஞ் சிறப்பிலவெனக் கொள்க.


உயிர்மேல் அன்பற்ற மனைவிமார். பாகம் கொண் - தம் கணவரின் உடலைத் தழுவி. பயோதரம் - முலை. பயோதரம் நண்ணினார் - மேக மண்டலத்தை அடைந்தனர்; இறந்தார் என்றபடி. இது தலையொடு முடிதல் என்னும் துறை.


(பி - ம்.) 33. குற்றெழுத்துக் குற்றெழுத்தினோடு வந்தமையால்.



PAGE__169

இன்னும் 'ஒருக்கப் பெயரால் ' என்று சிறப்பித்தவதனால் பாவினங்கள் எல்லாத் தொடையானும் வரும் என்றார் ஆயினும் பெரும்பான்மையும் தலையாகு மோனையிற் றிரிந்தும் தலையா கெதுகையிற் றிரிந்தும் வாராவென்றும், செந்தொடை யொழிந்த எல்லாத் தொடைக்கும் இனவெழுத்து வரத் தொடுப்பதூஉம் (15) வழியெதுகை வரத்தொடுப்பதூஉம் வழிமுரண் வரத் தொடுப்பதூஉம் சிறப்புடைத்து என்றும் கொள்க.

இனவெழுத்துப் பெற்று மோனை முதலாகிய தொடையும் தொடை விகற்பமும் போலாது வேறுபடத் தொடுப்பது மருட் செந்தொடை யெனப்படும் என்றவாறு.

இனவெழுத்து வருமாறு :

தானமொத்த குறிலும் நெடிலும் தம்முள் இனமாம். அகர ஆகார ஐகார ஒளகாரங்கள் தம்முள் இனமாம். இகர ஈகார எகர ஏகாரங்கள் தம்முள் இனமாம். உகர ஊகார ஒகர ஓகாரங்கள் தம்முள் இனமாம். உயிர்மெய்க்கும் இவ்வாறே ஒட்டிக்கொள்க.

ஒற்றினுள், சகர தகரங்கள் தம்முள் இனமாம். ஞகர நகரங்கள் தம்முள் இனமாம். மகர வகரங்கள் தம்முள் இனமாம்.

இவை அனுவென்றும் வழங்கப்படும். என்னை?

        'அகரமோ டாகார மைகார மௌவாம்
        இகரமோ டீகாரம் எஏ - உகரமோ
        டூகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம்
        ஆகாத வல்ல வனு'

என்றார் 34 ஆகலின்

[இவற்றுள் இலக்கியம் மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டுகொள்க.]


(15) வழியெதுகையாவது ஓரடியிற் பலசீர் எதுகையாக வருதல் ; உ - ம். 'கன்னியம் புன்னை யின்னிழற் றுன்னிய'. வழியெதுகையுள் பொழிப்பெதுகை வருதல் அகவற்குச் சிறப்பு.


(பி - ம்.) 34. காக்கை பாடினியார்,



PAGE__170

அவற்றுள் சில வருமாறு:

        'ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
        வைத்திழக்கும் வன்க ணவர்.'
(குறள். 228)
        'அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்ள்
        சிறுகை யளாவிய கூழ்.'
(குறள், 64.)

இவை இனவெழுத்துப் பெற்று மோனை முதலாகிய தொடையும் தொடை விகற்பமும் போலாமை வேறுபடத் தொடுத்தமையால் மருட் செந்தொடை.

இனி வழியெதுகைக்குச் சொல்லுமாறு :

கட்டளைக் கலித்துறை

        '(16) மண்டலம் பண்டுண்ட திண்டேர் வரகுணன் றொண்டியின்வாய்க்
        கண்டிலந் தண்டுறைக் கண்டதொன் றுண்டு 35கனமகர
        குண்டலங் கெண்டை யிரண்டொடு தொண்டையுங் கொண்டொர்திங்கள்
        மண்டலம் வண்டலம் பக்கொண்ட றாழ வருகின்றதே'

எனவும், 'கொங்கு தங்கு கோதை யோதி' (கா. 13, மேற்.) எனவும் கொள்க. அனுப்பிராச மென்னும் வடமொழியை வழி யெதுகை என்பது தமிழ் வழக்கெனக் கொள்க.

இனி வழிமுரண் வருமாறு : வழிமுரணி வருவன வழிமுரண் என்று வழங்கப்படும்.

விருத்தம்

        'செய்யவாய்ப் பசும்பொன் னோலைச் சீறடிப் பரவை யல்குல்
        ஐயநுண் மருங்கு னோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை
        வெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்ட
        மையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான்'
(சூளா. சீய. 101.)

எனவும்.


(16) தொண்டி - சோழ நாட்டுத் துறைமுகத்து ளொன்று. கண்டல் - தாழை. கெண்டை என்றது கண்களை. தொண்டை - ஆதொண்டைக் கனி; இது வாய்க்கு உவமை. வண்டு அலம்ப ; அலம்ப - ஒலிப்ப. கொண்டல் என்றது கூந்தலை.


(பி - ம்.) 35. கனவயிரக்



PAGE__171

கட்டளைக் கலித்துறை

        `ஒருமால் வரைநின் றிருசுட ரோட்டிமுந் நீர்க்கிடந்த
        பெருமா நிலனுஞ் சிறுவிலைத் தாவுண்டு பேதையர்கண்
        பொருமா தவித்தொங்க 36லெங்கோன்போர் வல்லவன் பூம்பொதியிற்
        கருமா விழிவெண்பற் செவ்வாய்ப் பசும்பொற் கனங்குழைக்கே.ழு

எனவும் கொள்க.

மோனை எதுகையிற் றிரிந்து பாவும் இனமும் வாராமை மேற் காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டுகொள்க.

`நேரிழையேழு என்பது மகடூஉ முன்னிலை.

(6)

(பி - ம்.) 36 லெங்கோன் புரவலன்.


தரவு தாழிசைகட்கு அடிவரையறை

        42. சுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவிரு மூன்றடியே
        தரங்கக்கும் வண்ணகக் குந்தர வாவது தாழிசைப்பாச்
        சுருங்கிற் றிரண்டடி 1யோக்க மிரட்டி 2சுரும்பிமிரும்
        தாங்கக் குழலாய் சுருங்குத் தரவினிற் றாழிசையே.

இ - கை தரவு தாழிசைகட்கு அடியளவு ஆமாறு உணர்த்.....று.

`சுருங்கிற்று மூன்றடி ஏனைத்தரவுழு எ - து. அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவும் வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவும் ஒழித்து அல்லாத கலிப்பாவின் தரவிற்கு மூன்றடிச் சிறுமை எ - று.

பெருமை பாடுவோனது பொருள் முடிவு குறிப்பே. வரையறை இல்லை எனக் கொள்க.

`இரு மூன்றடியே தரங்கக்கும் வண்ணகக்கும் தரவாவதுழு எ - து. அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவுக்கும் வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவுக்கும் பெருக்கம் சுருக்கம் இல்லை. ஆறடியே தரவாவது எ - று.


(பி - ம்.) 1. யோங்கலிரட்டி. 2. சுரும்பிருந்த. சுரும்பிவரும்.



PAGE__172

'சுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவு' என்றாராயினும், கலிப்பாவுக்கு நான்கடியே சிறுமை என்று 'வெள்ளைக் கிரண்டடி' என்னும் காரிகையிற் (கா. 14) சொன்னமையால் தரவு கொச்சகக் கலிப்பாவுக்கு நான்கடியே சிறுமை எ - று.

'தாழிசைப்பாச் சுருங்கிற் றிரண்டடி 3 ஓக்கம் இரட்டி' எ - து. பொதுவகையாற் றாழிசை சொல்லிப் போந்தாராயினும். தாழிசைக்கு இரண்டடிச் சிறுமை, பெருமை நான்கடி, இடை மூன்றடியாய் வருவதெனக் கொள்க.

'சுருங்கும் தரவினில் தாழிசையே' எ - து. தரவடியிற் றாழிசையடி சுருங்கி வரும் எ-று.

இவற்றுக்கு இலக்கியம் மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற் றுள்ளுங் கண்டுகொள்க.

4 சுரும்பு இமிரும் தரங்கக் குழலாய்' எ - து, மகடூஉ முன்னிலை.

(7)

(பி - ம்.) 3. யோங்கலிரட்டி. 4. சுரும்பிவரும், சுரும்பிருந்த.


பாக்களுக்குரிய சில இயல்புகள்

        43. பொருளோ டடிமுத னிற்பது 1கூனது வேபொருந்தி
        இருள்சேர் 2விலாவஞ்சி யீற்றினு நிற்கு மினியொழிந்த
        மருடீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப்
        பொருள்கோள் குறிப்பிசை யொப்புங் குறிக்கொள் பொலங் கொடியே

இ - கை மேற் சொல்லப்பட்ட பாக்கட்கு எல்லாம் எய்தியதோர் இலக்கணம் உணர்த்..று.

கூன்

'பொருளோடு அடிமுதல் நிற்பது கூன்' எ - து. அடி முதற்கண் பாவினது பொருளைத் தழுவித் தனியே நிற்பது கூன் எனப்படும் எ - று.

'அதுவே பொருந்தி இருள் 3சேர்விலா வஞ்சி ஈற்றினும் நிற்கும்' எ - து அக்கூன் வஞ்சிப்பாவின் ஈற்றினும் நிற்கும் எ - று.


(பி - ம்.) 1. கூனடுவே. 2. பிலாவஞ்சி. 3. சேர்பிலா.



PAGE__173

'ஈற்றினும் நிற்கும்' என்ற உம்மையால் வஞ்சிப்பாவில் 4 நடுவினும் கூன் வரப்பெறும் எ - று.

'இருள் சேர்விலா வஞ்சி' என்று சிறப்பித்தவதனால், வஞ்சியடியின் நடுவும் இறுதியும் அசை கூனாய் வருவது சிறப்புடைத்து. சீர் கூனாய் வரினும் உகர மீறாகிய நேரீற்று இயற் சீராய் அல்லது வாராவெனக் கொள்க. கொச்சகக் கலியுள் ஓரடி கூனாய் வரினும் சிறப்பினவாம். ஆசிரியப்பாவிற்கு இடையிலே வருதலின்றி அதன் ஈற்றினும், வெண்பா கலி என்னும் இவற்றின் இடையினும் ஈற்றினும் கூன் வரப்பெறாதெனக் கொள்க. என்னை?

        'அடிமுதற் பொருளைத் தானினிது 5கொண்டு
        முடிய நிற்பது கூனென மொழிப'
        'வஞ்சியி னிறுதியு மாகு மதுவே'
        'அசைகூ னாகு மென்மனார் புலவர்'

என்றார் பல்காயனார்.

கூனைத் தனிச்சொல் என்பாரும் உளர்.

        'அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொலஃ
        திறுதியும் வஞ்சியு ளியலு மென்ப.'

என்றார் ஆகலின். (யா. வி. சூ. 94.)

வரலாறு

நேரிசை வெண்பா

        'உதுக்காண்,
        
        'சுரந்தானா வண்கைச் 6சுவணமாப் பூதன்
        பரந்தானாப் பல்புகழ் பாடி - யிரந்தார்மாட்
        டின்மை யகல்வது போல விருணீங்க
        7 மின்னு 8மளித்தேர் மழை.

இவ்வெண்பாவின் அடிமுதற்கண் 'உதுக்காண்' எனக் கூன் வந்தவாறு கண்டுகொள்க:


(பி - ம்.) 4. முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் கூன் 5. தழுவி. 6. சுவர்னமாப், சுவாணமாப், சுமானமாப். 7. மன்னு 8. மளிதேர்.



PAGE__174

நேரிசை யாசிரியப்பா

        '(1) அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை
        வாடா வள்ளியங் காடிறந் தோரே.
        யானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப்
        பாடமை சேக்கையுட் படர்கூர்ந் திசினே
        அன்ன ளளிய ளென்னாது மாமழை
        இன்னும் பெய்ய முழங்கி
        மின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே.'
(குறுந். 216.)

இவ்வாசிரியத்துள் அடி முதற்கண் 'அவரே' எனவும் இடைக்கண், யானே' எனவும் சீர் கூனாய் வந்தவாறு கண்டு கொள்க.

கொச்சகக் கலிப்பா

        (2) 'உலகினுட்,
        பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்
        இருந்தகைய விறுவரைமே லெரிபோலச் சுடர்விடுமே
        சிறுதகையார் சிறுதகைமை சிறப்பெனினும் பிறழ்வின்றி
        உறுதகைமை யுலகிற்கோ ரொப்பாகித் தோன்றாவே.'

இக்கலிப்பாவினுள் அடிமுதற்கண் 'உலகினுள்' எனச் சீர் கூனாய் வந்தவாறு கண்டுகொள்க.

        'உலகே,
        
        முற்கொடுத்தார் பிற்கொளவும்
        பிற்கொடுத்தார் முற்கொளவும்
        உறுதிவழி யொழுகுமென்ப
        அதனால்
        நற்றிற நாடுத னன்மை
        பற்றற யாவையும் பரிவறத் துறந்தே'

(1) தருமார் - கொணரும்பொருட்டு. வள்ளி - வள்ளிக்கொடி. இறந்தோர் - கடந்து சென்றவர். தோடு ஆர் எல்வளை - தொகுதி பொருந்திய விளக்கத்தை யுடைய வளையல்கள். பாடு அமை -படுத்தல் அமைந்த. சேக்கை - படுக்கை. படர்கூர்ந்திசின் - துன்பம் மிக்கேன்

(2) இறு வரை - பெரிய மலை. ஒப்பு ஆகி - உலகம் ஏற்றுக் கொள்வதாகி.



PAGE__175

என்னுங் குறளடி வஞ்சிப்பாவின் அடிமுதற்கண் 'உலகே' எனச் சீர் கூனாய் வந்தவாறு.

'மாவழங்கலின் மயக்குற்றன - வழி' என்னும் வஞ்சி யடியி னிறுதிக்கண் 'வழி' என அசை கூனாய் வந்தவாறு கண்டு கொள்க.

'கலங்கழாலிற் றுறை கலக்குற்றன' என வஞ்சியடியின் நடுவு 'துறவு' என அசை கூனாய் வந்தவாறு.

'தேரோடத் துகள்கெழுமிய - தெருவு' என்னும் வஞ்சியடியின் இறுதிக்கண் 'தெருவு' என உகரவீறாய் இற்ற நேரீற்று இயற்சீர் கூனாய் வந்தவாறு கண்டுகொள்க.

'காமர் கடும்புனல்' (கலி. 39.) என்னுங் கொச்சகக் கலிப்பாவினுள் 'சிறுகுடியீரே சிறுகுடியீரே' என அடி கூனாய் வந்தவாறு கண்டுகொள்க.

இனி, ஒழிந்த 'மருள்தீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசை வனப்புப் பொருள்கோள் குறிப்பிசை ஒப்பும் குறிக்கொள்' எ - து, மேல் 'எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை பா இனம் கூறுவன்' என்று அதிகாரம் பாரித்த காரிகையுள் (கா. 1.) எடுத்து ஓதப்படாத யாப்புறுப்பாய் மயக்கம் நீக்க வகுக்கப்பட்ட (1) விகாரமும், (2) வகையுளியும், (3) வாழ்த்தும், (4) வசையும், (5) வனப்பும்,(6) பொருளும், (7) பொருள் கோளும், (8) குறிப்பிசையும், (9) செய்யுளொப்புமையும் ஆமாறு உபதேச முறைமையால் உணர்க எ - று.

'பொலங் கொடியே எ - து மகடூஉ முன்னிலை.

(1) விகாரம்

அவற்றுள் : விகாரம் ஆறு வகைப்படும், வலித்தலும் மெலித் தலும் விரித்தலும் தொகுத்தலும் நீட்டலும் குறுக்கலும் என.

        'குறுத்தாட் பூதஞ் சுமந்த
        அறக்கதி ராழியெம் மண்ணலைத் தொழினே.'

இதனுள் 'குறுந்தாள்' எனற்பாலதளைக் 'குறுத்தாள்' என்று வலிக்கும் வழி வலித்தவாறு.



PAGE__176

        'தண்டையி னினக்கிளி கடிவோள்
        பண்டைய ளல்லண் மானோக் கினளே.'

இதனுள் (3) தட்டையெனற்பாலதனைந் தண்டையென்று மெலிக்கும் வழி மெலித்தவாறு.

இன்னிசை வெண்பா

        '(4) வெண்மண லெக்கர் விரிதிரை தந்தநீர்
        கண்ணாடி மண்டிலத் தூதாவி யொத்திழியுந்
        தண்ணந் துறைவர் தகவிலரே தற்சேர்ந்தார்
        வண்ணங் கடைப்பிடியா தார்.'

இதனுள் 'தண்டுறைவர்' எனற்பாலதனைத் 'தண்ணந்துறைவர்' என்று விரிக்கும் வழி விரித்தவாறு.

நேரிசை வெண்பா

        'பூத்தாட் புறவின் 9புனைமதில் கைவிடார்
        காத்தலிற் காமுறுவ 10ரேனையர் - பார்த்துறார்
        வேண்டார் வணங்கி விறன்மதி றான்கோடல்
        வேண்டுமாம் வேண்டார் மகன்.'

இதனுள் 'வேண்டாதாரை வணக்கி' எனற்பாலதனை 'வேண்டார் வணக்கி' என்று தொகுக்கும் வழித் தொகுத்தவாறு.

நேரிசை வெண்பா

        ' (5) பாசிழை யாகம் பசப்பித்தான் 11பைந்தொடீஇ
        மாசேன னென்று மனங்கொளீஇ - மாசேனன்
        சேயிதழ்க் கண்ணி தருதலாற் சேர்த்தியென்
        நோய்தீர நெஞ்சின்மேல் வைத்து.'

இதனுன் 'பச்சிழை' எனற்பாலதனைப் 'பாசிழை' என்று நீட்டும் வழி நீட்டியவாறு.


(3) தட்டை - கிளி கடி கருவி.

(4) கண்ணாடியில் ஊதும் ஆவி : 'தெள்ளற வியற்றிய நிழல் காண் மண்டிலத், துள்ளூதாவியிற் பைப்பய நுணுகி' (அகநா. 71: 13-4.)

(5) பாசிழை என்பது பண்பின் விகாரமே ஒழியச் செய்யுள் விகாரம் அன்றென்பர் பலர்.


(பி - ம்.) 9. புனைமலர் கைவிட்டார், காத்தவிக் காதல ரேனையர்;புனைமதில் கைவிட்டார். 10. ரேழையார், 11. பைந்தொடி.



PAGE__177

        யானை,
        யெருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன்
        றிருந்தார்நன் றென்றேன் றியேன்.
(கா. 24, மேற்.)

இதனுள் 'தீயேன்' எனற்பாலதனைத் 'தியேன்' என்று குறுக்கும் வழிக் குறுக்கியவாறு.

'மருடீர் விகாரம்' என்று சிறப்பித்தவதனால் வரலாற்று முறை மையோடுங் கூட்டி வழங்கி வாரா நின்றவை அல்லது (6) 13துவைக்குப் பாலில்லை எனற்பாலதனைத் 'தூவைக்குப் பாலில்லை' என்றார்போலப் புணர்க்கப்படா வெனக் கொள்க.

இன்னும் 'மருடீர் விகாரம்' என்று சிறப்பித்தவதனால் (7) தலைக்குறைத்தலும், இடைக்குறைத்தலும், கடைக்குறைத்தலும் என இவையும் 14வரலாற்று ழுறைமையோடுங் கூட்டி வழங்கப்படும் எ - று.

வரலாறு

        'மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி.'

இதனுள் 'தாமரை' எனற்பாலதனை 'மரை' என்று தலைக் குறைத்து வழங்கினவாறு.

        'வேதின வெரிநி னோதி முதுபோத்து.'
(குறுந். 140)

இதனுள் 'ஓந்தி' எனற்பாலதனை 'ஓதி' என்று இடைக் குறைத்து வழங்கினவாறு.

        'அகலிரு விசும்பி னாஅல் போல
        வாலிதின் மலர்ந்த புன்கொடி முசுண்டை.'
(மலைபடு. 100-101.)

இதனுள் (8) 'ஆரல்' எனற்பாலதனை 'ஆல்' என்று இடைக் குறைத்தது.


(6) துவை - இறைச்சி.

(7) இவை முறையே முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை எனப்படும்.

(8) ஆரல் - கார்த்திகை மீன்.


(பி - ம்.) 13. தன்னவ்வைக்குப் பாலில்லை எனற்பாலதனைத் தனவைக்குப் 14. விகாரமென்று வருவனவுமுள எ - று.



PAGE__178

        'நீலுண் டுகிலிகை கடுப்ப.'

இதனுள் 'நீலமுண்ட (9) துகிலிகை' எனற்பாலதனை 'நீலுண் துகிலிகை' என்று கடைக்குறைத்து வழங்கினவாறு. பிறவும் அன்ன.

(2) வகையுளி

(10) வகையுளி என்பது முன்னும் பின்னும், அசை முதலாகிய உறுப்புக்கள் நிற்புழி யறிந்து குற்றப்படாமல் வண்ண மறுத்தல். என்னை?

        'அருணோக்கு நீரா ரசைசீ ரடிக்கட்
        பொருணோக்கா தோசையே 15போற்றி - 16மருணீக்கிக்
        கூம்பவுங் கூம்பா தலரவுங் கொண்டியற்றல்
        வாய்ந்த வகையுளியின் மாண்பு'

என்றார் ஆகலின்.

வரலாறு

        'கடியார்பூங் கோதை கடாயினான் றிண்டேர்
        17 சிறியாடன் சிற்றில் சிதைத்து.'

இதனுட் 'கடியார்' என்றும், 'பூங்கோதை' என்றும் புளிமா வாகவும் தேமாங்காயாகவும் 'கடாயினான்' என்று கருவிளமாகவும் இவ்வா றலகிடின் ஆசிரியத் தளையும் கலித்தளையும் தட்டு, 'வெள்ளைத் தன்மை குன்றிப் போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை' (கா. 38) என்னும் இலக்கணத்தோடு மாறுகொள்ளும் ஆதலால் இதனைக் 'கடியார்பூம்' என்று புளிமாங்காயாகவும் கோதையென்று தேமாவாகவும் அலகிடச் சீரும் தளையும் வண்ணமும் சிதையாவாம்.

        'மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
        நிலமிசை நீடுவாழ் வார்'
(குறள், 4.)

இதனுள் 'நீடு' என்றும் 'வாழ்வார்' என்றும் அலகிட ஆசிரியத் தளை தட்டு வெண்பாவின் இறுதிக்கண் 'வார்' என்று அசைச்சீர்


(9) துகிலிகை - எழுது கோல் ; சீவக. 1107.

(10) சிதைந்தசொல் சீராக வருவது வகையுளி.


(பி - ம்.) 15. நோக்கி. 16. மருணீங்கக். 17. சிறியார்தம்.



PAGE__179

ஆகற்பாலது இயற்சீராய், 'நிகரில் வெள்ளைக்கு ஓரசைச் சீரும் ஒளிசேர் பிறப்பும் ஒண் காசு மிற்ற சீருடைச் சிந்தடியே முடிவாம் (கா. 25.) என்னும் இலக்கணத்தோடு மாறுகொள்ளும் ஆதலின் இதனை 'நீடுவாழ்' என்று கூவிளமாகவும் 'வார்' என்று நாள் என்னும் நேரசைச் சீராகவும் அலகிடத் தளையும் வண்ணமுஞ் சிதையாவாம்.

(3) வாழ்த்து

வாழ்த்து இரண்டு வகைப்படும், மெய் வாழ்த்தும் இருபுற வாழ்த்தும் என.

வரலாறு

நேரிசை வெண்பா

        '(11) கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும்
            நீர்நிலை நின்ற 18தவங்கொலோ - கூர்நுனைவேல்
            19வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற்
        கொண்டிருக்கப் பெற்ற குணம்.'
(முத்தொள்.)

இது மெய் வாழ்த்து.

நேரிசை வெண்பா

        'பண்டு மொருகாற்றன் பைந்தொடியைக் கேரட்பட்டு
        வெங்கடத்து வில்லேற்றிக் கொண்டுழந்தான் - தென்களந்தைப்
        20பூமான் றிருமகளுக் கின்னும் புலம்புமால்
        வாமான்றேர் வையையார் கோ.'

இது (12) இருபுற வாழ்த்து.

(4) வசை.

வசை இரண்டு வகைப்படும், மெய் வசையும் இருபுற வசையும் என.


(11) நீலம் - குவளை. நக்கதார் - மலர்ந்த மாலை, நீலம் கொண்டிருக்கப் பெற்ற குணம் தவம்கொலோ.

(12) இருபுற வாழ்த்து - வாழ்த்துப்போன்ற வசை. வாழ்த் தென்பது பெருமையைக் கூறுவது.


(பி - ம்.) 18. பயன்கொலோ. 19. வண்டிருக்குந் தார்மார்பன். 20. பூ மாண்டிரு.



PAGE__180

வரலாறு

நேரிசைவெண்பா

        ' (13) தந்தை யிலைச்சுமடன் 21றாய்தொழிலி தான்பார்ப்பான்
        எந்தைக்கி தெங்ஙனம் பட்டதுகொல் - முந்தை
        அவியுணவி னார்தெரியி னாவதாங் கொல்லோ
        கவிகண்ண னார்தம் பிறப்பு.'

இது மெய் வசை.

        ' (4) படையொடு போகாது நின்றெறிந்தா னென்றும்
        கொடையொடு நல்லார்கட் டாழ்ந்தான் - படையொடு
        பாடி வழங்குந் தெருவெல்லாந் தான்சென்று
        கோடி வழங்கு மகன்.'

இஃது இருபுற வசை.

(5) வனப்பு

வனப்பு எட்டு வகைப்படும், அம்மை அழகு தொன்மை தோல் விருந்து இயைபு புலன் இழைபு என. அவற்றுள்,

அம்மையென்பது (15) சிலவாய மெல்லியவாகிய சொற்களால் ஒள்ளியவாகிய பொருண்மேற் சிலவடியாற் சொல்லப்படுவது. என்னை?

        '(16) சின்மென் மொழியாற் சீர்புனைந் தியாப்பின்
        அம்மை தானே யடிநிமிர் வின்றே'

என்றார் ஆகலின்.


(13) இலைச்சுமடன் - இலைகளைச் சுமந்து சென்று விற்பவன். தொழிலி - வேலைக்காரி. அவியுணவினார் - தேவர்.

(14) இருபுறவசை - வசை போன்ற வாழ்த்து. நின்றெறிதலும், தாழ்தலும், தெருவெல்லாம் செல்லுதலும் இங்கே வசைபோன்று புகழாயிற்று.

(15) கீழ்க்கணக்கு நூல்கள் நீதிநூல் போன்றவை அம்மையின் பாற்படும்.

(16) வனப்பு என்ற தலைப்பின் கீழ் இந்நூலுள் காணப்படும் சூத்திரங்கள் தொல். பொருள், செய்யுளியலிற் காணப்படும் சூத்திரங்களோடு பொருளில் ஒன்றியும் சொல்லமைப்பில் வேறுபட்டும் காணப்படுகின்றன.


(பி - ம்.) 21. றாய்தோழி.



PAGE__181

வரலாறு

        'அறிவினா லாகுவ துண்டோ பிறிதினோய்
        தன்னோய்போற் போற்றாக் கடை'
(குறள், 315.)

எனக் கொள்க.

(17) அழகென்பது - செய்யுட் சொல்லாகிய திரி சொற்களால் ஓசை இனியவையாகப் புணர்க்கப்படுவது. என்னை?

        'செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பின்
        அவ்வகை தானே யழகெனப் படுமே'

என்றார் ஆகலின்.

வரலாறு

நேரிசை யாசிரியப்பா

        '(18) துணியிரும் பௌவங் குறைய வாங்கி
        அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி
        காலொடு மயங்கிய கனையிரு ணடுநாள்
        யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப
        நெடுவரை மருங்கிற் 22 பாம்புற விழிதருங்
        கடுவரற் கலுழி நீந்தி
        வல்லியம் வழங்குங் கல்லதர் நெறியே'

எனக் கொள்க.

(19) தொன்மை யென்பது பழமைத்தாய் நிகழ்ந்த பெற்றி யுரைக்கப்படும் அவற்றின் மேற்று. என்னை?

        'சுரிகுழன் மடவாய் தொன்மை தானே
        யுரையொடு புணர்ந்த பழமை மேற்றே'

என்றார் ஆகலின்.


(17) அழகென்பது எட்டுத்தொகை நூல்கள் போன்றது.

(18) பௌவம் - கடல். எழிலி - மேகம். கலுழி - காட்டாறு. காட்டாற்றுக்குப் பாம்பு உவமை. வல்லியம் - புலி. கல் அதர் - மலைவழி. வெற்ப நெறி யாங்கு வந்தனையோ.

(19) தொன்மை என்பது செய்யுளும் வசனமும் தழுவி வந்த கதை முதலியன. தகடூர் யாத்திரை, சிலப்பதிகாரம் முதலியன உதாரணமாம்.


(பி - ம்.) 22. பாம்பு பட விழி தருங்.



PAGE__182

வரலாறு

        'செறிதொடி யுவகை கேளாய் செஞ்சுடர்த்
        தெறுகதிர்ச் செல்வன் செய்வதென்'

என்பதூஉம், பாரதம் இராமாயணம் முதலாயினவும் கொள்க.

'தோல்' என்பது இழுமென மெல்லியவையாகிய சொற்களான் விழுமியவாய்க் கிடப்பனவும், (20) எல்லாச் சொற்களோடுங் கூடிப் பலவடியும் மயங்கி வந்தனவாய்க் கிடப்பனவும் என இருதிறத்தனவாம். என்னை?

        'இழுமென் மொழியால் விழுமியது நுவவினும்
        பரந்த மொழியா னடிநிமிர்ந் தொழுகினுந்
        தோலென மொழிப 23தொன்னெறிப் புலவர்'

என்றார் ஆகலின்.

வரலாறு

நிலைமண்டிலவாசிரியப்பா

        'பாயிரும் பரப்பகம் 24புதையப் பாம்பின்
        ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைத்
        25துளிதரு வெள்ளந் துயில்புடை பெயர்க்கும்
        ஒளியோன் காஞ்சி யெளிதெனக் கூறின்
        இம்மை யில்லை மறுமை யில்லை
        நன்மை யில்லை தீமை யில்லை
        செய்வோ ரில்லை செய்பொரு ளில்லை
        அறிவோர் யாரஃ திறுவழி யிறுகென.'

இது மார்க்கண்டேயனார் காஞ்சி. இஃது இழுமென் மொழியால் விழுமியது நுவன்றவாறு.

'திருமலை தலைஇய விருணிற விசும்பின்' என்பது (26மலை படுகடாம்) பரந்தமொழியால் அடி நிமிர்ந்தொழுகியது.

(21) விருந்தென்பது புதிய வாயினவற்றின் மேற்று என்னை?


(20) பலவடியும் மயங்கி எல்லாச் சொற்களோடுங் கூடி வருவன பத்துப் பாட்டைப் போன்றன.

(21) கலம்பகம் - உலா, தூது, பரணி. பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்தங்கள் விருந்து என்பதற்கு உதாரணமாம்.


(பி - ம்.) 23. தொன்மொழிப். 24. குறையப். 25. துணிதரு 26. கூத்தராற்றுப்படை.



PAGE__183

        'வெதிர்புரை தோளாய் விருந்து தானே
        புதுவது புனைந்த யாப்பின் மேற்றே.'

அவை இப்பொழுதுள்ளாரைப் பாடுவன. வந்தவழிக் கண்டு கொள்க.

இயையென்பது ஞணநமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியும் ஈறாக வந்த பாட்டு. என்னை?

        'ஞகார முதலா ளகார லீற்றுப்
        புள்ளி யிறுதி யியைபெனப் படுமே'

என்றார் ஆகலின் (22) அவை வந்துழிக் கண்டு கொள்க.

(23) புலன் என்பது இயற் சொல்லாற் பொருள் தோன்றச் சொல்லப்படுவது. என்னை?

        27 'தெரிந்த மொழியாற் செவ்வி திற்புணர்ந்த
        தோதல் வேண்டாது குறித்தது தோன்றிற்
        புலனென மொழிப புலனுணர்ந் தோரே'

என்றார் ஆகலின்.

வரலாறு

நேரிசை யாசிரியப்பா

        'பார்க்கடன் முகந்த பருவக் கொண்மூ
        வார்ச்செறி முரசின் முழங்கி யொன்னார்
        மலைமுற் றின்றே வயங்குதுளி சிதறிச்
        சென்றவ டிருமுகங் காணக் கடுந்தேர்
        இன்றுபுகக் கடவுமதி பாக வுதுக்காண்
        மாவொடு புணர்ந்த மாஅல் போல
        இரும்பிடி யுழைய தாகப்
        28பெருங்காடு மடுத்த காமர் களிறே'

எனக் கொள்க.


(22) மணிமேகலையும், பெருங்கதையும் இயைபுக்கு உதாரணம். இயைபு பொருட்டொடராகவும் சொற்றொடராகவும் செய்யப்படும் பாட்டு.

(23) புலனுக்கு உதாரணம் சேரிமொழிகள் பயின்று வந்த குறம். குறவஞ்சி ஏனைய நாடகங்கள், பள்ளு, ஏற்றப்பாட்டு முதலியன.


(பி - ம்.) 27. சேரிமொழியாற். 28. பெருங்கரமெடுத்த



PAGE__184

(24) இழைபு என்பது - வல்லொற்று யாதும் தீண்டாது செய்யுளியலுடையார் எழுத்தெண்ணி அடிவகுக்கப்பட்ட குறளடி முதலாகப் பதினேழ் நிலத்து ஐந்தடியும் முறையானே உடைத்தாய் ஓங்கிய சொற்களான் வருவது. என்னை?

        'ஒற்றொரு புணர்ந்த வல்லெழுத் தடக்காது
        குறளடி முதலா வைந்தடி காறும்
        ஓங்கிய மொழியா னாங்ஙன மொழியின்
        இழைபி னிலக்கண மியைந்த தாகும்'

என்றார் ஆகலின்.

(25) செய்யுளியலுடையார் நாற்சீரடி தன்னையே நாலெழுத்து முதலா ஆறெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் குறளடி என்றும், ஏழெழுத்து முதலா ஒன்ப தெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் சிந்தடி என்றும், பத்தெழுத்து முதலாப் பதினான் கெழுத்தின் காறும் உயர்ந்த ஐந்தடியும் அளவடி என்றும், பதினைந் தெழுத்து முதலாப் பதினேழெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் நெடிலடி என்றும், பதினெட்டெழுத்து முதலா இருபதெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் கழிநெடிலடி என்றும் வேண்டுவர். இருபதெழுத்தின் மிக்க நாற்சீரடிப்பா இல்லை எனக் கொள்க.

எழுத்து எண்ணுகின்றுழிக் குற்றியலுகரமும், குற்றியலிகரமும், ஒற்றும் ஆய்தமும் ஒழிந்த உயிரும் உயிர்மெய்யுங் கூட்டி எண்ணப் படும். என்னை?

        'குற்றிகரங் குற்றுகர மென்றிரண்டு மாய்தமும்
        29ஒற்று மெனவொரு நான்கொழித்துக் - கற்றோர்

(24) இழைபு என்பது இசைப்பாட்டுக்கள். கலியும் பரிபாடலும் போன்றவையும் அபிநயத்துக்குப் பயன்படும் பாட்டுக்களும் ஆம். நிலம் - இசைப்பாட்டின் தானம். குறளடி முதல் கழிநெடிலடி யீறாக உள்ள ஐந்தடிகளுக்கு முரிய எழுத்துக்களின் எண்ணைக்கொண்டு கணக்கிடப்படுவது இது. நிலம் பதினேழு ஆவன : குறளடிக்கு 3-நிலம், சிந்தடிக்கு 3-நிலம், அளவடிக்கு 5-நிலம், நெடிலடிக்கு 3-நிலம். கழிநெடிலடிக்கு 3-நிலம், ஆக 17-நிலம்.

(25) செய்யுளியலுடையார் - தொல்காப்பியனார். நாற்சீர் கொண்ட அளவடி ஒன்றனையே எழுத்தெண்ணி அது குறளடி முதல் ஐந்தடிகளில் ஒன்று என்று கணக்கிடுவர் தொல்காப்பியனார்.


(பி - ம்.) 29. ஒற்றுமெனவோர்நான் ககற்றியே.



PAGE__185

        உயிரு முயிர்மெய்யு 30மோதினா ரெண்ணச்
        செயிர்தீர்த்த செய்யு ளடிக்கு'

என்றார் ஆகலின்.

வரலாறு

நேரிசை யாசிரியப்பா

        (26) 'போந்து போந்து சார்ந்து சார்ந்து
        தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து
        வண்டு சூழ விண்டு வீங்கி
        நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம்
        ஊர்வா யூதை வீச வீர்வாய்
        மதியேர் 31நுண்டோ டொல்கி மாலை
        நன்மணங் கமழும் பன்னெல் லூர
        அமையேர் மென்றோ ளாயரி நெடுங்கண்
        இணையீ ரோதி யேந்திள வனமுலை
        இறும்பமர் மலரிடை யெழுந்த மாவின்
        நறுந்தகை துயல்வரூஉஞ் செறிந்தேந் தல்குல்
        32அணிநடை யசைஇய வரியமை சிலம்பின்
        மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல்
        ஒளிநிலவு வயங்கிழை யுருவுடை மகளிரொடு
        நளிமுழவு முழங்கிய வணிநிலவு மணிநகர்
        இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை
        கலனளவு கலனளவு கலனளவு கலனளவு
        பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ
        தொருநீ மறைப்பி னொழிகுவ தன்றே.'

எனக் கொள்க.

(6) பொருள்

இனிப் 'பொருள் கோள்' என்பது உம்மைத் தொகை, பொருளும் பொருள்கோளும் என.


(26) குற்றியலிகரம் குற்றியலுகரம் ஒற்று ஆய்தம் இவற்றை ஒழித்து எழுத்தெண்ணி இவ்வாசிரியப்பாவின் அடிகளில் எவை குறளடி, எவை சிந்தடி, எவை அளவடி, எவை நேரடி, எவை கழி நெடிலடி என்று கணக்கிட்டுக் கொள்க என்றவாறு.


(பி - ம்.) 30. மோதினார் கொள்ளச். 31. வண்டோ. 32. அணி நல னசைஇய அணிநகை.



PAGE__186

        'அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
        பொருளல்ல தவ்வூன் றினல்.'
(குறள், 254)

இதனுள் அருளும் அருளல்லதும் என்றார் போலக் கொள்க.

அவற்றுள் பொருளாவன : குறிஞ்சி, கைக்கிளை முதலிய (27) அகமும் அகப்புறமும், வெட்சி, பாடாண்பாட்டு முதலிய புறமும், புறப்புறமும் என இவை. (28) அவை அவ்விலக்கணங் கூறிய நூல்களுட் கண்டுகொள்க.

(7) பொருள்கோள்

இனிப் பொருள் கோள் ஒன்பது வகைப்படும். அவை (1) நிரனிறை மொழிமாற்று, (2) சுண்ண மொழி மாற்று, (3) அடிமறி மொழிமாற்று, (4) அடி மொழிமாற்று, (5) பூட்டுவிற் பொருள் கோள், (6) புனலாற்றுப் பொருள் கோள், (7) அளை மறி பாப்புப் பொருள் கோள், (8) தாப்பிசைப் பொருள் கோள், (9) கொண்டு கூட்டுப் பொருள் கோள் என இவை.

அவற்றுள், நிரனிறை இரண்டு வகைப்படும், பெயர் நிரனிறை யும் வினை நிரனிறையும் என.

அவற்றுள் பெயர் நிரனிறை வருமாறு :

இன்னிசை வெண்பா

        (29) 'கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி
        மதிபவள முத்த முகம்வாய் முறுவல்

(27) அகம் என்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணையாம். அகப்புறமாவது : காந்தளும், வள்ளியும், சுரநடையும், முதுபாலையும், தாபதமும், தபுதாரமும், குற்றிசையும், குறுங்கலியும், பாசறை முல்லையும், இல்லாண்முல்லையும் என்றிவை பத்தும் கைக்கிளையும் பெருந்திணையும் ஆம். புறமாவது : வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி உழிஞை, நொச்சி, தும்பை என்னும் ஏழாம். புறப்புறமாவது : வாகை, பாடாண், பொதுவியல் என்னும் மூன்றாம்.

(28) சில பிரதிகளில் இங்கே, 'இவற்றின் விகற்ப மெல்லாம் பன்னிரு படலத்துள்ளும் வெண்பா மாலையுள்ளும் கண்டு கொள்க' என்ற தொடர் காணப்படுகிறது.

(29) கொட்டை - வட்ட வடிவமாகச் செய்யப்படும் ஓரணை கொடி நுசுப்பு, குவளை கண், கொட்டை மேனி' என்றும். 'மதி முகம் பவளம் வாய் முத்தம் முறுவல்' என்றும், 'பிடிநடை, பிணை நோக்கு, மஞ்ஞை சாயல்' என்றும் கூட்டுக.



PAGE__187

        பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல்
        வடிவினளே வஞ்சி மகள்'

எனக் கொள்க.

இனி, வினை நிரனிறை வருமாறு :

நேரிசை வெண்பா

        (30) 'காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப
        பொதுசேர் தார்மார்ப போர்ச்செழிய - நீதியால்
        மண்ணமிர்த மங்கையர்தோள் மாற்றாரை யேற்றார்க்கு
        நுண்ணிய வாய பொருள்.'

எனவும்,

இன்னிசை வெண்பா

        (31) ' அடல்வே லமர்நோக்கி நின்முகங் கண்டே
        உடலு மிரிந்தோடு 33மூழ்மலரும் பார்க்கும்
        கடலுங் கனையிருளு மாம்பலும் பாம்புந்
        தடமதிய மாமென்று தான்.'

எனவும் கொள்க.

[இனி, முறை நிரனிறை, எதிர் நிரனிறை, மயக்க நிரனிறை என்று வேண்டுவாரு முளரெனக் கொள்க. அவை (32) வந்த வழிக் கண்டு கொள்க.]


(30) கா - காப்பாற்று. து - உண். தாழ் - தாழ்த்து. ஆய் - ஆராய்ச்சி செய். காது சேர் தாழ் குழை ஆய் என்ற வினைகளை நிரலே மண் முதலியவற்றோடு கூட்டி 'மண்கா, அமிர்தம் து, தோள்சேர் மாற்றாரைத் தாழ், ஏற்றார்க்குக் குழை, பொருள் ஆய் என்று முடிக்க.

(31) நோக்கி : விளி. உடலும் - பொங்கிவரும். ஊழ் - முறை. 'கடல் உடலும், இருள் இரிந்தோடும். ஆம்பல் மலரும், பாம்பு பார்க்கும்' எனக்கூட்டுக.

(32) நன். சூ. 414, சங்கர. முதலியவற்றிற் காண்க. நிரனிறைப் பொருள் கோளை ஓர் அணியாகக் கொள்வர் தண்டியலங்கார ஆசிரியரும் மாறனலங்கார ஆசிரியரும்.


(பி - ம்.) 33. முண்மலரும்.


PAGE__188

இனி, (33) சுண்ண மொழிமாற்று வருமாறு :

சிந்தியல் வெண்பா

        'சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
        யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
        கானக நாடன் சுனை.'

இதனுள், 'சுரை' என்பதனோடு 'மிதப்ப' என்பது பொருள் கொள்ளவும், 'அம்மி' என்பதனோடு 'ஆழ' என்பது பொருள் கொள்ளவும், 'யானை' என்பதனோடு 'நிலை' என்பது பொருள் கொள்ளவும், 'முயல்' என்பதனோடு 'நீத்து' என்பது பொருள் கொள்ளவும் வந்தமையால் சுண்ண மொழிமாற்று.

இனி, அடி மறி மொழிமாற்று வருமாறு :

அடிமறி மண்டில வாசிரியப்பா

        'சூரல் பம்பிய சிறுகா னியாறே
        சூரர மகளி ராரணங் கினரே
        வார லெனினே யானஞ் சுவனே
        சார னாட நீவர லாறே.'
(கா. 28. மேற்)

என்னும் பாட்டு வேண்டிற் றோரடி முதலாகச் சொன்னாலும் ஓசையும் பொருளுங் கொண்டு நிற்றலால் அடிமறி மொழி மாற்று.

இனி, அடி மொழி மாற்று வருமாறு :

குறள் வெண்பா

        'ஆலத்து மேல குவளை குளத்துள
        வாலி னெடிய குரங்கு.'

இதனை 'ஆலத்து மேல வாலி னெடிய குரங்கு' எனவும், 'குவளை குளத்துள' எனவும் இரண்டடியின் மொழி மாற்றிப் பொருள் கொண்டமையால் அடி மொழி மாற்று. இதனை இரண்டடி மொழிமாற்று எனினும் அமையும்.


(33) ஓரடியிலுள்ள மொழிகளை மாற்றிப் பொருள் கொள்ள வழங்குவது சுண்ண மொழி மாற்று.



PAGE__189

இனி, பூட்டுவிற் பொருள்கோள் வருமாறு :

நேரிசை வெண்பா

        'திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாதர்
        இறந்து படிற்பெரிதா மேதம் - உறந்தையர்கோன்
        தண்ணார மார்பிற் றமிழர் பெருமானைக்
        கண்ணாரக் காணக் கதவு.'

இதனுள் 'திறந்திடுமின்' என்பது கதவென்பதனோடு 34நோக்குடைமையிற் (34) பூட்டுவிற் பொருள்கோளாயிற்று.

இனி புனல் யாற்றுப் பொருள்கோள் வருமாறு :

இன்னிசை வெண்பா

        'அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்
        விலைப்பாலிற் கொண்டூன் மிசைவதூஉங் குற்றம்
        சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம்
        கொலைப்பாலுங் குற்றமே யாம்.'
(நான்மணிக். 28)

இஃது அடிதோறும் பொருளற்று வந்தமையாற் (35) புனல் யாற்றுப் பொருள்கோள்.

இனி, அளைமறி பாப்புப் பொருள்கோள் வருமாறு :

ஆசிரிய விருத்தம்

        '(36) தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து
        தண்டூன்றித் தளர்வார் தாமுஞ்
        
        சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற்
        சுழல்வார் தாமும்
        
        மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்று
        35முனிவார் தாமும்

(34) பூட்டுவிற் பொருள்கோளை ஓர் அணியாகக் கொள்வர் மாறனலங்கார முடையார்

(35) யாற்று நீர்ப் பொருள்கோள், யாற்று வரவுப் பொருள்கோள், ஆற்றொழுக்குப் பொருள்கோள் எனவும் இது கூறப்படும்.

(36) நாற்கதி : தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி, நரககதி, மூழ்ந்த - பற்றிக்கொண்ட. அளை - புற்று.


(பி - ம்.) 34. பொருள்கொண்டமையாற். 35. முயல்வார்.



PAGE__190

        வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி
        முயலா தாரே.'

இதனுள் 'வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறி முன்னி முயலாதார்' என்னும் இறுதிச் சொல், இடையும் முதலும் சென்று பொருள் கொண்டமையால் 'அளைமறி பாப்புப் பொருள் கோள்.'

(8) தாப்பிசைப் பொருள்கோள்

இனி, தாப்பிசைப் பொருள்கோள் வருமாறு :

        'உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
        அண்ணாத்தல் செய்யா தளறு.'
(குறள், 255)

'இதனுள் ஊன் உண்ணாமை யுள்ளது உயிர்நிலை' எனவும் 'ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யா தளறு' எனவும் நடுநின்ற 'ஊன்' என்னும் சொல் முன்னும் பின்னும் பொருள் கொண்டமையால் (37) தாப்பிசைப் பொருள்கோளாயிற்று.

(9) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

இனிக் கொண்டு கூட்டுப் பொருள்கோள் வருமாறு :

இன்னிசை வெண்பா

        'தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
        வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி
        அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
        வங்கத்துச் சென்றார் வரின்.'

இதனுள், 'தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண் கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனிப் பசலை' எனவும், 'அஞ்சனத்தன்ன பைங்கூந்தல்' எனவுஞ் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் (38) கொண்டு கூட்டுப் பொருள்கோளாயிற்று.


(37) தாப்பிசைப் பொருள் கோள் - கயிற்றினாற் கட்டப்பட்ட ஊசல் போன்ற பொருள் கோள். அணியிலக்கண வகையுள் இது இடைநிலைத் தீவகத்தின்பாற் படும்.

(38) ஓரடியுள் மொழிகளை மாற்றிப் பொருள் கொள்வது சுண்ண மொழி மாற்று; ஈரடிகளில் மொழிகளை மாற்றிப் பொருள்கொள்வது; அடிமொழிமாற்று;



PAGE__191

        ['ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும்
        பாரி பறம்பின்மேற் றண்ணுமை - காரி
        விறன்முள்ளூர் வேங்கைவீ தானாணுந் தோளாள்
        நிறனுள்ளூ ருள்ளு தலர்.'

இதனுள் 'தண்ணுமை நாணும் தோளாள்' என்றும், 'நிறம் வேங்கை வீ' என்றும், 'அலர் ஆரிய மன்னர் பறையின் எழுந் தியம்பும் முள்ளூர்' என்றும் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் இதுவும் கொண்டு கூட்டுப் பொருள் கோள் ஆயிற்று.]

(8) குறிப்பிசை

இனி, குறிப்பிசை என்பது எழுத்திலோசையான் வந்த (39) முற்கும் வீளையும் இலதையும் அனுகரணமும் முதலாக உடையன செய்யுளகத்து வந்தால் அவற்றையும் செய்யுள் நடை அழியாமல் அசையும் சீரும் அடியும் தொடையும் பிழையாமல் கொண்டு அலகிட்டு வழங்கப்படும் எ - று.

வரலாறு

நேரிசை வெண்பா

        ' (40) மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ
        கென்று திரியு மிடைமகனே - சென்று
        மறியாட்டை யுண்ணாமல் வன்கையால் வல்லே
        அறியாயோ வண்ணாக்கு மாறு'

எனக் கொள்க.

ஒழிந்தனவும் இடைக்காடனார் பாடிய (41) ஊசிமுறி யுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டுகொள்க. என்னை?


பலவடிகளில் மொழிகளை மாற்றிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டு என்று இவை தம்முள் வேறுபாடு உணர்க.

(39) முற்கு - முக்குதலின் ஒலி. வீளை - சீழ்க்கையடித்தலின் ஓசை இலதை, அனுகரணம் - ஒலிக்குறிப்பு ; ஒப்பாகத் தோன்றுவது என்பது பொருள்.

(40) மறி - ஆட்டுக்குட்டி, அண்ணாக்கும் ஆறு - தலையை நிமிர்க்கும் விதத்தை. 'ஆட்டை மறி யுண்ணாமல்' என்று கூட்டுக.

(41) இத்தொடர் எல்லாச் சுவடிகளிலும் 'ஆசிரிய முறி' என்றே காணப்படுகிறது.



PAGE__192

        'எழுத்த லிசையன அசையொடு சீர்க்கண்
        நிறைக்கவும் படுமென நேர்ந்திசி னோரே'

என்றார் ஆகலின்.

(9) ஒப்பு

இனி, 'ஒப்பும்' என்பது மேற் சீரும், தளையும், அடியும், வரை யறுக்கப்பட்ட பாவும், பாவினமும் சொன்ன பெற்றியிற் றிரிந்து மிக்குங் குறைந்தும் வந்தாலும் அவற்றை ஒரு புடை ஒப்புமை நோக்கி 36அவ்வச் செய்யுட்களின் பாற்படுத்தி அப்பெயரானே வழங்கப்படும் எ - று.

வரலாறு

        '(42) கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந்
        தாழியு ணீலத் தடங்கணீர் போதுமினோ
        ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்
        கூழை நனையக் குடைந்து குரைபுனல்
        ஊழியு 37மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்.'

மேல் நாற்சீர் நாலடியான் வருவது கலிவிருத்தம் என்று வரையறத்துச் சொன்னார் (கா. 33); இஃது ஐந்தடியான் வந்த தாயினும் ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின் பாற்படுத்தி வழங்கப்படும். இதனைத் தரவு கொச்சகம் எனினும் இழுக்காது. இஃது அவினயனார் காட்டியது.

        'சுற்றுநீர் சூழ்கிடங்கிற்
        பொற்றாமரைப் பூம்படப்பைத் தெண்ணீர்
        நல்வய லூரன் கேண்மை
        அல்லிருங் கூந்தற் கலரா னாதே.'

மேல் வஞ்சிப்பாவுக்கு மூன்றடிச் சிறுமை என்று வரையறுத்துச் சொன்னார் (கா. 14); இஃது இரண்டடியான் வந்ததாயினும் ஒரு புடை ஒப்புமை நோக்கி வஞ்சிப்பாவின் பாற்படுத்து வழங்கப்படும் எ - று. வஞ்சிப்பா இரண்டடியானும்


(42) குக்கில் - செம்போத்து என்னும் பறவை. தாழியுள் நீலம் - சட்டியில் வளர்க்கும் குவளை. அறிவன் - அருகபரன். கூழை - கூந்தல்.

(பி - ம்.) 36. ஒழிந்த செய்யுட்களின் பாற்படுத்தி வழங்கப். 37. மாடுவா.



PAGE__193

வரப்பெறும் என்று சொன்னார் ஒருசார் ஆசிரியர் எனக் கொள்க. பிறவும் புராண கவிஞராற் சொல்லப்பட்ட இலக்கியங்களை இவ் விலக்கணத்தால் ஒரு புடை ஒப்புமை நோக்கி மிக்கதனால் பெயர் கொடுத்து வழங்கப்படும் எ - று.

இனி, ஒப்பும் என்ற உம்மையால் வண்ணமும், புனைந்துரையும், அடி இன்றி நடப்பனவும், ஓரடியான் நடப்பனவும் ஆமாறு உரைத்துக் கொள்க.

வண்ணம்

அவற்றுள் வண்ணம் நூறு திறத்தன. அவை வருமாறு :

தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என்று இவ் வைந்தினையும் முதல் வைத்து,

அகவல் வண்ணம், ஒழுகல் வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்று இந்நான்கினையும் இடை வைத்து,

குறில் வண்ணம், நெடில் வண்ணம், வலி வண்ணம், மெலி வண்ணம், இடைவண்ணம் என்று இவ்வைந்தினையும் கடை வைத்துக் கூட்டியுறழ நூறு வண்ணமும் பிறக்கும்; என்னை?

        'தூங்கேந் தடுக்கல் பிரிதன் மயங்கிசை வைத்துப் பின்னும்
        பாங்கே யகவ லொழுகல் வலிமெலி பாற்படுத்தியுட்
        டூங்கே குறினெடில் வல்லிசை மெல்லிசை யோடிடையுந்
        தாங்கா துறழ்தரத் தாம்வண்ணம் நூறுந் தலைப்படுமே'

என்றார் ஆகலின். அவை உறழுமாறு :

தூங்கிசை வண்ணம் - 20

        குறிலகவற் 	றூங்கிசை 	குறில் வல்லிசைத் 	தூங்கிசை
        நெடிலகவற் 	'' 	நெடில் வல்லிசைத் 	''
        வலியகவற் 	'' 	வலி வல்லிசைத் 	''
        மெலியகவற் 	'' 	மெலி வல்லிசைத் 	''
        இடையகவற் 	'' 	இடை வல்லிசைத் 	''
        குறிலொழுகற் 	'' 	குறின் மெல்லிசைத் 	''
        நெடிலொழுகற் 	'' 	நெடின் மெல்லிசைத் 	''
        வலியொழுகற் 	'' 	வலி மெல்லிசைத் 	''
        மெலியொழுகற் 	'' 	மெலி மெல்லிசைத் 	''
        இடையொழுகற்        ''        இடை மெல்லிசைத்        ''
        கா. 13
        


PAGE__194

ஏந்திசை வண்ணம் - 20

        குறிலகவ 	
        
        லேந்திசை
        குறில் வல்லிசை 	
        
        யேந்திசை
        நெடிலகவ
        வலியகவ
        மெலியகவ
        இடையகவ
        குறிலொழுக
        நெடிலொழுக
        வலியொழுக
        மெலியொழுக
        இடையொழுக
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        நெடில் வல்லிசை
        வலி வல்லிசை
        மெலி வல்லிசை
        இடை வல்லிசை
        குறின் மெல்லிசை
        நெடின் மெல்லிசை
        வலி மெல்லிசை
        மெலி மெல்லிசை
        இடை மெல்லிசை
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''

அடுக்கிசை வண்ணம் - 20

        குறிலகவ 	
        
        லடுக்கிசை
        குறில் வல்லிசை 	
        
        யடுக்கிசை
        நெடிலகவ
        வலியகவ
        மெலியகவ
        இடையகவ
        குறிலொழுக
        நெடிலொழுக
        வலியொழுக
        மெலியொழுக
        இடையொழுக
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        நெடில் வல்லிசை
        வலி வல்லிசை
        மெலி வல்லிசை
        இடை வல்லிசை
        குறின் மெல்லிசை
        நெடின் மெல்லிசை
        வலி மெல்லிசை
        மெலி மெல்லிசை
        இடை மெல்லிசை
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''

பிரிந்திசை வண்ணம் - 20

        குறிலகவற் 	
        
        பிரிந்திசை
        குறில் வல்லிசைப் 	
        
        பிரிந்திசை
        நெடிலகவற்
        வலியகவற்
        மெலியகவற்
        இடையகவற்
        குறிலொழுகற்
        நெடிலொழுகற்
        வலியொழுகற்
        மெலியொழுகற்
        இடையொழுகற்
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        ''
        நெடில் வல்லிசைப்
        வலி வல்லிசைப்
        மெலி வல்லிசைப்
        இடை வல்லிசைப்
        குறின் மெல்லிசைப்
        நெடின் மெல்லிசைப்
        வலி மெல்லிசைப்
        மெலி மெல்லிசைப்
        இடை மெல்லிசைப்


PAGE__195

மயங்கிசை வண்ணம் - 20

        குறிலகவன் 	மயங்கிசை 	குறில் வல்லிசை 	மயங்கிசை
        நெடிலகவன் 	'' 	நெடில் வல்லிசை 	''
        வலியகவன் 	'' 	வலி வல்லிசை 	''
        மெலியகவன் 	'' 	மெலி வல்லிசை 	''
        இடையகவன் 	'' 	இடை வல்லிசை 	''
        குறிலொழுகன் 	'' 	குறின் மெல்லிசை 	''
        நெடிலொழுகன் 	'' 	நெடின் மெல்லிசை 	''
        வலியொழுகன் 	'' 	வலி மெல்லிசை 	''
        மெலியொழுகன் 	'' 	மெலி மெல்லிசை 	''
        இடையொழுகன்
        
        
        ''
        
        இடை மெல்லிசை
        
        
        ''

இவ் வண்ண விகற்பம் ஓதினார் 38கையனார் முதலாகிய ஒரு சாராசிரியர் எனக் கொள்க.

இனித் தொல்காப்பினார் வண்ணம் இருபதென் றோதினார். என்னை?

        'வண்ணந் தானே நாலைந் தென்ப.'
        'அவைதாம்,
        பாஅ வண்ணந் தாஅ வண்ணம்
        வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்
        இயைபு வண்ண மளபெடை வண்ணம்
        நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணம்
        சித்திர வண்ணம் நலிபு வண்ணம்
        அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்
        ஒழுகு வண்ண மொரூஉ வண்ணம்
        எண்ணு வண்ண மகைப்பு வண்ணம்
        தூங்கல் வண்ண மேந்தல் வண்ணம்
        உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென்
        றாங்கவை யென்ப வறிந்திசி னோரே.'
(தொல். பொருள். சூ. 524, 25.)

இவ் வண்ண விகற்பம் எல்லாம் தொல்காப்பியத்துள்ளும், யாப்பருங்கல விருத்தியுள்ளும் கண்டுகொள்க.


(பி - ம்.) 38. அவிநயனார்.



PAGE__196

புனைந்துரை

இனி, புனைந்துரை இரண்டு வகைப்படும், பெரியதனைச் சுருக் கிச் சொல்லுதலும், சிறியதனைப் பெருக்கிச் சொல்லுதலும் என என்னை?

        `உரைக்கப் படும்பொருட் கொத்தவை யெல்லாம்
        புகழ்ச்சியின் மிக்க புனைந்துரை 39யாகும்ழு

என்றார் ஆகலின்.

வரலாறு

நேரிசை வெண்பா

        `அடையார்ப்பூங் கோதையாட் கல்குலுந் தோன்றும்
        புடையார் வனமுலையுந் தோன்றும் - இடையாதும்
        40கண்கொள்ளா வாயினுங் காரிகை நீர்மையாட்
        குண்டாக வேண்டு நுசுப்பு.'

இது (43) பெரியதனைச் சுருக்கிற்று.

நேரிசை வெண்பா

        (44) `அவாப்போ 41லகன்றத னல்குன்மேற் சான்றோர்
        உசாப்போல வுண்டே மருங்குல் - உசாவினைப்
        பேதைக் குரைப்பான் பிழைப்பிற் பெருகினவே
        கோதைக்கொம் பன்னாள் குயம்.'

இது சிறியதனைப் பெருக்கிற்றும் பெரியதனைச் சுருக்கிற்றும். இதனுள் `சான்றோர் உசாப்போல வுண்டே மருங்குல்ழு என்பது பெரியதனைச் சுருக்கிற்று. அல்லன சிறியதனைப் பெருக்கின.


(43) உளதாகிய இடையை, `கண் கொள்ளாழு என்றமையால் பெரியதனைச் சுருக்கிற்று.

(44) அல்குலின் பரப்புக்கு ஆசையின் பரப்பைக் கூறியது சிறியதனைப் பெருக்கிற்று. உசா - ஆராய்ச்சி. ஆராய்ச்சியைப் பேதைக்கு உரைப்பவனுக்குப் பிழை பெருகும். `குயம் பிழைப்பிற் பெருகினவேழு என்பதும் சிறியதனைப் பெருக்கிற்று. நுட்பமான ஆராய்ச்சி இடைக்கு உவமை.


(பி - ம்.) 39. யென்ப. 40. கண்டுகொளாதாயினுங். 41. லகன்றதேயல் குலுஞ் சான்றோர்



PAGE__197

        '(45) பொன்மலி கச்சி பூமலி கூடல்
        மாரி யீகை மணிமாடம்'

இவை சிறியதனைப் பெருக்கின.

அடியின்றி நடப்பனவும் ஓரடியால் நடப்பனவும்

இனி அடியின்றி நடப்பன பாட்டும், உரையும், நூலும், மந்திரமும், (46) பிசியும், முது சொல்லும், அங்கதமும், வாழ்த்தும் முதலாயினவெனக் கொள்க. என்னை?

        'உரையு நூலு மடியின்றி நடப்பினும்
        வரைவில வென்ப வாய்மொழிப் புலவர்'
        'வாய்மொழி பிசியே யங்கத முதுசொலென்
        றாயவை நான்கு மன்ன வென்ப.'

பாட்டும் உரையும் நூலும் மந்திரமும் பிசியும் முது சொல்லும் அங்கதமும் என்றிவை பிறவும் ஓரடியானும் பலவடியானும் வரப் பெறு மெனக் கொள்க. என்னை?

        'செயிர்தீர் செய்யுட் டெரியுங் காலை
        அடியி னீட்டத் தழகுபெற் றியலும்'
        'ஓரடி யானும்வந் தொரோவிடத் தியலும்'
        'அவை தாம்.
        பாட்டுரை நூலே மந்திரம் பிசியே
        முதுசொ லங்கதம் வாழ்த்தொடு பிறவும்
        ஆகு மென்ப வறிந்திசி னோரே'

என்றார் ஆகலின்.

இவை அடியின்றி நடப்பனவும் ஓரடியால் நடப்பனவுஞ் சொன்னவாறு.

(8)

(45) கச்சி, கூடல், ஈகை, மாடம் இவற்றைப் புனைந்துரை வகையாற் பெரிதும் புகழ்தலின் சிறியவற்றைப் பெருக்கின.

(46) பிசி - பிதிர். முதுசொல் - பழமொழி. அங்கதம் - வசை.


_ _ _



PAGE__198

காரிகை நுதலிய பொருளும் தொகையும்

        44. எழுத்துப் பதின்மூன் றிரண்டசை சீர்முப்ப தேழ்தளையைந்
        திழுக்கி லடிதொடை 1நாற்பதின் மூன்றைந்து பாவினமூன்
        றொழுக்கிய வண்ணங்க ணூறொன்ப தொண்பொருள்கோளிருமூ
        வழுக்கில் விகாரம் வனப்பெட்டி யாப்புள் வகுத்தனவே.

இ.....கை இந்நூல் வகுத்த பொருளெல்லாம் தொகுத்து உணர்த்...று.

எழுத்துப் பதின்மூன்றாவன : (1) குற்றெழுத்தைந்து, (2) நெட்டெழுத்தேழு, (3) உயிரெழுத்துப் பன்னிரண்டு, (4) குற்றியலுகர வெழுத்து நாற்பத்திரண்டு, (5) குற்றியலிகர வெழுத்து நாற்பத்து மூன்று, (6) ஐகாரக் குறுக்க வெழுத்து மூன்று, (7) ஆய்தவெழுத்து ஆறு, (8) மெய்யெழுத்துப் பதினெட்டு, (9) வல்லின வெழுத்து ஆறு, (10) மெல்லின வெழுத்து ஆறு, (11) இடையின வெழுத்து ஆறு, (12) உயிர் மெய்யெழுத்து இருநூற்றொருபத்தாறு, (13) அளபில் உயிரளபெடை யெழுத்து இருபத்தெட்டு, ஒற்றளபெடை யெழுத்து இருபத்திரண்டு. ஆக எழுத்துப் * பதின் மூன்று.

இரண்டசை யாவன : (1) நேரசை, (2) நிரையசை என இவை.

சீர் முப்பதாவன : 2ஆசிரிய வுரிச்சீர் நான்கும், வெண்பா வுரிச்சீர் நான்கும், வஞ்சியுரிச்சீர் நான்கும், பொதுச்சீர் பதினாறும், ஓரசைச் சீர் இரண்டும் என இவை.

தளை ஏழாவன : (1) நேரொன்றாசிரியத் தளை, (2) நிரை யொன்றாசிரியத்தளை, (3) இயற்சீர் வெண்டளை, (4) வெண்சீர் வெண்டளை, (5) கலித்தளை, (6) ஒன்றிய வஞ்சித்தளை, (7) ஒன்றாத வஞ்சித்தளை என இவை.


* இவ்வாசிரியர் யாப்பருங்கலத்தில் ஒளகாரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம், மகரக் குறுக்கம் என்ற மூன்றனையும் இப்பதின்மூன்றனோடுங் கூட்டி எழுத்துப் பதினைந்து என்பர்.


(பி - ம்.) 1. நாற்பத்து. 2. ஈரசைச்சீர் நான்கும், மூவசைச்சீரெட்டும்' நாலசைச்சீர் பதினாறும்.



PAGE__199

ஐந்து இழுக்கில் அடியாவன : (1) குறளடி, (2) சிந்தடி, (3) அளவடி, (4) நெடிலடி, (5) கழிநெடிலடி என இவை.

தொடை நாற்பத்து மூன்றாவன : அடிமோனை, அடியியைபு, அடியெதுகை, அடிமுரண், அடியளபெடை என ஐந்தும், அந்தாதித் தொடை இரட்டைத் தொடை செந்தொடை என மூன்றும், இணைமோனை முதலாகிய விகற்பத் தொடை முப்பத்தைதும் என இவை.

ஐந்து பாவாவன : (1) வெண்பா, (2) ஆசிரியப்பா, (3) கலிப்பா, (4) வஞ்சிப்பா, (5) மருட்பா என இவை.

இனம் மூன்றாவன : (1) தாழிசை, (2) துறை, (3) விருத்தம் என இவை.

ஒழுக்கிய வண்ணங்கள் நூறு ஆவன : குறிலகவற்றூங்கிசை வண்ணம் முதலாயின.

ஒன்பது ஒண் பொருள்கோள் ஆவன : நிரனிறை மொழி மாற்று முதலாயின.

இருமூ வழுக்கில் விகாரம் ஆவன : வலிக்கும் வழி வலித்தன் முதலாயின.

வனப்பு எட்டாவன : அம்மை முதலாயின. 'யாப்புள் வகுத்தனவே' எ - து; யாப்பருங்கலக் காரிகையுட் சொல்லப்பட்டன எ - று.

ஏகாரம் ஈற்றசை ஏகாரம்.

'ஐந்து இழுக்கிலடி' என்று சிறப்பித்தவதனால், திணை வழுவும், பால்வழுவும், மரபுவழுவும், வினாவழுவும், செப்பு வழுவும், காலவழுவும், இடவழுவும், என்றுரைக்கப்பட்ட ஏழு வழுவும் படாமற் புணர்க்கப்படும் எனக் கொள்க.

'ஒழுக்கிசை வண்ணங்கள் நூறு' என்று சிறப்பித்தவதனால் ஒருசாராசிரியர் வண்ணம் இருபதெனச் சொன்னார் எனக் கொள்க.

'ஒன்பது ஒண் பொருள்கோள்' என்று சிறப்பித்தவத



PAGE__200

னால் பொருள்கோள் ஒன்பதல பல * என்பாரும் உளர் எனக் கொள்க.

'வழுக்கில் விகாரம்' என்று சிறப்பித்தவதனால் (1) எழுத்துக் குற்றம், (2) சொற்குற்றம், (3) பொருட் குற்றம், (4) யாப்புக் குற்றம், (5) அலங்காரக் குற்றம், (6) ஆனந்தக் குற்றம் என்னும் இவ்வாறு குற்றமும் படாமற் சொல்லப்படுவன செய்யுட்கள் எனக் கொள்க.

3 எழுத்துக் குற்றமாவது எழுத்ததிகாரத்துடனே மாறு கொள்வது.

வரலாறு

வெண்பா

        '† வெறிகமழ் தண்சிலம்பின் வேட்டமே யன்றிப்
        பிறிதுங் குறையுடையான் போலுஞ் - செறிதொடீஇ
        தேமா னிதணத்தேம் யாமாக நம்புனத்து
        வாமான்பின் வந்த மகன்.'

இதனுள் 'தேமா' எனற்பாலதனைத் 'தேமான்' என்று னகர வொற்றுக் கொடுத்தமையால் எழுத்துக் குற்றமாயிற்று. என்னை?

        '‡ முன்னிலை நெடில மாவு மாவும்
        னம்மிகப் புணரு மியங்குதிணை யான'

என்றார்4 அவிநயனார்.


(*) 'நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற், றவைநான் கென்ப மொழி புண ரியல்பே' (தொல். எச்ச. 8) என நான்காகவும், 'பூட்டுவிட் விதலை யாப்புக் கொண்டுகூட், டொடுசிறை நிலையே பாசி நீக்கமென், றாக்கிய வைந்தும் பொருள் கோளாகும்' (இறையனார் அகப். உரை) 'என ஐந்தாகவும் 'யாற்றுநீர் மொழி மாற்று நிரனிறை விற்பூண், தாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட் டடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே' (நன். சூ. 410) என எட்டாகவும் கூறுவர்.

† சிலம்பு - மலை. இதண் - பரண். வாவும்மான் - தாவுகின்ற மான்.

‡ இயங்குதிணை - அசையும் பொருள். முன்பாட்டில் நிலைத்திணைப் பொருளாகிய மாமரத்தை னகரச்சாரியை கொடுத்து 'தேமான்' என்றது எழுத்துக் குற்றம்.


(பி - ம்.) 3. அவற்றுள், எழுத்துக் குற்ற முதலிய வைத்தும் அவ்வவ் விலக்கண நூல்களால் அறிந்துகொள்க. இனி ஆனந்தக். 4. ஆகலின்.



PAGE__201

சொற்குற்றமாவது சொல்லதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை?

        'சொல்லின் வழுவே சொல்லோத்து மரபிற்
        சொல்லிய குற்றந் தோன்ற லாகும்'

என்றார் ஆகலின்.

வரலாறு

வெண்பா

* 'இசையெலாங் கொட்ட வெழிற்றானை யூர்ந்து வசையில்லா மன்னர்வந் தேத்த - மிசையும் அடிசில் பருகி யணியார்த்துப் போந்தான் கொடிமதிற் கூடலார் கோ.'

இதனுள், 'இசையெலாம் ஆர்ப்ப' எனவும், 'தானை நாப்பண்' எனவும், 'அடிசில் அயின்று' எனவும், 'அணி அணிந்து' எனவும் இவ்வாறு பொதுவினால் எடுத்துக் காட்டிப் பொதுவினால் முடிக்கற் பாலனவற்றைச் சிறப்பு வினையால் ஒன்றற்குரிய சிறப்பு வினை புணர்த்தமையாற் சொற்குற்றமாயிற்று. என்னை?

        'வேறுவினைப் பொதுச்சொ 5லொருவினை கிளவார்'

என்றார் ஆகலின்

(தொல். சொல். சூ. 46)

பொருட்குற்றமாவது : பொருளதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை?

        † 'பொருளின் வழுவே தமிழ்நடைத் திரிவே'

என்றார் ஆகலின்.


* கொட்டுதல் தோற்கருவியை. ஊர்தல் கரியையும் பரியையும். பருகுவது நீர், பால் போன்ற பொருள்களை, ஆர்த்தல் கழல் போன்றவற்றை. அங்ஙனமாகப் பொதுவினால் எடுத்துக் காட்டப்பட்ட வற்றிற்குச்சிறப்பு வினைகளைத் தந்து முடித்ததனால் இப்பாட்டுச் சொற்குற்ற முடையதாகும்.

† அகமும் புறமுமாகிய பொருள் தமிழுக்கே உரியதாகலின் அதனைத் தமிழ்நடை' என்றார்' 'தமிழ்நெறி விளக்கம்' என்ற நூற்பெயரையுங் காண்க.


(பி - ம்.) 5. லொரூஉ வினை.



PAGE__202

வரலாறு

வெண்பா

        * 'முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே
        இன்னுந் தொழத்தோன்றிற் 6றேயதுகாண் - மன்னும்
        பொருகளிமால் யானைப் 7புகார்க்கிள்ளி பூண்போற்
        பொருகொளியான் மிக்க பிறை.'

இது நாண நாட்டம்.

வெண்பா

        † 'பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட்
        கண்டிக் களிற்றை யறிவன்மற் - றிண்டிக்
        கதிரவன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய்
        உதிர முடைத்திதன் கோடு.'

இது நடுங்க நாட்டம்.

இதுவும் பொருளதிகாரத்தோடு மாறுகொண்டமையாற் பொருட்குற்றமாயிற்று. என்னை?

        'நாணவு நடுங்கவு 8நாடா டோழி
        காணுங் காலைத் தலைமக டேத்தே'

என்றார் ஆகலின்.

நேரிசை யாசிரியப்பா

        ‡ 'வாளை மேய்ந்த வளைகோட்டுக் குதிரை
        கோழிலை வாழைக் கொழுமட லுறங்கும்

* நாண நாட்டம் - தலைவி நாணும்படி தோழி அத் தலைவிக்குத் தலைவன் பாலுள்ள உறவை ஆராய்தல். கன்னிப்பெண்கள் பிறை தொழுதல் மரபு களவிற் றலைமகனைச் சேர்ந்த தலைவி பிறையைத் தொழாள். மேற்கவியில் 'பிறை இன்னுந் தொழத் தோன்றிற்றே' என்று தோழி குறிப்பித்தது நாண நாட்டமாம்.

† 'களவில் வந்து செல்லும் நம் தலைவனுக்கு இக்களிற்றால் துன்பம் விளைந்ததோ' என்று தலைவி அஞ்சி நடுங்கும்படி தோழி 'களிற்றின் கோடு உதிர முடைத்து' என்றமையின் இது நடுங்க நாட்டம்.

‡ 'வாளை மேய்ந்த' என்றதும், 'தேரை வாலினும் பெரிதாகின்று' என்றதும் பொருள் மாட்சி யற்ற தொடர்களாம்.


(பி - ம்.) 6. றீதேகாண். 7. புகழ்க்கிள்ளி. 8. நாட்டுழி யிடத்துக்..... டொக்கே.



PAGE__203

        9ஊரன் செய்த கேண்மை
        தேரை வாலினும் 10பெரிதா கின்றே.'

இதுவும் பொருள் 11மாண்ட தின்மையாற் பொருட்குற்றம்.

யாப்புக் குற்றமாவது : யாப்பதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை?

        'யாப்பின் வழுவே யாப்பின திலக்கணங்
        12கோப்பின் வாராக் கோவைத் தாகும்'

என்றார் ஆகலின்.

வரலாறு

        'கானக நாடன் 13கடுங்கோன் பெருமலைமேல்
        ஆனை கிடந்தனபோ லாய பெருங்கற்கள்
        தாமே கிடந்தன கொல்லோ வவற்றைப்பெற்றிப்
        பிறங்கவைத் தாரு முளர்கொல்லோ.'

இது முதலெடுத்துக் கொண்ட ஓசையிற் கெட்டுப் பாவிகற்பக் * கட்டுரையான் வந்தமையால் யாப்புக் குற்றமாயிற்று.

அலங்காரக் குற்றம் வருமாறு :

வெண்பா

        'வெண்டினங்கள் போன்றிலங்கு வெண்சங்கு 14வெண்சங்கம்
        விண்டன்ன தாழை வளர்தொடு - கொண்டெங்கும்
        கள்ளாவி நாறுங் கருங்கழிசூழ் கானத்தெம்
        உள்ளாவி வாட்டு முருவு.'

இதனுள், 'வெண்டிங்கள் போலும் சங்கு, சங்கு போலும் தாழைப்பூ' என்று உவமைக்கு உவமை சொன்னமையால் அடுத்து வரல் உவமை என்னும் அலங்காரக் குற்ற மாயிற்று. என்னை?


* கட்டுரை - வசனம்.


(பி - ம்.) 9. சோழ நாடன் கேண்மை. 10. போதாதன்றே.11. தீர்ந்த தின்மையாற், திரண்ட தின்மையாற். 12. கோப்ப வாராக் கொள்கைத். 13. கடுங்கோட்டுப். 14. சங்கனைய, வண்டிலங்கு.....விண்டெங்கும்.



PAGE__204

        'அடுத்துவர லுவமை யில்லென மொழிப'

என்றார் ஆகலின்.

இனி ஆனந்தக் குற்றம் வருமாறு :

        [15 இயனெறி திரிந்த வெழுத்தா னந்தமும்
        சொன்னெறி திரிந்த சொல்லா னந்தமும்
        பொருணிலை திரிந்த பொருளா னந்தமும்
        தூக்குநிலை திரிந்த தூக்கா னந்தமும்
        தொடைநிலை திரிந்த தொடையா னந்தமும்
        நடையுறு புலவர் நாட்டிய வகையே'

என்றார் ஆகலின்.]

        * 'ஆழி யிழைப்பப் பகல்போ மிரவெல்லாந்
        தோழி துணையாத் 16துயர்தீரும் - வாழி
        நறுமாலை தாராய் திரையவோஒ 17வென்னும்
        செறுமாலை சென்றணைந்த போது.'

இதனுள் 'திரையவோஒ' என்புழி இயற்பேர் சார்த்தி எழுத்து அளபெழுந்தமையால் எழுத்தானந்தம். என்னை?

        'இயற்பெயர் சார்த்தி யெழுத்தள பெழினே
        18 இயற்பா டில்லா வெழுத்தா னந்தம்'

என்றார் ஆகலின், இனிச் சொல்லானந்தம் வருமாறு :

வெண்பா

        † 'என்னிற் பொலிந்த திவண்முக மென்றெண்ணித்
        தன்னிற் 19குறைபடுப்பான் றண்மதியம் - மின்னி
        விரிந்திலங்கு வெண்குடைச் செங்கோல் விசையன்
        எரிந்திலங்கு வேலி னெழும்.'

* ஆழி இழைப்ப - தரையில் கூடலைக் கிழிப்பதனால்.

† குறைபடுப்பான் - குறையை உண்டாக்கும் பொருட்டு. மதியம் வேலின் எழும்.


(பி - ம்.) 15. எழுத்தியறிரிந்த. 16. துயர்தீர்வன், துயில் தீரும். 17. வென்பன். 18. இயற்பட லில்லா. 19. குறைபடுவான்.



PAGE__205

இதனுள், விசைய னென்னும் பாட்டுடைத் தலைமகன் மேல் எரிந்தென்னும் சொல்லேறப் புணர்த்தமையாற் சொல்லானந்த மாயிற்று. என்னை?

        'இயற்பெயர் மருங்கின் மங்கல மழியத்
        தொழிற்சொற் புணர்ப்பினது சொல்லா னந்தம்'

என்றார் ஆகலின். இனிப் பொருளானந்தம் வருமாறு :

வெண்பா

        'இந்திரனே போலு மிளஞ்சாத்தன் சாத்தற்கு
        மந்தரமே போன்றுளது மல்லாகம் - மந்தரத்திற்
        றாழருவி போன்றுளது தார்மாலை யம்மாலை
        ஏழுலகு நாறு மிணர்.'

இதனுள் இளஞ்சாத்தன் என்னும் கீழ்மகனை அரசரை உவ மிக்குமாறு போலப் * பரிக்கலாகா வண்ணம் இறப்ப உயரச் சொன்னமையால் இறப்ப உயர்ந்த பொருளானந்தம்.

        † 'கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
        அருவிடர் வீழ்ந்தென'

இதனுள் ஐந்திணைக்குரிய பொருளை இறப்ப இழிவுபடச் சொன்னமையால் இறப்ப விழிந்த பொருளானந்தம். என்னை?

'இறப்ப வுயர்ந்தது மிறப்ப விழிந்ததும் அறத்தக வழீஇய வானந் தம்மே'

என்றார் ஆகலின்,

பிற ஆனந்தங்களும் வந்தவழிக் கண்டுகொள்க.

இனி, எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுள் வருமாறு :

நேரிசை யாசிரியப்பா

        'தாமரை புரையுங் காமர் சேவடி
        பவழத் தன்ன மேனித் திகழொளிக்

* பரிக்கலாகர வண்ணம் - தாங்க முடியாதபடி.

† இவை மலைபடு கடாம். 311 - 12 - இன் பாடபேதம். யா. வி. பக். 520. பார்க்க. குறிஞ்சியின் கருப் பொருளாகிய குரங்குக்கு விடரில் விழுதல் இழிவாதல் பற்றி இது இறப்ப விழிந்த பொருளானந்தமாயிற்று.



PAGE__206

        குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றின்
        நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் கெடுவேற்
        சேவலங் கொடியோன் காப்ப
        ஏம வைக லெய்தின்றா லுலகே.'
(குறுந். கடவுள்.)

ஒழிபியலோத்து முற்றும்.

யாப்பருங்கலக் காரிகை மூலமும் உரைப்பாடமும் முற்றும்.

_ _ _

ஒழிபியல் (*) முதனினைப்புக் காரிகை

        சீருந் தளையுடன் விட்டிசை மாஞ்சீ ரியத்றளைதேர்
        வாரு மருகிக் கலியே வருக்க நெடில்சுருங்கிற்
        றோரும் பொருளோ டடிமுத லாவெழுத் தொன்பதுவென்
        றாருந் தெளிந்த வொழிபியற் சூத்திர மாகியதே.

(*) ஒழிபியல் முதனினைப்புக் காரிகை பிரதிதோறும் கீழ்வருமாறு வேறுபட்டுள்ளது.

கலித்துறை

        'சீரொடு விட்டிசை மாஞ்சீ ரியற்றளை சேர்ந்தருகி
        வாரடர் கொங்கை வருக்கஞ் சுருங்கிற்று வான்பொருளும்
        சீரிய தூங்கேந் தடுக்குச் சிறந்த வெழுத்துமென்றே
        யாரு மொழிபியற் பாட்டின் முதனினைப் பாகுமன்றே.'

அடிவர வாசிரியம்

        'சீரும் விட்டிசை மாஞ்சீ ரியற்றளை
        அருகி வருக்கஞ் சுருங்கிற் பொருளோ
        டெழுத்தென வொன்பா னொழிபிய லொத்தே'


PAGE__207

        காரிகை முதற்குறிப்பகராதி
        அ 	இ 	ஈ 	உ 	எ 	ஒ 	க 	கு
        கொ 	சீ 	சு 	த 	தி 	தூ 	தெ 	தே
        ந 	நி 	நே 	ப 	பொ 	ம 	மா 	மூ
        மோ 	வ 	வா 	வி 	      
        வெ
        வை 	  	 

        அசையடி முன்னர் 	109
        அடிவரை யின்றி 	125
        அந்தமில் பாதம் 	84
        அந்த முதலாத் 	49
        அருகிக் கலியோ 	156
        அறத்தாறிது 	45

        இயற்றளை வெள்ளடி 	151
        இருசீர் மிசை 	55        
        

        ஈரசை நாற்சீர் 	22
        ஈரடி வெண்பாக் 	70

        உருவுகண் டெள்ளா 	75        

        எழுத்துப் பதின்மூன் 	198
எழுவாயெழுத் 	46

        ஒன்றும் பலவும் 	75

        கடையயற் பாதம் 	92
        கந்தமடிவில் 	 1
        கந்தமுந் தேனார் 	61
        கன்று குணில்வான் 	101
        

கு

        குடநிலைத் தண் 	124
        குறளடி நான்கின 	128
        குறளிரு சீரடி 	37
        குறிலே நெடிலே 	19
        குறினெடி லாவி 	8
        குன்றக் குறவ 	28

கொ

        கொண்டன் முழங்கின 	92
        கொய்தினை 	128
        

சீ

        சீருந்தளையுடன் 	206
        சீரொடு விட்டிசை 	206
        

சு

        சுருக்கமில் 	7
        சுருங்கிற்று 	171
        

        தண்சீர் தன 	32
        தண்ணிழறண்பூ 	25
        தரவே தரவிணை 	115
        தரவொன்று தாழிசை 	102
        தருக்கிய றாழிசை 	97
        

தி

        திருமழை யுள்ளார் 	34
        திரைத்த விருது 	39
        

தூ

        தூங்கேந் தடுக்கல் 	 193

தெ

        தென்ற லிடையுந் 	136

தே

        தேமா புளிமா 	24
        தேனார் கமழ் 	6

        நற்கொற்ற வாயி 	81

நி

        நின்று விளங்கு 	115
        

நே

        நேரிசை யாகு 	96
        நேரிசை யின்னிசை 	80
        

        பண்பார் புறநிலை 	 132

பொ

        பொருளோ டடிமுதல் 	172

        மடப்பிடி பேடை 	131

மா

        மாஞ்சீர் கலியுட் 	147
        மாவாழ் புலிவாழ் 	84
        மாவும் புண் 	51

மூ

        மூன்றடியானும் 	87

மோ

        மோனை விகற்ப 	57

        வருக்க நெடிலினம் 	160
        வளம்பட வென்பது 	67

வா

        வாணெடுங் கண் 	 109
        

வி

        விட்டிசைத் தல்லான் 	144

வெ

        வெண்பா வகவல் 	62
        வெண்பா வளம்பட 	137
        வெள்ளைக் கிரண்டடி 	43

வை

        வைக றுகடீர் 	80
        


PAGE__208-211

மேற்கோள் சூத்திர முதற்குறிப் பகராதி

        அ 	ஆ 	இ 	ஈ 	உ 	எ 	ஏ 	ஐ
        ஒ 	ஓ 	க 	கா 	கு 	கூ 	கோ 	ங
        சி 	சீ 	சு 	செ 	சொ 	        
        ஞ
        த 	தா
        தூ 	தெ 	தே 	தொ 	நா 	நி 	நீ 	நெ
        நே 	ப 	பு 	பொ 	ம 	மா 	மு 	மூ
        மெ 	மொ 	மோ 	ய 	யா 	வ 	வா 	வி
        வெ 	வே 	  	  	  	  	  	 

        அ இ உ எ ஒ இவை 	145
        அ இ உ எ ஒ என்னு 	8
        அஃகேன மாய்தந் 	9
        அகரமுத லௌகார 	9
        அகரமோ டாகார 	169
        அகவலிசையன 	95
        அகவ லென்ப 	22
        அச்சொலப்பட்ட 	113
        அசை கூனாகு 	173
        அசையினுஞ் சீரினு 	51
        அடிமுதற் பொருள்பெற 	173
        அடிமுதற் பொருளை 	173
        அடியடி தோறு 	4
        அடியுஞ் சீரு 	50
        அடியெனைத் 	126
        அடியொரு மூன்று 	88
        அடுத்து வரலுவமை 	204
        அந்தடி குறைநவுஞ் 	87
        அந்தடி மிக்குச் 	126
        அந்த வடியி 	93
        அராக மென்ப 	110
        அருணோக்கு 	178
        அவைதாம் , குற்றியலிகரமுங் 	9
        அவைதாம், பாஅவண்ணம் 	195
        அவைதாம், பாட்டுரை 	197
        அளபெடைத் தொடைக்கே 	49
        அளபெடை தனியிரண் 	16
        அளபே புலுத 	12
        அளவடி நான்கின 	127
        அளவடி முதலா 	110
        அளவடி யந்தமு 	93
        அனைய வாகிய 	106
        

        ஆ ஈ ஊ ஏ ஐ 	9
        ஆசிரியப்பாவி 	156
        ஆய்தமு மொற்று 	143
        

        இ உ இரண்டின் 	142
        இடையெழுத் தென்ப 	11
        இயற்சீர் நேரீற் 	150
        இயற்சீர் வெண்டளை 	63
        இயற்சீர் வெள்ளடி 	151
        இயற்சீ ரிரண்டு..... விகற்பமிலவாய் 	33
        இயற்சீ ரிரண்டு....விகற்ப வகையது 	33
        இயற்சீ ரெல்லா 	27
        இயற்பெயர் சார்த்தி 	204
        இயற்பெயர் மருங்கின் 	205
        இயனெறி திரிந்த 	204
        இரண்டடி யெதுகை 	167
        இரண்டா மடியி 	74
        இரண்டு முதலா 	42
        இருசீர் குறளடி 	38
        இருசீர் மிசைவரத் 	57
        இருவகை மருங்கினு 	143
        இழுமென் மொழியால் 	182
        இறப்பவுயர்ந்தது 	205
        

        ஈரசை கூடிய 	23
        ஈரடி முக்கா 	92
        ஈரடி யிரண்டு 	106
        ஈரெழுத் தொருமொழி 	14
        ஈரொற்றாயினு 	143
        ஈற்றயற்சீ 	57
        ஈறுமிடையு 	142
        

        உயிர்மெய்க் 	11
        உயிரள பேழு 	142
        உயிரீராறே 	11
        உரிச்சீ ரதனு 	34
        உரைக்கப்படும் 	196
        உரைத்தன விரண்டுள் 	87
        உரைப்போர் குறிப்பினுணர் 	86
        உரைப்போர் குறிப்பினை 	45
        உரையு நூலு 	197
        உவமைக் குவமை 	204
        உன்னல் காலே 	19
        

        எகர ஒகரத் 	10
        எண்சீ ரெழுசீ 	38
        எண்ணேகார 	10
        எருத்தியலின்றி 	123
        எழுத்தி லிசையன 	192
        எழுதப்படுதலி 	6
        எழுவகை யிடத்துங் 	13
        என்னென் கிளவி 	95
        

        ஏந்திசைத் துள்ளல் 	65
        ஏவல் குறிப்பே 	146
        

        ஐ ஒள வென்னு 	16
        ஐஞ்சீ ரடியி 	127
        ஐஞ்சீ ரடுக்கலு 	157
        

        ஒத்த வடித்தா 	95
        ஒத்த வொரு 	97
        ஒருசொ லடிமுழு 	51
        ஒரு தொடை யீரடி 	44
        ஒரு பொருணுதலிய 	114
        ஒருமூன்றொருநான் 	87
        ஒருவிகற் பாகித் 	78
        ஒழுகிய வோசையின் 	85
        ஒற்றிற்கு மாத்திரை 	19
        ஒற்றொடு புணர்ந்த 	184
        ஒன்றல்லவை 	76
        ஒன்றிய வஞ்சித் 	66
        ஒன்றிரண்டொருமூன் 	18
        ஒன்றின்னான்மையு 	129
        

        ஓதப்பட்ட 	123
        ஓரசைச்சீருமஃ 	23
        ஓரடியானு 	194

        ககர முதல 	10
        கடையத னயலடி 	100
        கடையயன் 	56
        கண்ணிமை நொடியென 	18
        கலியொடு வெண்பா 	63
        கழிநெடி லடிநான் 	101
        கழிநெடி லடியே 	38

கா

        காட்சி முதலாக்        133
        

கு

        குற்றிகரங் குற்றுகர        184
        குற்றிய லிகர 	15
        குற்றிய லுகர முதற் 	72
        குறட்பா விரண்டடி 	74
        குறளடி சிந்தடி 	38
        குறளடி நான்கவை 	128
        குறளடி நான்மையிற் 	129
        குறளொரு பந்த 	38
        குறியதன் முன்ன 	10
        குறிலிணை குறினெடி 	20
        குறிலே நெடிலே 	21
        குறினெடி லளபெடை 	13
        குறுமை யெழுத்தி 	142
        குன்றிசை மொழிவயி 	16
        குன்று கூதிர் 	31

கூ

        கூறியது கூறினுங் 	74
        

கோ

        கோழி வேந்த        21

        ஙஞண நமன        17
        

சி

        சிந்தடி குறளடி 	63
        சிந்தடி நான்காய் 	130
        சின்மென் மொழியாற்        180
        

சீ

        சீர் தொறுந்        57
        சீர் முழு தொன்றிற் 	163
        சீரிரண்டிடை தப        57
        

சு

        சுரிகுழன் மடவாய் 	181
        

செ

        செப்பலிசையன        84
        செய்யுண்மொழியாற் 	181
        செயிர்தீர் செய்யுட் 	197
        செவியுறை தானே 	135
        

சொ

        சொல்லிய தொடையொடு        51
        சொல்லின் வழுவே 	201

        ஞகாரமுதலா ளகார 	183

        தத்தம் பாவினத் 	74
        தந்துமுன் நிற்றலிற் 	104
        தரவின்றாகித் 	124
        தரவு தாழிசை 	105
        தரவே தரவிணை 	123
        தரவொன்றாகித் 	105
        தளைசீர் வண்ணந் 	142
        தன்சீரிரண்டு 	34
        தன்றளை பிறதளை 	65
        தனிச்சொற்றழுவல 	77
        தனிநிலை முதனிலை 	17
        தனிநிலை யளபெடை 	146
        தனிநிலை யொற்றிவை 	143

தா

        தாஅ வண்ணம் 	167

தூ

        தூங்கலிசையன        130

தெ

        தெய்வ வணக்கமுஞ்        5
        தெரிந்த மொழியாற் 	183

தே

        தேற்றம் வினாவே        13
        

தொ

        தொடையடி        79
        தொடையொன்றடி        71

நா

        நாணவு நடுங்கவு        202
        நாலசைச் சீர்பொதுச் 	23
        நாலசையானடை 	27
        நாலசையானு 	23
        நாலொரு சீரா 	127
        நான்காமடியினு        45

நி

        நிரைநடு வியலா 	151

நீ

        நீர்த்திரை போல        108

நெ

        நெடில்குறி றனியா        20
        நெடிலடி நான்காய் 	127

நே

        நேர்நேரியற்றளை 	64
        நேரிசைச் சிந்தும் 	80

        பகுத்தெதிர் நிற்றலிற் 	6
        பண்ணுந் திறமும் 	136

பு

        புள்ளியில்லா 	11
        புறநிலை வாயுறை 	135

பொ

        பொருளிள் வாழுவே        201
        பொழிப்பெனப்படுவது 	5

        மறுதலை யுரைப்பினு        158
        மனப்படுமடி 	96

மா

        மாத்திரை வகையாற் 	18

மு

        முதலயற் சீரொழித்        57
        முதலெழுத் தொன்றின்        49
        முதலொடு மூன்றாஞ் 	57
        முன்னிலை நெடில 	200

மூ

        மூவசைச் சீருரிச் 	23
        மூவொரு சீரு 	57
        மூன்றடி முதலா 	89
        மூன்றடி யொத்த 	97
        

மெ

        மெய்யின் வழிய 	11
        மெய்யினியக்க 	10
        மெய்யினியற்கை 	10
        மெய்யுடம் புறுப்பொற் 	10
        மெய்யுயிர் நீங்கிற் 	10
        மெல்லெழுத் தென்ப 	11

மொ

        மொழியினும்....முரணத் தொடுப்பின் 	158
        மொழியினும் பொருளினு முரணுதன் 	49, 158

மோ

        மோனை யெதுகை 	57

        யகரம் வரும்வழி        15
        யரலழவென்னு        165

யா

        யாப்பின் வழுவே 	203
        யாப்பும் பாட்டுந் 	4

        வஞ்சியினிறுதியு 	173
        வஞ்சியுள்ளும் 	151
        வஞ்சி விரவ லாசிரிய 	151
        வண்ணந் தானே 	195
        வணக்கமதிகார 	5
        வருக்க நெடிலினம் 	163
        வல்லெழுத்தாறோ 	15
        வல்லெழுத் தென்ப 	11
        வழிபடு தெய்வ நிற்புறங் 	133
        வழிபடு தெய்வ வணக்கஞ் 	5
        வன்மையொடு ரஃகான் 	17

வா

        வாய்மொழி பிசியே 	197
        வாயுறை வாழ்த்தே 	134

வி

        விதப்புக்கிளவி 	11

வெ

        வெண்சீர் வெண்டளை        63
        வெண்சீ ரிறுநிக் 	34
        வெண்சீரிறுதியி 	34
        வெண்சீ ரொன்றலும் 	63
        வெண்டளை....யென்றிரு 	114
        வெண்டளை....யென்றிவை 	65
        வெண்டளை விரவியு 	157
        வெண்பா வாசிரியங் 	44
        வெண்பா விரவினுங் 	156
        வெதிர்புரை தோளாய் 	183
        வெள்ளை முதலா 	132
        வெள்ளையுட் பிறதளை 	151

வே

        வேதவாய் 	136
        வேறுவினைப் பொதுச்சொ 	201


PAGE__211-214

உதாரண இலக்கிய முதற்குறிப்பகராதி

        அ 	ஆ 	இ 	ஈ 	உ 	எ 	ஏ 	ஒ
        க 	கா 	கு 	கெ 	கை 	கொ 	கோ 	சா
        சி 	சீ 	
        சு
        சூ
        செ 	சே 	சோ 	த
        தா 	தி 	து 	தெ 	தே 	தொ 	தோ 	ந
        நி 	நீ 	நெ 	நே 	ப 	பா 	பி 	பு
        பூ
        பொ 	போ 	ம 	மா 	மீ 	மு 	மூ
        மை 	மொ 	யா 	வ 	வா 	வி 	வெ 	வே
        வை 	  	

        அ அவனும் இ இவனும் 	145, 168
        அகர முதல 	83, 164
        அகலிரு விசும்பி 	177
        அங்கண் மதிய 	153
        அங்கண் வானத் 	30
        அங்கண் விசும்பின் 	77
        அடல்வே லமர் 	187
        அடையார் பூங்கோதையாட் 	196
        அணிகிளர் சிறுபொறி 	156
        அணிநிழ லசோகமர்ந் 	21
        அணிநிழ லசோகின் 	57
        அந்தரத்துள்ளே 	166
        அம்ம் பவள்வரி 	25
        அமிழ்தினுமாற்ற 	170
        அரிதாய வற 	68
        அரியவரை 	72
        அருளல்லதி 	139, 186
        அலைப்பான் பிறி 	189
        அவரே, கேடில் 	174
        அவாப்போலகன்ற 	196
        அள்ளற் பள்ளத் 	30
        அறத்தா றிதுவென 	45, 161
        அறிந்தானை 	81
        அறிவினாலாகுவ 	181
        அறுவர்க் கறுவரை 	86
        அன்பீனு மார்வ 	161
        அன்னாயறங்கொல் 	91
        அன்னையை நோவ 	142

 ஆஅவளிய 53
 ஆகங் கண்டகத் 157
 ஆர்கலி யுலகத்து 85, 166
 ஆர்த்த வறிவினர் 73
 ஆரிய மன்னர் 191
  ஆலத்து மேல 188
 ஆவாவென்றே 88, 161
 ஆவே றுருவின 166
 ஆழி யிழைப்ப 204 

        இசையெலாங் கொட்ட 	201
    இடங்கை வெஞ்சிலை 	41, 101
    இடம்பட மெய்ஞ்ஞானங் 	12
    இடை நுடங்க 	141
    இந்திரனே போலு 	205
    இரங்குகுயின் 	100
    இருகோட் டொருமதி 	12
    இருங்கடலுடுத 	152
    இருது வேற்றுமை 	39, 130
    இருள்விரித்தன்ன 	52
    இரைக்கு மஞ்சிறைப் 	40
    இன்றுகொல் 	71
    இன்னகைத 	52
    இனமலர்க் 	83

        ஈத்துவக்கு மின்ப 	170

        உடையார்முன்        71
    உண்ணாமை யுள்ள 	190
    உண்ணா னொளி 	144
    உமணர்ச் சேர்ந்து 	156
    உரிமையின்க 	36
    உருவு கண்டெள்ளாமை 	71
    உலகினுட் பெருந்தகையார் 	174
    உலகுடன் விளக்கு 	53
    உலகே, முற்கொடுத்தார் 	174
    உள்ளார் கொல்லோ 	34

        எஃஃகிலங்கிய 	143
    எல்லா விளக்கும் 	162
    எறும்பி யளையிற் 	152
    என்னிற் பொலிந்த 	204

        ஏஎர் சிதைய 	146
    ஏர் மலர் 	114

        ஒக்குமே யொக்குமே 	54
    ஒருமால் வரைநின் 	171

        கடற் குட்டம் 	76
    கடியார் பூங் 	178
    கண்ண் கருவிளை 	143
    கண்ண் டண்ண்ணெனக் 	143
    கணிகொண்டலர்ந்த 	41, 101
    கயலேருண்கண் 	163
    கயன் மலைப்பன்ன 	158
    கருமமு முள்படாப் 	73
    கரைபொரு 	99
    கலங்கழாலிற் 	175
    கன்றுகுணிலாக் 	97

கா

        காதுசேர் தாழ் 	187
    காமர் கடும்புனல் 	122, 155, 175
    காய்மாண்ட 	165
    கார்க்கடனீர்த் 	143
    கார்நறு நீலங் 	179
    காவியங் கருங்கட் 	159
    கானக நாடன் 	203

கு

        குடநிலைத்தண் 	65, 117, 148
    குருகுவேண்டாளி 	154
    குலாவணங்கு 	150
    குழலிசைய 	89
    குழலினிதி 	139
    குறுத்தாட் பூதஞ் 	175
    குன்றக் குறவன் 	28, 64

கெ

        கெடலரு மாமுனிவர் 	106
    கெண்டையை வென்ற 	142

கை

        கைக்கோண்மறந்த 	205

கொ

        கொங்கு தங்கு 	42,101
    கொடிகுவளை 	186
    கொடிவாலன 	130
    கொண்டன் முழங் 	88
    கொய்தினை 	125
    கொல்லா நலத்தது 	82
    கொல்லான் புலாலை 	64
    கொன்றார்ந் தமைந்த 	99
    கொன்று கோடு நீடு 	140
    கொன்றை வேய்ந்த 	85

கோ

        கோழியுங் கூவின 	192
        கோழி யெறிந்த 	155

சா

        சாரலோங்கிய 	159
        

சி

       சிலை விலங்கு 	35, 163
     சிறியகட் 	94, 157
     சிறு நன்றி 	139
 

சீ

        சீறடிப் பேரக 	59

சு

        சுடர்த்தொடீஇ 	113
    சுரந்தானா வண்கைச் 	173
    சுரையாழ வம்மி 	81, 188
    சுற்றுநீர்சூழ் 	192
    சுறமறிவன துறை 	69

சூ

        சூரல் பம்பிய 	96, 188

செ

        செங்கண் மேதி 	46
    செங்களம் படக் 	68
    செய்யவாய்ப் பசும் 	170
    செல்வப்போர்க் 	36, 46, 65, 117
    செறிதொடி யுவகை 	182

சே

        சேற்றுக்கால் 	78

சோ

        சோலையார்ந்த 	130

        தக்கார் தகவில        161, 164
    தடமண்டு நாமரை 	72
    தண்டையினினக் 	176
    தண்மதியேர் 	119
    தந்தையிலைச் 	180

தா

        தாஅட்டாஅமரை 	60
    தாமரைபுரையுங் 	205
    தாமரையின் 	73
    தாழ்ந்த உணர்வின 	189
    தாளாள ரல்லாதார் 	90

தி

        திருநுதல் வேர் 	133
    திருமழை தலைஇய 	34
    திரைத்த சாலிகை 	39, 129
    திறந்திடுமின் 	189

து

        துகடீர்பெருஞ் 	76
    துணியிரும் பௌவங் 	181
    துவைக்குந் துளி 	167
    துளியொடு மயங்கிய 	164

தெ

        தெங்கங்காய் போலத் 	190
    தென்றலிடை 	132

தே

        தேம்பழுத் தினியநீர் 	39, 127
    தேரோடத் துகள் 	175
    தேன்றாட்டீங் 	149

தொ

       தொன்னலத்தின் 	70, 131
 

தோ

        தோடாரெல்வளை        166

        நடைக்குதிரை 	142
        நண்பிதென்று 	89
        நண்ணுவார் வினை 	86
        நற்கொற்ற 	81
        நறுநீல நெய்தலுங் 	81
        நன்றறிவாரிற் 	29, 82

நி

        நிலத்தினும் பெரிதே 	93

நீ

        நீடிணர்க் கொம்பர் 	16
        நீரின் றண்மையு 	94
        நீலமாகட 	86
        நீலுண் டுகிலிகை 	178

நெ

        நெடுவரைச் சாரற் 	148

நே

        நேரிழை மகளி 	155
        

        பகலே பல்பூங் 	162, 164
        படையொடு போகாது 	180
        பண்டிப் புனத்துப் 	202
        பண்டு மொருகாற்றன் 	179
        பரூஉத்தடக்கை 	117
        பல்யானை மன்னர் 	134
        பல்லுக்குத் தோற்ற 	140
        பலமுறையு மோம்பப் 	133
        பவழமும் பொன்னும் 	168
        பற்றிப் பலகாலும் 	168
        பற்றுக பற்றற்றான் 	164
        பன்மாடக் கூடல் 	79

பா

        பாசிழை யாகம் 	174
            பாயிரும் பரப்பகம் 	182
            பாலொடு தேன்கலந் 	30, 64, 82
            பாற்கடன் முகந்த 	183
        

பி

பிண்டியி னீழற் 86

பு

        புன்காற் புணர்        148
        

பூ

       பூத்த வேங்கை 	54
        பூத்தாட் புறவின் 	176
        பூந்தண் சினை 	44
        பூந்தாமரைப் 	29, 130
 

பொ

        பொய்மையும் 	168
            பொன்மலி கச்சி 	197
            பொன்னார மார்பிற் 	29
            பொன்னினன்ன 	59

போ

        போது சாந்தம் 	21, 64
            போதுவிரி குறிஞ்சி 	159
            போந்து போந்து 	185

        மஞ்சுசூழ் சோலை 	83
            மடப்பிடியை 	128
            மண்டலம் பண்டுண்ட 	170
        மண்டிணிந்த 	148
        மணிகிளர் நெடுமுடி 	120
        மந்தாநில 	35, 67
        மரையிதழ் புரையு 	177
        மலர்மிசை 	178
        மலிதேரான் 	77
        மழையின்றி 	77
        மன்றலங் கொன்றை 	191

மா

        மாக்கொடி மாணையு 	165
            மாவழங்கலின் 	175
            மாவும் புள்ளும் 	51, 164
        

மீ

        மீன்றேர்ந் தருந்திய 	158
        

மு

       முதுக்குறைந்தனளே 	45
            முருகவிழ்தாமரை 	65
        முல்ல முறுவலித்துக் 	81
        முழங்குதிரைக் 	90, 149
        முன்னுந் தொழத்தோன்றி 	202
 

மூ

        மூவடிவினாலிரண்டு 	41, 101
        

மை

        மைசிறந்தன 	129
        

மொ

        மொய்த்துடன் 	58

யா

        யாதானு நாடாமால் 	63
        யானுந் தோழியு 	126
        யானை யெருத்தத் 	177

        வஞ்சியேன் 	73
            வடியேர்கண் 	52, 164
            வடிவுடை நெடுமுடி 	117
        வண்டார் பூங் 	86
        வண்டுளர் பூந்தார் 	99
        வந்துநீபேரி 	141
        வயலாமைப் 	155
        வளம்பட வேண்டாதார் 	67, 77
        வளர்கொடியன 	149
வா
        வாணெடுங் கண் 	104
            வாள்வரி வேங்கை 	126
            வாளார்ந்த 	113
            வாளை மேய்ந்த 	202
            வானுற நிமிர்ந்தனை 	98
            வானோர் தொழ 	66
        

வி

        விடஞ்சூழரவின் 	100
            விளங்குமணிப் 	110
            வினைத்திண்பகை 	66
        

வெ

        வெண்டிங்கள் போன் 	203
            வெண்மண லெக்கர் 	176
        வெறிகமழ் தண்சிலம்பின் 	200
        வெறிகமழ் தண்புறவின் 	144
        வெறியுறு கமழ் 	91
        வென்றான் வினையின் 	40, 127

வே

        வேதின வெரிநி 	177
            வேய்தலை நீடிய 	127
            வேரல் வேலி 	95
        

வை

        வைகலும் வைகல் 	75
            வையகமெல்லாம் 	78
        


PAGE__214



PAGE__215