1. சூத்திரவகராதி
  2. Second


	



	



	


TOC


	 	சூத்திரவகராதி அட்டவணை
	 
  	  	பக்கம்
  	முகவுரை 	III
  	வீரமா முனிவர் சரித்திரச் சுருக்கம் 	V
  	பொதுப்பாயிரம் 	1 - 3
  	சிறப்புப்பாயிரம் 	3 - 5
  	  	 
 I 	எழுத்ததிகாரம் 	5 - 31
 II 	சொல்லதிகாரம் 	31 - 97
 III 	பொருளதிகாரம் 	98 - 140
 IV 	யாப்பதிகாரம் 	141 - 220
 V 	அணியதிகாரம் 	221 - 267
VI 	சூத்திரவகராதி 	 


	


III


	கடவுள்துணை.

----

செந்தமிழ்த்தேசிகரும்,
தைரியநாத சுவாமிகளும் ஆகிய
வீரமாமுனிவர் திருவாய் மலர்ந்தருளிய
ஐந்திலக்கணத்
தொன்னூல்விளக்கம்
மூலமும் உரையும்.

------

இவை,
இராயப்பேட்டை உவெஸ்லியன் மிசியோன்
காலேஜு தமிழ்ப்பண்டிதரான
ம-ள-ள-ஸ்ரீ.உ. ஸ்ரீநிவாச ராகவாசாரியா ரவர்களால்
பார்வையிடப்பட்டு,
கனம். ஜி. மெக்கென்ஜி. காபன் அய்யர்,
அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.

------------------

இரண்டாம்பதிப்பு.

------------------

சென்னை. பாபம்ஸ்சாலை
ம-ள-ள-ஸ்ரீ ம. சா. இயாகப்பிள்ளை அவர்களால்
அர்ச். சூசையப்பர் அச்சுக்கூடத்தில்
அச்சிடப்பட்டது.

-----

1891 - uத்துக்குச் சரியான கர-u
All Rights Reserved.
	


IV


	கடவுள்துணை.
முகவுரை.
 

செந்தமிழ்த் தேசிகரான வீரமாமுனிவரா லியற்றிய வைந்திலக்க ணத் தொன்னூல் விளக்கம் எனு மிந்நூலானது 1838ம் - ஆண்டில் பிர பல வித்துவானாகிய களத்தூர் - வேதகிரி முதலியாரால் பார்வையிடப்பட்டு, புதுவை மாநகரத்தில் முதல் முதலில் அச்சிடப்பட்டது. வீரமா முனிவ ரியற்றிய பலநூல்களைப்போலவே இதுவும் பொருள்நடை முதலியவற்றிற் சிறந்து காணப்படும்.

செந்தமிழ்க்குரிய வைந்திலக்கணத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் தெரிவிக்கும் சிறந்த நூல் வேறின்மையின் இதனை மாணாக்கருக்குப் பிரயோஜனமாக இரண்டாந்தரம் அச்சிற் பதிப்பிக்க வேண்டு மென்று நான்விரும்பி இராயப்பேட்டை உவெஸ்லியன் மிசியோன் காலேஜு தமிழ்ப் பண்டிதரும் எனது நண்பருமாகிய ம-ள-ள-ஸ்ரீ, உ. ஸ்ரீநிவாசராகவாசாரியர் அவர்களை இதைப் பார்வையிடும்படி கேட்டுக் கொள்ள அவர் இதைப் பழைய பிரதியுடன் ஒப்பிட்டுப்பரி சோதித்துத்தர அதை நான் முதற் பதிப்பைப்போலன்றிச் சூத்திரமும் உரையும் நன்கு விளங்குமாறு சூத்திரத்தைச் செய்யுள்போலப் பெரிய வெழுத்திலும் வசனரூபமா யிருக்கும் உரையைச் சிறிய வெழுத்திலும் பதிப்பித்து, அதிகாரம், இயல், ஓத்து முதலியவற்றிற்குத் தக்கவாறு இங்கிலீஷ்ப்பெயரு மெடுத்துக்காட்டி யிருக்கிறேன். மேற்கூறிய வெனது நண்பர் எனக்குச் செய்த விப்பேருதவிக்கு நான்மிக நன்றியறிதலுள்ளவனா யிருக்கிறேன்.

வீரமாமுனிவர் சரித்திரத்தை முதல் முதலில் எழுதினவரும் தமிழ் வித்துவானுமாகிய, அ. முத்துச்சாமிப் பிள்ளை யவர்களினது மிகவணுகிய மரபினரான ம-ள-ள-ஸ்ரீ, ம. சா. இயாகப் பிள்ளை யவர்கள் தயவாய் இதைத் தமது இயந்திரசாலையில் அச்சிட்டுத் தந்ததற்கும், உவெஸ்லியன் மிசியோன் சங்கப் போதகராகிய, ம-ள-ள-ஸ்ரீ, யாழ்ப்பாணம். சா. வெ. அம்பலவாணர் ஐயர் இதை எழுத்துப் பிழையறப் பார்த்ததற்கும் நான் மிகவும் வந்தனம் செலுத்துகிறேன்.
  	 

கரuஆவணிt
1891-u ஆகஷ்டு-t
	இங்ஙனம்,
ஜி. மெக்கென்ஜி. காபன்.
	


V


	வீரமா முனிவர்
சரித்திரச் சுருக்கம்.

ஐரோப்பா கண்டத்திலுள்ள இத்தாலியா தேசத்தி லிருக்கும் காஸ்தி கிலியோனே என்னும் ஊரானது ஓங்கு புகழ் பெற்ற தொன்னூ லியற் றிய வீரமாமுனிவர் பிறப்பிடமாம். 1680-u நவம்பர்-t 8-s அவருக்கு ஜெந்மவார மாயிற்று. அவரைப் பெற்றோர் அவருக்குக் கான்ஸ்டன்ஷியுஸ் பெஸ்கி யெனப் பெயரிட்டார்கள். அவர் அவ்வூரிலும் உரோமாபுரியிலும் கல்விகற்று, இயேசுவின் சங்கத்தை யனுசரித்து, உரோமைச் சங்க வொழுங்குபடி நடந்து வந்ததினால், அவரது தெய்வபக்தி, கல்வி, சாதூரியம் முதலியவற்றைக் கேள்வியுற்ற பாப்பானவர் அவரதுசாமர்த்தியத்துக்கு வியந்து, தென்னிந்தியாவிலுள்ள மதுரைமா நாட்டுக்குப்போய் சற்குருவாகிய இயேசுவின் மாட்சிமையை அவ்விராச்சியத்தாருக்குத் தெரிவிக்க அவரை நியமித்தார். ஆனால் உரோமைச் சங்க முறைமையின்படி இருபத்தைந்து வயதாகுமுன் இவர் குருபட்டம் பெறுவது கூடாதாதலால் 1706-ம் வருஷத்தில் அவர் அப்பட்டம் பெற்று, இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார். இந்தியாவின் மேற்குக் கரையிலுள்ள கோவா வென்னும் ஊரை யடைந்து தமிழ்ப் பாஷை பயின்று, 1708-ம் வருஷத்தில் திருநெல்வேலிக்குச் சென்றார். அங்குள்ள காமயாநாயகன்பட்டி யென்னும் ஊரில் 1714-ம் ஆண்டு முதல் 1716-ம் ஆண்டுவரையில் வசித்ததாகவும், இங்கிருந்து, கைத்தார் என்னுங் கிராமத்துக்கு அடிக்கடி போக்கு வரவு செய்து வந்ததாகவும், திருநெல்வேலியில் 1714-ம் ஆண்டில் வடகன் குளம் சபையை ஸ்தாபித்த பிராண்டலீனி யென்னுந் தேசிகர் சொல்லுகிறார். பாளையங் கோட்டையி லிருந்து மதுரைக்குப் போகும் மார்க்கத்தில் உள்ள இவ்வூரானது அக்காலத்தில் மிகவும் பேர்பெற்றிருந்தது. சங்கரநயனார்கோவில் தாலுக்காவிற் கல்பட்டி யென்னுங் கிராமத்தில் அவர் தாம் செய்த தேவ ஊழியத்திற் செயம் பெற்றது கொண்டு அங்கொரு தேவாலயங் கட்டினார். இதி னிமித்தம் அங்குள்ள பிராமணர்கள் கோபங்கொண்டு இவரைப் பிடித்துச் சிறைச்சாலையில் வைத்துக் கோயிலையும் இடித்து விட்டார்கள்.

அந்தக்கிராமத்துப்பிராமணர்கள் தங்கள் முன்னோர் பாழாக்கிய மேற்சொன்ன தேவாலயத்தி னடையாளங்களைத் தற்காலத்தில் நமக்குக் காண்பிப்பதுடன் அது பெஸ்கி என்பவர் கட்டி வைத்த தென்றும், அவரையும், அவரால் கிறிஸ்தவனான வோர் பிராமணனையும், அவ்வூரி லிருந்து தங்கள் முன்னோர் அடித்துத் துரத்தி விட்டார்கள் என்றுஞ் சொல்லுவார்கள். அக்காலத்தி லிருந்த பிராமணர்கள் மிகவும் மத வைராக்கியமுள்ளவர்கள்.
	


VI


	ஆகையால் அவரைச் சிறைப்படுத்துவதினால் திருப்தி யடையாமல் அவரைக் கொலை புரியவு மெத்தனித்தார்கள். அப்போது கயித்தார் என்னுங் கிராமத்துக் கிறிஸ்தவர்கள் செய்த முயற்சியினால் அவர் சிறைச்சாலை யினின்றும் விடுதலையாகி, மரணத்திற்குத் தப்பிப்பிழைத்தார். இவ்வாறானதால் அந்தப் பிராமணர்கள் கொண்ட எண்ணம் நிறைவேறாமற் போயிற்று. இதன்உண்மை அவ்வூரின் சுற்றுப்புறத்துள்ள கிறிஸ்தவக்கிராமவாசிகளின் கன்னபரம்பரையாலும், 1715ம்-u சனவரி-t 12-s பெஸ்கி யென்பவர் தாமே யெழுதியிருக்கிற நிருபத்தாலும் விளங்கும். பின்பு அவர் 1716-ம் வருஷத்தில் மதுரைக்குச் சென்றார். ஆனால் அவர் அங்கே செய்ததின்ன தென்று தெரியவில்லை; பிறகு 1720-ம் வருஷத்தில் திருச்சிராப்பள்ளிக்கடுத்த வடுகர்ப்பட்டியில் வந்து நிலைத்திருந்தார். இவ்வாறு நடக்குங் காலத்திலும் அவர் தமிழைக் கற்றுத் தேர்ந்து அதைக் கரைகண்டா ரென்பதற்கு 1726-ம் ஆண்டில் அவரியற்றிய தேம்பாவணி முதலான சிறந்தநூல்களே சாட்சி பகரும். இவர் காலத்துக்குப் பிறகு இந்நாட்டுத் தமிழ்ப்புலவர் அநேகர் பலநூல்களைச் செய்தாரேனும், அவைகளி லொன்றேனும் இத்தேம்பாவணிக்கு நிகராமோ?

இதன்றி 1727-ம் ஆண்டில் ‘‘வேதியழுரொக்கம்’’ என்னும் நூலை உபதேச ரத்நாகரம் எனத்திருப் பணியாளருக்குபயோகமாக வியற்றினார். இதனைப்படிப் போருக்கிதன்னடையினால் மனமகிழ்ச்சியும், பொருளினால் பக்தி. ஞானம் முதலியவற்றின் அபிவிர்த்தியும் உண்டாகும். இயற்றமிழ் நடைக்கிது சிறந்தமுன் மாதிரியாக விருக்கிறதுமன்றி கடுஞ்சொற்பொழிவு, பொருட்பேதம், பிழைபாடு, அன்னியபாஷை நடைக்கலப்பு. முதலியவற்றால் நிரம்பியதும் காதுக்கினிமை யற்றதுமாயிருக்கின்ற தற்கால வியற்றமிழ்நூல்களின் குறைகுற்றங்களை வெளியாக்கும் சுலோசன மெனவுந்தகும்.

1729-ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளிக் கடுத்த ஆவூரி லிருந்தபோது இவர் தாமியற்றிய தேம்பாவணிக் குரை எழுதினார். இக்கிராமத்திலேயே வெகுநாள் வசித்துத் தமது வாழ்நாளெல்லாந் தமிழை ஆராய்ந்தார். கிறிஸ்துமார்க்கம் இந்நாட்டிற் பரவுதற்கு இவர் இடைவிடாது முயன்று வந்தாரென்று கன்னபரம்பரையால் விளங்குகிறது. அவர் ஊருக் கூர்ப் பயணம் பண்ணி ஜனங்களுக்குப் போதித்துத் தம்மோடு வாதாடவந்தவர்களையெல்லாம் வென்று விசேஷமாக உயர்ந்த ஜாதியோரையே கிறிஸ்தவர்களாக்கிவந்தார். கிறிஸ்தவ ஆலயங்கட்டிவைப்பதும் அவற்றை வினோதமாக அலங்கரிப்பதும் அவருக்கதிகப் பிரியம். 50 வருஷத்திற்கு முன்னிருந்த முத்துசாமிப்பிள்ளை யென்பவரெழுதிய வீரமாமுனிவர் சரித்திரத்தில் இவரைப்பற்றி யநேகமாய் காணலாம். திருஷ்டாந்தமாக:-

கல்விப் பெருக்கத்தா லகங்கரித்த வொன்பது சடைப்பண்டாரங்கள் வந்து வீரமா முனிவரோடு தர்க்கம் பண்ணி யவரை வெல்ல வேண்டு
	


VII


	மெனக் கருதி, தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்கள் சொற்படி நடப்பதென்று உடன்படிக்கை பண்ணித் தர்க்கிக்கத் தலைப்பட்டார்கள். ஒரு மாத மட்டும் பண்ணிய தர்க்கத்தில் அவரை வெல்ல மாட்டாமல் தாங்களே தோற்றுப் போனதால் அவர்களில் ஆறு பேர் சத்தியவேதத்துக் குட்பட்டார்கள். மற்ற மூன்றுபேர் சடையறுபட்டு வெட்கத்தினால் மேல் சீமைக்குப் போய் விட்டார்கள். அந்தச் சடைகள் திருக்காவலூர்க் கோவில் மண்டபத்தில் வைக்கோற் கட்டுப்போல ஐதர் கலாடனை மட்டுந் தொங்கிக் கிடந்தன.’’ இப்படிக் கவர் தேச சஞ்சாரம் பண்ணிக் கொண்டு போகிறபோது அவருபதேச மகிமையினால் இத்தேசத் தவர்களிற் பலர் கிறிஸ்தவர்களானார்கள்.

பெஸ்கி யென்னும் வீரமாமுனிவர் ஜீவித்தகாலமோ மிகக் கொடுமை, துன்பம், கலகம் முதலியவற்றால் நிறைந்தது. அவரிருந்த நாடும் அவ்வாறே கலகம், யுத்தம், சர்ப்பனை இவைகளால் கலக்குண்டதினால் அவர் அக்கால காரியகர்த்தர்களுடன் சம்பந்தப்படாதவரா யிருப்பது கூடாது. எவ்வாறெனில், 1736ம்-ஆண்டில் வஞ்சகம், கொடுமை முதலிய துர்க்குணங்கள் குடிகொண்ட சந்தா ஸாஹேபு என்னும் நபாபு திருச்சிராப்பள்ளியை முற்றுகைபோட்டு அதைப் பிடித்துக்கொண்டு மதுரை நாட்டிற்குந் தாமே அரசனென்று பறையறை வித்தார். அவர் வேண்டுகோள்படி இவரவரிடஞ் சென்று வார்த்தை யாடினபோது அவருக்கு இவரிடத்தில் அதிகத் திருப்தி யுண்டாகித் தமக்குத் திவானாக இவரை யேற்படுத்திக் கொண்டது மன்றியிவருக் கினாமாக நான்கு கிராமங்க ளளித்தார்.
    1740-ம் ஆண்டில் வேலூர் கர்னாடக நபாபாகிய தவுஸ்த் அலிகான் என்பவரைப் போய்த் தரிசித்து, 1739-u அக்டோபர்-t 29-s தமது சங்கத் தலைவர் அந்த நபாபுக்கு எழுதி யனுப்பிய நிருபத்தையுங் காண்பித்தார். இவை முதலிய காரியங்கள் அக்கால காரிய கர்த்தாக்களுட னிவருஞ் சம்பந்தப்பட்டா ரென்று விளக்குகிறது.

1770-ம் ஆண்டில் மஹாராஷ்டிரர்கள் திருச்சிராப்பள்ளியை முற்றுகைபோட்டு 1741-ம் ஆண்டில் அதைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் மிகுந்த மத வைராக்கியமுள்ள இந்துக்களாதலால் சந்தாஸாஹேபின் திவானாகிய இவர் கிறிஸ்தவ குருவென்றறிந்தபோது கிறிஸ்தவர்களும் மகமதியரைப்போலவே அம்மஹாராஷ்டிரர்களுடைய பகைக்கு இலக்கானார்கள். இதை யறிந்த பெஸ்கி யென்பவரும் மற்றுமுள்ளவர்களும் மரணத்தினின்று தங்களைக் காத்துக் கொள்ளும்பொருட்டு ஓடி யொளிக்கும்படி நேரிட்டது. ஆகவே அவர் முதல் முதல் போன இடம் இராமநாதபுரம். அங்கிருந்து திருநெல்வேலிக் கடுத்த வோர் கரைதுறைப்பட்டணத்தைச் சேர்ந்து அங்கே சில காலம் தங்கியிருந்தார். அவ்வூருக்கு மணப்பாடு என்று பெயர். அது அக்காலத்தில் உலாந்துக்காரருக் குரியது. அதிலே உரோ
	


VIII


	மான் கத்தோலிக்கு ஆலயமும் சபையு மிருந்தன. பெஸ்கி என்பவர் இந்தியாவுக்கு வந்தவுடன் கொஞ்சக் காலம் அங்கே தங்கி யிருந்தபடியால் தமது விருத்தாப்பியத்திலும் அங்கேயே வசிக்க வெண்ணினா ரென்றும் உத்தேசிக்கலாம். அமைதியற்ற உலகம் வேண்டா மென வெண்ணிய இவருக்கு அமைதியுள்ள அவ்வூர் தகுந்த இடமாயிற்று. எனவே இங்கு சில காலம் வசித்துப் பின் தேகவியோகமானார். அங்குள்ள ஆலயத்தின் பிராகாரத்தில் இவர் சேமிக்கப்பட்டா ரென்றாலும் இதைத் தெரிவிக்க அவ்விடத்தில் சமாதி முதலிய யாதொன்றும் கட்டி யிருக்கக் காணோம். இவ்வாறிருப்பது அவரது பெயர், குணம், தாம் செய்து வந்த சன்மார்க்கத் தொழில், முதலியவற்றிற்கு முழுமையும் தகாத காரிய மன்றோ? அங்குள்ள பரவர்கள் இவர் மேன்மையை யறியாமையினாலோ அல்லது தங்கள் வறுமையினாலோ இவர் மரணத்தைக் குறிக்கும் சமாதி முதலிய யாதொன்றும்கட்டாமற் போனார்களேனும் இவரது சற்குணம், ஆழ்ந்த அறிவு, பயனுறு தொழில், கீர்த்தி, பிரதாபம், முதலியவற்றை யறிந்தவர்களாவது ஏதேனு மொன்றைச் செய்திருக்க வேண்டுமன்றோ? இவரோ தமக்குப் பிறர்செய்வதை யெதிர் பாராமல் தாமே தம்முடைய பெயர் நீடூழி காலம் நிலைத்தோங்கும்படி சிறந்த பல நூல்க ளியற்றி யிருக்கிறா ரன்றியும் இவர் செய்து வந்த வேதியர் தொழிலும் போதுமான ஞாபகக் குறியாம். பெஸ்கி யென்பவர் தென்னாட்டுக்கு வந்த பிறகு தமது இயற்பெயராகிய கன்ஸ்டான்ஷியுஸ் என்பதின் பொருள்படும் தைரியநாதன் என்னும் நாம தேயத்தை வகித் துக்கொண்டா ரென்றும், தேம்பாவணி யெனு நூல் வெளிப்பட்ட பிறகு தமிழ்ப் புலவரால் இவர்க்கு வீரமாமுனிவர் என்னும் அபிதான மளிக்கப் பட்டது என்றும் சொல்வர். 
 

ஜி. மெ. கா.
	


1


	கடவுள்துணை.
இஃது
வீரமாமுனிவர் திருவாய்மலர்ந்தருளிய
ஐந்திலக்கணத்
தொன்னூல் விளக்கம்.
TONNUL VILAKKAM.
மூலமும் - உரையும்.
~~~~
பொதுப்பாயிரம்.
GENERAL PREFACE.
 
  	

நீர்மலிகடறவழ் நிலன்முதன்மற்றருஞ்
சீர்மலியுலகெலாஞ் செய்தளித்தழிப்ப
வல்லவனாய்முதன் மட்டீறொப்பெதி
ரில்லவனாயுய ரிறையோனொருவனைப்
பன்மையொழியப் பணிந்தேயிராவிருட்
டன்மையொழியத் தரணியிற்றோன்றிய
வாதவனிகரிரு ளகத்தறவன்னா
னோதியமறைநூ லோதினனாகி
யம்மெய்ப்பொருளொன் றனைவருமுணரச்
செம்மெய்ப்பொருளத் திருமறைவழங்க
வமைத்துளத்தெழுந்த வாசையுட்டூண்டிச்
சமைத்துளயாவருந் தாங்கத்தருகென
வேவியதாகவிப் பணியேற்றிநூன்
மேவியவைம்பொருள் விளக்கலுணர்ந்து
விரிவிலாத்தொன்னூல் விளக்கமெனும்பெயர்த்
தரியவாசிரிய ரருந்தமிழ்ச்சொல்லிற்
பிறநூன்முடிந்தது பெயர்த்துடன்படுத்தியும்
புறநூன்முடிந்தது பொருத்தியுந்தானொரு
வழிநூன்முடித்தனன் வாய்ப்பருமெய்ம்மறை
	


2


	மொழிநூலத்தராய் முதிர்சிறப்பிணையி

லிரோமைநாட்டினின் றெய்தியமுனிவருள்

விரோதமொழிதயைமேவக

நேரமாதவத்தின் வீரமாமுனியே.

     (இதன்பொருள்). இவற்றுணூலின்பெயரு மாக்கியோன்பெயரு மாக்
கியகாரணவகையுந் தரும்பொருளளவுங் கொள்வோர்பயனுமென் றிவ்வைந் துறுப்புள
விச்சூத்திரம் பொதுப்பாயிரமாக வம்மாமுனி மாணாக்கருணூலி னெளியனெனு
மன்பிலுயர்ந்தோ னுரைத்தவாறு காண்க.

என்னையோவெனில்.-

நூலேநுவல்வோ னுவலுந்திறனே

கொள்வோன்கோடற் கூற்றாமைந்து

மெல்லாநூற்குமிவை பொதுப்பாயிரம்.

     (எ-து). நன்னூன் மேற்கோள் ஆகையில், விருத்தி; பெருங்கடல் சூழ்ந்த
பூவுலகாதி மற்றுண்டாகிய செல்வமுடைய வுலகங்களியாவையுந் தானுளவாக்கவு
நிலைபெறக்காக்கவு மழிவுறநீக்கவும் வல்லவனாகி யாதியுமந்த முமளவுமொப்பு
மெதிருமில்லாதவனா யெவ்வகைப் பொருளினு மேனின்று யர்ந்த கடவு ளொருவனை
மற்றைத் தேவரை நீக்கித் தனியே பணிந்து போற்றி மாவிராவிருளைநீக்க
விப்பூவுலகிற்றோன்றிய பருதியைப்போல மனவிருளாகிய வஞ்ஞானத்தை நீக்க
வக்கடவுளோதித் தந்த வேதநூலையோ துங் குருவேயாகி யம்மெய்க் கடவுளை
யெவருமறிந்து வணங்கவு மவனே தந்த வேதநூலெங்கும் வழங்கவு மாசையே
மனத்துட்டூண்டி யேவியதாக விதுவேகாரணமெனத்தா னெழுத்துச் - சொற் - பொரு -
ளியாப் - பணியென வைந்திலக்கணப் பொருட்களைக் கல்லாதவருங் கண்டுணரும்படி
தெளிவாகவிளக்கத் துணிந்ததைப்பற்றித் தொன்னூல்விளக்கமென விந் நூற்பெயராகிப்
பிறதமிழ்நூலோர் முன்னுரைத் தோதியவற்றைத் தானுடன்படுத்தியுந் தமிழ்ப்புறநூலோர்
விதித்தவற்றுட் சிலதான்பொருத்தியு மீண்டொரு வழிநூலென முடித்துரைத்தா ரிவராரோ
வெனின் மெய்யங் கடவுடந்த மெய்ம்மறை நூலிற் குருக்களாகச்
செல்வவிரோமைநாட்டினின் றெழுந்தருண் முனிவருளொருவராகிய வீரமாமுனி
யென்பாரெனக் கண்டுணர்க. ஆகையிலினிவருஞ் சூத்திரவிதியு முரையின்விரிவு
மம்மாமுனிதான் றரவே செவி வாயாகப் பருகி நெஞ்சு கண்ணாக வுணர்ந்துகொள்வது
கல்வி விரும்பினர்கடனே, என்றவாறு. பதிகம்-பாயிரம்-முகவுரை-ஒன்றாம்.

பொதுப்பாயிரம். - முற்றிற்று.
	


3


	சிறப்புப்பாயிரம்.
SPECIAL PREFACE.
1. 	சொன்னூலடையாத் தொகைக்குணத்தொன்றா
முன்னூறந்த முதல்வனைப்போற்றி
நன்னூலாய்ந்தோர் நவின்றவைம்பொருட்
டொன்னூல்விளக்கமுன் சொற்றுதுமெழுத்தே.
 
     (இ-ள்.) சொல்லத்தகு மெந்நூல்வகையானு மடையப்படாத தேவகுணங்களி
யாவையுந் தொகுத்துளனாகி மிக்காரு மொப்பாருமின்றி யொன்றாய் நிற்குங் கடவு
ளிவனென முதனூலாகிய வேதநூலைத் தந்த முதல்வனைப் பணிந்து நானே வழுவில
வுரைக்கவு மற்றவர் பயனொடு கேட்பவுந் துணைச் செயல் வேண்டி யவனடி
தலைமேலணிந்து போற்றி முன் செந் தமிழ்நூற் கற்றோருரைத்த வெழுத்துச்
சொற்பொருளியாப்பணி யென வைம்பொரு ளிலக்கணங்களை விளக்கத் தொடங்கி
முன்னீண்டெழுத்தியல் பின்னதென வுரைத்துக் காட்டுது மாகையி லிதுசிறப்புப்பாயிரம்.
என்னை, தெய்வ வணக்கமுஞ் செய்பொருள் விளக்கமுஞ் செப்புவதாகுஞ்
சிறப்புப்பாயிரம். ஆதலா லிலக்கிய வகையான் மூத்தோர்புதைத்த வரும் பயனாகிய
பொருளைக் கண்டறிந் தெடுப்பதற் கிலக்கணநூலே விளக்காம். விளக்குதலால்
விளக்கென்னப்பட்டது. ஒளிவிடா மூடினதீபத்தாற் பயனில்லை யென்றதுபோல
முன்னோர்தந்த விலக்கணநூலெலாஞ் செந்தமிழ்ச் சிறந்த மொழியோடு மூடிக்கிடப்ப
விக்காலத் தவ்விளக்கொளியைக் காண்பாரில்லாததற் கொருபயனு மில்லை.
தென்மொழியார்க்கு வட மொழியைத் தானுணர்த்தக் கருதி யவர்முன்னறிந்த
தமிழ்ச்சொற் கொண்டலவோ வடமொழிப்பயனை யுரைத்தல் வேண்டு மாகையான்
மூத்தோர் புதைத்த நூனலம் விளங்கவுங் கல்லாதவரும் பயன்கொண்டுணரவு
நானேயதன் மேற்கவித்த போர்வைநீக்கி யறிஞர் முன் கொளுத்தின தீபமெவர்க்கு
மெறிப்பக் கையிலேந்தினாற்போல வவர்முன் செந்தமிழ் மொழியான் மறைத்த
விலக்கணநூலை யிளந்தமிழுரையால் வெளிப்பொருளாக்க நினைத்தேனாயினு
முன்னோர்தந்த யாவையும் விரித்துரைத்தா லிந்நூலும் பெருகிக் கண்டவ ரஞ்சித்
துணியாரென்று கருதி முனமிகவறிய வேண்டுவ தொன்றைத் தெரிந்து தருவேன். இறகு
முளைத்து முற்றாமுன்னே தாயிரை கொண்டு வருவதன்றியே பறக்கும் பருவம் வந்தபின்
றாமேமெய் வன பறவை யலவோ வவ்வாறிங்ஙன நானு மூத்தோர் சொன்னதை
அவரவர் தாமே கண்டுபிடிக்க வேண்டுவதை மாத்திரம் விதிவிரித்துரைப்பேன்.
அதன்பின் முளைத்த சிறகை விரித்து மேற் பறந்து மேய்ந்தாற் போலவுந் தந்த
பாசத்தைப்பற்றி மலையொத்துயர் மதயானையையேறி நடாத்தினாற் 
	


4


	போலவுஞ் சிறிதோர் தெப்பத்தைப் பிடித்துப் பெரும் வெள்ளத்தை நீந்தி னாற்போலவு
மிங்ஙன நான்றந்தவற்றைக் கொண்டு செந்தமிழ்ப் பெருங் கடனீந்தவு முழுகவுஞ் செய்து
முற்றுல கெல்லாம் புகழப் புலவர் புதைத் தப்பெரும்பய னவமணித்தா மெடுத்தணிவதே
யெளிதா மங்ஙனமீண்டு நானொரு புதுநூலாயினுந் தொன்னூலிற் கொருபுதுவழியாயினுங்
காட்டுவ துணரா துயர்ந்த முன்னோர் தந்த நூலை விளக்குதற் கருதித் தெளிவு வேண்டி
வேறுவேறாய்ச் சூத்திரந் தரினு மூத்தோ ருரைத்த பற்பலவற்றையும் பொருத்துதும்.
ஆயினுஞ் செந்தமி ழுணர்ந்தோர் வழியே யன்றிப் புறனடையாய்ச் சில விகற்பம்
புறநூல் வழியே சென்று காட்டுது மாகையான் முன்னோர் நூலினடையினும் விகற்ப
நடையினு மெழுத்துச் சொற்பொருளியாப் பணியென வைந்திலக்கணங்களை
யைந்ததிகாரமாக வீண்டு பிரித்துக் கூறுதும், கூறிய நடையில் வழுவினு
முற்றரிதுணர்ந்தோ ரிகலா தன்பொடு தாங்கிக் கண்ட வழுவினைத் தீர்ப்பது
மீண்டைம்பொருளை யுரைத்த வழியிழிவெனினுந் துணிந்த கருத்து நன்றென வொருவாதி
வற்றைக் கொள்வதுங் கடனே, எ-று.
	


5


	முதலாவது:-
எழுத்ததிகாரம்.
PART I. - LETTERS
முதலாவதெழுத்தியல்.
Chapter I - Nature of Letters
 

2.
	தோற்றமும்வகுப்புந் தோன்றும்விகாரமுஞ்
சாற்றுளித்தோன்றுந் தானெழுத்தியல்பே.
 
     (இ-ள்.) எழுத்திலக்கண மாமாறுணர்த்துதும். எழுத்தின் றோற்றமும் வகுப்பும்
விகாரமும் என்றிம்மூன்றனுள் எழுத்து வகைப்பாடெல்லா மடங்கும். என்னை,
தோற்றமென்புளி, எழுத்துப்பிறக்குமிடமும்,முறையும், எண்ணுமெனவும்; வகுப்பென்புளி,
முதல்சார்புயிர் மெய்முதலியகூறுபாடெனவும்; விகாரமென்புளி, பதத்திலும்புணர்பிலும்
வருந்திரிபாக்கமுதலியவேறு பாடெனவுந்தோன்றும், எ-று.உளி எ-து.இடம்,
உழியென்பாருமுளர். (1)
 
3. 	உயிரிடை யினமிடறுரம்வலியுச்சிமெலியியை
முதலிடமாயிதழ் மூக்கணம்பன்னா
வைந்துணையிடத்தா மக்கரப்பிறப்பே.
 
     (இ-ள்.) எழுத்தின்றோற்ற மாமாறுணர்த்துதும். உதானவாயுவின் காரணமாக
எழுத்தெல்லாம் பிறக்குமாயினும் அவற்றுட்பன்னீருயிர்க்கும், ஆறிடை யினத்திற்கும்,
மிடறேமுதலிடமாகவும்; ஆறுவல்லினத்திற்கும், நெஞ்சே முதலிடமாகவும்;
ஆறுமெல்லினத்திற்கும், உச்சியேமுதலிடமாகவும்; அன்றி உதடும், மூக்கும், அண்ணமும்,
பல்லும், நாவும் என விவ்வைந்தே துணையிடமாகவும்; எழுத்தெல்லாம்
பிறக்குமென்றுணர்க. ஆயினும் இவற்றையும் எழுத்தின்முறையையும் எண்ணையும்
உணர்த்துவ துறுபயனின்றிப் பொழுதழிவாகையானும், இனிச் சிலவுரைப்பது முறையா
மென்றமையானும், இங்ஙன மவற்றைநீக்கி எழுத்தின்வகுப்பும் விகாரமுமென
மற்றிரண்டையும் விளக்கிக்கூறுதும். இதன் விரிவையுணரவேண்டில் தொல்காப்பியத்துட்
காண்க. அதனினும்விரிவு பேரகத்தியம் நன்னூல், எ-று. (2)

முதலாவதெழுத்தின் தோற்றம். - முற்றிற்று.
	


6


	இரண்டாவதெழுத்தின்வகுப்பு.
Chapter II. - Classification of Letters.
4. 	முதல்சார்புயிரே மூவினமெய்யே
முதற்கண்ணெழுத்தே மொழியீற்றெழுத்தே
யுயிர்மெய்குறி னெடிலோடுமாய்த
மாறுகுறுக்க மளபெடையிரண்டு
மாத்திரைப்புணர்பென வகைப்படுமெழுத்தே.
 
     (இ-ள்.) எழுத்தின்வகுப்பா மாறுணர்த்துதும், இம்முதற்சூத்திரத்துள்
இனிச்சொல்லக் குறித்தவகை யெல்லாந் தொகைப்படக்காட்டித்தந்தனம். ஆகையி
லவ்வவச் சூத்திரத்துள் அவ்வவற்றை முறையேகாண்க. (1)
 
5. 	முதலெழுத்துயி ரீராறுடன்மூவாறே
சார்பெழுத்துயிர்மெய் தனியாய்தத்தோ
டஃகிய இ, உ, ஐ, ஒள மவ்வாய்த
முயிரளபொற்றள பொருபஃதென்ப.
 
     (இ-ள்.) முதல்சார்பெழுத்தா மாறுணர்த்துதும், தமிழெழுத் தெல்லா
முதலெழுத்தெனவுஞ் சார்பெழுத்தெனவும் இருவகைப்படும். இவற்றுட் பன்னீருயிரும்,
பதினெண்ணொற்றும், ஆக முதலெழுத் தொரு முப்பதுமாம். சார்பெழுத்தோவெனில்,
உயிர்மெய்யும், ஆய்தமும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஐகாரக்குறுக்கமும்,
ஒளகாரக்குறுக்கமும், மகரக்குறுக்கமும், ஆய்தக்குறுக்கமும், உயிரளபெடையும்,
ஒற்றளபெடையும் ஆகச்சார் பெழுத்தொருபஃதாகும், எ-று. முதலுக்க, தலைமை-
பிரதானம் எ-ம். சார்புக்கு, தலைமையின்மை, அப்பிரதானம், எ-ம். கூறுவர், எ-று. (2)
 
6. 	எ, ஒவ்வும் றனழவ்வுமென்றைம்முதலு
முயிர்மெய்யுயிரள பொழியெண்சார்பு
மந்தமிழ்க்குரிய வாரியமும்பிறவே.
 
     (இ-ள்.) முன்சொன்னவற்றிற்குச்சிறப்புவிதி விகற்பித்துணர்த்துதும். கூறியமுப்பது
முதலெழுத்துள்ளே, எகர ஒகரங்களென இரு குற்றுயிரெ ழுத்தும், ற ன ழ வென
மூன்றொற்றும், ஆகமுதலெழுத்தைந்தும், கூறிய பத்துச் சார்பெழுத்துள்ளே, ஆய்தமும்,
ஒற்றளபும், ஆறுகுறுக்கமும் என வெண்சார்பெழுத்துந் தமிழ் மொழிக்குரியன, அன்றி
யாரியமொழிக்குள் ளில்லன. சொன்னவிப் பதின்மூன்றொழித் தொழிந்த பத்துயிர்
பதினைந் தொற்றென முதலெழுத் திருபத்தைந்து முயிர்மெய் யுயிரளபெனச்
சார்பெழுத்திரண்டுமாகத் தமிழிற்கு மாரியத்திற்கும் பொதுவெழுத் திருபத்
	


7


	தேழென்றுணர்க. அன்றியுந் தென்மொழிக் கில்லனவாகி வடமொழிக் குரியவெழுத்
தெத்துணையோவெனில், ஆரியமொழியில் வழங்கு முயிர்பதி னாறுள்ளும்
மெய்முப்பத்தேழுள்ளும் சொன்ன பொதுவெழுத்தன்றி உயிராறும், ஒற்றிருபத்திரண்டுமாக
வடமொழிக் குரியவெழுத் திருபத்தெட்டெனக்கொள்க. இங்ஙனம் ஆரியமொழிகளைத்
தமிழிடத் துரைக்குங்காலைப் பொதுவெழுத்தால் வரும்பதமே சிறப்புடைத்து; அல்லன
வருதல் சிறப்பன்றெனக்கண்டுணர்க. - நன்னூல். "ற ன ழ எ ஒவ்வு முயிர்மெய்யு
முயிரள பல்லாச்சார்புந்தமிழ் பிறபொதுவே," எ-று. (3)
 
7. 	இடுகுறிகாரண மிவைபொதுச் சிறப்பென
வீரிரண்டாகு மெழுத்தின்பெயரே.
 
     (இ-ள்.) தமிழில் வழங்கு நாற்பதுவகை எழுத்திங்ஙனம் வேறுவேறாய் விளக்கா
முன்னர் வழங்கு மவற்றின் பெயரைக் கூறுதும்.அவைநால்வகைப்படும். இடுகுறிப்
பொதுப்பெயரும், இடுகுறிச் சிறப்புப்பெயரும், காரணப் பொதுப்பெயரும், காரணச்
சிறப்புப்பெயரு மென்றுணர்க. (உ-ம்) உயிரே, உயிர்மெய்யே, உடம்பே, என்பன
இடுகுறிப்பொதுப்பெயர், அவற்றுள் அ, ஆ, க, ங முதலிய இடுகுறிச் சிறப்புப்பெயர்.
குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் முதலிய காரணப் பொதுப்பெயர்.
குற்றியலுகரங் குற்றியலிகரமுதலிய காரணச்சிறப்புப் பெயரெனக்கொள்க. ஆகையில்,
(உ-ம்) நாகு, எனுமொழி யீற்றெழுத்து இடுகுறிப் பொதுப்பெயரால் உயிர், மெய், எ-ம்.
இடுகுறிச்சிறப்புப்பெயரால், கு, எ-ம். காரணப்பொதுப் பெயரால், குற்றெழுத்து, எ-ம்.
காரணச் சிறப்புப் பெயரால், குற்றெழுத்து, எ-ம். காரணச் சிறப்புப் பெயரால்,
குற்றியலுகரம் எ-ம். பிறவுமேற்கும் பெயரொடு வழங்கும், எ-று. (4)
 
8. 	அம்முதலீராறுயிர் கம்முதன்மூவாறுடல்
குறில் அ, இ, உ, எ, ஒவ்வைந்தேநெடில்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள வேழே.
 
     (இ-ள்.) உயிரு முடலுங் குறிலு நெடிலு மாமாறுணர்த்துதும், உயிரெழுத்துப்
பன்னிரண்டு; (உ-ம்) அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எ-ம்.
மெய்யெழுத்துப் பதினெட்டு; (உ-ம்) க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ்,
ள், ற், ன். எ-ம். பன்னீருயிர்களுட் குற்றெழுத்தைந்து, (உ-ம்.) அ, இ, உ, எ, ஒ எ-ம்.
நெட்டெழுத்தேழு, (உ-ம்) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள எ-ம். வரும். உயிராய்வரினு
மொற்றெடுத் துயிர்மெய்யாய் வரினுங் குறில் குறிலே, நெடில் நெடிலேயாம். உயிருக்கு
ஆவி, அச்சு, சுரம் எ-ம். மெய்க்கு, புள்ளி, உடல், உடம்பு, ஒற்று, அல், வியஞ்சனம்
எ-ம். குற்றிற்கு, குறில், குறுமை, இரச்சுவம் எ-ம். நெடிற்கு, நெடில், நெடுமை, தீர்க்கம்
எ-ம். கூறுவர், எ-று. (5)
	


8


	9. 	வலி க ச ட த ப ற மெலி ங ஞ ண ந ம ன
இடை ய ர ல வ ழ ள வெனமூவினமே.
 
     (இ-ள்.) மூவினமாமாறுணர்த்துதும், முன்சொன்ன பதினெட்டொற் றெழுத்து
மூவினமாக வகுக்கப்படும். அவை வல்லினமாறு. (உ-ம்) க், ச், ட், த், ப், ற், எ-ம்.
மெல்லினவாறு. (உ-ம்) ங், ஞ், ண், ந், ம், ன், எ-ம். இடையினமாறு (உ-ம்) ய், ர், ல், வ்,
ழ், ள், எ-ம். வருமெனக் கண்டுணர்க. வலிக்கு, வலி-வன்மை-வன்கணம்-சய்-பரிசம்
எ-ம். மெலிக்கு, மெலி மென்மை-மென்கணம்-அநுநாசிகா-பரிசம் எ-ம். இடைக்கு, இடை.
இடைமை-இடைக்கணம் அந்தத்தக்கரம்-யண் எ-ம். கூறுவர், எ-று. (6)
 
10. 	உயிர் க ச த ப ஞ ந ம வ ய முதற்கே
எ, ஒ, ஒள வு மெல்லினஙவ்வு
நீத்துயிர் ண ம ன விடையினமீறே.
 
     (இ-ள்.) முன்சொன்ன முப்பது முதலெழுத்துள்ளே மொழிமுதற்கண் வருமெழுத்து
மொழியீற்றின்கண் வருமெழுத்தும் அவையிவை யென்று காட்டுதும். பன்னீருயிரும்
கம்முத லொன்பதுயிர்மெய்யு மொழிமுதற்கண் வரப்பெறு மெனக்கொள்க. (உ-ம்) அலை,
ஆலை, இனம், ஈனம், உழி, ஊழி, எரி, ஏரி, ஐயம், ஒதி, ஓதி, ஒளவியம் எ-ம். கனி,
சனி, பனி, தனி, ஞாலம், நதி, மதி, வதி, யதி எ - ம். பிறவுமன்ன. அன்றியுங்
குற்றெகரங் குற்றொகர மௌகார மொழித்தொழிந்த வொன்ப துயிரும், ண், ம், ன், ய், ர்,
ல், வ், ழ், ள் என வொன்ப தொற்றும் மொழி யீற்றின்கண் வரப்பெறு மெனக் கொள்க.
(உ-ம்) பல, பலா, பரி, தீ, உரு, மகடூ, சே, கலை, ஒ, எ-ம். மண், கம், மின், மெய், சீர்,
பல், தெவ், கூழ், கள் எ-ம். பிறவுமன்ன. அன்றியு மேவலிடத்து நொ எ-ம். து எ-ம்.
கௌ எ-ம். உரிஞ் எம். பொருந் எ-ம். வருமெனக் கொள்க. யதி எ-து முனிவர்,
எ-று. (7)
 
11. 	உயிரேமெய்யணைந் துயிர்மெய்யாகு
மவையிரு நூற்றொருபத்தா றென்ப.
 
     (இ-ள்.) உயிர்மெய்யா மாறுணர்த்துதும். உயிருமெய்யுங் கூட்டி உச்சரிக்கப்படா
நிற்கு மெழுத்தே உயிர்மெய் யெனப்படும். (உ-ம்) க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை,
கொ, கோ, கௌ எ-ம். வரும். ஆகையிற் பன்னீருயிரு மூவாறு மெய்யோடுறழ,
உயிர்மெய் இருநூற் றொருபதினாறென்ப. அரைமாத்திரையாகிய குற்றுயிரும் இரண்டு
மாத்திரையாகிய நெட்டுயிரும்கூடி நின்றவழி ஒன்றரை மாத்திரையும்,
இரண்டரைமாத்திரையும், இசையாது உயிரளவாகிய ஒருமாத்திரையும்,
இரண்டுமாத்திரையும், இசைப்பனவாம். ஒலிவடிவினும், வரிவடிவினும்,
முதலெழுத்தின்வேறாய் உயிரும் மெய்யுங்கூடிப் பிளவுபடா தொலித்தலான் உயிர்
மெய்யெனப் பெயராய்ச்சார்பெழுத்தி னொன்றாயின.
	


9


	ஒலி வடிவு = செவிப்புலனறிதல். வரி வடிவு = கட்புல னறிதல். எ-று. (8)
 
12. 	நீட்டல் சுழித்தல்
குறின்மெய்க் கிருபுள்ளி.
 
     (இ-ள்.) எழுத்து வடிவ மாமாறுணர்த்துதும். மெய்யின் வடிவும், உயிர் மெய்யின்
வடிவும், பலமுறை வேறுபடாமையானும், எகரம் ஏகாரம், ஒகரம், ஓகாரம், எப்போதும்
ஒருவடிவாகையானும், மயக்க நீப்பது வேண்டி மேற்புள்ளி கொடுத்தார் புலவர்.
ஆகையில் குற்றெழுத்தின் மேனீண்ட புள்ளியும், ஒற்றெழுத்தின் மேற்சுழித்த புள்ளியும்,
வருமென்றுணர்க. (உ-ம்) எரி-எரி, ஒதி-ஒதி, மணமகள்-மண்மகள், தாம்-தாம், கணமணி-
கண்மணி, எ-ம். வரும். சூத்திரம். "மெய்யினியற்கைப் புள்ளியொடு நிலைய,
லெகரவொகரத் தியற்கையுமற்றே." எ-ம். கூறினார், எ-று. (9)
 
13. 	ஆய்தங் குறில் வலிக்காகு நடுவே
யஃதீற்று ல ளத்திருந்துளி யஃகும்.
 
     (இ-ள்.) குறுகாதவாய்தம் குறுகியவாய்தமாமாறுணர்த்துதும்.
ஆய்தங்குற்றெழுத்திற்கும், உயிரொடுபுணர்ந்த ஆறுவல்லெழுத்திற்கும், நடுவே
வரப்பெறும். இதனுருவோ வெனில் முப்புள்ளி வடிவு; இது மெய்யெழுத்தின்
றன்மைத்தாவதன்றி அதன்மே லுயிரேறப்பெறாதெனக்கொள்க. (உ-ம்.) எஃகு, கஃசு,
கஃடு, பஃது, கஃபு, கஃறு என வரும். இவ்வாறுடன், அஃகடிய எனப் புணர்ச்சி
விகாரத்தால் வருமாய்தமும், அஃகான் எனச்செய்யுள் விகாரத்தால் வருமாய்தமுங்கூடி
எட்டாதல்காண்க. அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று, ஆய்தம் எனினு மொக்கும்.
இவ்வாறு வருதல் குறுகாதவாய்தம். அன்றியும் ஈற்று லகார ளகாரங்கள் தவ்வொடு
புணருங்கால் திரியும்; திரிந்தவழியின் ஆய்தம் வரும்; வரினுங்குறுகி ஆய்தக்
குறுக்கமாகும். (உ-ம்) கல் + தீது = கஃறீது, முள் + தீது = முஃடீது, எ-ம். வரும்.
ஆய்தமென்ற திடுகுறிப்பெயர். முதலெழுத்து முப்பதினொன்றல்லாது வேறாய்
நிற்றலானும், உயிர்போலத் தனித்தொலியாதுமாய் மெய்போல உயிரேறப் பெறாதுமாய்
முதலெழுத்தாந் தன்மை எய்தாமையானும், இரு மருங்கும் வருமெழுத்தைச் சார்ந்
தொலித்தலானுஞ் சார் பெழுத்தி னொன்றாயின,
எ-று. (10)
 
14. 	யம்முதலிய்யா மிருகுறளுக்கெடி
லஃகுமற்றா மசைச்சொன்மியாவே.
 
     (இ-ள்.) குற்றிய லிகரமாமாறுணர்த்துதும். நிலைமொழிக் குற்றியலுகரத்தின்
முன்னே வருமொழி முதற்கண் யகரம் புணர்ந்து கெடுமிகரமும், முன்னிலையசைச்
சொல்லாகிய மியா வெனு மொழியில் வந்த இகரமும்,
	


10


	 குற்றியலிகரமாகும். (உ-ம்.) நாகியாது, ஈறியாது, கூடியாது, தேசியாது, ஐதியாது,
கோடியாது, கௌடியாது என நெடிற்றொடர் மொழிக்குற்றிய லிகரமேழும், எஃகியாது
என ஆய்தத்தொடர்மொழிக் குற்றிய லிகரமொன்றும், வரகியாது, பலாசியாது,
குழலினிதியாழினிது, பாவீறியாது, உருபியாது, அரூபியாது, வானேறியாது, ஒரைதியாது,
செங்கோடியாது என உயிர்த்தொடர்மொழிக் குற்றியலிகரம் பதினொன்றும், கொக்கியாது,
கச்சியாது, பட்டியாது, முத்தியாது, செப்பியாது, பற்றியாது என வன்றொடர்மொழிக்
குற்றிய லிகரமாறும், சங்கியாது, மஞ்சியாது, துண்டியாது, பந்தியாது, அம்பியாது,
கன்றியாது என மென்றொடர் மொழிக்குற்றிய லிகரமாறும், நொய்தியாது, சார்பியாது,
சால்பியாது, மாழ்கியாது, தெள்கியாது என இடைத்தொடர் மொழிக்குற்றிய
லிகரமைந்தும், கேண்மியா, சென்மியா என மியா வெனுமசைச் சொல்லி னிகரமொன்றும்,
ஆகமுப்பத்தேழும் வந்தன. - சூத்திரம். "வல்லெழுத்தாறோ டெழுவகையிடத்து,
முகரமரையாம் யகரமோடியைபி, னிகரங்குறுகும் என்மனார் புலவர்." எ-து.
குற்றியலுகரந் திரிந்த இகரமாறும், மியாவென்னு மசைச்சொல்லி னிகரமொன்றும்,
ஆகக்குற்றியலிகரம் ஏழேயாயினும், இடமும் பற்றுக்கோடுஞ்சார்ந்து முப்பத்தேழாயின.
இகரந் தன்மாத்திரையிற் குறுகி ஒலித்தலின் காரணத்தால் முதலெழுத்தி னொலிவடிவின்
வேறாய்க் குற்றியலிகரமெனப் பெயராய்ச் சார்பெழுத்தினொன்றாயின. - நன்னூல்.
"யகரம்வரக் குறளுத்திரி யிகரமு, மசைச்சொன்மியாவி னிகரமுங் குறிய." எ-து.
மேற்கோள் எ-று. (11)
  	 
15. 	தனிக்குறிலல்லவற் றிறுதிவன்மை
யூர்ந்துளிக்குறுகு முகரமென்ப
தொடருயிருக்குறடுடைத் துணும்யவ்வரின்
உ, இ யாஞ்சில முற்றுகரமு மற்றே.
 
     (இ-ள்.) குற்றியலுகரமாமாறுணர்த்துதும், தனிநெடிலேழும், ஆய்த மொன்றும்,
மொழியிடையிறுதிகளில் வரப்பெறாத ஒளகாரமொழித் தொ ழிந்த உயிர்பதினொன்றும்,
வல்லெழுத்தாறும், மெல்லெழுத்தாறும், வல்லெழுத்துக்களோடு தொடராத வகரமொழித்
தொழிந்த இடையெழுத்தைந்தும், ஆகிய முப்பத்தாறெழுத்தினுள் யாதானுமொன்று
ஈற்றுக்கயலெழுத்தாய்த் தொடரப்பட்டு மொழியிறுதிக்கண் வல்லெழுத்துக்களுள்
யாதானுமொன்று பற்றுக்கோடாக அதனை யூர்ந்து வருமுகரந் தன்மாத்திரையிற் குறுகும்;
அது குற்றியலுகரமாம். (உ-ம்) நாகு-ஈறு-கூடு-தேசு-ஐது கோடு-கௌடு என
நெடிற்றொடர் மொழிக் குற்றுகர மேழும், எஃகு என ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகர
மொன்றும், வரகு-பலாசு-பரிசு-பாவீறு உருபு-அருபு-வானேறு-ஒரைது என
உயிர்த்தொடர் மொழிக்குற்றுகரம் பதினொன்றும்,
	


11


	கொக்கு-கச்சு-பட்டு-முத்து-செப்பு-பற்று என வன்றொடர்மொழிக் குற்றுகரமாறும்,
சங்கு-பஞ்சு-துண்டு-பந்து-அம்பு-கன்று என மென்றொடர்மொழிக் குற்றுகர மாறும்,
நொய்து-சார்பு-சால்பு-மாழ்கு-தெள்கு என இடைத் தொடர்மொழிக் குற்றுகரமைந்தும்,
ஆகமுப்பத்தாறும் வந்தன. - சூத்திரம். "நெடிலேகுறிலிணை குறினெடிலென்றிவை,
யொற்றொடு வருதலொடு குற்றொற்றிறுதியென், றேழ்குற்றுகரக் கிடனென மொழிப."
எ-ம். "எழுவகையிடத்துங் குற்றியலுகரம் வழுவின்றி வரூஉம் வல்லூறூர்ந்தே." எ-ம்.
கூறினார். நுந்தையெனுமுறைப்பெயருகரமுங்குறுகும். அன்றியும், ஆறுவல்லினத்தோ
டீற்றுகரம் தனிக்குறிலிணைந்துவரின் குறுகாது. (உ-ம்) எகு-பசு-நடு-விசு-வபு-மறு என
விவை வல்லினத்தோடு கூடியவீற்று கரமாயினும் தனிக்குறிலிணைந்தமையால்
குற்றியலுகரமல்லன, முற்றியலுகரமாம். நன்னூல். "நெடிலோடாய்த முயிர்வலிமெலியிடை
தொடர் மொழியிறுதி வன்மையூருகர மஃகும்பிறமேற்றொடரவும்பெறுமே." எ-து.
மேற்கோள். (வபு. = உடல்.) அன்றியுங் குற்றியலுகரத்தின்கீழ் உயிர் வரி னுகரங்கெட்டு
நின்ற வொற்றின்மேல் வருமுயிரேறவும்; யவ்வரினிய்யாகி அவ்வாறாகவு மிங்ஙன
மொரோவிடத்து முற்றியலுகரம் இவ்விரு வழியாற் கெடவுமாமெனக்கொள்க. (உ-ம்.)
காடலர்ந்தது, வண்டிமிர்ந்தன, எ-ம். கோட்டியானை, குழலினிதியாழினிது எ-ம்.
இருவழிக் குற்றியலுகர ங்கெட்டன. தெளிவரிது, கதவடைத்தான் எ-ம். அறிவியாது,
விழவியாழ் எ-ம். இருவழி முற்றுகரங்கெட்டன. ஆயினுந் தனிக்குறிற்சேர்ந்த
முற்றியலுகரம் எவ்வழியானுங் கெடாதெனக்கொள்க. (உ-ம்) கடுவுண்டான்,
மதுவருந்தினான் எ-ம். நடுயாமம், இப்பசுயாது எ-ம். இருவழித் தனிக்குறின்
முற்றியலுகரங் கெடாதன, பிறவுமன்ன. நன்னூல். "உயிர்வரினுக்கு றண்
மெய்விட்டோடும்." எ-ம். "உடன்மேலுயிர் வந்தொன்றுவதியல்பே." எ-ம்
"யவ்வரினிய்யாம்." எ-ம். மேற்கோள். அன்றியும் (சிலமுற்றுகரமுமற்றே) யென்றமையால்,
(உ-ம்) பானு + உதயம் = பானுதயம் எ-ம். வரும். இடமும் பற்றுக்கோடுஞ்சார்ந்து
உகரந் தன் மாத்திரையிற்குறுகி ஒலித்தலின் காரணத்தான் முதலெழுத்தி னொலிவடிவின்
வேறாய்க் குற்றியலுகரமெனப் பெயராய்ச் சார்பெழுத்தி னொன்றாயின, எ-று. (12)
 
16. 	ஐத்தனித்தள பெடுத்தன்றி மூவிடத்து
மௌவு முதலிடத்தஃகுமென்ப
 
     (இ-ள்.) ஐகாரக்குறுக்கமு மௌகாரக்குறுக்கமு மாமாறுணர்த்துதும். ஐகாரந்
தனிநின்றவிடத்து மளபெடுத்தவிடத்துங் குறுகாமன் மற்றை மொழிமுத லிடைகடைவரின்
றன்மாத்திரையிற் சுருங்கி ஐகாரக்குறுக்க மெனப்படும். (உ-ம்) ஐப்பசி - மொழிமுதலும்,
மடையன் - மொழிக்கிடையும், குவளை - மொழிக்கடையும் குறுகினவாறு காண்க.
ஒளகாரமு
	


12


	மொழிமுதலிடத்துக் குறுகும். (உ-ம்) ஒளவியம், கௌவை எ-ம். வரும். சூத்திரம்.
'அளபெடைதனியிரண் டல்வழி ஐஒள, வுளதாமொன்றரை தனிமையுமாகும்" எ-ம்.
கூறினார். ஐகார ஒளகாரக்குறுக்கமும் ஒவ்வொன்றே யாயினும் இடவகையால்
ஐகாரக்குறுக்கமூன்றும் ஒளகாரக்குறுக்க மொன்றுமாம். ஐகாரம் ஒளகாரம் இடஞ்சார்ந்து
தன்மாத்திரையிற்குறுகி ஒலித்தலின் காரணத்தால் முதலெழுத்தி னொலிவடிவின்வேறாய்
ஐகார ஒளகாரக் குறுக்கமெனப் பெயராய்ச் சார்பெழுத்தி னொன்றாயின, எ-று. (13)
 
17. 	மகரம் ல ளக்கீழ்
வம்மேற் குறுகும்.
 
     (இ-ள்.) மகரக்குறுக்கமாமாறுணர்த்துதும். இனிச்சொல்லும்படி லளத்திரிந்து
னணவாகியபின் மகரம் வரி னதுகுறுகும். (உ-ம்) போலும், மருளும், என்பதற்கு
போன்ம், மருண்ம், என்பதாம். என்னெனில், அம்மகரங்கான்மாத்திரையாகக்
குறுகிநிற்கும். (உ-ம்) "சிதையுங் கலத்தைப்பயினாற் றிரிந்துந்திசையறியுமீகானும்போன்ம்."
எ-ம். "வெயிலியல் வெஞ்சுரமையநீ யெய்தின், மயிலியன்மாதுமருண்ம்." எ-ம். அன்றியு
மகரவீற்றுமொழி யின்கீழ். வகரம்வரின் மகரங்குறுகும். (உ-ம்) மரம்வளர்ந்தது,
கமலம்விரிந்தது. எ-ம். வரும். மகரக்குறுக்கமொன்றே யாயினும் இடைவகையான்
மூன்றாகும். இடமும் பற்றுக் கோடுஞ்சார்ந்து மகரந் தன்மாத்திரையிற் குறுகி ஒலித்தலின்
காரணத்தால் முதலெழுத்தி னொலிவடிவின் வேறாய் மகரக் குறுக்கமெனப் பெயராய்ச்
சார்பெழுத்தினொன்றாயின, எ-று. (14)
18. 	உயிர்நெடி லினக்குறி லுற்றள பெடுக்கு
மொற்றள பெழும்வே றுற்றுக்குறிற்கீ
ழியைந்து ர ழ வொழியிடை மெலியாய்தம்.
 
     (இ-ள்.) அளபெடையாமாறுணர்த்துதும். அதுஉயிரளபெடை ஒற்றளபெடை யென
விருவகைப்படும். அவற்றுள் உயிரளபெடையாவது, ஓசையுமளவும் பெறுவதுவேண்டி
மொழியின்முதலே யிடையே கடையேநின்ற நெட்டெழுத் தெல்லா நீளப்பெறு மப்பொழு
தொவ்வொன்றற் கினமாகிய குற்றெழுத்து வந்த அளபிற்குக்குறியாகநிற்கும். இவ்வாறு
நெட்டெழுத்தேழு மளபெடுக்கும். அப்போததற் கதற்கினமாவன. ஆ அவ்வும், ஈ
இவ்வும், ஊ உவ்வும், ஏ எவ்வும், ஐ இவ்வும், ஓ ஒவ்வும், ஒள உவ்வும், எனவினமாகும்.
(உ-ம்) ஆஅ - ஈஇ - ஊஉ - ஏஎ - ஐஇ - ஓஒ - ஒளஉ என மொழி முதலினும், படா
அகை - பரீஇகம் - கொடூஉரம் - பரேஎகம் - கடைஇயம் - புரோ ஒசை -
அனௌஉகம் என மொழிக்கிடையினும், கனாஅ - குரீஇ - மரூஉ விலேஎ - அசைஇ -
அரோஒ என மொழிக்கடையினும் உயிர் அளபெடுத்துவந்தன.
இவைசெய்யுட்கண்வருவன. அவைவருமாறு. (உ-ம்.) "ஓஒதல்
	


13


	வேண்டு மொளி மாழ்குஞ் செய்வினை, யாஅது மென்னு மவர்." "உறா அர்க்குறுநோ
யுரைப்பாய் கடலைச், செறா அஅய்வாழியநெஞ்சு." "அனிச்சப்பூக் கால்களையாள்
பெய்தாணுசுப்பிற்கு, நல்லபடாஅபறை" என முறையேமொழிமுத லிடைகடை மூவிடத்தள
பெடுத்தன. அன்றியும் ஒளகாரம் மொழிக்கிடையினுங் கடையினும் வராமையானும்
அவ்விடங்களில் அது நீங்கலாகி அளபெடுக்கும். அளபெடை பத்தொன்பதுடனே
"கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே, யெடுப்பதூஉ மெல்லாமழை." என
இன்னிசை நிறைக்கவருமள பெடையும், "உரனசை இயுள்ளந் துணை யாகச்சென்றார்,
வரனசை இயின்னுமுளேன்." எனச்சொல்லிசை நிறை க்கவரு மளபெடையுங்கூடி
இருபத்தொன்றாதல் காண்க. முதலெழுத்தினொலி வடிவினும் வரிவடிவிற் குறியினும்
வேறாய் நெட்டுயிர் தன்மாத்திரையி னீண்டளபெடுத்தலின் காரணத்தா
னுயிரளபெடையெனப் பெயராய்ச் சார்பெழுத்தி னொன்றாயின. - சூத்திரம். "தனிநிலை
முதனிலை யிடைநிலையீறென, நால்வகைப் படூஉ மளபாய்வருமிடனே" எ-ம். "குன்றிசை
மொழிவயி னின்றிசை நிறைக்கு, நெட்டெழுத்திம்ப ரொத்தகுற்றெழுத்தே, ஐ ஒள
வென்னுமாமீரெழுத்திற், கிகர வுகர மிசை நிறைவாகும்." எ-ம். கூறினார்.-நன்னூல்.
"இசைகெடின்மொழிமுத லிடைகடை நிலை நெடி லளபெழுமவற்றவற்
றினக்குறில்குறியே." இவை மேற்கோள். இசைகெடினும் இசைகெடாவிடினும் வழக்கச்
சொல்லிடத்து முயிரள பெடை வழங்கு மென்றுணர்க. அன்றியும் ஒற்றளபெடையாவது
மெல்லினமாறும் ரழ வொழித்தொழிந்த இடையின நான்கும் ஆய்தமும் இரு
குற்றெழுத்தின் கீழும் ஒரு குற்றெழுத்தின் கீழும் மொழியி னிடையினும் கடையினு
நின்றளபெடுக்கும். எடுத்த வளபிற்குக் குறியாக இரட்டித்து வரும். (உ-ம்.) அரங்ங்கம்,
முரஞ்ஞ்சு, முரண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு, முரன்ன்று, குரவ்வ்வை, அரைய்ய்யர்,
குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு என இரு குற்றெழுத்தின் கீழிடையினும்; மங்ங்கலம்,
மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு, தெவ்வ்வர், வெய்ய்யர், செல்ல்க
கொள்ள்க, எஃஃகு, என ஒரு குற்றெழுத்தின் கீழிடையினும்; மடங்ங், உரிஞ்ஞ்,
அரண்ண், பொருந்ந், கனம்ம், பரன்ன், பகல்ல், திரள்ள் எனஇரு குற்றெழுத்தின்
கீழ்க்கடையினும்; நங்ங், நஞ்ஞ், கண்ண், நந்ந், அம்ம், பொன்ன், தெவ்வ், செய்ய், கல்ல்,
வள்ள் என ஒரு குற்றெழுத்தின் கீழ்க் கடையினும் ஒற்றளபெடுத்துவந்தன. இவை
செய்யுட்கண் வருவன. அவை வருமாறு. (உ-ம்) "இலங்ங்குவெண்பிறைசூ
டீசனடியார்க்குக், கலங்ங்குநெ ஞ்சமிலைகாண்." எங்ங்கிறைவ னுளனென்பாய்மனனேயா
னெங்ங் கென த்திரிவாரின்." "மடங்ங்கலந்தமனனேகளத்து,விடங்ங்கலந்தானைவேண்டு."
"அங்ங்கனிந்தவருளிடத்தார்க்கன்புசெய்து, நங்ங்களங்கறுப்பாநாம்." என முறையே
குறிலிணைக்கீழ் குறிற்கீழ் இடையினுங் கடையினும் நான்கிடத் தளபெடுத்தன. அன்றியும்
ஆய்தம் குறிலிணைக்கீழ்க் குறிற்கீழ்க் கடையில்
	


14


	வாராமையானும் அவ்விடங்களில் அது நீங்கலாகி அளபெடுக்கு மளபெடை
நாற்பதுடனே "விலஃஃகு வீங்கிரு ளோட்டுமேமாத ரிலஃஃகு மூத்தினினம்."
எஃஃகிலங்கிய கையராயின்னுயிர், வெஃஃகுவார்க்கில்லை வீடு." எனக்குறிலிணைக்கீழ்க்
குறிற்கீழிடையில்வந்த அளபெடையுங்கூடி நாற்பத்திரண்டாதல் காண்க. ஆயினும் ஒற்றள
பெடை செய்யுளிடத்தே யன்றிப் பெறாதெனக் கொள்க. சூத்திரம். "வன்மையொடு
ரஃகான் ழஃகானொ ழித்தாங், கன்மையாய்தமோ டளபெழுமொரோ வழி." எ-ம்.
கூறினார். நன்னூல். "ஙஞண நமன வயலளவாய்த மளபாங் குறிலிணை குறிற்கீழி
டைகடை, மிகலேயவற்றின் குறியாம்வேறே." இவை மேற்கோள். ஆய்தம்,
உயிர்க்குறிலும், உயிர் மெய்க்குறிலும் இருமருங்கு நின் றெழுப்ப இரு சிறகினா
லெழும்பறவையி னுடல்போல எழுந்தொலித்தலால் இறுதிக்கண் விலக்கினார். ஒற்றுத்
தன்மாத்திரையி னீண்டளபெடுத்தலின் காரணத்தான் முதலெழுத்தின் ஒலிவடிவினும்
வரிவடிவிற் குறியினும் வேறாய் ஒற்றள பெடையெனப் பெயராய்ச்
சார்பெழுத்தினொன்றாயின. அளபெடைக்கு அளபு, புலிதம் எ-ம். கூறுவர், எ-று. (15)
 
19. 	கண்ணிமை கைந்நொடி காட்டுமாத்திரையி
லஃகியமவ்வு மாய்தமுங்காலே
உ இக்குறளொற் றாய்தமரையே
குறிலே ஐ ஒளக்குற ளொற்றள பொன்றே
நெடிலிரண் டுயிரளபொரு மூன்றென்ப.
 
     (இ-ள்.) மாத்திரையா மாறுணர்த்துதும், கண்ணிமையும் கைந்நொடியும் எழுத்தின்
மாத்திரைக் களவாம். இவ்வளவின் றன்மையால், ஆய்தக் குறுக்கமும் மகரக்குறுக்கமும்
கான்மாத்திரை. ஒற்றும், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் அரைமாத்திரை.
குற்றெழுத்தும் ஐகாரக் குறுக்கமும் ஒளகாரக்குறுக்கமும் ஒற்றளபெடையும் ஒருமாத்திரை.
நெட்டெழுத்து இரண்டுமாத்திரை. உயிரளபெடைமூன்றுமாத்திரை பெறுமெனக்கொள்க. -
சூத்திரம்." "உன்னல்காலே யூன்றலரையே, முறுக்கன் முக்கால் விடுத்த லொன்றே."
எ-ம். கூறினார். அன்றியும் செய்யுட்கண் வேண்டுமிடத்து, குற்றியலிகரமும்
குற்றியலுகரமும் உயிராகவெண்ணாதிருக்கவும்; ஒற்றளபெடை வேண்டுமிடத்து
உயிர்மெய்போல குற்றெழுத்தாகவெண்ணவும்; உயிரளபெடை நெட்டெழுத்தாகவும்
குற்றெழுத்தாகவும்எண்ணவுப்படும். (உ-ம்.) குறள். "குழலினிதியாழினிதென்பர்
தம்மக்கண் மழலைச்சொற்கேளாதவர்." இதனுள்இயாழ்என்னுங் குற்றியலிகரம்எண்ணப்ப
டாதென்க. "எஃஃகிலங்கியகையராயின்னுயிர், வெஃஃகுவார்க்கில்லைவீடு." இதனுள்
ஈராய்தம்வந்த வொற்றளபெடை எண்ணப்படாதென்க. "கற்றதினாலாயபயனென்
கொல்வாலறிவ, னற்றாடொழா அரெனின்." இதனுள்
	


15


	உயிரளபெடை ஈரெழுத்தாக எண்ணப்பட்டதென்க. வேண்டுமிடத்து எண்ணப்படாமையும்
பெறும். - யாப்பருங்கலம். "தளைசீர் வண்ணந்தாங் கெடவரினே, குறுகிய விகரமுங்
குற்றியலுகரமு, மளபெடை யாவியு மல கியல்மிலவே." எ-து. மேற்கோள், எ-று. (16)
 
20. 	முதலீற்றுயிரிரு மொழியே சேர்புளி
இ ஈ எ ஐயீறியையும் யவ்வே
மற்றையுயிர்க்கீழ் வகரம்புணரும்.
 
     (இ-ள்.) புணர் பெழுத்தாமாறுணர்த்துதும். உயிரான் முடிந்த சொல்லும்
உயிராற்றுவக்கின சொல்லுந் தம்முட் புணருங்கால் அவ்விரண் டுயிர்நடுவே
ஓரொற்றிசைத்தல் வேண்டும். இசைப்படு மெழுத்தே புணர்பெழுத் தெனப்படும். இ, ஈ,
எ, ஐ, என்னு நிலைமொழி உயிரீற்றின்முன் வருமொழி பன்னீ ருயிரும்புணரில்
யகரவுடம்படு மெய்யாம். அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள, என்னு நிலைமொழி
உயிரீற்றின்முன் வருமொழி பன்னீ ருயிரும் புணரில் வகரவுடம்படு மெய்யாம்.
ஏகாரவீற்றின் முன் பன்னீருயிரும் புணரில் இவ்விருவிதியும் பெறும். (உ-ம்.) மணி +
அழகு = மணியழகு; தீ + எழுந்தது = தீயெழுந்தது; சே + அழகு = சேயழகு; கை +
அழகு = கையழகு, எ-ம். மர + இலை = மரவிலை; பலா + இலை = பலாவிலை; கடு +
இது = கடுவிது; பூ + இதழ் = பூவிதழ்; தே + அடிமை = தேவடிமை; கோ + அழகு =
கோவழகு; கௌ + எகினன் = கௌவெகினன். எ-ம். அரசனே + அவன் =
அரசனேயவன்; அரசனே + அவன் = அரசனேவவன். எ-ம். வரும். நன்னூல் "இ ஈ ஐ
வழி யவ்வு மேனையுயிர்வழிவவ்வு மேமுனிவ்விருமையு, முயிர்வரினுடம்படு
மெய்யென்றாகும்" எ-து. மேற்கோள். எ-று. (17)

இரண்டாவதெழுத்தின் வகுப்பு. - முற்றிற்று.
 

மூன்றாவதெழுத்தின்விகாரம்.
Chapter III - Changes of Letters.
 
21. 	திரிபழி வாக்கந்
திரட்டுநால் விகாரம்.
 
     (இ-ள்.) விகாரமா மாறுணர்த்துதும். பதத்தொடு பதம்புணருங் காற்
சந்திகாரணமாகப் பலமுறை நிலைப்பத வீற்றெழுத்தாயினும் வரும்பத முத
லெழுத்தாயினும் பலவிடத் தொருப்பட இரண்டும் வேறெழுத்தாகத் திரிதலு முற்றுங்
கெடுதலுமாகும். பலமுறை யிருபதநடுவே ஆக்கமாக ஓரெழுத்து
	


16


	மிகலுமாம். இம்மூவிகார மன்றியுஞ் சிலமுறை இருபத மொருப தமாகத் திரண்டு
கலப்புழிச் சிலவெழுத்து அவ்வழி விகாரப்படு மெனக்கொள்க. இவற்றுள், திரிதல் =
ஆதேசம், எ-ம். கெடுதல் = உலோபம், எ-ம். மிகுதல் = ஆகமம், எ-ம். கலத்தல் =
சங்கீரணம், எ-ம். வடமொழி யானே வழங்கும். தொகைப்படச் சொன்ன
இந்நாலெழுத்தின் விகாரம் வகைப்பட விளங்குதற் கல்வழிப் பொருளும் வேற்றுமைப்
பொருளும் விளக்கல் வேண்டும், எ-று. (1)
 
22. 	அல்வழி வேற்றுமை யாமிரண்டவற்றுள்
விரியினு முருபெடா வினைசார் பெயரே
யல்வழிப் பொருட்பெய ராகுமென்ப
வேற்றுரு பில்லது விரிக்குங் காலை
வேற்றுமைக் கொளினது வேற்றுமைப் பொருளே.
 
     (இ-ள்.) அல்வழியும் வேற்றுமையு மாமாறுணர்த்துதும். வினைச்சொற் சார்ந்த
முதற்பெயராகி விரியினும் வேற்றுமை உருபுபெறாதுநிற்கும் பெயரே
அல்வழிப்பொருட்பெயர், எ-ம். முன்னேவேற்றுமை உருபு கொள்ளாதாயினும்
விரிக்குங்காலை வேற்றுமை உருபு கொண்டுவரும் பெயரே வேற்றுமைப்பொருட்பெயர்,
எ-ம். கொள்க. விதியைவிளக்குதும். (உ-ம்) கல்லெடுத்தான், கல்வீடு, கல்லியல்பு
என்பவற்று ளுருபுதோன்றாதாயினும் பொருளைவிரித்தாற் கல்லையெடுத்தான்,
கல்லாலாயவீடு, கல்லினதியல்பென் றவ்வுருபுகூட்ட வேண்டினமையால் இதிலே
கல்லென்னுஞ்சொல் வேற்றுமைப் பொருட் பெயரெனப்படும். அவ்வுருபு தோன்றாமலுங்
கூட்டாமலும் விரித்துரைக்கப்படும் பெயர் அல்வழிப்பொருட் பெயரெனப்படும். (உ-ம்)
கல்சிறிது, கல்லுயர்ந்தது. இதிலே கல் என்னுஞ் சொல் அவ்வுரு பில்லாமையானும்
பொருளை விரிக்க அவ்வுருபு கூட்ட வேண்டாமையானும் அல்வழிப் பொருட்பெய
ரெனப்படும். அன்றியும் (உ-ம்.) பொன்னுடையான், என ஐ உருபு தொக்கியும்;
பொன்னையுடையான், என விரிந்தும்; கல்லெறிந்தான், என ஆல் உருபு தொக்கியும்;
கல்லா லெறிந்தான், என விரிந்தும்; கொற்றன் மகன் என கு உருபு தொக்கியும்,
கொற்றற்கு மகன்என விரிந்தும், மலைவீழருவிஎன இன் உருபு தொக்கியும்; மலையின்
வீழருவிஎன விரிந்தும்; மலையினுச்சி என அது உருபுதொக்கியும்; மலையினது வுச்சி
என விரிந்தும்; மலைமுழை என கண்ணருபுதொக்கியும் மலைக்கண் முழை என
விரிந்தும்; வேற்றுமைப் புணர்ச்சி ஆறும்வந்தன. அன்றியும், (உ-ம்) கொல்யானை என
வினைத்தொகையும், கருங்குதிரை என பண்புத் தொகையும், ஆயன்சாத்தன்,
சாரைப்பாம்பு என இருபேரொட்டுப் பண்புத்தொகையும், பொற்சுணங்கு என
உவமைத்தொகையும், இராப்பகல் என உம்மைத்தொகையும், பொற்றொடி என
அன்மொழித்தொகையும்,
	


17


	கொற்றன் கொடுத்தான் என எழுவாய்த் தொடரும், கொற்றாகொள் என
விளித்தொடரும், உண்ட சாத்தன் என பெயரெச்சத் தொடரும், உண்டு வந்தான் என
வினையெச்சத்தொடரும், குண்டுகட்டெருமை எனக் குறிப்புவினை முற்றுத்தொடரும்,
உண்டான் சாத்தான் எனத் தெரிநிலைவினை முற்றுத்தொடரும், அதுமற்றம்ம என
இடைச்சொற்றொடரும், நனிபேதை என உரிச்சொற்றொடரும், நெருப்பு நெருப்பு என
அடுக்குத்தொடருங்கூடிய தொகைநிலை ஐந்தும்; தொகாநிலை ஒன்பதும்; ஆகிய
அல்வழிப் புணர்ச்சி பதினான்கும் வந்தன. இவ்விருவழியிலும், தழாத் தொடருஞ்
சிலவுண்டெனக்கொள்க. அவைவருமாறு. கைக்களிறு, எ-து கையையுடையகளிறு, என
விரிக்கப்படுதலால் கை எ-து. களிறு என்பதைத் தழுவாமையால் இப்படி வருகின்றவைக
ளெல்லாந் தழாத்தொட ராகிய வேற்றுமைப் புணர்ச்சியாம். சுரையாழ வம்மிமிதப்ப,
எ-து. சுரை மிதப்ப, அம்மியாழ எனக்கூட்டப்படுதலால் சுரை எ-து. ஆழ என்பதையும்
அம்மி எ-து. மிதப்ப என்பதையுந் தழுவாமையால் இப்படிவருகின்ற வைகளெல்லாந்
தழாத்தொடராகிய அல்வழிப் புணர்ச்சியாம். (சொல்லில், வேற்றுமை யிலக்கணம்
விரித்துக் கூறுதும்.) எ-று. (2)
 
23. 	வலிவரின் மஃகான் வருக்கமாகு
நவ்வரின் றனிக்குறின் மவ்வுநவ்வா
மவ்வழியன்றி மகரங் கெடுமே.
 
     (இ-ள்.) மகரவிகார மாமாறுணர்த்துதும். ஈற்றுமகரத்தின்கீழ் க ச த மொழிக்கு
முதல்வரின் இவற்றிற்கினவெழுத்தாக மகரந் திரிந்து முறையே ங், ஞ், ந், என
அதற்கதற்கு வருக்க வெழுத்து வருமெனக் கொள்க. (உ-ம்.) மனம் + களித்தது =
மனங்களித்தது, எ-ம். மனம் + சலித்தது = மனஞ்சலித்தது, எ-ம். மனம் + தளர்ந்தது =
மனந்தளர்ந்தது, எ-ம். பிறவுமன்ன. அன்றியும், ஈற்று மகரத்தின்கீழ் நம்முதல் வந்தால்
அம்மகரங்கெடும். (உ-ம்.) மனம் + நலம் = மனநலம், எ-ம். முகம் + நிறம் = முகநிறம்,
எ-ம். பிறவுமன்ன. அன்றியு மகரவீற்றுமொழி தனிக்குறிலாயின் மகரந்திரிந்து நகரமாம்.
(உ-ம்.) வெம் + நீர் = வெந்நீர், எ-ம். செம் + நெல் = செந்நெல், எ-ம். பிறவுமன்ன.
எ-று. (3)
 
24. 	ண ன முன்தகரம் ட ற வாமுறையே
ண ன வல்வழிக்கென்று மியல்பாம்
வேற்றுமைப்பொருட்கவை வலிவரின் ட ற வாம்
ண ன முன்குறில்வழி நகரம் ண ன வா
மற்றது ண ன முன்மாய்ந்து கெடுமே.
 
     (இ-ள்.)  ணகார  னகாரங்களால்  வரும்  விகாரமாமாறுணர்த்துதும்.
ஈற்றுணகரத்தின்கீழ் மொழிமுதல்வரும் தகரந்திரிந்து டகரமாகவும், ஈற்றுணகரத்தின்கீழ்
	


18


	மொழிமுதல்வரும் தகரந்திரிந்து றகரமாகவும் பெறும். (உ-ம்.) கண் + திறந்தது =
கண்டிறந்தது, எ-ம். மின் + தெளிந்தது = மின்றெளிந்தது. எ-ம். பிறவுமன்ன. அன்றியும்,
ணனவீற்றுமொழிகள் அல்வழிப் பொருட்புணர்ச்சியில் நகரமொழிந்த எவ்வின
வெழுத்துவரினும் திரியாதியல்பாம். (உ-ம்.) மண்கடிது, மண்சிறிது, மண்டீது, மண்பெரிது,
மண்ஞான்றது, மண்மாண்டது, மண்யாது, மண்வலிது எ-ம். பொன்கடிது, பொன்சிறிது,
பொன்றீது, பொன்பெரிது, பொன்ஞான்றது, பொன்மாண்டது, பொன்யாது, பொன்வலிது
எ-ம். வரும். ஆயினும் உருபினாற் றோன்றாமற் பொருளினால் வேற்றுமையினால் வரும்
ஈற்றுணனவின் கீழ் மொழிமுதல் வல்லினம் வரின் ணகரம் டகரமாகவும் னகரம்
றகரமாக வுந்திரியும். (உ-ம்.) மண்+குடம் = மட்குடம், மண் + சாடி = மட்சாடி மண் +
தாழி = மட்டாழி, மண் + பானை = மட்பானை, எ-ம். பொன் + குடம் = பொற்குடம்,
பொன் + சாடி = பொற்சாடி, பொன் + தாழி = பொற்றாழி, பொன் + பானை =
பொற்பானை, எ-ம். பிறவுமன்ன. அன்றியும், ணனவீற்று மொழிகள் தனிக்குறிலாயின்
மொழிமுதல் வரும் நகரந்திரிந்து றையே ணகர னகரமாகும். (உ-ம்.) கண் + நெடிது =
கண்ணெடிது, எ-ம். மின் + நெடிது = மின்னெடிது, எ-ம். வரும். அன்றியும், ணன வீற்று
நிலைப்பதங்கள் தனிக்குறி லல்லாதாயின் மொழிமுதல் வரும் நகரங் கெடும். (உ-ம்.)
கவண் + நெடிது = கவணெடிது, எ-ம். கலன் + நெடிது = கலனெடிது, எ-ம். தூண் +
நெடுமை = தூணெடுமை, எ-ம். மான் + நெடுமை = மானெடுமை, எ-ம். பிறவுமன்ன. -
நன்னூல். "ண ன வல்லினம் வரட்டறவும் பிறவரி னியல்புமாகும். வேற்றுமைக் கல்வழிக்
கனைத்து மெய்வரி னுமியல்பாகும்மே," எ-து. மேற்கோள். எ-று. (4)
 
25. 	தேனெனுமொழிமெய் சேரிருவழியுந்
தானியல்பாமெலிவரின் றன்னீற்றழிவும்
வலிவரினீறுபோய் வலிமெலிமிகலுமா
மின்பின்னுவ்வுறில் வன்மையுமிகுமே
யென்றன்வலிவரி னியல்புந் திரிபுமா
நின்னென்றுமியல்பாய் நிற்குமென்ப
வூன்குயினியல்பா முற்றவேற்றுமைக்கு
மெகின்மரமல்லதே விருவழியியல்பு
மவ்வுறிவலிவரின் வலிமெலிமிகலுமாம்.
 
     (இ-ள்.) முன்சொன்ன விதியிற் சில விகற்பமாமாறுணர்த்துதும், தேனெனுமொழி
எவ்வகை மெய்வரினும் இயல்பாதலு மெல்லினம்வரின் னகரங்கெடுதலும் வல்லினம்வரின்
னகரங்கெட்டு வல்லெழுத்து மெல்லெழுத்து மிகுதலுமாகும் வேற்றுமையிடத்தும்
அவ்வழியிடத்து மென்ப. (உ-ம்.)
	


19


	தேன்கடிது, தேன்சுவை, இயல்பாயின. தேன் + குடம் = தேக்குடம், தேன் + கடிது =
தேக்கடிது, என இருவழியும் ஈறுகெட்டு வலிமிக்கன. தேன் + முரி = தேமுரி, தேன் +
மாண்டது = தேமாண்டது, என இருவழியும் ஈறுகெட்டன. அன்றியும், மின் பின் என்னும்
இருமொழி ஈற்றில் வல்லினம்வரின் உகரம் பெற்று வல்லொற்றிரட்டும் வேற்றுமை
யிடத்தும் அல்வழியிடத்தும். (உ-ம்.) மின் + கடிது = மின்னுக்கடிது, பின் + கடிது =
பின்னுக்கடிது, எ-ம். மின் + கடுமை = மின்னுக்கடுமை, பின் + கடுமை = பின்னுக்கடுமை,
எ-ம். வரும். இவற்றுள் சிறிது - பெரிது - தீது, எ-ம். சிறுமை - பெருமை - தீமை,
எ-ம். முறையே கூட்டிக்காண்க. அன்றியும், தன் என் என்னும் இருமொழி ஈற்றில்
வல்லினம்வரின் இயல்புந் திரிபுமாம். நின் என்னும் மொழியீற்றில் வல்லினம்வரின்
எப்போதுமியல்பாம். (உ-ம்.) தன்பகை - என்பகை என இயல்பாயின. தன் + பகை =
தற்பகை, என் + பகை = எற்பகை, என ஈறுதிரிந்தன. நின்பகை, என இயல்பாயின.
நிற்பகை, என வாரா. அன்றியும், ஊன், குயின், என்னும் இருமொழி ஈற்றில்
வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம்வரின் திரியாதியல்பாம். (உ-ம்.) ஊன்கடுமை,
ஊன்றீமை, எ-ம். குயின்குழாம், குயின்றிரள், எ-ம். வரும். (குயின் = மேகம்.) அன்றியும்,
எகின் எ-து. புளியமரமுதற் பன்மரமும், அன்னம், கவரிமா, புள்ளிமான், நீர், நாய்,
என்றிவையாகும். இவற்றுண் மரமல்லாதன எகின் என்னுமொழி இருவழியு மூவினம்
வரின் இயல்பாகவும், வல்லினம்வரின் அகரச்சாரியை பெற்று வல்லொற்று மெல்லொற்று
மிகவும்பெறும். (உ-ம்.) எகின் + கால் = எகின்கால், எ-ம். எகின் + பெரிது =
எகின்பெரிது, எ-ம். இருவழியிலும் இயல்பாயின. எகின் + கால் = எகினக்கால், எகின் +
பெரிது = எகினம்பெரிது, எ-ம். எகின் + பேடை = எகினப்பேடை, எ-ம். இருவழியிலும்
வலிமெலி மிக்கன. எகின் + அழகு = எகினவழகு, எ-ம். எகின் + வலிது = எகினவலிது,
எ-ம். மற்றை எழுத்துப்புணர்வழி அகரம்பெற்றவாறு காண்க. பிறவுமன்ன. எ-று. (5)
 
26. 	லளவேற்றுமையிற் றடவுமல்வழி
யவற்றோடுறழ்வும் வலிவரின்தவ்வரி
னியல்புந்திரிந்தபின் கெடுதலுமாகும்
லளத்தனிக்குறிற்கீ ழல்வழித்தவ்வரின்
றிரிந்தொழிந்தாய்தஞ் சேருமென்ப
லளமுன்மெலிவரி னிருவழினணவா
மவற்றுணத்திரிந் தழிவாந்தனிக்குறி
னண்ணியலளமுன் நவ்வுனணவாம்.
 
     (இ-ள்.) லகார ளகாரங்களின் விகாரமாமாறுணர்த்துதும். லளவீற்று
நிலைப்பதங்கள் வேற்றுமைப் பொருளாய் வல்லின முதற்பதத்தோடு புணருங்காலை
	


20


	லகரம் றகரமாகவும், ளகரம் டகரமாகவும் திரியும். (உ-ம்.) கல் + புறம் = கற்புறம், நூல்
+ புறம் = நூற்புறம், விரல் + புறம் = விரற்புறம், சாரல் + புறம் = சாரற்புறம், எ-ம். முள்
+ புறம் = முட்புறம், வாள் + புறம் = வாட்புறம், புரள் + புறம் = புரட்புறம், எ-ம்.
திரிந்தன. பிறவுமன்ன. அல்வழி யிடத்தோவெனில், இயல்புந்திரிபுமாம். (உ-ம்.)
கல்பெரிது, விரல்சிறிது, வாள்பெரிது, எ-ம். இயல்பாயின. கல் + பெரிது = கற்பெரிது,
வாள் + பெரிது = வாட்பெரிது, எ-ம். திரிந்தன. பிறவுமன்ன. வேற்றுமைப்புணர்ச்சியில்
லகார, ளகாரவீற்றில் தவ்வணையின் வருமொழிமுதலும் நிலைமொழியீறுந் திரியும்.
(உ-ம்.) நூல் + தலை = நூறலை, நூற்றலை; கடல் + திரை = கடறிரை, கடற்றிரை; வாள்
+ திறல் = வாடிறல், வாட்டிறல்; அவள் + தாய் = அவடாய், அவட்டாய்; எ-ம்.
இருமொழி திரிந்தன. பிறவுமன்ன. அல்வழிப்புணர்ச்சியில் தனிக்குறிலல்லாத லகர
ளகரவீற்றில் தவ்வணையில் இயல்பும் கெடுதலுமாம். (உ-ம்.) பொறுத்தல் + தலை =
பொறுத்தறலை, அவள் + தந்தாள் = அவடந்தாள், எ-ம். திரிந்தன. பிறவுமன்ன.
அன்றியும், பொறுத்தல்தலை, அவள் தந்தாள், எ-ம். வழக்கிடத்தாகும். அல்வழிப்
புணர்ச்சியில் தனிக்குறில் லகர ளகரவீற்றில் தவ்வணையின் லகரம் றகரமாகவும், ளகரம்
டகரமாகவும், ஆய்தமாகவும்பெறும். (உ-ம்.) கல் + தீது = கற்றீது, கஃறீது; பல் +
தொடை = பஃறொடை, அல் + திணை = அஃறிணை. எ-ம். முள் + தீது = முட்டீது,
முஃடீது, எ-ம். பிறவுமன்ன. அன்றியும், நிலைமொழி லகரளகரவீற்றில் மெல்லினம்வரின்
லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவும்திரியும் வேற்றுமையிடத்தும் அல்வழி
யிடத்தும். (உ-ம்.) கல் + மலை = கன்மலை, முள் + முடி = முண்முடி, எ-ம். கல் +
முளைத்தது = கன்முளைத்தது, முள் + முரிந்தது = முண்முரிந்தது, எ-ம். இருவழியுந்
திரிந்தன. பிறவுமன்ன. தனிக்குறிலல்லாத லகரளகரவீற்றில் நகரம்வரின் லகர
ளகரந்திரிந்து நகரங்கெட்டு னகரணகரமாகும். (உ-ம்.) விரல் + நீளம் = விரனீளம், கால்
+ நீளம் = கானீளம், நூல் + நுனி = நூனுனி, எ-ம். இருள் + நீண்டது = இருணீண்டது,
கோள் + நீண்டது = கோணீண்டது, வாள் + நுனி = வாணுனி, எ-ம். பிறவுமன்ன.
இவ்வாறன்றி, தனிக்குறிலணைந்த லகரளகரவீற்றில் நகரம்வரின் லகரளகரந் திரிந்து
நகரங்கெட்டு னகர ணகரமாகும். (உ-ம்.) கல் + நெஞ்சு = கன்னெஞ்சு, முள் + நிலம் =
முண்ணிலம், எ-ம். வரும். எ-று. (6)
 
27. 	சஞயவரின் ஐஅ ச்சமமெனத்திரியும்.
 
     (இ-ள்.) அகரவைகாரங்களின் விகாரமாமாறுணர்த்துதும்.மொழிக்கு முதலினும்
மொழிக்கு இடையினும் நின்ற அகர ஐகாரங்கள் ச ஞ ய வரின் தம்மில்வேறுபாடின்றி
ஒன்றற்கொன்றாகத்திரியும். (உ-ம்.) பசல், பைசல், மஞ்சு, மைஞ்சு, அய்யர், ஐயர், எ-ம்.
மொழிமுதல் அகரம், ஐகாரமாகத்திரிந்தது, அரசு, அரைசு; முரஞ்சு, முரைஞ்சு; அரயர்,
அரையர்; எ-ம். மொழியிடை
	


21


	அகரம் ஐகாரமாகத் திரிந்தது. இவையே மொழிமுதற்போலி, மொழியிடைப்போலி, எ-ம்.
கூறுவர். அன்றியும், ஐந்நூறு, ஐஞ்ஞூறு; மைந்நின்றகண், மைஞ்ஞின்றகண்; நெய்ந்நின்ற
விளக்கு, நெய்ஞ்ஞின்றவிளக்கு; எ-ம். வரும். மொழிக்கடைப்போலி. (உ-ம்.) நலம், நலன்;
குலம், குலன்; குளம், குளன்; பழம், பழன்; பயம், பயன்; கடம், கடன்; அகம், அகன்;
மனம், மனன், எ-ம். சுரும்பு, சுரும்பர்; கொம்பு, கொம்பர்; வண்டு, வண்டர்; மாது,
மாதர்; சாம்பல், சாம்பர்; பந்தல், பந்தர்; அனந்தல், அனந்தர்; குடல், குடர்; அரும்பு,
அரும்பர்; எ-ம். வரும். நன்னூல். - "அஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்." எ-து.
மேற்கோள். எ-று. (7)
 
28. 	அடைமொழிஉக்குறள் ஐயாதலுமாம்.
 
     (இ-ள்.) குற்றியலுகர விகாரமாமாறுணர்த்துதும். குற்றிய லுகரவீற்றுச்சிலபதம்
அடைமொழியாய் நின்று தொகைப்பொருளாக மற்றொரு பதத்தோடும் பகுபதமாக
விகுதியுருபோடும் புணருங்காலை உகரந்திரிந்து ஐயாகவும் பெறும். (உ-ம்.) ஆண்டு,
ஆண்டை; ஈண்டு, ஈண்டை; யாண்டு, யாண்டை; மற்று, மற்றை; இன்று, இற்றை;
அன்றுவாக்கியம், அற்றைவாக்கியம்; பண்டுசெய்தி, பண்டைச்செய்தி; இன்றுநாள்,
இற்றைநாள்; நேற்றுகூலி, நேற்றைக்கூலி; மூவாண்டுநெல், மூவாட்டைநெல், எ-ம்.
பிறவுமன்ன. தொகைப்பொருளாக உகரந்திரிந்தவாறு காண்க. ஈராட்டையான்,
பண்டையான், மற்றையவர், என பகுபதமாக உகரந்திரிந்தவாறு காண்க. அன்றியும்,
அளவடியான்வரும் கலிவிருத்தமட்டைவிருத்த மென்பார் இன்றைப் புலவருட்சிலர். -
நன்னூல். "ஐயீற்றுடைக்குற் றுகர முமுளவே." எ-து. மேற்கோள். எ-று. (8)
 
29. 	தெவ்வென்பதிருவழி உவ்வெய்திச்சேரும்
வலிமிகுமவ்வரின் வவ்வுமவ்வாமென்ப.
 
     (இ-ள்.) இனிச் சிலசிறப்பு விதிகளை யுணர்த்துதும். தெவ் என்னுமொழி
வல்லினத்தோடுபுணரின் உகரமெய்தி வல்லினமிகுதலும், மகரத்தோடு புணரின்
வகரங்கெட்டு மகரமிகுதலுமாம். (உ-ம்.) தெவ் + கடிது = தெவ்வுக்கடிது, தெவ் + கடுமை
= தெவ்வுக்கடுமை, எ-ம். தெவ் + மன்னர் = தெம்மன்னர், தெவ் + முனை =
தெம்முனை, எ-ம். வரும். தெவ், எ-து. பகை - நன்னூல். "தெவ்வென்மொழியே
தொழிற்பெயரற்றே, மவ்வரின்வஃ கான் மவ்வுமாகும்." எ-து. மேற்கோள். எ-று. (9)
 
30. 	யரழமுன்வலிவரினல்வழிக்கியல்பு
மடைமொழிக்காக்கமு மவைவேற்றுமைக்கண்
மிகலுந்தன்னின மெலியெய்தலுமாம்.
	


22


	 (இ-ள்.) ய ர ழ என்னு மூன்றொன்றையும் ஈற்றிலேயுடைய நிலைமொழி முன்னே
க ச த ப வருமொழிமுதல்வந்து புணர்ந்தால் அல்வழியில் மிகாமல் இயல்பாம். (உ-ம்.)
நாய்சிறிது, தேர்சிறிது, வீழ்சிறிது, எ-ம். வரும். அன்றியும், நிலைமொழிப்பதம்
தொகைப்பட்டு அடைமொழியாகநின்றால் வருமொழிப்பத முதலில்வல்லினமிகும். (உ-ம்.)
பொய் + செல்வம் = பொய்ச்செல்வம், கார் + பருவம் = கார்ப்பருவம், பாழ் +
கொல்லை = பாழ்க்கொல்லை, எ-ம். வரும். இவைமூன்றும்பண்புத்தொகை.
அன்றியும்,அம்மூன்றொற்றையும் ஈற்றிலேயுடையநிலைமொழிப்பதங்கண்முன்
வேற்றுமையில் வல்லினமு தன்மொழிவந்து புணர்ந்தால் வல்லினமிகுதலு
மெல்லினமுறழ்தலுமாகும். (உ-ம்.) வேய் + குறை = வேய்க்குறை, வேர் + குறை =
வேர்க்குறை, வீழ் + குறை = வீழ்க்குறை, எ-ம். வேய் + குறை = வேய்ங்குறை, வேர் +
குறை = வேர்ங்குறை, வீழ் + குறை = வீழ்ங்குறை, எ-ம். வேற்றுமைவழிக்கண் வல்லின
மிக்கலு மெல்லின முறழ்தலுமாயினவாறு காண்க, எ-று. (10)
 
31. 	சிலபலதம்மொடு சேர்புளியியல்பு
முதன்மெய்க்கடைமெய் மிகலுமீறுபோய்
லறவ்வாதலும் லாவாதலுமாம்
பிறவரினகர நிற்றலுங் கெடலுமாம்.
 
     (இ-ள்.) சிலபலவென்னும் இவ்விருசொல்லும் இரட்டித்து வருங்கால் இயல்பாய்
நிற்கவு முதலொற்றாயினுங் கடையொற்றாயினு மிக்கு வரவும், அகரங்கெட்டு லகரம்
றகரமாகவும் பெறும். (உ-ம்.) பலபல, சிலசில, என இயல்பாயின. பலப்பல, சிலச்சில என
ஒற்றுமிக்கன. பற்பல, சிற்சில, என அகரங்கெட்டு லகரம் றகரமாயின. பல்லபல,
சில்லசில, என லகரமிக்கன. ஒரோவிடத்து ல லாவாகத்திரியும். (உ-ம்.) பலாம், சிலாம்.
எ-ம். அன்றியும், பிறமொழிபுணருங்கால் அகரம் நிற்கவு நீங்கவுமாம். (உ-ம்.) பல்கலை,
என அகரநீங்கிற்று. பற்கலை, என அகரநீங்கி லகரம் றகரமாயிற்று. பலநாள், என
அகரநின்றது. பன்னாள், என அகரங்கெட்டு லகரம் னகரமாயிற்று. பல்மணி, பன்மணி;
பலவணி, பல்லணி; பலவாயம், பல்லாயம்; பலவளை, பல்வளை; பல்ஞானம், பன்ஞானம்.
எ-ம். வரும். ஆயினுந் தகரம்வரின் இயல்பாகவும், அகரம்போய் இருபத்தாறாஞ்
சூத்திரத்தின்படி தனி றவ்வெய்தி ஆய்தம்வரவுமாகும். (உ-ம்.) பல் + தொடை =
பஃறொடை, பல் + தாழிசை = பஃறாழிசை, எ-ம். பிறவுமன்ன. பல்பல, சில்சில, எ-ம்.
வரும். எ-று. (11)
 
32. 	ஆமாவல்வழி ஆவீறுமுற்று
மியாவிவைமுன்வலி மிகாதியல்பாகும்.
 
     (இ-ள்.) அல்வழிவந்த ஆமாவென்ற இருபெயரும் மியாவென்ற அசைச்சொல்லும்
ஆவீற்ற வெதிர்மறை முற்றுவினையும் எனவிவை வல்லினத்தோடு
	


23


	புணருங்கால் ஒற்றிரட்டாவெனக் கொள்க. (உ-ம்.) ஆகறந்தன, மாபயந்தன, ஆசிறிய,
மாபெரிய, எ-ம். கேண்மியாகோதாய், சொன்மியாபாவாய், எ-ம். தின்னாகுதிரை,
கடலோடா கால்வனெடுந்தேர், எ-ம். இவற்றைச் சிறப்பித்து விளக்கினமையால்
ஆவீற்றமற்றைப் பெயரும், முற்று வினையல்லன வினையும்வரின் வல்லின
மிரட்டுமெனக் கொள்க. (உ-ம்.) புறாப்பறப்பன, கடாப்பெரிய, மிடாச்சிறிய,
ஓடாக்குதிரையுமுழாக்காளையுமாகா. ஓடாத உழாத என வரின் வல்லினமிரட்டா. -
நன்னூல். "அல்வழியாமா மியாமுற்றுமுன்மிகா." எ-து. மேற்கோள். எ-று. (12)
 
33. 	தனிக்குறிலீற்றாத் தகும்பெயர்செய்யுட்கே
ஆஅவ்வாதலுமதனோ டுவ்வணையலுமாம்.
 
     (இ-ள்.) செய்யுளிடத்துத் தனிக்குறிற்கீழே ஆகாரவீற்றுச்சில பெயர் முன்னே
பலபெயர் வருங்கால் அவ்வாகாரங்குறுகி அகரமாகவும், அகரமாயினபின் உகரமிணைந்து
வரவும், பெறுமெனக்கொள்க. (உ-ம்.) சுறமறிவனதுறையெலா நிலவிரிகானல்வாய், எ-ம்.
நிலவுபாய்ந்த கடலிற் சுறவுபாய்ந்து களித்தன, எ-ம். இருவகை விகாரம்
வந்தவாறுகாண்க. அன்றியும். (உ-ம்.) இரா-இரவு, புறா-புறவு, சுறா-சுறவு, நிலா-நிலவு,
விளா-விளவு, பலா-பலவு, என இயல்பாகியுங் குறுகியும் உகரம்பெற்றும்
வழக்கிடத்துவரும் - நன்னூல். "குறியதன்கீழாக்குறுகலு மதனோ, டுகரமேற்
றலுமியல்புமாந்தூக்கின்." எ-து. மேற்கோள். எ-று. (13)
34. 	தமிழ்வேற்றுமைக் கச்சாரவும்பெறுமே.
 
     (இ-ள்.) தமிழ் என்னுஞ்சொல்லே வேற்றுமைப்பொருளாக வருங்கால்
அகரச்சாரியை பெற்றும், பெறாமையும், வருமெனக்கொள்க. (உ-ம்.) தமிழ்க்கூற்று,
தமிழ்ச்சொல், என அகரச்சாரியை பெறாது வந்தன. தமிழப்பல்லவதரையர், தமிழநாகன்,
தமிழவளவன், தமிழவரசன், என அகரச்சாரியைபெற்று வந்தன. - நன்னூல்.
"தமிழவ்வுறவும் பெறும் வேற்றுமைக்கே." எ-து. மேற்கோள் எ-று. (14)
 
35. 	தனிவழிஐயுந் தனிக்குறில்யவ்வுந்
துவ்வுநொவ்வுந் தொடர்மெலிமிகுமே.
 
     (இ-ள்.) ஓரெழுத்து மொழியாகவரும் ஐகாரமும், தனிக்குற்றெழு த்துக் கூடின
யகரமும், ஏவற்சொற்களாகிய, து, நொ, என்றிருமொழிகளும் நிலைப்பதமாகி,
வரும்பதமுதற்கண் மெல்லினம் புணரின் அல்வியானும் வேற்றுமையானும் ஒற்றிரட்டும்.
(உ-ம்.) கை + மாறினது = கைம்மாறினது, கை + மாற்று = கைம்மாற்று, கை + ஞான்றது
= கைஞ்ஞான்றது, கை + நீண்டது = கைந்நீண்டது, மெய் + ஞான்றது =
மெய்ஞ்ஞான்றது,
	


24


	மெய் + மாண்டது = மெய்ம்மாண்டது, மெய் + நீண்டது = மெய்ந்நீண்டது, என
அல்வழியிலும், கைஞ்ஞாற்சி, மெய்ந்நீட்சி, மெய்ம்மாட்சி, என வேற்றுமையிலும்,
ஒற்றுமிக்கன; துந்நாடா, தும்மாடா, நொந்நாகா, நொம்மங்கா, எனஏவற்சொல்லினு
மிக்கன. அன்றியும், துய்யவனா, துவ்வளவா, நொய்யவனா, நொவ்வளவா, எ-ம். வரும்
எ-று. (15)
36. 	தனிக்குறின்மெய்யுயிர் சார்புளிமிகும்ரழத்
தனிக்குறிற்சாரா தாமுமிகாவென்ப.
     (இ-ள்.) தனிக்குறில் நிலைப்பதத்தீற்று ஒற்றெழுத்தெல்லாம் உயிர்
தொடர்ந்துவரின் இரட்டும். (உ-ம்.) கண் + அழகு = கண்ணழகு, கம் + அழகு =
கம்மழகு, பொன் + அழகு = பொன்னழகு, மெய் + அழகு = மெய்யழகு, கல் + அழகு =
கல்லழகு, தெவ் + அழகு = தெவ்வழகு, புள் + அழகு = புள்ளழகு, எ-ம். வரும்.
அன்றியும், ர ழ வென இரண்டொற்றுந் தனிக்குறின் மொழியீற்றின்கண் வரவும்
இரட்டவும் பெறாதெனக் கொள்க. - நன்னூல். "தனிக்குறின்முன்னொற்
றுயிர்வரினிரட்டும்." எ-து. "ரழத்தனிக்குறிலணையா." எ-து. மேற்கோள். எ-று. (16)
 
37. 	மெலிவுறிற்பாவிடை மென்மைவன்மை
குறுமைநீட்சி குறுந்தொகைவிரிவே
மற்றொருமொழிமூ வழிகுறைதலுமென
வேண்டுளித்தனிமொழி விகாரமொன்பதே.
 
     (இ-ள்.) சந்திகாரணமாக வரு முன் காட்டிய எழுத்தின் விகாரங்க ளன்றியே
தனித்தொரு மொழியின் வரும் விகாரங்களீண் டுணர்த்துதும். அவையொன்பதாம்.
மெலித்தலும் வலித்தலும் குறுக்கலும் நீட்டலும் தொகுத்தலும் விரித்தலும் அன்றி,
ஒருமொழிதானே முதல் இடை கடை என மூவிடத்துக் குறைதலுமாம். (உ-ம்.) வாய்ந்தது,
எ-து. வாய்த்தது என வலித்தல் விகாரம். தட்டை, எ-து. தண்டை என மெலித்தல்
விகாரம். நிழல், எ-து. நீழல் என நீட்டல் விகாரம். பாதம், எ-து. பதம் எனக்குறுக்கல்
விகாரம். தண்டுறை, எ-து. தண்ணந்துறை என விரித்தல் விகாரம். வேண்டாதார், எ-து.
வேண்டார் எனத்தொகுத்தல் விகாரம். அன்றியும், தாமரை, எ-து. மரையிதழ்புரையு
மஞ்செஞ்சீறடி என மொழிமுதற் குறைந்த விகாரம். யாவர், எ-து. யார் என
மொழியிடைக்குறைந்த விகாரம். நீலம், எ-து. நீலுண்டகண், நீனிறப்பகடு என
மொழிக்கடைக் குறைந்த விகாரம். இவ்வொன்பது விகாரங்களுள் சில சிறு பான்மை
யாகையிற் றானேவழங்காதவற்றை இலக்கியங்க ளுட் காண்புழி யறிந்துகொள்க. இவை
செய்யுள் விகாரம். அன்றியும், புணர்ச்சிவிகாரம், புணர்ச்சியில் விகாரமும் சிலவுள.
(உ-ம்.) நிலவலையம், பொற்குடம்,
	


25


	வாழைப்பழம், எ-ம். வரும். இவை புணர்ச்சி விகாரம். புணர்ச்சி யில்விகாரம் ஏழாகும்.
முதலாவது தோன்றல். (உ-ம்.) குன்று - குன்றம், செல் - வழி, செல்வுழி, எ-ம்.
இரண்டாவது, திரிதல். (உ-ம்.) மாகி, மாசி, எ-ம். மூன்றாவது, கெடுதல். (உ-ம்.) யார்-
ஆர், யாவர்-யார், எ-ம். நான்காவது நீளல். (உ-ம்.) பொழுது - போது, பெயர் - பேர்,
எ-ம். ஐந்தாவது, நிலைமாறுதல். (உ-ம்.) வைசாகி, வைகாசி, நாளிகேரம், நாரிகேளம்,
தசை, சதை, ஞிமிறு, மிஞிறு, சிவிறி, விசிறி, எ-ம். ஆறாவது, மருவி வழங்குதல். (உ-ம்.)
என்றந்தை, எந்தை, எ-ம். ஏழாவது, ஒத்துநடத்தல். (உ-ம்.) நண்டு, ஞண்டு, நெண்டு,
ஞெண்டு, நமன், ஞமன், எ-ம். வரும். எ-று. (17)
 
38. 	இருமொழி யொருமொழி யெனச்சங்கீர்தமாய்
நிலைமொழியீற்றுயிர் நீங்கலுமதனோ
டணைமொழிமுதற்கண் அ ஆவாதலும்
இ ஈ ஏ யாதலும் உ ஓ வாதலுமாம்.
 
     (இ-ள்.) ஆதியிற் காட்டிய நால்வகை விகாரங்களுட் டிரட்டெனும் விகாரமா
மாறுணர்த்துதும், திரட்டெனினுஞ் சங்கீர்தமெனினுமொக்கும். ஆகையி லிருபத
மொருபதமாக ஒரோ விடத்து நிலைப்பதவீற் றெழுத்தும் வரும்பத முதலெழுத்தும்
ஒன்றாகத் திரண்டு விகற்பமாகும். இது வடமொழிகளின்கண் மிகவழங்கு மென்றுணர்க.
ஆகையின் முந்தி நிலைப்பத வீற்றுயிர்கெடும். அதுவே கெட்டதன் மெய்ம்மேல்
வரும்பதமுதலுயிரேறும். இவ்வாறு வருதல் தீர்க்கசந்தி, குணசந்தி, விருத்திசந்தி
எனப்படும். அவை வருமாறு. அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் அவ்விரண்டி லொன்று
வந்தால் ஆகாரமும், இகர ஈகாரங்களில் ஒன்றன்முன் அவ்விரண்டில் ஒன்று வந்தால்
ஈகாரமும், உகர ஊகாரங்களில் ஒன்றன்முன் அவ்விரண்டி லொன்று வந்தால்
ஊகாரமும், முறையே நிலைப்பத வீறும் வரும்பதமுதலும் கெடத் தோன்றுதல் தீர்க்க
சந்தியாகும். (உ-ம்.) வேத + ஆகமம் = வேதாகமம், குள + ஆம்பல் = குளாம்பல்,
பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம், சிவ + ஆலயம் = சிவாலயம், சரண + அரவிந்தம் =
சரணாரவிந்தம், சேநா + அதிபதி = சேநாதிபதி, பாத + அரவிந்தம் = பாதாரவிந்தம்,
அக + அரி = அகாரி, மர + அடி = மராடி, சுசி + இந்திரம் = சுசீந்திரம், கிரி + ஈசன் =
கிரீசன், மகீ + இந்திரன் = மகீந்திரன், மகீ + ஈசன் = மகீசன், குரு + உதயம் =
குரூதயம், தரு + ஊனம் = தரூனம், சுயம்பூ + உபதேசம் = சுயம்பூபதேசம், சுயம்பூ +
ஊர்ச்சிதம் = சுயம்பூர்ச்சிதம், எ-ம். வரும். அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் இகர
ஈகாரங்களில் ஒன்று வந்தால் ஏகாரமும், அவ்விரண்டில் ஒன்றன் முன் உகர
ஊகாரங்களில் ஒன்று வந்தால் ஓகாரமு முறையே நிலைப்பத வீறும் வரும்பதமுதலுங்
கெடத் தோன்றதல் குணசந்தியாகும். (உ-ம்.) சுர + இந்திரன் = சுரேந்தின், நர +
இந்திரன் = நரேந்தின், தரா + இந்திரன் = தரேந்திரன், 
	


26


	சருவ + ஈசுரன் = சருவேசுரன், உமா + ஈசன் = உமேசன், சித + இந்து = சிதேந்து,
அமல + உற்பவி = அமலோற்பவி, மகா + உதரம் = மகோதரம், சுத்த + உதகம் =
சுத்தோதகம், ஞான + ஊர்ச்சிதன் = ஞானோர்ச்சிதன், மந்திர + ஊகி = மந்திரோகி,
தாம + உதரன் = தாமோதரன் தயா + உற்பத்தி = தயோற்பத்தி, தயா + ஊர்ச்சிதன் =
தயோர்ச்சிதன், எ-ம். வரும். அகர ஆகாரங்களில் ஒன்றன் முன் ஏகர ஐகாரங்களில்,
ஒன்று வந்தால் ஐகாரமும், அவ்விரண்டில் ஒன்றன்முன் ஓகார ஒளகாரங்களில்
ஒன்றுவந்தால்ஒளகாரமு முறையே நிலைப்பதவீறும் வரும்பத முதலுங் கெடத்
தோன்றுதல் விருத்தி சந்தியாகும். (உ-ம்.) சிவ + ஏகம் = சிவைகம், சிவ + ஐக்கியம் =
சிவைக்கியம், தரா + ஏகவீரன் = தரைகவீரன், ஏக + ஏகன் = ஏகைகன், கலச + ஓதனம்
= கலசௌதனம், மகா + ஐசுவரியம் = மகைசுவரியம், கோமள + ஓடதி =
கொமளௌடதி, திவ்விய + ஒளடதம் = திவ்வியௌடதம், மகா + ஓடதி = மகௌடதி,
மகா + ஒளடதம் = மகௌடதம், எ-ம். வரும். ஒரு பதத்துள்ளே முதனின்ற இகர ஈகார
ஏகாரங்கள் ஐகாரமாகவும், உகர ஊகார ஓகாரங்கள் ஒளகார மாகவும், அகரம்
ஆகாரமாகவும், ஏழாமுயிர் ஆர் ஆகவுந் திரிந்து வருதல் ஆதிவிருத்தி சந்தியாகும்.
(உ-ம்.) சிவனைப்பணிவோன் - சைவன், வீரத்தின்றன்மை - வைரம், கேவலத்தன்மை -
கைவல்லியம், எ-ம். புத்தனைப்பணிவோன் - பௌத்தன், சூரன்றன்மை - சௌரியம்,
கோசலன்புத்திரி - கௌசலை, எ-ம். தசரதன் புத்திரன் - தாசரதி, எ-ம். கிருத்திகையின்
புத்திரன் - கார்த்திகேயன், எ-ம். வரும். (86-ஞ். சூ. காண்க.) இனித்திசைத்தொகையிற்
சொல்லும்படியே குவ்வீற்றுத் திசைப்பெயர் அஃதொழித்து, குண-குட-வட-தென், என
நிற்கும். அவ்வத்திசைக் கண்ணுளது கருதிப் பகுபதமாகச் சொல்லுங்கால் அது வெனும்
விகுதியைக் கூட்டி இவ்விலக் கணத்தாற் குணாது - குடாது - வடாது, எ-ம்.
இவற்றைப்போ லிலக்கணமின்றாயினுந் தெற்குளது - தெனாது, எ-ம். வழங்கும். (99-ஞ்.
சூ. காண்க.) எ-று. (18)
39. 	ஈறுபோயிடை யாவேற்றிரட்டிய
சொல்லேமிகுதி தோற்றுமென்ப
விலக்கணமின்றி யியைந்துளபிறவே.
 
     (இ-ள்.) ஒன்றன்மிகுதிக் காட்ட வதன் பெயரிரட்டி, முதன் மொழி யீற்றொற்றுள
தெனிற்கெட்டு அதனயல் உயிராகாரமாகத் திரிந்து, வல்லி னம்வரினு மிகாமல்வழங்கும்.
(உ-ம்.) பலபலகோடி, கோடாகோடி, பல பலகாலம், காலாகாலம், நீதாநீதி,
கோணாகோணம், குலாகுலம் தூராதூரம், தேசாதேசம், கருமாகருமம், எ-ம். பிறவுமன்ன.
இப்பலவிகற்பமன்றியே இலக்கண மில்லாமையும் புலவரால் வழங்கும் விகாரங்களுமுள
வெனக்கொள்க. அவையே இலக்கணப்போலிமொழி, எ-ம். மரூஉமொழி,
	


27


	எ-ம். இனிச்சொல்லும்படி வழங்கும். அவற்றுள், இலக்கணப்போலி வருமாறு. (உ-ம்.)
இல் முன் - முன்றில், வேட்கைநீர்-வேநீர், நகர்ப்புறம் - புறநகர், வேட்கையவர்,
வேணவாய், கண்மீ - மீகண், கோவில் - கோயில், பொதுவில் - பொதியில், பின் -
பின்றை, எ-ம். வரும். அன்றியும், மரூஉமொழி வருமாறு. (உ-ம்.) அருமருந்தன்ன
பிள்ளை - அருமந்தபிள்ளை, கிழங்கன்னபழஞ்சோறு - கிழங்கம் பழஞ்சோறு,
சோழநாடு - சோணாடு, எவன்-என்-என்ன, பெயர்-பேர், யாடு-ஆடு, சாத்தன்றந்தை -
சாத்தந்தை, சென்னைபுரி - சென்னை, புதுவைபுரி - புதுவை, மலையமாநாடு - மலாடு,
பாண்டியநாடு - பாண்டிநாடு, தஞ்சாவூர் - தஞ்சை, பனையூர் - பனசை, சேந்தமங்கலம்
- சேந்தை, ஆற்றூர் - ஆறை, ஆதன்றந்தை - ஆந்தை, பூதன்றந்தை - பூந்தை,
வடுகன்றந்தை - வடுகந்தை, என்றந்தை - எந்தை, உன்றந்தை - உந்தை, முன்றந்தை -
முந்தை, யார் - ஆர், யானை - ஆனை, யாறு - ஆறு, மரவடி - மராடி, குளவாம்பல்
- குளாம்பல், எ-ம். அ, இ, என்னுஞ் சுட்டுக்கள் அந்த, இந்த, எ-ம். வரும்.
இத்தொடக்கத் தேற்குஞ் செய்கையறிந்து முடிக்கவும். போலிமொழியும் மரூஉமொழியும்
ஒரு மொழியினுந் தொடர்மொழியினும் விகாரப்பட்டு வருவன. (194-ஞ். சூத்திரத்திற்
காண்க.) எ-று. (19)
 
40. 	உயிரேகுறினெடி லொற்றுமூவின
முயிர்மெய்யாய்த மோரறுகுறுக்க
மளபெடைமாத்திரைப் புணர்பெனவகுத்து
ணநமனலளதவு நண்ணுந் திரிபல
தேனைதிரியா தியல்பாமென்ன
விவண்விளக்கிய வெழுத்தினியல்பே.
 
     (இ-ள்.) இவ்வெழுத்ததிகாரத்துள் விளங்கியவற்றை இங்ஙனம் தொகையாகத்
தந்தவாறுகாண்க. அன்றியும், (இந்நூற்புணர்ச்சிமுடிவில், நன்னூற்புணர்ச்சி சிலகூறுதும்.)
இயல்பு புணர்ச்சி வருமாறு. (சூத்திரம்.) 'பொதுப்பெயருயர்திணைப் பெயர்களீற்றுமெய்,
வலிவரினியல்பாமாவிய ரமுன், வன்மை மிகாசிலவிகாரமாமுயர்திணை.' (உ-ம்.)
சாத்தன்பெரியன், சாத்தன்பெரிது, அவன்பெரியன், அவள்பெரியள், சாத்திபெரியள்,
சாத்திபெரிது, தாய்பெரியள், அவர்பெரியர், குமரக்கோட்டம். (சூ) 'ஈற்றியாவி
னாவிளிப்பெயர் முன்வலியியல்பே.' (உ-ம்.) நம்பியாகொண்டான், நம்பியோ சென்றான்,
நம்பியேதந்தான், யாகுறிது விடலாதா, (சூ.) 'செய்யியவென்னும்வினையெச்சம்பல்வகைப்,
பெயரினெச்ச முற்றாறனுருபே, யஃறி ணைப்பன்மை யம்ம முன்னியல்வே.' (உ-ம்.)
உண்ணியகொண்டான், உண்டசாத்தன், உண்டுபோனான், வாழ்ககொற்றா, தன்கைகள்,
பலகுதிரைகள், அம்மகொற்றா, (சூ.) 'பவ்வி நீமீமுன்னரல்வழி, யியல்பாம்வலிமெலி மிகலு
	


28


	மாமீக்கே.' (உ-ம்.) பீகுறிது, நீகுறியை, மீகண், மீக்கண். (சூ.) 'விகாரமனைத்து
மேவலதியல்பே.' (உ-ம்.) பொன்மணி, ஒளிமணி. (சூ) 'மூன்றுறுருபெ
ண்வினைத்தொகைசுட்டீ, றாகுமுகரமுன்னரியல்பாம்.' (உ-ம்.) சாத்தனொடு சென்றான்,
சாத்தனதுதலை, ஒருகை, அடுகளிறு, அதுகுறிது. (சூ.) 'வன்றொடரல்லன
முன்மிகாவல்வழி.' (உ-ம்.) நாகுகடிது. எஃகுசிறிது, வரகுதீது, குரங்குபெரிது,
தெள்குகொடிது, ஏகுகால். (சூ.) 'இடைத்தொட ராய்தத் தொடரொற்றிடையின், மிகாநெடி
லுயிர்த்தொடர் முன்மிகாவேற்றுமை.' (உ-ம்.) தெள்கின்கடுமை, எஃகின்கடுமை,
நாகின்கடுமை, வரகின்கடுமை. (சூ.) 'இடைச்சொல்லேயோ முன்வரினியல்பே.' (உ-ம்.)
அவனேகொண்டான், அவனோகொண்டான். (சூ.) 'அல்வழி இஐம்முன்னராயி,
னியல்புமிகலும் விகற்பமுமாகும்.' (உ-ம்.) பருத்திகுறிது, யானைகுறிது, கிளிக்குறிது,
தினைக்குறிது, சில சூத்திரத்துண் மிக்கதறிக. அன்றியும், விகாரப்புணர்ச்சிவருமாறு. (சூ.)
'ஒருபுணர்க்கிரண்டுமூன்று முறப்பெறும். (உ-ம்.) யானைக்கோடு, நிலப்பனை, பனங்காய்.
(சூ.) 'தோன்றறிரிதல் கெடுதல்விகார, மூன்றுமொழி மூவிடத்துமாகும்.' (உ-ம்.) பூங்கொடி,
பஃறலை, நிலவலயம். (சூ.) 'மரப்பெயர் முன்னரினமெல்லெழுத்து, வரப்பெறுனவு
முளவேற்றுமைவழியே.' (உ-ம்.) விளங்காய், மாங்கொம்பு, (சூ.) 'சுவைப் புளிமுன்னின,
மென்மையுந்தோன்றும்.' (உ-ம்.) புளிங்கறி, புளியஞ்சோறு, புளிந்தயிர், புளிம்பாளிதம்.
(சூ.) 'தெங்குநீண்டீற்றுயிர், மெய்கெடுங்காய்வரின்.' (உ-ம்.) தேங்காய். (சூ.) சாவவென்
மொழியீற்றுயிர் மெய்சாதலும் விதி.' (உ-ம்.) சாக்குத்தினான். (சூ.) 'பூப்பெயர்
முன்னினமென்மையுந்தோன்றும்.' (உ-ம்.) பூங்கொடி, பூஞ்சோலை, பூம்பனை. (சூ.)
'ஆமுன்பகரவீய னைத்தும்வரக் குறுகுமேலன வல்வழி யியல்பாகும்மே.' (உ-ம்.)
ஆப்பியரிது, ஆப்பிகுளிரும், ஆப்பிநன்று, ஆப்பிவலிது. (சூ.) 'பனைமுன்கொடிவரின்
மிகலும்வலிவரி, னைபோயம்முந்திரள்வரினுறழ்வு, மட்டுறினைகெட்டந்நீள்
வுமாம்வேற்றுமை.' (உ-ம்.) பனைக்கொடி, பனந்தூண், பனாட்டு, பனந்திரள். (சூ.)
'வேற்றுமையாயினைகானிறுமொழி, யீற்றழிவோடு மம்மேற்பவுமுளவே.' (உ-ம்.)
புன்னையங்கானல், வழுதுணங்காய், ஆவிரம்வேர். (சூ.) 'நெடிலோடுயிர்த்
தொடர்குற்றுகரங்களுட், டறவொற்றிரட்டும் வேற்றுமை மிகவே.' (உ-ம்.) ஆட்டுக்கால்,
சோற்றுப்பனை, முயிற்றுக்கால், முருட்டுக்கால், காட்டரண். (சூ.)
'ஆவியரழவிறுதிமுன்னிலைவினை, யேவன்முன்வ ல்லினமியல் பொடுவிகற்பே.' (உ-ம்.)
உண்டிசாத்தா, உண்டனைசாத்தா, உண்டாய்சாத்தா, உண்டனீர்சாத்தரே, எறிசாத்தா,
விடுசாத்தா, ஆய்சாத்தா, வாழ்சாத்தா, நடக்கொற்றா, எய்க்கொற்றா. (சூ.) 'மென்றொடர்
மொழியுட் சிலவேற்றுமையிற், றம்மினம்வன்றொட ராகாமன்னே.' (உ-ம்.) மருத்துப்பை,
கருப்புவில், கற்றா. (சூ.) 'இயல்பினும்விதியினு நின்றவுயிர் முன் க ச த ப மிகும்
விதவாதனமன்னே.' (உ-ம்.) ஆடூஉக்குறியன், தாராக்கடிது,
	


29


	ஒற்றைக்கை, ஆடிக்கொண்டான், பூத்துக்காய்த்தது, பொள்ளெ னப்பறந்தது, ஏரிகரை,
குழந்தைகை. (சூ.) 'அகமுனர்ச்செவிகை வரினி டையனகெடும்.' (உ-ம்.) அஞ்செலி,
அங்கை. (சூ.) 'வல்லேதொழிற்பெயரற் றிருவழியும், பலகைநாய்வரினும்
வேற்றுமைக்கவ்வுமாம்.' (உ-ம்.) வல்லுக்கடிது, வல்லப்பகை, வல்லநாய். (சூ.)
'வவ்விறுசுட்டிற் கற்றுறல்வழியே.' (உ-ம்.) அவற்றை, இவற்றை. (சூ.) 'சுட்டின்முன்
னாய்தமன்வரிற் கெடுமே.' (உ-ம்.) அதனை. (சூ.) 'அத்தினகரமகரமுனையில்லை.' (உ-ம்.)
மகத்துக்கை, மரத்துக்குறை. (சூ.) 'நவ்விறுதொழிற்பெயர்க் கவ்வுமாம்வேற்றுமை.' (உ-ம்.)
பொருநக்கடுமை. (சூ.) 'புள்ளும்வள்ளுந் தொழிற்பெயருமானும்.' (உ-ம்.) புள்ளுக்கடிது,
வள்ளுக்கடிது. (சூ.) 'இல்லெனின்மைச் சொற்கையடைய, வன்மை விகற்பமுமாகாரத்தொடு,
வன்மையாகலுமி யல்புமாகும்.' (உ-ம்.) இல்லைப்பொருள், இல்லைபொருள்,
இல்லாப்பொருள், இல்பொருள். (சூ.) 'மீன்றவ்வொடுபொரூஉம் வேற்றுமைவழியே.'
(உ-ம்.) மீற்கண். (சூ.) 'மவ்வீறொற்றழிந்துயிரீறொப்பவும், வன்மைக்கினமாத்திரி
பவுமாகும்.' (உ-ம்.) வட்டவாழி, வட்டக்கடல், வட்டவாரி. (சூ.) 'ஈமுங்
கம்முமுருமுந்தொழிற்பெயர்மானு, முதலனவேற்றுமைக்கவ்வும் பெறுமே.' (உ-ம்.)
ஈமுக்கடிது, கம்முக்கடிது, உருமுக்கடிது, ஈமக்குடம், கம்மக்குடம். (சூ.)
'வேற்றுமைமப்போய் வலிமெலியுறழ்வு, மல்வழியுயிரிடைவரி னியல்பும்முள.' (உ-ம்.)
குளக்கரை, குளங்கரை, குளமழகு, குளம்யாது பிறவுமன்ன. சிலசூத்திரத்துண் மிகாதறிக.
இவ்விருவகைப்புணர்ச்சி அல்வழிவேற்றுமையில் மெய்ம்முதன்மெய்யீறு, உயிர்முதலுயிரீறு
உயிர்முதன் மெய்யீறு, மெய்ம்முதலுயிரீறு, பெயர்முதற்பெயரீறு, வினைமுதல்வினையீறு,
வினைமுதற்பெயரீறு, பெயர்முதல்வினையீறு, பகாப்பதத்தோடு பகாப்பதம், பகுபதத்தோடு
பகுபதம், பகாப்பதத்தோடு பகுபதம், பகுபதத்தோடு பகாப்பதம், புணரப்படும். (உ-ம்.)
பொற்குடம், எ-து. மெய்ம்முதன் மெய்யீறாய்ப் பெயர்முதற்பெயரீறாய்ப் பகாப்பதத்தோடு
பகாப்பதமாயும்; பொன்னொடிந்தது, எ-து. மெய்ம்முதலுயிரீறாய்ப் பெயர்முதல்
வினையீறாய்ப் பகாப்பதத்தோடு பகுபதமாயும்; உண்டோது, எ-து. உயிர் முதலுயிரீறாய்
வினைமுதல்வினையீறாய்ப் பகுபதத்தோடு பகாப்பதமாயும்; உண்டவள் செவ்வாய்; எ-து.
உயிர்முதன் மெய்யீறாய் வினைமுதற் பெயரீறாய்ப் பகுபதத்தோடு பகுபதமாயும்
புணரப்பட்டன. பிறவுமன்ன இருமயக்கம்வருமாறு. (சூ.) 'க ச த ப
வொழித்தவீரேழன்கூட்ட, மெய்ம்மயக்குடனிலை ரழவொழித்தீரெட்,
டாகுமிவ்விருபான்மயக்கமொழியிடை, மேவுமுயிர்மெய் மயக்களவின்றே.' (உ-ம்.) சங்கம்,
வேற்றுநிலைமெய்ம்மயக்கம்; அற்றம், உடனிலைமெய்ம்மயக்கம். பிறவுமன்ன.
(நன்னூலிற்காண்க வென்ற பிறப்புவருமாறு.) (சூ.) "அவ்வழி ஆவியிடமையிடமிடறாகு,
மேவு மென்மை மூக்குரம்பெறும் வன்மை; அவற்றுள், முயற்சியுள் அ ஆ
	


30


	வங்காப்புடைய; இ, ஈ, எ, ஏ, ஐ, அங்காப்போ, டண்பன் முதனாவிளிம்புற வருமே; உ,
ஊ, ஒ, ஓ, ஒள, விதழ்குவிவே; கஙவுஞ் சஞவும், டணவு முதலிடை, நுனிநாவண்ண
முறமுறைவருமே; அண்பல்லடி நாமுடியுறத்தந வரும்; மீகீழிதழுறப்பம்மப்பிறக்கும்;
அடிநாவடிவணமுற யத்தோன்றும்; அண்ணநுனி நாவருடரழவரும்; அண்பன்
முதலுமண்ணமு முறையினா விளிம்புவீங்கி, யொற்றவும்வருடவும்
லகாரளகாரமாயிரண்டும்பிறக்கும்; மேற் பல்லிதழுறமேவிடும்வவ்வே,
அண்ணநுனிநாநனியுறிற்றன வரும். ஆய்தக் கிடந்தலையங்காமுயற்சி
சார்பெழுத்தேனவுந்தம்முதலனைய." (3-ஞ். சூத்திரத்திற்கூறிய பிறப்பு இவையேகாண்க.)
எ-று. (20)
 

மூன்றாவதெழுத்தின்விகாரம். - முற்றிற்று.
~~~~~~~
அதிகாரம் ஒன்றற்கு, இயன்மூன்றற்குப் பாயிரமுட்பட, ஆக (சூ.) 41.
மேற்கோள் (சூ.) 80. ஆக மொத்தம் (சூ.) 121.
~~~~~
முதலாவது:-எழுத்ததிகாரம்.-முற்றிற்று.
	


31


	இரண்டாவது
சொல்லதிகாரம்.
PART II. - WORDS.
முதலோத்துச்சொற்பொதுவியல்.
Chapter I - The General Nature of Words.
 

41.
	முச்சயத்தொழிற்கொடு முச்சகந்தனித்தா
ளச்சயனடிபணிந் தறைகுசொல்விளக்கே.
 
     (இ-ள்.) சொல்லிலக்கண மாமாறுணர்த்துதும், யாவராலும் வெல்லப்படாத
வல்லமைகொண்டு எல்லாவற்றையும் படைத்தல், அளித்தல், அழித்தல் என்னும்
இம்முத்தொழிலை இயற்றி மூவுலகனைத்தையும் பொதுவறத்தான்றனி
ஒருவனாயாளாநிற்குங் குறைப்பாடில்லாக் கடவுள் இணையடிமலரை
வணங்கிச்சொல்லிலக்கணத்தை விளக்குதும். ஆதியும் அந்தமும் நடுவும்
குறையறமுடிப்பதற்கு அதிகாரங்கடோறும் பாயிரமாகத் தெய்வவணக்கம்
ஈண்டுஞ்சொல்லுதன் முன்னோர்காட்டிய வழியெனக்கொள்க. ஒன்றும் பலவுங்கூடிய
எழுத்தினடையாற் சொற்களாகையின் எழுத்தியல் விளக்கியபின்னர், அவற்றாலாகிய
சொல்லைவிளக்கச் சொல்லதிகாரம் வந்த முறையெனக்காண்க. சொல்லெனினும்
பதமெனினுமொழியெனினுமொக்கும். இவ்வதிகாரப்பொருளும் பிரிவின்முறையும்
இனிவருஞ் சூத்திரத்தால் விளங்கும். இஃது சிறப்புப்பாயிரம். (சூ.) 'தெய்வவணக்கமுஞ்
செயப்ப டுபொருளு மெய்தவுரைப்பது தற்சிறப்பாகும்.' எ-று. (1)
 

42.
	எச்சொல்லும் பெயர்வினை யிடையுரியெனநான்
கிவற்றுட்பொதுவென வியற்சொற்றிரிசொ
லொருமொழிதொடர்மொழி யொருவிலாப்பொதுமொழி
பகாப்பதமென்றா பகுபதமென்றா
வாகுபெய ரிருதிணையைம் பான்மூவிடஞ்
சாரியையெனப்பொது தகுதியீராறே.
 
     (இ-ள்.) பெயரே வினையே இடையே உரியே என நாற்கூறுபாடா கச்
சொல்லெல்லாம் வகுக்கப்படும். அவற்றுட்பொருளை விளக்குவது பெயரே. பொருளது
தொழிலைவிளக்குவது வினையே. இவையிரண்டை யுஞ் சார்ந்தொன்றுவது இடையே.
அவ்விரண்டையுந் தழுவிப் பற்பல குணங்களை விளக்குவது உரியே.
	


32


	ஆயினும் இந்நால்வகைச்சொற்களை ஒவ்வோரோத்தாக விளக்காமுன்னர்,
இச்சூத்திரத்தில் இயற்சொன்முதலாகச் சாரியை யீறாகக்காட்டிய பன்னிரு தகுதிச்
சொற்பொதுமையவாகையிற் பொதுவியலென ஒரோத்தாதியிற் கூட்டி இவ்வதிகாரம்
ஐந்தோத்தாகப் பிரிக்கப்படு மெனக் கொள்க.எ-று. (2)
 

43.
	

இயற்சொல்லென்ப தியல்பிற்றிரிபிலா
தானெளிதெவர்க்குந் தன்பொருள்விளக்கலே.
 
     (இ-ள்.) இயற்சொல்லாமா றுணர்த்துதும், மொழியானும் பொருளா னுந்திரிபின்றி
எவர்க்குந் தன்பொருளைக் காட்டி விளக்குதற்கு இயல்பினை யுடையசொல்
இயற்சொல்லாகும். (உ-ம்.) அவன், அவள், அவர், அது, அவை, மகன், மகள், பொன்,
மணி, இவை பொருளால் வரு பெயரியற் சொல். நிலம், மலை, யாறு, கடல், இவை
இடத்தால் வரு பெயரியற் சொல். இன்று, நாளை, பண்டு, மேல், இவை காலத்தால் வரு
பெயரியற் சொல். தலை, முகம், கொம்பு, மலர், இவை சினையால் வரு பெயரியற்
சொல். வட்டம், சதுரம், செம்மை, வெண்மை, இவை குணத்தால்வரு பெயரியற்சொல்.
ஆடல், பாடல், நிற்றல், நீங்கல், இவைதொழிலால் வரு பெயரியற்சொல். அன்றியும்,
இயற்சொல் நால்வகையென்பர். (உ-ம்.) மண், மரம், இவை பெயரியற்சொல். உண்டான்,
உறங்கினான், இவை வினையியற்சொல். அவனை, அவனால், இவை இடையியற் சொல்.
அன்பு, அழகு, இவை உரியியற்சொல். பிறவுமன்ன. எ-று. (3)
 

44.
	திரிசொல்லொருபொருட் டெரிபலசொல்லும்
பலபொருட்கொருசொல்லும் பயன்படற்குரியன.
 
     (இ-ள்.) திரிசொல்லாமா றுணர்த்துதும். பலசொல்லாகி ஒருபொருளை
விளக்குவனவும், ஒரு சொல்லாகிப் பலபொருளை விளக்குவனவுந் திரிசொல்
லெனப்படும். (உ-ம்.) வெற்பு, விலங்கல், விண்டு, அடுக்கல், பொறை, வரை, குன்று,
பிறவும், பலசொல்லாகி மலை எனும் ஒரு பொருளைவிளக்குந் திரிசொல். ஒடை, எ-து.
ஒருசொல்லாகி யானைப்பட்டம், எ-ம். ஒருமரம், எ-ம். ஒருகொடி, எ-ம். நீர்நிலை, எ-ம்.
பலபொருளைவிளக்குந் திரிசொல். அன்றியும், திரிசொல் நால்வகையென்பர். (உ-ம்.)
கிள்ளை, சுகம், தத்தை, இவை கிளி என்கிற ஒருபொருள்குறித்த பலபெயர்த்திரிசொல்.
வாரணம், இது யானையுங் கோழியுஞ் சங்குமுதலாகிய பல பொருள்குறித்த ஒரு
பெயர்த்திரிசொல். படர்ந்தான், சென்றான், இவை போயினான் என்கிற
ஒருபொருள்குறித்த பலவினைத்திரிசொல். வரைந்தான், இது நீக்கினான், கொண்டான்,
என்கிற பலபொருள் குறித்த ஒருவினைத் திரிசொல். சேறும், வருதும், இவற்றினுடைய
றும் தும், விகுதிகள்
	


33


	தன்மைப்பன்மை எதிர்காலம் என்கிற ஒரு பொருள்குறித்த பலவிடைத் திரிசொல்.
கொல், இது ஐயம், அசைநிலை, என்கிற பலபொருள் குறித்த ஓரிடைத்திரிசொல். சால,
உறு, தவ, நனி, கூர், கழி, இவை மிகல் என்கிற ஒருபொருள்குறித்த பலவுரித்திரிசொல்.
கடி என்கிறது காப்பு, கூர்மை, அச்சம், கரிப்பு, விளக்கம், சிறப்பு, மணம் முதலிய
பலபொருள்குறித்த ஓருரித்திரிசொல். மற்றவையு மிப்படியே வருதல்காண்க. இயற்சொல்,
ரூடியார்த்தம், எ-ம். திரிசொல், யோகார்த்தம், எ-ம். வடமொழியில் வழங்கும், எ-று. (4)
 

45.
	

ஒருமொழியொன்றையும் பலவையுந்தொடர்மொழி
பொதுவவ்விரண்டையும் புகலுந்தன்மைய
தொகைதொகாவென விருதொடர்மொழியென்ப.
 
     (இ-ள்.) மும்மொழிகளாமா றுணர்த்துதும். முதலாவது, ஒருமொழிகள்
பகுப்பில்லாது ஒருபொருளை உணர்த்துவன ஒருமொழிக ளெனப்படும். (உ-ம்.) நம்பி,
நங்கை, நிலம், நீர், வந்தான், வந்தாள், எ-ம். பிறவுமன்ன. இரண்டாவது,
தொடர்மொழிகள் பலமொழி தொடர்ந்து நின்றுபொருளை உணர்த்துவன
தொடர்மொழிகளெனப்படும். இவையே தொகைநிலைத் தொடர்மொழிகள், எ-ம்.
தொகாநிலைத் தொடர்மொழிகள், எ-ம். இருவகைப்படும். தொகையாய்த்தொடர்ந்து
வருமொழிகள் ஆறெனப்படும். தொகாமையாய்த் தொடர்ந்துவருமொழிகள்
ஒன்பதெனப்படும். (உ-ம்.) அறஞ்செய்தான் - உருபுத்தொகை, கொல்புலி -
வினைத்தொகை, கருங்குவளை - குணத்தொகை, வேல்விழி - உவமைத்தொகை,
இராப்பகல் - உம்மைத்தொகை, தாழ்குழல் - அன்மொழித்தொகை, எ-ம். வரும்
தொகைநிலைத் தொடர்மொழிகள். வந்தான் சாத்தன் - தெரிநிலைவினைமுற்று,
வில்லினனிவன் - வினைக்குறிப்புமுற்று, வந்தவரசன் - பெயரெச்சம், வந்து சென்றான்
- வினையெச்சம், ஐயன்வந்தான் - வினைமுதல், ஐயாகேள் - விளி,
கல்வியைவிரும்பினான் - இரண்டனுருபு, தவத்தால்வீடெய்தான் - மூன் றனுருபு,
இரப்போர்க் கீய்ந்தான் - நான்கனுருபு, குணத்திற்சிறந்தோன் - ஐந்தனுருபு -
கடவுளதுகிருபை - ஆறனுருபு, விளக்கின்கண்ணொளி - ஏழனுருபு, இதுவோகண்டபயன்
- இடைச்சொல், நனிபேதை - உரிச்சொல், வருகவருக - அடுக்கு, எ-ம். வரும்
தொகாநிலைத் தொடர்மொழிகள் - நன்னூல்.-"முற்றீரெச்ச மெழுவாய் விளிப்பொரு,
ளாறுருபிடையுரியடுக் கிவைதொகாநிலை." எ-து. மேற்கோள். இவையெல்லாம்
ஒருவசனத்துளடங்கும். (உ-ம்). வெய்யகண்ணனே கடிபோய் மலையிலிழிந்த யானையது
கோட்டைநுனிக்கட்பொருட்கு வாளாற்கொய்தான், எ-ம். வரும். மூன்றாவது,
பொதுமொழிகள் ஒரு மொழியாய்நின்று ஒருபொருளை உணர்த்தியும் அதுவே
தொடர்மொழியாய் நின்று பலபொருளை உணர்த்தியும் இரண்டற்கும்
	


34


	பொதுவாய் நிற்பன பொதுமொழிகளெனப்படும். (உ-ம்.) எழுந்திரு ந்தான்; இதுவே
ஒருமொழியாக எழுந்தானென்று கொள்ளவும், தொடர் மொழியாக எழுந்து
பின்னிருந்தானென்று கொள்ளவுமாம். வேங்கை; இதுவே ஒருமொழியாகப் புலியு
மரமுமென்றுகொள்ளவும், தொடர்மொழி யாகவேகுங்கை யென்று கொள்ளவுமாம்.
தாமரை; இதுவே ஒருமொழியாக ஒரு பூவென்று கொள்ளவும், தொடர்மொழியாகத்
தாவுகின்றமரை யென்ற கொள்ளவுமாம். தொகைநிலை - சமாசமென்பர். எ-று. (5)
 

46.
	பகாப்பதமென்ப பயனாற்குறியாற்
பகாதொன்றாகிப் பகுப்பிற்பயனிலா
நிகழ்ந்தியல்கின்ற நால்வகைச்சொல்லே.
 
     (இ-ள்.) பகாப்பதங்களாமாறுணர்த்துதும். பெயர், வினை, இடை, உரி என
நால்வகைச்சொல் தாமேவிளக்கும் பொருட்பயனாலாயினுஞ் சொல்பவன்
குறித்தபயனாலாயினும் பகாதொன்றாகிப் பகுப்பினும் பயனிலாவாகி ஒருபொருளைத்
தருவனவெல்லாம் பகாப்பதங்களெனப்படும் (உ-ம்.) நம்பி, நங்கை, மலை, கடல், காடு,
நிலம், நீர், தீ, காற்று, வான் என்பன பெயர்ப் பகாப்பதங்கள். நட, வா, போ, மடி, கிட,
உண், தின், என்பன வினைப் பகாப்பதங்கள். மன், கொல், மற்று, போல, அம்ம
என்பன இடைப் பகாப்பதங்கள். உறு, தவ, கடி, நனி, எழில், சால், கழி என்பன
உரிப்பகாப்பதங்கள். இவையெல்லாந் தாமே விளக்கும் பொருட்பயனால் ஒன்றாகிவந்த
பகாப்பதங்கள். கூத்தன், கறுப்பன், சிலம்பி முதலியவோவெனில் கூத்தையாடினான்,
எ-ம். கரிய நிறத்தையுடையான், எ-ம். மலையிற்பிறந்தாள், எ-ம். பகுக்கப்பட்டுப்
பலபொருளைத் தருவன வாகையிற் பகாப்பதங்களல்லன. மக்களும், விலங்கினுள்,
இன்னான், இன்னது, என இடுகுறிப்பெயராகக் குறிக்கப்பட்டு ஒன்றாய் நின்று ஒரு
பொருளைத் தருதலால் பகாப்பதமாயின. இடுகுறிப்பெயர், பகாப்பதங்கட் குரித்து.
காரணப்பெயர், பகுபதங்கட்குரித்து. வடநூலார் பகாப்பதத்தை ரூடம் என்பர், எ-று. (6)
 

47.
	பகுபதமொன்றாய்ப் பலவொருங்குணர்த்திப்
பொழுதுகொள்வினையும் பொருளிடங்காலஞ்
சினைகுணந்தொழிலாறுஞ் சேர்ந்தபெயருமாம்.
 
     (இ-ள்.) பகுபதங்களா மாறுணர்த்துதும். ஒருமொழியாகநின்று
ஒருப்படப்பலபொருளை உணர்த்துவன பகுபதங்களெனப்படும். மேற்காட்டிய மலை,
ஒடை முதலிய திரிசொல் ஒன்றாகிப் பலபொருளை உணர்த்தினும் பகுபதங்களல்லன.
தெரிநிலையாகவுங் குறிப்பதாகவுங் காலத்தைக்கொண்டு வரும் வினை, வினைப்பகுபதம்.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், என அறுவகைக்காரணங்களை
யடுத்துவரும் பெயர், பெயர்ப்பகுபதம்.
	


35


	(உ-ம்.) ஓதினான், எ-து. ஓதுந்தொழிலையு மிறந்தகாலத்தையும், பாடுவான், எ-து.
பாடுந்தொழிலையும் வருங்காலத்தையு முணர்த்துதலால் வினைப்பகுபதம். வில்லினன்,
எ-து. வில்லையும் வில்லையுடையானையு முணர்த்துதலால் பொருட்காரணப்
பெயர்ப்பகுபதம். பொன்னன், முடியன் என்பன பொருளால்வரு பெயர்ப்பகுபதங்கள்.
வெற்பன், எயினன், ஆயன், ஊரன், துறைவன் என்பன இடத்தால் வருபெயர்ப்
பகுபதங்கள். மூவாட்டையான், வேனிலான், மாசியான், ஆதிரையான், நெருநலான்,
இற்றையான் என்பன காலத்தால் வருபெயர்ப் பகுபதங்கள். திணிதோளன், வரைமார்பன்,
ஒன்றரைக் கண்ணன், செங்குஞ்சியான் என்பன சினையால் வருபெயர்ப் பகுபதங்கள்.
கரியன், செய்யன் என்பன குணத்தால்வரு பெயர்ப்பகுபதங்கள். ஓதுவான் பாடுவான்,
ஈவான், உண்பான், தச்சன், கொல்லன், கணக்கன், பிணக்கன் என்பன தொழிலால்வரு
பெயர்ப்பகுபதங்கள். அன்றியும், நடந்தனன், எ-து. பகுதிவிகுதி யிடை நிலைசாரியை
சந்திவிகாரத்தான்முடிந்த வுயர்திணையாண்பா லொருமைப் படர்க்கை யிறந்த
காலங்காட்டு முடன்பாட்டுத் தெரிநிலை வினைமுற்றாறெழுத் தொருமொழி யியற்றும்
வினைமுதற் பகுபதம். நடக்கின்றார், எ-து. பகுதி விகுதி யிடைநிலை சந்தியான் முடிந்த
வுயர்திணைப் பலர் பாற்படர்க்கை நிகழ்காலங்காட்டு முடன்பாட்டுத் தெரிநிலைவினை
முற்றேழெழுத் தொருமொழியியற்றும் வினைமுதற்பகுபதம். நடப்பாள், எ-து. பகுதிவிதி
யிடைநிலைசந்தியான் முடிந்தவுயர்திணைப் பெண்பாலொரு மைப்படர்க்கை
யெதிர்காலங்காட்டு முடன்பாட்டுத் தெரிநிலைவினைமுற் றைந்தெழுத் தொருமொழி
யியற்றும் வினைமுதற்பகுபதம். பொன்னன், எ-து. பகுதிவிகுதியான்
முடிந்தவுயர்திணையாண்பா லொருமைப்படர்க்கை முக்காலங்காட்டு
நான்கெழுத்தொருமொழி குறிப்புவினை முற்றுப்பகுபதம். முக்காலமுணர்த்துமாறு:-
பொன்னன், என்பதை பொன்னையு டையனாயினான் என இறந்தகாலங் கருதியாயினும்,
பொன்னையுடைய னாகின்றான் என நிகழ்காலங் கருதியாயினும், பொன்னையுடைய
னாவான் என எதிர்காலங் கருதியாயினும், இப்படி ஒரு காலம் சொல்லுவான் குறிப்பாற்
கேட்பானுக்குத் தோன்றவுரைப்பதாம். கரிய, எ-து. பெயரெச்சக் குறிப்புவினைப் பகுபதம்.
இன்றி, எ-து. வினையெச்சக் குறிப்புவினைப்பகுபதம். நடந்தவன், எ-து. வினையா
லணையும் பெயர்ப்பகுபதம். நடந்திலன், எ-து. எதிர்மறைப்பகுபதம். நடந்து, எ-து.
வினையெச்சப் பகுபதம். நடக்கும், எ-து. பெயரெச்சப் பகுபதம். பிறவுமன்ன. வடநூலார்
பகுபதத்தை யௌகிகம் என்பர், எ-று. (7)
 

48.
	

"உயிர்மவிலாறுந் தபநவிலைந்துங்
கவசவினாலும் யவ்விலொன்று
மாகுநெடினொதுவாங் குறிலிரண்டோ
	


36


	டோரெழுத்தியல் பதமாறேழ்சிறப்பின
பகாப்பதமேழும் பகுபதமொன்பது
மெழுத்தீறாகத் தொடருமென்ப."
 
     (இ-ள்.) ஓரெழுத்தொருமொழியு மிருபதவெழுத்தளவு மாமாறுணர்த்துதும்,
பகாப்பத மொவ்வோரெழுத்துப் பதங்களாகவு நிற்கும். அவை எத்துணையோவெனில்,
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ எனத் தனியுயிர்ப் பதமாறும்; மா, மீ, மூ, மே, மை, மோ
எனத்தனிமகரப் பதமாறும்; தா, தீ, தூ, தே, தை எனத்தனித்தகரப் பதமைந்தும்; பா, பூ,
பே, பை, போ எனத் தனிப் பகரத் பதமைந்தும்; நா, நீ, நே, நை, நோ எனத்தனிநகரப்
பதமைந்தும்; கா, கூ, கை, கோ எனத்தனிக் ககரப் பதநாலும்; சா, சீ, சே, சோ எனத்
தனிச்சகரப் பதநாலும்; வா, வீ, வே, வை எனத்தனி வகரப்பதநாலும்; யா, எனத்தனி
யகரப்பதம் ஒன்றும்; ஆக நெட்டெழுத்துத் தனித்து நின்றுவரும் பதம்நாற்பதும்; நொ,
து, எனக்குற்றெழுத்துத் தனித்து நின்றுவரும்பதம் இரண்டுங் கூடிய நாற்பத்திரண்டுஞ்
சிறப்பின. இவையன்றிப் பகரவீகாரமுதலிய சிறப்பில்லனவுஞ்சிலவுள. அன்றியும்,
பலவெழுத்துத் தொடர்ந்துவரும் பதத்துட் பகாப்பதம் இரண்டெழுத்துமுதல்
ஏழெழுத்தீறாகவும் பகுபதம் இரண்டெழுத்துமுதல் ஒன்பதெழுத்தீறாகவுந்
தொடர்ந்துவருமெனக்கொள்க. ஈண்டுயிருமுயிர்மெய்யுமன்றி ஒற்றுமெண்ணுக. (உ-ம்.)
அணி, அறம், அகலம், அருப்பம், அருப்பலம், உத்திரட்டாதி என்பன பகாப்பதங்கள்;
கூனி, கூனன், குழையன், பொருப்பன், ஆரணத்தான், அரங்கத்தான், உத்திராடத்தான்,
உத்திரட்டாதியான், என்பன பகுபதங்கள். அருப்பலம், எ-து. அனிச்சமரம்.
அருப்பம்=ஊர், ஆ=பசு, ஈ=வண்டு, ஊ=ஊன், ஏ=அம்பு, ஐ=அரசன், ஓ=மடை
யடைக்குங்கதவு, மா=அழகு, மீ=மேல், மூ=மூப்பு, மே=ஏவல், மை=கறுப்பு,
மோ=மோவன்னேவல், தா=பகை, தீ=நரகம், தூ=சுத்தம், தே=கடவுள், தை=பூசநாள்,
பா=வெண்பா, பூ=பூமி, பே=நுரை, பை=நிறம், போ=ஏவல், நா=நாக்கு, நீ=முன்னிலை,
நே=அன்பு, நை=ஏவல், நோ=நோய், கா=சோலை, கூ=பூமி, கை=சிறுமை, கோ=கண்,
சா=ஏவல், சீ=இலக்குமி, சே=எருது, சோ=மதில், வா=விளித்தல், வீ=சாவு, வே=ஏவல்,
வை=வைக்கோல், யா=அஃறிணைப் பன்மைவினா, நொ=ஏவல், து=உண், கு, கௌ, வௌ,
பீ எனச் சிறப்பில்லனவுங் கொள்க, எ-று. (8)
 

49.
	ஆகுபெயரென்ப தவ்வவமுதற்சினை
கருவிகாரியம் பண்பிவற் றொன்றன்பெயர்
பிறிதொன்றற்குரைக்கும் பெற்றிதானே.
 
     (இ-ள்.) ஆகுபெயரா மாறுணர்த்தும். ஆகு பெயர் ஐவகைப்படும்.
முதற்குச்சினையும், சினைக்குமுதலும், காரணத்திற்குக் காரியமும், 
	


37


	காரியத்திற்குக் காரணமும், ஒன்றன்பண்பு மற்றொன்றற்கேற்புழி உரைப்பது
மைவகையாகுபெயராம். (உ-ம்.) பூநிழற்சோலை எ-து. பூவெனுஞ் சினைப்பொருளாற்
பூத்தமரங்களாகிய முதற்பொருளைக் காட்டுஞ் சினையாகுபெயர். புளியம்பழந்
தின்றானைப் புளியைத்தின்றான் எ-து. சினையைக்காட்டுமுத லாகுபெயர்.
ஞாயிறெழுந்ததற் கொளியெழுந்தது எ-து. காரணத்தைக் காட்டுங்காரியவாகுபெயர்.
தாமரை கதிர்படமலரும், என்பதற்கு, ஞாயிறுபடமலரும், எ-து. காரியத்தைக்காட்டுங்
காரணவாகுபெயர். பூத்தன வென்பதற்குக் குவளை நோக்கின, எ-து. முல்லை நகைத்தன,
எ-து. ஒன்றன்பண்பு மற்றொன்றற் குரைத்த பண்பாகுபெயர். அங்ஙனஞ் சீனப்பட்டு,
எ-து. சீனதேயத்துறுப்பாகிய மைந்தராற்செய்யப்பட்ட தென்று காட்டினவத னாற்
சினையைக்காட்டுமுதலாகுபெயர். அரிசி நாழி, பஞ்சு துலாம், எ-து.
நாழியாலளக்கப்பட்டதுந் துலாத்தானிறுக்கப்பட்டதுங் காட்டினவதனாற் காரியத்தைக்
காட்டுங் காரணவாகு பெயர். அன்றியும், சிலநூலாசிரியர் ஆகுபெயர் பன்னிரண்டும்
பிறவுமாமென்றுங் கூறுவர். (உ-ம்.) தாமரையினது பூவை தாமரை, எ-து. தாமரை
யென்னு முதற் பொருளின் பெயர் அதன் சினையாகிய மலருக்காதலால் பொருளாகு
பெயர். அகத்திலிருக்கின்ற மனதை அகம், எ-து. அகமென்னு முள்ளிடப்பெயர்
மனதிற்காதலால் இடவாகுபெயர். கார்காலத்தி லுண்டாகும் பயிரை கார், எ-து.
காரென்னும் ஒரு பருவகாலத்தின்பெயர் அப்பருவகாலத்தில் விளையும் பயிருங்காதலால்
காலவாகுபெயர். புளியையுடைய மரத்தினை புளி, எ-து. புளியென்னுஞ் சினைப்பெயர்
அதன் முதற்பொருளாகிய மரத்திற்காதலால் சினையாகுபெயர். நீலஞ்சூடினாள், எ-து.
நீலமென்னுங் குணப்பெயர் அந்நிறத்தையுடைய குவளை மலருங்காதலால் குணவாகு
பெயர். வற்றலோடுண்டான், எ-து. வற்றலென்னுந் தொழிற்பெயர் அதனைப்
பொருந்தியதோ ருணவிற்காதலால் தொழிலாகுபெயர். ஒன்றுவந்தது, எ-து. ஒன்றென்னும்
எண்ணுப்பெயர் அதனால் எண்ணப்படு மொரு பொருளுங்காதலால்
எண்ணலளவையாகுபெயர். துலாக்கோல், எ-து. துலாமென்னும் எடுத்தலளவைப் பெயர்
அதன் கருவியாகிய தராசுக்காதலால் எடுத்தலளவையாகு பெயர். நாழியுடைந்தது, எ-து.
நாழியென்னு முகத்தலளவைப்பெயர் அதன் கருவிக்காதலால் முகத்தலளவையாகு பெயர்.
வேலூர்தடி விளைந்தது, எ-து. தடியென்னும் நீட்டலளவைப்பெயர் அதனாலளக்கப்பட்ட
வயலுக்காதலால் நீட்டலளவையாகு பெயர். நன்னூலிற் குரைசெய்தான், எ-து. உரை
யென்னுஞ் சொல்லின் பெயர் அதன் பொருளுக்காதலால் சொல்லாகுபெயர். விளக்கு
முரிந்தது, எ-து. விளக்கென்னுந் தானியின்பெயர் அதற்குத் தானமாகிய தண்டிற்காதலால்
தானியாகுபெயர். திருவாசகம், எ-து. வாசக மென்னுங் காரணத்தின் பெயர்
அதன்காரியமாகிய ஒரு நூலுக்காதலால் காரணவாகுபெயர். இந்நூல் அலங்காரம், எ-து.
அலங்காரமென்னும் இலக்கணமாகிய காரியத்தின்பெயர் அதன் கருவியாகிய
	


38


	நூலுக்காதலால் காரியவாகுபெயர். திருவள்ளுவர், எ-து. திருவள்ளுவ ரென்னுங்
கருத்தாவின்பெயர் அவராற் சொல்லப்பட்ட நூலுக்காதலால் கருத்தாவாகுபெயர்.
தோகைவந்தாள், எ-து. தோகை யென்னு முவமையின் பெயர் அதை
யுவமானமாகக்கொண்ட பெண்ணிற்காதலால் உவமையாகு பெயர். அன்றியும்,
விடாதவாகுபெயர், விட்டவாகுபெயர், இருமடியாகுபெயர், மும்மடியாகுபெயர்,
நான்மடியாகுபெயர், அடையடுத்தவாகுபெயர், இருபயரொட்டாகுபெயர், எ-ம்.
பெயர்பெற்று வழங்கும். (உ-ம்.) ஆயிரங்குதிரையால் அவ்வூர்கொள்ளை யிடப்பட்டது,
எ-து. குதிரையென்னும் பெயர் தன்னியற் பொருளாகிய பரிமாவை விடாமல்
அவைகளை நடாத்துஞ் சேவகரையும் உணர்த்துதலால் விடாதவாகு பெயர். கங்கைக்கணி
டைச்சேரி, எ-து. கங்கையென்னும்பெயர் தன்னியற்பொருளாகிய வெள்ளத்தைவிட்டு
அதன் கரையை மாத்திரம் உணர்த்துதலால் விட்ட வாகுபெயர். கார், எ-து. காரென்னுங்
கருநிறத்தின்பெயர் மேகத்திற்கு ஆகுபெயராயும், அம்மேகம்பெய்யும் பருவத்திற்கு
இருமடியாகு பெயராயும், அப்பருவத்தில் வளரும்பயிருக்கு மும்மடியாகு
பெயராயும்வரும். நான்மடியாகுபெயர் இவ்வாறு வருதல் காண்க. வெற்றிலை நட்டான்,
எ-து. இலை என்னுஞ் சினைப் பெயர் அடையடுத்து முதற் பொருளுக் கானமையால்
அடையடுத்த வாகுபெயர். வகரக்கிளவி, எ-து. வகரமாகிய அடைமொழியானது கிளவி
என்னும் இயற்பெயர்ப் பொருளை விசேடித்து நிற்காது எழுத்தாகிய ஆகுபெயர்ப்
பொருளை விசேடித்துநிற்க, கிளவி என்பதே ஆகுபெயர்ப்பொருளை யுணர்த்த
அவ்விருபெயரும் ஒட்டி நிற்கையால் இருபெயரொட்டாகு பெயர். விட்டும்விடாத
வாகுபெயர்வருமாறு. (உ-ம்.) அவனிவன், எ-து. அவன் என்னும் பெயர்க்கு
இயற்கைப்பொருள் அவ்விடத்தில் அக்காலத்தோடு கூடினவன், இவன் என்பதற்கு
இயற்கைப்பொருள் இவ்விடத்தில் இக்காலத்தோடு கூடினவன் என்புழி, இவ்விடத்து
இக்காலத்தோடுகூடி இருக்கிறவனிடத்தில் அவ்விடத்து அக்காலத்தோடு கூடுகை
இராதாதலால், அவன் என்னும்பெயர் விசேடணப் பொருளைவிட்டு விசேடியத்தை
மாத்திரம் உணர்த்தலால் விட்டும் விடாதவாகு பெயர். தேவர்முதலிய பெயரை
மக்களுக்கிட்டு வழங்குவனவுங் கொள்க. - நன்னூல். "பொருண்முதலாறோ
டளவைசொற்றாணி, கருவிகாரியங்கருத்தனாதியு, ளொன்றன் பெடுயரானதற்கியை
பிறிதைத், தொன்முறை யுரைப்பன வாகுபெயரே," எ-து. மேற்கோள். எ-று. (9)
 

50.
	திணையிரண்டென மக்கடேவர்நரக
ராவருயர்திணை யஃறிணைபிறவே
பாலைந்தாண்பெண் பலருயர்திணையே
யன்றியுமொன்று பலவஃறிணையென்ப.
	


39


	 (இ-ள்.) திணைபாலா மாறுணர்த்துதும். உயர்திணை, எ-ம். அஃறிணை, எ-ம்.
திணை இருவகைப்படும். மக்களும் தேவரும் நரகரும் உயர்திணை. உயிருள்ளனவும்
உயிரில்லனவும் அஃறிணை. இவ்விருதிணையும் ஐம்பாலாகப்பிரிக்கப்படும். ஐம்பாலை
வடநூலார் பிரகிருதி யென்பார். அவை ஆண்பால் பெண்பால் உயர்திணைஒருமை,
பலர்பால் உயர்திணைப் பன்மை, ஒன்றன்பால் அஃறிணைஒருமை, பலவின்பால்
அஃறிணைப்பன்மை. (உ-ம்.) வந்தான், வந்தாள், வந்தார் என்பன உயர்திணைமுப்பால்,
வந்தது, வந்தன என்பன அஃறிணைஇருபால். - நேமிநாதம். "மக்கணரகரே
வானோரெனும் பொருள்க, டொக்கவுயர்திணையாந் தூய்மொழியாய் - மிக்க -
வுயிருள்ளனவு முயிரில்லனவுஞ், செயிரிலஃறிணையாஞ் சென்று." "ஒருவனொருத்திபல
ரொன்று பலவென்று, மருவியபாலைந்தும் வகுப்பின் - பொருவிலா - வோங்கு
திணைப்பாலொரு மூன்றொழிந்தவை, பாங்கிலஃறிணைப்பாலாம்."இவை மேற்கோள்.
எ-று. (10)
 

51.
	மூவிடந்தன்மை முன்னிலைபடர்க்கை
தன்மையாகு நான்யான்நாம்யா
முன்னிலைநீநீயிர் நீவிர்நீரெல்லீ
ரேனையபடர்க்கை யெல்லாம்பொதுவே
யானானீதா னொருமையாநாநீர்நீவி
ரெல்லீர்நீயீர்தா மெல்லாம்பன்மை.
 
     (இ-ள்.) மூவிடமாமாறுணர்த்துதும். அவற்றுள் தன்மை. (உ-ம்.) நான், யான், நாம்,
யாம், எ-ம். முன்னிலை. (உ-ம்.) நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர், எ-ம். படர்க்கை. (உ-ம்.)
அவன், அவள், அவர், எ-ம். வரும். எல்லாமென்பது, மூவிடத்திற்கும்
பொதுவெனக்கொள்க. ஒருமையும்பன்மையும் வருமாறு. (உ-ம்.) யான், நான், தன்மை
ஒருமை; யாம், நாம், தன்மைப்பன்மை; நீ முன்னிலை ஒருமை; நீவீர் நீயீர்
முன்னிலைப்பன்மை; அவன், அவள், படர்க்கை ஒருமை; அவர்கள், படர்க்கைப்பன்மை,
தன்மைக்கு உத்தமன், எ-ம். முன்னிலைக்கு மத்தியமன், எ-ம். படர்க்கைக்கு பிரதமன்,
எ-ம். வடநூலார் கூறுவர், எ-று. (11)
 

52.
	சாரியையென்ப சார்பதமெழுத்தென்ப
பதத்தொடுவிகுதியும் பதமுமுருபும்
புணர்புளியிடையிற் புணர்வனவவற்றுள்
அ எ உ ஐ குன் அன்னானின்ன
லற்றிற்றத்தந் தம்நம்நும்மெனப்
பதினேழன்றிப் பிறவுமாம்பொதுச்
சாரியையவற்றோர் வழியன்றாகும்விகற்பமே.
	


40


	 (இ-ள்.) சாரியையாமாறுணர்த்துதும். தொடர்மொழியாகப் பதத் தோடுபதமும்
பகுபதமாகப் பகுதியோடு விகுதியும் பெயர்ப்பொருளாகப் பெயரோடுருபும்
புணருங்காலே நிலைப்பதத்திற்கும் வரும்பதம் விகுதியுருபுகட்குமிடையே சிலவெழுத்துஞ்
சிலபதமும் ஒரோவிடத்துவரும்; வரின் அவைசாரியை யெனப்படும். ஆகையிற் சொன்ன
மூவகைப்புணர்ச்சிகட்குப் பொதுச்சாரியை மேற்சொன்ன அம்முதற்பதினேழும் பிறவுமாம்.
(உ-ம்.) அ-தனக்கு, எ-கலனே தூணி, உ-சாத்தனுக்கு, ஐ-மற்றையவர், கு-மொழிகுவான்,
ன்-ஆன்கன்று, அன்-ஒன்றன்கூட்டம், ஆன்-இருப்பான், இன்-வண்டினை, அல்-
நறுந்தொடையல்சூடி, அற்று-பலவற்றை, இற்று-பதிற்றுப்பத்து, அத்து-நிலத்தியல்பு, அம்-
புளியங்காய், தம்-எல்லார் தம்மையும், நம்-எல்லாநம்மையும், நும்-எல்லீர்நும்மையும்,
எனமுறையே பதினேழுசாரியை வந்தவாறுகாண்க. இவைபோல்வனபலவு முளவெனக்
கொள்க. ஆயினும் இவற்றிற்கெல்லா மொருவழியன்றி ஒன்றற்கொன்றும் இரண்டும்
வருதலு மொன்றும் வாராமையும் ஒன்றற்கோரிடத்து வருதலு மோரிடத்து
வாராமையுமாம். (உ-ம்.) பதப்புணர்ச்சிக்கண்: மலையுச்சி - அலங்கல்வேல்,
சாரியையின்மை; மனவூக்கம் - மனத்தாண்மை, ஒன்றன் கண்வந்ததும் வாராமையும்;
விகுதிப்புணர்ச்சிக்கண்: மலையான்-ஊரான், சாரியையின்மை; வெற்பன்-வெற்பினன்,
வில்லன்-வில்லினன், ஒன்றன் கண் வந்ததும் வாராமையும்; இனியுருபு புணர்ச்சிக்கண்:
மலையை - புகழை, சாரியையின்மை; நிலத்துக்கு-நிலத்துக்கண்-நிலத்திற்கு-நிலத்தின்கண்,
மீளவும் நிலக்கு - நிலக்கண், ஒன்றன்கண்ணொன்றுமிரண்டும் வந்ததுமொன்றும்
வாராமையும் வந்த வழியேகாண்க. ஆகையி லேற்குமிடங்களை யறிந்து வேண்டுவன
வருவித்துப்புணர்க்க. என்னை. - நன்னூல். "பதமுன் விகுதியும்பதமுமுருபும்
புணர்வழியொன்றும் பலவுஞ்சாரியை வருதலுந்தவிர்தலும் விகற்பமுமாகும்." எ-து.
மேற்கோள். எ-று. (12)
 

முதலோத்துச் சொற்பொதுவியல். - முற்றிற்று.
~~~~~
இரண்டாமோத்துப்பெயர்.
NOUNS.
முதலாவது:- வேற்றுமையியல்.
Chapter I - Cases.
 

53.
	பெயரேவேற்றுமை பெற்றிடம்பாறிணை
காட்டித்தொழிலல காலங்காட்டா
மரபுகாரண மாக்கங்குறியென்
றவைநாற்றகுதி யாகுமென்ப.
	


41


	(இ-ள்.) மேலேவகுத்துக்கூறிய நால்வகைச்சொற்களு ளிவ்வோத் தின்கண்ணே
பெயர்ச்சொல்லியல்பினை விளக்குதும். பெயரெனப்படுவன இனிவரும்
வேற்றுமையுருபுகளைக் கொள்வதற்கு உரியனவாகி மேற்காட்டியமூவிடம்
இருதிணைஐம்பால் என்றிவற்றைக்காட்டித் தொழிலின் காரணமாக வரும்பெயர்
காலங்காட்டுவதன்றியே அல்லனவெல்லாங் காலங் காட்டாமல் வருமெனக்கொள்க.
அன்றியு மரபுபெயரும், காரணப்பெயரும், ஆகுபெயரும், இடுகுறிப்பெயரும் என
நால்வகைப்படும் பெயரெல்லாமெனக்கண்டுணர்க. இவையே பொருட்பெயரும்,
வினையாலணையும் பெயரும், தொழிற்பெயரும், பண்புப்பெயரும் என இந்நால்வகை
யுள்ளடங்கும். (உ-ம்.) பொன்னன் - பொருட்பெயர், உண்டவன் -
வினையாலணையும்பெயர், நடத்தல் - தொழிற்பெயர், சண்டை, கூத்து, வேட்டை,
முதனிலையில்லாத தொழிற்பெயர்கள். கருமை பண்புப்பெயர், எ-று. (1)
 

54.
	காரணமில்லன மரபுபெயரே
காரணங்காட்டிக் காரணப்பயன்கொளல்
காரணப்பெயரே காரணங்காட்டா
ததன்பயன்கொள்வ தாகுபெயரே
காரணங்காட்டினுங் காரணப்பயன்கொளா
விடுகுறிப்பெயரா மென்பகற்றோரே.
 
     (இ-ள்.) கூறியநால்வகைப் பெயர்களு மிவையெனயுணர்த்துதும். இவற்றுட்காரண
மின்றிப் பொருளின் இயல்பினைக்குறித்து வருவன மரபு பெயரெனப்படும். (உ-ம்.) மகன்,
மகள், கரி, பரி, பொன், மணி, வான், நிலம், அகம், புறம், இரா, பகல், வருடம், மாதம்,
கால், தலை, தளிர், பூ, காய், கனி, வட்டம், நீளம், வெம்மை, தண்மை, ஊண், தின்,
ஆடல், பாடல் என்பன மரபு பெயர். அன்றியும் பொருள், இடம், காலம் சினை, குணம்,
தொழில், கருத்தா, மிகுதி என எண் காரணங்களால்வந்து அவற்றின் பயன்கொள்வன
காரணப் பெயரெனப்படும். (உ-ம்.) தமன், நமன், நுமன், எமன் என
சுற்றத்தால்வருபெயரும்; ஒருவன் என எண்ணால்வருபெயரும்; அவையத்தான்,
அத்திகோசத்தான் என குழுவால் வருபெயரும்; வில்லினன், பூணினன் முதலிய பெயரும்
பொருட்கார ணப்பெயர்களாம். வெற்பன், பொருப்பன் என குறிஞ்சித்திணையால்வரு
பெயரும்; மறவன், எயினன் என பாலைத்திணையால் வருபெயரும்; ஆயன், அண்டன்
என முல்லைத்திணையால்வருபெயரும்; ஊரன், உழவன் என மருதத்திணையால்
வருபெயரும்; சேர்ப்பன், பரதவன் என நெய்தற்றிணையால்வருபெயரும்; காவலூரான்,
கருவூரான் என ஊரால்வருபெயரும்; அருவாளன், சோழியன் என தேயத்தால்
வருபெயரும்; வானத்தான், விசும்பான் என வானால்வரு பெயரும்; மண்ணகத்தான்,
பாதலத்தான்
	


42


	முதலியபெயரும் இடக்காரணப் பெயர்களாம். பிரபவன், இபவன் என
வருடத்தால்வருபெயரும்; வேனிலான், காரான், என பருவத்தால் வரு பெயரும்;
தையான், மாசியான், என மாதத்தால் வருபெயரும்; ஆதிரை யான், ஓணத்தான், என
நாளால்வருபெயரும்; நெருநலான், இற்றையான் முதலியபெயரும்; காலக்காரணப்
பெயர்களாம். அலைகாதான், சுரிகுழலான், என உறுப்பால் வருபெயரும்; நெடுங்கையன்,
செங்கண்ணன் முதலிய பெயரும், சினைக்காரணப்பெயர்களாம். பெரியன், சிறியன், என
அளவால்வருபெயரும்; அறிஞன், புலவன், என அறிவால்வருபெயரும்; அமுதனையான்,
விடமனையான், என ஒப்பால்வருபெயரும்; குறளன், கூனன் என வடிவால்வருபெயரும்;
கரியன்,சிவப்பன், என நிறத்தால் வருபெயரும்; தேவன், மானுடன், என
கதியால்வருபெயரும்; அந்தணன், அரசன், என சாதியால்வரு பெயரும்; சேரன்,
சோழன், என குடியால் வருபெயரும்; ஆசிரியன், படைத்தலைவன், என
சிறப்பால்வருபெயரும்; நல்லன், தீயன், முதலியபெயரும் குணக்காரணப்பெயர்களாம்.
ஓதுவான், ஈவான், என ஓதலீதலால் வருபெயரும்; வாணிகன், தூதன் முதலியபெயரும்;
தொழிற்காரணப்பெயர்களாம். வள்ளுவப்பயன், குயக்கல், தொல்காப்பியம் முதலிய
கருத்தாகாரணப்பெயர். கமுகந்தோட்டம், காரைக்காடு முதலிய மிகுதிகாரணப்பெயர்.
எண்வகைக்காரணங்களால் காரணப்பெயர்வந்தவாறு காண்க. அன்றியும்,
பலகாரணங்களால் வரினும் வருமக்காரணங்காட்டாது ஒன்றன்பெயரை ஒன்றற்காக்கி
வருவன ஆகுபெயரெனப்படும். (உ-ம்.) புழுக்கப்பட்டசோற்றை - புழுக்கல், எ-து.
தொழிலாகுபெயர். புளியையுடையமரத்தினை - புளி, எ-து. சினையாகுபெயர்;
கார்நிறத்தையுடைய மேகத்தை - கார், எ-து. குணவாகுபெயர்; பிறவாகுபெயர் 49-ஞ்.
சூத்திரத்திற்காண்க. அன்றியும் பலகாரணங்களால் வந்தனவாகக்காட்டினும் அவற்றின்
பயனைக்கொள்ளாது, இடுகுறியால் அக்காரணங்களைக்குறியாது இதற்கிது
பெயரெனக்குறித்து ஒருபொருளைத்தருவன இடுகுறிப்பெயரெ னப்படும். (உ-ம்.)
கறுப்பன், எ-து. குணக்காரணப்பெயரும், அறுமுகன், எ-து. சினைக்காரணப்பெயரும்,
கூத்தன், எ-து. தொழிற்காரணப் பெயருமாயினும், இவைமுதலாயின
இதற்கிதுபெயரெனக்குறித்து மக்கட்காயினும் விலங்குகட்காயினுஞ் சொல்லின்
இடுகுறிப்பெயராம். இவையே தனித்துந் தொகுத்தும் வழங்கும். (உ-ம்.) கறுப்பன்,
கூத்தன் முதலியன தனித்திய லிடுகுறிப்பெயராம். படை, சேனை, நாடு, ஊர் முதலியன
தொகுத்திய விடுகுறிப்பெயராம். இவ்விருவகையாரும் இடுகுறிப்பெயர். அன்றியும், (உ-ம்.)
மரம், மலை, கடல், நிலம், யாறு, சோறு, என்பன இடுகுறிப்பொதுப்பெயர். விள, பலா,
பனை, என்பன இடுகுறிச்சிறப்புப்பெயர். பறவை, அணி, என்பன
காரணப்பொதுப்பெயர். அன்னம், மயில், முடி, என்பன காரணச் சிறப்புப்பெயர். முள்ளி,
கறுப்பன், அந்தணன், என்பன காரணவிடுகுறிப் பெயர். முள்ளி, எ-து. முள்ளையுடையன
வற்றையெல்லாம் உணர்த்துங்கால் காரணக்குறி,
	


43


	எ-ம். அவற்றுள் ஒரு செடியைமாத்திரம் உணர்த்துங்கால் காரணவிடுகுறி, எ-ம். கூறுவர்.
கறுப்பன், எ-து. கறுப்பையுடையவனை உணர்த்துங்கால் காரணக்குறி, எ-ம்.
கறுப்பில்லானை உணர்த்துங்கால் இடுகுறி, எ-ம். கூறுவர். வடநூலார் இடுகுறியை ரூடி,
எ-ம். காரணக்குறியை, யோகம், எ-ம். காரணவிடுகுறியை, யோகரூடி, எ-ம். கூறுவர்.
இவற்றைத் தனித்தனி விளக்குதும், எ-று. (2)
 

55.
	வேற்றுமைப்படுத்தலின் வேற்றுமையாமிவை
பெயர்ஐஆல்குஇன் அதுகண்விளியெட்டே.
 
     (இ-ள்.) பெயர்க்குரிய வேற்றுமையாமாறுணர்த்துதும். எவ்வகைப் பொருளும்
வேறுபட அதன்பெயரீறாகவரும் உருபெல்லாம் வேற்றுமை யெனப்படும். இவற்றை
வடநூலார் பிரத்தியமென்பர். அவையே பெயர் முதற் சூத்திரத்திற்காட்டிய
எட்டெனக்கொள்க, எ-று. (3)
 

56.
	

எழுவாயுருபா மியல்பிற்பெயரே
மீண்டதன்பொருளாம் வினைபெயர்வினாவே.
 
     (இ-ள்.) முதல்வேற்றுமை யிலக்கணமாமாறுணர்த்துதும். முதல்வேற்றுமைக்கு
உருபாவது, திரிபின்றித்தன்னியல்பாக நிற்கும் பெயர்தானேயாம். இதற்குப்பொருளாவன:-
வினையைக்கொள்ளலும், பெயரைக்கொள்ளலும், வினாவைக்கொள்ளலும்,
இதற்குப்பொருள்களாம். (உ-ம்.) சாத்தன் வந்தான், கொற்றன்வாழ்க, அவன்பெரியன்,
என்பவை வினைகொளவந்தன. அரசனவன், ஆவொன்று, என்பவை
பெயர்கொளவந்தன. அவன்யாவன், அவள்யாவள், என்பவை வினாக்கொள வந்தன.
பிறவுமன்ன. வினைமுதல், கருத்தா, செய்பவன், இவை பொருபொருட்கிளவி. வடநூலார்
கருத்தாவென்பர். வினைமுதற்பொருளாவது, தன்புடைபெயர்ச்சியாகிய செயலிற்சு
தந்தரமுடையபொருளாம். வேந்தன்வந்தான் என்புழி, வேந்தன் என்கிற
பெயர்ப்பொருளாகிய ஒருவன் தன்புடைபெயர்ச்சியாகிய வருதற்றொழிலிற்
சுதந்தரமுடைய பொருளாய் வினைமுதலாதல்காண்க. இம்முதல் வேற்றுமைக்கு
ஐம்முதலிய உருபுகளின்றாயினுஞ் சிறுபான்மை ஆனவன், ஆகின்றவன், ஆவான்
முதலாக ஐம்பாலிலும்வருகிற சொல்லுருபுகளுண்டு. (உ-ம்.) கொற்றனானவன்,
கொற்றியானவள், கொற்றரானவர், கோவானது, கோக்களானவை, எனச்
சிலவிடங்களில்வரும். அன்றியுஞ் சாத்தனென்பவன் என வருதலுமறிக, எ-று. (4)
 

57.
	"இரண்டாவதனுரு பையேயதன்பொரு
ளாக்கலழித்த லடைதனீத்த
லொத்தலுடைமை யாதியாகும்."
	


44


	 (இ-ள்.) இரண்டாம் வேற்றுமையிலக்கண மாமாறுணர்த்துதும். இரண்டாம்
வேற்றுமைக்கு உருபு ஐ ஒன்றேயாகும். இதற்குப்பொருள் ஆக்கல், அழித்தல்,
அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை, இவைமுதலியனவாம். (உ-ம்.)
அறத்தையாக்கினான், நூலைக்கற்றான், குடத்தை வனைந்தான், கோயிலைக் கட்டினான்,
இவை ஆக்கப்படுபொருள். மரத்தைக்குறைத்தான், கயிற்றை யறுத்தான், வினையை
வென்றான், பகையைக் கொன்றான், இவை அழிக்கப்படு பொருள். தேரையூர்ந்தான்,
நாட்டை நண்ணினான், வீட்டைமேவினான், அறத்தையடைந்தான், இவை
அடையப்படுபொருள். ஆசையைத்துறந்தான், அல்லலை யொழித்தான்,
காமத்தைநீத்தான், கலனைத்துறந்தான், இவை நீக்கப்படுபொருள். பொன்னை
யொத்தான், புலியைப்போன்றான், வேளைநிகர்த்தான், வெற்பையனையான், இவை
ஒக்கப்படுபொருள். அருளையுடையான், பொருளையுடையான், அறிவையுடையான்,
பொறையையுடையான், இவை உடைமைப் பொருள். செயப்படு பொருளாவது,
கருத்தாவின் றொழிற்பயனுறுவது. வருக்கையைவளர்த்தான் என்புழி, மண்வெட்டல்,
குழிதொட்டல், விதைநடுதல், புனல்விடுதன் முதலியசெயல் கருத்தாவின்றொழிலாம்.
தளிர்த்தல், பருத்தல், பூத்தல், காய்த்தன் முதலிய காரியம் அத்தொழிலின்பயனாம்.
அப்பயனுக்கிடம் வருக்கை யாதலால், வருக்கை செயப்படு பொருளாம். அதனிலிருக்கும்
பயனுக்கிடமாகுகை செயப்படுபொருண்மையாம். வருக்கை, எ-து. பலா.
எட்டியைவெட்டினான் என்புழி, வாளால்வீசுதன் முதலியசெயல் கருத்தாவின் றொழிலாம்.
துண்டாதல், பிளவாதன் முதலியகாரியம் அத்தொழிலின் பயனாம். அப்பயனுக்கிடம்
எட்டியாதலால் எட்டிசெயப் படுபொருளாம். அதனிலிருக்கும் பயனுக்கிடமாகுகை
செயப்படு பொ ருண்மையாம். கோட்டையைக் கட்டினான் என்புழி, கால்வெட்டல், நூல்
கட்டல், சேறிடுதல், கல்லடுக்கன் முதலியசெயல் கருத்தாவின் றொழிலாம்.
மாடங்கூடமதின் மாளிகையாதன் முதலிய காரியம் அத்தொழிலின்பயனாம்.
அப்பயனுக்கிடங் கோட்டையாதலால் கோட்டை செயப்படுபொருளாம். அதனிலிருக்கும்
பயனுக்கிடமாகுகை செயப்படு பொருண்மையாம். நகரையடைந்தான் என்புழி, நடந்து
செல்லன்முதலிய செயல் கருத்தாவின் றொழிலாம். அடைதல் சேர்தன் முதலியகாரியம்
அத்தொழிலின்பயனாம். அப்பயனுக்கிடம் நகராதலால் நகர் செயப்படு பொருளாம்.
அதனிலிருக்கும் பயனுக்கிடமாகுகை செயப்படு பொருண்மையாம். நாயகியை நீக்கினான்
என்புழி, வெறுத்தல், நீக்கல், முதலியசெயல் வினை முதற்றொழிலாம்.
நீங்குதன்முதலியகாரியம் அத்தொழிலின்பயனாம், அப்பயனுக்கிட நாயகியாதலால்
நாயகிசெயப்படுபொருளாம். அவளிலிருக்கும் பயனுக்கிடமாகுகை
செயப்படுபொருண்மையாம். குடத்தைநிகர்த்தான் என்புழி, உபமானமாக்குகையாகிய
நிகர்த்தல், கருத்தாவின்றொழிலாம். அதனாலுளதாகியபயன் உபமானமாகுகை
அதற்கிடங் குடமாதலால் குடஞ்செயப்படுபொருளாம்.
	


45


	அதனிலிருக்கும் பயனுக்கிடமாகுகை செயப்படு பொருண்மையாம். பொருளையுடையான்
என்புழி, ஈட்டல், கூட்டன்முத லிய செயல்செய்பவன்றொழிலாம். தனதாகக்கொள்ளுதன்
முதலியகாரி யம் அத்தொழிலின்பயனாம். அப்பயனுக்கிடம் பொருளாதலால் பொருள்
செயப்படுபொருளாம். அதனிலிருக்கும் பயனுக்கிடமாகுகை செயப்படு பொருண்மையாம்.
செயப்படுபொருண் மூவகைப்படும். (உ-ம்.) சோற்றை யுண்டான், எ-து. கருத்துண்டாய்ச்
செயப்படுவது. சோற்றைக்குழைத்தான், எ-து. கருத்தின்றிச்செயப்படுவது.
பதரையுநெல்லையும் பணத்திற்குக் கொண்டான், எ-து. இருமையுமாய்ச் செயப்படுவது,
எ-ம். வரும். உண்டலைச்செய்தான், எ-து. அகநிலையாயிற்று. தன்னைப்புகழ்ந்தான்,
எ-து. செயப்படுபொருளே கருத்தாவாயிற்று. இச்செயப்படுபொருள் ஐயுருபோடன்றி
மற்றையுருபுகளோடும்வரும். (உ-ம்.) அடி சிலடப்பட்டது, எழுவாய்;
அரிசியாலடிசிலாக்கினான், ஆல்; மலையொடொக்குமுலை, ஒடு;
இவட்குக்கொள்ளுமிவ்வணிகலன், கு; பழியினஞ்சும்பாவலன், இன்; பிள்ளைத்தமிழது
குற்றங்கூறினார், அது; தலைவன்கட்சார்ந்தாள், கண்; எ-ம். வரும்.
செயப்படுபொருள்குன்றாத தன்வினைகளினும் பிறவினைகளினும் இரண்டுருபுக
ளிணைந்திரண்டு செயப்படுபொருள் வருதலுமுண்டு. (உ-ம்.) பசுவினைப்பா
லைக்கறந்தான், யானையைக் கோட்டைக்குறைத்தான், எ-ம். பகைவரைச் சிறைசாலையை
யடைவித்தான், சாத்தனைச் சாதத்தையுண்பித்தான், எ-ம். வரும்; முறையேகாண்க.
செயப்படுபொருளை வடநூலார் கர்மம், என்பர். காரியம், எ-ம். வரும்.
ஆதியென்றமிகையால் பலவகை வினைகளும் இதற்குப் பொருளாம். (உ-ம்.)
வீட்டைவிரும்பினான், நூற்பொருளையறிந்தான், என்பவற்றுள் விரும்பலும், அறிதலு
முதலிய வினைமுதற் றொழில்களுக்கு வீடும், பொருளும், விடயமாயினும் இவையுஞ்
செயப்படு பொருளாம். மற்றை வேற்றுமைகளு மிவ்வாறறிக, எ-று. (5)
 

58.
	"மூன்றாவதனுரு பாலானோடொடு
கருவிகருத்தா வுடனிகழ்வதன்பொருள்."
 
     (இ-ள்.) மூன்றாம்வேற்றுமை இலக்கணமாமாறுணர்த்துதும். மூன்றாம்
வேற்றுமைக்கு உருபு, ஆல், ஆன், ஓடு, ஒடு இந்நான்குமாம். இதற்குப்பொருள்:-
கருவிப்பொருளும், கருத்தாப்பொருளும், உடனிகழ்ச்சிப்பொருளுமாம். கருவி காரணம்,
எ-து. ஒருபொருட்கிளவி. கருவிப்பொருள் இருவகைப்படும். (உ-ம்.) மண்ணாற்குடத்தை
வனைந்தான், கண்ணாற்கண்டான், உணர்வினாலுணர்ந்தான், இவை
முதற்கருவிப்பொருள். தண்டசக்க ரத்தாற் குடத்தைவனைந்தான், நாழியாலளந்தான்,
இவை துணைக்கருவிப் பொருள். கருத்தாப்பொருள் இருவகைப்படும். (உ-ம்.) அரசனாற்
கோயிற் கட்டுவிக்கப்பட்டது, தேர்செய்விக்கப்பட்டது, இவை ஏவுதற் கருத்தாப் பொருள்,
தச்சனாலாகிய கோயில், கோட்டை, இவை இயற்றுதற் கருத்தாப் பொருள்.
	


46


	வடநூலார் எழுவாய்க் கருத்தனை அபியிதகருத்தன், எ-ம். மூன்றனுருபின் கருத்தனை
அநபியிதகருத்தன், எ-ம். ஏவுதற்கருத்தனை எதுகருத்தன், எ-ம். இயற்றுதற்கருத்தனை
பிரயோச்சியகருத்தன், எ-ம். கூறுவர். உலகத்தோடொப்ப வொழுகல், தவத்தொடு
தானஞ்செய்வார், கனலொடுபுகை, குடையொடுநிழல், நூலொடுபுகழ், இவை
உடனிகழ்ச்சிப்பொருள். ஆல், ஆன், இவ்வுருபுகட்குக் கருத்தாவுங் காரணமுஞ்
சிறந்தனவாம். ஒடு, ஓடு இவ்வுருபுகட்கு உடனிகழ்ச்சிப் பொருள் சிறந்தனவாம்.
அன்றியும் ஆல், ஆன், நிற்குமிடங்கட்கு கொண்டு, எ-து. உருபாம். (உ-ம்.)
வாள்கொண்டு வெட்டினான், எனவரும். ஒடு, ஓடு, நிற்குமிடங்கட்கு உடன், எ-து.
உருபாம். (உ-ம்.) மகளுடன் மருமகன்வந்தான். எனவரும். ஆல், ஆன், உருபுகள்
தொறுவெனும் பொருளையுந்தரும். (உ-ம்.) ஊராலோராலயம், எ-து.
ஊர்தோறுமொவ்வோராலயம், என வரும். ஆல் ஆன், சினைப்பொருளாகவும்
வேற்றுமை செய்யும். (உ-ம்.) கண்ணாற்குருடன், காலால்முடவன், என வரும். ஒடு, ஓடு,
நால்வகையாகவேற்றுமை செய்யும். (உ-ம்.) தொடியொடு தொல்கவின்வாடியதோள், எ-து.
வேறு வினையுட னிகழ்ச்சிப்பொருள். மலையொடு பொருதமாலியானை, எ-து.
வினையில்பொருள். எழுத்தொடுபுணர்ந்தசொல், எ-து. ஒற்றுமைப்பொருள். பாலொடு
தேன்கலந்தற்றே, எ-து. கலப்புறுபொருள். சிறுபான்மை கருவிப் பொருளானது
எழுவாயுருபோடும், நான்கனுருபோடும், ஐந்தனுருபோடும், ஆறனுருபோடும்வரும்.
(உ-ம்.) கண்ணானதுகாணும், எழுவாய்; கண்ணிற்குக்காணலாம், கு; கண்ணிற்காணலாம்,
இன்; கண்ணதுகாட்சி, அது; என வரும். கருவியை வடநூலார் கரணம் என்பர், எ-று.
(6)
 

59.
	"நான்காவதற்குரு பாகுங்குவ்வே
கொடைபகைநோச்சி தகவதுவாதல்
பொருட்டுமுறையாதியி னிதற்கிதெனல்பொருளே."
 
     (இ-ள்.) நான்காம் வேற்றுமையிலக்கணமாமாறுணர்த்துதும். நான்
காம்வேற்றுமைக்கு உருபு கு ஒன்றேயாகும். இதற்குப்பொருள்:- கொடை, பகை, நேர்ச்சி,
தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, இவைமுதலியனவாம். (உ-ம்.) புலவற்குப்
பொன்னைக்கொடுத்தான் என்புழி, பொன் கொடைப்பொருள், அதனோடு
சம்பந்தமுடைய பொருள் புலவனாதலால் புலவன் கோளிப்பொருள். கொடுத்தலும்
ஏற்றலும் பலவகைப்படும். (உ-ம்.) அரசனுக்கமைச்ச னணிகொடுத்தான், எ-து.
இழிந்தோனளித்தல். அமைச்சனுக் கரசனாடை யளித்தான், எ-து. உயர்ந்தோனளித்தல்.
பாண்டியனுக்கு விருந்திட்டான் சோழன், எ-து. ஒப்போனளித்தல். கள்ளனுக்குக்
கசையடிகொடுத்தான், எ-து. வெறுப்பாயளித்தல். கணவனுக் கின்பங் கொடுத்தாள், எ-து.
விருப்பாயளித்தல். மருமகனுக்கு மகளைக் கொடுத்தான், எ-து. வழக்கத்தி லளித்தல்.
மகனுக் கரசு கொடுத்தான், எ-து. உரிமைலளித்தல்.
	


47


	அரசனுக்குத் திறை கொடுத்தான். எ-து. அச்சத்தி லளித் தல். தாய்தந்தைக்ககுத்
திவசங்கொடுத்தான், எ-து. பாவனையளித்தல். இவை கொடைப்பொருள். தனக்குத்தான்
சோறிட்டான், எ-து. ஈவோனற்றல். குருவிற்குக் கொடைகொடுத்தான், எ-து.
மிக்கோனற்றல். சோற்றிற்கு நெய்விட்டான், எ-து. உணர்வின்றியேற்றல். ஆவிற்கு
நீர்விட்டான், எ-து. கேளாதேற்றல். இரப்போர்க்கீந்தான், எ-து. கேட்டேயேற்றல்.
மாணாக்கனுக்கு கறிவுகொடுத்தான், எ-து. எலாதேற்றல். இவையேற்றல். மக்கட்குப் பகை
வெகுளி, தன்னோய்க்குத் தானே மருந்து, பாம்புக்குப்பகை கருடன், எலிக்குப்பகை
பூனை, இவை பகைப் பொருள். அறத்திற்குப் பொருணேர்ந்தான், விளக்கிற்குநெய்,
இவை நேர்ச்சிப் பொருள். புலவர்க்குரித்தே புகழ், அறத்திற்குத்தக்கதருள், இவை
தகுதிப்பொருள். ஆடைக்குநூல், ஆழிக்குப்பொன், இவை முதற்காரணகாரியமாகிய
அதுவாதற் பொருள். முதற்காரணம் ஆதிகாரணம், சமவாயிகாரணம், முக்கியகாரணம்,
என்பன ஒரு பொருட் கிளவி. கூலிக்குழைத்தான், கூழிற்குக்குற்றேவல், இவை
நிமித்தகாரண காரியமாகிய பொருட்டுப் பொருள். எனக்குத்தாய், உனக்குமகள்,
இவைமுறைப்பொருள். ஆதியென்ற மிகையால் கைக்குக்கடகம், கரும்பிற்குவேலி,
மயிருக்கெண்ணெய், உயிருக்குண்டி, நாய்க்குநட்பு, தாய்க்குக்காதல், எனக்குநல்லவன்,
அரசற்கமைச்சன், ஊருக்குப் பொய்கையணி, பொய்கைக்கணி கான்யாறு, எ-ம். வரும்.
சிறுபான்மை கோடற்பொருளானது எட்டாம்வேற்றுமையொழிந்த மற்
றையுருபகளோடும்வரும். (உ-ம்.) இரப்பவரென்பெறினுங்கொள்பவர், எழுவாய்;
செய்யவடவ்வையைக் காட்டிவிடும், ஐ; நாகராற்பலி, ஆல்; நாகரினன்பு செய்தான், இன்;
நாகரது பலி, அது; ஊர்க்கட்சென்றான், கண்; என வரும். இதனைவடநூலார்
சம்பிரதானம் என்பர், எ-று. (7)
 

60.
	"ஐந்தாவதனுரு பில்லுமின்னு
நீங்கலொப்பெல்லை யேதுப்பொருளே."
 
     (இ-ள்.) ஐந்தாம் வேற்றுமை யிலக்கண மாமாறுணர்த்துதும். ஐந்
தாம்வேற்றுமைக்கு உருபு இல், இன், என இவ்விரண்டுமாகும். இதற்குப் பொருள்:-
நீக்கப்பொருளும், ஒப்புப்பொருளும், எல்லைப்பொருளும், ஏதுப் பொருளுமாம். (உ-ம்.)
ஊரினீங்கினான், எ-ம். குறள் - தலையினிழிந்த மயிரனையர்மாந்தர்
நிலையினிழிந்தக்கடை - எ-ம். இவை நீக்கப்பொருள். காக்கையிற்கரிதுகளம்பழம், எ-ம்.
குறள்.-'சிறுமைபலசெய்து சீரழிக்குஞ்சூதின் வறுமைதருவ தொன்றில்.' எ-ம். இவை
ஒப்புப்பொருள். அதனின் மெல்லிதிது, அதனிற்பெரிதிது, இவை ஒப்பொடுநீங்கல்.
திருக்காவலூரின் மேற்கு, யாற்றின்வடக்கு, மதுரையின் வடக்குச் சிதம்பரம், இவை
எல்லைப் பொருள். அறிவிற்பெரியன், பொருளிலெளியன், எ-ம். இவைஏதுப்பொருள்.
சிறுபான்மை இவ்வைந்தனுருபு மூன்றனுருபோடும் நான்கனுருபோடும் வரும்.
	


48


	(உ-ம்.) பாம்பினிற்கடைந்தகடல், வாளின்வெட்டினான், ஆல்; சிதலெறும்பாதி
மூக்கறிவின் மூவறிவுயிர், கு; எ-ம். வரும். மதுரை யைநீங்கினான் என
இரண்டனுருபுபோடு நீக்கப் பொருளும், புதுவைக்குத் தெற்குப் புலியூர் என
நான்கனுருபோடு எல்லைப்பொருளும், வந்தவாறறிக. வடநூலார் நீக்கப்பொருளை
அபாதானம், எ-ம். எல்லைப்பொருளை அவதி, எ-ம். கூறுவர். சிறுபான்மை இல், இன்,
இவ்வுருபுகளோடு உம் சேர்ந்துவரும். (உ-ம்.) அவனிலும் பாமரன், இவனினும் பெரியன்,
என வரும். இல், இன் எல்லைப் பொருளில் ஐ யுருபோடு காட்டிலும்
பார்க்கிலுஞ்சேர்ந்து சொல்லுருபுகளாகவரும். (உ-ம்.) அவனைக் காட்டிலும்
வல்லவனிவன், இவனைப் பார்க்கினு மூடனவன், எனவரும். நீக்கப்பொருளில் இல், இன்
உருபுகளின்மேல், நின்று, இருந்து, தனித்தும் உகரம்பெற்றுஞ்சொல்லுருபுகளாகவரும்.
(உ-ம்.) ஊரினின்று நீங்கினான், ஊரிலிருந்துபோனான், ஊரினின்றும்வந்தான்,
ஊரிலிருந்துபோனான், எ-ம். வரும், எ-று. (8)
 

61.
	ஆறனொருமைக் கதுவுமாதும்
பன்மைக்கவ்வு முருபாம்பண்புறுப்
பொன்றன்கூட்டம் பலவினீட்டந்
திரிபினாக்கஞ்சேர்ந்த தற்கிழமையும்
பிறிதின்கிழமையும் பேணுதல்பொருளே.
 
     (இ-ள்.) ஆறாம்வேற்றுமை யிலக்கண மாமாறுணர்த்துதும். ஆறாம் வேற்றுமைக்கு
உருபு அது, ஆது, அ இம்மூன்றுமாகும். ஒருமைப் பெயர்க்கு அது, ஆது, உருபாம்.
பன்மைப் பெயர்க்கு அ உருபாம். இதற்குப்பொருள்:-குணம், உறுப்பு, ஒருபெருட்டிரட்சி,
பலபொருட்டிரட்சி, ஒன்றுதிரி ந்தொன்றாதல் ஆகியதற்கிழமை ஐந்தும்,
பிறிதின்கிழமைமூன்றும், இவை முதலியனவாம். தன்னோடொற்றுமை யுடையபொருள்
தற்கிழமை. தன்னின்வேறாகியபொருள் பிறிதின்கிழமை. கிழமை எ-து. உரிமை. (உ-ம்.)
எனதுகை, எனாதுகை, நினதுநிலம், நினாதுநிலம், ஒருமையில் அது ஆது வந்தன.
எனகைகள், தனதாள்கள், புலியநகங்கள், பன்மையில் அ வந்தது. சிந்தாமணி, "நுனசீறடி
நோவநடந்து செலே, லெனதாவியகத் துறைவாயெனுநீ, புனைதாரவனே பொய்யுரைத்
தனையால், வினையே னொழியத் தனியேகினையே." எ-ம். வரும். தற்கிழமை, (உ-ம்.)
காக்கையதுகருமை, கொக்கதுவெண்மை, இவைபண்புத்தற்கிழமை. சாத்தனதுகை,
யானையதுகோடு, செய்யுளதடி, இவை உறுப்புத்தற்கிழமை, நெல்லது குப்பை,
மாந்தரதுதொகுதி, எள்ளதீட்டம், இவை ஒன்றன் கூட்டத்தற்கிழமை. மஞ்சளதுபொடி,
நெல்லது சோறு, இவை ஒன்றுதிரிந் தொன்றாயதன்றற்கிழமை. சிலநூலார்
சாத்தனதுசெலவு, வருகை, இருக்கை, இவை தொழிற்றற்கிழமை என்பர். பிறிதின்கிழமை.
(உ-ம்.) சாத்தனதுதாடை, அரசனதுதாழி, ஆவினதுகன்று,

* நன்னூல் 300-ம் சூத்திரத்தைக்காண்க.
	


49


	இவைபொருட்பிறிதின்கிழமை. சாத்தனதுவீடு, புலியதுகாடு, இவை இடப்பிறிதின்கிழமை,
புதனதுவாரம், மன்மதனதுவேனில், இவை காலப்பிறிதின்கிழமை. இச்சம்பந்தப் பொருள்
இம்மூவுருபுகளோடன்றி ஐந்தனுருபோடும் ஏழனுருபோடும்வரும். (உ-ம்.) தருவினீங்கின
கொம்பு, இன்; உயிரின்கண்ணுணர்வு, கண்; எ-ம். வரும். சிறுபான்மைஉடையவென்னுஞ்
சொல்லுருபாயினும் குவ்வுருபாயினும் வரும். (உ-ம்.) சாத்தனுடையமகன் - மகள்,
சாத்தனுக்குமகன் - மகள், எ-ம். வரும். ஒரோவிடத்து அவனது மனையாள்,
அரனதுதோழன், எனஉயர்திணையில் அதுவுருபும் வரும். வடநூலார் சம்பந்தப்
பொருளை சேஷார்த்தம் என்பர். எ-று. (9)
 

62.
	"எழனுருபு கண்ணாதியாகும்
பொருண்முதலாறு மோரிருகிழமையி
னிடனாய்நிற்றலி னிதன்பொருளென்ப."
 
     (இ-ள்.) ஏழாம் வேற்றுமையிலக்கண மாமாறுணர்த்துதும். ஏழாம் வேற்றுமைக்கு
உருபு கண் முதற்பலவுமாம். இதற்குப்பொருள்:- பொருளிடங்காலஞ் சினைகுணந்
தொழிலென்றிவ்வாறுந் தற்கிழமையானும் பிறிதின் கிழமையானும் ஒன்றற்கிடனாய்நிற்ப
இதற்குப் பொருளாம். பொருளிடமாதற்கு, (உ-ம்.) மணியின்கண்ணொளி, தற்கிழமைப்
பொருட்கிடம்; தினையின்கட்கிள்ளை, பிறிதின்கிழமைப் பொருட்கிடம். இடமிடமாதற்கு,
(உ-ம்.) கடலின்கட்டிரை, தற்கிழமைப் பொருட்கிடம்; ஆகாயத்தின்கட் பறவை,
பிறதின்கிழமைப் பொருட்கிடம். காலமிடமாதற்கு, (உ-ம்.) நாளின்கண்ணாழிகை,
தற்கிழமை, பொருட்கிடம்; காரின்கண்முல்லை, பிறிதின் கிழமைப் பொருட்கிடம்.
சினையிடமாதற்கு, (உ-ம்.) கையின்கண்விரல், தற்கிழமைப் பொருட்கிடம்;
கையின்கட்கடகம், பிறிதின்கிழமைப் பொருட்கிடம். குணமிடமாதற்கு, (உ-ம்.)
நிறத்தின்கண்ணெழில், தற்கிழமைப்பொருட்கிடம்; இளைமைக்கட்செல்வம்,
பிறிதின்கிழமைப் பொருட்கிடம். தொழிலிடமாதற்கு, (உ-ம்.) ஆடற்கட்சதி, தற்கிழமைப்
பொருட்கிடம்; ஆடற்கட்பாட்டு பிறிதின் கிழமைப் பொருட்கிடம், அன்றியுங் கண்
முதற்பலவும் இதற்குருபென்றமையால் இங்ஙனங் கண்ணென்ப திடத்தைக் குறித்தலின்
எவ்வகையிடத்திற்கு மேற்றபெயரெல்லா மிதற்குருபாக வேற்பன. கண்முதலாக
விருபத்தெட்டும் இடப்பொருள் காட்டும் உருபுகளென்று நன்னூலில் விரித்துத்தந்தது.
(சூ.) "கண்கால்கடையிடை தலைவாய்தி சைவயின், முன்சார்வலமிடமேல் கீழ்புடைமுதல்,
பின்பாடளைதேமுழைவ ழியுழியுளி, யுள்ளகம்புறமில்லிடப்பொருளுருபே." இதற்கு,
(உ-ம்.) ஊர்க்கணிருந்தான்-கண், ஊர்க்கானிவந்தபொதும்பர்-கால், வேலின்கடைமணி
போற்றிண்ணியான்-கடை, நல்லாரிடைப்புக்கு-இடை, வலைத்தலைமானன் னநோக்கியர்-
தலை, குரைகடல்வாயமுதென்கோ-வாய், தேர்த்திசையிருந்தான்-திசை, அவர்வயிற்
செல்லாய்-வயின், கற்றார்முற்றோன்றாகழிவிரக்கம்.
	


50


	முன், காட்டுச்சாரோடுங்குறுமுயால்-சார், கைவலத்துள்ளது கொடுக்கும் - வலம்,
இல்லிடப்பரத்தை - இல், தன்மேற்கடுவரை நீரிற்கடுத் துவரக்கண்டும் - மேல்,
பிண்டிக்கண்ணார் நிழற்கீழெந்தமடிகள் - கீழ், எயிற்புடைநின்றான் - புடை,
சுரன்முதல்வந்தவுரன்மாய்மாலை-முதல், காதலிபின்சென்றதம்ம-பின்,
நாம்பாடணையாதநாள் - பாடு, கல்லளைச்சுனைநீர் - அளை, தோழிக்குரியவை
கோடாய்தேத்து - தேம், அவனுழைவந்தான் - உழை, நின்றதோர் நறவேங்கை
நிழல்வழியசைந்தன்ன-வழி, உறையுழியோலைபோல-உழி, குயில்சேர் குளிர்காவுளி
சேர்ந்துறையும்-உளி, முல்லையங்குவட்டுள்வாழும்-உள், பயன் சாரப்பண்பில்
சொற்பல்லாரகத்து - அகம், செல்லு மென்னுயிர்ப் புறத்தி றுத்தமருண்மாலை - புறம்,
ஊரிலிருந்தார்-இல், கண்ணகன்ஞாலம், வீட்டின் புறத்திலிருந்தான், எ-ம். வரும்.
இவ்வுருபுகட்கு இன்னும் வேறுபொருளுண்டு. கூட்டிப்பிடிக்குங் கூட்டமும்,
பிரித்துக்கூட்டுங் கூட்டமும், இருவரின் முடியுமொருவினைத் தொழிலுமாகிய
விடமில்லாத விடங்களும் அவ்வுருபுகளின் பொருளாம் (உ-ம்.) குறிலைந்தனுள் அ, இ,
உ, என்னு மிம்மூன்றுஞ் சுட்டு. அவருள் வல்லவனிவன் - கூட்டிப்பிரிக்குங் கூட்டம்,
விஞ்சையில்லாதவனை விலங்கினுள்வைத் தெண்ணப்படும் - வித்தையுள்ளவன்
விண்ணவருள்வைத் தெண்ணப்படும் - பிரித்துக்கூட்டுங் கூட்டம், அவனுமிவனும்
போர்செய்தற்கண் மழைபெய்தது - சூதாடற்கட்டூக்கம் வந்தது - இருவரின்
முடியுமொருவினைத் தொழில், எ-ம். வரும். சிறுபான்மை இவ்விடப்பொருள்
எழுவாயுருபோடும் இரண்டனுருபோடும் நான்கனுருபோடும் வரும். (உ-ம்.)
தூண்போதிகையைத் தொட்டது - எழுவாய், தூணைச்சார்த்தான் - ஐ, இன்றைக்கு
வருவான். கு - எ-ம். வரும். இதனைவட நூலார் அதிகரணம் என்பர். எ-று. (10)
 

63.
	அதனோடைம்முத லாறுமேற்கும்.
 
     (இ-ள்.) இனிச்சில விகற்ப மாமாறுணர்த்துதும். அதுவென்பது ஆறாம்
வேற்றுமைக்கு உருபாமெனினும் அதுவே முதற்பெயரோடு கூடி அன்சாரியை பெற்று
ஐம்முதல் கண்ணீறாகிய ஆறுருபுகளோடு புணர்ந்து வருமெனக்கொள்க. (உ-ம்.)
சாத்தனதனை, சாத்தனதனால், சாத்தனதற்கு, சாத்தனதனின், சாத்தனது, சாத்தனதன்கண்,
எ-ம். வரும். நன்னூல். "ஆறனுருபுமேற்குமவ்வுருபே." எ-து. மேற்கோள். எ-று. (11)
 

64.
	ஐஆன்குச்செய் யுட்கவ்வுமாகு
மாகாவஃறிணைக் கானல்லாத.
 
     (இ-ள்.) சிலவேற்றுமையுருபு திரிதற்குப் புறனடையா மாறுணர்த்துதும்,
செய்யுளிடத் துயர்திணைப் பெயரொடுவந்த ஐ ஆன் கு என்னு மூன்று வேற்றுமை
யுருபுகடிரியவும் பெறும், திரிந்துழி அகரமா மெனக் கொள்க. (உ-ம்.)
காவலோனைக்களிறஞ்சும், எ-து. காவலோனக்களிறஞ்சும்,
	


51


	எ-ம். புலவரானுரைத்த நூல், எ-து. புலவரானவுரைத்த நூல், எ-ம். கடிநிலையின்றே
யாசிரியற்கு, எ-து. ஆசிரியற்க, எ-ம். வரும். அஃறிணைப்பெயர்களோடோவெனில்,
ஆனெனு முருபு திரியவும் பெறும், ஒழிந்த ஐயும் குவ்வுந்திரியா. (உ-ம்.) புள்ளினா
னெழுந்த வோதை, எ-து. புள்ளினான வெழுந்தவோதை, எ-ம். வரும்.
ஆயினுமிவையெலாஞ் சிறுபான்மை யெனக்கொள்க. எ-று. (12)
 

65.
	உவ்வீறுவினாச்சுட் டெண்ணிவைவேற்றுமை
வழியன்சாரியை மருவவும்பெறுமே
யற்றுறும்பன்மையாம் வினாச்சுட்டென்ப
வவ்விறுமஃறிணைப் பன்மைக்கற்றே.
 
     (இ-ள்.) ஐம்முதலாறுருபுஞ் சாரியையும் புணர்ச்சியாமா றுணர்த்துதும். உகரவீற்று
வினாப்பெயருஞ் சுட்டுப்பெயரும் எண்ணின்பெயரும் ஐம்முதலாறு வேற்றுமை
யுருபுகளோடு புணருங்காலும், வேற்றுமைப் பொருளாய் மற்றொரு பெயரொடு
தொடருங்காலும், அன்சாரியையணையவும் பெறும். (உ-ம்.) யாதனையுமியான்,
யாதன்கொம்பு, எ-ம். அதனை, இதனை, உதனை, அதனியல்பு, இதனிலை, உதன்வழி,
எ-ம். ஒன்றனை, இரண்டனை, மூன்றனை, ஒன்றன்பால், ஆறனுருபு, எட்டனியல்பு, எ-ம்.
மூவகைப் பெயருமிருவழி அன்சாரியை பெற்றவாறுகாண்க. மருவவுமென்றும்மை
வந்தமையாலச் சாரியையின்றியும் வேற்றுமையுருபு பெறுமென்றுணர்க. (உ-ம்.) யாதை,
அதை, ஒன்றை, பிறவுமன்ன. மீளவும் பொது முறையால் இன்சாரியை பெற்றுவரும்.
(உ-ம்.) யாதினால், அதினால், ஒன்றின்முதலிய, எ-ம். தொடர்மொழியாக நிற்புழி அன்,
இன், என்றிரு சாரியையி லொன்றின்றி வழங்கா. (உ-ம்.) இதன் பொருள், இதின்
பொருள், ஒன்றன்பால், ஒன்றின்பால், எ-ம். பிறவுமன்ன. இவற்றுள்ளும் அன்சாரியை
சிறப்பெனக்கொள்க. அன்றியுஞ் சுட்டுச்சொற்பன்மை. (உ-ம்.) இவை, அவை, உவை,
இவ், அவ், உவ், எ-ம். வினாச்சொற்பன்மை. (உ-ம்.) எவை, எவ், யாவை, எ-ம்.
இவையெலாம் அற்றுச்சாரியை பெற்றாறுருபோடு புணரும். (உ-ம்.) இவற்றை, அவற்றை,
உவற்றை, எவற்றை, யாவற்றை, எ-ம். பிறவுமன்ன. மீளவும் அற்றுச்சாரியையோடு
இன்சாரியை பெற்றாறுருபோடு புணரவும்பெறும். (உ-ம்.) இவற்றினை, இவற்றினால்,
இவற்றிக்கு, இவற்றினின், இவற்றினது, இவற்றின்கண், எ-ம். பிறவுமன்ன. அன்றியு
மினிச்சொல்லும்படி அஃறிணைப் பெயருட்சில பன்மையில் அ வென முடியும்.
இவையெல்லாம், அற்றுச்சாரியை பெற்றாறுருபோடு புணரும். (உ-ம்.) பல-பலவற்றை,
சில-சிலவற்றை, அரிய-அரியவற்றை, பறப்பன- பறப்பனவற்றை, எ-ம். பிறவுமன்ன.
தொல்காப்பியம். - "எண்ணினிறுதியன்னொடு சிவணும்." எ-து. மேற்கோள். எ-று. (13)
	


52


	66.
	"எல்லாமென்ப திழிதிணையாயி
னற்றோடுருபின் மேலும்முறுமே
யன்றேனம்மிடை யடைந்தற்றாகு
மெல்லாருமெல்லீரு மென்பவற்றும்மை
தள்ளிநிரலே தம்நும்சாரப்
புல்லுமுருபின் பின்னரும்மே."
 
     (இ-ள்.) இதுவுமது. எல்லாமெனும் பெயர் அஃறிணையானகாலை அற்றுச்சாரியையு
முருபின்மே லும்மையும் பெறும். (உ-ம்.) எல்லாவற்றையும் - எல்லாவற்றோடும், எ-ம்.
அவ்வாறடைமொழியாக வரினுமாம். (உ-ம்.) எல்லாவற்றுத்தலையும் -
எல்லாவற்றுக்காதும், எ-ம். அதுவே உயர்திணையானகாலை இடையே
நம்மெனுஞ்சாரியை யுருபின் மேலும்மும்பெறும். (உ-ம்.) எல்லாநம்மையும் -
எல்லாநம்மாலும் எ-ம். அவ்வாறடைமொழியாக எல்லாந்தலையும் - எல்லாங்காதும்,
எ-ம். அன்றியும், எல்லாரு மெல்லீருமென இருமொழியுமீற்றும்மை ஒழிந்து முறையே
தம் நும் எனச்சாரியையு முருபின்மேலும்மையும் பெறும். (உ-ம்.) எல்லார் தம்மையும் -
எல்லார்தம்மாலும், எ-ம். எல்லீர் நும்மையும் - எல்லீர் நும்மாலும், எ-ம். அவ்வாறடை
மொழியாக எல்லார்தங்காதும் - எல்லீர்நுங்காதும், எ-ம். வரும். பிறவுமன்ன எ-று. (14)
 

67.
	"ஆமாகோனவ் வணையவும்பெறுமே."
 
     (இ-ள்.) இதுவுமது. ஆ, மா, கோ என்னு மிம்முப்பெயரும் னவ்வெனுஞ்
சாரியைபெற் றாறுருபோடு புணரும். (உ-ம்.) ஆன், மான், கோன், ஆனை, மானை,
கோனை, ஆனால். மானால், கோனால், எ-ம். பிறவுமன்ன. அவ்வாறடைமொழியாக
ஆன்கன்று, மான்றலை, கோன்குணம், எ-ம். வரும். பிறவுமன்ன. இங்ஙன மா, எ-து.
விலங்கு, மரம், இவையெனக் கொள்க. அன்றியும், னவ்வணையவுமென்றமையா
லச்சாரியை யணையாமலும் பொது வழியால் உருபு பெற்றுவரும். (உ-ம்.) ஆவை,
ஆவினை, மாவை, மாவினை, கோவை, கோவினை, எ-ம். வரும். பிறவுமன்ன. எ-று. (15)
 

68.
	"தான் தாம் நாமுதல் குறுகும்யான்யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற
குவ்வின் அவ்வரு நான்காறிரட்டா."
 
     (இ-ள்.) இதுவுமது. தான், தாம், நாம், என முப்பெயரு முதலுயிர்குறுகி, தன், தம்,
நம் எனவாகி ஐம்முதலாறுருபுகளைப் பெறும். அன்றியும் யான் எ-து. என், யாம் எ-து,
எம் நீ எ-து. நின், நீர் எ-து. நும், எனவாகி அவ்வுருபுகளைப் பெறும். அன்றியும்,
குவ்வெனு நான்காம் வேற்றுமையில் அ எனுஞ்சாரியைபெற்றுக் ககரமிரட்டும். அன்றியு
மெழுத்தின் விகாரங்களுட்சொன்னபடி
	


53


	தனிக்குறிலீற்ற வொற்றெழுத்துயிர்வரி னிரட்டுமென் றமையான் மற்றவிடத்தீற்று
மெய்யெழுத்திரட்டி நான்காம் வேற்றுமை யிடத்தும் ஆறாம் வேற்றுமையிடத்து
முயிரொடுபுணரினுமிரட்டா." (உ-ம்.) தன்னை, தன்னால், தனக்கு, தன்னின், தனது,
தன்கண், எ-ம். தம்மை, நம்மை, என்னை, எம்மை, நின்னை, நும்மை, எ-ம். பிறவுமன்ன.
நீர், நீவீர், நீயீர், ஒருவழியாக நும்மாம். அன்றியுஞ்சூத்திரத்துட் பிறவென்றதனால் நீ,
எ-து. உன் - நுன், எ-ம். நீர், எ-து. உம் - நும், எ-ம். வரும். அன்றியு மிவையெல்லாந்
தன்மொற்றிரண்டின விடத்துஞ் செய்யுள்வேண்டுழி இரட்டாமல் வரவும் பெறும். (உ-ம்.)
எனை, நினை, நமை, நுமை, தனை, தமை, எ-ம். பிறவுமன்ன. எ-று. (16)
 

69.
	"எட்டனுருபே யெய்துபெயரீற்றின்
றிரிபுகுன்றன் மிகுதலியல்பயற்
றிரிபுமாம்பொருள் படர்க்கையோரைத்
தன்முகமாகத் தானழைப்பதுவே."
 
     (இ-ள்.) எட்டாம் வேற்றுமையிலக்கண மாமாறுணர்த்துதும், எட்டாம்வேற்றுமைக்கு
உருபு:- தன் பெயரீற்றினதுதிரிபும், ஈற்றினது கேடும், மிகுதலும், இயல்பும்,
ஈற்றயலின்றிரியும், ஈறுகெடுதலு, மீற்றயற்றிரிதலும், ஈறுகெட்டீற்ற யறிரிந்தேமிகுதலுமாம்.
இதற்குப்பொருள் அழைப்பது. அழைத்தலும் விளித்தலு மொக்கும். இஃது
விளிவேற்றுமை; விளித்தற் குக்கருவியானவுருபை விளி, எ-து. காரியவாகுபெயர். (உ-ம்.)
நம்பீ - அன்னா, தன்பெயரீற்றினது திரிபு; ஐய - மன்ன, ஈற்றினதுகேடு, ஐயனே -
மன்னனே, மிகுதல்; ஐயன்கூறாய் - நம்பிவாராய், இயல்பு; ஐயான்கேள் - ஊரீர்
வம்மின், ஈற்றியலின்றிரிபு; ஐயா - கண்ணா, ஈறுகெட்டீற்றயற்றிரிதல்; ஐயாவே -
கண்ணவே, ஈறுகெட்டீற்றயற் றிரிந்தீற்றின் மிகுதல்; இவ்வாறெல் லாப்பெயர்க்கு
மேலாமையால் வேறு வேறாகத்தருவோம். அவற்றைத்தத்தமிடத்திற்காண்க. இதனை
வடநூலார் சம்போதனமென்பர். எ-று. (17)
 

70..
	எப்பெயர்க்கண்ணு மியல்புமேயு
மிகரநீட்சியு முருபாமன்னே.
 
     (இ-ள்.) மூவகைப் பெயர்களுக்கும் பொதுவாகிய விளியுருபாமாறுணர்த்துதும்,
உயர்திணைப்பெயருக்கும் அஃறிணைப் பெயர்க்கும் பொதுப்பெயர்க்கும்
விளியுருபாவன:- இயல்பாதலும் ஏகாரமிகுதலும் இகரமீகாரமாதலுமாம். (உ-ம்.)
முனிகூறாய், நம்பிகூறாய், வேந்துகூறாய், ஆடூஉக்கூறாய், விடலைகூறாய், கோக்கூறாய்,
இறைவன்கூறாய், மகள்கூறாய், மாந்தர்கூறீர், குருசில்கூறாய், ஆய்கூறாய், இயல்பாயின.
வேந்தே, வேளே, மாந்தரே, சேயே, ஏகாரமிக்கன. நம்பீகூறாய், தோழீவாராய்,
இகரமீகாரமாயின. இவை
	


54


	உயர்திணைப் பெயரில் வந்தவிளி, புறாவழகியை, தும்பியினியை, வீகொடியை,
வண்டுகொடியை, பூக்கொடியை, சேக்கொடியை, வாடைகொடியை, நோக்கொடியை,
அன்னங்கூறாய், மான்கூறாய், பேய்கொடியை, சூர்கொடியை, வேலிகொடியை,
யாழினியை, தேள்கொடியை, இயல்பாயின. புறாவே, சுறாவே, கிளியே, அளியே,
ஏகாரமிக்கன. கிளீ, தும்பீ, இகரமீகாரமாயின. இவை அஃறிணைப் பெயரில் வந்தவிளி.
பிதாவுரையாய், நம்பிநல்காய், ஆண்கூறாய், தாய்கேளாய், இயல்பாயின. ஆணே,
பெண்ணே, தாயே, பிதாவே, ஏகாரமிக்கன. சாத்தீ, கொற்றீ, இகரமீகாரமாயின. இவை
பொதுப்பெயரில் வந்தவிளி, மன்னேயென்றமிகையால், இவ்வுருபுகள் சிலவற்றிற்குப்
பொருந்தாமையாயினுஞ்கொள்க. எ-று. (18)
 

71.
	"ஐயிறுபொதுப்பெயர்க் காயுமாவு
முருபாமல்லவற் றாயுமாகும்."
 
     (இ-ள்.) ஐகாரவீற்று முப்பெயர்க்கும் விளியுருபா மாறுணர்த்துதும். ஐகாரவீற்றுப்
பொதுப்பெயர்க்கு ஆய், ஆ, உருபாம். உயர்திணை அஃறிணைப் பெயர்க்கு ஆய்,
உருபாம். (உ-ம்.) அன்னை, அன்னாய் - அன்னா, பொதுப்பெயர்க்கு ஆயும் - ஆவும்
வந்தன. விடலை - விடலாய், மடந்தை - மடந்தாய், என உயர்திணைப்பெயர்க்கு ஆய்,
வந்தது. நாரை - நாரையாய், கொன்றை - கொன்றாய், என அஃறிணைப்பெயர்க்கு
ஆய்வந்தது. எ-று. (19)
 

72.
	'ஒருசார்னவ்விற் றுயர்திணைப் பெயர்க்கண்
ணளபீறழிவய னீட்சியதனோ
டீறுபோதலவற் றோடோவுற
லீறந்தோவர லிறுதியவ்வாத
லதனோடயறிரிந் தேயுறலீறழிந்
தயலேயாதலும் விளியுருபாகும்."
 
     (இ-ள்.) னகாரவீற்றுயர்திணைப்பெயர்க்கு விளியுருபாமாறுணர்த்து தும்.
னகாரவீற்று உயர்திணைப் பெயர்க்கு விளி உருபு:- அளபெழல், ஈறழிவு, அயனீளல்,
அயனீண் டீறுகெடுதல், ஈறுகெட்டய னீண்டோகாரமிகல், ஈறழிந்தோகாரமிகல்,
இறுதியவ்வாதல், இறுதியவ்வாயீற்றயலாகார மோகாரமா யேகாரமிகல், ஈறழிந்தயலிலகர
மேகாரமாதல், இவையாகும். (உ-ம்.) கீழான் - கீழா அன், பெருமான் - பெருமா அன்,
அளபெழுந்தன. இறைவன் - இறைவ, நாதன் - நாத, ஈறழிந்தன. ஐயன் - ஐயான்,
நம்பன் - நம்பான், அயனீண்டன. இறைவன் - இறைவா, மன்னன் - மன்னா,
அயனீண்டீறுகெட்டன. ஐயன் - ஐயாவோ, நண்பன் - நண்பாவோ, ஈறுகெட்டய
னீண்டோகாரமிக்கன. திரையன் - திரையவோ, பெருமான் - பெருமாவோ,
ஈறழிந்தோகாரமிக்கன. மலையான் - மலையாய், பூணான் - பூணாய், உண்டான் -
	


55


	உண்டாய், இறுதியவ்வாயின. வாயிலான் - வாயிலோயே, உண்டான் - உண்டோயே,
இறுதியவ்வா யீற்றயலாகார மோகாரமா யேகாரமிக்கன. முருகன் - முருகே, ஐயன் -
ஐயே, அண்ணன் - அண்ணே, ஈறழிந்தய லிகரமேகா ரமாயின. பிறவுமன்ன. எ-று. (20)
 

73.
	"ளஃகானுயர்பெயர்க் களபீறழிவய
னீட்சியிறுதி யவ்வொற்றாத
லயலிலகரமே யாதலும்விளித்தனு."
 
     (இ-ள்.) ளகாரவீற்றுயர்திணைப்பெயர்க்கு விளியுருபா மாறுணர்த்துதும்.
ளகாரவீற்று உணர்திணைப்பெயர்க்கு விளி உருபு:- அளபெழல், ஈறழிதல், ஈற்றயனீளல்,
ளவ்வொற்று யவ்வொற்றாதல், ஈற்றய லகர மேகாரமாதல், இவையாகும். (உ-ம்.) வேள் -
வேஎள், அளபெடுத்தது. கண்ணாள் - கண்ணா, குழலாள் - குழலா, ஈறழிந்தன. நமர்கள்
- நமர்காள், மக்கள் - மக்காள், ஈற்றயனீண்டன. கண்ணாள் - கண்ணாய், குழலாள் -
குழலாய், ளவ்வொற்று யவ்வொற்றாயின. அடிகள் - அடிகேள், மக்கள் - மக்கேள்,
ஈற்றய லகமே காரமாயின. பிறவுமன்ன. எ-று. (21)
 

74..
	"ரவ்வீற்றுயர்பெயர்க் களபெழலீற்றய
லகரம் இ ஈ யாதலாண்டை
ஆ ஈ யாத லதனோடேயுற
லீற்றேமிக்கயல் யாக்கெட்டதனய
னீடலீருற விவையுமீண்டுருபே."
 
     (இ-ள்.) ரவ்வீற்றுயர்திணைப்பெயர்க்கு விளியுருபாமாறுணர்த்துதும்.
ரவ்வீற்றுயர்திணைப்பெயர்க்கு விளி உருபு:- அளபெழல், ஈற்றயலகரமிகர மீகாரமாதல்,
ஈற்றய லாகார மீகாரமாதல், ஈற்றயலாகார மீகாரமா யேகார மிகல், ஈற்றயல்
யாக்கெட்டதனய லிகரமீகாரமா யேகாரமிகல், திரிபொன்றி ஈர்மிகல், இவையாம். (உ-ம்.)
நம்பிமார் - நம்பிமாஅர், ஊரார்-ஊராஅர், அளபெடுத்தன. தெவ்வர் - தெவ்விர் -
தெவ்வீர், வேந்தர் - வேந்திர் - வேந்தீர், அமரர் - அமரிர் - அமரீர், பாகர் - பாகிர்
- பாகீர், ஈற்றய லகர மிகர மீகாரமாயின. ஊரார் - ஊரீர், பார்ப்பார் - பார்ப்பீர்,
ஈற்றய லாகார மீகாரமாயின. ஊரார் - ஊரீரே, முனியார் - முனியீரே, சுவாமியார் -
சுவாமியீரே, ஈற்றயலாகாரமீகாரமா யேகாரமிக்கன. நம்பியார் - நம்பீரே, தோழியார் -
தோழீரே, ஈற்றயல் யாக்கெட்டதனய லிகரமீகாரமா யேகாரமிக்கன. தமர் - தமரீர், எமர்
- எமரீர், பிறர் - பிறரீர், ஈர்மிக்கன. ஈண்டென்றமிகையால் கடலாரே - கடலீரே,
மயிலாரே - மயிலீரே, சாத்தியாரே - சாத்தியீரே, என அஃறிணைப் பெயர்
பொதுப்பெயர்களைச் சிறப்பித்து உயர்திணைப்போல வழங்குதலுங்கொள்க. எ-று. (22)
	


56


	75.
	``லகாரவீற்றுயர்பெயர்க் களபயனீட்சியும்
யகாரவீற்றிற்கள புமாமுருபே.ழுழு
 
     (இ-ள்.) லகார யகார வீற்றுயர் திணைப்பெயர்க்கு விளியுருபாமாறுணர்த்துதும்,
லகாரவீற்றுயர்திணைப்பெயர்க்கு விளி உருபு:- அளபெடை, ஈற்றயனீட்சியாம்.
யகாரவீற்றுயர்திணைப்பெயர்க்குவிளி உருபு:- அளபெடையாம். (உ-ம்.) வலம்புரித்
தடக்கைமாஅல் - அளபு; மடவரல் - மடவரால், தாழ்குழல் - தாழ்குழால், தோன்றல் -
தோன்றால், ஈற்றயனீண்டன. மணிப்பூணாய் - மணிப்பூணாஅய், வேற்கண்ணாய் -
வேற்கண்ணாஅய், தோளாய் - தோளாஅய், அளபெடுத்தன. பிறவுமன்ன. எ-று. (23)
 

76.
	``னவ்வீற்றுயர்திணை யல்லிருபெயர்க்கண்
ணிறுதியழிவத னோடயனீட்சி.ழுழு
 
     (இ-ள்.) னகாரவீற்றுப் பொதுப்பெயர்க்கு மஃறிணைப்பெயர்க்கும் விளியுருபாமா
றுணர்த்துதும். னகாரவீற் றிருபெயர்க்கு விளி உருபு:- ஈறழிதல், ஈறழிந்தய னீளலாம்.
(உ-ம்.) சாத்தன் - சாத்த, கொற்றன் - கொற்ற, ஈறழிந்தன. சாத்தன் - சாத்தா, கொற்றன்
- கொற்றா, ஈறழிந்தயனீண்டன. இவை பொதுப்பெயர். அலவன் - அலவ, கலுழன் -
கலுழ, ஈறழிந்தன. அலவன் - அலவா, கலுழன் - கலுழா, ஈறழிந்தயனீண்டன. இவை
அஃறிணைப்பெயர். எ-று. (24)
 

77.
	``லளவீற்றஃறிணைப் பெயர்ப்பொதுப்பெயர்க்கண்
ணீற்றயனீட்சியு முருபாகும்மே.ழுழு
 
     (இ-ள்.) லகார ளகார வீற்றஃறிணைப் பெயர்க்கும் பொதுப்பெயர்க் கும்
விளியுருபாமா றுணர்த்துதும். லகார ளகார வீற்றிரு பெயர்க்கு விளி உருபு:-
ஈற்றயனீட்சியாம். (உ-ம்.) முயல் - முயால், கிளிகள் - கிளிகாள்,
அஃறிணைப்பெயரயனீண்டன. தூங்கல் - தூங்கால், மக்கள் - மக்காள், பொதுப்
பெயரயனீண்டன. எ-று. (25)
 

78.
	``அண்மையினியல்புமீ றழிவுஞ்சேய்மையி
னளபும்புலம்பி னோவுமாகும்.ழுழு
 
     (இ-ள்.) முன்சொன்ன விளியுருபுகட்குப்புறனடையா மாறுணர்த்து தும்,
சொல்லப்பட்ட பல விளி உருபுகளினுள் இயல்பும் ஈற்றழிவும் கிட்டினாரை அழைப்பதற்
கேற்பன. (உ-ம்.) ஐயன்கேள், இயல்பு. ஐயகேள், ஈறழிவு. அளபெடைமிகவகன்றாரை
அழைப்பதற் கேற்பன. கீழாஅன், நம்பி மாஅர். அளபு ஓகாரம் புலம்பின்
அழைப்பதற்கேற்பன. ஐயாவோ, எ-ம். மற்றவைபொதுப்படவேற்பன. அண்மை - சமீபம்,
சேய்மை - தூரம். - தொல்காப்பியம். - `அண்மைச்சொல்லேயியற்கையவாகும்.ழு எ-று.
	


57


	79.
	பலர்பால்ரவ்வுங் கள்ளுமீறுமே.
 
     (இ-ள்.) பலர்பாலென்ற வுயர்திணைப் பன்மைக்குருபா மாறுணர்த்துதும்.
பலர்பாலென்ற வுயர்திணைப் பன்மைக்கு உருபு:-ர், கள், எனவிரண்டுமாம். (உ-ம்.) தமர்,
நமர், நுமர், எமர், பிறவும். கிளைப்பெயர் பூணினர், முடியினர், வெற்பர், கானவர்,
பார்ப்பார், பிரமர், சத்திரியர், வைசியர், சூத்திரர் பிறவும். ரவ்வீற்றுப்பலர்பால் அடிகள்,
முனிகள், மனுக்கள், கோக்கள், வேள்கள், விடலைகள், மடந்தைகள் பிறவும். கள்ளீற்றுப்
பலர்பால் அவ்வீருருபுகூட்டிப் பலர்கள், அரசர்கள், எ-ம். வரும். பிறவுமன்ன. எ-று.(27)
 

80..
	ஒன்றுதுவ்வுறின் அ ன ஐயும்
பலவின்பாலீறுங் கள்ளீறுமற்றவை
யன்றியுமிருமைக் கஃறிணைப்பொதுவே.
 
     (இ-ள்.) பலவின்பாலென்ற அஃறிணைப் பன்மைக்குருபா மாறுணர்த்துதும்.
ஒருமைக்கண்ணே விகுதியாகவே து, என்னு முருபேற்ற அஃறிணைப் பெயரெல்லாம்
பன்மைக்கண், அ, ன, ஐ, எனவிம்மூன்றுருபுகளைப் பெற்றுமுடியும். (உ-ம்.)
எப்பொருளது என்றதற்கு, எப்பொருள - எப்பொருளன - எப்பொருளவை, எ-ம்.
முதலது என்றதற்கு, முதல - முதலன - முதலவை, எ-ம். அரியது என்றதற்கு அரிய,
அரியன், அரியவை, எ-ம். இவ்வாறேஉள்ள-உள. இல்ல-இல, பல்ல-பல, சில்ல-சில,
எ-ம். இவைபோல்வனபிறவு மஃறிணைப் பன்மையாம். மற்றவஃறிணைப் பெயர்கட்கு.
கள், பன் மைக்கண்ணுருபாம். (உ-ம்.) நிலங்கள், நீர்கள், நரிகள், நாய்கள் பிறவுமன்ன.
ஆயினுமிவ்விரண்டாம் வகைப்பெயரெல்லா முருபுமாறாமலு மொருமைக்கும்
பன்மைக்கும் பொதுவாய் நிற்பனவாம். (உ-ம்.) மரம்வளர்ந்தது - மரம்வளர்ந்தன,
கனியினது - கனியினியன, மாடுவந்தது - மாடுவந்தன, பிறவுமன்ன. - நன்னூல். - 'பால்
பகா வற்றிணைப் பெயர்கள் பாற்பொதுமைய.' எ-து. - மேற்கோள். எ-று. (28)
 

81..
	"ஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையு
மோரிடம் பிறவிடந் தழுவலு முளவே."
 
     (இ-ள்.) பால்வழுவமைதியு மிடவழுவமைதியுமா மாறுணர்த்துதும். ஒருமைப்பாலிற்
பன்மைப்பாலும் பன்மைப்பாலி லொருமைப்பாலும் ஓரி டத்திற் பிறவிடமுந் தழுவிக்
கூறலுளவாம். (உ-ம்.) தீயெரிந்தன, நீரிருந்தன, பாலிருந்தன. என ஒருமைச்சொல்
பன்மைதழுவின. நாடெலாம்வாழ்ந்தது, படையெலாமொய்த்தது, கண்சிவந்தது,
உள்ளியதெல்லா முடன்வந்தடைந்தது, எனப்பன்மைச்சொல் ஒருமைதழுவின. நீயோ
வவனோ யாரிதுசெய்தார். யானோ வவனோ யாரிது செய்தான், என ஓரிடத்துக்குரிய
சொல்லே பிறவிடந்தழுவின. பிறவுமன்ன. எ-. (29)
	


58


	82.
	"எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுணர்ந்தோர்
செப்பின ரப்படி செப்புதன் மரபே."
 
     (இ-ள்.) மரபாமாறுணர்த்துதும். வேற்றுமைவகையினும், பெயர்க்கும் வேற்றுமைக்கு
மிடைநிலையென வருஞ்சாரியை வகையினு, மற்றைத்தமிழ் மொழி நடையினும்,
இலக்கியவழியே வழங்கும் விகற்பங்களி யாவையும் ஒவ்வொன்றாய்ச் சிறப்பித்துரைப்பது
இலக்கணநூல்களி லடங்குந் தன்மையன்றே; ஆகையின் முன்னோர் காட்டின
மாத்திரையாய்ந் துணர்ந்தொப்பநடப்ப தறிவோரியல் பெனக்கொள்க. ஈண்டுப்பெயரிய
லுரைத்தலி னொரு பொருளைக் குறித்த பலசொல்லாகவருஞ் சில திரிசொல்லுரிமையை
விளக்கிக்காட்டலே நன்றென முன்னோர் வழியைப்பற்றிச் சில திரிசொற்
பெயரியல்பினை விளக்குதும். இளைமையைக் காட்டுஞ் சொற்பலவாகியவற்றுள் வரும்.
(உ-ம்.) குழவி, எ-து. மக்கள், யானை, பசு, எருமை, மான், மரை, கரடி, சீயம், வருடை,
மதிக்குமுரித்து. மக, எ-து. மக்கள், முசு, குரங்குகட்கு முரித்து. பிள்ளை, எ-து. மக்கள்,
பூனை, தாண்டுவன, தவழ்வன, பறப்பன, கோட்டில்வாழ்விலங்கு, ஓரறிவுயிர்கட்குமுரித்து.
பார்ப்பு, எ-து. பறவை, தவிழ்வன. கோட்டில்வாழ் விலங்குகட்முரித்து. பறழ், எ-து.
பன்றி, முயல், நீர்நாய், கோட்டில்வாழ்விலங்குகட்முரித்து. குருளை, எ-து. யாளி, புலி,
பன்றி, நாய், மான், முசு, பாம்புகட்குமுரித்து. மறி எ-து. ஆடு, மான், குதிரை,
மேடவிராசிக்குமுரித்து. கன்று, எ-து. பசு, எருமை, ஆமா, மரைமா, கவரிமா, மான்,
ஒட்டகம், யானை, ஒரு சாரோரறிவுகட்கு முரித்து. குட்டி, எ-து. சிங்கம், புலி, கரடி,
யானை, குதிரை, ஒட்டகம், மான், ஆடு, நாய், பன்றி, முயல், நரி, குரங்கு, முசு, கீரி,
நாவி, வெருகு, பாம்பு, அணில், எலிகட்குமுரித்து. பொரி, எ-து. எருமைக்குரித்து.
களபம், எ-து. யானைக்குரித்து. இவையெலாமிளைமைச் சொற்களாகி யிவ்வாறு வருவன
மரபெனப்படும். - தொல்காப்பியம். - "மாற்றருஞ் சிறப்பின் மரபியல்கிளப்பிற்,
பார்ப்பும்பறழுங்குட்டியுங்குருளையுங், கன்றும்பிள்ளையு மகவுமறியுமென்,
றொன்பதுங்குழவியோடிளைமைப்பெயரே." எ-து. மேற்கோள். இவ்வாறன்றி
ஆமைக்குழவி, குதிரைப்பார்ப்பு, அன்னப்பறழ், யானைமறி, பூனைக்கன்று, எலிக்குருளை
முதலியவரின் மரபுவழுவாம். - தொல்காப்பியம். - "மரபுநிலைதிரிதல்செய்யுட்கில்லை,
மரபுவழிப்பட்ட சொல்லினான." எ-து. மேற்கோள். அன்றியு முறுப்புவகைக்குள்
பலசொல்லுள்ளும் வரும். (உ-ம்.) கை, எ-து. மக்கள், யானை, புலி, கரடி,
கோட்டில்வாழ்விலங்குகட்கு முரித்து. விரல், எ-து. மக்கள், கரடி, நாய்,
கோட்டில்வாழ்விலங்கு கட்குமுரித்து. நுதல், எ-து. மக்கள், யானை,
ஒருசார்புவிலங்கிற்குமுரித்து. முலை, எ-து. மக்கள், ஆ, எருமை, ஆடு,
நாய்கட்குமுரித்து. விலங்கிற்குட் டிக்குரிய வொருசாரானவற்றிற்கு முரித்து. கூந்தல், எ-து.
பெண்டீர், பிடி, குதிரை, பனை, கமுகுகட்முரித்து. கண், எ-து. கட்பொறியுளவுயிர்
	


59


	கட்கன்றி, கமுகு, கரும்பு, மூங்கில், பீலித்தோகை, கருவி, தேங்காய்கட்கு முரித்து. ஏடு, -
எது. பனை, பூவிதழ்கட்குமுரித்து. தோடு, எ-து. பனை, தெங்கு, தாழை,
பூவிதழ்கட்குமுரித்து. இதழ், எ-து. கண்ணிமை, உதடு, பூவிதழ், பனைகட்குமுரித்து.
ஓலை, எ-து. பனை, தெங்கு, தாழைகட்குமுரித்து. ஈர்க்கு, எ-து, தெங்கு, பனை,
மாவென்பவற்றிற்குமுரித்து. மடல், எ-து. பனை, தெங்கு, கமுகு, மூங்கில், வாழை,
தாழை, ஈந்திற்குமுரித்து, பாளை, எ-து. தெங்கு கமுகுகட்குமுரித்து. குரும்பை, எ-து.
தெங்கு, பனைகட்கு முரித்து. குலை, எ-து. தெங்கு, கமுகு, வாழை, ஈந்து, பனை,
காந்தட்குமுரித்து குலை, எ-து. கமுகு, வாழை, ஈந்திற்குமுரித்து. சுளை, எ-து, பலா,
பருத்தி, பாகற்பழங்கட்குமுரித்து. வீழ், எ-து. ஆல், இறலி, தாழை, சீந் தில்கட்குமுரித்து.
நுகும்பு, எ-து. பனை, வாழை, மரல், புல்லென்பனவற் றிற்குமுரித்து. இலை, எ-து.
தெங்கு, ஈந்து, பனைகட்குமுரித்து. அடை, எ-து. தாமரை, ஆம்பல்,
நெய்தற்றொடக்கத்துக்கு முயிர்நிலையோ ரறிவு கட்குந் தாம்பூலத்திற்கு முரித்து.
பொகுட்டு, எ-து. தாமரைக்கும், கோங்கிற்குமுரித்து. குரல், எ-து. பெண்டீர்மயிர், மிடறு,
தினை, வரகு, பூளை, நொச்சி, புதவம்புற்கட்குமுரித்து. நெல், எ-து. சாலி
முதலியவற்றிற்கும், மூங்கிற்கும், ஐவனத்திற்குமுரித்து. இவையெலா முறுப்புச் சொற்களாகி
இவ்வாறு வருவது மரபெனப்படும். இவ்வாறன்றி, (உ-ம்.) எருமைக்கை, குதிரைநுதல்,
கமுகோலை, பலாக்குலை, மாந்தாறு, வாழைச்சுளை, புல்லிலை முதலியவரின்
மரபுவழுவாம். இவ்வாறே முன்னோர்காட்டிய வழியைப்பற்றியதற்கதற்குரிய சொல்லுதல்
மரபெனப்படும். (அன்றியுமிதற்குப் பொருளதிகாரத்திற் சொல்லுரிமை விளக்கிய
வழியைக்காண்க.) எ-று. (30)

முதலாவது: - வேற்றுமையியன் - முற்றிற்று.
 

இரண்டாவது:-பகுபதப்பெயரியல்.
Chapter II. - Divisible Words.

83.
	பகுபத மொன்றாய்ப் பலவொருங் குணர்த்திற்
பகாப்பத மவற்றுட் பகுதி யென்ப.
 
     (இ-ள்.) பகுபதப்பகுதிகளாமாறுணர்த்துதும். ஒருமொழியாகநின்றே
ஒருப்படப்பொருளை யுணர்த்தும் பகுபதங்கட்கு, பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை,
சந்தி, விகாரம், இவ்வாறுறுப்புளவாம். பகுக்கப்பட்டுப் பகாப்பதமாய் முதனிற்பது பகுதி,
இடைநிற்பது இடைநிலை, கடைநிற்பது விகுதியாம். (உ-ம்.) கூனி, எ-து. கூன், இ,
எனப்பகுதி விகுதியான் முடிந்தது. உண்டான், எ-து. உண்-ட்.ஆன், என வவ்விரண்டுட
னிடைநிலைபெற்று முடிந்தது. உண்டனன்,
	


60


	எ-து. உண்-ட்-அன்-அன், என வம்மூன்றுடன் சாரியைபெற்றுமுடிந்தது. பிடித்தனன்,
எ-து. பிடி-த்-த்-அன்-அன், என வந்நான்குடன் சந்திபெற்று முடிந்தது. நடந்தனன்,
எ-து. நட-த்-த்-அன்-அன், என வவ்வைந்தும் பெற்றுச் சந்தியால் வந்த தகர
வல்லொற்றுமெல் லொற்றாதலாகிய விகாரமும் பெற்றுமுடிந்தது. பொருளாதி யறுவகைப்
பகாப் பதங்களே பகுபதங்கட்குப் பகுதிகளாம். அவை:-பொன், மணி முதலிய
பொருள்களும்; குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என வைந்திணைகளும்;
தேசம், ஊர், வான், அகம், புறமுதலியவிடங்களும்; பருவம், மாதம், வருடம்,
நாண்முதலிய காலங்களும்; கண், கால், கை, தலை, காது, கொம்பு, தளிர், பூ, காய்,
கனிமுதலிய வுறுப்புகளும்; அளவு, அறிவு, ஒப்பு, வடிவு, நிறம், கதி, சாதி, குடி, சிறப்பு
முதலிய குணங்களும்; ஓதல், ஈதல், ஆடல், பாடல் முதலிய தொழில்களும் பிறவுமாம்.
இப்பகுதிக ணால்வகையாம். பொன், பொருப்பு, தை, கண், கருமை, கூத்து, இவ்வாறும்
பெயர்ப் பகுதிகளாம். (உ-ம்.) பொன்னன், பொருப்பன், தையான், கண்ணன், கரியன்,
கூத்தன், எ-ம். வரும். நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ்,
உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு, இவை
வினைப்பகுதிகளாம். (உ-ம்.) நடந்தான், வந்தான், மடிந்தான், சீத்தான், விட்டான்,
கூவினான், வெந்தான், வைத்தான், நொந்தான், போயினான், வௌவினான், உரிஞினான்,
உண்டான், பொருநினான், திருமினான், தின்றான், தேய்த்தான், பார்த்தான், சென்றான்,
வவ்வினான், வாழ்ந்தான், கேட்டான், அஃகினான், எ-ம். வரும். போல், நிகர், இவை
இடைப்பகுதிகளாம். (உ-ம்.) பொன்போன்றான், புலிநிகர்த்தான், எ-ம். வரும். சால்,
மாண், இவை உரிப்பகுதிகளாம். (உ-ம்.) சான்றான், மாண்டான், எ-ம். வரும். செம்மை,
சிறுமை, இவை பண்புப் பெயராகிய விகாரப் பகுதிகளாம். (உ-ம்.) செந்தாமரை,
சிறியிலை, எ-ம். வரும், புகு, பெறு, விடு, இவைகாலங்காட்டும் விகாரப்பகுதிகளாம்.
(உ-ம்.) புக்கான், பெற்றான், விட்டான், எ-ம். வரும். கேள், கொள், செல், தா, சா, வா,
கல், சொல், இவையும் விகாப்பகுதிகளாம். (உ-ம்.) கேட்டான், கொண்டான், சென்றான்,
தந்தான், செத்தான், வந்தான், கற்றான், சொன்னான், எ-ம். வரும். உழு, தொழு, உண்,
தின், இவை இயல்புப் பகுதிகளாம். (உ-ம்.) உழுதான், தொழுதான், உண்டான், தின்றான்,
எ-ம். வரும். வடநூலார், பகுதியை தாது என்பர். எ-று. (1)
 

84.
	அன்ஆன் அள்ஆள் அர்ஆர் துஐ
அபிற வுமைம்பாற் பெயர்ப்பகு பதவி குதியே.
 
     (இ-ள்.) பகுபதவி குதிகளாமாறுணர்த்துதும். அன், ஆன், இரண்டும் ஆண்பால்
விகுதி. (உ-ம்.) மலையன், மலையான், எ-ம். அள், ஆள், இரண்டும் பெண்பால் விகுதி.
	


61


	(உ-ம்.) மலையள், மலையாள், எ-ம். அர், ஆர், இரண்டும் பலர்பால் விகுதி. (உ-ம்.)
மலையார், மலையார், எ-ம். இவை உயர்திணை. து, ஒன்றன்பால் விகுதி. (உ-ம்.)
மலையது, எ-ம். ஐ, அ, இரண்டும் பலவின்பால் விகுதி. (உ-ம்.) மலையவை, மலையவ,
எ-ம். இவை அஃறிணை. பிறவுமென்றமிகையால் பெருமாள், முன்னோன், வில்லி, வாளி,
தட்டாத்தி, வண்ணாத்தி, வலைச்சி, எ-ம். வரும். - தொல்காப்பியம். - "அன் ஆன்
அள் ஆள் என்னுநான்கு, மொருவர்மருங்கிற் படர்க்கைச்சொல்லே. அர் ஆர்
பவ்வெனவரூஉ மூன்றும், பல்லோர் மருங்கிற்படர்க்கைச் சொல்லே. அ ஆ வ
எனவரூஉ மிறுதி, யப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. ஒன்றன் படர்க்கை
தடறவூர்ந்த, குன்றியலுகரத்திறுதியாகும்." இவைமேற்கோள். வடநூலார் விகுதியை
பிரத்தியயம் என்பர். எ-று. (2)
 

85.
	ந ஞ விடைப் பகுபத நண்ணலு நெறியே.
 
     (இ-ள்.) காலங்காட்டா விடைநிலைகளாமாறுணர்த்துதும், பெயர்ப்
பகாப்பதமும் வினைப்பகாப்பதமும்பகுதியாகநிறுத்தி நச்சாரியையும் ஞச்சாரியையு
மிடைநிலை யாகவைத்து அவ்வப்பாலுக்குரிய விகுதியை ஈற்றின் கண்ணே தந்தது
பகுபதமாகும். (உ-ம்.) கிளை, இளை, கடை, நடை, எனப் பெயர்ப்பகுதியும்; அறி, துணி,
குறை, மொழி, என வினைப்பகுதியு நிறுத்தி ந், ஞ், என இடைநிலையும் அர், என
இறுதி நிலையுங்கூட்டி கிளைநர், இளைநர், கடைநர், நடைநர், எ-ம். கிளைஞர்,
இளைஞர், கடைஞர், நடைஞர், எ-ம். அறிநர், துணிநர், குறைநர், மொழிநர், எ-ம்.
அறிஞர், துணிஞர், குறைஞர், மொழிஞர், எ-ம். புணர்ந்து வருதல் காண்க. நண்ணலு
நெறியே யென்ற மிகையால் வலைச்சி, வண்ணாத்தி, இவற்றுள் சகரமெய்யுந் தகர
மெய்யும் இடைநிலையாயின. பிறவுமன்ன. எ-று. (3)
 

86.
	வடநடைப் பகுபதம் வரமொழி முதற்கண்
இ ஏ யென ஐ ஒளவும் உ ஓ வென ஒளவும்
அவ்வென ஆவுமாம் ஐயிறி னீறுபோய்
எயனீட் டீன்ற வெச்சமா முளபிற.
 
     (இ-ள்.) வடநடைப்பகுபதங்களாமாறுணர்த்துதும். மேற்கூறியபகுபத மெல்லாஞ்
செந்தமிழ் நடையனவாம். பகுதியாக நிற்கும் பகாப்பத முதற்கண் உயிராயினும்
உயிர்மெய்யாயினும்வரின் நிலைமொழி, இ, எ, எனவிரண்டும் ஐயாகத்திரிந்து
பகுப்பதங்களாகும். (உ-ம்.) இந்திரனிருக்குங்குண திசை - ஐந்திரி, எ-ம். கிரியிலுள்ளன
- கைரிகம், எ-ம். சிலையாலாயமலை - சைலம், எ-ம். மிதுலையுட் பிறந்தாள் - மைதுலி,
எ-ம். நியாயநூலுணர்ந்தோன், - நையாயிகன், எ-ம். வியாகரணமுணர்ந்தோன் -
வையாகரணன், எ-ம். வரும். ஒரோவிடத்து இ ஒளவாகத்திரியும். (உ-ம்.)
கிரியிற்பிறந்தாள்.
	


62


	கௌரி, எ-ம். வரும். ஏ ஐயாகத்திரியும். (உ-ம்.) வேதவழிநின்றொழுகுவார் - வைதிகர்,
எ-ம். வரும். அன்றியும் ஊவும், ஓவும், ஒளவாகத் திரியும். (உ-ம்). சூரனென்னுஞ்
சூரியன்மகனாஞ்சனி - சௌரி, எ-ம். கோசலையிடத்துப் பிறந்தாள் - கௌசலை, எ-ம்.
சோமன் என்னுஞ் சந்திரன்மகனாம் புதன் - சௌமன், எம். வரும். ஐயாகத்திரிவன
வெல்லாம் அயி, எ-ம். ஒளவாகத் திரிவன வெல்லாம்அவு, எ-ம், முடியும். (உ-ம்.)
கயிரிகம், சயிலம், சயிவன், எ-ம். கவுரி, சவுரி, கவுரவர், எ-ம். வரும். அ,
ஆவாகத்திரியும். (உ-ம்.) அதிதியின் மக்கள் - ஆதித்தியர், எ-ம். தசரதன்மகனிராமன் -
தாசரதி, எ-ம். சனகன்மகளாஞ்சீதை - சானகி, எ-ம். தனுவின்மக்களிராக்கதர் - தானவர்,
எ-ம். சகரன்மக்கடோண்டினகடல் - சாகரம், எ-ம். வரும். ஐயீற்றுப் பகாப்பதங்களில்
ஐயொழித்து விகுதியாக ஏயன், என்று முடிந்தால் ஈன்றமகனென்று காட்டும்
பகுபதங்களாம். (உ-ம்.) கார்த்திகையின் மகன் - கார்த்திகேயன், தாரையின்மகன் -
தாரேயன், கங்கையின் மகன் - காங்கேயன், விநதையின்மகன் - வைநதேயன், எ-ம்.
வரும். பிறவென்ற மிகையால் வேத முரைப்பான் - வேதியன், எ-ம். பங்கத்துள்ளும்
அம்புள்ளும் ஆகியதாமரை - பங்கயம், அம்புயம், எ-ம். சிபியின்மகன் - செம்பியன்,
எ-ம். சல்சலன் - சலாசலன், எ-ம். சர்சரன் - சராசரன், எ-ம். பத்பதன் - பதாபதன்,
எ-ம். இத்தொடக்கத்தன பலவழியானும் வடமொழிப் பகுபதங்கண் முடியும். அன்றியும்
பிர, பரா, அப, சம், அநு, அவ, நிர். துர், வி, ஆ, நி, அதி, அபி, சு, உற், பிரதி, பரி,
உப, என இப்பதினெட்டும் வடமொழிகளுக்கு முதலடுத்து வெவ்வேறு பொருளி
விளக்கிவரும் உபசர்க்கங்களாகும். (உ-ம்.) பிரயோகம், பராபவம், அபகீர்த்தி, சங்கதி,
அநுபவம், அவமானம், நிர்க்குணம், துர்க்குணம், விகாரம், ஆகாரம், நிவாசம்,
அதிமதுரம், அபிவிருத்தி, சுதினம், உற்பாதம், பிரதிகூலம், பரிபாகம், உபயோகம், எ-ம்.
வரும்.
எ-று. (4)
 

87.
	எதிர்மறைப் பகுபதத் தியைந்த மொழிமுதல்
லொற்றெனி லவ்வு முயிரெனி லன்னு
மிருமைக் காநிரு வெனவட நடையே.
 
     (இ-ள்.) எதிர்மறைப் பகுபதங்களாமாறுணர்த்துதும். எதிர்மறைப் பகுபத
மொழிமுதற்கண் ஒற்றுளவாயின் அவ்வும், உயிருளவாயின் அன்னும், இருவகை
மொழிக்கு நிருவும், புணர்ந்து பொருளின்மையும் பிறிதும் எதிர்மறையுங் காட்டும்
வடநடைப் பகுபதங்களாம். (உ-ம்.) சயமிலான் - அச்சயன், நீதியின்மை - அநீதி,
மலவின்மை - அமலம், சீரணமின்மை - அசீரணம், சரவின்மை - அசரம், தருமமின்மை
- அதருமம், எ-ம். பிறவுமன்ன. அகமெனும் பாவமில்லான் - அனகன், அங்கமில்லான்
- அனங்கன், ஆதியின்மை - அனாதி, ஆசாரவின்மை - அனாசாரம், எ-ம்.
பிறவுமனன். மலவின்மை நிருமலம், நாமமில்லான் - நிருநாமன், 
	


63


	ஆயுதமில்லான் - நிராயுதன், உவமையில்லான் - நிருவுவமன், எ-ம். பிறவுமன்ன.
மூ வழியும் பகுபதப்பெயர் வடைநடையால் வந்தவாறு காண்க. வடநூலார் பகுபதத்தை
தத்திதம் என்பர். எ-று. (5)
இரண்டாவது:-பகுபதப்பெயரியல்.-முற்றிற்று.
 

மூன்றாவது:-தொகைநிலைத்தொடர்மொழிப்
பெயரியல்.
Chapter III. - Noun Phrases.
 

88.
	தொகைநிலை யென்ப தொடரும் பெயரொடு
வினைபெயர் புணர்புளி வேற்றுமை முதலொழித்
தொருமொழி போற்பல வொன்றிய நெறியே.
 
     (இ-ள்.) மேலே கூறிய விருவகைத் தொடர்மொழிகளினுட் டொகா நிலைவிட்டுத்
தொகைநிலையாகத் தொடர்ந்து வருமொழிக் கீண்டுச் சிலவி தியாமாறுணர்த்துதும்.
பெயருடனே பெயரும், பெயருடனே வினையும், புணருமிடத்து வேற்றுமை முதலிய
வுருபுகள் தோன்றாதொழிய நிற்ப இரண்டு சொற்பல சொற்றொடர்ந்த தன்மையால் ஒரு
பெயர்ச் சொற் போலவும் ஒரு வினைச்சொற்போலவும் வழங்குவன தொகைநிலைத்
தொடர்மொழிகளாம். இவற்றுள் வினைச்சொல் விட்டுத் தொகைநிலையாகத்
தொடர்ந்துவரும் பெயர்ச்சொற்களாவன:-பொருள், இடம், காலம், சினை, குணம்,
தொழில், என்றிவ்வறுவகைப்பெயர் தொக்குநிற்பனவாம். (உ-ம்.) பூண்மார்பன்,
மலையருவி, மாரிநாட்பயிர், கைம்மா, கருங்குவளை, கொடைக்கோமான், என முறையே
பொருளாதி யறுவகைப்பெயர் தொக்குநின்று தொகைநிலைத் தொடர்மொழி
வந்தவாறுகாண்க. இவற்றைவிரிக்க, பூணையணிந்தமார்பன்,
மலையினின்றுவீழ்கின்றவருவி, மாரிநாளிலுள்ளபயிர், கையையுடையமா,
கருமையையுடையகுவளை, கொடையையியற்றுகின்ற கோமான், எ-ம். வரும். எ-று. (1)
 

89.
	தொகைநிலை வகைப்படின் றொகும்வேற் றுமைவினை
யுவமை பண்பும் மையோ டன்மொழி யாறே.
 
     (இ-ள்.) தொகைநிலைத் தொடர்மொழிகளா மாறுணர்த்துதும். வேற்றுமை
யுருபுதொக்குநிற்பது வேற்றுமைத்தொகையும், காலத்தைக் காட்டாமல் வினையிற் பிறந்த
பெயரெச்சந் தொக்குநிற்பது வினைத்தொகையும், உவமையுருபு தொக்கு நிற்பது
உவமைத்தொகையும், குணப்பெயர் தொக்கு நிற்பது பண்புத்தொகையும்,
உம்மைதொக்குநிற்பது உம்மைத்தொகையும்,
	


64


	சொன்ன ஐவகைத் தொகையிலொன்று வந்ததனிறுதி மற்றொரு பெயரேயாயினும்
பகுபதவிகுதியாயினுந் தொக்குநிற்பது அன்மொழித் தொகையும், எனத்தொகை
நிலைமொழி அறுவகைப்படும். (உ-ம்.) நிலங்கடந்தான், பொற்குடம், வேற்றுமைத்தொகை.
பொருகளம், வாழ்குடி, வினைத்தொகை, நறுமலர், ஆனித்திங்கள் குணத்தொகை.
பொன்மேனி, மலர்க்கை உவமைத்தொகை. இவனவன், ஆறுநான்கு, உம்மைத்தொகை.
தாழ்குழல், பூங்குழல், அன்மொழித்தொகை. சொன்னதொகையெலாம்விரிக்குங்கால்,
நிலத்தைக்கடந்தான், பொன்னாலாயகுடம், எ-ம். பொருதகளம், பொருகின்றகளம் -
பொருங்களம், எ-ம். வாழ்ந்தகுடி - வாழ்கின்றகுடி - வாழுங்குடி, எ-ம். நறவாகியமலர் -
ஆனியாகியதிங்கள், எ-ம். பொன்போலு மேனி - மலர்போலுங்கை, எ-ம். இவனுமவனும்,
ஆறும்நாலும், எ-ம். பூவையணிந்த குழலாள், எ-ம். வரும். அன்றியும் பூங்குழல்,
பொற்றடி கவியிலக்கணம், பொற்றாலி, கிள்ளிகுடி, கீழ்வயிற்றுக்கழலை,
முறையேஐம்முதலாறு வேற்றுமைத் தொகைநிலைக்களத்துப் பிறந்த
வன்மொழித்தொகைகள். தாழ்குழல், வினைத்தொகை நிலைகளத்துப் பிறந்த
வன்மொழித்தொகை. கருங்குழல், பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த
வன்மொழித்தொகை. துடியிடை, உவமைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த
வன்மொழித்தொகை துடியிடை, உவமைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த
வன்மொழித்தொகை, உயிர்மெய், உம்மைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த
வன்மொழித்தொகை. தகரஞாழன்முலை, பன்மொழித்தொடர். பூங்குழல் என்புழி,
பூவையணிந்த குழலென வேற்றுமைத் தொகையாய் அக்குழலையுடையாளை
யுணர்த்துங்கா லன்மொழித் தொகையாம். பிறவுமன்ன. - தொல்காப்பியம். - "அவற்றுள்
வேற்றுமைத்தொகையே வேற்றுமையியல உவமைத் தொகையே வுவமையியல. -
வினையின்றொகுதிகாலத்தியலும். - வண்ணத்தின் வடிவினளவிற் சுவையினென்,
றன்னபிறவு மதன்குணநுதலி, யின்னதிதுவெனவரூஉமியற்கை, யென்ன கிளவியும்
பண்பின் றொகையே. - இருபெயர் பலபெய ரளவின்பெயரே, யெண்ணியிற்பெயரே
நிறைப்பெயர்க்கிளவி, யெண்ணின்பெயரோ டவ்வறுகிளவியுங், கண்ணிய நிலைத்தே
யும்மைத்தொகையே. - பண்புத்தொகை வரூஉங்கிளவியானு,
மும்மைதொக்கப்பெயர்வரினானும், வேற்றுமைதொக்கப் பெயர்வரினானு, மீற்றுநின்றிய
லுமன்மொழித்தொகையே." இவைமேற்கோள். எ-று. (2)
 

90.
	தொகைநிலை விரித்துச் சொல்லுங் காலெழு
வகைநிலை யளவும் வகுக்கப் படுமே.
 
     (இ-ள்.) தொகைநிலைத் தொடர்மொழிகளுருபுத்தொக்கு நிற்கையாற்
சிலபொருள்களான் மயங்குமாறுணர்த்துதும். சிலதொகை மொழிகளொரு தொடராக
நிற்பினும் இரண்டு முதலாக வேழீறாகப் பலவகை விரிவுகொள் ளுமென்றுணர்க. (உ-ம்.)
அலர்முல்லை என்பதில், அலர்ந்தமுல்லை - அலரை விரித்தமுல்லை, என இருபொருள்
விரிந்தன. ஒலிவளை என்பதில்,
	


65


	ஒலிக்கும்வளை - ஒலியையுடையவளை - ஒலிக்கும்வளையையுடையாள், என
முப்பொருள்விரிந்தன. சொல்லிலக்கணம் என்பதில், சொல்லு மிலக்கணம் -
சொற்கிலக்கணம் - சொல்லின்கணிலக்கணம் - சொல்லிலக்கணத்தைச் சொன்ன நூல்,
என நாற்பொருள் விரிந்தன. பொன்மணி என்பதில், பொன்னாலாகி யமணி,
பொன்னாகியமணி, பொன்னின்கண்மணி, பொன்னொடுசேர்ந்தமணி, பொன்னுமணியும்,
என ஐம்பொருள் விரிந்தன. கரும்புவேலி என்பதில், கரும்பைக் காக்கின்றவேலி,
கரும்புக்குவேலி, கரும்பினதுவேலி, கரும்பின் புறத்துவேலி, கரும்பாலாகியவேலி,
கரும்பாகியவேலி, என அறு பொருள்விரிந்தன. சொற்பொருள் என்பதில்,
சொல்லாலறியப் படுகிறபொருள் - சொல்லினதுபொருள் - சொல்லுக்குப்பொருள் -
சொல்லின்கட்பொருள் - சொல்லும்பொருளும் - சொல்லாகியபொருள் -
சொல்லானதுபொருள், என ஏழு பொருள் விரிந்தன. அளவுமென்றவும்மையால்
ஏழெல்லை கடந்துவருதல். அன்றியும் சொல்லணி, எ-து. வினைத்தொகையாய்ச்
சொல்லுகின்றவணி, எ-ம். வேற்றுமைத்தொகையாய்ச் சொல்லால்வழங்குமணி, எ-ம்.
பண்புத்தொகையாய்ச் சொல்லாகியமணி, எ-ம். உம்மைத்தொகையாய்ச் சொல்லுமணியும்,
எ-ம். அன்மொழி தொகையாய்ச் சொல்லணியைத் தந்த நூல், எ-ம். ஒருமொழி
ஐந்தொகையாக விரிந்துவருதலுங்கொ ள்க. - நன்னூல். - 'தொக்குழி மயங்
குநவிரண்டுமுதலே, ழெல்லைப் பொருளின் மயங்கு மென்ப.' எ-து. மேற்கோள்.
எ-று. (3)
 

91.
	தொகுபெயர் வேற்றுமைத் தொடர்பெய ரன்ன
வியற்றிரி பழிவாக்க மியைந் தாந்தொகையே.
 
     (இ-ள்.) கூறியதொகை நிலைகளுக்குப் புறனடையாமாறுணர்த்துதும்.
ஐம்முதலாறுருபுதொக்குநிற்பத் தொடர்ந்துவருமொழிகள் இயல்பும், திரிபும், குறைதலும்,
மிகுதலுமாகவரும். (உ-ம்.) மணிகொடுத்தான், இயல்பு; கற்கடாவினான், திரிபு;
திண்கொண்டதோள், குறைதல்; பலாக்குறைத்தான், மிகுதல்;
இவ்விரண்டனுருபுத்தொகையில், இயல்புந் திரிபுமழிவு மாக்கமும் வந்தனபோல மற்றைத்
தொகையில் வருதலுமறிக. அன்றியும், ஐயீற்றுப் பெயர்க்கண் இயல்பும் அகரமிகுதலும்
தொகைக்காம். (உ-ம்.) சிந்தாமணி. - "சுனைய நீலமுஞ் சுள்ளியுஞ் சூழ்மலர்,
நனையநாகமுங் கோங்க முநாறின, சினையசெண்பக வேங்கையோ டொற்றுபு, முனைவன்
மேற்றுதி முற்றெடுத்தோதினாள்." எ-ம். வரும். உம்மைத்தொகையாய் ஒருமைப் பெயர்
பலகூடிப் பன்மையாய் முடியும். (உ-ம்.) சேரசோழபாண்டியர், எ-ம்.
இரவிமீன்மதிகளையியைந்து பூண்டனள், எ-ம். வரும். - நன்னூல். - "உயர்திணை
யும்மைத்தொகை பலரீறே." எ-து. மேற்கோள். எ-று. (4)
 

92.
	ஐயிறுங் குணப்பெய ரஃகியீ றொழித
லீறுபோ யுகர மிடையிலி யாத
	


66


	லாதிநீ டலடிய கரமை யாத
றன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரித
லினமிக லினையவும் பண்பிற் கியல்பே.
 
     (இ-ள்.) குணப் பெயர்த் தொகைக்குச் சிறப்புவிதியா மாறுணர்த்து தும். -
நன்னூலில். - "செம்மை சிறுமை சேய்மை தீமை, வெம்மை புதுமை மென்மை மேன்மை,
திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதி, ரின்னவும் பண்பிற் பகாநிலைப்பதமே."
என்றார். இவற்றுள் ஈறுகெடுதலும், ஈறுகெட்டிடை யுகர மிகர மாதலும், ஆதிநீடலும்,
அடி யகர மைகாரமாதலும், தன்மெய் யிரட்டலும், முன்னின்ற மெய்திரிதலும்,
இனமிகுதலும், இவை போல்வன பிறவும் பண்பிற் கியல்பாகும். (உ-ம்.) நல்லன்,
நன்மையின் மையீறு கெட்டது. கரியன், கருமையின் மை யீறுகெட்டிடை நின்ற வுகரமிகர
மாயிற்று; பாரிலை, பசுமையின் மை யீறுகெட்டாதி நீண்டது; பைங்கிளி, பசுமையின் மை
யீறு மிடைநின்ற வுயிர் மெய்யுங் கெட்டு வருமெழுத்திற் கின மிகுந்தடி யகர
மைகாரமாயிற்று; வெற்றிலை, வெறுமையின் மை யீறு கெட்டுத் தன் னொற்றிரட்டியது;
சேதாம்பல், செம்மையின் மை யீறு கெட்டாதி நீண்டு முன்னின்ற மகரமெய்
தகரமெய்யாகத் திரிந்தது; இனையவு மென்றமிகையால், அரியபொருள், பெரியமலை,
கரியமுகம், புதியமணம், குறள்வெண்பா, எ-ம். வரும். எ-று. (5)
 

93.
	"அடைசினை முதன்முறை யடைதலு மீரடை
முதலோ டாதலும் வழக்கிய லீரடை
சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே."
 
     (இ-ள்.) மரபுவழுவாமற் காத்தலு மரபு வழுவமைதியுமாமாறுணர்த்து தும்.
குணத்தொகை மொழியெலாம் அடைமொழி யெனப்படும். இவை வழக்கிடத்தில் ஒன்றும்
இரண்டும் முதற்பொருளோடு வந்தடுக்கவும், ஒன்றே சினைப்பொருளோடு வந்தடுக்கவும்
பெறும். (உ-ம்.) சிறுகருங்காக்கை, இளைம்பசுங்கிளி என முதற்பொருளோடு,
ஈரடையடுத்துவந்தன. செங்கானாரை, நெட்டிலைத்தெங்கு, எனச்சினைப்பொருளோடு,
ஓரடை யடுத்து வந்தன. செய்யுளிடத்தோ வெனில் சினைப்பொருளோடும் ஈரடையடுத்து
வரப்பெறும். (உ-ம்.) சிறுபைந்தூவி, கருநெடுங்கண், எ-ம். வரும். அன்றியும்,
அடையொடு பலசினைப் பொருடம் முட்கலந்து செய்யுளிடத்து வரவும் பெறும். (உ-ம்.)
நைடதம். - "குவிமுலைகயவாய்ச் செங்கட் குடம் புரைசெருத்தன் மேதி." எ-ம். வரும்.
அடைமொழியை வடநூலார் அவ்வியயம் என்பர். எ-று. (6)
 

94.
	ஓரொரு வீரிரு மும் மூ நாலை யைம்
மாறறு வேழெழு வெண்ணென வியிருட
வியைமுறைக் காகு மெண்ணின் றொகையே.
	


67


	(இ-ள்.) எண்ணின்பெயரே தம்மொடுதாமும் பிறவும்வரவே தொக்கு
நிற்குமாறுணர்த்துதும், ஒன்றும், இரண்டும், உயிர்வரின் ஒர், ஈர், எனவாம். மெய்வரின்
ஒரு, இரு, எனவாம். (உ-ம்.) ஒன்று-ஆயிரம், ஓராயிரம். இரண்டு-ஆயிரம், ஈராயிரம்,
எ-ம். ஒன்று-பொருள், ஒருபொருள், இரண்டு - கலம், இருகலம், எ-ம். வரும். மூன்று,
எ-து. உயிரும் - வவ்வும்வரின், மூவெனவும், மற்றைமெய்வரி னம்மெய்யிரட்டித்தும்
வரும். (உ-ம்.) மூன்று - ஒன்று, மூவொன்று, எ-ம். மூன்று-வழி, மூவழி, எ-ம்.
முக்கோடி, முச்சாண், முத்தமிழ், முப்பது, முந்நூறு, மும்மொழி, எ-ம். வரும். நான்கு,
எ-து. உயிர்வரின், நாலெனவுமாம். (உ-ம்.) நான்கு - ஆயிரம், நாலாயிரம், எ-ம்.
நாற்கழஞ்சு, நாற்சதுரம், நாற்றலை, நாற்படை, நானூறு, நான்மணி, எ-ம். வரும். ஐந்து,
எ-து. உயிரும் - யவ்வும்வரின் ஐயெனவும், மற்றை மெய்வரினம்மெய்யிரட்டித்தும்
வரும். (உ-ம்.) ஐந்து-ஆயிரம், ஐயாயிரம், எ-ம். ஐந்து-யானை, ஐயானை, எ-ம். வரும்.
ஐங்கலம், ஐஞ்சந்தி, ஐந்தலை, ஐந்நூறு, ஐம்பது, ஐம்மூன்று, ஐவண்ணம், எ-ம். வரும்.
ஆறும்-ஏழும், உயிர்வரின், இயல்பாகும். மெய்வரின் முதல் குறுகும். (உ-ம்.) ஆறு -
ஆயிரம், ஆறாயிரம் ஏழு-ஆயிரம், ஏழாயிரம், எ-ம். ஆறு - கழஞ்சு, அறுகழஞ்சு,
ஏழு-கடல், எழுகடல், எ-ம். வரும், எட்டு, எ-து. உயிரும் மெய்யும்வரின் எண்ணாகும்.
(உ-ம்.) எட்டு-ஆயிரம், எண்ணாயிரம். எட்டு, பத்து, எண்பது, எ-ம். எண்கலம்,
எண்சாண், எண்டிசை, எண்ணூறு, எண்மணங்கு, எ-ம். வரும். - நன்னூல். -
"ஒன்றன்புள்ளிரகாரமாக, விரண்டனொற்றுயிரேகவுவ் வருமே." - தொல்காப்பியம். -
"மூன்றனொற்றே வந்ததொக்கும். - நான்கனொற்றே லகாரமாகும். - நான்கனொற்றே
றகாரமாகும். - ஐந்தனொற்றே முந்தையது கெடுமே. - ஆறன்மருங்கிற் குற்றியலுகர
மீறுமெய்யொழியக் கெடுதல் வேண்டும். - எட்டனொற்றே ணகாரமாகும். - மூன்றுமாறு
நெடு முதல் குறுகும்." இவைமேற்கோள். எ-று. (7)
 

95.
	"ஒன்றுமு தலீரைந் தாயிரங் கோடி
யெண்ணிறை யளவும் பிறவரிற் பத்தி
னீற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்று
மேற்ப தேற்கு மொன்பது மினைத்தே."
 
     (இ-ள்.) பத்து மொன்பது மெனவீரெண்ணின் றொகையா மாறு ணர்த்துதும்,
பத்தென்னு நிலைமொழிமுன்னே ஒன்றுமுதற்பத்து மாயிர முங்கோடியுமாகிய
எண்பெயரும், நிறைப் பெயரும், அளவுப் பெயரும், பிறபெயரும், புணர்ந்தாற்
பத்தனீற்றுயிர்மெய் கெட்டு இன்னும் இற்று மேறிமுடியும். ஒன்பது மிவ்வாறேயாம்.
(உ-ம்.) பத்து-ஒன்று பதினொன்று, பத்து-ஒன்று, பதிற்றொன்று, பதினாயிரம்,
பதிற்றுக்கோடி, பதின்றுலாம், பதிற்றுக்கலன், எ-ம். ஒன்பதினாயிரம், ஒன்பதிற்றுக்கோடி,
ஒன்பதின்றுலாம், ஒன்பதிற்றுத்தூணி,
	


68


	எ-ம். வரும். பத்துமுன் னிரண்டுவ ரின் - பன்னிரண்டாம். ஒன்பதும் - பத்தும்வரின்
இன்சாரியை பெறா. (உ-ம்.) பதிற்றொன்பது, பதிற்றுப்பத்து, எ-ம். வரும்.
தொல்காப்பியம். - "ஒன்றன் முதலா வெட்டீறாக, வெல்லாவெண்ணும் பத்தன்முன்வரிற்,
குற்றியலுக ரமெய்யொடுங் கெடுமே. - முற்றவின்வரூஉ மிரண்டலங் கடையே பத்த
னொற்றுக்கெட னகரமிரட்ட, லொத்தென்ப விரண்டுவருங்காலை.-ஆயிரம் வரினு
மாயியறிரியாது. - நிறையுமளவும் வரூஉங்காலையுங், குறையாதாகு மின்னென்சாரியை. -
ஒன்பானிறுதி யுருபுநிலைதிரியா, தின்பெறல்வேண்டுஞ் சாரியைமரபே."
இவைமேற்கோள். எ-று. (8)
 

96.
	ஒன்று முதலெட் டளவூர்ந் தபத்தொற்
றொழிதலு மாய்த முறழ்தலு மாம்பல
வொன்றுட னானா மொன்பது மிற்றே.
 
     (இ-ள்.) ஒன்றுமுதலா வெட்டீறாக வருமெண்ணின் கீழ்ப்பத்துத் தொடர்ந்து
புணருமா றுணர்த்துதும். ஒன்றுமுதலெட் டெண்களின்முன்னே தொடர்ந்து வரும்
பத்தனொற்றாகிய தகரங்கெட்டுப் பதுவாதலும் அவ்வொற்றிடமாய் தம்வந்து.
பஃதுவாதலும் பகரமொன்றே நின்று மற்றவைபோய் ஆன்சாரியை பெற்றுமுடிதலுமாம்.
(உ-ம்.) ஒன்று - பத்து, ஒருபது, இரண்டு - பத்து, இருபது, மூன்று - பத்து, முப்பது,
எ-ம். ஒருபஃது, இருபஃது, முப்பஃது, எ-ம். ஒருபான், இருபான், முப்பான், எ-ம். வரும்.
பிறவுமன்ன. அன்றியுமிம்மூன்றாந் திரிபொன்பதென்னு மெண்ணிற்குமாகி
யொன்பானெனவும் படுமெனக் கொள்க. தொல்காப்பியம். - "ஒன்றுமுத லொன்
பானிறுதி முன்னர், நின்றபத்தனொற்றுக் கெடவாய்தம், வந்திடைநிலையு
மியற்கைத்தென்ப, கூறியவியற்கை குற்றியலுகர, மாறனிறுதி யல்வழியான." எ-து.
மேற்கோள். எ-று. (9)
 

97.
	'ஒன்ப தொழித்தவெண் ணொன்பது மிரட்டின்'
முன்னது குறுகிமற் றோட 'வுயிர்வரின்
வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி.'
 
     (இ-ள்.) மற்றொருவகை யெண்ணின்றொகையா மாறுணர்த்துதும். ஒன்பதென்னு
மெண்ணொன்றொழிந்த ஒன்றுமுதற் பத்தெண்களுந் தம் மொடுதாம் புணருமிடத்து
நிலைமொழி முதனெடிலெனின் முதல்குறுகி மற்றவைகெட்டும் வருமொழி முதலுயிரெனில்
வகரமிரட்டி மெய்யெனில் வருமெய்யிரட்டியும் புணரும். (உ-ம்.) ஒன்று-ஒன்று,
ஒவ்வொன்று, இரண்டு - இரண்டு, இவ்விரண்டு, மூன்று - மூன்று, மும்மூன்று, நான்கு -
நான்கு, நந்நான்கு, ஐந்து-ஐந்து, ஐவ்வைந்து, ஆறு-ஆறு, அவ்வாறு, ஏழு - ஏழு
எவ்வேழு, எட்டு - எட்டு, எவ்வெட்டு, பத்து - பத்து, பப்பத்து, எ-ம்.
	


69


	வரும். ஒரோவொன்று இதனுள் வகரமிரட்டா. - தொல்காப்பியம். - "ஒன்று முதலாகிய
பத்தூர்கிளவி, யொன்றுமுதலொன் பாற்கொற்றிடைமிகுமே நின்றவாய்தங்
கெடுதல்வேண்டும்." எ-து. மேற்கோள். எ-று. (10)
 

98.
	அளவின் றொகையா யளவொடு தொக்கியை
கலங்கலனாகி யேயு மிகுமே
யுரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட
மருவும் டகர முரியின் வழியே
யகர வுயிர்மெய்யா மேற்பன வரினே.
 
     (இ-ள்.) அளவின் பெயர்த்தொகையா மாறுணர்த்துதும். கலமென் பது
மற்றோரளவின் பெயரோடு புணர்புழி ஈற்றுமகரம், னகரமாகத் திரிந்தபின்
ஏகாரச்சாரியை பெறும். (உ-ம்.) கலம்-குறுணி, கலனேகுறுணி, முக்கலம்-தூணி,
முக்கலனே தூணி, நாற்கலம் - இருதூணி, நாற்கலனேயிருதூணி, எ-ம். வரும்.
அன்றியும், நாழியின்கீழ் உரிவரின் ழி கெட்டு டவ்வாகி, நாழி-உரி, நாடுரி. எ-ம். வரும்.
அன்றியும் உரியின்கீழ் அதனால ளக்கப்பட்ட பொருட்பெயர்வரி
னுயிர்முதனில்லாதாயின் யகரச்சாரியை பெற்று வல்லினமிகவு மற்றீரினமியல்பாதலுமாம்.
(உ-ம்.) உரி-கொள்ளு, உரியக்கொள்ளு, உரி-சாமை, உரியச்சாமை, வல்லினமிக்கன.
உரிய மிளகு, உரியவரகு, மற்றீரினமிகாதியல்பாயின. உரியரிசி, உரியெண்ணெய்,
உயிர்வந்து சாரியைபெறாதும். உரியவுப்பு, உயிர்வந்து சாரியைபெற்றுவழங்கும். -
தொல்காப்பியம். - "உரிவருகாலை நாழிக்கிளவி, யிறுதியிகர மெய் யொடுங்கெடுமே,
டகாரவொற்றுமாவயினான்." எ-று. (11)
 

99.
	"திசையொடு திசையும் பிறவுஞ் சேரி
னிலையீற் றுயிர்மெய் கவ்வொடு நீங்கலும்
றஃகா னலவாய்த் திரிதலு மாம்பிற."
 

     (இ-ள்.) திசைத்தொகையா மாறுணர்த்துதும், திசைப் பெயர்த்தம்
மூன்றாமேவரினும் பிறிதோர் பெயரொடு புணரினு முதனிலைப்பெயரீற்றி னின்ற கு,
நீங்கியதன்மேற் கவ்வொற்றுளதே லதுவு மொழிந்து வருமின மிகாமற் புணருமெனக்
கண்டுணர்க. (உ-ம்.) வடக்கு-கிழக்கு, வடகிழக்கு, வடக்கு-மேற்கு, வடமேற்கு,
குணக்கு-கடல், குணகடல், குணக்கு-திசை, குணதிசை, எ-ம். வரும். குவ்வின்மேல்
றகரம்வரின் னவ்வும் லவ்வுமாகத் திரியும். (உ-ம்.) தெற்கு-மலை, தென்மலை, தெற்கு-திசை, தென்றிசை, மேற்கு-வடக்கு, மேல்வடக்கு, மேற்கு-கடல், மேல்கடல் எ-ம். வரும்.
ககரமுதல்வரின் திரியும். பிறவென்றமிகையால் கிழக்கு-வடக்கு, கீழ் வடக்கு, கீழ்த்திசை,
கீழ்த்துறை, கீழ்ச்சேரி, எ-ம். வரும். (இஃது நன்னூலில், கீழின்முன் வன்மை
விகற்பமுமாக மென்னஞ் சூத்திரவிதி).
	


70


	தொல்காப்பியம். - "இருதிச புணரினேயிடவருமே, திரிபுவேறு கிளப்பினொற்
றுமிறுதியுங், கெடுதல்வேண்டு மென்மனார்புலவ, ரொற்றுமெய் திரிந் னகாரமாகுந்,
தெற்கொடு புணருங்காலயான." எ-. மேற்கோள். இவ்வியலுட்கூறிய தொக யெலாம்
பலவகப் படும். (உ-ம்.) நிலங்கடந்தான் - உ-ம், வேற்றுமத்தொக; தலவணங்கினான் -
3-ம், வேற்றுமத்தொக; சாத்தன்மந்தன் - 4-ம், வேற்றுமத்தொக; ஊர்நீங்கினான் - 5-ம்,
வேற்றுமத்தொக; சாத்தன்க - 6-ம், வேற்றுமத்தொக; குன்றக்கூக - எ-ம், வேற்றுமத்
தொக; முன்விடுங்கண - இறந்தகால வினத்தொக; இப்போ விடுகண - நிகழ்கால
வினத்தொக; பின் விடுங்கண - எதிர்காலவினத்தொக; கருங்குவள - வண்ணப் பண்புத்
தொக; சர்ப்பலக - வடிவுப்பண்புத்தொக; நாற்குணம் - அளவுப் பண்புத்தொக;
இன்சொல் - சுவப் பண்புத்தொக; ஆதிபகவன் - இரு பெயரொட்டுப் பண்புத்தொக;
செந்நிறக்குவள - பன்மொழித்தொடர்; குருவிகூப்பிட்டான் - வினயுவமத் தொக;
கற்பகவள்ளல் - கொடயுவமத்தொக; குரும்பமுல - மெய்யுவமத்தொக; பவளவாய் -
உருபுவமத்தொக; மரகதக்கிளிமொழி - பன்மொழித் தொடர்; ஒன்றேகால் -
எண்ணலும்மத்தொக; தொடியேகஃசு - எடுத்தலும்மத்தொக; கலனே தூணி -
முகத்தலும்மத்தொக; சாண்முழம் - நீட்டலும்மத் தொக; சேர சோழ பாண்டியர் -
பன்மொழித்தொடர்; தாழ்குழல் - வினத்தொகயில்வந்த வன்மொழித் தொக; கருங்குழல்
- குணத்தொகயில்வந்த வன்மொழித்தொக; கொடியிட - உவமத்தொகயில் வந்த
வன்மொழித்தொக; உயிர்மெய் - உம்மத்தொகயில்வந்த வன்மொழித்தொக. பிறவுமன்ன.
எ-று. (12)

மூன்றாவ. - தொகநிலத் தொடர்மொழிப் பெயரியன். - முற்றிற்று.
 

நான்காவ:-சுட்டுவினா.
Chapter IV. - Demonstratives and Interrogatives.

100.
	அ இ உம்முதல வம்பாற் சுட்டே
யொன்றன் பாலவ யாய்த மிடயெனவும்
பலவின் பாலவ வவ்வீற் றனவுமா
மிவகீழ் மூவின மியபுளி முறயே
யாய்த மெலியியல் பாகுமென்ப.
 
     (இ-ள்.) சுட்டுப்பெயர்களா மாறுணர்த்ம். மொழிமுதற்கண் அ, இ, உ, என
மூன்றயுங் கொள்வன சுட்டுப்பெயர்களாம். (உ-ம். அவன், இவன், உவன்; அவள், இவள்,
உவள்; அவர், இவர் உவர்; என்பன உயர்திணமுப்பால். அ, இ, உ, அவ, இவ, உவ;
என்பனவஃறிணையிருபால் மொழியகத்துவந்தன.
	


71


	அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன், மொழிப்புறத்து வந்தன. அன்றியும்,
ஒன்றன்பாற் சுட்டுச் சொல்லிடையே வாய்தம்வரவும் பெறும். (உ-ம்.) அஃது, இஃது,
உஃது, எ-ம். வரும். பலவின்பாற் சுட்டுச்சொல் வகரவொற்றொடு முடியவும்பெறும்.
(உ-ம்.) அவ், இவ், உவ், எ-ம். வரும். - சிந்தாமணி. - "வெவ்வினை
செய்யுமாந்தருயிரென நிலத்தில்வித்தி, யவ்வினை விளைவுளுண்ணு மவ்விட த்தாவதுன்ப,
மிவ்வெனக்கிளர்த்து மென்று நினைப்பினும் பிணிக்கு முள்ளஞ், செவ்விதின் சிறிதுகூறக்
கேண்மதிச் செல்வவேந்தே." என்பதில், இவை என்பதற்கு, இவ் வென வந்தவாறு
காண்க. அங்ஙனம் வகரவொற்றீற்ற சுட்டுவந்தவற்றின் கீழிடையினம்வரின் வகரந்திரியா
தியல்பாய்நிற்ப தன்றியே வல்லினம்வரி னாய்தமாகவும் மெல்லினம்வரி
னொத்தமெல்லின மாகவும் வகரந்திரிந்து கெடும். (உ-ம்.) அவை - வலிய, சிறிய, நீடிய,
என்பதற்கு அவ்வலிய அஃசிறிய, அந்நீடிய, எ-ம். வரும். தொல்காப்பியம். - "அவ்வழி
அவனிவனுவ வென வரூஉம் பெயரு, மவ ளிவ ளுவ ளென வரூஉம் பெயரும், யாவன்
யாவள் யாவரென்னு, மாவயின்மூன்றோ டப்பதினைந்தும், பாலறிவந்த வுயர்திணைப்
பெயரே. அது, இது, உது வென வரூஉம் பெயரு, மவைமுதலாகிய வாய்தப் பெயரு,
மவை, யிவை, யுவை, யென வரூஉம் பெயரு, மவைமுதலாகிய வகரப்பெயரும், யாது,
யா, யாவை, யென்னும்பெயரு, மாவயின்மூன்றோ டப்பதினைந்தும்,
பாலறிவந்தவஃறிணைப்பெயரே." இவை மேற்கோள். எ-று. (1)
 

101.
	தொடர் அ இ உச் சுட்டெழுத் தென்ப
வவைவந் தணைய வனைத்துமெய் யிரட்டு
முயிர்வரி னிருவவ் விடைவரலு ரித்தா
மெகர வினாவு மிந்நடை யுடைத்தே.
 
     (இ-ள்.) சுட்டெழுத்துக்களுஞ் சுட்டெழுத்துக் கட்புணர்ச்சியு மா மாறுணர்த்துதும்.
அ, இ, உ, என விம்மூன்றுஞ் சுட்டெழுத்துக்களாம். இவை பெயரொடு புணருங்கால்
வருமொழிமுதலொற்றாயி னவ்வொற்றி ரட்டலும் வருமொழிமுதலுயிராயி னிரண்டு வகரம்
புணர்தலுமாம். இங்ஙனம் வினாவெழுத்தாகிய வெகரமும் புணரப்படும். (உ-ம்.) அ-படை,
அப்படை, அ-நிலம், அந்நிலம், அ-வழி, அவ்வழி, அ-அணி, அவ்வணி, எ-ம்.
இப்படை, இந்நிலம், இவ்வழி, இவ்வணி. எ-ம். உப்படை, உந்நிலம், உவ்வழி, உவ்வணி,
எ-ம். எப்படை, எந்நிலம், எவ்வழி, எவ்வணி, எ-ம். வரும். சுட்டுநீளின் யகரவுடம்படு
மெய்யாம். (உ-ம்.) ஆ-இடை, ஆயிடை, ஈ-இடை, ஈயிடை, எ-ம். வரும். அ-யானை,
அவ்யானை, என வருதலுமறிக. - நன்னூல். - "எகரவினாமுச்சுட்டின் முன்ன, ருயிரும்
யகரமு மெய்தின் வவ்வும்,
	


72


	பிறவரி னவையுந் தூக்கிற் சுட்டு, நீளின் யகரமுந் தோன்றுத னெறியே." -
தொல்காப்பியம். - 'அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு.' இவை மேற்கோள்.
எ-று. (2)
 

102.
	"எயா முதலும் ஆ ஓ வீற்றும்
ஏயிரு வழியும் வினாவா கும்மே
யெவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால்."
 
(இ-ள். வினாவெழுத்தும் வினாப்பெயரு மாமாறுணர்த்துதும். எகரமும், யாவு
மொழிக்குமுதலினும், ஆகாரமும் - ஓகாரமுமொழிக்கீற்றினும், ஏகாரமொழிக்கு முதலினு
மீற்றினும் வினாவாகிவரும். (உ-ம்.) எவன், எவள், எவர், யாவன், யாவள், யாவர், இவை
உயர்திணை முப்பால். எது - எவை, யாது-யாவை, இவை யஃறிணை யிருபால். எகரமும்
யாவு மொழியகத்துவந்தன. எக்கொற்றன், யாங்ஙன, மொழிப்புறத்து வந்தன. நீயா, நீயோ,
ஆகாரமும் ஓகாரமு மொழியீற்றிற் புறத்துவந்தன. எவன் - கொற்றனே,
எகாரமுதலிலகத்து மீற்றிற் புறத்து வந்தது. அன்றியும், எகரமும், யாவு, மேற்கூறிய
சுட்டெழுத்தைப்போல பிறபெய ரொடுபுணர்ந்து வினாவாம். (உ-ம்.) எ - குதிரை,
எக்குதிரை, யா - செய்தி, யாச்செய்தி, எ-ம். வரும். யா, எ-து. வினாவெழுத் தாவதன்றி
வினாச்சொல்லாகி வினையொடு புணரப்பட் டஃறிணை யிருபாலுக் கேற்பன. (உ-ம்.)
குறள். - "யாகாவாராயினு நாகாக்ககாவாக்காற், சோகாப்பர் சொல் லிழுக்கப்பட்டு." எ-ம்.
வரும். அன்றியும், எவன் என்னும் வினாச்சொல்லஃறிணையிரு பாலிடத்து
வினைக்குறிப்பாக வேற்கும். (உ-ம்.) எவனது, எவனவை, எ-ம். அன்றியும் வினைக்குறிப்
பாகாமையும் ஏது, எனு மஃறிணை வினாவிற்கு எவன், என்பதுமாம். குறள். -
"சிறைகாக்குங் காப்பெவன் செய்யுமகளீர் நிறைகாக்குங் காப்பேதலை." இப்பயன்
கொண்டவனென்னும் வினாவென் னெனவுமாம். குறள். - "ஒலித்தக்கா லென்னா முவரி
யெலிப்பகை, நாகமு யிர்ப்பக்கெடும், என வருதலுமறிக. - தொல்காப்பியம். - "ஆ ஏ ஓ
அம் மூன்றும் வினா," எ-து. மேற்கோள். எ-று. (3)

நான்காவது:- சுட்டுவினா. - முற்றிற்று.

இரண்டாமோத்துப்பெயர். - முற்றிற்று.
 

மூன்றாமோத்துவினைச்சொல்லியல்.
Part III. - Verbs.
 

103.
	வினைமுற் றொருமூன் றெச்ச மிரண்டு
வினைக்குறிப் பெனவிவை வினையின் வகுப்பே.
	


73


	(இ-ள்.) மேலேவகுத்துக்கூறிய நால்வகைச் சொற்களுளிவ்வோத்தின் கண்ணே
வினைச்சொல் லியல்பினைவிளக்குதும். வினையெனப்படுவன: - இனிவரு மிறப்பெதிர்வு
நிகழ்வென முக்காலமுற்று வினையும், ஏவன் முற்; றுவினையும், வியங்கோண்
முற்றுவினையும், என வினைமுற்று மூன்றும் பெயரெச்சம், வினையெச்சமென
வினையிலெஞ்சிய மொழிக ளிரண்டும்; வினைச்சொல்லல்லவாயினும் வினையைப்போல
நடந்து குறிப்பினால்வினை யியன்றொழிலைக் காட்டும் வினைக்குறிப் பொன்றும்;
இவ்வோத்தினுள் விளங்கும். இவ்வினையே தெரிநிலைவினை குறிப்புவினை
எனப்பொதுவகை யாலிருவகைப் பட்டுஞ் சிறப்புவகையா லறுவகைப்பட்டுஞ் சிறப்பே
வேறு வேறு வகைப்பட்டுவரும். (உ-ம்.) உண்டுவந்தான் - தெரிநிலை வினைமுற்று,
உண்டுவந்த - தெரிநிலைவினைப்பெயரெச்சம், உண்டுவந்து - தெரிநிலைவினை
வினையெச்சம், உண்டுவந்தவன் - தெரிநிலை வினையாலணையும் பெயர், உண்டு
வருதல் தெரிநிலை வினைத்தொழிற்பெயர், முடிந்தான் - செய்பொருள் குறைவினை,
பணமுடிந்தான்-செய்பொருள் குறையாவினை, நடந்தான் - தன்வினை, நடப்பித்தான் -
பிறவினை, தின்றான் - செய்வினை, தின்னப்பட்டான் - செயப்பாட்டுவினை, நடந்தான் -
விதிவினை, நடந்திலன் - மறைவினை, நோவான் - பொதுவினை, இவை
தெரிநிலைவினை குழையினன் - குறிப்புவினைமுற்று, நெடிய - குறிப்பு வினைப்பெய
ரெச்சம், அன்றி - குறிப்புவினை வினையெச்சம், நல்லனாயினான் - ஆக்கவினைக்
குறிப்பு, நல்லன் - இயற்கை வினைக்குறிப்பு, இவை குறிப்புவினை. மற்றவை தத்தஞ்
சூத்திரத்திற்காண்க. தொல்காப்பியம். - "வினை யெனப்படுவது வேற்றுமை கொள்ளாது,
நினையுங்காலைக் காலமொடுதோன்றும்." எ-து. மேற்கோள். வடநூலார் வினையை -
கிரியாபதம், என்பர். எ-று. (1)
 

104.
	பெயரே யேற்றிமற் றொன்றனை வேண்டா
தேற்பது வினைவினைக் குறிப்பு முற்றே.
 
     (இ-ள்.) வினைமுற்றும் வினைக்குறிப்புமுற்றுமா மாறுணர்த்துதும்.
பொருளிடங்காலஞ் சினைகுணந்தொழி லென்னு மறுவகைப் பெயரையும் பயனிலையாகக்
கொண்டு மற்றொன்றை வேண்டாது முடிவன தெரி நிலைவினைமுற்றுங்
குறிப்புவினைமுற்றுமாம். (உ-ம்.) செய்யாதவன், குளிர்ந்தது நிலம், வந்தது கார்,
குவிந்ததுகை, பரந்தது பசப்பு, ஒழிந்தது பிறப்பு, இவை தெரிநிலைவினைமுற்று.
நல்லனவன், நல்லதுநிலம், நல்லதுகார், நல்லதுகை, நல்லதுபசப்பு, நல்லதுபிறப்பு,
இவைகுறிப்புவினைமுற்று. நன்னூல். - "செய்பவன்கருவிநிலஞ் செயல்காலஞ்,
செய்பொருளாறுந்த ருவது வினையே. - பொதுவியல்பாறையுந் தோற்றிப் பொருட்பெயர்,
முதலறுபெயரல தேற்பில முற்றே" இவைமேற்கோள். எ-று. (2)
	


74


	முதலாவது:-முக்காலமுற்றுவினை.
Chapter I. - Tenses.

105.
	பொழுது கொள்வினை வினைப்பகு பதமே
பகுதி யேவ லெனும்பகாப் பதமாகும்
என்ஏன் எம்ஏம் ஓம்அம் ஆம்தன்மை
ஐஆய்இ இர்ஈர் முன்னிலை அன்ஆன்
அள்ஆள் அர்ஆர் உஅ படர்க்கை
வினையின் விகுதி மீண்டுள பிறவுங்
கள்ளெனப் பலவொழி பன்மையின் மிகலுமாம்.
 
     (இ-ள்.) முக்கால வினைப்பகுதியும் விகுதியு மாமாறுணர்த்துதும். முக்கால
முற்றுவினைச் சொல்லெல்லாம் பகுபதமாம். அவற்றுண் முதனிற்கும் நட, வா, முதலிய
வேவல் வினைப்பகாப்பதங்களே முதனிலைகளாம். முதனிலை மூவகைப்படும். (உ-ம்.)
வருதல் - வளர்தல், என்பதில் வரு-வளர், தன்வினை முதனிலை. அடித்தல் - அடுதல்,
என்பதில் அடி - அடு, பிறவினை முதனிலை. வெளுத்தான், என்பதில் வெளு - பொது
வினைமுதனிலை பிறவுமன்ன. என், ஏன், விகுதி தன்மையொருமை. (உ-ம்.) வந்ததனென்
- வந்தேன், யான், எ-ம். எம், ஏம், ஒம், அம், ஆம், விகுதி தன்மைப்பன்மை. (உ-ம்.)
வந்தனெம் - வந்தேம் - வந்தோம் - வந்தனம் - வந்தாம், யாம், எ-ம். ஐ, ஆய், இ,
விகுதி முன்னிலை யொருமை. (உ-ம்.) வந்தனை - வந்தாய், வந்தி-நீ, எ-ம். இர், ஈர்,
விகுதி முன்னிலைப் பன்மை. (உ-ம்) உண்டனிர் - உண்டீர், நீர், எ-ம். அன், ஆன்,
விகுதி யாண்பாற்ப டர்க்கை யொருமை. (உ-ம்.) வந்தனன் - வந்தான், அவன், எ-ம்.
அள், ஆள், விகுதி பெண்பாற்படர்க்கை யொருமை. (உ-ம்.) வந்தனள் - வந்தாள்,
அவள், எ-ம். அர், ஆர், விகுதி பலர்பாற் படர்க்கை. (உ-ம்,) வந்தனர் - வந்தார்,
அவர், எ-ம். உ, விகுதி யொன்றன்பாற் படர்க்கை. (உ-ம்.) வந்தது, அது, எ-ம். அ,
விகுதிபலவின்பாற் படர்க்கை. (உ-ம்.) வந்தன, அவை, எ-ம். வரும். இவைமுக்கால
முற்றுவினைக்குப் பொது விகுதிகளாம். பலவின்பா லொழித்தொழிந்த பன்மை விகுதிகட்
கெல்லா மீற்றின்கண்ணே கள், என்னும் விகுதிகூட்டி வரவும் பெறும். (உ-ம்.)
வந்தனர்கள், வந்தார்கள், எனவரும். பிறவென்ற மிகையால் கொண்மார், நடப்ப, எ-ம்.
வரும். - தொல்காப்பியம். - "க ட த ற வென்னுமந் நான் கூர்ந்த குன்றிய, லுகரமோ
டென்னே னல்லன் வரூஉமேழுந், தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே." -
நன்னூல். - "ஐயா யிகர வீற்றமூன்று, மேவலின் வரூஉ மெல்லா வீற்றவு, முப்பா
லொருமை முன்னிலை மொழியே. - இர் ஈரீற்ற விரண்டு மிருதிணைப் பன்மை
முன்னிலை மின்னவற்றேவல்." இவை மேற்கோள். எ-று. (1)
	


75


	106.
	"அம்ஆம் என்பன முன்னிலை யாரையும்
எம்ஏம் ஓம்இவை படர்க்கை யாரையும்
உம்மூர் கடதற விருபா லாரையுந்
தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை."
 
     (இ-ள்.) சிலவிகுதி விகற்பங்களாமாறுணர்த்துதும். முக்காலத்துத் தன்மைப்
பன்மைக்குரிய விகுதிகளில் அம், ஆம், விகுதி தன்மையு முன்னிலையுங்
காட்டுவனவாம். (உ-ம்.) நடந்தனம் - நடக்கின்றனம் - நடப்பம் - நடந்தாம்-
நடக்கின்றாம் - நடப்பாம், யானுநீயும், என வரும். எம், ஏம், ஓம், விகுதி தன்மையும்
படர்க்கையுங் காட்டுவனவாம். (உ-ம்.) நடந்தனெம் - நடக்கின்றனெம் - நடப்பெம் -
உண்டேம் - உண்கின்றேம் - உண்பேம் - நடந்தோம் - நடக்கின்றோம் - நடப்போம்,
யானுமவனும், என வரும். கும், டும், தும், றும், விகுதிதன்மையு முன்னிலையும்
படர்க்கையுங் காட்டுவனவாம். (உ-ம்.) உண்கும் - உண்டும் - வருதும் - சேறும்,
யானுநீயு மவனும், என வரும். - தொல்காப்பியம். - "அவைதாம், அம் ஆம் எம் ஏம்
என்னுங் கிளவியும், உம்மொடு வரூஉங் க ட த ற வென்னு, மந்நாற் கிளவியோடா
யெண் கிளவியும், பன்மை யுரைக்குந் தன்மைச்சொல்லே." எ-து. மேற்கோள். எ-று. (2)
 

107.
	செய்யுமென் முற்றே சேரும் பலரொழி
மற்றைப் படர்க்கையு மற்றத னீற்றய
லுயிரு முயிர்மெய்யு மொழிந்தே யஃகலும்
பலவின்பாற் கள்ளெனப் பற்றி மிகலுமாம்.
 
     (இ-ள்.) செய்யுமென்னெச்சம்போல வதனாலாகிய செய்யுமென்னு முற்றுவினை
சிலபாலிடங்கட்குச் செல்லாமை யுணர்த்துதும். செய்யும், உண்ணும், நடக்கும், உவக்கும்,
என்னு நிகழ்கால வெதிர்கால முற்றுவினை உயர்திணைப் பன்மைப்படர்க்கை யன்றி
மற்றை நாற்படர்க்கை யிடத்தும் வருமெனக் கொள்க. (உ-ம்.) அவனுண்ணும்,
அவளுண்ணும், அதுவுண்ணும், அவையுண்ணும், எனவரும். இஃதன்றிப்
பலர்பாலிடத்தும், தன்மையிடத்தும், முன்னிலை யிடத்தும், அவை முற்றுவினையாக
வாரா. சொன்னவினை முற்றிடத்திலீற்று மகரநிற்ப ஈற்றயலு யிரொன்றாயினு
முயிர்மெய்யாயினுங் கெட்டுக் குறுகி வருவனவுள. (உ-ம்.) போலும் - போன்ம், மருளும்
- மருண்ம், கலுழும் - கலுழ்ம், எனவீற்றயலுயிர் கெட்டன. மொழியும் - மொழிம்,
ஆகும் - ஆம், எனவீற்றய லுயிர் மெய்கெட்டன. - வெண்பா - "வண்கொடை
மாரியுமன்னாதயை நிழலின், வெண்குடையும் வெஃகிப் புகழ்முலகங் - கண்கொள்,
புகைப்படப்போர் வெல்லுன்புகழ் நாமவெள்வேல், பகைப்படப் போரஞ்சிப்பணிம்."
இருவழியுமுயிரு முயிர்மெய்யுங் குறைந்தன.
	


76


	அன்றியும் பலவின்பாலிடத்துக் கள்ளெனக் கூட்டலுமாகும். (உ-ம்.) அவையுண்ணுங்கள்,
இடுங்கள், என வரும். - சிந்தாமணி. - ``அல்லித்தாளற்றபோது
மறாதநூலதனைப்போலத், தொல்லைத் தம்முடம்பு நீங்கத் தீவினைதொடர்ந்து நீங்காப்,
புல்லிக்கொண்டு யிரைச் சூழ்ந்து புக்குழிபுக்கு பின்னின், றெல்லையிறுன்ப
வெந்தீச்சுட்டெ ரித்திடுங்களன்றே.ழுழு என வரும். - தொல்காப்பியம். -
``பல்லோர்படர்க்கை முன்னிலைதன்மை, யவ்வயின் மூன்று நிகழுங்காலத்துச்
செய்யுமென்னுங் கிளவியொடுகொள்ளா.ழுழு எ-து. மேற்கோள். எ-று. (3)
 

108.
	இறந்த காலத் திடைநிலை தட றவொற்
றின்னே மூவிடத் தைம்பாற் கேற்பன.
 
     (இ-ள்.) இறந்தகாலத் திடைநிலைகளா மாறுணர்த்துதும். த், ட், ற், என மூன்று
மெய்யும் இன், னும் இறந்தகால வினையிடைநிலைகளாம். (உ-ம்.) நடந்தான், நடந்தாள்,
நடந்தார், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தேம், நடந்தாய், நடந்தீர், எ-ம்.
உண்டான், எ-ம். சென்றான், எ-ம். உறங்கினான், எ-ம். வரும். என்மனார்,
என்றிசினோர், போனது, என வருதலு மறிக. எ-று. (4)
 

109.
	நிகழ்பொழு தாநின்று கின்று கிறுவென
வைம்பான் மூவிடத் தாமிடை நிலையே.
 
     (இ-ள்.) நிகழ்காலத்திடை நிலைகளாமாறுணர்த்துதும், ஆநின்று, கின்று, கிறு,
எனமூன்றும் நிகழ்கால வினையிடைநிலைகளாம். (உ-ம்.) நடவா நின்றான்,
நடவாநின்றாள், நடவாநின்றார், நடவாநின்றது, நடவாநின்றன, எ-ம், நடக்கின்றேன்,
எ-ம். நடக்கிறாய், எ-ம். வரும். உண்ணா கிடந்தான், உண்ணாவிருந்தான், என
வருதலுமறிக. எ-று. (5)
 

110.
	எதிர்வருங் காலத் திடைநிலைப் பவ்வ
வைம்பான் மூவிடத் தாமிவை சிலவில.
 
     (இ-ள்.) எதிர்காலத்திடைநிலைகளா மாறுணர்த்துதும். ப், வ், என
இரண்டுமெய்யும் எதிர்கால வினையிடை நிலைகளாம். (உ-ம்.) நடப்பான், நடப்பாள்,
நடப்பார், நடப்பது, நடப்பன, எ-ம். வருவேன், வருவான், எ-ம். வரும். சிலவிலவென்ற
மிகையால் சிலவினைமொழிகளிடை நிலையின்றிவரவும் பெறுமெனக்கொள்க.
இவற்றையினிக் காட்டுதும். எ-று. (6)
 

111.
	எதிர்கால விகுதியு ளொருமைத் தன்மை
குடுதுறு வென்னுங் குற்றிய லுகரமோ
டல்லன் னென்னே னாமெண் ணீறே
பலர்பாற் காகும் பமார் மருமனார்.
	


77


	(இ-ள்.) மேற்கூறிய முக்கால வினைக்குப் பொது விகுதியாமாறு ணர்த்துதும், கு,
டு, து, று, அல், அன், என், ஏன், விகுதி யெதிர்கால வொருமைத் தன்மையாம். (உ-ம்.)
உண்கு, கொடு, வருது, சேறு, யான், எ-ம். நடப்பல், நடப்பன், நடப்பென், நடப்பேன்,
யான், எ-ம். வரும். அன்றியும். ப, மார், மரும், மனார், விகுதியுயர்திணைப்
பன்மைப்படர்க்கையாம். (உ-ம்.) சொல்லுப, நடமார், என்மரும், என்மனார், புலவர்,
எனவரும். அன்றியும், கும், டும், தும், றும், விகுதிவருதலுங் கொள்க. (உ-ம்.)
உண்கும்-எ, உண்டும்-இ, வருதும்-எ, சேறும்-எ, எனவரும். மாரெனும் விகுதி
குறுகிவரும். (உ-ம்.) என்மர், எனவரும். - நன்னூல் - "றவ்வொடுகரவும்மை
நிகழ்பல்லவுந், தவ்வொடிறப்பு மெதிர்வும் டவ்வொடு, கழிவுங் கவ்வோ
டெதிர்வுமின்னேவல், வியங்கோளிம்மா ரெதிர்வும்பாந்தஞ், செலவொடுவரவுஞ்
செய்யுநிகழ்பெதிர்வு, மெதிர்மறை மும்மையு மேற்குமீங்கே." எ-து. மேற்கோள். எ-று. (7)
 

112.
	எதிர்மறைக் கிடைநிலை யின்றிஎன் ஏம்ஓம்
ஆய்ஈர் ஆன்ஆள் ஆர்ஆ ஆது அ
வைம்பான் மூவிடத் தாகு மென்ப.
 

     (இ-ள்.) ஒருமொழிப்பொருளை நீக்குதற்கெதிர்மறை விகுதிகளாமா றுணர்த்துதும்.
நட, வா, முதலிய ஏவல்வினைப் பகாப்பதத்தைப் பகுதியாகநிறுத்தி இடைநிலையின்றி
சூத்திரத்திற்காட்டிய விகுதிகளையேற்றி முடிக்கின் மூவிடத்தைம்பால்
எதிர்மறைவினையாம். (உ-ம்.) நடவேன் - யான், நடவேம் - யாம், நடவோம் - யாம்,
நடவாய் - நீ, நடவீர் - நீர், நடவான் - அவன், நடவாள் - அவள், நடவார் - அவர்,
நடவா - குதிரைகள், நடவாது - யானை, நடவாவன - அவை, எ-ம். வரும். எ-று. (8)

முதலாவது:-முக்காலமுற்றுவினை.-முற்றிற்று.
 

இரண்டாவது:-ஏவல்வியங்கோள்.
Chapter II. - Imperative and Optative Words.
 

113.
	ஏவ லொருமைக் கியலு மாய்திமோ
வேவற் பன்மைக் கீர்தீர் மின்மினீ
ரிருமைக் கொரோவிடத் தாகுங் குவ்வே.
 
     (இ-ள்.) ஏவல்விகுதிகளா மாறுணர்த்துதும். ஆய், தி, மோ, விகுதி
யொருமையேவலாம். (உ-ம்.) உரையாய், உரைதி, உரைமோ, நடவாய், கேளாய், போதி,
அருள்தி, கேண்மோ, சென்மோ, எ-ம். வரும். அன்றியும்,
	


78


	ஈர், தீர், மின், மினீர், விகுதிபன்மையேவலாம். (உ-ம்.) உரையீர், கேளீர், போதீர்,
அருள்தீர், உரைமின், கேண்மின், உரைமினீர், கேண்மினீர், எ-ம். வரும். அன்றி, கு,
விகுதியொருமைக்கும் பன்மைக்குமாகும். (உ-ம்.) கம்பன். - "அன்னையே
யனையார்க்கிவ்வா றடுத்தவாறருளுகென்றான்." - சிலப்பதிகாரம். -
'நீயிங்கிருக்கென்றேகி,' - சிந்தாமணி. - "எயிற்றியல்காணநா மிவட்ட ருகென்னவே."
என்பதில் அருளுகு, இருக்கு, தருகு என்பனவொரு மைக்கேவலாம். மீளவும். -
சிந்தாமணி. - 'எந்தைமார்க ளெழுகென்றாளென.' எழுகு - பன்மைக்கேவலாம்.
ஒரோவிடத்தி லிவ்விகுதி வியங்கோள் வினைக்குமாம். - கம்பன் - 'ஆயிரமாதர்க்குள்ள
வறிகுறியுனக் குண்டாகென்றேகினன்.' - சிலப்பதிகாரம். -
'பசியும்பிணியும்பகையுநீங்கிவசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி.' என்பதில், உண்டாகு,
சுரக்கு, இவை உண்டாக - சுரக்க, என வியங்கோளாய் வந்தவாறு காண்க. அன்றியும்,
வரல், தரல் என்னுஞ் சொல், வாராய், தாராய், வருதி, தருதி, எ-ம். வாரிர், தாரீர்,
வருதீர், தருதீர், வம்மின், தம்மின், வம்மினீர், தம்மினீர், எனவருதலுமறிக. எ-று. (1)
 

114.
	எதிர்மறை யேவற் கேலே அல்லே
அன்மோஅற்க வாகு மொருமை
ஆமின் அன்மின் அற்பீர் பன்மை.
 
     (இ-ள்.) எதிர்மறையேவல் விகுதிகளா மாறுணர்த்துதும். ஏல், அல், அன்மோ,
அற்கு, விகுதி யெதிர்மறையேவலொருமையாம். (உ-ம்.) செய்யேல், செய்யல்,
செய்யன்மோ, செய்யற்க; முனியேல், முனியல், முனியன்மோ, முனியற்க; எ-ம். வரும்.
ஆமின், அன்மின், அற்பீர், விகுதியெதிர்மறை யேவற்பன்மையாம். (உ-ம்.) செய்யாமின்,
செய்யன்மின், செய்யற்பீர்; முனியாமின், முனியன்மின், முனியற்பீர்; எ-ம். வரும். அற்க,
என்னும்விகுதி மூவிடத்தைம்பாற்கு மேற்பதன்றி வியங்கோளினுமாம். (உ-ம்.) நாமும்
பொய்யற்க, நீருஞ் சொல்லற்க, அரசன் முனியற்க, இஃதிவள் செய்யற்க, அவரும்
வழுவற்க, இதுவழங்கற்க, அவையொழியற்க. - குறள். - 'வியவற்க வெஞ்ஞான்றுந்
தன்னை நயவற்க, நன்றி பயவாவினை,' எ-று. (2)
 

115.
	'ஈதா கொடுவெனு மூன்று முறையே
யிழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை."
 
     (இ-ள்.) ஏவன் மொழிகளுண் மும்மொழிவிகற்பமா மாறுணர்த்துதும். ஈ,
என்னுஞ்சொல் ஈவானினிழிந்த விரப்பான் சொல்லுவதாம். தா, என்னுஞ்சொல்
ஈவானோடொத்த விரப்பான் சொல்லுவதாம். கொடு, என்னுஞ் சொல் ஈவானின்மிக்க
விரப்பான் சொல்லுவதாம். (உ-ம்.) தந்தாயீ, இழிந்தோ னிரப்பு. அன்பாதா,
ஒப்போனிரப்பு. மைந்தாகொடு, உயர்ந்தோ னிரப்பு. - தொல்காப்பியம். - "ஈயென்
கிளவி யிழிந்தோன்
	


79


	கூற்றே. - தாலென் கிளவி யொப்போன் கூற்றே. - கொடுவென் கிளவி யுயர்ந்தோன்
கூற்றே." எ-று. (3)
 

116.
	வியங்கோ ளியலும் விகுதிக் கவ்விய
யவ்வொடு ரவ்வொற்று மிவையெங்கு மேற்பன
"வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய்
யேகலு முரித்தஃ தேகினு மியல்பே."
 
     (இ-ள்.) வியங்கோள் விகுதிகளாமாறுணர்த்துதும். க, ய, ர், விகுதிமூ
விடத்தைம்பாற்கண்ணு மேற்கும்வியங்கோளாம். (உ-ம்.) வாழ்க, வாழிய, வாழியர், எ-ம்.
நான்வாழ்க, நீவாழ்க, அவன்வாழ்க, அவள்வாழ்க, அவர்வாழ்க, அதுவாழ்க,
அவைவாழ்க, எனவரும். மற்றவிகுதியு மிவ்வாறொட்டுக. அன்றியும், வாழியவென்னும்
வியங்கோளீற்று யகரங்கெட்டுவாழி யெனவரின் வல்லினமிரட்டா. (உ-ம்.) வாழிகொற்ற,
வாழிதேவ, வாழிபூத, வாழி செல்வ, என வரும். - நன்னூல் - 'கயவொடு ரவ்வொற்றீற்ற
வியங்கோ ளியலுமிடம்பாலெங்குமென்ப. - வாழியவென்பத னீற்றனுயிர்மெய்,
யேகலுமுரித் தஃதேகினு மியல்பே.' இவைமேற்கோள். எ-று. (4)

இரண்டாவது:-ஏவல்வியங்கோள்.-முற்றிற்று.
 

மூன்றாவது:-ஈரெச்சம்.
Chapter III. - Participles.
 

117.
	எச்சமே தொழில்பொழு தென்றிவை தோன்றி
யிடம்பா றொன்றா தெஞ்சிய வினையென
விவற்றுட் பெயர்சேர்ந் தியலும் பெயரெச்சம்
வினையொடு புணர்வது வினையெச் சம்மே.
 
     (இ-ள்.) ஈரெச்சங்களா மாறுணர்த்துதும். தொழிலுங் காலமுந் தோன்றி
இடமும்பாலுந் தோன்றாதுவருவன வெல்லா மெச்சமெனப்ப டும். ஐம்பான்மூவிடஞ்
செய்பவன் முதலிய வறுபொருட் பெயரொடுபு ணரப்படுவன வெல்லாம்
பெயரெச்சமெனப்படும். வினையொடு புணரப்ப டுவனவெல்லாம் வினையெச்ச
மெனப்படும். (உ-ம்.) உண்ட, உண்கிற, உண்ணும், எனநிறுத்தி, அவன், அவள், அது,
அவை, நான், நீ, இவை கூட்டுக. அன்றியும், உண்டசாத்தான் - வினைமுதற்பெயர்,
உண்டகலம் - கருவிப்பெயர், உண்டவிடம் - இடப்பெயர், உண்டவுணல் -
தொழிற்பெயர், உண்டநாள் - காலப்பெயர், உண்டசோறு - செயப்படு பொருட்பெயர்,
இவை தெரிநிலை வினைப்பெயரெச்சம். கரியகுதிரை, பெரியகளிறு, முகத்தயானை,
படத்தபாம்பு, நெடியவில், தீயசொல், புதியநட்பு, இவை குறிப்புவினைப்பெயரெச்சம்.
	


80


	களைகட்டபயிர், களைகட்டகூலி, எனஇன்னதற்கிதுபயனும்; உண்டவிளைப்பு,
குடிப்போனவூர், எனப்பிறபெயரெஞ்சுதலுமறிக. பெயரெச்சவாய்பாடுகள்:- செய்த,
செய்கின்ற, செய்யும், எனமூன்றாம். இவை இறப்பு, நிகழ்வு, எதிர்வு, முக்காலத்தின்வரும்.
(உ-ம்.) பட்டபகை, படுகின்றபகை, படும்பகை, எனவரும். உண்டுபோனான்,
உண்ணப்போனான், உண்டக்கால்வருவான், இவைமுக்காலத்து வினையெச்சம்.
வினையெச்ச விகற்ப மினிக் காட்டுதும். - நன்னூல். - "செய்த செய்கின்ற
செய்யுமென்பாட்டிற், காலமுஞ்செயலுந் தோன்றிப் பாலொடு,
செய்வதாதியறுபொருட்பெயரு, மெஞ்ச நிற்பது பெயரெச் சம்மே." - அகத்தியம். -
"காலமும் வினையுந்தோன்றிப் பாறோன்றாது, வினைகொள்ளு மதுவினையெச்சமே. -
காலமும் வினையுந்தோன்றிப் பாறோன்றாது, பெயர் கொள்ளுமது பெயரெச்சம்மே."
இவைமேற்கோள். வடநூலார் பெயரெச்சம் - சந்திராந்தம், எ-ம். வினையெச்சம் -
துவாந்தம், எ-ம். கூறுவர். எ-று. (1)
 

118.
	உம்மீற்ற வெச்சத் தீறு மீற்றய
லுயிரு முயிர்மெய்யு மொழிதலாஞ் செய்யுட்
கும்முந் தாதலு மொக்கு மென்ப.
 
     (இ-ள்.) பெயரெச்சத்திற்குச் சிறப்புவிதியா மாறுணர்த்துதும். உம் மெனமுடியும்
எதிர்காலப் பெயரெச்சந் தொக்குநின்று ஈற்றுமகரமு மீற்றயலுகரமு முகரத்தோ
டதன்மெய்யும் வேண்டுழிக் கெடுதலாம். இங்ஙனந்தொக்குநிற்புழி முக்காலத்துக்கு
மேற்பன. (உ-ம்.) செய்யுந்தொழில் எ-து. செய்யுதொழில் - செய்தொழில், எ-ம்.
வாழுங்குடி, எ-து. வாழுகுடி - வா ழ்குடி, எனவரும். இவற்றைவிரிக்குங்காலை,
வாழ்ந்தகுடி - வாழாநின்றகுடி - வாழுங்குடி, எனமுக்காலத்துப் பொருளனவாம். இவ்வா
றொருகாலமுந் தோன்றாது தொக்குநிற்பவே இப்பெயரெச்சங்கள் வருங்கால
வினைத்தொகை யெனப்படும். (உ-ம்.) ஆகும், எ-து. ஆம், எ-ம். போகும், எ-து. போம்.
எ-ம். ஈற்றுமகர நின்றதனால் இவை எஞ்சினும் வினைத்தொகை யெனப்படா.
இஃதன்றியே செய்யுளிடத்தில் ஈற்றின்கண்ணே, து, கூட்டி உம், உந்து, ஆகவும்
பெறுமெனக் கொள்க. (உ-ம்.) செய்யும், செய்யுந்து, வாழும், வாழுந்து, எ-ம்.
'புணரிநீர்சூழுந்து பூவுலகில்யாவு, முணரினினக்கில்லை யொப்பு.' எ-ம். பிறவுமன்ன.
எ-று. (2)
 

119.
	வினையெச் சங்கொள் விகுதி இ உ
உவ்வோ டெனவும் ஊபுஆ விறப்பே
அஇரு கருத்தா வணையி னிகழ்வே
யொருகருத் தாவு மோரிடத் திரண்டு
மியைஅ வன்றி இல்இன் இயஇயர்
வான்பான் பாக்கு வரும்பொழு தாம்பிற.
	


81


	 (இ-ள்.) முக்காலத்து வினையெச்ச விகுதிகளா மாறுணர்த்துதும்.இ, உ, என, ஊ,
பு, ஆ, விகுதி யிறந்தகாலங் காட்டுந் தெரிநிலை வினையெச்சங்களாம். (உ-ம்.) ஆறி,
ஆடி, எ-ம். செய்து, வந்து, எ-ம். உண்டென, பட்டன, எ-ம். செய்யூ, காணூ, எ-ம்.
செய்பு, காண்குபு, எ-ம். உண்ணா, காணா, எ-ம். வரும். ஆய், போய், என, ய, விகுதி
வருதலுமறிக. இவ்வெச்சம்பகுதி விகுதி விகாரப்பட்டும் வரும். (உ-ம்.) புக்குவந்தான்,
விட்டுவந்தான், என்பதில், புகு, விடு, பகுதிவிகாரம். தழீஇக்கொண்டான், உடீஇ வந்தான்,
என்பதில் தழுவி, உடுத்து, விகுதிவிகாரம். அ, விகுதி நிகழ்காலங்காட்டுந் தெரிநிலை
வினையெச்சமாம். (உ-ம்.) உண்ண - காண, என வரும். ஒருவன் மோப்பக்குழையு
மனிச்சம், எ-து. இருகருத்தாவைப் பற்றி முடிதலினிகழ்கால வினையெச்சமாயிற்று. யானே
மலரைமோப்ப வெடுத்தேன், எ-து. ஒகருத்தாவைப்பற்றி முடிதலி னெதிர்கால
வினையெச்சமாயிற்று. பொன்சுடரச்சுடுந்தீ, எ-து. எதிர்கால வினையெச்சமாயிற்று.
தீச்சுடச் சுடரும் பொன், எ-து. நிகழ்கால வினையெச்சமாயிற்று. செயவென்னச்சம்
இருகாலத்தில் வந்தது. - விருத்தம். - "விண்டுபெய்ய விரிந்தன முல்லைமேல்,
வண்டுபாட வந்தாடின மஞ்ஞையைக், கண்டுவாழ மணிக்கழலார்குழுக்,
கொண்டுபோகவெங்கொய்யுளையேறினார்." இதனுண் முதலீரடிக்கணிருகருத்தா
வந்தமையா னிகழ்கால வினையெச்சமாயிற்று. அன்றியும் இல், இன், இய, இயர், வான்,
பான், பாக்கு, விகுதி யெதிர்காலங் காட்டுந் தெரிநிலை வினையெச்சங்களாம். (உ-ம்.)
செய்யில் - செயில், எ-ம். படின் - வரின், எ-ம், நடத்திய - உண்ணிய, எ-ம். காணியர்
- வாழியர், எ-ம். செய்வான் - உறங்குவான், எ-ம். உண்பான் - உரைப்பான், எ-ம்.
உண்பாக்கு - உரைப்பாக்கு, எ-ம். வரும். நடந்தால் - நடப்பித்தால், எ-ம். நடந்தக்கால்
- ஒலித்தக்கால், எ-ம். நடத்தற்கு - நடப்பித்தற்கு, எ-ம். ஆல், கால், கு, விகுதி
வருதலுமறிக. - குறள். - "பிறர்க்கின்னா முற்பகற்செய்யிற் றமக்கின்னா, பிற்பகற்றாமே
வரும்." பிறவென்றமி கையால் தொழிற்பெயர்கட்கு உம்மை கூட்டி னிகழ்கால
வினையெச்சத் திற்குமாம். (உ-ம்.) கேட்டலும், வளர்தலும், வருதலு, முதலியவை கேட்க,
வளர, வர, எனப்பொருள் கொள்ளலுமாம். உணற்குவந்தான், எ-து. செயவென்,
வாய்பாடுபற்றிக் குவ் விகுதி வரும். உண்ணுமேற் பசி தீரும், எ-து. செயினென்னும்
வாய்பாடுபற்றி ஏல், விகுதிவரும். எள்ளுமேனும் வரும், காண்டலுமிதுவே கூறும்,
இவற்றுள் ஏனும், உம்மும், ஒரோவிடத்தில் விகுதியாம். இறந்தகால
வினையெச்சத்திற்கேவற் பகுதிமேல்விகுதி யாகவளபெடுத்த வீகாரங்கூட்டுவாரு முளர்.
(உ-ம்.) கொளீஇ, செலீஇ, இழீஇ, விழீஇ, எ-ம். வரும். - குறள். - "சலத்தாற்பொருள்
செய்தேமாத்தல் பசுமட், கலத்துணீர் பெய்திரீஇயற்று." இதன்மே லகரமேற்ற இறந்த
காலப்பெயரெச்சமாம். (உ-ம்.) இரீஇய, இருந்தழீஇய, எ-ம். இரீஇயன, தழீஇயன, எ-ம்.
வரும். - தேம்பாவணி. - "தழீஇயின கலன் பொறத்தளர்நுசுப்பெனக்,
	


82


	குழீஇ யினமலர் பொறாக்கொடிக ளூசல்கொண், டெழீஇ யினகனி பொறாவளை
யிபங்கண்மேல், விழீஇயினவினை பொறாவிளங்க முல்லையே." எ-ம். வரும். ஐயீற்றேவற்
பகுதிக் களபெடை கூட்டி னிறந் தகாலவினையெச்சமாம். (உ-ம்.) வளைஇ, எ-ம். வரும்.
இதற்கு அகரங் கூட்டினக்காலப் பெயரெச்சமாம். (உ-ம்.) வளைத்த - வளைஇய,
எனவரும். துவ்வாமைவந்தக்கடை, நல்வினைதானுற்ற வழியுதவும், நல்வினைதானுற்ற
விடத்துதவும், இவற்றுள் கடை-வழி-இடத்து-விகுதி யிறந்தகால வினை யெச்சமாயின. -
நன்னூல். - "செய்துசெய்பு செய்யாச் செய்யூச், செய்தெனச் செயச்செயின் செய்யிய
செய்யியர், வான்பான் பாக்கின வினை யெச்சம்பிற, வைந்தொன்றாறு முக்காலமு
முறைதரும்." - தொல்காப்பியம். - "பின் முன்கால் கடைவழி யிடத்தென்னு,
மன்னமரபிற் காலங் கண்ணிய, வென்னகிளவியு மவற்றியல்பினவே." எ-று. (3)
 

120.
	எனவொழித் தொழிந்த விறப்பெச் சத்தும்
வான்பான் பாக்கென வருமூன் றற்கு
மேற்கு மொருகருத்தா விரண்டும் பிறவே.
 
(இ-து.) வினையெச்ச விகற்பங்களா மாறுணர்த்துதும். வினையெச்ச மெல்லாந்
தனியேவாரா; மற்றொருவினையைத் தொடர்ந்துமுடியும்; எஞ்சிய வினையின் கருத்தா
மவையேதொடரும்; முற்றுவினையின் கருத்தாவும் ஒன்றாகவும் பிறிதாகவும் வரும். இ,
உ, ஊ, பு, ஆ, விகுதி யிறந்தகாலவினை யெச்சமும், வான், பான், பாக்கு, விகுதி
யெதிர்கால வினையெச்சமுந் தொடருமுற்று வினையோடொரு கருத்தாவைக்
கொள்ளுமல்லா தெஞ்சிய வினைக்கொரு கருத்தாவும், முற்றுவினைக்குப் பிறிதொரு
கருத்தாவுங் கொள்ளின் வழுவாம். (உ-ம்.) நீயாடி, அவன்பாடினான், எ-து. ஆடற்குக்
கருத்தாநீயே, பாடற்குக்கருத்தா வவனே, ஆகையால்வழுவாம். அவ்வழுவின்றி நீயாட
அவன் பாடினா னென்க. உவ்வொடு கூட்டிய, என, விகுதி யிறந்தகால வெச்சமும், அ,
விகுதி வினையெச்சமும், இல், இன், இய, இயர், விகுதி யெதிர்கால வெச்சமுந் தாமே
தொடருமுற்று வினையோ டொரு கருத்தாவையும் பல கருத்தாவையு நோக்கிவரும்.
(உ-ம்.) பசித்தெனப் புலி புன்மேயாது - தன்வினை முதல்வினை; மாரிபெய்தென
முல்லைமலர்ந்தது - பிறவினை முதல்வினை; மோப்பவெடுத்தேன் - தன்வினை
முதல்வினை; மோப்பக்குழையு மனிச்சம் - பிறவினை முதல்வினை; உண்ணினுவக்கும் -
தன்வினை முதல்வினை; உண்ணிற் பசிதீரும் - பிறவினை முதல்வினை; நீரிவைகாணிய
வம்மின் - தன்வினை முதல்வினை; அவர் காணிய வம்மின் - பிறவினை முதல் வினை;
நாம்வாழிய ரெய்தினம் - தன்வினை முதல்வினை; நாம் வாழியரிரும் பொருளளித்தனம்
- பிறவினை முதல்வினை; முறையே சொன்ன வெச்சங்கள் முற்றுவினையொடு ஒரு
கருத்தாவும் இருகருத்தாவும்பற்றி முடிந்தவாறு காண்க. அன்றியும், எஞ்சியவினைக்கு
முற்றுவினைக்குங் கருத்தா
	


83


	ஒன்றெனின் முதல்வினை கொண்டு முடிந்த வினையெச்ச மெனவும் வழங்கும். -
நன்னூல். - "அவற்றுள், முதலினான்கு மீற்றின்மூன்றும், வினைமுதல்கொள்ளும்
பிறவுமேற்கும்பிற." எ-து. மேற்கோள். எ-று.(4)
 

121.
	எதிர்மறை யெச்சத் தியலும் விகுதி
யாமலா தாமை யாவென நான்கே.
 
     (இ-ள்.) ஒருவினைத் தொழிலை நீக்குதற் கெதிர்மறையாகவரும் வினையெச்ச
விகுதிகளா மாறுணர்த்துதும். ஆமல், ஆது, ஆமை, ஆ, விகுதி யெதிர்மறை
வினையெச்சங்களாம். (உ-ம்.) செய்யாமல், உண்ணாமல், எ-ம். செய்யாது, உண்ணாது,
எ-ம். செய்யாமை, உண்ணாமை, எ-ம். செய்யா, உண்ணா, எ-ம். வரும். கூறாமல், என
அல் விகுதி வருதலுங்கொள்க. 'வரந்தரு முனிவனெய்த வருதலும் வெருவிமாயா,
நிரந்தர முலகினிற்கு நெடும்பழி பூண்டா நின்றான்.' ஈண்டு, மாயாமல் என்பதற்கு மாயா
வென்றது காண்க. எ-று. (5)
 

122.
	வரல்தரல் மூவிட மருவுதற் குரிய
செலல் கொடை சேரும் படர்க்கை யொன்றே.
 

     (இ-ள்.) இடம்வழுவாமற் காத்தலாமாறுணர்த்துதும். ஈண்டுவினையி யல்புரைப்புழி
நால்வினை யுரிமையை விளக்குதன் முறையே யாகையில் வருதல், தருதல், என
விருவினைச்சொல் தன்மை முன்னிலை படர்க்கையை யணைந்து வரும். (உ-ம்.)
எனக்காடைவந்தது, நினக்கணிவந்தது, அவனுக்குப் பொன் வந்தது, எ-ம். எனக்குத்
தந்தான், நினக்குத் தந்தான், அவனுக்குத் தந்தான்,எ-ம். வரும். செல்லுதல், கொடுத்தல்,
என விருவினைச் சொல் படர்க்கைப் பெயரை யணைந்து வரும். (உ-ம்.) அவனிடத்துச்
சென்றான், அவனுக் காடைகொடுத்தான், எ-ம். வரும். எனக்கு நினக்கு மாடை
கொடுத்தா னெனவரின் வழுவாம். - நன்னூல். - "தரல்வரல் கொடை செலல்சாரும்
படர்க்கை, யெழுவாயிரண்டு மெஞ்சியவேற்கும்." எ-து. மேற்கோள். எ-று. (6)

மூன்றாவ:- ஈரெச்சம். - முற்றிற்று.
 

நான்காவது:- வினைக்குறிப்பு.
Chapter IV. - Defective Verbs.
 

123.
	வினைக்குறிப் பென்ப வினைபோல் விகுதி
பெற்றிடம் பாற்கும் பெயர்ப்பகு பதமே.
 
     (இ-ள்.) வினைக்குறிப்பா மாறுணர்த்துதும். மேலே பெயர்ப்பகுபதங்களை
விளக்கிய விடத்தில் அவையெலா மற்றைப் பெயர்களைப்போலே
	


84


	வேற்றுமை யுருபு பெறுவனவன்றியே வினையைப்போல நடப்பனவா மென்பதாயிற்று;
அங்ஙன நடப்புழி வினைக்குறிப்பெனப்படும். இவையே பெயரியலிசைத்த சொல்லாயினும்
வினையின் றொழிலைக் குறிப்பனவும் வினையைப்போல நடப்பனவு மாகையில்
வினையை விளக்கிய விடத்து வந்த முறை யெனக் காண்க. வினைக்குறிப்பெல்லா
மூவிடத்தைம்பால் வினைச்சொற்கேற்ற விகுதியைப் பெற்றுமுடியும். (உ-ம்.)
பூணினேன்-யான், பூணினேம் - யாம், பூணினை - நீ, பூணினீர் - நீர், பூணினான் -
அவன், பூணினாள் - அவள், பூணினார் - அவர், பூணிற்று - அது, பூணின - அவை,
என வரும். பொருண்முதலாறு காரணங்களால் வரும் பெயர்ப் பகுபத மெல்லாம்
வினைக்குறிப்பாக நடப்பனவாமெனக்கொள்க. அன்றியும், வினைக்குறிப்பு
வினையைப்போலப் பெயர்முதலாயினவேற்றி மற்றொன்றை வேண்டாது நிற்பது
வினைக்குறிப்புமுற்றெனப்படும். (உ-ம்.) குறள். - "அகரமுதல வெழுத்தெல்லாமாதி,
பகவன்முதற்றேயுலகு." இதனுள் முதற்று என்னுஞ்சொல் அஃறிணை யொருமைக்கண்
வினைக்குறிப்பு முற்றெனவும், முதல வென்னுஞ் சொல் அஃறிணைப்பன்மைக்கண்
வினைக்குறிப்பு முற்றெனவும்படும். (உ-ம்.) இறைவகொடியை, தாயேயினியை,
நீரேதண்ணியை, தீயேவெய்யை, இவை பொதுமைய, இவைதீய, அவைநல்ல, எ-ம்.
'ஆங்குய்யல் வெஃகியறஞ் செய்க செய்தபின், னீங்குய்யற்பாலபல.' எ-ம். வரும்.
எ-று. (1)
 

124.
	வினைக்குறிப் பொன்றன்பால் விகுதி துவ்விஃதே
வலிமிகத் துறுடுவாம் ஐர யவ்வுமல்
லின்னு மளவு முறையீற்ற பெயர்க்கே
அவ்விறு மெல்லாம் பலவின் பாற்கே.
 
     (இ-ள்.) வினைக்குறிப்புக்கோர் சிறப்புவிதியா மாறுணர்த்துதும். ஒன்றன்பால்
வினைக்குறிப்பு வினையைப்போலவே துவ்வெனமுடியும். (உ-ம்.) அரிது, பெரிது,
வெய்யது, நொய்யது, முகத்தது, புறத்தது, என வரும். அன்றியும், வினைக்குறிப்பிடத்து
வரும்பெயர்ப்பகுதி வேற்றுமைப்பொருளாக வந்து தொக்கு நிற்கு மென்றுணர்க. (உ-ம்.)
தீமைத்து, கடற்று, மாரி நாட்டு; இவற்றை விரிக்குங்கால் தீமையைக் கொண்டது,
கடலிலுள்ளது, மாரிநாளிலாயது, என வரும். ஐயெனு முயிரும் ர், ய், என வீரொற்றுமீற்ற
பெயரே வினைக்குறிப்பொன்றன்பால் விகுதியெனுந் துக்கொள்ளுங்காலைத் தொகைநிலை
யிலக்கணத்தானே வரும். வல்லின வெழுத்திரட்டுமாகையில் ஈண்டுத் தகரவொற்று
வரப்பெறும். (உ-ம்.) உடைத்து, தீமைத்து, நடைத்து, எ-ம். பெயர்த்து, ஊர்த்து, எ-ம்.
பொய்த்து, மெய்த்து, எ-ம். வரும். குறள். - 'பல்லார் பகை கொளலிற்பத்தடுத்த
தீமைத்தே, நல்லார் தொடர் கைவிடல்,' பிறவுமன்ன. அன்றியும், எழுத்திணைந்தியலுஞ்
சந்தியிலக்க ணத்தானே வேற்றுமைப்பொருளா நிலைப்பதவீற்ற ல ன க்கீழும் ள க்கீழுந்
	


85


	தவ்வரின் அவற்றொடு தவ்வுமுறையே ற ட வாமென்றாகையின் லவ்வொற் றீற்ற
பகுதிக்கண் லகரம் றகர வொற்றாகித் துவ்வும், றுவ்வாம். (உ-ம்.) கடல்-கடற்று,
முதல்-முதற்று, மேல்-மேற்று, பால்-பாற்று, எ-ம். யார்க்கும்பொருள் பொழிவார்
மேற்றேபுகழ், எ-ம். வரும். அன்றியும் இன்னென்னு மிடைநிலைபெற்ற சொற்கண்,
ளகரம், டகரவொற்றாகத் திரிந்து துவ்வும், றுவ்வுமாம். (உ-ம்.) வில்லினன் - வில்லிற்று,
வெற்பினன் - வெற்பிற்று, பொற்பினன் - பொற்பிற்று, இருளினன் - இருளிற்று, எ-ம்.
வரும். அன்றியும் ளவ்வீற்ற பகுதிக்கண் ளகரம் டகரவொற்றாகத்திரிந்து, டு, வரும்.
(உ-ம்.) நாள்-நாட்டு, பொருள்-பொருட்டு, இருள்-இருட்டு, இப்பயிர்மாரிநாட்டு, எ-ம்.
வரும். அன்றியும், ணகரந் திரிந்து கண்ணெனு மேழாம் வேற்றுமை யுருபு
கட்டெனவுமாம். - குறள். - 'குடிப்பிறந்து குற்றத்தினீங் கிவடுப்பரியு, நாணுடையான்
கட்டேதெளிவு.' - வெண்பா. - "வெற்பிற்றே செம்பொன் விரிகடற்றே வெண்முத்தம்,
பொற்பிற்றாம் பூமுகைத்தே தேனினிமை - கற்பித்தே, பெண்ணழகு நல்லறத்தே
பேராப்பொருளின்பங், கண்ணழகு செய்தயைத்தே காண்." என இவை யெல்லாம்
அஃறிணை யொருமைப் படர்க்கைக்கண் வினைக்குறிப்பு முற்றாயின. இவற்றுட்பலவே
பெயராகவும் வழங்கும். (உ-ம்.) இருட்டு, பொருட்டு, நன்று, தீயது, எ-ம். வரும்.
அன்றியும், பன்மைப்படர்க்கையோவெனின், அகர மீறாக முடியும். (உ-ம்.) கொடிய,
பெரிய, உடைய, நடைய, முகத்த, முகத்தன, புறத்த, புறத்தன, பெயர, பெயரின, முதல,
பால, மேல, வில்லின, வெற்பின, நாள, பொருள, பொருளன, எ-ம். வரும். பிறவுமன்ன
எ-று. (2)
 

125.
	வினைக்குறிப் பெஞ்சி யீற்றகரம் பொதுவே.
 
     (இ-ள்.) வினைக்குறிப்பெச்சமா மாறுணர்த்துதும். மேற்கூறியபடி
பலவின்பால் வினைக்குறிப்புச் சொல்லெல்லாம் அகர விகுதியான் முடியும். பாலே
தோன்றா தெவ்வகைப் பெயர்க்கு மேற்றவினைக் குறிப்பெச்சமாகையில் அகரவிகுதியான்
முடியவும் பெறும். அங்ஙன மேற்சொன்ன தன்மையாற் பலவின்பால் முற்றுவினையாக
நடந்தன, முடிந்தன, பூத்தன, என வருதலன்றியே அவைநடந்த, இவைமுடிந்த,
பலமலர்பூத்த, முதலிய முற்றுவினை யெனவழங்கு மீண்டிம்மொழிகடாமே பெயரெச்சமாக
வழங்கவும் பெறும். (உ-ம்.) நடந்த செய்தியைச் சொல்லாய், முடிந்த தொழிலைக்
காண்மின், பூத்தமலரை யணிமின், எ-ம். இத்தன்மைத் தாகும்வினைக் குறிப்பெனக்
கண்டுணர்க. ஆகையி லவையே திறத்த, இவை யரும்பொருள, இம்மலர்சுனைய,
இம்மாடெல்லாமலைய, நின்குணமரிய, நின்சொல் கொடிய, இத்தொடக்கத்தனபிறவும்
பலவின்பால் வினைக்குறிப்பு முற்றெனப்படும். ஈண்டுப் பெயரெச்சம்போலவு
மடைமொழிபோலவு மற்றொரு பெயரைச் சார்ந்து வருங்கால்
மூவிடத்தைம்பாற்குப்பொதுவாய் நிற்கும் வினைக் குறிப்பெச்ச மெனப்படும். (உ-ம்.)
திறத்தகையானை மாய்ந்தது, அரும்பொருள வோதிகளைச் சொன்னான்,
	


86


	சுனையமலரைக் கொய்தேன், மலையநெல்லிது, அரியகுணத்தவன், கொடியசொல்லன்,
என்பாலதொழிலைச்செய்தான், மையகண், கையவளை, நனையகொம்பு, சினையமலர்,
முனையவேன் முதலிய பலவும் வினைக்குறிப்பெச்சமெனப்படும். அன்றியு
மிம்மொழிகடாமே மற்றொரு பெயரைச்சார்ந்து தம்பெயராக வினையொடுபுணர்ந்து
பலவின்பாற் பகுபதப் பெயருமாமெனக் கொள்க. (உ-ம்.) அரியசொன்னாய், இனியகூ
றாய், கொடியசெய்தாய், நிறத்தவாயமலரே, மென்னடைய வாயவன்னம், இவை
பலவின்பாற் பகுதப் பெயராம். பிறவுமன்ன. எ-று. (3)
 

126.
	அன்மை வினைக்குறிப் பணையுந் திரிபொரு
ளன்றுமே லதுவறி னான்றாந் தூக்கி
னின்றி யன்றி யென்றெஞ்சும் இயாப்பி
னுவ்வு மாமாயி னுறுவலி யியல்பே.
 
     (இ-ள்.) சிலவினைக்குறிப்பு விகற்பமாமாறுணர்த்துதும். ஒன்றனியல்பு மறுக்கும்
அன்மையும், ஒன்றனிருப்பு மறுக்கும் இன்மையும், எனவிரு சொல்லால் அல்லன்,
இல்லன், என விருபகுபதமாம். இவையே வினைக்கு றிப்பாகி அல்லன் - இல்லன் -
யான், எ-ம். அல்லேம் - இல்லேம் - யாம், எ-ம். அல்லை - இல்லை - நீ, எ-ம்.
அல்லீர் - இல்லீர் - நீர், அல்லன் - இல்லன் - அவன், எ-ம். அல்லள் - இல்லள் -
அவள், எ-ம். அல்லர் - இல்லர் - அவர், எ-ம். அன்று - இன்று - அது, எ-ம். அல்ல
- இல்ல - அவை, எ-ம். வருமாயினும், இஃதோ, அஃதோ, என்றையந் தோன்றிய
பின்னர்த்தேறி ஒன்றை மறுத்து மற்றொன்றைத் தெரிந்து கொள்ளு மிடத்தில்
அன்மையில் வரும் வினைக் குறிப்புச்சொல் தெரிந்த பொருளின்பாலும் இடமும்
பற்றிவரு மெனக் கொள்க. (உ-ம்.) மானல்லன்மகன், மகனன்றுமான், இவளல்லரிவர்,
ஒன்றல்லபல, பலவன்றொன்று, யானல்லைநீ, நீயல்லேம்யாம், எனவரும். அன்றியும்,
அது, என்னுஞ்சொன் முன்னே அன்று, என்னுஞ்சொல்வரின் செய்யுளில் ஆன்றாம்.
(உ-ம்.) அது + அன்று = அதான்று, எனவரும். இன்றி, அன்றி, என்னும்
வினையெஞ்சுகிளவி செய்யுளில் உகரம் பெற்றுவரும், வரினும் வல்லினமிரட்டா. (உ-ம்.)
வாளின்றிப்பிடியார், எ-து. வாளின்று பிடியார், எ-ம். நாளன்றிப்போகி, எ-து.
நாளன்றுபோகி, எ-ம். உப்பின்று புற்கையுண்கமா, எ-ம். வரும். - நன்னூல் -
'அதுமுன்வரு மன்றான்றாந் தூக்கின் அன்றியின்றி யென்வினையெஞ்சிகரந்,
தொடர்பினுளுகரமாய்வ ரினியல்பே." இவை மேற்கோள். எ-று. (4)
 

127.
	வழுவா முரிமை மயங்கிக் கெடினவை
யிடம்பா றிணைபொழு திறைவினா மரபேழே.
 
     (இ-ள்.) பெயர்க்கும் வினைக்கும் வரும் வழுவா மாறுணர்த்துதும். பெயர்க்கும்
வினைக்கு மேலேகாட்டிய தத்தமியல்பு கெடும்படி மயங்கிவருமொழி
	


87


	வழுவெனப்படும். இவை யிடமுதன் மரபீறாக வேழாம். அவற் றுள்ளே மூவிடந்
தம்முண்மயங்குவ திடவழுவாம். (உ-ம்.) நான்வந்தாய், நீவந்தான், அவன் வந்தேன்,
யாம்வந்தீர், நீங்கள் வந்தேம், அவர்கள் வந்தீர், எனவரும். ஐம்பாலுந்
தம்முண்மயங்குவது பால்வழுவாம். (உ-ம்.) அவன் வந்தாள், அவள் வந்தார், அவர்
வந்தான், அதுவந்தன, அவைவந்தது, எனவரும். இருதிணை தம்முண்மயங்குவது
திணைவழுவாம். (உ-ம்.) அவன் வந்தது, அதுவந்தான், அவர் வந்தன, அவை வந்தார்,
எனவரும். முக்காலமுந் தம்முண்மயங்குவது காலவழுவாம். (உ-ம்.) பண்டுவருவான்,
நாளைவந்தான், நெருநல் வராநின்றான், எனவரும். விடை தம்முண்மயங்குவது
விடைவழுவாம். (உ-ம்.) திருக்காவலூர்க்கு வழியெது வெண்பார்க்கு
மருக்காவலர்ந்ததுகாண், எனவரும். வினா தம்முண் மயங்குவது வினாவழுவாம். (உ-ம்.)
கறக்கின்றவெருமை பாலோசினையோ, எனவரும். 82-ஞ் சூத்திரத்திற் சொல்லிக் காட்டிய
மரபின் சொல்லெல்லாந் தம்முன்மயங்குவது மரபுவழுவாம். (உ-ம்.) யானைமேய்ப்பானை
யிடையன் எ-ம். மாடுமேய்ப்பானைப் பாகன், எ-ம். வரும். - நன்னூல் -
"திணையேபாலிடம் பொழுது வினாவிறை, மரபாமேழு மயங்கினாம் வழுவே."
எ-து. மேற்கோள். எ-று. (5)
 

128.
	ஐயந் திணைபா லணையும் பொதுவே.
 
     (இ-ள்.) சிலவழுக்காத்தலா மாறுணர்த்துதும். திணைமே
லையந்தோ ன்றினும் பான்மேலையந்தோன்றினும் அவற்றுட்பொது மொழிகொண்டு
முடிக்கவும். (உ-ம்.) குற்றியோமகனோ வவ்விடத்தே தோன்றுகின்றவுரு,
எனத்திணையையத்திலே, உரு, என்கிற பொதுச்சொல்லாலும்; ஆண்மக
னோபெண்மகளோ வங்ஙனந் தோன்றுகின்றவர், என வுயர்திணைப்பாலையத்திலே,
தோன்றுகின்றவர், என்கிற பொதுச்சொல்லாலும்; ஒன்றோ பலவோவிச் செய்புக்க
பெற்றம், என வஃறிணைப்பா லையத்திலே, பெற்றம், என்கிற பொதுச்சொல்லாலுஞ்
சொல்லுக. - நன்னூல். - "ஐயந்திணைபா லவ்வப் பொதுவினு, மெய்தெரி பொருண்மே
லன்மையும் விளம்புப." எ-து. மேற்கோள். எ-று. (6)
 

129.
	சிறப்பணி நடையாற் றிணைசினை முதல்கள்
பிறழ்தலும் பிறவும் பேணுத னெறியே.
 
     (இ-ள்.) இதுவுமது. இகழப்படும் வழுவின்றி யலங்காரவகையான் மரபல்லவற்றையு
மொரோவிடத் துரைப்பது மிருதிணை தம்முளுஞ் சி னைமுதற் றம்முளு மயங்கிவருவது
சிறப்பாம். (உ-ம்.) நம்மரசனாகிய சிங்கத்திற்குப் பகைவர் கூட்டமாகிய யானைக ளஞ்சி
யோடின, உயர்திணை அஃறிணையோடு மயங்கிற்று. அவ்வரசனுக்குத் தம்பியரிருவரு
மிரண்டு தோள்கள், உயர்திணைமுதல் உயர்திணைச் சினையோடு மயங்கிற்று.
	


88


	முகமாகியமதி, உயர்திணைச்சினை அஃறிணை முதலோடு மயங்கிற்று. கல்வி மங்கையை
நல்லோர் விரும்புவார், அஃறிணை உயர்திணையோடு மயங்கிற்று. இவை உருவகவணி.
மயில்போலு மங்கை, அஃறிணை உயர்திணையோடுமயங்கிற்று. கயல்போலுங்கண்,
உயர்திணைச்சினை அஃறிணை முதலோடுமயங்கிற்று. தளிர்போலுமேனி, உயர்திணை
முதல் அஃறிணைச் சினையோடு மயங்கிற்று. இவை உவமையணி. - தேம்பாவணி. -
"குரவநீள் வேலிகோலுங் குடங்கையுட் டுஞ்சித்தன்னைக், கரவநீள் பசும்பூநெற்றிக்கரு
ம்புகணிறுவியூக்கி, விரவிநீடலையின் வாழை விடுங்கனி நக்கித்தீங்கான்,
பரவநீள்பலபூங்காவும் படுநெறிப்போயினாரே." இதனுள் பலசினைப்பெயரும் பலதொழிற்
பெயரும் பலகுணப்பெயருமுரிய தற்பொருட்கன்றிப்பிறழ்ந்து பிறபொருட்குஞ்
சிறப்போடுரைத்தவாறு காண்க. பிறவென்றமிகையால் இவன் சரசுவதிக் கொப்பானவன்,
எனப் பான்மயங்கிக்கூறுதலும்; அரசு, வேந்து, என உயர்திணை அஃறிணையாகக்
கூறுதலும், அலவன், நகுலன், கலுழன், சுணங்கன், என அஃறிணையை
உயர்திணையாகக்கூறுதலுங் கொள்க. - நன்னூல். - "உருவக வுவமையிற்றிணை
சினைமுதல்கள், பிறழ்தலும் பிறவும் பேணினர்கொளலே." எ-து. மேற்கோள். எ-று. (7)

நான்காவது:-வினைக்குறிப்பு.-முற்றிற்று.

மூன்றாமோத்துவினைச்சொல்லியல். - முற்றிற்று.
 

நான்காமோத்துஇடைச்சொல்லியல்.
Part IV. - Particles.
 

130.
	இடைச்சொற் றனிநிலை யின்றி முன்பின்
வினைபெயர் சேர்ந்து வேற்றுமை சாரியை
வினையொப் புருபுகளும் விளங்குதம் பொருளவு
மிசைநிறைப் பனவு மசைநிறைப் பனவுங்
குறிப்பு மெனவெண் கூற்றவை யென்ப.
 
     (இ-ள்.) மேலே வகுத்துக்கூறிய நால்வகைச் சொற்களு ளிவ்வோத்தின்கண்ணே
யிடைச்சொல்லியல்பினை விளக்குதும். இடையெனப்படுவன வேற்றுமை யுருபுகளும்,
வினையுருபுகளும் சாரியையுருபுகளும், உவமையுருபுகளும், தத்தம்பொருளைக்
காட்டுவனவும், இசைநிறைப்பனவும், அசைநிறைப்பனவும், குறிப்பின்வருவனவும்,
என்றிவ்வெண்வகையவாகித் தாமாகத் தனியேவாராமற் பெயர்க்கும்
வினைக்கும்பின்னுமுன்னுமாக ஓரிடத் தொன்றாயினும் பலவாயினும் வந்து
நிற்பதுஇடைச்சொல் லெனப்படும். (உ-ம்.) ஐ, ஆல், என வேற்றுமை யுருபும், அன்,
ஆன், அள், ஆள்,
	


89


	என வினைவிகுதியும், அன், ஆன், இன், அல், எனச்சாரியையும், போல, புரைய, ன
உவமையுருபும், ஏ, ஓ, முதலிய தத்தம் பொருளனவும், எ, ஒ, என இசைநிறைப்பனவும்,
மியா, இகம், என அசை நிறைப்பனவும், விண்ணென, ஒல்லென, கல்லென,
எனக்குறிப்புமுறையே வெண்வகை யிடைச் சொல் வந்தவாறுகாண்க. - நன்னூல். -
``வேற்றுமை வினைசாரியை யொப்புருபுக, டத்தம்பொருள விசைநிறையசைநிலை,
குறிப்பெனெண் பகுதியிற் றனித்தியலின்றிப், பெயரினும் வினையினும்
பின்முன்னோரிடத், தொன்றும்பலவும் வந்தொன்றுவ திடைச்சொல்.ழுழு எ-று. (1)
 

131.
	ஏயென் னிடைச்சொல் லீற்றசை தேற்றமெண்
வினாப்பிரி நிலையிசை நிறையென வாறே.
 
     (இ-ள்.) ஏகாரவிடைச்சொல்லா மாறுணர்த்துதும். ஏகாரமென்னும் இடைச்சொல்
பொருளில்லாமை ஈற்றசையாகவும், தேறின துணிவுகாட்டவும், பலவற்றையடுக்கி
யெண்ணவும், ஒன்றை வினாவவும், பலவற்றுளொன்றைப் பிரிக்கவும், ஓசைநிறைக்கவும்,
என இவ்வாறிடத்து மேற்கு மென்றார் புலவர். (உ-ம்.) மல்லலோங் கெழிலியானை
மருமம்பாய்ந்தொளித்ததே, எ-து. ஏகாரம் பொருளில்லாமை சார்த்திக்கூறினதால்
ஈற்றசை பொருள். பொழிவார் மேற்றேபுகழ், எ-து. ஏகாரம் தெளிவின்கண்வருதலால்
தேற்றம். இதை வடநூலார் அயோகவிவச்சேத மென்பர். நிலனே நீரே தீயே வளியே
வெளியே, எ-து. ஏகாரம், நிலனும், நீரும். தீயும், வளியும், வெளியும், எனப்பொருள்பட
வெண்ணி நிற்றலின் எண். நீயே தந்தாய், எ-து. ஏகாரம் நீயேதந்தாய்
எனவினாவிநிற்றலின் வினா. அவனே தந்தான், எ-து. ஏகாரம். ஒரு கூட்டத்தினின்று
மொருவனைப்பிரித்து நிற்றலின் பிரிநிலை. இதனைவடநூலார் இதரயோக
விவச்சேதமென்பர். எயேயிவளொருத்தி பேடியென் றழுதாள், எ-து. ஏகாரம் செய்யுளி
லிசைநிறைத்து நிற்றலின் இசைநிறை. இவையன்றி எதிர்மறையிலும் வரும். (உ-ம்.)
யானேகொண்டேன், எ-து. ஏகாரம் யான்கொள்கிலேனெ னப் பொருடந்து நிற்றலின்
எதிர்மறை. - நன்னூல். - ``பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்ற, மிசைநிறை
யெனவா றேகா ரம்மே. - தொல்காப்பியம். - `தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே,
யீற்றிசை யிவ்வைந் தேகா ரம்மே.ழு இவை மேற்கோள். எ-று. (2)
 

132.
	ஓபிரிப் பசைநிலை யொழிவெதிர் மறைவினாத்
தெளிவு கழிவு சிறப்பென வெட்டே.
 
     (இ-ள்.) ஓகாரவிடைச்சொல்லா மாறுணர்த்துதும். ஓகாரமென்னும் இடைச்சொல்
பிரிநிலையும், அசைநிலையும், ஒருசொல்லொழியவருமொழி யிசையும், ஒன்றைமறுத்தலும்,
வினாவும், தெளிவும், ஒருபொருட்கழிதலும், ஒன்றைச் சிறப்பித்தலும், என்றிவ்வெட்டுப்
பொருள்களைக் காட்டுவதற்கேற்குமென்றறிக. (உ-ம்.) அவனோ செய்தான்,
எ-து. ஓகாரம் பலருணின்று மொருவினைப் பிரித்து நிற்றலின் பிரிநிலை. 
	


90


	பழியோவருந்துதும்யாமே, எ-து. ஒகாரம் பொருள்குறியாது நிற்றலின் அசைநிலை.
கொளலோ கொண்டான், எ-து. ஓகாரம் கொண்டுய்யப் போயினானல்லன் என ஒரு
சொல்லொழிவு படவந்தமையால் ஒழியிசை. யானோசொன்னேன், எ-து. ஓகாரம்
யான்சொல்லவில்லை எனப்பொருடந்து நிற்றலின் எதிர்மறை. அவனோ வல்லவனோ,
எ-து. ஓகாரம். அவனோ வல்லவனோ என வினாவிநிற்றலின் வினா. நன்றோவன்று
தீதோவன்று, எ-து. ஓகாரம் அத்தன்மையில்லாமை தெளிந்தவழிநிற்றலின் தெளிநிலை.
நைதலின்ற நல்லறஞ்செய்கின்றாலோ வுயிருய்யும், எ-து. ஓகாரம் கழிந்ததற்கிரங்கி
நிற்றலின் கழிவு. ஓ ஓ பெரியன், எ-து. ஓகாரம் பெருமை மிகுதியை விளக்கிநிற்றலின்
சிறப்பு. அன்றியும் குற்றியோ மகனோ, எ-து. ஓகாரம் ஐயப்பொருளைத் தந்துநிற்றலின்
ஐயம். - நன்னூல். - "ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை,
கழிவசைநிலைபிரிப்பென வெட்டோவே." - தொல்காப்பியம். - "பிரிநிலை வினாவே
யெதிர்மறை யொழியிசை, தெரிநிலைக்கிளவி சிறப்பொடுதொகைஇ, யிருமூன் றென்ப
வோகா ரம்மே." (எ-று.) (3)
 

133.
	எனவென்ப துவமை யெண்குணம் வினைபெய
ரிசைக்குறிப் பியலு மென்று மினைத்தே.
 
     (இ-ள்.) என வென்றீரிடைச் சொல்லா மாறுணர்த்துதும், இவையே உவமையும்,
எண்ணும், குணமும், வினையும், பெயரும், இசையும், குறிப்பும், எனவேழிடத்தும்
வரப்பெறும். (உ-ம்.) பூங்கொடி வீழ்ந்தென வீழ்ந்தாள், கொடும்புலி பாய்ந்தென
பாய்ந்தான், என வினையோடியைந்து வந்தவுவமை, கூற்றெனக் கொடுங்கண்,
காரெனயார்க்கும் பொழிந்தான், எனப்பெயரோடியைந்து வந்தவுவமை. ஒரோவிடத்து,
என்று, உவமையுருபாகவரும். அன்றியும், கடலெனக் காலெனக்கடுங்கட் கூற்றென,
உருமெனவூழித் தீயென, ஒன்றென விரண்டென மூன்றென; கல்லென்று முள்ளென்று;
என, என்று, எண்ணோடியைந்தன. வெள்ளென வெளிர்த்தது, வெள்ளென்று
வெளிர்த்தது; என, என்று, பண்போடியைந்தன. கொள்ளெனக் கொண்டான்,
கொள்ளென்று கொண்டான்; என, என்று, வினையோடியைந்தன.
ஊரெனப்படுவதுறையூர், ஊரென்று சொல்லப்படுவதுறையூர்; என, என்று,
பெயரொடியைந்தன. ஒல்லென வொலித்தது, ஒல்லென்றொலித்தது, என, என்று,
இசையோடியைந்தன. விண்ணென விசைத்தது, விண்ணென்றிசைத்தது; என, என்று,
குறிப்போடியைந்தன. பிறவுமன்ன. - தொல்காப்பியம். - "வினையே குறிப்பே யிசையே
பண்பே, யெண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங், கண்ணிய நிலைத்தே யெனவென்
கிளவி. என்றென் கிளவியு மதனோ ரற்றே." இவை மேற்கோள். எ-று. (4)
 

134.
	உம்மையே யெதிர்மறை யெச்சமுற் றளவை
சிறப்பைய மாக்கந் தெளிவென வெட்டே.
	


91


	 (இ-ள்.) உம்மையிடைச் சொல்லா மாறுணர்த்துதும். இஃது எதிர்ம றையும்,
பிறவினமும், முற்றும், அளவையும், சிறப்பும், ஐயமும், ஆக்கமும், தெளிவும், என
எண்பொருளைக் காட்டவரப்பெறும். (உ-ம்.) வருதலுந்தீது, எ-து. எதிர்மறையாக
வாராமை தீதென்பதற்கு முரித்தென்றமையால் இதுவே எதிர்மறையும்மை. சாத்தனும்
வந்தான், எ-து. பிறரும் வந்தது விளக்கலின் இறந்ததுதழீஇய வெச்சவும்மை.
இனிக்கொற்றனும் வருவானென்னும் பொருளைத்தரின் எதிரதுதழீஇய வெச்சவும்மை.
தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார், எ-து. மூவரன்றி வேறில்லை யென விளக்கலின்
முற்றும்மை. ஒன்று மிரண்டும், பொன்னு மணியும், எ-து. எண்ணுதற் கண் வருதலின்
அளவும்மை. பலமுங்கஃசும், எ-து. நிறையளவும்மை. ஒருகோலும் அரைகோலும், எ-து.
கோலளவும்மை. ஆழாக்கும் உழக்கும் உரியும் நாழியும், எ-து. அளவினளவையும்மை.
குறவருமருளுங் குன்றம், எ-து. குன்றத்திற் குறவர் மயங்காது திரியுமுயர்வைச்
சிறப்பித்தது உயர்வுச் சிறப்பும்மை. பூனையும் புலாற்றின்னாது, எ-து. பூனையிடத்திற்
புலாற்றின்னு மிழிவைச்சிறப்பித்தது இழிவுச்சிறப்பும்மை. பத்து மெட்டும், எ-து.
ஒன்றிற்றேறாமையின் ஐயவும்மை. புலியினுங் கொடியன், கடலினும் பெரிது, எ-து.
ஆக்கவும்மை. நன்றுமன்று தீதுமன்று, ஆணுமன்று பெண்ணுமன்று, எ-து. இன்னதெனத்
தெளிந்தவிடத்து தெளிவும்மை. எச்சவும்மை இருவகை, சிறப்பும்மை இருவகை,
அளவும்மை நால்வகை. பிறவுமன்ன, -தொல்காப்பியம். - "எச்சஞ் சிறப்பே யைய
மெதிர்மறை, முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென், றப்பா லெட்டே யும்மைச்
சொல்லே." எ-து. மேற்கோள். எ-று. (5)
 

135.
	வரைப்படு மெண்ணும் வையகத் தில்லவும்
வினைப்படி னும்மை வேண்டுஞ் செவ்வெண்
ணீற்றின் வேண்டு மெச்ச வும்மையே.
 
     (இ-ள்.) உம்மையிடச்சொற் சிறப்புவிதியா மாறுணர்த்துதும். இத் துணையென்று
வரையறுத்துணரப்பட்ட பொருள்களும், உலகில்லாப் பொருள்களும், வினையொடு
கூட்டிச் சொல்லுங்கால் உம்மை கொடுத்துச் சொல்லல் வேண்டும். (உ-ம்.)
கண்ணிரண்டுஞ் சிவந்தன, காலமூன் றாங்கண்டான், எ-ம். என்னங்கைக்கு மயிரில்லை,
முயற்கோடு மாமைமயி ருங்கோழிமுலையும் பண்டுமில்லை, இக்கழுதைக்குங்
கோடில்லை, எ-ம். இவை யும்மையின்றிவரின் இரண்டன்றி வேறு கண்ணுள, எ-ம்.
மற்றோ ரங்கைக்கு மயிருள, எ-ம். முயற்கோடும் ஆமைமயிரும் கோழிமுலையும்
இன்றுள, எ-ம். மற்றைக்கழுதைக்குக்கோடுள, எ-ம். வரும். பிறவுமன்ன. ஆயினும்
இத்துணைத்தென்று எண்ணப்பட்ட பொருளின்பெயர் வினைப்படாதுவரின் உம்மை
கொடுத்தலுங் கொடாமையுமாம். (உ-ம்.) இவையிரண்டும் பசு, இவை மூன்றுங்கன்று,
எ-ம். அறமிரண்டு, குற்றமூன்று, எ-ம். மீளவும்,
	


92


	எண்காட்டு முருபின்றிச் செவ்வெண்ணாகப் பல வற்றைச் சொல்லின் ஈற்றினிடத்து
உம்மைக்கொடுக்கவுமாம். (உ-ம்.) அடகு புலால் பாகு பாளிதமு முண்ணான்,
கடல்போலுங் கல்லியவன், எ-ம். அடகுபுலால் பாகுபாளிதமு முண்ணா னென்பதாகா.
இஃது எச்சவும்மை யென்றதனா லடகுமுதலியவற்றையு முண்ணனென்பது மாயிற்று.
பிறவுமன்ன. - நன்னூல். - "செவ்வெண் ணீற்றதா மெச்ச வும்மை."
எ-து. மேற்கோள். எ-று. (6)
 

136.
	எண்வகை யெட்டனுள் ஏசெவ்வெண் ணென்றா
எனாநான்குந் தொகைபெறு மெனவொடு வும்மை
நான்குந் தொகாமை நடக்கவும் பெறுமே
யென்றென வொடுமூன்று மெஞ்சிடத் தனவுமாம்.
 
     (இ-ள்.) எண்ணிற்குரிய விடைச்சொல்லா மாறுணர்த்துதும். எண்ணின்வகை
எட்டுளவெனக் கொள்க. அவையே உருபில் செவ்வெண்ணும், எ, என்றா, எனா, என்று,
என, ஒடு, உம், என்றிவ்வேழுருபு பெற்ற வெண்ணுமாக எட்டெனப்படும். இவற்றுள்
பெயர்க்கண் வருஞ் செவ் வெண்ணும், ஏகாரவெண்ணும், என்றா வெண்ணும்,
எனாவெண்ணும், ஆகியநான்கும் ஈற்றின்கண்ணே தொகைபெற்று நடக்கும். (உ-ம்.)
சாத்தன், கொற்றன், இருவரும்வந்தார், எ-ம். சாத்தனே, கொற்றனே, தேவனே, மூவரும்
வந்தார், எ-ம். நீயென்றா, அவனென்றா, இருவரும்போமின், எ-ம். நானெனா, நீயெனா,
அவனெனா, மூவரும் வந்தனம், எ-ம். முறையேநான்குந் தொகைபெற்றவாறு காண்க.
என்று, என, ஒடு, உம், என்றிந்நான்குந் தொகைபெற்று நடக்கவுந் தொகைபெறாது
நடக்கவுமாம். (உ-ம்.) சாத்தனென்று, கொற்றனென்று, சொன்னவர் வந்திலர்; எ-ம்.
நிலனென், நீரெனவேண்டும், எ-ம். பரியொடு, கரியொடு, தேரொடுதானை பொழிந்தன,
எ-ம். நிலனுநீருந்தீயும் நல்ல, எ-ம். முறையேநான்குந்தொ கைபெறாது வந்தவாறுகாண்க.
மீளவும், நிலனும் நீரும் இரண்டும் வேண்டும், எ-ம். பிறவுந்தொகை பெற்றுவரவுமாம்.
அன்றியும் என்று, என, ஒடு, என்றிம்மூன்றிடைச்சொல் எண்ணின்கண் ஓரிடத்தே
நிற்பினும் எண்ணப்படும் பொருள்கடோறும் பிரிந்து செல்லுமென்றுணர்க. (உ-ம்.) குறள்.
"வினைபகை யென்றிரண்டி னெச்சநினையுங்காற், றீயெச்சம்போ லத்தெறும்." எ-ம்.
"பகை பாவ மச்சம்பழி யெனநான்கு, மிகவாவாமில் லிறப்பான் கண்," எ-ம். "பொருள்
கருவி காலம் வினையிட னோடைந்து, மிருடீர வெண்ணிச்செயல்." எ-ம். இவற்றை
விரித்துரைக்கில் வினையென்று, பகையென்று, எ-ம். பகையென, பாவமென, அச்சமென,
பழியென, எ-ம். பொருளோடு, கருவியோடு, காலமோடு, வினையோடு, இடனோடு, எ-ம்.
முறையே மூன்று மேனை யிடத்தும் பிரிந்து சென்ற வாறு காண்க. - நன்னூல். -
"பெயர்ச் செவ்வெண்ணே யென்றா வெனாவெண்,
	


93


	ணான்குந் தொகை பெறு மும்மை யென் றெனவோ, டிந்நான் கெண்ணு
மஃதின்றியுமியலும்." எ-து. மேற்கோள். எ-று. (7)
 

137.
	அத்தந்தி லன்றம்ம வாங்கரோ வாமா
லிட்டிகுங் குரைகா விருந்தின் றோருஞ்
சின்றந் தரனின் றுதில்பிற பிறக்கு
மன்மா மன்னோ மாதுயா மாதோ
போலும் போமெனப் பொதுவசை முப்பதே
யித்தை யத்தை யாழிக மதிமானார்
மோமியா வாழிய முன்னிலை யசைபத்தே.
 
     (இ-ள்.) பொதுவசையு முன்னிலையசையு மாமாறுணர்த்துதும், அத்து, அந்தில்,
அன்று, அம்ம, ஆங்கு, அரோ, ஆம், ஆல், இட்டு, இகும், குரை, கா, இருந்து, இன்று,
ஓரும், சின், தம், தான், நின்று, தில், பிற, பிறக்கு, மன், மா, மன்னோ, மாது, யா,
மதோ, போலும், போம், என முப்பது மூவிடத்தைம்பாற் குரியவசைச் சொல்லெனப்படும்.
(உ-ம்.) நிலத்தியல்பு, சேயிழையந்திற் கொழுநற்காணிய, அகடுகீன் றொழுகியதன்றே,
அம்மவாழிதோழி, ஆங்கத்திறனல்லயாங்கழற, குயிலாலுமரோ,
பணியுமாமென்றும்பெருமை, ஆரமொத்துளதால், பிளந்திட்டான், காண்டிகும்,
பலகுரைத்துன்பம், இவளிவட்காண்டிகா, எழுந்திருந்தேன், சேர்துமின்றே,
அஞ்சுவதோருமறனே, என்றிசின், அவர்தம்பால், நீதான், துணையாய் நின்றான்,
பெற்றாங்கறிகதில்லம்மவிவ்வூரே, ஆயனையல்லபிற, நசைபிறக்கொழிய,
கூறியதோர்வாண்மன் உப்பின்றுபுற்கையுண்கமா, பூங் கொடிப்புகலுமன்னோ,
சிறைவிரித்தாடுமாதோ, யா பன்னிருவர் மாணாக்கரகத்தியற்கு, வருந்தினைபோலும்,
வாழாதென்போம், எனவரும். அன்றியும் இத்தை, அத்தை, யாழ், இக, மதி, மான், ஆர்,
மோ, மியா, வாழிய, எனப்பத்து முன்னிலை யொன்றற்குரிய வசைச் சொல்லெனப்படும்.
(உ-ம்.) நீயொன்றுபாடித்தை, குறுமகளுள்ளிச் செல்வத்தை, செலவயர்தியாழ்,
தண்டுறையூர்காணிக. சென்மதிபெரும, மொழிமான்புலவ, அகத்தியனார் வந்தார்,
கண்டதுமொழிமோ, சென்மியா, வாழி வாழிய, என வருமுறை பற்றிக்காண்க. அன்றியும்,
இரக்கப் பொருளையும் இகழ்ச்சிப் பொருளையும் அச்சப்பொருளையும்
அதிசயப்பொருளையும் தருகிற விடைச் சொற்களுண்டு. (உ-ம்.) அம்மருங்கிற்கன்னோ,
பரற்கான மாற்றினகொல்லோ, ஓஒவுழக்குந்துயர், ஐயோவென்செய்வேன், எனவரும்.
அன்னோ, கொல்லோ, ஓஒ, ஐயோ, இவையிரக்கம். ஏஎயிவளொருத்திப் பேடியோ
வென்றார், சீசீயவன்கெட்டான், எனவரும். ஏஎ, சீசீ, இவையிகழ்ச்சி. கூகூ கொன்றான்,
ஐயையோ திருடன் வந்தான், எனவரும். கூகூ, ஐயையோ, இவையச்சம். ஆஅவிதனை
யெப்படியறிந்தான், ஓஒ நன்றாய்ச் சொன்னான், அம்மம்மா வெப்படிப்பட்ட கூத்து, என
வரும். ஆஅ, ஓஒ, அம்மம்மா,
	


94


	இவை யதிசயம். அன்றியு மித்தொடக்கத்தன. பலவுளவாயினு மவற்றை நிகண்டு திவாகர
முதலியவற்றின் கண்ணே காண்க. - தொல்காப்பியம். - "அந்திலாங்க வசைநிலைக்
கிளவியென், றாயிரண்டாகு மியற்கைத் தென்ப. - மாவென் கிளவி வியங்கோ ளசைச்
சொல். - அம்ம கேட்பிக்கும். - ஆங்க வுரையசை. - மியாயிக மோமதி யிகுஞ்சின்
னென்னு, மாவயினாறு முன்னிலை யசைச்சொல். - கொல்லேயையம்." - நன்னூல். -
"யாகா பிறபிறக்கரோ போமாதிகுஞ், சின்குரையோரும் போலு மிருந்திட், டன்றாந்தாந்
தான்கின்று நின்றசை மொழி. - மன்னேயசை நிலை யொழியிசை யாக்கங் கழிவு மிகுதி
நிலை பேறாகும். - விழைவேகால மொழியிசை தில்லை." இவை மேற்கோள். எ-று. (8)

நான்காமோத்துஇடைச்சொல்லியல். முற்றிற்று.
 

ஐந்தாமோத்து உரிச்சொல்லியல்.
Chapter V. - Attributives.
 

138.
	

உரிச்சொல் லென்ப வுரியபற் குணசொல்
லாகிப் பெயர்வினை யணைந்து வருமே.

     (இ-ள்.) மேலேவகுத்துக்கூறிய நால்வகைச்சொற்களுளிவ்வோத்தின் கண்ணே
யுரிச்சொல்லியல்பினை விளக்குதும். உரியெனப்படுவன பலவகைக்குணங்களை
யறிவிக்கும் பெயர்ச்சொற்களாம். இவ்வுரிச்சொல் குறிப்பும், பண்பும், இசையும், என
மூவகைப்படும். குறிப்பாவன - மனத்தாற்கு றித்தறியப்படுவன, பண்பாவன -
விழியாலறியப்படுவன, இசையாவன - செவியா லறியப்படுவன; இவற்றும்:-

     குறிப்புச்சொற்கள் வருமாறு:- சால், உறு, தவ, நனி, கூர், கழி, என்னுமாறு மிகுதி
யென்னுங் குறிப்பை யுணர்த்து வனவாம். (உ-ம்.) தென் மலை யிருந்த சீர்சான்
முனிவரன் - சால், உறுவளிதுரக்கும் - உறு, தவப் பல - தவ, நனிப்பயன்களை - நனி,
துனிகூரெவ்வமொடு-கூர், கழிநலம் - கழி, எனவரும். பையுள், சிறுமை, இரண்டும்
நோயையும்; இலம்பாடு, ஒற்கம், இரண்டும் வறுமையையும்; விறப்பு, உறப்பு, வெறுப்பு,
மூன்றுஞ் செறிவினையையும்; கறுப்பு, சிவப்பு, இரண்டும் வெகுளியையும்;
உணர்த்துவனாம். படர், எ-து. நினைத்தல் - செல்லுதல் - நோவு - மூன்றையும்;
செழுமை, எ-து. வளம்-கொழுப்பு - இரண்டையும்; தா, எ-து. வலி - வருத்தம் -
இரண்டையும்; உணர்த்து வனவாம். - நன்னூல். - 'சாலவுறுதவ நனிகூர் கழிமிகல்.' -
தொல்காப்பியம் - "பையுளுஞ்சிறுமையு நோயின்பொருள. - இலம்பாடொற்கமாயிரண்டும்
வறுமை. - விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே. - கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப்
பொருள. - படரே யுள்ளல் செலவுமாகும்.
	


95


	செழுமை வளனுங் கொழுப்புமாகும். - தாவேவலியும் வருத்தமுமாகும்."
இவைமேற்கோள்.
     பண்புரிச்சொற்கள் வருமாறு: கடி, எ-து. காவல், கூர்மை - விரை - விளக்கம் -
அச்சம் - சிறப்பு - விரைவு - மிகுதி - புதுமை - ஆர்த்தல் - வரைவு - மன்றல் -
கரிப்பு, என்னும் பதின்மூன்று குணங்களை யுணர்த்துவதாம். (உ-ம்.) கடிநகர் - காவல்,
கடிநுனைப்பகழி - கூர்மை, கடிமாலை - வாசனை, கண்ணாடியன்ன கடிமார்பன் -
விளக்கம், கடியரமகளீர்க்கே கைவிளக்காகி - அச்சம், அம்புதுஞ்சுங்கடியரண் - சிறப்பு,
எங்கணைகடிவிடுதும் - விரைவு, கடியண்கடவுட் கிட்டசெழுங்குரல் - மிகுதி, கடிமுரசு -
ஆர்த்தல், கடித்துக்கரும்பினை கண்டகரநூறி - வரைவு, கடிவினைமுடிகி - மன்றல்,
கடிமிளகுதின்ற கல்லாமந்தி - கரிப்பு, எனவரும். குரு, கேழ், இரண்டுநிறத்தையும்;
நொசிவு, நுழைவு, நுணங்கு, மூன்று நுண்மையும்; மழவு, குழவு, இரண்டு மிளைமையும்;
தடவு, கயவு, நளி, மூன்றும் பெருமையும்; வார்தல், போகல், ஒழுகல், மூன்றுநோவு
நெடுமையும்; உணர்த்துவனவாம். தடவு, எ-து கோணலும் - பெருமையும், பொற்பு, எ-து.
பொலிவும்; சாயல், எ-து மேன்மையும்; உணர்த்துவனவாம். - தொல்காப்பியம். -
"கடியென்கிளவி, வரவே கூர்மைகாப்பேபுதுமை, விரைவே விளக்கமிகுதிச் சிறப்பே,
யச்சமுன்றேற்றாயீரைந்து, மெய்ப்படத்தோன்றும் பொருட்டாகும்மே. - குருவுங்கெழுவு
நிறனாகும்மே. - நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை. - மழவுங்குழவு
மிளைமைப்பொருள. - தடவுங்கயவுநளியும் பெருமை. - வார்தல்போக லொழுகன்மூன்று,
நேர்புநெடுமையுஞ் செய்யும் பொருள. - அவற்றுள், தடவென்கிளவி
கோட்டமுஞ்செய்யும், களவென் கிளவிமேன்மையுஞ் செய்யும், நளியென்கிளவி
செறிவுமாகும். - பொற்பே பொலிவு - சாயன் மேன்மை." இவை மேற்கோள்.

      இசையுரிச்சொற்கள் வருமாறு:- முழக்கு - இரண்டு - ஒலி - கலி - இசை - துவை - பிளிறு - இரை - இரக்கு - அழுங்கல் - இயம்பல் - இமிழ் - குளிறு - அதிர் - குரை - கனை - சிலை - சும்மை - கௌவை - கம்பலை - அரவம் - ஆர்ப்பு - என்னுமிருபத்திரண்டு மோசையென்னு மிசையை யுணர்த்துவனமாம். மாற்றம் - நுவற்சி -
செப்பு - உரை - கரை - நொடி - இசை - கூற்று - புகறல் - மொழி - கிளவி -
விளம்பு - அறை - பாட்டு - பகர்ச்சி - இயம்பல், என்னும் பதினாறுஞ் சொல்லென்னு
மிசையை யுணர்த்துவனவாம். - நன்னூல். - "முழக்கிரட்டொலி கலியிசைதுவை
பிளிறிரை, யிரக்கழுங்கியம் பலிமிழ்குளிற திர்குறை, கனைசிலைசும்மை
கௌவைகம்பலை, யரவமார்ப்போ டின்னன வோசை." - நிகண்டு. - "மாற்றமே
மொழியே கீரேவாணியேகதை யெதிர்ப்புக், கூற்றுரைபனுவலே சொற்குயில்
வினாக்கிளவிகாதை, யேற்றிடுநொடியியைத் தோடிசை பறைவாக்குப்பாணி, தோற்றமா
நுவலினோடு மூவேழுஞ் சொல்லின்பேரே." இவை மேற்கோள். எ-று. (1)
	


96


	139.
	அறிவரு ளாசை யச்ச மான
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மைய
னினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி
துனிவழுக் காறன் பெளிமை யெய்த்த
றுன்ப மின்ப மிளைமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமத
மறவியினைய வுடல்கொ ளுயிர்க் குணந்
துய்த்தறுஞ்ச றொழுத லணித லுய்த்தலாதி
யுடலுயிர்த் தொழிற் குணம்.
 
     (இ-ள்.) உயிரின்குணமு முயிரின் றொழிற்குணமு மாமாணர்த்து தும். அறிவு,
அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, ஓர்ப்பு, கடைப்பிடி, மையல், நினைவு,
வெறுப்பு, உவப்பு, இரக்கம், நாணம், வெகுளி. துணிவு, அழுக்காறு, அன்பு, எளிமை,
எய்த்தல், துன்பம், இன்பம், இளைமை, மூப்பு, இகல், வென்றி, பொச்சாப்பு, ஊக்கம்,
மறம், மதம், மறவி, என்கிற முப்பத்திரண்டு மிவைபோல்வனபிறவு முடம்போடுகூடிய
வுயிர்களின் குணங்களாம். துய்த்தல், துஞ்சல், தொழுதல், அணிதல், உய்த்தல்,
என்கிறவைந்து மிவைபோல்வனபிறவு முடம்போடுகூடிய வுயிரினுடைய
தொழிற்குணங்களாம். இதனுண்முன்னோர் உடல் கொளுயிர்க் குணமென்று
முடலுயிர்த்தொழிற் குணமென்றுஞ் சொன்னமையா லுடலிலாவுயிரு முளவெனக்கொள்க.
உயிருள்ளபொருள்க ளோரறிவுமுதலாக வாற றிவீறாகும். - தொல்காப்பியம். - "ஒன்றறி
வதுவே யுற்றறி வதுவே, யிரண்டறி வதுவே யதனொடு நாவே, மூன்றறி வதுவே
யவற்றொடு மூக்கே, நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே, யைந்தறி வதுவே
யவற்றொடு செவியே, யாறறி வதுவே யவற்றொடு மனனே, நேரிதி னுணர்ந்தோர்
நெறிப்படுத் தினரே. - புல்லு மரனு மோரறி வினவே, பிறவு முளவே யக்கிளைப்
பிறப்பே. - நந்து முரளு மீரறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. - சிதலு
மெறும்பு மூவறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. - நண்டுந் தும்பியு
நான்கறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. - மாவு மாக்களு மையறி
வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. - மக்க டாமே யாறறி வுயிரே, பிறவு
முளவே யக்கிளைப் பிறப்பே, ஒருசார் விலங்கு மது பெறற் குரிய." இவை மேற்கோள். எ-று. (2)
 

140.
	பல்வகை வடிவிரு நாற்றமை வண்ண
மறுசுவை யூறெட் டுயிரல் பொருட்குணம்.
 
     (இ-ள்.) உயிரில்லாத பொருட்குண மாமாறுணர்த்துதும். சதுரம், நீளம், வட்டம்,
முக்கோண முதலிய வடிவுகளும்; இருவகை வாசங்களும்; வெண்மை, செம்மை,
பொன்மை, கருமை, பசுமை, எனவைவகை வண்ணங்களும்; கைப்பு, புளிப்பு, துவர்ப்பு
உவர்ப்பு, தித்திப்பு, கார்ப்பு,
	


97


	எனவறு சுவைகளும் வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை,
இழுமெனல், சருச்சரை, எனவெட்டூறுகளும்; உயிரில்லாப் பொருள்களின் குணங்களாம்.
எ-று. (3)
 

141.
	தோன்றன் மறைதல் வளர்தல் சுருங்க
னீங்க லடைத னடுங்க லிசைத்த
லீத லின்னன விருபொருட் டொழிற்குணம்.
 
     (இ-ள்.) உயிருள்ளபொருட்கு முயிரில்லாப்பொருட்குந் தொழிற்குண
மாமாறுணர்த்துதும். தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல்,
நடுங்கல், இசைத்தல், ஈதல், இவ்வொன்பது மிவைபோல் வனபிறவும் உயிருள பொருட்கு
முயிரிலாப் பொருட்கு முரிய தொழிற்குணங்களாம். இவ்வகைக் குணங்க ளலங்கார
வழியான் மாற்றவுமாமெனக் கொள்க. (உ-ம்.) பொற்றிரடுஞ்சு மாடம், சீரறந் துயின்றுவாழ்
சிறந்தநாடதே, உயிர்தோன்றிமறைந்தது, உடறோன்றி மறைந்தது, நெருப்புத்தோன்றி
மறைந்தது, என வரும். பிறவுமன்ன. எ-று. (4)
 

142.
	இருதிணை மூவிட நான்மொழி யைம்பா
லறுதொகை யெழுவழு வுருபுக ளெட்டே
தொகாநிலை யொன்பது தொகைநிலை யாறு
முப்பொழு திருசொல் லாகு பெயரே
பகுபதஞ் சுட்டு வினாவே வினையின்
மூவகை முற்று மிருவகை யெச்சமும்
வினைக்குறிப் பிடையுரி விதித்திவை முத்தமிழ்
மொழி யெனத் தெளிந்த முன்னோர்
வழியிவண் விளக்கிய வண்சொற் றொகையே.
 
     (இ-ள்.) இச்சொல்லதிகாரத்துள் விளங்கியவற்றைஇங்ஙனந் தொகை
யாகத்தந்தவாறு காண்க. (5)

     ஐந்தாமோத்து உரிச்சொல்லியன். - முற்றிற்று.

     அதிகாரம் ஒன்றிற்கு, ஓத்தைந்திற்கு, இயல்பதினொன்றிற்கு, ஆக சூ. 102.

               மேற்கோள், சூ.118. ஆக மொத்தம். சூ. 220.

     அதிகாரம் இரண்டிற்கு, மேற்கோளோடுகூடிய ஆக மொத்தம் சூ. 341.

               இரண்டாவது:-சொல்லதிகாரம்.-முற்றிற்று.
	


98


	மூன்றாவது:-
பொருளதிகாரம்.
PART III. - PORUL.
 

143.
	மெய்ப்பொருள் பகாப்பொருள் வேத முதற்பொரு
ளப்பொரு ளகத்தணிந் தறைகுவல் பொருளே.
 
     (இ-ள்.) பொருளிலக்கணமாமாறுணர்த்துதும். எந்நூலுரைப்பினு மந்
நூற்குப்பாயிரமுரைத்தே நூலுரைக்கப்படும். என்னை, `ஆயிரமுகத்தான கன்றதாயினும்,
பாயிரமில்லாது பனுவலன்றே.ழு என்றாராகலின், இஃது சிறப்புப்பாயிரம். இந்நூலிலக்கண
முரைக்கில் நூனுதலியதுரைத்தலும், நூலுளதிகாரநுதலியதுரைத்தலும், அதிகாரத்துளோத்து
நுதலியதுரைத்தலும், ஓத்திடைச்சூத்திர நுதலியதுரைத்தலும், எனநால்வகையா னுரைத்தல்
வேண்டும். அவற்றுணூனுதலிய துரைத்தலாவது:- நூலாமாறும் நூலென்ற சொற்குப்
பொருளாமாறுமுரைத்தல். அவற்று ணூலாமாறுரைக்குங்கால் நூன்மூன்றுவகைப்படும்
அவை முதனூல், வழிநூல், சார்புநூலென்றாம். என்னை, `முதல்வழி சார்பெனநூன்
மூன்றாகும்.ழு என்றாராகலின், அவற்றுண்முதனூலாவது:- வரம்பிலறிவன் பயந்ததாகும்.
என்னை, "வினையினீங்கி விளங்கிய வறிவின், முனைவன் கண்டது முதனூலாகும்."
என்றார் தொல்காப்பியனார். வழிநூலாவது:- முதனூறப்பா மரபு பின்னரும் வேண்டும்
விகற்பங்காட்டி வழுவாமற்கூறுவது. என்னை, "முன்னோர் நூலின் முடி பொருங்
கொத்துப், பின்னோன்வேண்டும் விகற்பங்கூறி, யழியா மரபினது வழிநூலாகும்."
என்றாராகலின்; சார்புநூலாவது:- அவ்விருவர்நூலின்முடிந்தபொருளை யொருசார்நோக்கி
யொருங் கொப்புப்படவைப்பது. என்னை, `இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித்,
திரிபுவே றுடையது புடைநூ லாகும்." என்றாராகலின்;
நூலென்றசொற்குப்பொருளுரைக்குங்கால், தந்திரமென்னும் வடமொழியை நூலென்று
வழங்குவது தமிழ்வழக்கெனக்கொள்க. நூனுதலியதுரைத்தலாவது:- இந்நூலின்ன
கருதிற்றென்றுரைத்தல். அது தமிழ்நுதலிற்றென்றல். தமிழ்நூன் மூன்றுவகைப்படும்.
அவை இயனூலும், இசைநூலும், நாடகநூலுமா மெனக்கொள்க. அதிகார நுதலிய
துரைத்தலாவது:- இவ்வதிகார மின்னது கருதிற்றென்றல். இவ்வதிகார மென்னு
தலிற்றோவெனின், பொருளிலக்கண நுதலிற்று. இவ்வதிகாரத்துள் விளங்கியவோத்தென்ன
பெயர்த்தோவெனின், பதிகமென்னும்பெயர்த்து. இத் தலைச்சூத்திர மென்னுதலிற்றோ
வெனின், கடவுள்வணக்கமு மதிகா ரமுநுதலிற்று. இதனுரையாவது:- "பொழிப்பெனப்
படுவது பொருந்திய பொருளைப் பிண்டமாகக் கொண்டுரைப்பதுவே." என்றாராகலின்
வறுமாறு.
	


99


	இப்பூவுலகமாயையுட்படா தெக்காலத்துந் தவிராமெய்ப் பொருளாகவும், கலப்புமின்றி
பிரிப்புமின்றி நலமெலாமொன்றென வியல்பாகக்கொண்டு பகாப் பொருளாகவும்,
வேதநூலைத்தந்த முதல்வனாகவும், வேதநூலாலடையப்படு முதற்பொருளே யாகவும்,
நிற்குமப் பொருளாகிய மெய்யங் கடவுளை மனவணியாகவேத்திப்
பொருளதிலக்கணத்தைக் கூறுதும். ஆகையில் இவ்வதிகாரம் வழுவொன்றின்றி முடிப்பது
வேண்டி யீண்டுந் தெய்வ வணக்கமுரைத்த முறையைக்காண்க. எ-று. (1)
 

144.
	பொருணூ லென்பது புகல்பொரு ணுதலிய
வுரிப்பயன் படுத்துமா றுணர்த்து நூலே.
 
     (இ-ள்.) இவ்வதிகாரம் பொருணூலினிலக்கணத்தை யுணர்த்துவதா கையி
னிச்சூத்திரத்தின்கண்ணே பொருணூலாவதிஃதெனக் காட்டுதும். இங்ஙனம்பொருளெனப்
படுவதுதான் விரித்துரைப்பானெடுத்த பொருளைப்பயன்படக்கூறும்படியைக்காட்டு
நூலேயெனக்கண்டுணர்க. ஆகையாற் புலவராலுரைக்கத் தகும்பொருளாவன:- அறம்,
பொருள், இன்பம், வீடு, என நான்கு, இவற்றுட் பொருணூற்றந்த செந்தமிழுணர்ந்தோர்
மற்றை யாவுமொழிய அகப்பொருளெனச் சிற்றின்பமொன்றையும் புறப்பொருளெனப்
படைச்சேவகமொன்றையும் விரித்துரைத்தார். அங்ஙனம் பொதுப்படாதுரைத்தநூல்
சிறுபான்மையாகையின் இங்ஙனம் அறமுதனான்கிற் கேற்பப்பொது நூலாகவிவ்வதிகார
முடியுமெனவே கொள்க. (2)
 

145.
	வழக்குத் தேற்றந் தோற்ற மெனவிம்
மூவகைப் படுமா மொழியும் பொருளே.
 
     (இ-ள்.) பொருட்கூறுபாடா மாறுணர்த்துதும். கற்றோர் பிறர்பயன் பட
விரித்துரைக்கத்தகும் பொருளெல்லாம் வழக்கும், தேற்றமும், தோற்றம், என விம்மூன்று
வகையு ளடங்கும். இவையே ஒழுக்கம், வழக்கு, தண்டம், எ-ம். கூறுவர். வடநூலார்
ஆசாரம், விவகாரம், பிராய்ச்சித்தம், எ-ம். கூறுவர். எ-று. (3)

146.
	நீதி வழங்கலு நிலைபெறத் துணிதலுந்
தீதென நன்றெனத் தெளிதலு மிவைவழக்
காதி முப்பொருட் காகும் பயனே.
 
     (இ-ள்.) கூறிய மூவகைப் பொருட்குப் பயனை யுணர்த்துதும், அவற்றுள்
வழக்குப்பயனாவது:- முன் யாதொருவன் செய்தவை நீதிநூலிற்கேலாதன வென்பதாயினு
மேற்பன வென்பதாயினும் வழக்குமுறையிற் காட்டியதனுள் குற்றந் தோற்றலுங்
குற்றங்காத்தலுமென விருவகைவழக் கென்றவாறு. அங்ஙனம் அஞ்சியோடினாரைத்
தொடர்ந்துயிர் செகுத்தலீன
	


100


	மென்று குற்றந்தோற்றலும், தன்னைக் காப்பதுவேண்டி யெதிர்த்த பகைவரைக்
கொல்வது வீரமென்று குற்றங்காத்தலு, மென்றிருவகைவழக் கெனப்படும். தேற்றப்
பயனாவது:- குறித்ததொழிலைச் செய்யத்தகுவதோ தகாததோவென வையந்தோன்றி
யிரண்டி லொன்றைத் தான்றெரிந்ததுவே தகுவதென்பதாயினுந் தகாததென்பதாயினும்
விரிவாகக்காட்டி யையந்தீர்ந்ததை யணுகவு மகற்றவு முள்ளந்தேறுதற் கேற்பக்கூறலென்
றிருவகைத் தேற்ற மென்றவாறு. அங்ஙனம் மேன்மையோர்க்கும் பணிதற்றகுமோ
தகாதோவென வையந் தோன்றித் தகுமெனப் பலவற்றைக்கொண்டு காட்டிப் பணிவதற்
கனைவருந்துணியத் தேற்றலும், தேடியபொருளை நம்பத்தகுமோ தகாதோவென
வையந்தோன்றித் தகாதென விரித்துக் காட்டியவற்றை நம்பாததற்குத்தேற்றலும்
இருவகைத் தேற்ற மெனப்படும். தோற்றப் பயனாவது:- எடுத்தபொருட் குணந்தோற்ற
விளக்கி நல்லவை புகழ்தலு மல்லவை யிகழ்தலுமென் றிருவகைப்படுந்
தோற்றமென்றவாறு. அங்ஙன மிகப்பொருட் செல்வன் பிறர்க்கீய்ந்தில்லானாகியு
மற்றிரந்தீகை வழங்கினா னென்றிவன்கொடையி னருமை தோன்ற விளக்கிப்புகழ்தலும்,
தன்றாய்ப் பசி கண்டாற்றா துண்டா னென்றிவன் கொடுமை தோன்றவிளக்கி யிகழ்தலும்,
என விவை யிருவகைத் தோற்ற மெனப்படும். ஆகையில் நீதிதன் முறைவழங்கல்
வழக்கின் கருத்தும், ஐயந்தீர்ந் தொன்றிற்றுணிதற் றேற் றக்கருத்தும், தீயவு நல்லவும்
விளக்கற்றோற்றக்கருத்து மாமெனக்கொள்க. இம்மூவகைப்பொரு டனித்தனி வழங்கு
மாயினுஞ் சிலவழி யிரண்டுங் கூடிவருமெனக் கொள்க. அங்ஙன மேலே
சொல்லப்பட்டபடி இரந்தீய்ந்த வள்ளலருங் கொடை தோற்றிப் புகழுங் காலை,
வரையாதீதற் கேனையவருந் துணியும்படியே தேற்றுத லுணர்ந்துபேசி லிதுவே
தோற்றமுந் தேற்றமு மொருப்பட வழங்குமா றெனக் கொள்க. பிறவுமன்ன. சொன்ன
விம் மூவகைப் பொருளும் இயற்றமிழானும் இசைத்தமிழானும் வேறு பாடின்றி வழங்கும்.
இவற்றிற் கெல்லாம் பொது விதியாக வதற்கதன் குறிப்பின் றகவதாயபயனை யடையும்
வழியைக்காட்டல் இவ்வதிகார நூறரும் பயனெனக் கொள்க. எ-று. (6)

முதலாமோத்து:- பதிகம்.
Ascription.
  	 

147.
	பதிகங் காரணம் பாவு தொகைதுணி
வைந்து மெலாப்பொருட் காம்பொது வழியே.
     (இ-ள்.) சொற்பொருள் பயன்படப் பொதுவழியா மாறுணர்த்துதும். சொன்ன
மூவகைப் பொருளுங் கருதியபயனையடைய சொல்லத்தகும் பொதுவழி யாதோவெனில்
பதிகமும், காரணமும், பாவும், தொகையும்,
	


101


	துணிவும், என விவ்வைந்தும் பொது வழியாகும். இவற்றை யினித் தனித்தனி
விளக்குதும். (1)
 

148.
	தெய்வ வணக்கமுஞ் செய்பொருட் டொகையுந்
செப்புவ தாகுஞ் சிறப்புப் பாயிரம்.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே பதிகமா மாறுணர்த்துதும். பதிகம், பாயிரம்,
நூன்முகம், முகவுரை, புறவுரை, புனைந்துரை, அணிந்துரை, தந்துரை, இவையொரு
பொருட்கிளவி; வழக்குமுதன் மூன்றன் முகத் துப்பதிகமே நூன்முகமாக உரைத்தல்
வேண்டும். - நன்னூல். - 'ஆயிரமு கத்தானகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே.'
எ-து. மேற்கோள். பலவகைப் பாயிரத்துள்ளே ஈண்டுச் சிறப்புப்பாயிரம்
வேண்டுவதெனக் கண்டுணர்க. சிறப்புப்பாயிரம் எத்தன்மைத்தோவெனில்,
தெய்வவணக்கமாகித்தான் விரித்துரைப்பா னெடுத்த பொருளைத் தொகைப்படக்காட்டல்.
இவற்றுட்டான் மொழியானும் பொருளானும் வழுவின்றி யுரைப்பவு மற்றையவர்
மனவெறுப்பின்றிக் கொள்ளவும் எவர்க்கும் வழுவாப் பயனுண்டாகவுங் கடவுளுதவியே
வேண்டினமையாற் றெய்வவணக்கம் வேண்டுவ தென்ப தாயிற்று. பலபொருட்
டொடர்ந்து தருங்கா லிவ்வணக்க மாதியில் வேண்டுவதன்றி யொவ்வொருவகைப்
பொருண்முகத்து வேண்டாதெனக் கண்டுணர்க. எ-று. (2)
 

149.
	பாயிரத் துப்பொருள் பகரிற் கேட்பார்க்
கிணக்க மாசை யியையவும் பொருட்டெளி
வுரிமை தோன்றவு முரைப்பது நெறியே.
 
     (இ-ள்.) பதிகத்துட் பொருட்டொகைப்படவுரைக்கு மாறுணர்த்துதும். பதிகத்துள்
தொகைப்படப் பொருளை யுரைத்துக்காட்டுந் தன்மையாற் கேட்பதற் கிணக்கமு மாசையு
மற்றையவரிடத் துண்டாகவும், தன் பொருடெளிவொடு தோன்றவும், பதிகவுரிமை
வழுவாதொழுகவு, முரைப்பது முறையெனக் கொள்க. இவற்றுட் கேட்போரிடத்தி
லிணக்கமாவதற் கவையடக்கமாகும். கேட்பதற்காசை யாவதற்கெடுத்த பொருளின்
மாட்சியு மருமையும் பயனுங்காட்டுவ தாகும். தெளிவுண்டாவதற் கேற்ற
பொருளொன்றாகச் சுருங்கச் சொல்லிப் பின்னதனுறுப்பென வதனை யிரண்டுமூன்று
பிரிவாகப்பிரிப்பவு மூன்று பிரிவுமிக்கது சிறப்புமன்று. மீண்டப் பிரிவிலொன்றாயினு
முன்றொகையாகச் சொன்ன பொருளி லடங்கா, பிரிதாய் நிற்றலும்வழுவே. அங்ஙனம்
இந்நாட்டசரன் கைக்கிணையில் லையென்பது தொகையாயுரைத்த புகழின்றோற்றப்
பொருளாம். இனிப் பிரிவாக வவன்கை பொன்மழைவழங்க வின்மையொழிதலும்
விண்மழை வழங்க வெம்பகை யொழிதலுமா மென்பது தொகைப்பொரு ளிரண்டாய்ப்
பிரித்தவாறு. இவ்வாறன்றி யவனே சொன்மழைவழங்க வறியாமை
	


102


	யொழியுமென்றாலிது முத்தொகையா யுரைப்ப வெடுத்த பொருளிலடங்காமையால்
வழுவெனக் கொள்க. பிறவுமன்ன. அன்றியும், பதிகத்துரிமை வேண்டும்.
இஃதுபொருட்குரிமையும் அளவிற்குரிமையும் எனவிருவகைப்படும். இவற்றுட்
பொருட்குரிமையாவது:- தான்விரித்துரைக்க வெடுத்த பொருட்கன்றியே மற்றொரு
பொருட்கேலாதாம்படி சிறப்பினை யுடைய பதிகங் கூற லதன்பொருட்குரிமை
யெனப்படும். இதனைப்பற்றி முன்னோர் பதிகமே நூன்முக மென்றார்.
என்னையோவெனில், அணியுடை முதலிய பலர்க்குப் பொதுமையவாகச் செய்யினும்
இருவர்க் கேற்கும் பொதுமுகச் சாயற்காண்ப தரிது. அளவிற்குரிமையாவது:- எலியுடற்கி
யானைத் தலையும் யானையுடற் கெலித்தலையு மேலாதனபோற் பொருளை
விரித்தவளவிற் கதன்முகமாகிய பதிகவளவுந் தகுவதாத லளவிற்குரிமை யெனப்படும்.
ஆயினும் பதிகவுறுப்பின் மிக்க நெடுமையிற் குறுமை நன்றெனக் கொள்க. இதற்கெலா
முதாரணமாம்படி திருவள்ளுவநாயனார் பயனென் றெடுத்துத் தேற்றப் பொருள்வகைக்
கியற்றமிழாய் விரித்து ரைப்பப்பதிகமாவது வேதநூன்முத லெவ்வகைநூலுங்
கல்லாதுணரவுஞ் சொல்லாதுணர்த்தவும் வல்லவராகி, மெய்ஞ்ஞானத் திருக்கடலாகியவொ
ருமெய்க்கடவு டன்றிருவடிமலரே தலைக்கணி யெனக் கொண்டேத்தி, யிருளிராவிடத்து
விளங்கிய வொருமீன் போலவும் பாலைச்சுரத்தரி தலர்ந்த பதுமம்போலவு
மெய்யாஞ்சுருதி விளக்காதிருளே மொய்த்த நாட்டின் கண்ணுங் கடவு ளேற்றிய
ஞானத்திருவிளக் கெறிப்பத் தெளிந் துணர்ந் தெங்குமொரு விளக்கென நின்றுயர்ந்த
திருவள்ளுவருரைத்த பலவற்றொன்றை நான்றெரிந்துரைப்பத் துணிந்தேன். அந்நாயனார்
தந்த பயனெனும் பெருங்கடலாழத்தின் மூழ்கி யாங்குடையரு மணியொருங் கெடுத்தொரு
சிறு செப்பினடைத்தாற் போலத் திருவள்ளுவரது பயனெலாம் விரித்துப் பகரும்படி
நான்வல்ல னல்லேனாகையி னக்கடற்றுறை சேர்ந்தொருமணி யெத்துக்
காட்டலுணர்ந்தேன். அவர் சொன்ன குறளி னொன்றே யிங்ஙன நான் விரித்துரைப்பத்
துணிந்தேன். அஃதாவது:- "மனத்துக்கண் மாசிலானாத லனைத்தற னாகுல நீரபிற."
எ-து. இல்லறந் துறவறமென்றிவ் விரண்டனுள்ளு மடங்கி நிற்கு மெல்லா வறங்களு
மனத்தின் றூய்மையாற் பெறும் பெருமையே தருமமெனவும், மனத்தினுண்
மாசுகொண்டவன் செய்யுந்தவமுந்தானமு மற்றையாவு மறத்தினரவமாவ தன்றி
யறத்தின்பயனுள வல்லவெனவு, மக்குறளிருபய னிவையென விரித்துக் காட்டுதும்.
விரிப்பவே மெய்யும் பொய்யும் விளக்கி யுட்பயன்றரு மெய்யறத்தின் றன்மையே
வெளியா யிஃதொன்றுணர்ந்து நாமதற்கொப்ப நடந்தாலிது வீடெய்தும் வழியெனக்
காணப்படும். பெரும்பொருணேர்ந்து பொய்ம்மணி கொள்வது கேடென்றாயினும்
பொருளைநேர்ந்து முடலை வாட்டியு முயிரை வருத்தியு மேற்கதிவீட்டிற் செல்லாச் சில
பொய்யறங்களை யீட்டுவதிலுங் கேடாமன்றோ. இதனை விலகித் தன்னுயிராக்கங் காப்பது
	


103


	வேண்டியிக்குறட்பயனாராய்வது நன்றேயெனவிப்பதிகத்துரிய
தெய்வவணக்கமுஞ்சொல்லக் குறித்தபொருளைத் தொகையாயுரைத்ததுந் தெளிவாயிரு
பிரிவாக வகுத்ததுங் கேட்பதற்கிணக்க மாவதற் கவையடக்கமு மாசையாவதற்
கப்பொருண்மாட்சியு மருமையும் பயனு முறையே வந்தவாறுகாண்க. இசைத்தமிழ்ப்
பதிகத் துதாரணமாகக் கம்பருரைத்த பதிகமுப்பாப் பாயிரத்தைக்காண்க. அவற்றுண்
முதற்பாத் தெய்வவணக்கமும் பின்னிருபாவுஞ் செய்பொருளுரைத்தலும்,
பின்னாற்பாவினோ டவையடக்கமு, மற்றவை தன்கதை மாட்சியு மருமையும் பயனும்
வந்ததறிக. எ-று. (3)
 

இரண்டாவது:- காரணம்.
2. Cause.
 

150.
	காரண வழியெனக் காட்டுரைப் பொருட்குரி
யகத்திணை புறத்திணை யாமிரு வகைத்தே.
 
     (இ-ள்.) நிறுத்தமுறையானே காரணவழியா மாறுணர்த்துதும். ஈண்டுக்காரண
மென்னுஞ் சொல்லாலுரைப் பானெடுத்த பொருளைக்காட்டற்கு தவு நியாயங்களே
வருவன வெனவு மந்நியாயங்கடோன்று மிடனேதிணை யெனவுங்கொள்க. இவையே
யகத்திணை யென்றும் புறத்திணை யென்றும் இருவகைப்படும். இவற்றையினித் தனித்தனி
விளக்குதும். எ-று. (1)
 

151.
	அகத்திணை யியல்பே யறைபடும் வகையே
பொதுச்சிறப் புவமை புறநிலை யெதிர்நிலை
கருவி காரியங் காரக முன்னவை
பின்னவை யெனவாம் பிரிவீ ராறே.
 
     (இ-ள்.) நிறுத்தமுறையானே யகத்திணையாமாறுணர்த்துதும். அவையே
யியல்புமுதலாகப்பின்னவையீறாகப் பன்னிரண்டெனப்படும். எ-று. (2)
 

152.
	அவற்றுள்,
இயல்புரைத் தொப்ப வியம்புத லியல்பே.
 
     (இ-ள்.) நிறுத்தமுறையானே யியல்பெனு முதலகத்திணையாமாறுணர்த்துதும்.
ஆகையிலவ்வவ் வியல்பினைக்கொண்டு பொருளைக்காட்ட லியல்பகத்திணை
யெனப்படும். அங்ஙன நல்லறிவில்லா ரீனரென்றுகாட்ட வுணவுமுடையு
மைம்புலநுகர்ச்சியு மற்றவுயிர்க்கும் பொதுமையவாகி நல்லறி வொன்றே மாந்தரியல்பின்
சிறப்பென்றமையா லறிவில்லாதார் மக்களெனப்படா விளங்கினோ டனையரெனப்
படுவரென்ப தியல்பெனு மகத்திணையாகும். - சிந்தாமணி. - "பெண்ணெனப்படுவ
கேண்மோ பீடில பிறப்பு நோக்கா, வுண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகு,
மெண்ணிப் பதங்கை யிட்டா லிந்திரன் மகளு மாங்கே,
	


104


	வெண்ணெய்க் குன்றெரி யுற்றாற் போன்மெலிந்து பினிற்கு மன்றே." என்றாராகையின்
மாதரதியல் பினைக் காட்டி மாதரை நம்பலாகா தென்பது காட்டினதாயிற்று. எ-று. (2)
 

153.
	தொகைவிரித் துரைத்தல் சொற்பொருள் வகையே.
 
     (இ-ள்.) வகையகத்திணையா மாறுணர்த்துதும். தொகையா
யுரைத்த பொருளை வகையறுத்தியம்புதல் வகையகத்திணையாம்.
(உ-ம்.) வந்திளை வேனிலுலாவிய வனமெலா மகிழ்ந்ததெனத் தொகைப் பொருளா
யுரைத்ததை வகையறுத் துரைப்பம். "விரைவாய் நாகம் விருப்புறி நகைப்பன,
முகைவாய்த் தாழை முறுவிக் கமழ்வன, நறைவாய்ப் பன்மலர் நயனம் விழிப்பன,
மதுவாய் வண்டின மகிழ்ந்தியா ழொலிப்பன, தீங்குரற் குயிலினஞ் சென்றுபா விசைப்பன,
வேனைப் பறவை யினப்பறை துவைப்பன, வெறிவாய் விரியிளை வேனில், செறிவாய்
வனத்துட் செருக்கி யுலாவவே." எ-து. வகையகத் திணையாம். அங்ஙனம் வனத்திற்
கிராமர் போகையி லயோத் திமாநக ரெல்லாம் வருந்தின தென்ப வகையறுத் துரைப்ப
மனிதர் புலம்பலுரைத்ததின் பின்னர்க்கம்பர் சொன்னதாவது:- "கொடியடங்கின
மனைக்குன்றங் கோமுர, சிடியடங்கின முழக்கிழந்த பல்லியம், படியடங்கலு
நிமிர்பசுங்கண் மாரியாற், பொடியடங்கின மதிற்புறத்து வீதியே, அட்டிலு மிழந்தனபுகை
யகிற்புகை, நெட்டிலு மிழந்தனநிறைந்த பால்கிளி, வட்டிலு மிழந்தன மகளிர் கான்மணித்,
தொட்டிலு மிழந்தன மகவுஞ் சோரவே. ஒளிதுறந்தன முகமுயிர் துறந்தெனத்,
துளிதுறந்தன முகிற்றொகையுந் தூயநீர்த், தளிதுறந்தன பரிதான யானையுங், களிதுறந்தன
மலர்க் கள்ளுண் வண்டினே." பலவுமிராமாயண நகர்நீங்குபடலத் திருநூற்றிரண்
டாம்பாவே தொடங்கிக்காண்க. எ-று. (4)
 

154.
	பொதுவெனப் பலவை யடக்கு மொன்றே
சிறப்பென வொன்றி னடங்கும் பலவே.
 
     (இ-ள்.) பொது வகத்திணையுஞ் சிறப்பகத்திணையு மாமாறுணர்த்துதும்.
ஆகையிற்றனக் குறுப்பெனப் பலவற்றை யடக்கிக் கொள்வது பொதுவெனவு
மொன்றினடங்கின பலவற்றுட் டனித்தனி யொவ்வொன்று சிறப்பெனவுங்கொள்க. இவ்வா
றருடைய தானம் பொறை தவ மூக்கமுத லியவெல்லாம் பொதுப்படவறமே யாகையிலறம்
பொதுவெனவுமற்றவைத் தனித்தனிச் சிறப்பெனவும்படும். பிறவுமன்ன. ஆகையிற்
றயையைப்புகழப் பொதுப்பட வறத்தின் மாட்சியைக் காட்டிப் புகழ்வது
பொதுவகத்திணையாம். கல்விபுகழ்ந்துழி திருவள்ளுவர் முதலியகற்றோர் மாட்சியைப்
புகழ்வது சிறப்பகத்திணையாம். பிறவுமன்ன. (உ-ம்.) - சிந்தாமணி. - "தேவரே
தாமுமாகித் தேவராற் றெழிக்கப் பட்டு, மேவல்செய் திறைஞ்சிக் கேட்டு மணிதமர்
பணிகள்செய்து, நோவது பெரிதுந் துன்ப நோயினுட் பிறத்தறுன்பம்,
	


105


	யாவதுந் துன்பமன்னா யாக்கை கொண்டவர்கட் கென்றான்." இதனுளாதிக் கடவுளன்றி
மற்றைத் தேவர்படுந்துன்பங்களைச் சொன்னபின் னத்தேவரு முடலுடையாராகி யடையுந்
துன்பங்காட்டப் பொதுப்பட்ட வுடலைக் கொண்டயாவர்க்கு மெல்லாந் துன்பந்தானே
யென்றுமுடித்தானாகையிற் பொதுவகத்திணை யாயிற்று. மீளவுங் காம மயக்கத்தைக்
காட்டப் பொதுப்படக் காதன்மிகுதியால்வரு மதிமயக்கங்காட்டி காதன் மிக்குழி
கற்றனவுங் கைகொடாவாதல் கண்ணகத் தஞ்சனம்போலுமால், என்பது சிந்தாமணி.
இதுவும் பொது வகத்திணையாம். எ-று. (5)
 

155.
	உவமை யெனப்பிறி தொப்ப வுரைத்தலே.
 
     (இ-ள்.) உவமையகத்திணையா மாறுணர்த்துதும். தானேயுரைப்பா னெடுத்த
பொருளை விளக்கவு மற்றவ ரவற்றை யொப்பித்துக் கொள்ளவும் பிறிதொன்றனை
யெடுத்திரண்டிற் கொப்புமை காட்டித் தன்பொருடோன்ற விளக்கியுரைப்ப
துவமையகத்திணை யெனப்படு மாகையில் விளக்குவ மையென்று
மொப்பித்துக்காட்டுவமையென்று மிவை யிருவகைப்படும். இவற்று ளத்தாட்சியு
மடங்குமென்றுணர்க. (உ-ம்.) குறள். - "சலத்தாற் பொருள்செய்தே மாத்தல் பசுமட்,
கலத்துணீர் பெய்திரீஇயற்று." எ-து. விளக்குவமை. "வாளோடென் வன்கண்ண
ரல்லார்க்கு நூலோடென், னுண் ணவை யஞ்சுபவர்க்கு.' எ-து. ஒப்பித்துக்காட்டுவமை. -
சிந்தாமணி. - காமத்தாற் கேடுவருமெனச் சச்சந்தற்கு மந்திரி காட்டிச் சொன்னதாவது:-
"காமமே கன்றி நின்ற கழுதை கண்டரு ளினாலே, வாமனார் சென்று கூடி வருந்திநீ
ரென்னும் வையத், தீமஞ்சேர் மாலை போல விழித்திடப் பட்ட தன்றே, நாமவேற்
றடக்கை வேந்தே நாமிது தெரியி னென்றான்." அன்றியுங் கணவனை யிழந்ததற்
குள்ளத் தேற வுலகினிலைத்த செல்வமில்லையென் றத் தாட்சியாகவும் பொதுப்
பொருளாகவும் காட்டினபடியாவது. - சிந்தாமணி. - "மன்னுநீர் மொக்கு ளொக்கு
மானிட ரிளைமை யின்ப, மின்னினொத் திறக்குஞ் செல்வம் வெயிலுறு பனியி னீங்கு,
மின்னிசை யிரங்க நல்யா ழினியினு மினிய சொல்லா, யன்ன தால்வினை யினாக்க
மழங்குப தென்னை யென்றான்" இதனுட்பொருட்குப் பொருள்விளக்குவமைகொண்டு
தன்பொ ருளத்தாட்சியா லொப்பித்த வுவமையுரைத்தவாறு காண்க. ஈண்டினி யணி
யதிகாரத்துவமையு முவமைவிகற்பங்களும் விரித்துரைப்பாம். எ-று. (6)
 

156.
	புறநிலை யொப்பிழி வாக்கமென மூன்றே.
 
     (இ-ள்.) புறநிலை யகத்திணையா மாறுணர்த்துதும். தான் குறித்தவற்றிற் புறத்து
மற்றொரு பொருளை யெடுத்துக் காட்டிக் குறித்த தன் பொருளை விளக்குதல்,
புறநிலையகத் திணையெனப்படும். இதுவே ஒப்பு மிழிவு மாக்க முமென மூவகைத்தெனக்
கொள்க. இவற்றுட் புறத்தெடுத்த பொருட்குத் தன் பொருளொத்ததெனி லொப்பு;
குறைந்ததெனி லிழிவு; மிக்கதெனிலாக்கமெனப்படும்.
	


106


	(உ-ம்.) "பிறர் கடுஞ்சொலின்னா னிந்நாள் பொறுத்தது கண்டு நீயும் பொறாயோ."
என்பதொப்புப் புறநிலை. 'அடிப்பாரை பொறுத்தன ரொருசொல்லா லிடிப்பாரை
பொறார்கொல்லோ.' என்பதிழிவுபுறநிலை. 'நக்களவர் நயன்கொண்ட நாட்டுநலநாடியபின்,
மக்களவர் மேனலங் கொள்வானுலக நாடாமோ.' என்பதாக்கப் புறநிலை. பிறவுமன்ன.
எ-று. (7)
 

157.
	குறித்தவை காட்ட மறுத்தவை காட்டி
யெதிரில் விளக்க லெதிர்நிலை யென்ப.
 
     (இ-ள்.) எதிர்நிலை யகத்திணையா மாறுணர்த்துதும். ஒன்றனை விளக்க வதனை
மறுத் தெதிரே நிற்கும் பொருளைக்காட்ட லெதிர்நிலை யகத்திணை யெனப்படும்.
அங்ஙன நல்லோரது மேன்மை தோன்றத் தீயோரதீனத்தைக் காட்டலுங் கல்லாமையால்
வருமகிழ்ச்சி தோன்றக் கல்விப் பயக்கும் புகழ்ச்சிகாட்டலு மெதிர்நிலை யகத்திணையாம்.
(உ-ம்.) தேம்பாவணி. "கான்சுரக்கு மிளமுல்லைநட்டுப் பொன்னாற் கடைகோலி,
வான்சுரக்கும் பனிமாலைப் பந்தர் முத்த மணற்பாய்த்தித், தேன்சுரக்கு நீரூட்டி வளர்த்த
பூங்காத் தீய்ந்தறவோ, மீன்சுரக்கு மிராவொளித்துப் போதீர் நம்மைவிட்டென்பார்."
இதனு ளொட்டெனு மலங்கார வகையாற் சூசைமாமுனி யெகீத்து நாட்டி னீங்கலின்வந்த
கேடுதோன்ற வன்னானாங் கிருந்துணர்த்தியதனால் வந்த நன்மை காட்டியவாறு காண்க.
- இருமொழிமாலை.- "கார்முகத்து முல்லை கதிர் முகத்துத் தாமரையே, சீர்முகத்துஞ்
சிந்தாப் பொறையினிதே - போர்முகத்து, வில்லெதிரே தோல்வையினு மிக்கின்னா
மெல்லியலார், சொல்லெதிரே தோலாநிலை." இதனின் மகளிரோ டெதிர்த் திகலி நின்றா
ரிகழ்ச்சி தோன்றப் போர்முகத்து நில்லா தோடின சேவகனி கழ்ச்சி காட்டப்பட்டது.
எ-று. (8)
 

158.
	காரண நான்குங் காரிய நான்கும்
விரித்துத் தன்பொருள் விளக்க லுரித்தே.
 
     (இ-ள்.) கருவியகத்திணையுங் காரியவகத்திணையுமாமாறுணர்த்தும்.
கருவியெனினுங் காரணமெனினு மொக்கு மாகையினொன்றற்குள்ள
காரணத்தைக்கொண்டாயினு மதனாலாகுங் காரியத்தைக் கொண்டாயின
மதனைவிளக்கிக்கூறல் கருவியகத்திணையுங் காரியவகத்திணையுமாமெனக்கொள்க.
இவற்று ளாக்கினா னென்னுங்கருத்தாக் காரணமு முதற்காரணமுந் துணைக்காரணமுங்
குறிப்புக்காரணமுமாகக் காரணவகை நான்கென்ப. அங்ஙனங் கடவுளுரைத்த
நூலிஃதாகையிற் பொய்யும் பிழையுமில்லதே என்பது ஆக்கினொனெனுங்
காரணவகத்திணை; மண்ணாலாய வுடலிஃதா கையி னிற்பதரிதே - இது முதற்காரண
வகத்திணை; ஐம்பொறி யுணர்ந்துந் தன்மை யறிவுளோர் நம்பா ரென்றான் - இது
துணைக்காரண வகத்திணை; பேருலகாள யான்பிறந்ததாயபின், பாருலகிழி
நலம்பற்றிநக்கவோ -
	


107


	இது குறிப்புக்காரண வகத்திணை; இந்நால்வகைக் காரணங்களால் வருங் காரியங்களைக்
கொண்டிவ்வாறு தத்தங் காரணப் பொருட்களை விளக்கி யுரைப்பது
காரியவகத்திணையாம். - குறள். - "நோயெல்லா நோய்செய்தார் மேலவாநோய்
செய்யார், நோயின்மை வேண்டு பவர்." பிறர்க்கு நோய் செய்தற் காரணமாகத் தனக்கு
நோய் காரியமாக விளையு மென்றமையாற் பிறர்க்கு நோய் செய்வ தின்னாதெனக்
காட்டின காரியவகத்திணை யாயிற்று. பிறவுமன்ன. எ-று. (9)
 

159.
	காரக மென்ப கருத்தா கருமங்
கருவி கருத்திடங் காலந் திறனேழே.
 
     (இ-ள்.) காரகவகத்திணையாமாறுணர்த்துதும். ஒன்றனைச் செய்தலிற் கூடியபலவும்
பொதுப்பெயராகக் காரகமெனப்படும். அவையே செய்பவனுஞ் செய்தொழிலு மதற்குதவு
மிருவகைக் கருவிகளு மதனாற்கருதி பயனு மதனைமுடித்தவிடமுங் காலமும்
படியுமெனக் காரக மெழுவகைப்படும். ஆகையிலொன்றனைவிளக்க விவற்றைவிரித்துக்
காட்டில் காரகவ கத்திணையா மெனக்கொள்க. இவற்றுளெல்லா நடப்பினுஞ்
சிலவொழித்துச் சில நடப்பினுமாம். (உ-ம்.) தேம்பாவணி. - "தண்டவத் தனைய
பைம்பூந் தருத்திர ணிழற்றிக் கவ்வு, மண்டபத் தொருநாள் வைகி மதுநலம் பொழிவாய்க்
கஞ்சம், விண்டவத் தொழியு மாந்தர் வீடுறச் செப்பங் காட்டி, யொண்டவத் திறைவன்
சூசை யுரைவிரி தமிழிற் சொன்னான்." இதிலே யொண்டவத்திறைவன் சூசையென்பது
கருத்தா; செப்பங்காட்டிச் சொன்னா னென்பது கருமம்; மதுநலம் பொழிவாய்க்
கஞ்சம்விண்டென்பது கருவி; அவத்தொழியு மாந்தர் வீடுறவென்பது கருத்து; தண்டவ
மண்டபத் தென்பதிடம்; ஒரு நாளென்பது காலம்; உரைவிரி தமிழி லென்பது திறன்;
என வேழும் வந்தவாறு காண்க. ஈண்டுச் சுருங்கச் சொன்னதை விரித்துரைப்பவு
மியல்பே. எ-று. (10)
 

160.
	முன்னவை பின்னவை முன்பின் னடந்தன
பன்னித் தன்பொருள் பயன்படப் பகர்தலே.
 
     (இ-ள்.) முன்னவையகத்திணையும் பின்னவையகத்திணையுமா மாறுணர்த்துதும்.
எடுத்தபொருளே தோன்றவதற்கு முன்னாயதும் பின்னாவதும் விரித்துக்காட்டல்
முன்னவை பின்னவையென விருவகை யகத்திணையாம். (உ-ம்.) விருத்தம். -
"காலைவாய் மலர்க்கமலங் காய்ந்திதட் கதவடைப்பச், சோலைவாய்ப் பறைதுவைத்த
புள்களிப்ப வெங்கதிரோன், வேலைவாயுறமேவிய கறவைகள் கரையா, மாலைவா
யிருள்வடி வொடுகங்குல் வந்ததுவே." புறநிலை. இதிலே யிராவைவிளக்குவதற்கு
முன்வரும் பலவற்றை விரித்துரைத்தமையான் முன்னவை யகத்திணை யாயிற்று. - குறள்
- "பகைபாவ மச்சம் பழியென நான்கு, மிகவாவா மில்லிறப்பான் கண்." இதிலே
	


108


	பிறமனை விரும்பலாகா தென்பது காட்ட விரும்பினபின்னர், வரும் பகைபாவ
மச்சம்பழியென நாற்கேடுகளைக் காட்டினவதனாற் பின்னவை யகத்திணையாயிற்று. -
தேம்பாவணி. - "தொல்வினை யினிய வென்று துகளுறத் தோன்றுங் காலு, நல்வினை
யரிய வென்று நடங்கெடத் தொன்றுங் காலுங், கொல்வினை நிரையச் செந்தீக்
குளிப்பநல் லுணர்விற் றாழ்ந்து, வல்வினை யூக்கம் பூண்டு மருளலென் னெஞ்சே
யென்றான்." இதிலே யருமைக்கஞ்சி நல்வினைவிடாமலு மினிமைவிரும்பித் தீவினை
செய்யாமலு முறுதிபெறும்படித் தீவினை பின்வரு நரகத் பீடைகளுணர்வது
நன்றென்றமையா லிதுவும் பின்னவை யகத்திணை யாயிற்று. இவ்வகத்திணையை 199-ம்
சூத்திரத்தில் விரித்துக் கூறுதும். (11)
 

161.
	புறத்திணை யொழுக்கநூல் புறக்கரி மூன்றே.
 
     (இ-ள்.) நிறுத்தமுறையானே புறத்திணையாமாறுணர்த்துதும். அவையே ஒழுக்கமு
நூலுங் கரியுமென மூவகைப்படும். இவற்றுளவ்வவநாட்டி னிறைவழுவின்றி
யொழுகுமுறையே ஒழுக்க மெனப்படும். இவ்வகைமுறையோடு தன்பொருளொத்ததாகக்
காட்ட லொழுக்கப்புறத் திணையாம். (உ-ம்.) குறள். - "எவ்வ துறைவ துலக
முலகத்தோ, டவ்வ துறைவ தறிவு." என்றாராகையிலுலகுள வழுவற்றமுறையோ
டொத்ததிதுவெனக் காட்டி னுலகங்கொள்ளத் தகுவதென்பது விளங்கும். அன்றியும்,
வேதநூல் நீதி நூல் மனுநூல் முதலிய நூல்வழி விலக்கினவும் விதித்தனவு மெடுத்துக்
காட்டித் தன்பொருடோன்ற விளக்கல் நூற்புறத்திணையாம். மறுப்பாரின் றிவழங்கு
நூலினிடத்துத் தானெடுத்துரைத்த பொருளே யுளவெனக்கா ட்டினெவருமையமின்றி
யொப்பித்துக் கொள்வதெளிதே. அன்றியுங் கரியெனினுங் சாட்சியெனினுமொக்கும்.
ஆகையின்மிக் கறிவுடையோருரைத்ததாயினு மெழுதினதாயினுந் தானெடுத்தபொருட்குச்
சாட்சியாகக்கொண்டு காட்டல் கரிப்புறத்திணையாம். ஆகையிலிலக்கிய வுதாரணங்களை
யெடுத்துக்காட்ட லிப்புறத்திணையாமெனக் கொள்க. இப்புறத்திணையை 199-ம்
சூத்திரத்தில் மேற்கோளாக விரித்துக்கூறுதும். எ-று. (12)
 

மூன்றாவது:- விரிவு.
3. Detail.
 

162.
	விரிவென வணிவழி விரித்த தன்பொரு
டெரியவைக் கட்செலச் செப்புத லென்ப.
 
     (இ-ள்.) நிறுத்தமுறையானே விரிவாமாறுணர்த்துதும். விரிவெனி னும்
பரவெனினுமொக்கு மாகையின் மேற்கூறிய திணைமூவைந்து மெல்
லாப்பொருட்கெல்லாம் வேண்டியவல்லவாகி யொருபொருட்குரிய சிலவுஞ்
	


109


	சில மற்றொரு பொருட்குரியவாகையிற் றான்விரித்துரைப்பவெடுத்த பொருட்
கேற்பவற்றைத் தெரிந்து போர்முகத்தணிகளைப் பலவகையூகமாகவகுத்ததுபோலக்
குறித்தபயனையடைதற்கேற்ற வொழுங்குந் தெளிவு மாம்படித் தெரிந்தநியாயங்களைப்
பகுத்தபின்னரேற்றிய சுவர்மேற்சித்திர மெழுதுவார்போலவு மெழுதிச்சுருட்டின
படத்தைவிரிப்பார்போலவு முறையிற்கிடந்த நெடும்வாளுருவி வீசுவார்போலவுந்
தானுமவற்றைத் தனித்தனி விரித்துக்காட்டல்வேண்டும். இதுவேவிரிவெனப்படும்.
இதற்கைந் தாமதிகாரத்திற் சொல்லப்படு மலங்காரங்களே வழியாம். உதாரணங்காட்ட
விதியே விளங்கும். ஆகையிற் பதிகத்துதாரணமாக வெடுத்த குறளுண் முதற்பயனாகிய
மனத்தின் றூய்மையா லறமெலாம் பெறும் பெருமையு முடையன வென்பது பல
வகத்திணையால் விரித்து விளக்கியவாறு. அறமென்னப்பட்ட யாவுமன் னுயிர்க்கோ
ருயிராகவு மனத்திற் கோரணி யாகவு நெஞ்சத்திற் கொரு செல்வமாகவும்
வழங்குமியல்பினை யுடையன வாகையிற் புறத்துத் தோன்றும் வேற்றுருக் கோலங்
காட்டி யகத்து ண்ணுழையாவறமோ வறத்தின்பேறும் பெருமையுமுடைய வென்பர்.
எப்பொருளினு மதனுண்மை யுணர்தலே ஞானம். உணர்ந்த பொருளினி வையே
நல்லவை யெனவு மிவையே யல்லவை யெனவுந் தெளிதலே காட்சி.
தெளிந்தவழியேயல்லவை யொருவிநல்லவை மருவியொழுகலே யொழுக்கம்.
இந்நல்லொழுக்கமே யனைத்தறனாகையி லிவையெலா மன முயற்சியா லாகவேண்டுழி,
மனமொவ்வா வறனெல்லாம் பொய்யென விகழப்படுவது முறையே யென்பது. இவையுமித்
தொடக்கத்தனபலவு மியல்பகத்திணையாம். அன்றியும் பிறர்நோய்கண் டகத்திரங்கா
னையோவென வாய்பொய்த்த விரக்கங்காட்டல் தயையோ. நெஞ்சங்கடுத்த சுடும்பகை
கொண்டான் முகநகநட்பதுநட்போ. ஒன்றீந்தொருபத்தடித்துக் கொள்ளத்துணிந்தான்
பிறர்க்கீந்துதவுதல் கொடையோ, மனைநகர்நாடுமகல நீக்கியுட்பொருளின்ப
மணுகுமாசைநீங்கான் மறுதுணையில்லா வனம்புக்குறைதல் துறவோ. பிணியுறப் பசிமிகப்
பகைப்பட மொய்த்ததுன்பமின்ப மென வுணர்ந் தகங்கலங்காதான் புறத்தும்
புறம்பாதிருப்பது பொறையே. பிறரழகாசை மனம்புகாத் தன்னிறைகாத்த மகளீர்புறத்துக்
காட்டுமொடுக் கமுங்கற்பே. தன்மனக்கோட்டங்கண்டு நாணுதல் நாணமே.
மனத்திலிறைஞ்சிப் பிறரைப் பணிவான் புறத்துப் பொய்யாச் சொல்லின் வணக்கமும்
பணிவே. உளத்திற்கலங்கா தெதிர்வெம்போர் முகத்தஞ்சான்றுணி வாய சேவகந்தானும்
வீரமே. இவ்வாறனைத் தறன்மனத்துக் கண்மாசில னாதலாகுமன்றோ என்பதிவையு
மித்தொடக்கத்தனபலவும் வகையகத்திணையாம். அன்றியும் உள்ளொவ்வாமற்
புறத்துத்தோன்றுஞ் சித்திரவற த்தின்சாயலும் பயன்றருநல்லறமெனப்படுமாயின்,
நான்கொண்டாட்டிய புன்மரப்பாவையுங் களிகொண்டாடிய கருங்கட்பாவையும்
வேறுபாடின்றி யொக்குமெனவும், கண்ணே கனியவழகு காட்டியுள் ளுயிர்கொல்லு நஞ்சு
	


110


	டைக்காஞ்சிரப்பழனும், புறத்துவீசு மணமேயொப்பவகத்துமினிய தேறல் கொண்டமாங்கனி
தானு மொன்றெனவும், ஒளி பெற வெழுதிய வோவி யப்படமுமுயிர்பெற்றிமிழ் வாழுடலு
மொன்றெனவுமிவை வேறல்லவெ ன்புழியன்றோ மனமுள் ளொவ்வா வரைந்தேன்
முகத்தெழும் பொய்ய றச்சாயலு நெஞ்சில் வீற்றிருந்தினிதிற் புறத்துத்தோன்று
மெய்யறமாட் சியுமொன்றெனச் சொல்லவும்படுமே. பசியபொற்றூணிரைத்து நாட்டி,
நெற்றியிற் பவளபோதிகை யேற்றுபு, வயிரநன்மணி யுத்திரம் பாய்த்திப்
பளிக்குச்சுவர்மேன் முகிலகடுரிஞ்சுயர் சிகரமொளியின் மணியாற்கூட்டி, வானிகர்மாளிகை
யருந்தொழிற்றச்சர் வழுவறமுடிப்பினு முள்ளாளரசன் கொடுங்கோலோச்சுங் குரூரனாயி
லுலகிலாயவொரு பயனுண்டோ. அவ்வாறொரு வனருமறையோதினும்,
அரும்பொருட்கலை நூலளவறக்கற்கினும், பலநதியாடினும், பலதலஞ்சேரினும், வரைவில்
கொடுப்பினும், வழுவில்நடப்பினும், கோயின்மண்டபங் குளமுதற்பற்பல
வாயிற்றருமமெனவுவந்தியற்றினும், திரட்பொருளீட்டிய செல்வந்துறப்பினும்,
மனைநகர்நாடு மகார் மனைசுற்றமுந்துறந்தரும்வனத்திடை துணையறவுறையினும்,
இன்புறுசுவை சுகமெல்லாமறுத்தே யைம்பொறிகொன்றுடலழியநோற்பினும், ஈரறவழி
யெலாநேரச்செல்லினும், மனத்தூடிய வினைமாகளனாயிற்றனக்கொருபய னுந்
தகாதெனவுணர்க. ஒளிபெறப்பசும்பொன்புறத்துப் பூசி யுளுப்பாந்தழி மரப்பாவையாகவும்,
அழகிடத்தீட்டிய கோலங்காட்டித் தீண்டாவங்கப்பா னையாகவும், வெருவிடக்கொடும்புலி
நெடுந்தோற்போர்த்துப் பசும்புன் மேயிழிவுறுங்கோவாகவும், நன்மனத்தூய்மை
நண்ணாவறனெலா முட்பயன் கண்டவ் வளவிலனைத்தையு மெண்ணுமிறைவன் முகத்துத்
தோன்றுமே. என்பதிவையு மித்தொடக்கத்தனபலவு முவமையகத்திணையா
யெதிர்நிலையும் வகையுஞ்சிறப்புங் கலந்துவந்தவாறுகாண்க. அன்றியு மிவற்றிற் கெல்லாங்
காரணமியாதெனி லுயிரு முடலுமென விரண்டொன்றாய்ச் சேர்ந்தபொருளே
மனிதனாகையி லவற்றுளுயிரளவின்றி மிக்கதாயுயிர் சேரறமு மிக்கவெனப்படும்.
உடற்கொண்டறத்திற்குரிய செயினுமவைய றமல்ல, வறவுடலாயவற்றுள்ளமுங்
கூடினுயிருளவறமாம். நிறநன்றாயினுங் காஞ்சீரநன்றோ. மீளவு முலகிருளகலச்
செங்கதிர்பரப்பிய பருதியேபோல மனவிருளிரியத் திருவொளிக் கதிரென வேத
நூலுரைத்துத் தந்தவிறை யோன் விலக்கினநீக்கலும் விதித்தனவாக்கலு
மெய்யறமாகையிலவற்கோ ரிருளில தெளிவிற்றோன்று மனத்துட்டீயவையுளவெனிற்
புறத்துக்காட்டிய நல்வினை யறமெனப்படுவதோ. இறைவற்கேற்பன செயலேயறமெனின்
மனத்தழுக்காறவற் கேலாதிருக்க மைந்தர்ப் புகழ்வதியற்றலாலாவ தென்னோ.
தானேவிதித்த வறநல் வினைக்குத் தானேபயன்றரத் தருவனாகையி லுள்ளுந்தெரிந்த
தன்கண்வெறுப்ப வொருவன்கொண்ட மனமா சுளவெனிலினித்தா
னவற்கறப்பயனைத்தருவனோ. தோன்றியொழியுமின் னொளிபோல வுட்பயனறியாமாந்தர்
வாய்ப்புகழொன்றே மனமாசொவ்வாப்புறத்தறன்
	


111


	சென்றபயனெனத் தெளிவிற்றேறிப் பொன்றின பின்னி வனால் வரும்புகழாநிற்புழி,
தானெரி நிலத்தின் வருந்தி நிந்தைப்படுவதே நீர்மையன்றெனச்
சிந்தையின்மாசிலசீரறம்போற்றுக. என்பதிவையு மித்தொடக்கத்தனபலவுங்
கருவிகாரியமென் றீரகத்திணை வந்தவாறுகாண்க. அன்றியும் கயவருந்தாமொரு
காயுங்கனியு முயிரறக்கொய்த வொருமரக் குறையு மற்றெப்பொருளும்வந்து கொளுங்கா
லுட்குறையின்மை யுணர்ந்துநாடி, கட்கினிதாகிய காஞ்சிரமொருவி முட்புறவுட்சுவை
முதிர்கனிநன் றென நோக்கியும், புறமெணா துள்ளுழிவுற்றன நீக்கியுட்டகையது
கொள்வாரன்றோ வெஞ்ஞான்றும் வானமேலினிதினழியா மெஞ்ஞானப்பயன்
றருமெய்யறமொன்றே யிவ்வாறெண்ணாதிவையே யுட்பயனவ்வவர் தாயி னுமைந்தர்
புகழுறப் புறத்துச்சாயல் போதுமென்றறத்திறத்துத் தானுளுந் தெளியாதென்னோ.
என்பதிவையு மித்தொடக்கத்தன பலவுமாக்கப் புறநிலையகத்திணையாமெனக்கொள்க.
அன்றியு "மனவிருளிரியமணிவிளக்காகத், தனியருளிறைவன் றந்தமறைநூ,
லாய்ந்துழியீண்டி யானறைந்த யாவும், வாய்ந்தமெய்யென வழங்கித்தோன்றுமே,
நும்வாயென்புகழ்நுவ ன்றுபாட, வெம்வாயெரிப் பெலிமேன்மேற்கொன்றிட,
வப்புகழ்ப்பெலிய னையநும்மன, மொப்பிலாதென்னை யொருவிநிற்றலா, லவையெலாம்
பொய்ப்பொருளாகக் கைக்கொளா, நவையென வெறுத்தனேநானே." யெனவும்,
'புணர்ந்திடத்தேவபூசையினேர்ச்சி, கொணர்ந்துழிப்பகையுட் கொண்டதென்னுணர்கி,
னகன்றப்பகைதீர்ந்தல் லாற்பூசையு, மகன்றுமறுப்பனானே.' யெனவு, 'மாசிலான்மறையென
வறைந்தபின்மனத்துண், மாசிலனாதலே மாண்புறுமனைத்தற, னல்லது தீயவை
யகத்தொளித்தினிய, வல்லுருக்காட்டன் மாணறமென்பவோ.' என்பதிவையுமித்
தொடக்கத்தனபலவு நூற்புறத்திணையாம். அன்றியும், 'ஈண்டுப்பிறிதின்வேறொருசாட்சி,
வேண்டு மோதனக்கு மெய்தானுரைப்பிற், புறத்தறச்சாயல் புகழப்பிறர்மெய்த்,
திறத்துளத்தம்மை தீயெனச்சுடச்சுடச், செறிவாய் மருளறத்தெளிந்து மெய்ம்மைகண்,
டறிவாரறப்பய னாசையுட்பட்டார்.' இதனாலன்றோ, 'வானுயர் தோற்றமெவன் செய்யுந்
தன்னெஞ்சந், தானறிகுற்றப்படின்.' என்றாரன் றியும், - 'நீட்டியசடையுமாகி நீர்மூழ்கி
நிலத்திற்சேர்ந்து, வாட்டியவுடம் பின் யாங்கள் வரகதிவிளைக்குமென்னிற்,
காட்டிடைக்காடிபோகிக் கயமூழ்கிக்காட்டுணின்றும், வீட்டினை விளைக்கும் வேண்டும்
வெளிற்றுரை விடுமி னென்றான். - நுண்டுகில் வேகலஞ்சி நெருப்பகம் பொதிந்து
நோக்கிக், கொண்டுபோய் மறையவைத்தாற் கொடுந்தழல் சுடாது மாமோ,
கண்டத்தினாவியார் தங்கடிமனைத் துறந்து காட்டுட், பண்டவா வுளநீங்கா தெற்பாவமோ
பரியு மென்றான்." இங்ஙனே புறத்தவ்வேடமன்றி யுள்ளத் தூய்மை யில்லாமுனிவர்க்குச்
சிந்தாமணியிற் சீவகன்சொன்னான். - "வானோர்புகழ்ந்து வணங்கியதுறவுந்,
தானோர்பயனிலை தாராதகத்தழுக், காறுளதே யெனி லகத்துளறத்தின், பேறுளதென்பது
பிழையோவென்பார்." என்ப
	


112


	திவையு மித்தொடக்கத்தனபலவுங் கரிப்புறத்திணையாம். இவ்வாறேனைத்
திணைவேண்டுளி விரித்துக்கூறுக. அன்றியும், கம்பருயுத்தகாண்ட மிராவணன்
மந்திரப்படலத்திற் பரதாரத்தைச் சிறைசெய்ததின்னா வென்ற வளைவிடத்துணியும்படி
தேற்றப்பொருளாய்ப் பலவகத்திணையும் புறத்திணையுங் கொண்டுரைத்தவாறுகாண்க. -
"ஓவியமமைந்த நகர்தீயுணவிளைத்தாய், கோவியல் பழிந்ததென வேறொரு குலத்தான்,
றேவியை நயந்து சிறைவைத்த செயனன்றோ, பாவியருறும் பழியிதிற் பழியுமுண்டோ."
"என்றொருவனில் லுறைதவத்தியையிரங்க, வன்றொழிலினாய்மறை துறந்து சிறைவைத்தா,
யன்றொழிவதாயின வரக்கர்புகழையா, புன்றொழிலினா மிசைபொருந்தல் புலமைத்தோ."
என்பதிவையும் பலவுமியல்பகத்திணையாம். - "தூயவர்முறைமையே தொடங்குந்
தொன்மையோ, ராயவர்நிற்க மற்றவுணராதியாந், தீயவரறத்தினாற்றேவராயது,
மாயமோவஞ்சமோ வன்மையேகொலோ." - "அறந்துறந் தமரரை வென்ற வான்றொழிற்,
றிறந்தெரிந் திடலது தானுஞ் செய்தவ, நிறந்திறம் பாவகை யியற்று நீர்மையன், மறந்துறந்
தவர்தரும் வரத்தின் மாட்சியால்." எனவிவைகாரண வகத்திணை. - "மூவரை வென்று
மூவுலகு முற்றுறக், காவலி னின்றதுங் களிப்புங் கைம்மிக, வீவது முடிவென வீத்தல்
வல்லது, தேவரை வென்றவர் யாவர் சீரியோர்." எனப்பொதுவெனுமகத்திணை. -
"வினைகளை வென்று மேல்வீடு கண்டவ, ரெனையரென்றியும்புது மிவர்தந்தீமையான்,
முனைவரு மமரரு முன்னும் பின்னரு, மனையவர் திறத்தினையாவ ராற்றினார்."
எனவெதிர்மறையகத்திணை. - "கோனகர் முழுவதுநினது கொற்றமுஞ்,
சானகியெனும்பெயருல கினம்மனை, யானவள்கற்பினால் வெந்தவல்லது, வானரஞ்
சுட்டதென்று ணரன்மாட்சியோய்." எனமுன்னவையகத்திணை. - "மீனுடை நெடுங்கட
லிலங்கை வேந்தன்முன், றானுடைநெடுந்தவந் தளர்ந்து சாய்வதோர், மானிடமடந்தையா
லென்றன்வாய்மொழித், தேனுடையலங்கலா யின்றுதேர்தியால்.' எனநூற்புறத்திணை. -
"சொல்வரம் பெரியமாமுனி வரென்பவர் கடந்துணை யிலாதோ, ரெல்வரம்
பெரியதோளிருவரு மமரரோ டுலகம் யாவும், வெல்வரென் பதுதெரிந் தெண்ணினார்
நிருதர்வேர் முழுதும் வீயக், கொல் வரென் றுணர்தலா லவரை வந்தினிய பேருறவு
கொண்டார்." எனப்புறநிலை யகத்திணை. இவ்வாறங்ஙனமுரைத்த பலவுங்காண்க.
அன்றியுஞ் சிந்தாமணியுட் சாரணர் சீவகற்குறுகி சொல்லித் துறவிற்கவன்றுணியும்
பொருட்டுத் தேற்றப் பொருளாய்த் துறவில் 138-ஞ்செய்யுட் டொடங்கி யுரைத்த
பலவற்றைக்காண்க. அவற்றுள், "பாற்கடற் பனிமதிப் பாவைத் தீங்கதிர், மேற்படி
மிகநனி சொரிய தொப்பவே, நூற்கடன் மாதவ னுனித்த நல்லறங், கோற்கடன் மன்னனுக்
குரைக்கு மென்பவே." எனவெடுத்தபொருட்டொ கையுரைத்தவாறு. -
"அருமையினெய்தும் யாக்கையும் யாக்கையினிழிவுந், திருமை நீங்கிய துன்பமுந்
தெளிபொருட் டுணிவுங், குருமை யெய்திய குணநிலை கொடைபெறு பயனும், பெருமை
வீட்டொடு பேசுவல் கேளிது பெரி
	


113


	யோய்.' என வவனுரைப்பா னெடுத்த பொருளை மேலேதொகுத்துக்
காட்டினபின்னரீங்கே பிரித்து வகுத்தவாறு காண்க. இனியப்பிரி வொன்றொன்றாய்ப்
பலதிணைவகையா லுரைப்பது கண்டுகொள்க. - "விண்டுவேய் நரலூ ன்விழைகான
வரிடமுங், கொண்டுகூர் பனிகுலைத் திடுநிலைக் களக்குறும்பு, முண்டுநீ ரெனவுரை
யினுமரியன வொருவி, மண்டுதீம் புனல்வளங் கெழுநா டெய்தலரிதே." 141. முதற்பலவும்
வகையகத்திணையா னற்பிறப்பெய்தி நல் லுடலெய்து மருமையைக் காட்டினவாறு. -
"இன்னதன்மையி னருமையி னெய்திய பொழுதே, பொன்னும் வெள்ளியும்
புணர்ந்தெனவயிற்றகம்பொருந்தி, மின்னுமொக்குளு மென்நனி வீயினும் வீயும்,
பின்னைவெண்ணெ யிற்றிரண்டபின பிழைக்கவும்பெறுமே." 149-என்பதாதி யேழுமுரைத்
தபின். - "தேங்கொள்பூங்கண்ணித் திருமுடித்திலகவெண் குடையோ, யீங் கிதன்றியு
மிமையவர்மையலாக்கடந்த, தாங்குமா வண்கைச்சக்கரமிக்குயர் பிறரும்,
யாங்கணாரவரூரொடு பெயரெமக் குரையாய்." என வெட்டுச் செய்யுளானும்
வகையகத்திணையானு மத்தாட்சியுவமையகத்திணையானு முடனில்லாமைக்காட்டினது. -
"வெவ்வினைசெய்யு மாந்தருயிரெனு நிலத்தில் வித்தி, யவ்வினை விளைவுளுண்ணுமவ்
விடத்தாவதுன்ப, மிவ்வெனக்கி ளத்து மென்றுநினப்பினும் பிணிக்குமுள்ளஞ்,
செவ்விதிற்சிறிது கூறக் கேண்மதிசெல்வவேந்தே." 154 - முதலாக 188 - ஈறாகப்
பாவத்தானரகத்தில் விளையுந் துன்பங்களைக் கண்முன்வைத்தாற்போலச் சித்திரமுதற்பல
வலங்காரவகையானும் பலதிணைவகையானும் விழுமியபொருளாயுரைத் தவாறுகாண்க.
அங்ஙனமெடுத்த மற்றவற்றையு மியல்புவமைபுறநிலை முதலியதிணைகளால் விரித்தவாறு
கண்டுகொள்க. எ-று.
 

நான்காவது:தொகையுந்துணிவும்.
4. Summary and Conviction
 

163.
	ஒருங்கு முன்விரித் துரைத்தவை மீண்டு
சுருங்கக் காட்ட றொகை யென்றாகும்.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே தொகையாமா றுணர்த்துதும். தன் பொருடோன்றப்
பலகாரணவகையால் விரித்தவற்றை யீற்றின்கண்ணொ ருங்குடன் றொகுத்துக்காட்டல்
தொகைவழி யெனப்படும். ஆகையிற்பி ரிந்த படையணிகூட்டிப் பகையைத்தாக்குவார்
போலவும், கணையேதைத் துள்ளுருவக் கூர்முனைகூட்டுவார்போலவு, மேற்றின
கோபுரமழகுபெற மேற்சிகரம் பொருத்துவார் போலவும், பூங்காவனத்திற் பிரிந்து பூத்த
பன்மல ரொரு செண்டாகத் தொடுப்பவர் போலவும், தானுநினைத்த பயனையடை
தற்பொருட்டுப் பலதிணைவகையால் விரித்துக்காட்டிய நியாயங்களொருப்
	


114


	படச் சுருக்கிக் கேட்போர்மனத் துள்ளுருவவுரைப்பது, தொகை யெனக் கொள்க. இனி
யுதாரணங்காட்டுதும். எ-று. (1)
 

164.
	பன்மனந் துணியவுட் படுத்த றுணிவாந்
துன்னிய வணித்தொகைத் துணிவிற் குரித்தே.
 
     (இ-ள்.) துணிவா மாறுணர்த்துதும். மேற்கூறியபடி விரித்தவற்றைச் சுருங்கக்காட்டி
வருகையிற் கருதியபயனை யடையும் பொருட்டு மற்றவர் துணிவதற்கேற்ப வுரைப்பது
துணிவெனப்படும். ஆகையிற் குறித்த தத்தம் பொருட்குரித்தாகக் கேட்பவர்
துயரத்திரங்கவுஞ் சினத்திலெரியவுந் தீமைக்கஞ்சவு மொன்றனை யொருவவு
மற்றொன்றனை மருவவு மல்லவை வெறுப்பவு நல்லவை விரும்புவ மற்றைப்
பற்றுதல்கிளப்பிற் கேட்டோர் மனமே தன்வசமாக்கி யுழுது வித்தியபைங்கூழ்
பழுத்துழிக்கொய்து தெளித்த செந்நெல் கொள்வது போலப் பதிகமுதலிய வழியாற்றேடிய
பயனைத்தருவது துணிவென்றுணர்க. ஆகையிலதற்கதற்கேற்ப மடக்கு வினா விபாவனை
முதலிய வலங்காரங்க ளொன்றன்மேலொன்றை யடுக்கி நடக்குந் துணிவெனக்கொள்க.
சிந்தாமணி மேற்காட்டிய துறவிடத்துப்பலவற்றை விரித்து நெடிதாயுரைத்தபின்பு,
தொகையாய்க் கூறியவாறு:- "அல்லி த்தாளற்றபோ மறாதநூலதனைப்போலத்,
தொல்லைத் தம்முடம்பு நீங்கத் தீவினைதொடர்ந்து நீங்காப், புல்லிக்கொண்டு
யிரைச்சூழ்ந்து புக்குழிபுக்குப்பின்னின், றெல்லையிறுன்பவெந்தீச் சுட்டெரித்திடுங்க
ளென்றே." - "அறவியமனத்தராகி யாருயிர்க்கருளைச்செய்யிற், பறவையுநிழலும்போலப்
பழவினையுயிரோடோடி, மறவியொன்றானுமின்றி மனத்ததே சுரக்குநல்லான்,
கறவையிற்கறக்குந்தன்னாற் காமுறப்பட்டவெல்லாம்." எனவிவைபலவு முரைத்துத்
தொகையாய்க் கூறியவாறு. - "பொய்யொடுமிடைந்த பொருளாசையுருளாய,
மைபடுவினைத்துகள் வழங்குநெறிமாயஞ், செய்தபொருள் பெய்தகலஞ் செம்மைசுடு
செந்தீக், கைதவ னுனித்த கவறாட லொழிகென்றான்" 261. என்பதிவையும் பலவுங் கூறித்
துணிவு வழங்கினவாறு காண்க. அங்ஙனந் தேம்பாவணியிற் காமம்விளைவிக்குந்
தீயவினைக் காட்டி யதனைவிடற்கு வாமனுக்குறுதி பலவற்றையும் பலதிணை வகையால்
விரிவாய்க்கூறிய பின்னர்த் தொகையுந் துணிவுமாகச் சொன்னவாறு. - "ஐம்பொறிப்
பகைகண்டஞ்சி யடக்கலினாமைபோல் வாய், வெம்பொறிப் புதவையோர்ந்து வினைபகை
சிறிதென்றெண்ணல், பைம்பொறிப் பாந்தடங் கூர்ப்பல்பட மதநீர்க்குன்றிற், செம்பொறிப்
புகைக்கண்யானைச் சிதைந் துயிர்மாளுமன்றோ." - "பிரிந்ததென்றொழித்தபாவம்
பெறுமிடத் தணுகேல்வேலோ, யரிந்ததென் றுறங்குமாசை யமைதியால் விழித்துக்கொல்லு,
மெரிந்தநின் காமத்தீயை யீற்றறவலித்ததென்னேல், கரிந்ததென்றிருந்த பற்காற்
கான்முகத்தெரியுந்தீயே." - "குலம்புரி கொடியபேய்கள் கொலைத் தொழிற்
கருவிசூழ்ந்து, சலம்புரி வலையைவைக்கத் தளைப்படிற் பிரிதலாற்றா,
	


115


	வலம்புரி தவத்தினா மவ்வலையுறா விலகல் வேண்டுங், கலம்புரி பைம்பூ மூழ்கிக்
கதிர்த்த பெரற்குன்றின் மார்போய்." - "கச்சொன் றிட்டுணர் வொடுக்கங் கட்டிமெய்ச்
சகட்டை யோட்டி, நச்சொன் றிரட்டே தச்சேற் றுண்ணல் லுயிரச் சிற்றான்மற், றச்சொன்
றிட்டூர் தறேற்றா தழும்பலர் கண்டீர் நல்லோர், மெய்ச்சொன் றிரட்டச் சிறாமுன் வீடுற
வூர்மின் பாகீர்." என்பன பலவுந் தொகையுந் துணிவும் வந்தவாறு காண்க. எ-று. (2)
 

ஐந்தாவது :- உரிமை.
5. Characteristics.
 

165.
	எப்பொரு ளெவ்வழி யியம்பினு மதற்கதற்
குரிய வுரைப்ப துரிமையாங் கால
மிடம் பண்பொழுக்கிறை யெனவைங் கூற்றே.
 
     (இ-ள்.) உரிமையு முரிமைவிகற்பமுமா மாறுணர்த்துதும். மேற்கூறி
யபதிகமுதலெவ்வழிக்கண்ணு மெவ்வகை விழுமியபொருளை யுரைப்பினு
மவற்றவற்றுரிமை வழுவாதுரைப்பது முறையெனக்கொள்க. ஆகையிற் காலமு மிடமுங்
குணமு முலகினொழுக்கமுஞ் சொல்லு மெனவைந்திணை யும்பற்றி
வருமுரிமையைவகைப்படு மெனக்கொள்க. இவற்றைத் தனித் தனி விளக்குதும். எ-று.
 

காலவுரிமை.
Time.
 

166.
	காலமே பருவம் பொழுதென விரண்டாய்ப்
பருவங் கார்கூதிர் பனிமுன்பின் வசந்த
மெரிமுதிர் வேனி லென்றிரு மூன்றே.
 
     (இ-ள்.) காலவுரிமையாமா றுணர்த்துதும். பருவமும் பொழுதுமெ
னக்காலமிருவகைத்தே. அவற்றைப் பெரும்பொழு தெனவுஞ் சிறுபொழு தெனவுங்
குறிப்பாரெனக்கொள்க. அவற்றுட் பருவமறுவகைப்படும். அவையே கார்ப்பருவம்,
கூதிர்ப்பருவம், முன்பனிப்பருவம், பின்பனிப்பருவம், இளைவேனிற்பருவம்,
முதிர்வேனிற்பருவம், எனவாறென்ப. அவையே யாவணி முதலொவ்வொன்றிற் கிருமதி
யெல்லையாக வருமெனக்கொள்க. அவற்றுளிளைவேனிலெனினும்
வசந்தமெனினுமொக்கும். ஆகையிலவ்வப் பருவத்துரிமையை யினிக்காட்டுவதும். -
இலக்கண விளக்கம். - "காரேகூதிர்முன்பனி பின்பனி, சீரிளைவேனின் முதுவேனி
லென்றாங், கிரு மூன்று திறத்ததுபெரும்பொழுதவைதா, மாவணிமுதலா விரண்டிரண்டாக,
வாடியிறுதிய வாயுங்காலே." - அகப்பொருள் விளக்கம். - "காரேகூதிர்
	


116


	முன்பனிபின்பனி, சீரிளைவேனில் வேனிலென்றாங், கிருமூன்று திறத்தது
தெரிபெரும்பொழுதே." இவைமேற்கோள். எ-று. (1)
 

167.
	கார்க்காலத் துரிமை கார்க்கா லுருட்டிய
வாடையே கோப மயிலே கேகயங்
கோடல் செங்காந்தள் கொன்றை கூதாளந்
தண்டிமி லுயவை தளவு கடம்பஞ்சனி
வெண்குருந் தலர்தலே வியங்கங் கிளிகுயி
னீங்கலே நீர்மல ரேங்க லென்ப.
 
     (இ-ள்.) கார்ப்பருவத்துரிமையா மாறுணர்த்துதும். வாடைவீசலும்; இந்திரகோபமு
மயிலுங்கேகயப்புள்ளுந் தோன்றிமகிழ்தலும்; வெண்காந் தள், செங்காந்தள், கொன்றை,
கூதாளம், வேங்கைமரம் காக்கணஞ்செடி, முல்லை, கடம்பு, காயா, குருந்தென
விவையேமலர்தலும்; அன்னங் கிளிகுயிலகன்று வருதலும்; தாமரைமுதனீர்மலரே
யொளித்தலும்; கார் ப்பருவத்துரிமை யெனப்படும். எ-று. (2)
 

168.
	கூதிர்க் குரிமை கூதிரே குருகே
வோதிமங் குரண்ட மொண்மதிச் சகோர
முதுவளை ஞண்டூ ருநத்து வத்த
னீரே தெளித னீர்மீன் சனித்தல்
காரே சூற்கொளல் பாரிசா தஞ்சந்
தாரம் பித்திகை மந்தார நாணன்
முற்றலர்ந் துவத்தலே மற்றுயிர் நைதலே.
 
     (இ-ள்.) கூதிர்ப்பருவத் துரிமையா மாறுணர்த்துதும். கூதிர்க்காற்று வீசலும், குருகு
மன்னமுங் கொக்குஞ் சகோரப்புள்ளுஞ் சங்கு நண்டு நத்தையுமென விவை மகிழ்தலும்,
நீரே தெளிதலும், மீனினஞ் சனித்தலும், மேகஞ் சூற்கொள்ளலும், பாரிசாதஞ் சந்தனஞ்
சிறுசெண்பகஞ் செம்பரத்தை நாணலென விவை மலர்தலும், ஈண்டுக் கூறிய வுயிரே
யன்றி மற்றைப் பறவை விலங்கு மக்களொருங்குடன் வருந்தலும், கூதிர்ப் பருவத்
துரிமை யெனப்படும். எ-று. (3)
 

169.
	முன்பனிக் குரிமை துன்பனிக் கடறருங்
கொண்டல் வீசலுங் கூண்டசை சிதகன்
மண்டிருட் கூகைகூன் மனமகிழ்ந் தொலித்தலு
மாந்தருச் சாமந்த மலர்தலு மிலந்தை
தீங்கனி யுதிர்தலுந் தீயெனக் குன்றி
காய்த்தலு நெல்லொடு கரும்பு முற்றலுமாம்.
	


117


	 (இ-ள்.) முன்பனிப் பருவத்துரிமையா மாறுணர்த்துதும். கொண்டற் காற்று வீசலும்,
தூக்கணங் குருவியுங் கூகையு மாந்தையுமென விவைமகிழ்தலும், மாவுஞ் சிவந்தியு
மலர்தலும், இலந்தைப் பழுத்தலும், குன்றிக் காய்த்தலும், செந்நெல் விளைதலும்,
கரும்புமுதிர்தலும், முன்பனிப் பருவத் துரிமை யெனப்படும். எ-று. (4)
 

170.
	பின்பனிக் குரிமை பேசுங் காலை
யுலவை வீசலே யுளபல புறவினம்
வலிது கூய்க்கான வாரணங் களித்தலே
கோங்கில வலர்தலே குரவ நெடும்பனை
தீங்கனி யுதவலே சிதப்பரி வெடித்தலே.
 
     (இ-ள்.) பின்பனிப் பருவத்துரிமையா மாறுணர்த்துதும். உலவைக்காற்று வீசலும்,
பலபுறவினமுங் கானக்கோழியு மெனவிவை மகிழ்தலும், கோங்குமிலவும்பூத்தலும்,
பேரீந்துபனையென்றிவையேபழுத்தலும், பருத்திவெண்சுளை வெடித்தலும்,
பின்பனிப்பருவத்துரிமை யெனப்படும். எ-று. (5)
 

171.
	வசந்தத் துரிமை வசந்தற் றேரெனுந்
தென்றலே வண்டினஞ் சிறுகிளி பூவை
யன்றிலே குயிலிவை யகமகிழ்ந் தார்த்தலே
மாங்கனி யுதிர்தலே தேங்கய மலரொடு
வகுளந் தாழை வழைசெண் பகம்பிற
முகிழினி தவிழ்த்தலே முன்கா ரிடைக்களி
மிகுவன் மயின்முதன் மெலிதலே யென்ப.
 
     (இ-ள்.) இளைவேனிற் பருவத்துரிமையா மாறுணர்த்துதும். மன்மதன்றோராகிய
தென்றல்வீசலும், பலவண்டினமுங் கிளியும் பூவையு மன்றிலுங் குயிலு மென விவை
மகிழ்தலும், மாங்கனி யுதிர்தலும், நீர்மலரன்றி மகிழ் தாழை புன்னை செண்பகம் பலவு
மலர்தலும், கார்ப்பருவத்து மகிழ்ந்தகோபங் கேகயப்புண் மயிலிவையே மெலிதலும்.
இளைவேனிற் பருவத்துரிமை யெனப்படும். எ-று. (6)
 

172.
	வேனிற் குரிமை கானிற் றூசெழக்
கோடையே வீசக் குறுகப் பேய்த்தேர்
காடையே வலியான் கம்புள் காகஞ்
சிரவ மொலித்தல் புருண்டி சிந்துரம்
பாடலம் பூத்தல் பாலைக் கனியொடு
கோடர நாவல் குலிகங் காய்த்த
னீரலகன் மற்றுயிர் சீரலகிச் சோரலே.
	


118


	 (இ-ள்.) முதிர்வேனிற் பருவத்துரிமையா மாறுணர்த்துதும். எங்குந் தூசெழும்படி
கோடைக்காற்றுவீசலும், கானற்றோன்றலும், காடையும்வ லியானும் வானம்பாடியுங்
காகமுங் கவுதாரியுமென விவைமகிழ்தலும், மல்லிகை புளி பாதிரி யென்றிவை பூத்தலும்,
பாலை காஞ்சிரம் நாவ லிலுப்பை யென்றிவைக்காய்த்தலும், நீரேகுறுகலும், ஈண்டுக்கூறிய
வுயிரேயன்றி மற்றெலாங்குழைந்து சோரலும், பூவுலகழகு குன்றவருமுதிர்வேனிற்
பருவத்துரிமையெனப்படும். ஆகையி லவ்வவப் பருவத்திம் முறைவழுவாது காத்தல்
பருவத்துரிமையெனப்படும். இவ்வாறன்றி யொன்றற்குரியன பிறிதொன்றற்குரைப்பது
பருவமலைவாம். (உ-ம்.) வெண்பா. - "வரைவாய் கனித்து மயிலகவத் தாழை, கரைவாய்
முகைத்துக் கமழ - விரைவாய்த், தளவேமு கைநெகிழத் தண்கொன்றை பூப்ப,
விளைவேனில் வந்துலவிற் றின்று." இதனின்மயில்களித்தகவலு முல்லைகொன்றை
யென்றிவைபூத்தலுங் கார்ப்ப ருவத்திற்குரியனவாகி யிளைவேனிற்பருவத் துரியனவாத்
தோன்றப்புணர் த்தமையாற் பருவமலைவாயிற்று. பிறவுமன்ன.
ஆயினுமடுத்தபருவத்துரியன வொன்றிரண்டொரோவிடத்து விரவி மயங்கினும்
வழுவன்றெனக்கண் டுணர்க. அங்ஙனம் கம்பர் கிஷிகிந்தாகாண்டக் கார்காலப்
படலத்துக்கார் கூதிரென் றிருபருவத்துக்குரியன சிலவற்றை மயங்கவைத்தவாறு காண்க.
நைடதத்தோவெனி லிளைவேனிற் படலத்திற் சொன்னதாவது:- விருத்தம். - "கள்ளுயர்த்
தலரு முல்லைக் கடிமுகை முறுவ றோன்ற, வள்ளிதழ்க் குவளை யுண்கண் மலர்ந்து
மாந்தளிர்மென் கையாற், கிள்ளை மென்குதலை சாற்றிக் கிளரொளி வண்டு பாணாற்,
றெள்விளிப் பாட வேனிற் றிருமகள் சிறந்த தன்றே." மீளவும், "அரவ மேகலை
யாயிழை யார்க்குயர், குரவம் பாவை கொடுத்த கொழுதிமென், முருகுலாமளி மொய்த்த
கடம்பினம், பரிவி னாடவெண் பந்து கொடுத்தவே." என்பனவற்றுள்ளே முல்லையுங்
கடம்புங் கார்ப்பருவத்துரிய மலராகையி லிளைவேனிற் பருவத்தலர்ந்தனவாகக்
கூறியமையாற் பருவமலைவாயிற்றென்மனார் புலவர். ஆகையிலிவ்வகை வழுவாராமற்
காத்தலறிவோர் கடனெனக்கொள்க. எ-று. (7)
 

173.
	பொழுதென மாலைக் கெழுயாமம் வைகறை
யெற்றோற்ற நண்பக லெற்பா டெனவாறே
மாலைக் குரிமை மலர்த லுற்ப லம்புள்
சோலைசேர்ந் தொலித்தல் சுரபி கரைத
றுன்னடைத் தாமரை சுளித்தெனக் கூம்பல்
கன்னடங் காம்போதி கனியப் பாடலே
யாமத் துரிமை யாகரி பாடலே
யூமன் சகோர முவரி யுவத்தலே
காம மநினதங் கரவென் றிவையே
	


119


	வைகறைக் குரிமை வாரணங் கூவன்
மெய்யெனக் கனாவுறன் மீனொளி குன்றல்
வாமமீ னுதித்தன் மாதவர் வாழ்த்த
லிராமகலி யுடனிந் தோளம் பாடலே
விடியற் குரிமை விலங்கொடு மற்றுயிர்
கடிமகிழ்ந் தெழுச்சி கானொடு கமலம்
விரிபூ மலர்தல் வெண்பனி துளித்த
றெரிபூ பாளந்தே சாட்சி பாடலே
நண்பகற் குரிமை நயத்தல் கோகம்
வெண்டே ரோடன் மேதி நீராடல்
பண்டிசை சாரங் கம்பாட லென்பவே
வெற்பாட் டுரிமை வெற்பானி ழனீளல்
வானஞ் சிவத்தன் மறியினங் குதித்தல்
கானகமாய்க் காபி கலியாணி பாடலே.
 
     (இ-ள்.) சிறுபொழுதுரிமையா மாறுணர்த்துதும். ஒளிபோ யிருளே புகும்பொழுதாகி
யொவ்வொரு பொழுதிற் கீரைந்துநாழிகை யெல்லையாக மாலையும், யாமமும்,
வைகறையும், விடியலும், உச்சிப்பகலும், மெற்பாடு மென வறுபொழுதிவையெனப்படும்.
எற்றோற்றமெனினும் விடியலெனினு மொக்கும். இவற்றுட்குவளைமலர்தலும், புள்ளினஞ்
சோலைகடோறுமடைந்து கலகலெனப்பெரி தொலித்தலும், பசுமுதற்கறவைகள்
கன்றையுள்ளிக் கரைந்து வருதலும், தாமரைகூம்பலும், கன்னடங்காம்போதியென வீரிரா
கம்பாடலும், மாலைப்பொழுதிற் குரிமையெனப்படும். ஆகரிராகம்பாடலும்,
கூகையோடுசகோர மகிழ்தலும், பெருங்கடலுவந்தெனப் பொங்கலும், காமமு
முழுதொலியின்மையுங்களவு மென்றிவை மிகுதலும், யாமப்பொழுதிற் குரிமையெனப்படும்.
கோழிகூவலும், மெய்போற்றெளிந்த கனாத்தோன்ற லும், வான்மீனொளியேகுறைதலும்,
வெள்ளிமீனுதித்தலும், மாதவரெழுந்து தேவவாழ்த்துரைத்தலும், இராமகலியிந்தோளமென
வீரிராகம்பாடலும் வைகறைப்பொழுதிற் குரிமையெனப்படும். விலங்கு பறவை மக்கண்
முதலிய வுயிரெலா மகமலர்ந்துவத்தலும், பூங்காவனத்துள் பூண்டுப்பூ கொடிப்பூ
கோட்டுப்பூ வன்றியும் நீர்ப்பூவகையுட்கமல மலர்தலும், பூபாளந்தேசாட்சி
யெனவீரிராகம்பாடலும், விடியற்பொழுதிற்குரிமையெனப்படும். சக்கரவா கப்புள்
மகிழ்தலும், கானலெனும் பேய்த்தேரோடலும், எருமைகள் நீரிற் பாய்ந்து கிடத்தலும்,
சாரங்கராகம் பாடலும், உச்சிப் பொழுதிற் குரிமை யெனப்படும். மலைமுதனிழலெலா
நீளலும், வானஞ்சிவத்தலும், பலவகை யாட்டுக்குட்டிகள் குதித்தலும், காபிகலியாணியென
வீரிராகம்பாடலும்,எற்பாட்டுப்பொழுதிற் குரிமையெனப்படும்.ஆகையி லவ்வவப் 
	


120


	பொழுதிற் குரியவை தோன்ற முறைவிடா துரைப்பது பொழு தெனுங் காலவுரி மையாம்.
இவ்வாறன்றி யொன்றற்குரிய பிறிதொன்றிற் றோன்றக்கூறல் பொழுது மலைவாம். -
வெண்பா. - "செங்கமலம் வாய்குவியத் தேங்குமு தங்கண்மலர, வெங்குநெடு வான்மீ
னினிதிமைப்பப் - பொங்குதையத், தோராழித்தேரோனெழிலாலு வந்ததே, நீராழி சூழ்ந்த
நிலம்." இதிற்றாமரை குவிதலும், குமுத மலர்தலும், வான்மீன் றோன்றலும்,
மாலைக்குரியனவாகிக் காலைக்குரியனவாக வுரைத்தமையாற் பொழுது மலைவாயிற்று.
பிறவுமன்ன. ஆயின மொரோவிடத்துச் சிறப்பித்துரைத்த பொருட் கலங்காரமாக விவ்
வாறுரைரைப்பினுஞ் சிறப்பெனக்கொள்க. (உ-ம்.) வெண்பா. - "மண்டபத்து மாணிக்கச்
சோதியால் வாவிவாய்ப், புண்டரிக மாலைப் பொழுதலருந் - தண்டரளத்,
தாமஞ்சொரியுந் தகைநிலவான் மெல்லாம்பல், பூமலருங்காலைப் பொழுது." -
இதனுட்டாமரை மாலையின் மலர்ந்ததாகவும், குமுதங் காலையின் மலர்த்ததாகவும்,
பொழுதுரிமைமாறி யுரைத்ததாயினுஞ் சிறப்ப லங்காரமாயிற்று. பிறவுமன்ன. இலக்கண
விளக்கம். - "மாலையாமம் வைகறை யென்றா, காலை நண்பக லெற்பாடென்றா,
வறுவகைத் தென்ப சிறு பொழுதவைதாம், படுசுடரமை யந்தொடங்கியையிரு,
கடிகையளவை யகாணுங்காலே." - அகப்பொருள் விளக்கம். "அவற்றுள், கூதிர்யாமமுன்
பனியென்றிவை, யோதியகுறிஞ்சிக் குரியவாகும். - வேனினண்பகல் பின்பனி
யென்றிவை, பான்மையி னுரியபாலை தனக்கே. - மல்கு கார்மாலைக் குரிய. -
இருள்புலர்காலை மருதத்திற்குரித்தே. - வெய்யோன்பாடு நெய்தற்குரித்தே. -
மருதநெய்தலென் றிவையிரண்டற்கு, முரியபெரும் பொழுதிரு மூன்றும்மே." இவை
மேற்கோள். எ-று. (8)
 

இடவுரிமை.
Place.
 

174.
	குறிஞ்சி பாலை முல்லை மருத
நெய்த லைந்திணைக் கெய்திய பெயரென
வரையே சுரமே புறவே பழனந்
திரையே யவையவை சேரிடந் தானு
நிரையே யைந்திணை நிலமெனப் படுமே.
 
     (இ-ள்.) நிறுத்தமுறையானே யிடவுரிமையாமாறுணர்த்துதும். இடவ குப்பினுண்
முதல்வகுப்பாகக் குறிஞ்சி பாலை முல்லை மருத நெய்த லென விவையைந்நிலமெனவு
மைந்திணையெனவும் வழங்கும். இவற்றுண்மலையு மலைசார்ந்தவிடமுங் குறிஞ்சி;
சுரமுஞ் சுரஞ்சார்ந்தவிடமும் பாலை; காடுங்காடுசார்ந்தவிடமு முல்லை; வயலும்
வயல்சார்ந்தவிடமு மருதம்; கடலுங்கடல்
	


121


	சார்ந்தவிடமு நெய்தலென்று வகுத்தார் புலவரென்றறிக. - அகப்பொருள் விளக்கம். -
"வரையே சுரமே புறவே பழனந், திரையே யவையவை சேர்தருமிடனே, யெனவீ
ரைவகைத் தனையிய னிலமே." எ-து. மேற்கோள். இவற்று ளொவ்வொரு திணைக்கு
வேறாகச் சில பொருள் வகுத்தவை கருப்பொருளென்றார் கற்றோர். இவை வருமாறு.
எ-று. (1)
 

175.
	தெய்வஞ் செல்வர் சேர்குடி புள்விலங்
கூர்நீர் பூமர முணாப்பறை யாழ்பண்
டொழிலெனக் கருவீ ரெழுவகைத் தாகும்.
 
     (இ-ள்.) கருப்பொரு ளென்பவை யிவையென வுணர்த்துதும். தெய்வ முந்
தலைவனொடு தலைவியுங் குடியும் பறவையும் விளங்கு முரு நீரு மலரு மரங்களும்
விளையு முணாவும் பறையும் யாழு மிசைப்பாட்டுந் தொழிலு மெனச் சொல்லப் பட்ட
பதினான்கு கருப்பொரு ளொவ்வொரு திணைக்கு வேறு வேறாக வுளவென வகுத்தார்
கற்றோர். இவற்றுளோரிட வெல்லையுளடங்கா வெவ்விடத்து மெக்காலத்து மனைத்துலகு
மனைத்துயிருந் தானுள வாக்கவு நிலையி னிறுத்தவு முழுதற வொழிப்பவும் வல்லவொரு
மெய்க்கடவு ளன்றிக் குறுங்கோற் றேவராகப் பலரிலரென்று மெய்ம்மறை நூலாலறிவோ
மாயின மிந்நாட்டிருள் வழிவழங்கு முறையைச் சொல்லிக் காட்டுதும். - இலக்கண
விளக்கம். - "ஆரணங் குயர்ந்தோ ரல்லோர் புள்விலங், கூர்நீர் பூமர முணாப்பறை
யாழ்பண், டொழி லெனக் கருவீ ரெழுவகைத் தாகும்." எ-து. மேற்கோள். எ-று. (2)
 

176.
	குறிஞ்சிக் கருப்பொருள் குமரன் றெய்வமே
வெறியணிப் பொருப்பன் வெற்பன் சிலம்பன்
குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
குறத்தியர் கிளிமயின் மறப்புலி குடாவடி
கறையடி சீயஞ் சிறுகுடி யருவி
நறுஞ்சுனை வேங்கை குறிஞ்சி காந்த
ளாரந் தேக்கதி லசோக நாகம்
வேர லைவனந் தோரை யேனல்
கறங்கிசைத் தொண்டகங் குறிஞ்சியாழ் குறிஞ்சி
வெறிகொ ளைவனம் வித்தல் செறிகுரற்
பைந்தினை காத்தல் செந்தே னழித்தல்
செழுங்கிழங் ககழ்தல் கொழுஞ்சுனை யாடலே.
 
     (இ-ள்.) குறிஞ்சிக் கருப்பொருளா மாறுணர்த்துதும். குமரன் றெய்வமே;
பொருப்பனும் வெற்பனுஞ் சிலம்பனுங் குறத்தியுங் கொடிச்சியுந் தலைவனொடு
	


122


	தலைவியே; குறவருங் கானவருங் குறத்தியருங் குடியே; கிளியுமயிலு முரியபறவையே;
புலியுங் கரடியும் யானையுஞ் சிங்கமும் விலங்கே; சிறுகுடி யூரே; அருவியுஞ் சுனையு
நீரே; வேங்கையுங் குறிஞ்சியுங் காந்தளுஞ் சந்தனமுந் தேக்கு மகிலு மசோகும்
புன்னையு மலரே மரமே; மூங்கினெல்லு மைவனநெல்லுந் தோரைநெல்லுந் தினையு
முணாவே; தொண்டகம் பறையே; குறிஞ்சியாழ் யாழே; குறிஞ்சி யிசைப்பாட்டே; வெளி
கொள்ளலும் ஐவனம் விரைத்தலும் பைந்தினை காத்தலுந் தேனை யழித்தலுங் கிழங்கு
தோண்டலுஞ் சுனையிற் குளித்தலுந் தொழிலே; என விப்பதினால் வகையுங் குறிஞ்சிக்
கருப்பொருளா மெனக் கொள்க. எ-று. (3)
 

177.
	பாலைக் கருப்பொருள் பகவதி தெய்வமே
காளை விடலை மீளி யெயிற்றி
யெயின ரெயிற்றியர் மறவர் மறத்தியர்
புறாப்பருந் தெருவை செந்நாய் குறும்பு
குழிவறுங் கூவல் குராஅ மராஅ
வழிஞை பாலை யோமை யிருப்பை
வழங்குகதி கொண்டன செழும்பதி கவர்ந்தன
பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்
பகலிற் சூறை பரிவெழுந் தாடலே.
 
     (இ-ள்.) பாலைக் கருப்பொருளா மாறுணர்த்துதும். காளி தெய்வமே; காளையும்
விடலையு மீளியு மெயிற்றியுந் தலைவனொடு தலைவியே; எயினரு மெயிற்றியரு மறவரு
மறத்தியருங் குடியே; புறாவும் பருந்துங் கழுகும் பறவையே; செந்நாய் விலங்கே; குறும்பு
தானூரே; கேணி நீரே; குராவு மராவுஞ் சிறுபூளையும் பாலையு மாவுங் கள்ளியு மலரே
மரமே; ஓடிவழியிற் பறித்தனவும் புக்குமறு நன்னாட்டிற் றிருடினவு முணாவே; துடி
பறையே; பாலையாழ் யாழே; பஞ்சுரமும் வெஞ்சமமு மிசைப்பாட்டே; பகற்சூறை குளித்த
றொழிலே; என விப்பதினால் வகையும் பாலைக் கருப்பொருளா மெனக் கொள்க.
எ-று. (4)
 

178.
	முல்லைக் கருப்பொருண் முராரி தெய்வமே
தொல்லைக் குறும்பொறை நாடன் றோன்றன்
மடியாக் கற்பின் மனைவி கிழத்தி
யிடைய ரிடைச்சிய ராய ராய்ச்சியர்
கான வாரண மான்முயல் பாடி
குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை
நிறங்கிளர் தோன்றி பிறங்கலர்ப் பிடவங்
கொன்றை காயா மன்றலங் குருந்தக்
	


123


	தாற்றுக் கதிர்வரகு சாமை முதிரை
யேற்றுப் பறைமுல்லை யாழ்சா தாரி
சாமை வரகு தரமுடன் வித்த
லவைகளை கட்ட லரிதல் கடாவிடல்
செவிகர் கொன்றைத் தீங்குழ லூதன்
மூவின மேய்த்தல் சேவினந் தழுவல்
குரவை யாடல் குளித்தல் கான்யாறே.
 
     (இ-ள்.) முல்லைக் கருப்பொருளா மாறுணர்த்துதும். விட்டுணு தெய்வமே;
குறும்பொறை நாடனுந் தோன்றலுங் கற்பின் மனைவியுங் கிழத்தியுந் தலைவனொடு
தலைவியே; இடையரு மிடைச்சியரு மாயரு மாய்ச்சியருங் குடியே; காட்டுக்கோழி
புள்ளே; மானு முயலும் விலங்கே; பாடி யூரே; குறுஞ்சுனையுங் கான்யாறு நீரே; துளசியு
முல்லையுங் காந்தளுங் கொன்றையுங் காயாவுங் குருந்தமு மலரே மரமே; வரகுஞ்
சாமையுங் காராமணிப் பயனு முணாவே; பம்பைப் பறையே; முல்லையாழ் யாழே, சாதாரி
யிசைப் பாட்டே; சாமை வரகு விதைத்தலு மவற்றின் களைகளைக் கட்டலு மவற்றை
யறுத்தலுங் கடாவிட் டவற்றைத் தெழித்தலுங் கொன்றையங் குழலூதலும் பசுமுதல்
மூவின மேய்த்தலு மிடபந் தழுவலுங் குரவை யாடலுங் கான்யாறு குளித்தலுந் தொழிலே;
என விப்பதினால் வகையு முல்லைக் கருப்பொருளா மெனக்கொள்க. எ-று. (5)
 

179.
	மருதக் கருப்பொருள் வாசவன் றெய்வமே
விருதமை யூரன் வெண்டார் கிழவன்
கெழுதகு கற்பிற் கிழத்தி மனைவி
யுழவ ருழத்தியர் கடையர் கடைச்சியர்
மழலை வண்டான மகன்றி னாரை
யன்னம் போதா நன்னிறக் கம்புள்
குருகு தாரா வெருமை நீர்நாய்
பெருகிய சிறப்பிற் பேருர் மூதூர்
யாறு மனைக்கிண ரிலஞ்சி தாமரை
நாறிதழ்க் கழுநீர் நளிமலர்க் குவளை
காஞ்சி வஞ்சி பூஞ்சினை மருதஞ்
செந்நெல் வெண்ணெ லந்நெல் லரிகிணை
மன்றன் முழவ மருதயாழ் மருத
மன்றணி விழாக்கொளல் வயற்களை கட்ட
றோயதல் கடாவிடல் பொய்கையா றாடலே.
	


124


	 (இ-ள்.) மருதக் கருப்பொருளா மாறுணர்த்துதும். இந்திரன் றெய்வமே; ஊரனுங்
கிழவனுங் கிழத்தியு மனைவியுந் தலைவனொடு தலைவியே; உழவரு முழத்தியருங்
கடையருங் கடைச்சியருங் குடியே; கொக்கு மன்றிலும் நாரையு மன்னமும் போதாவுங்
கம்புளுங் குருகுந் தாராவும் பறவையே; எருமையும் நீர்நாயும் விலங்கே; பேரூரு மூதூரு
மூரே; யாறு நீரே; மகிழுந் தாமரையுங் கழுநீருங் குவளையுங் காஞ்சியும் வஞ்சியு
மருதமு மலரே மரமே; செந்நெல்லும் வெண்ணெல்லு முணாவே; கிணையு மனப்பறையும்
பறையே; மருதயாழ் யாழே; மருத மிசைப்பாட்டே; திருவிழா வழங்கலும் வயலிற்
களைகட்டலு நெல்லை யறுத்தலுந் தெளித்தலுங் குள நீராடலும் யாற்றுநீர் குளித்தலுந்
தொழிலே; என விப்பதினான்கு மருதக் கருப்பொருளா மெனக்கொள்க. எ-று. (6)
 

180.
	நெய்தற் கருப்பொரு ணீராள் வருணனே
மொய்திரை சேர்ப்பன் முன்னீர் புலம்பன்
பரத்தி நுளைச்சி பரதர் பரத்தியர்
நுளையர் நுளைச்சிய ரளவர ளத்தியர்
காக்கை சுறவம் பாக்கம் பட்டின
முவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல்
கண்டகக் கைதை முண்டக மடம்பு
கண்டல் புன்னை வண்டிமிர் ஞாழல்
புலவுமீ னுப்பு விலைகளிற் பெற்றன
நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை
விளரியாழ் செவ்வழி மீனுப்புப் படுத்த
லுணக்கல் விற்றல் குணக்கட லாடலே.
 
     (இ-ள்.) நெய்தற் கருப்பொருளா மாறுணர்த்துதும். வருணன் றெய்வமே;
சேர்ப்பனும் புலம்பனும் பரத்தியு நுளைச்சியுந் தலைவனொடு தலைவியே; பரதரும்
பரத்தியரு நுளையரு நுளைச்சியரு மளவரு மளத்தியருங் குடியே; கடற்காக்கைப்
பறவையே; சுறா விலங்கே; பாக்கமும் பட்டினமு மூரே; உவர் நீர்க்கேணியுங் கடலு
நீரே; தாழையு முட்செடியு மடம்பு முள்ளிச் செடியும் புன்னையுங் கோங்கு மலரேமரமே;
புலவு மீனுமுப்பும் விற்றுக்கொண்டனவு முணாவே; மீனுங் கோட்பறையும் பம்பையும்
பறையே; விளரியாழ் யாழே; செவ்வழி யிசைப்பாட்டே; மீனுப்புப் படுத்தலு மீனை
யுணக்கலு முணங்கியவற்றை விற்றலுங் கடனீர் குளித்தலுந் தொழிலே;என
விப்பதினால்வகையு நெய்தற் கருப்பொருளா மெனக்கொள்க. ஆகையி லிவையு
மித்தொடக்கத் தனபலவு மொவ்வொரு நிலத்திற் குரியவாகி யொன்றன் பொருண்
மற்றொன்றற் குரையாது முறையைக் காப்பதிட வுரிமை யெனப்படும். எ-று. (7)
	


125


	181. 	இடனெனப் படுவது மலைநா டியாறே.
 
     (இ-ள்.) மற்றொரு வகுப்பிட வுரிமையாமாறுணர்த்துதும். மேற்கூறிய வைந்திணை
வகுப்பன்றி மலையு நாடும் யாறுமென மற்றொரு மூவகைப்படு மிடமெனக்கொள்க.
இவற்றுட் பொதியமு மிமயமு முதலிய மலைகளே மலையும், மகதமுதற் பதினெண்பாடை
நிலங்களே நாடும், கங்கை பொருநை காவிரி முதலிய யாறுகளே யாறுமெனக்கொள்க.
இவற்று ளொன்றன் பொருண் மற்றொன்றி னுளவாகச் சொல்லாததற் கதற்குரிய வற்றைத்
தந்துரைப்ப துரிமையெனப்படும். இவ்வாறன்றிப் பொன்மலைச் சந்தன மெனவுந்
தென்மலை மதகரியெனவும் பொதியிற் குரியன பொன்மலைக்கண் ணுளவாகவும்,
பொன்மலைக்குரியன பொதியின்கண் ணுளவாகவு முரைப்பின் மலையெனு
மிடவழுவாமெனக்கொள்க. பிறவுமன்ன. அங்ஙன மொவ்வொரு மலைநாடி யாறுகட்கு
முரிமையைத் தமிழ்நூலிடத்துக்காண்க. ஆயினு மொன்றனைப் புகழுமிடத்
திவ்வுரிமைமாறி யில்லனவு முளவெனப் புனைந்துரையாகச் சொல்லினும் வழுவென்
றிகழா தலங்கார மென்று கொள்பவர் முற்றறி வுடையோ ரெனக் கண்டுணர்க -
தண்டியலங்காரம். - "இடமெனப் படுவது மலைநாடியாறே" எ-து மேற்கோள். எ-று. (8)
 

பண்புரிமை.
Nature.
 
182. 	பண்பெனச் சாதியும் பற்றலு மளவையும்
வண்ணமும் பலவும் வகுத்தனர் புலவர்.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே பண்புரிமையா மாறுணர்த்துதும். ஈண்டுப்
பண்பெனுஞ் சொல்லா லவனவன் பிறந்த சாதியு நெஞ்சிற் பற்றிய பற்றுதலு நால்வகை
யளவு மைவகை வண்ணமு மறுவகைச் சுவையு மெழுவகை யிசையு மெண்வகையூறு
முதலிய பலவும் வரப்பெறும். இவற்றை யினித் தனித்தனி விளக்குதும். எ-று.
 

சாதித்தொழிலுரிமை.
Caste Employment.
 
183. 	வன்னியர் மன்னர் வணிகர் சூத்திர
ரென்னிவர் நால்வர்க் கியல்வன வுரைக்கி
லோதற் றொழிலுரித் துயர்ந்தோர் மூவர்க்கு
மல்லாத கல்வி யெல்லார்க்கு முரித்தே.
	


126


	 (இ-ள்.) நிறுத்தமுறையானே சாதியுரிமையாமாறுணர்த்துதும். ஆகையில் அந்தண
ரரசர் வணிகர் சூத்திரரென விந்நாட்டில் வழங்கு முயர்சாதியிற் பிறந்த நால்வராகி
மற்றவ ரிழிந்தோரெனப் படுவரென் றுணர்க. இந்நாட்டு வழக்கம்பற்றி யவ்வவச்
சாதிக்குரிய தொழிலை விளக்குதும். ஆகையி னாவினாற் கற்குந்தொழிலுள் வேதத்தை
யோதியுணர்த லந்தண ரரசர் வணிகரென மூவர்க்கு முரித்தே யொழிய சூத்திரர்க்குத்
தகாதெனவும், வேதநூலொழித்தொழிந்தகல்வியாவையு முணர்த னால்வர்க்கு
முரித்தெனவுங் கூறுவாரெனக்கொள்க. ஆயினும் வாயாலுணப்படு முடற்குணா யார்க்கும்
பொதுமைய வாகையிற் காதாலுணப்படு முயிர்க் குணவாகிய மெய்ம்மறையோதல்
சிலர்க்கு விலகல் கொடுமையன்றோ. மீளவு மறையே பரகதி வழியைக்காட்டுவ
தாகையில் அனைவரும் பொதுப்பட வக்கதிக் குரியராகப் பிறந்த பின்ன ரவ்வழி
யுணர்தல் பொதுமைத் தன்றென விதிப்பது நிறையோ. ஆகையில். வெண்பா. -
"பூரியர்க் கோதன்மின் பொய்யா மறையென்பா, ராரியராய்த் தாங்கண் டறியாரோ -
பேரலையு, மொய்மணலார் கானகமு முட்கடமு நீர்மல்கப், பெய்முகில் வான்பின்றாச்
சிறப்பு" - "கற்றொத் தொழுகார்க்குக் காசறுத்த வேதநூல், சொற்றற்க வென்பார்க்குத்
தோன்றாரே - பற்றற்ற, காவியு நீலமுநீவிக்கதிர்க்கையான், மேவியவிண்வேந்தனன்பு."
என்றார்மெய்ம்மறை யாசாரியனார். - இலக்கணவிளக்கம். -
"ஓதற்றொழிலுரித்துயர்ந்தோர்மூவர்க்கும்" - "அல்லாக் கல்வி யெல்லார்க்கு முரித்தே."
இவைமேற்கோள். எ-று. (1)
 

184.
	படைக்கலம் பயிறலும் பகடாதி யூர்தலு
முடைத்தொழில் பின்மூவர்க் குரைத்திசி னோரே.
 
     (இ-ள்.) இதுவுமது. படைக் கலங்களை வீசி யெறிந்தே யதெஃகிச் செய்தொழிற்
கற்றலும் யானையுங் குதிரையுந் தேரு மேறி யூர்தலுமாக நாவினாற் கற்குந் தொழி
லல்லாத தொழில்க ளந்தணரொழித் தொழிந்த மூவர்க்கு முரிய வென்பார். -
இலக்கணவிளக்கம். - "படைக்கலம் பயிறலும் பகடு பிறவூர்தலு, முடைத் தொழி
லவர்க்கென வுரைத்திசினோரே." எ-து. மேற்கோள். எ-று. (2)
 

185.
	அறப்புறங் காவ லனைவர்க்கு முரித்தாய்
மற்றைக் காவல் கொற்றவர்க் குரித்தே.
 
     (இ-ள்.) இதுவுமது. அறப்புறங் காவலென்றும், நாடுகாவலென்றும், காவ
லிருவகைப்படும். இவற்று ளறப்புறங் காவலே நால்வர்க்கும் பொதுமைத்தாகி நாடுகாவ
லரசர்க் குரித்தெனக்கொள்க. - இலக்கண விளக்கம். - "அவற்றுள், அப்புறங் காவ
லனைவர்க்கு முரித்தே" - "மற்றைக் காவல் கொற்றவர்க் குரித்தே." இவை மேற்கோள்.
எ-று. (3)
 

186.
	வேதமாந்தர் வேந்த ரென்றிரு வர்க்குந்
தூது போதற் றொழிலுரித் தாகும்.
	


127


	 (இ-ள்.) இதுவுமது. வேற்றரசர்கட்குத் தூதுரை யுரைக்கப் போத லந்தணர்க்கு
மரசர்க்கு மூரித்தெனக் கொள்க. எ-று. (4)
 
187. 	சிறப்புப் பெயர்பெறிற் செப்பிய விரண்டு
முதற்குரிய மரபின வொழிந்தோ ரிருவர்க்கும்.
 
     (இ-ள்.) இதுவுமது. அரசனாற் சிறப்புப் பெயரைப் பெற்றவ ராயின வணிகர்
சூத்திரரென்று மிருவர்க்கு நாடு காவற் றொழிலுந் தூது போதற் றொழிலு முரியன
வெனக் கண்டுணர்க. ஆகையிற் சொல்லப் பட்ட தொழில்களு மித்தொடக்கத்தன பலவு
மொருவர்க் குரியனவாகி மற்றொருவர்க் குரியன வாகக்கூறா தம்முறை காப்பது சாதி
யுரிமையா மெனக் கொள்க. எ-று. (5)
 

பற்றுதலுரிமை.
Relation.
 
188. 	வெறுப்புவப் பிரக்கம் வெகுளி நாணந்
திறத்துணி வச்சந் தேறா மயலவாப்
பலவு மக்கட் பலபற் றென்ப
பற்றுறும் வழியும் பற்றுற் றார்க்கு
மற்றுறு மியற்கையும் பற்றிறு வகைத்தே.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே பற்றுத லுரிமையா மாறுணர்த்துதும். வெறுப்பு
முதலாகச் சொல்லப் பட்டவையும் பலவு மக்களிடத்துத் தோன்றும் பற்றுதலாகும்.
ஆகையிற் கேட்போ ரிடத்துத்தா னப்பற்றினைக் கிளப்புந் தன்மையும் பற்றுடையார்க்
கியலுந் தன்மையு மறிந் தம்முறையே பிறழா துரைப்பது பற்றுத லுரிமை யெனப்படும்.
இவற்றுட் கேட்போர் மனதி லொன்றன்மேல் வெறுப்பு மொன்றன் மேலாசையு மோரிடத்
தச்சமு மோரிடத் தூக்கமு மிவர்க்கே யிரக்கமு மவர்க்கே வெகுளியு மித்தொடக்கத்தன
பல பற்றுதலைக் கிளப்புதல் கற்றோர் தொழிலேயாகி யதற்கதற் குரியபொருளு முரிய
வணியுந்தான் றெரிந்துரைப்ப தறிவோர் கடனெனக் கொள்க. அன்றியுஞ் சொல்லப்பட்ட
பலவகைப் பற்றுத லெழும்பின தன்மையான் மனிதரும் பலகுண முடையராவர்.
அங்ஙனங் கடுஞ்சினத் தா னினைவு மொழியு நடையும் வேறாயவன்றான் சினமேயாறி
நாணங்கொ ண்டக்கா லவ னினைவு மொழியு நடையும் வேறா மலவோ. பிறவுமன்ன.
ஆகையி லெழும்பின வல்லவப் பற்றுதற் குரியவை செப்புத துரிமையாமெனக் கொள்க.
இவ்வழியும் வழுவாது காப்பது கற்றோர் கடனே. எ-று.
	


128


	வடிவுமுதலியவுரிமை.
Form Etc.
 

189.
	வடிவள வூறு மற்றவை பொதுமை
கடியச் சிறப்பிற் காட்ட லுரிமை.
 
     (இ-ள்.) வடிவு முதற் குணவுரிமையா மாறுணர்த்துதும். சதுர முதற் பலவடிவு
மெண்முத லளவும் வெம்மைமுத லெண்ணூறு முதலிய குணங்களு ளொன்றற் குரியன
மற்றொன்றற் குரியவாகத் தோன்ற வுரைப்பது குண வழுவாகும். பற்பல பொருட்குப்
பொதுப்பட நிற்குங் குணங்களைச் சொல்லினும் வழுவன் றாயினும் பொதுப்படா ததற்
குரியவைச் சொல்லுதல் சிறப்பாகிக் குண வுரிமையா மெனக் கொள்க. அங்ஙனம்
பைந்தினை யென்பது பைங்கூழுக் கெல்லாம் பொதுக்குணமாம். செறிகுரற் றினை
யெனவுந் தாற்றுக் கதிர் வரகெனவுஞ் சிறப்புடைக் குண வுரிமையாம். பிறவுமன்ன.
இவ்வகை யுரிமையே தன்மை யலங்கார மெனவும்படு மாதலா லணியதிகாரத் துள்ளுங்
காண்க. எ-று.
 

ஒழுக்கவுரிமை.
Conduct.
 

190.
	ஒழுக்க மென்பதீண் டுலக முறையே.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே யொழுக்க வுரிமையா மாறுணர்த்துதும். தம்மு
ளொவ்வா முறைகளைத் தோற்றா தோற்ற முறைகொண் டுலக வியற்கை பிறழா துரைப்ப
தொழுக்க வுரிமை யெனப்படும். (உ-ம்.) வெண்பா. - ``அலைகடல்க ளேழுதூர்த்
தந்தரத்தி னூடே, மலையனைய மால்யானை யோட்டிக் - கலவரை, நீறாக்கி
வையநெடுங் குடையின்கீழ் வைத்தான், மாறாச்சீர் மானித்தார் மன்.ழுழு என்ப திதனுளொரு
நிலவேந்தனை யெழுகடலைத் தூர்த்தா னெனவு மாகாயத்தில் யானையோட்டிப்
பகைவரை வென்றா னெனவும் வந்தமையா லுலகிலொழுகா முறையா யொழுக்க
வழுவாயிற்று. பிறவுமன்ன. எ-று.
 

சொல்லுரிமை.
Speech.
 

191.
	சொல்லெனப் படுவ தன்றொகுதி நான்கவற்றுட்
சனுக்கிரகஞ் சங்கதந் தேவர் மொழியே
யவப்பிரஞ் சனமொழி யாமிழி சனர்க்கே
வொவ்வொரு நாட்டிடை யுரைப்பது பாகத
	


129


	மிதுமூ வகைத்தாய் வடமொழி திரிவன
தற்பவம் பிறவும் பொதுமைய தற்சமஞ்
சிறந்தொன்றற் குரியன தேசிக மென்ப.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே சொல்லுரிமையா மாறுணர்த்துதும். சனுக்கிரக
மென்றும், சங்கத மென்றும், அவப்பிரஞ்சன மென்றும், பாகத மென்றும், சொல்வகை
நான்காக வகுத்தார் புலவர். இவற்றுட் சனுக் கிரகமுஞ் சங்கதமுந் தேவர்
மொழியெனவும், அவப்பிரஞ்சன மிழிசனர் மொழியெனவும், பாகத மெல்லா நாட்டிலு
மெல்லார் தம்மாலும் வழங்கு மொழியெனவுங் கண்டுகொள்க. அன்றியும் பாகத
மூவகைத்தாகித் தற்பவந் தற்சமந் தேசிக மெனப்படும். இவற்றுள் ஆரியத்திற்கேயுரிய
சிறப்பெழுத்தானும், பொதுவுஞ் சிறப்புமாகிய வீரெழுத்தானுமாகிய வாரிய மொழி தமிழிற்
சிதைந்து வருவன தற்பவ மெனப்படும். (உ-ம்.) சுகி, போகி, சுத்தி, அரன், அரி, பாபம்,
அபாபம், நயம், நிதியம், நதியம், எனவரும். அன்றியும், ஆரியத்திற்குந் தமிழிற்கும்
பொதுவெழுத்தானாகிய வாரியமொழி தமிழில் வழங்குவன தற்சம மெனப்படும். (உ-ம்.)
அமலம், கமலம், காரணம், மலையம், மாருதம், குங்குமம், உலகம், எனவரும்.
அன்றியும், ஆரிய வெழுத்துக்கள் சிதைந்து தமிழில் வழங்குமாறு சிலகூறுதும்:-
ஆரியத்து ளேழாமுயிரானது, இ, இரு, வாகவுந் திரிந்து வரும். (உ-ம்.) இடபம், எ-ம்.
இருடி, எ-ம். வரும். அன்றியும், பதினாறாமுயிர் னகரமாகவே னும் மகரமாகவேனுந்
திரிதலும், கெடுதலும், பெறும். (உ-ம்.) காமன், நாகம், எ-ம். அரி, எ-ம், வரும்.
அன்றியும், ஆ, மொழியிறுதியில், ஐ, எ-ம். ஈ, மொழியிறுதியில், இ, எ-ம். திரியும்.
(உ-ம்.) மாலை, எ-ம். கௌரி, எ-ம். வரும். அன்றியும் கவ்வல்லாத மூன்றும், க, எ-ம்.
சவ்வல்லாத மூன்றும், ச, எ-ம். டவ்வல்லாத மூன்றும், ட, எ-ம். தவ்வல்லாத மூன்றும்,
த, எ-ம். பவ்வல்லாத மூன்றும், ப, எ-ம். திரிந்து வரும். (உ-ம்.) நகம், நாகம், மேகம்,
எ-ம். சலவாதி, விசயம், சருச்சரை, எ-ம். கடிநம், சடம், கூடம், எ-ம். தலம், திநம், தரை,
எ-ம். பலம், பந்தம், பாரம், எ-ம். முறையே திரிந்து வந்தன. அன்றியும், ஜ,
மொழிக்கிடையில் யகரமாகத் திரிந்து வரும். (உ-ம்.) புயம், கயம், எ-ம். வரும்.
அன்றியும், மொழி முதலில், ச, எ-ம். மொழியிடையில், ச, என்றாயினும், ய, என்றாயினுந்
திரிந்துவரும். (உ-ம்.) சங்கரன், சிவன், எ-ம். அங்குசம், பாசம், எ-ம். தேயம், வயம்,
எ-ம். வரும். அன்றியும், ஷ, முதலில், ச, எ-ம். இடையிலுங் கடையிலும், ட, எ-ம்.
திரிந்து வரும். (உ-ம்.) சண்முகம், எ-ம். சடங்கம், எ-ம். விடம், எ-ம். பாடை, எ-ம்.
வரும். ஸ, முதலினுங் கடையினும், ச, எ-ம். இடையில் சகர மாகவேனுந் தகர
மாகவேனுந் திரிந்து வரும். (உ-ம்.) சபை, எ-ம். அசி, எ-ம். வாசம், எ-ம். ஆதநம்,
மாதம், எ-ம். வரும். அன்றியும், முதலிற் கெட்டும், இடையினுங் கடையினுங் ககரமாகத்
	


130


	திரிந்து வரும். (உ-ம்.) அரன், அரி, எ-ம். ஓமம், எ-ம். தாகம், மோகம், அகி, மகி.
எ-ம். வரும். அன்றியும், க்ஷ, முதலில் ககர மாகவும் இடையினுங் கடையினும் இரு
ககரமாகவுந் திரிந்து வரும். (உ-ம்.) கீரம், எ-ம். அக்கம், பக்கம், குக்கி, பக்கி, எ-ம்.
வரும். ய, மொழிமுதலில் தன்முன் னிற்கு மேனைய மெய்களோ டிணைந்து வருங்கால்
முன்னின்ற மெய் இகரம் பெறும்; இகரம் பெறுங்காற் சிலவிடத்து யகரங் கெடும். (உ-ம்.)
தியாகம், நியாயம், வியோமம், எ-ம். விவகாரம், எ-ம். வரும். அன்றியும், ய,
மொழிக்கிடையில் தன்முன்னின்ற மற்றை மெய்களோ டிணைந்துவருங்கால், முன்னின்ற
மெய்க்கு இகரம் பெற்றும், சிலவிடத் தம்மெய் இகரம் பெற்று மிகாமலும் வரும். (உ-ம்.)
வாக்கியம், நாட்டியம், புண்ணியம், எ-ம். காமியம், காரியம், காவியம், ஆசியம், எ-ம்.
வரும். அன்றியும், ர, மொழிமுதலில் தன்முன்னின்ற மெய்யோடி ணையுங்கால்,
முன்னின்ற மெய் இகரம் பெற்றும், சிலவிடத்து உகரம் பெற்றும் வரும். (உ-ம்.) கிரமம்,
திரவியம், விரதம், எ-ம். குரோதம், சுரோத்திரியம், எ-ம். வரும். அன்றியும், ர, இடையி
லவ்வா றிணைந்துவரின், முன்னின்ற மெய் யிரட்டி இகரம் பெறும். (உ-ம்.) வக்கிரம்,
வச்சிரம், சூத்திரம், என வரும். அன்றியும், ர, பின்னின்ற மெய்யோடிணைந்து
வருங்கால் உகரம் பெற்று வல்லொற் றிரட்டி வரும். சில விடத்து இகரமும் பெற்று
வரும். (உ-ம்.) அருக்கன், அருச்சனை, வருணம், எ-ம். பரிசம், விமரிசம், எ-ம். வரும்.
அன்றியும், ல, முதலில் முன்னின்ற மெய்யோ டிணைந்துவரின், முன்னின்றமெய் இகரம்
பெறும். சிலவிடத்து உகரம் பெறும். (உ-ம்.) கிலேசம், மிலேச்சன், எ-ம். சுலோகம், எ-ம்.
வரும். அன்றியும், ல, இடையி லவ்வாறிணையின் முன்னின்ற மெய்மிக் கிரகம் பெறும்.
(உ-ம்.) சுக்கிலம், என வரும். அன்றியும், ம, முன்னின்ற மெய்யோ டிணைந்துவரின்,
முன்னின்ற மெய் உகரம் பெறும். வகரமுன் னவ்வாறு நின்றமெய் மிக்கு உகரம் பெறும்.
(உ-ம்.) பதுமம், எ-ம். பக்குவம், எ-ம். வரும். அன்றியும், மொழிக் கீற்றில்வருங் ககர
முதலிய வொற்றுக்கள் மிக்க உகரம் பெறும். (உ-ம்.) வாக்கு, திக்கு, விராட்டு, மருத்து,
அப்பு, என வரும். அன்றியும், உற்பவம், அற்பம், பற்பம், அத்தம், சத்தம், சத்தி, என
விங்ஙனஞ் சிதைந்து வருவனவும் பிறவும் வழக்குநோக்கி யறிக. இவை நிற்க அவ்வவ
நாட்டார் சொல்லேயாய் பிறபாடை நோக்காதன வெல்லாந் தேசிக மென்பார். (உம்.)
நிலம், நீர், தீ, வளி, வெளி, சோறு, பாகு, பாளிதம். பிறவுமன்ன. ஆயினு மற்றிருவகைச்
சொல்லே நல்லவாயினுந் தேசிகச் சொல் லொவ்வொரு நாட்டிற்குரிய சொல்லென்
றமையாற் றேசிகச் சொல்லாற் செப்புவ துரிமையா மெனக்கொள்க. எ-று. (1)
 

192.
	உறுப்புச் செய்யுளென் றுரைப்ப தற்பவச்
சிறப்புரை விரைவிச் செப்பிய செய்யுளே.
	


131


	 (இ-ள்.) தற்பவமொழிக்குச் சிறப்புவிதியை யுணர்த்துதும். தேசிகச் சொல்லொடு
வடமொழியிற்றிரிந்த தற்பவச்சொல் லொன்றிரண்டுங்கலந்து வந்த செய்யுள் கேட்போர்க்
கின்பமாக வழங்கு முறுப்புச் செய்யு ளெனப்படும். (உ-ம்.) கட்டளைக்கலித்துறை. -
"கருணாம்பரியாய்ப் பாவாதிவினையிருட்கங்குலற, வருணாம்பரியாக
வந்துதித்தாளேயனைத்துயிரா, ரிருணாம்பரிதருஞ் சீலத்துவான் கதியெய்தவிவ,
டெருணாம்பரிதாஞ்சரணாம்புயஞ் சென்னி சேர்த்துகவே." - வெண்பா. -
தராதரத்தொப்பத்தராதலத்தோங்கி, வரா தரத்தந்தரத்தில்வாழ்ப, - பராகச்,
சிரசரணாகத்திரவிதிங்கண் மீன்பூண்டாள், கரசரணாதிதொழிற்கண்டு,'
எ-ம். பிறவுமன்ன. எ-று. (2)
 
193. 	கொங்கண மகதங் கோசலந் துளுவஞ்
சிங்களஞ் சீனஞ் சிந்து திராவடம்
வங்கஞ் சாவக மராடங் கலிங்க
மங்கஞ் சோனக மருணங் கவுசலம்
பப்பரங் காம்போசம் படைமூ வாறனுண்
மருவூரின் மேற்குங் கருவூரின் கிழக்கு
மருதை யாற்றின் றெற்கும் வைகை
யாற்றின் வடக்குஞ் செந்தமிழ் நிலனே
பாண்டிகுட்டம் பன்றி கற்கா
வெண்குடம் பூழி மலாடு சீதம்
புன்னா டருவா வருவா வடதலை
யெனச்செந் தமிழ்சூழ் பன்னிரு நாடே.
 
     (இ-ள்.) இங்ஙனம் வழங்குநா டிவையென வுணர்த்துதும். அவ்வவ நாட்டுப்
பாடைமொழியைத் தேசிகமென்று மேற்கூறின வதனா லிங்ஙனம் பாடை வேற்றுமைப்
பற்றி வேறுவேறாக வழங்குநாடுகள் கொங்கண முதலாகக் காம்போச மீறாகச்
சொல்லப்பட்ட மூவாறுமென் றுணர்க. உலகில் வழங்கு மெண்ணிறந்த பாடையு நாடுகளு
முளவென்றாயினுங் குறுகிய தமிழ்நாட் டெல்லையுள் ளறியப்பட்ட பாடை யிவையே.
ஆகையி லிங்ஙனம் வழங்குந் தேசங்களைம்பத்தாறென்பன வாயினு மவற்றுள் வழங்கும்
பாடைகள் பதினெட்டென்ப. ஆகையி லிவற்றுளொழிந்த அவந்தி, கௌடம், காம் பிலி,
குகுதம், மச்சம், குரு, கேகயம், தவத்தவம், பாஞ்சாலம், காந்தாரம், மாளவம், நிடதம்,
குடகம் தெலுங்கம், கன்னடம், கொல்லம், கலிங்கம், பல்லவ மென விவைபலவு
முன்சொன்ன பதினெட்டுள்ளு மடங்குமெனக் கொள்க. அன்றியு
மவற்றுட்டிராவடமொன்று தமிழ்நாடாகும். தமிழுமிரு வகைத்தாகிப் பதின்மூன்று
குறுநிலத் துளடங்கிச் செந்தமி ழென்றொரு நிலத்திலும், கொடுந்தமி ழென்றொரு
பன்னிரு நிலத்திலும் வழங்கும். அவற்றி னெல்லையும் சூத்திரத்திற் காண்க.
	


132


	ஆகையி லெல்லாந் தமிழ்ச் சொல்லாயினு மவ்வவ நாட்டுத் தேசிகச் சொல்லாகப்
பலமொழி தத்தங் குறிப்பான் வழங்கும். (உ-ம்.) தென்பாண்டிநாட்டார் ஆவினை -
பெற்றம், எ-ம். குட்டநாட்டார், தாயை - தள்ளை, எ-ம். பன்றிநாட்டார், செறுவை -
செய், எ-ம். கற்காநாட்டார், வஞ்சரை - கையர், எ-ம். வேணாட்டார், தோட்டத்தை -
கிழார், எ-ம். குடநாட்டார், தந்தையை - அச்சன், எ-ம். பூழி நாட்டார், சிறுகுளத்தை-
பாழி, எ-ம். மலாடுநாட்டார், தோழியை - இகுளை, எ-ம். சீதநாட்டார், தோழனை -
எலுவன், எ-ம். புனனாட்டார், தாயை - ஆய், எ-ம். அருவாநாட்டார், சிறுகுளத்தை -
கேணி, எ-ம். அருவா வடதலைநாட்டார், புளியை - எகினம், எ-ம்.
இத்தொடக்கத்தனபலவு மவ்வவத் தமிழ் நாட்டார் வழங்குவரெனக் கண்டுணர்க. கொடுந்
தமிழ்நாடு 12, - வெண்பா. - "தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வெண்பூழி, பன்றி
யருவா வதன்வடக்கு - நன்றாய, சீதமலாடு புனனாடு செந்தமிழ்சே, ரேதமில் பன்னிரு
நாட்டெண்." எ-று, (3)
 

194.
	செந்தமிழ் வழக்குரை செப்புங் காலை
யிலக்கண முடைய திலக்கணப் போலி
மரூஉவென் றொருமூ வகைத்தா மியல்பு
மிடக்க ரடக்கன் மங்கலங் குழூஉக்குறி
யெனுமுத் தகுதியோ டிருமூன் றாகும்.
 
     (இ-ள்.) செந்தமிழ்ச் சொல்லுரிமையா மாறுணர்த்துதும். செந்தமிழ் வழக்குச்சொல்
லாறுவகைப்படும். அவற்று ளிலக்கண மொழியும், இலக்கணப்போலி மொழியும், மரூஉ
மொழியு மென்பன மூன்று மியல்பு வழக்கு. இடக்க ரடக்கல், மங்கலமரபு, குழூஉக்குறி,
என்பன மூன்றுந் தகுதிவழக்கு. ஆகையி லிலக்கண முறையால் வருவன இலக்கண
மொழியெனப்படும். (உ-ம்.) நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், கூழ், பால், பாகு, பாளிதம்,
எ-ம். வரும். இலக்கண மில்லாதெனினும் மிலக்கண முடையனபோலச் சான்றோரால்
வழங்குவன இலக்கணப்போலி மொழியெனப்படும். (உ-ம்.) இல்முன் - முன்றில், எ-ம்.
கோவில் - கோயில், எ-ம். பொதுவில் - பொதியில், எ-ம். யாவர் - யார், எ-ம். கண்மீ
- மீகண், எ-ம். எவன் - என், எ-ம். வரும். இலக்கணமுறையிற் சிதைந்து வருவன
மரூஉமொழி யெனப்படும். (உ-ம்.) சோழனாடு - சோணாடு, எ-ம். மலையனாடு - மலாடு,
எ-ம். மட்கட்டி - மண்ணாங் கட்டி, எ-ம். வரும். இம்மூவகையு மியல்புவழக்
கெனக்கொள்க. அன்றியு மறைவாகத் தம்பொருளைத் தருவன இடக்க ரடக்க
லெனப்படும். (உ-ம்.) கான்மே னீர்பெய்து வருதும், வாய்பூசிவருதும், அந்திதொழுது
வருதும், முதலிய பலவுமாம். பொருட்குறை மறைத்துப் புகழ்மொழியாக வருவன மங்கல
மரபுரையெனப்படும். (உ-ம்.) செத்தாரை - துஞ்சினார், எ-ம். ஓலையை -
	


133


	திருமுகம், எ-ம். காராட்டை - வெள்ளாடு, எ-ம். சுடுகாட்டை - நன்காடு, எ-ம். கூறுவர்.
ஒரோ கூட்டத்தார்கண் வழங்குவன குழூஉக்குறி மொழி யெனப்படும். (உ-ம்.)
பொற்கொல்லர், பொன்னை - பறி, எ-ம். யானைப்பாகர், ஆடையை - காரை, எ-ம்.
வேடர், கள்ளை - சொல்விளம்பி, எ-ம். இழிசனர், சோற்றை - சொன்றி, எ-ம். கூறுவர்.
பிறவுமன்ன. இம்மூவகையுந் தகுதிவழக்கெனக் கொள்க. எ-று. (4)
 
195. 	குறிப்பு மொழிவகைக் கூறிற் பொதுச்சொல்
விகாரந் தகுதி வினைக்குறிப் பாகுபெய
ரன்மொழி முதற்றொகைப் பொருட்டொகைக் குறிப்பென
வொன்பதும் பிறிவுமிவ் வொழிந்தன வெளிப்படை.
 
     (இ-ள்.) குறிப்புச் சொல்லுரிமையா மாறுணர்த்துதும். ஒன்றனைக்குறியாப்
பொதுமொழியும், விகாரமொழி யொன்பதும், தகுதிவழக்கு மொழிமூன்றும்,
வினைக்குறிப்பும், ஆகுபெயரும், அன்மொழித்தொகையும், முதற்றொகையும்,
பொருட்டொகையும், சொல்பவன் குறிப்பு, மெனக் குறிப்புமொழிக ளொன்பதாம்.
இவையொழித் தொழிந்த மொழியெலாம் வெளிப்படை மொழி யெனக்கொள்க. ஆயினுங்
குறிப்புமொழிகள் கற்றோரு மரிதுணர் மொழிக ளாகையிற் செப்பினு ளொழியப் பெய்த
வணிகலன்போல வாகாமையும், அவற்றைத் தெருவின் மிதிபட வெறிந்தார்போல
வாகாமையும், அழகுற வணிந்த நகையெனத் தோன்றற்பொருட்டுக் கூட்டிய
அடைமொழியானும், வினைமுதலியவற்றானுந் தானேகுறித்த பொருளை
அறிவுடையோர்க்குக் காட்டுவது உணர்ந்தோர் சிறப்பெனக் கொள்க. ஆகையாற்
சொன்ன வொன்பதுவகைக் குறிப்புமொழிவருமாறு. (உ-ம்.) பெற்றமென்பது காளையும்
பசுவு மாகையி லாணும் பெண்ணு மொழிந்த பொதுச்சொல்லாம். இன் றிவ்வூர்ப்
பெற்றமெல்லா முழவொழிந்தவெனி லுழவெனுஞ் சொல்லா லிங்ஙனம் பெற்றங்
காளையாயின. இன்றிவ்வூர்ப் பெற்ற மெல்லா மறத்திற்குக் கறக்குமென்னிற் கறக்கு
மென்னும்வினையாற் பசுக்களாயின. பிறவுமன்ன. விகாரச்சொல் லொன்பதுங்
குறிப்புச்சொல்லாகும். மதுமரைக் குலிகமேனி யென்பதும், நீனிறப் பெருங்கடலென்பதும்,
மதுவெனு மடைமொழியாற் றாமரை யெனவும் நிறமெனும் பெயரா னீலமெனவும், அறிய
வந்தன. பிறவுமன்ன. மேலேசொன்ன மூவகைத் தகுதிவழக்கு மொழிகளைக்காண்க.
இறைவ கொடியை, தாயே யினியை, தீயே வெய்யை, நீரேதண்ணியை, முதலிய விளி
வேற்றுமையான் முன்னிலை வினைக்குறிப்பென வறியவந்தன. பிறவுமன்ன. புளியைத்
தின்றானென இவ்வாகுபெயரே தின்றா னென்னும் வினையா லதன் பழ மறிய வந்தன.
பிறவுமன்ன. அலர் கூந்தற்கில்லையருள், பொற்றொடி சொல்லெல்லாம்பொய், என விவ்
வன்மொழித்தொகை யிரண்டும் அருள் சொல்லெனப் பெயராற் குறித்த வலர்கூந்த
லுடையாளும் பொற்றொடி யுடையாளுமறிய வந்தவாறு காண்க.
	


134


	பிறவுமன்ன. முதற் குறிப்புச் சொல் லிருவகைப்படும். முதலெழுத் தொன்றைக் காட்டினவு
முதன்மொழியொன்றைக் காட்டினவு மெனக்கொள்க. - குறட்செய்யுள். - "குன்றாவி
ளையுளுயர் நிலந்துன்புறுத்தன், வென்றேயிரப்பாடன்கை." என்பதிஃதேழிசை
குறித்துரைத்ததாம். இவற்றுட் குன்றாவென்புழி - குர னரம்பும், விளையு ளென்புழி -
விளரி நரம்பும், உயர்நில மென்புழி - உழை நரம்பும், துன்புற்றென்புழி - துத்த நரம்பும்,
தாவென்புழி - தாரநரம்பும், இரப்பா னென்புழி - இளி நரம்பும், கை யென்புழி -
கைக்கிளை நரம்பும், எனக்குறிப்பாக வேழிசைமுத னின்ற வோரெழுத்தானறிய வந்தன.
ஆயினு மிவ்வகை யிருளெனச் சிறு பான்மையென்றுவழங்கற்க. அன்றியும், - காரிகை. -
"வளம்படவென்பது வெள்ளைக் ககவற் குதாரணஞ்செங், களம்படக் கொன்று
கலிக்கரிதாயகண் ணார் கொடிபோற், றுளங்கிடைமாதே சுறமறிதொன்னலத்தின்
புலம்பென், றுளங்கொடு நாவல ரோதினர் வஞ்சிக்குதாரணமே." என விக்காரிகையுட்
பலபாட்டு முதனின்றவோரிரு மொழிகாட்டி வெள்ளைமுதலியபாவிற் குதாரணமென்ற
குறிப்பினா லவ்வவப் பாட்டறிய வந்தன. பிறவுமன்ன.
பொருட்டொகைகுறிப்புச்சொல்லாவன. - வெண்பா. - "புறநிலை ஆறொழித்தைந்தடக்கி
முன்னமூன்றாண்டளிக்கு, மீறொழித்த தானொருவ னென்றேத்தி, யூறொழிப்ப, வாளா
யிரண்டயிர்க மாய்ந்தனகா லிவ்வல்லாற், கேளாயுடன் வருவதில்." என்பன விவற்றுட்
பலதொகை வந்துகூடிய வினையாலறியவந்தவாறுகாண்க. ஆகையில் வைரவ முத
லறுசமயமும், கைப்பு முத லறுசுவையும், கார் முத லறுபருவமும், அரிச்சந்திரன் முத
லறுசக்கரவர்த்திகளும், வேற்றானைமுத லறுதானையு, மிவை முதலாயின பலவுள
வெனினு மிங்ஙனமா றொழித் தென்ற குறிப்பினாற் காமக் குரோத முலோப மோகம் பய
மதமென வாறறியவந்தன. அன்றியு மைவண்ணம், ஐந்திணை பஞ்சபூதிய முதலாயி
னவுளவெனினு, மிங்ஙன மைந்தடக்கி யென்ற குறிப்பினாற் கண்முத லைம் பொறியறிய
வந்தன. அன்றியுங், காம முதன் முக்குற்றமும், தன்மை முதன் மூவிடமு முதலாயி
னவுளவெனினு, மிங்ஙன மூன்றாளு மென்ற குறிப்பினால் வான் முதன் மூவுலகறிய
வந்தன. மீண்டு மூன்றினா லாளுமென்ற குறிப்பினா லாக்கல், காத்த லழித்த லென
முத்தொழிலறிய வந்தன. அன்றியு மிம்மை மறுமை யென் றிருமையு நல்வினை
தீவினையென் றிருவினையு முதலாயின வுளவெனினு மிரண்டயிர்க மென்ற குறிப்பினா
லில்லறந் துறவற மறிய வந்தன. ஆயினு மிவ்வகைக் குறிப்புமொழிக ளறிதற் கரியன
வாகையிற் சுருட்டிக் கிடக்கும் பட்டாடையின் முன்றானையைக் கொள்வோர்
காணக்காட்டும் வாணிகர் போலத் தொகுத் தவற்றுண் முதற்பொரு டோற்றித்
தொகைமொழி வருவது தெளிவெனக் கொள்க. (உ-ம்.) வெண்பா. - "புறநிலை காமமுத
லாறொழித்துக் கண்முதல வைந்தடக்கி, யேம முதலோனொருவ னென்றேத்தி -
வாமமுதிர், வாளா யறஞ்செய்க மாய்ந்தனகாலிவ் வல்லாற்,
	


135


	கேளாயுடன் வருவதில்." என வந்தவாறு காண்க. சொல்ப வனுணர்ந்த குறிப்பினாலறிய
வருமொழி குறிப்பிற் குறிப்புச் சொல்லெனப்படும். (உ-ம்.) குறள். - "கடலோடா கால்வ
னெடுந்தேர் கடலோடு, நாவாயு மோடா நிலத்து." என்ப திதன்பொருளிடந் தெரிதலெனு
மதிகாரப்பெயரா லறிய வந்தது. ஆகையி லினிவருங் குறிப்பெஞ்சணியு
மொட்டலங்காரமு மிவ்வகைக் குறிப்புமொழியால் வழங்குமென்றுணர்க.
அவையேமுன்னும் பின்னும் வரும்பொருளாற்றோன்ற வுரைப்பது நெறியே. அன்றியுஞ்
சூத்தி ரத்துட் பிறவுமென்ற மிகையால் பலபொருள்குறித்த திரிசொல்லுங் குறிப்
புச்சொல்லெனவுமாம். அவற்றுள் சில மிகவரிதுணர்மொழிகளாகையி லவற்றை
விளக்கவொரு பெயரெச்சமாயினு மடைமொழியாயினுங் கூட்டியுரைப்பிற் பொதுமை நீங்கி
யொன்றற் குரியனவாகத் தோன்றுமென் றுணர்க. அங்ஙன நாக மென்னுந் திரிசொல்லே
கைந்நாகம், பைந்நாகம், பெய்ந்நாக மென்புழி, கூட்டிய வோரடை மொழியாற்
பலவற்றிற்குப் பொதுவாய் நின்றசொல் லொன்றற் குரித்தாயினவாறுகாண்க. ஆயினு
மெளிதுணர் பொருட்கு விரோத மாகவு மரிதுணர் பொருட்குச் சேர்க்கை யாகவு
மற்றொரு மொழியைக் கூட்டியுரைப்பது சிறப்பெனக் கொள்க. அங்ஙனம் புலியை -
பூவாப்புண்டரீகம், எ-ம். தென்மேற்றிசை யானையை - பூவாக் குமுதம், எ-ம். இடபத்தை
- பறவாநரை, எ-ம். தாழையை - உண்ணாக்குமரி, எ-ம். வேங்கை மரத்தை -
பாயாவேங்கை, எ-ம். கண்ணை . இமைக்குவளை, எ-ம். இடையை - துவளுந்துடி, எ-ம்.
கணைக்காலை - ஊதாச்சங்கு, எ-ம். நெய்யை - வெண்டுப்பு, எ-ம். இராகத்தை -
செவிக் கின்புகுக்கும் வண்ணம், எ-ம். பிறவுமித்தன்மையா லுணர்ந்த குறிப்பினைத்
தோற்றிப் பலவற்றிற்குப் பொதுவாய்நின்ற திரிசொல் லொன்றற் குரியவாக வுரைப்பது
சிறப்புள சொல்லுரிமையா மெனக் கொள்க. (உ-ம்.) விருத்தம். - "பாடாத கந்திருவம்
பதிந்தெறியாக் கந்துகமுட், கோடாத கோணமுரை கூறாதகிள்ளை மலர், சூடாதபா
டலம்போர்தொடாக்குந்தம் பின்னிக்கீழ், நீடாத சடிலமுகை நெகிழாமா வீங்குளவோ."
எனப் பலபொருளைக்குறித்த பலதிரிசொல் லீண்டுக் குதிரை யொன்றனைத்
தோற்றவந்தவாறு காண்க. எ-று. (5)
 
196. 	பலவினைக் குரிய பலபொருட் சொல்லொரு
நிலைவரி னுரிமை நீத்தசொல் லரித்தே.
 
     (இ-ள்.) இனப்பொருள் வினைச்சொல்லுரிமையா மாறுணர்த்துதும்.
ஓரினப்பொருளவாகி வேறுபடுவினைக்குரிய பொருளுளவெனக் கண்டுணர்க. அவற்றுட்
பலவகைகூடிவருங்கா லவ்வினப்பொருட்குப் பொதுச்சொல்லுரைப்ப துரிமையா
மெனக்கொள்க. அங்ஙனம் வாச்சிய வினத்துட் கொட்டுவன - பறையே, ஊதுவன -
குழலே, ஊர்வன - யாழே. பிறவுமன்ன. அணிகல னினத்துட் கவிப்பன - முடியே,
கட்டுவன - மேகலையே, இடுவன - குழையே,
	


136


	தொடுவன - வளையே, பூண்பன-ஆரமே. பிறவுமன்ன. ஆயுதவினத்து ளெய்வன -
கணையே, எறிவன - வேலே, வெட்டுவன - வாளே, குத்துவன - ஈட்டியே, பிறவுமன்ன.
இவையே இத்தொடக்கத்தன பல வினைச்சொல்லு முரிமை பற்றிவந்த
சொல்லெனக்கொள்க. இவையேயன்றி வாச்சியத்திற்கெல்லாம் பொதுவினை முழங்கல்,
இயம்பல், படுத்தன், முதலிய பலவும் அணிவகைக் கெல்லாம் பொதுவினை. அணிதல்,
தாங்கல், மெய்ப்படுத்தல், முதலிய பலவும் படைவகைக் கெல்லாம் பொதுவினை.
தொட்டல், வழங்கல், பயிற்றல், முதலியபலவும் படைத்தொழிற் கெல்லாம் பொதுவினை.
ஆகையி லித் தன்மைப் பொரு டனித்தனி வருங்கா லதற்கதற்குரிய வினையொடு
முடிப்பது சிறப்பாம். ஆயினுங் கூறிய வினப்பொருட் பலவுங் கூட்டி யொன்றுபடுத்தி
னுரியவினைச் சொற்கொண்டு முடிப்ப தொன்றற் கேற்புழி, மற்றவற்றிற் கேலாமையால்
வழுவாம். அங்ஙனம் யாழுங் குழலும் பறையுந் தடவினா ரெனினு மூதினா ரெனினுங்
கொட்டினா ரெனினுமாகா. பொதுச் சொல்லாக முழங்கினார், இயம்பினார்,
படுத்தாரென்பது முறையே. அங்ஙனம் பசும்பொன்முடியும், மின்மணிக்குழையும்,
பொன்னொளிவளையு, முதலாயின வணிந்தார், தாங்கினார், என்பதும் வேலும் வாளும்
வளையுங் கணையும் வழங்கினார் பயிற்றினாரென்பது முரித்தே. பிறவுமன்ன.
இவ்வாறுரிமை நீங்கிய பொதுமொழி யிங்ஙன முரியனவா மெனக்கொள்க. எ-று. (6)
 
197. 	திணைநிலஞ் சாதி குடியே யுடைமை
குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோ
டியற்பெய ரேற்றிடிற் பின்வர லுரித்தே.
 
     (இ-ள்.) சொல்லடுக் குரிமையா மாறுணர்த்துதும். திணைமுதலாயின வற்றைப்
பற்றி யொரு பொருண் மேற் பலபகுபதப் பெயரையடுக்கி யுரைப்புழி யப்பொருட்குரிய
வியற்பெயர் கடையில் வந்து முடிவதே யடுக்கிய பல பெயர் மொழியிடத் துரிமையா
மெனக்கொள்க. (உ-ம்.) - விருத்தம். - "கார்வளர் வெற்பினன் குரவற் காவலன்,
போர்வளர் வில்லினன் பொறிச்சொல் வெஞ்சினன், வார்வளர் முரசதிர் வகுல
னென்பவன், பார்வளர் நலங்கெடப் படைகொண் டெய்தினான்." எ-ம். பிறவுமன்ன.
இவ்வா றியற்பெயர் கடையி லன்றி யிடையினு முதலினும் வரப்பெறிற் சிறுபான்மையா
மென்றுணர்க. எ-று. (7)
 
198. 	அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கோர்சொல்
லிரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்.
 
     (இ-ள்.) மற்றொருசொல் லடுக்குரியமையா மாறுணர்த்துதும். ஆகையி லசை நிலை
மொழி இரண்டாக வடுக்கி வரவும், விரைவு, வெகுளி, அவலம், உவகை, அச்ச, முதலிய
பொருண்மொழி இரண்டு மூன்றுமாக வடுக்கி
	


137


	வரவும் இசை நிறை மொழிகள் இரண்டு மூன்று நான்குமாக வடுக்கி வரவும் பெறுமெனக்
கொள்க. (உ-ம்.) மற்றோ மற்றோ, என்றே யென்றே, பிறவு மசைநிலை. கள்ளர் கள்ளர்,
பாம்பு பாம்பு, தீத்தீத்தீ, போபோபோ, பிறவும் விரைவு. எய்யெய், எறி யெறி யெறி,
பிறவும் வெகுளி. உய்யேனுய்யேன், ஐயா வென்னையா வென்னையா, வகன்றனையோ,
பிறவுமவலம். வருக வருக, பொலிக பொலிக பொலிக, பிறவுமுவகை. படை படை,
எங்கே யெங்கே யெங்கே, பிறவுமச்சம். ஏ எயம்ப லியம்பினான் நல்குமே நல்குமே
நல்குமே, நாமகள் பாடுகோ பாடுகோ பாடுகோ, பிறவு மிசை நிறை. - "அசைநிலை
யிரட்டியும் விரைவு மொழி மூன்றினு, மிசைநிறை நான்கினு மொருமொழி தொடரும்." -
என்றார் தொல்காபப்யினாரு மென்றுணர்க. ஆகையிற் கால மிடம் பண் பொழுக்கஞ்
சொல்லென விவ்வைந்தம் வழுவா முறைகாத் ததற்குரிமைப் பற்றிச் செப்புவ தறிவோர்
கடனெனக் கொள்க. எ-று. (8)
 
199. 	அகப்பொருள் புறப்பொரு ளாமிரண் டவற்றுட்
பெருகிய கைக்கிளை பெருந்திணைக் குறிஞ்சி
யாதியைந் திணையென வகத்திணை யேழே
கைகோ ளிரண்டாங் களவு கற்பே
வதுவை வாழ்க்கை வரைவகப் பொருளே
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி யுழுஞை தும்பையேழ் புறத்திணை
பகைநிரை யோட்ட றன்னிரை மீட்டல்
பகைமேற் செல்லல் பகைக்கெதி ரூன்ற
றன்னெயிற் காத்தல் பகையெயிற் கொள்ளல்
போர்வெல்ல லெனமுறை புறப்பொரு டிணையே.
 
     (இ-ள்.) ஈண்டுக்கூறிய பொருணூல்வழிப் புறநடையாகையி லிங்ஙன முன்னோர்
தந்த பொருணூற் றொகையுணர்த்துதும். ஆகையிற் செந்தமி ழுணர்ந்தோர் பொருளெலா
மகப்பொருள் புறப்பொருளென் றிரு கூறுபாடெனப் பிரித்தவற்று ளகப்பொரு
ளென்பதைக் காமமாகக் கொண்டதனுள்ளு மொருதலைக்காமங் கைக்கிளை யெனவும்,
பொருந்தாக்காமம் பெருந்திணையெனவும், அன்புடைக்காமங் குறிஞ்சிமுத லைந்நிலத்திற்
குரித்தா யைந்திணை யெனவும், எழுதிணை பகுத்தபின் னிவற்றிற் கொழுக்கமுறையைக்
கைகோளென் றதைக் களவு கற்பென் றிருவகைப்படுத்தி யதற்கதற்குரிய பலநடை
பயிற்றலும், வதுவையின் முறையைக் காட்டலும், வதுவைபின் னிருவர் வாழ்க்கையை
வகுத்தலும், வரைவெனும் பிரிவின்கட் புலம்புரை யுரைத்தலு மகப்பொருளென்றார். -
அகப்பொருள்விளக்கம். - "அவற்றுள்கைக்கிளையுடைய தொருதலைக்காமம். -
ஐந்திணையுடைய தன்புடைக்காமம்.
	


138


	- பெருந்திணையென்ப பொருந்தாக்காமம். - அளைவயிலின்பத் தைந்திணை மருங்கிற்,
களவு கற்பென விருகைகோள் வழங்கும். - உளமலிகாதற் களவெனப்படுவ,
தொருநான்கு வேதத்திருநான்கு மன்றலுள், யாழோர் கூட்டத் தியல்பின தென்ப. -
பொற்பமை சிறப்பிற் கற்பெனப்படுவது, மகிழ்வுமூடலு மூடலுணர்த்தலும், பிரிவும் பிறவு
மருவியதாகும். - வரைவெனப் படுவ துரவோன் கிழத்தியைக், குரவர் முதலோர்
கொடுப்பவுங் கொடாமையுங், கரணமொடு புணரக் கடியயர்ந்து கொளலே." இவை
மேற்கோள். அன்றியும், புறப்பொரு ளென்பதைச் சேவகமாகக் கொண்டதனுள்ளும்
வெட்சி முதலேழு கூறுபாடெனப் பிரித் திவற்றுட் பகைவர் நாட்டிற் புகுந்து நிரையை
யோட்டுஞ் சேவகம் வெட்சி யெனவும், பகைவரோட்டின தன்னிரையை மீட்குஞ்
சேவகங் கரந்தை யெனவும், பகைவர்மேற் செல்லுஞ் சேவகம் வஞ்சி யெனவும் வரும்.
பகைவரோ டெதிர்க்குஞ் சேவகங் காஞ்சி யெனவும், தன்னரண் காக்குஞ் சேவக நொச்சி
யெனவும், பகைவரரண் கைக்கொள்ளுஞ் சேவக முழிஞை யெனவும், பொருது வெல்லுஞ்
சேவகந் தும்பை யெனவும், வகுத் தவற்றவற்றிற் குரிய பல நடைகாட்டி விதித்தலே
புறப்பொருளென்றார். - இவற்றிற்குச் செய்யுள். - "வெட்சி நிரைகவர்தன் மீட்டல்
கரந்தையாம், வட்கார்மேற் செல்வது வஞ்சியா - முட்கா, தெதிரூன்றல் காஞ்சி
யெயில்காத்த னொச்சி, யதுவளைத்தலாகு முழிஞை - யதிரப், பொருவது தும்பையாம்
போர்க்களத்து மிக்கோர், செருவென்றது வாகையாம்.' - புறப்பொருள்.

     வெட்சித்திணை வருமாறு. - "வெட்சிவெட்சி யரவம் விரிச்சி செலவு, வேயே புறத்திறையூர்கொலை யாகோள், பூசன் மாற்றே புகழ்சுரத் துய்த்த றலைத்தோற் றம்மே தந்துநிறைபாதீ, டுண்டாட் டுயர்கொடை புனலறி சிறப்பே, பிள்ளை வழக்கே பெருந்துடி நிலையே,கொற்றவை நிலையொடு வெறியாட் டுளப்பட, வெட்டிரண் டேனை நான்கொடு
தொகைஇ, வெட்சியும் வெட்சித் துறையு மாகும்."

     கரந்தைத்திணை வருமாறு. - "கதமில் கரந்தை கரந்தை யரவ, மதரிடைச் செலவே
யரும்போர் மலைதல், புண்ணொடு வருதல் போர்க்களத்தொழித, லாளெறி பிள்ளை
பிள்ளைத் தெளிவே, பிள்ளை யாட்டொடு கையறு நிலையே, நெடுமொழி கூறல்
பிள்ளைப் பெயர்ச்சி வேத்தியன் மலிவே மிகு குடி நிலை யென, வருங்கலை
யுணர்ந்தோ ரவைபதி னான்குங், கரந்தையுங் கரந்தைத் துறையு மென்ப."

     வஞ்சித்திணை வருமாறு. - "வாடாச் செலவின் வஞ்சிவஞ்சி யரவங், கூடார்ப்
பிணிக்குங் குடைநிலை வாணிலை, கொற்றவை நிலையே கொற்ற வஞ்சி, குற்றமில்
சிறப்பிற் கொற்ற வள்ளை, பேராண் வஞ்சி மாராய வஞ்சி, நெடுமொழி வஞ்சிமுதுமொழி
வஞ்சி, யுழபுல வஞ்சி மழபுல வஞ்சி,
	


139


	கொடை வஞ்சியோடு குறுவஞ் சிய்யே, யொருதனி நிலையொடு தழிஞ்சி பாசறை,
பெருவஞ் சிய்யே பெருஞ்சோற்று நிலையொடு, நல்லிசை வஞ்சியென நாட்டினர்
தொகுத்த, வெஞ்சாச் சீர்த்தி யிருபத் தொன்றும், வஞ்சியும், வஞ்சித் துறையுமாகும்."

     காஞ்சித்திணை வருமாறு. - "காஞ்சிகாஞ்சி யெதிர்வேதழிஞ்சி, பெரும் படை
வழக்கொடுபெருங்காஞ் சிய்யே, வாள்செல வென்றா குடையது செலவே, வஞ்சினக்
காஞ்சி பூக்கொணிலையே, புகழ்தலைக் காஞ்சி தலைமாராயந், தலையொடு முடிதன்
மறக்காஞ் சிய்யே,மாற்றரும் பேய்நிலை பேய்க் காஞ்சிய்யே, தொட்ட காஞ்சி
தொடாக்காஞ் சிய்யே,மன்னைக் காஞ்சி கட்காஞ் சிய்யே, யாஞ்சிக் காஞ்சி மகட்பாற்
காஞ்சி, முனைகடிமுன்னிருப் புளப்படத் தொகைஇ, யெண்ணிய வகையா னிருபத் திரண்டுங், கண்ணியகாஞ்சித் துறையென மொழிப."

     நொச்சித்திணை வருமாறு. - "நுவலருங் காப்பி னொச்சி யேனை, மறனுடைப் பாசி
யூர்ச்செரு வென்றா, செருவிடை வீழ்த றின்பரி மறனே, யெயிலது போரே யெயிறனை
யழித்த, லழிபடை தாங்கன் மகண் மறுத்து மொழித லென, வெச்ச மின்றி யெண்ணிய
வொன்பது, நொச்சித் திணையது வகை யென மொழிப."

     உழிஞைத்திணைவருமாறு. - "உழிஞையோங்கிய குடைநாட்கோளே, வாணாட்
கோளேமுரசவுழிஞை, கொற்றவுழிஞையோ டரசவுழிஞை, கந்தழி யென்றா முற்றுழிஞ்
ஞையே,காந்தள் புறத்திறை யாரெயி லுழிஞை, யருந்தொழி லுழிஞை குற்றுழி
ஞைய்யொடு,கேட்புறத் துழிஞை பாசிநிலையே, யேணி நிலையே யிலங்கெயிற் பாசி,
முதுவுழிஞையேமுந்தகத் துழிஞை, முற்று முதிர்வே யானைகைக் கோளே, வேற்றுப்
படைவரவேயுழுதுவித் திடுதல், வாண் மண்ணு நிலையே மண்ணு மங்கலமே, மகட்
பாலிகலேதிறைகொண்டு பெயர்த, லடிப்பட விருத்த றொகை நிலையுளப்பட, விழுமென்
சீர்த்தியிருபத் தொன்பது, முழிஞை யென்மனா ருணர்ந்திசி னோரே."

     தும்பைத்திணை வருமாறு. - "துன்னருங் கடும்போர்த் தும்பை தும்பை யரவந்,
தன்னிகரில்லாத் தானை மறமே, யானை மறத்தொடு குதிரை மறமே, தார்நிலை
தேர்மறம்பாணது பாட்டே, யிருவருந் தபுநிலை யெருமை மறமே, யேம வெருமை நூழி
லென்றா,நூழி லாட்டே முன்றேர்க் குரவை, பின்றேர்க் குரவை பேய்க்குர வைய்யே,
களிற்றுடனிலையே யொள்வா ளமலை, தான நிலையே வெருவரு நிலையே, சிருங்கார
நிலையேயுவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்ட றொகைநிலை யுளப்பட, நன்பொரு
டெரிந்தோர்நாலிரு மூன்றும், வண்பூந் தும்பை வகையென மொழிப." - சூத்திரம். -
"வெட்சிகரந்தை வஞ்சி காஞ்சி, யுட்குடை யுழிஞை நொச்சி தும்பையென், றித்திர
மேழும்புறனென மொழிப. - வாகை பா
	


140


	டாண் பொதுவியற் றிணையெனப், போகியமூன்றும் புறப்புற மாகும்." இவை மேற்கோள்.
எ-று.

200.
	முப்பொரு ளைவழி முந்நான் ககத்திணை
முப்புறத் திணைதவா முறையைந்
துரிமை யெனவிவை பொருணூற் றொகையே.
 

     (இ-ள்.) வழக்கு தேற்ற தோற்றமெனு முப்பொருளும் பதிகங், காரணம் விரிவு
தொகை துணி வெனு மைவழியு மியல்பு முதலாகப் பின்னவை யீறாகப் பன்னீ
ரகத்திணையு மொழுக்கநூற் கரியெனு முப் புறத்திணையுங் கால மிடம் பண் பொழுக்கஞ்
சொல் லெனு மைவகை யுரிமையு மென் றிவற்றை விளக்கியவ னெடுத்த பொருளே
பயன்படப் பொரு ணூலாகக் காட்டிய வழியெலா மீண்டுத் தொகை சூத்திர மாகத்
தந்தவாறு காண்க. எ-று. (9)

               அதிகாரமொன்றிற்கு ஓத்தொன்றிற்கு ஆக சூத்திரம். 58.

                    மேற்கோள் சூத்திரம். 40. ஆக சூ-ம். 98.

               அதிகாரமூன்றிற்கு மேற்கோளோடுகூடிய ஆக சூத்திரம். 439.

                    மூன்றாவது: - பொருளதிகாரம். - முற்றிற்று.
	


141


	நான்காவது:-
யாப்பதிகாரம்.
PART IV. - PROSODY
 

201.
	யாப்புற நலமெலா மிணைந்தவோர் சட்குணன்
காப்புற வடிதொழீஇக் காட்டுதும் யாப்பே.
 
     (இ-ள்.) யாப்பிலக்கண மாமாறுணர்த்துதும். எந்நூலுரைப்பினும் அந் நூற்குப்
பாயிர முரைத்தே நூலுரைக்கப்படும். அஃதென்னை - நன்னூல் வெண்பா. - "மாடக்குச்
சித்திரமு மாநகர்க்குக் கோபுரமு, மாடமைத்தோ ணல்லார்க் கணியும்போ - னாடிமு,
னைதுரையா நின்ற வணிந்துரையை யெந்நூற்கும், பெய்துரையாவைத்தார் பெரிது."
என்றார்பவணந்தியாசிரியர். ஆகலிற் பாயிரமுரைத்தன் முறையேயாம். பாயிரமெத்தனை
வகைப்படும். பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமும் என விருவகைப்படும்.
பொதுப்பாயிரத் தினிலக்கணமென்னை. - நன்னூல். - "நூலேநுவல்வோ னுவலுந்திறனே,
கொள்வோன் கோடற் கூற்றா மைந்து, மெல்லா நூற்கு மிவைபொதுப்பா யிரம்."
எனவரும். சிறப்புப்பாயிரத்தி னிலக்கணமென்னை. - நன்னூல். - "ஆக்கியோன் பெயரே
வழியே யெல்லை, நூற்பெயர்யாப்பே நுதலிய பொருளே, கேட்போர்பயனோ
டாயெண்பொருளும், வாய்ப்பக்காட்டல் பாயிரத் தியல்பே - காலங் களனே
காரணமென்றிம், மூவகையேற்றி மொழிநருமுளரே." எனவரும். பாயிரமில்லாத
நூல்களுளவோ. சிரமில்லாத வலவன் முதலியவுடலுயி ருளவாயினும் பாயிரமில்லாதநூல்க
ளிலவாம். இத்தலைச் சூத்திர மென்னுதலிற்று. கடவுள்வணக்கமு மதிகாரமு நுதலிற்று.
அதிகா ரங்கடோறுங் கடவுள் வணக்கங் கூறல்வேண்டுவ தென்னை. எவ் வுலகினு
மெவ்வகைப்பட்ட மேன்பாட்டாருக்குங் கடவு ளுதவியன்றி கருதிய கருத்து நிறைவுறா
தாதலாலே மக்களுடற்கு வதனம் போலவும் கோபுரத்திற்குச் சிகரம்போலவும்,
நூற்கலங்கார முகமாக நினைத்த கருத்து முட்டின்று முடியும் பொருட்டுக் கடவுள்
வணக்கங் கூறல் வேண்டுவ தாயிற்று. ஆகலி லிஃது விதிவிலக்கன்று.
இவ்வதிகாரமென்னபெயர்த்து. யாப்பதிகாரமென்னும் பெயர்த்து. இவ் வதிகாரமென்
னுதலிற்று. மேற்கூறிய வெழுத்துக்க ளாலாகிய பலசொற்களாலும் பொருட் கிடனாகக்
கற்றுவல்ல புலவ ரணி பெறப் பாடப்படு மிலக்கண நுதலிற்று.
இவ்வதிகாரமெவ்வளவிற்று. ஓத்து வகையான்மூன்றுஞ் சூத்திரவகையானூறுமாகிய
வளவிற்று. இம்மூன்றோதத்திற்கும் பெயரென்னை. இனிவருஞ்சூத்திரத்திற்காண்க.
இவ்வதிகாரத்தாற் பயன்யாது. யாப்பா ராய்தல் பயன். யாப்பா ராய்தலினாலே மக்க
ளுயிர்க்கு றும்பய னென்னை. பா, தாழிசை, துறை, விருத்தங்களாலாக்கப்பட்ட, அறம்,
	


142


	பொருள், இன்பம், வீடு, என்னு மிவற்றின் மெய்ம்மை யறிந்து விழுப்ப மெய்தி யிம்மை
மறுமை வழுவாமை நிகழ்வாராயின் இருமைக்கு மக்களுயிர்க்குறும் பயன் யாப்பே
யாகும். யாப்பு, எ-து. பாட்டு, அதிகாரம், எ-து. அதிகரித்தல். ஆகையிலரும்பிணி
முறையி னொன்றாகத் தேவநன்னிலை யனைத்தையுங் கொண்டுளனாகி யொன்றாய்நின்
றறுகுண னெனும் பெயருடைக் கடவுளே யீண்டுச் சொல்ல முப்பொருள் வழுவிலகிக்
காப்பத வேண்டியவன் றிருப்பாத மலர் தொழுதேத்தி யாப்பின திலக்கணநூலை
விளக்கிக் காட்டுது மென்றவாறு. தெய்வத் தறுகுணமாவன:- தன் வயத்தனாதல்,
முதலிலனாதல், உடம்பிலனாதல், எல்லாநலனு முளனாதல், எங்கும் வியாபகனாதல்,
எவற்றிற்குங் காரணனாதல். ஆகையி லீண்டுமிவ் வதிகார நன்றாகத் தெய்வ வணக்கம்
வந்தவாறு காண்க. இஃது சிறப்புப்பாயிரம். எ-று.
 

முதலோத்துச்செய்யுளுறுப்பு.
Chapter I. - The Elements of Poetry.
 

202.
	சிரைமுதல் யாப்புறச் சேருயிர்க் குடல்போ
லுரைமுதல் யாப்புற வுணர்பொருட் குடலாச்
சிறப்பிற் செய்வன செய்யு ளாமவை
யுறுப்பியன் மரபுமூன் றுரைப்ப விளங்கும்.
 
     (இ-ள்.) இவ்வதிகாரஞ் செய்யு ளிலக்கணநூலை யுணர்த்துவ தாதலால் இம்முதற்
சூத்திரஞ் செய்யுளாவதெனவும் இந்நூற்கூறுபாடித் துணையெனவும் அவை யிவை
யெனவு முணர்த்திற்று. ஆகையி னரம்பின் பிணிப்போ டொழுங்குபட
நிரைத்திணைத்திய பலவெலும்புகளைப் பின்னித் தசையை நிறைப்பிக் குருதியைத்
தோய்த்துத் தோலை மூடி மயிர்மேற் பரப்பி யழகு பெற வுயிர்க் கிடனாகச்
செய்யப்பட்ட வுடலைப்போலப் பலவகை மொழிக ளொருப்பட எழுத்து, அசை, சீர்,
தளை, அடி, தொடை, என் றிவற்றானும் யாப்புறவீக்கி யுணர்ந்த பொருட் கிடனாகப்
பலவலங்கார வகையாற் சிறப்புறச் செய்யப் படுவன செய்யு ளெனப்படும். ஈண்டுச்
செய்யுளைத் தெளிவுற விளக்கல்வேண்டிச் செய்யுளுறுப்புஞ் செய்யுட் டன்மையுஞ்
செய்யுண்மரபும் பிரித்துக்காட்டி மூவோத்தாக விவ்வதிகாரமுடியுமென்றுணர்க. செய்யு
ளெனினும் யாப் பெனினும் பா வெனினும் பாட் டெனினுந் தூக் கெனினுந்
தொடர்பெனினுஞ் சவியெனினுமொக்கும் - "யாப்பும், பாட்டுந்தூக்குந்
தொடர்புஞ்செய்யுளை, நோக்கிற்றென்ப நுணங்கியோரே." - என்றார் பிறரு மெனக்
கொள்க. - நன்னூல். - "பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல, சொல்லாற்
பொருட்கிடனாக வுணர்வினின், வல்லோ ரணிபெ றச்செய்வன செய்யுள்."
இதுமேற்கோள். எ-று. (1)
	


143


	203.
	எழுத்தசை சீர்தளை யடிதொடை யாறும்
வழுத்திய செய்யுண் மருவுறுப் பெனவே.
 

     (இ-ள்.) நிறுத்தமுறையானே செய்யுட் குறிப்பிலக்கண மாமாறுணர்த்துதும்.
எழுத்தும், அசையும், சீரும், தளையும், அடியும், தொடையும், என் றிவ்வாறுஞ் செய்யுட்
குறுப்பாம். இவற்றுளெழுத்துத் தத்த மதிகாரத்திற் கூறியவதனா லிங்ஙனமற்
றைந்தினையும் விளக்குதும். - யாப்பருங்கலம். - "எழுத்தசை சீர்தளை
யடிதொடைதூக்கோ, டிழுக்காநடைய தியாப்பெனப் படுமே." இதுமேற்கோள். எ-று. (2)
 

அசையிலக்ணம் வருமாறு:-
Metrical Syllables.
 

204.
	அசையே நேர்நிரை யாமிரு வகைய
நெடிறனிக் குறின்மெய் நிகழ்குறி னேரா
யிணைக்குறில் குறினெடி லிவைநிரை யசையே.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே யசையிலக்கண மாமாறுணர்த்துதும். அசை
யெனப்படுவன நேரசை, நிரையசை, என விருவகைப் படும். - யாப்பருங்கலம். -
"நேரசையென்றா நிரையசையென்றா, வாயிரண்டாகி யடங்குமன் னசையே." இவற்றுள்
தனித்துநிற்பது நேரசை, இணைந்துநிற்பது நிரையசை. ஆகலின் நெட்டெழுத் தெல்லாந்
தனியே வரினும் ஒற்றடுத்து வரினும் குற்றெழுத்து மொழியீற்றின்கட் டனியே வரினும்
ஒற்றடுத்து வரினும் இந்நால்வகையா னேரசை வருமெனக் கொள்க. (வரலாறு.) ஆழி,
என்னு மொழியில், நெடிலுங் குறிலுந் தனித்து நேரசை யாயின. ஆம்பல், என்னு
மொழியில், நெடிலுங்குறிலு மொற்றடுத்து நேரசையாயின. - யாப்பருங்கலம். -
"நெடில்குறிறனியாய் நின்றுமொற்றடுத்து, நடைபெறுநேரசை நால் வகையானே."
இதுமேற்கோள். அன்றியுந் தனிக்குறின் மொழிக்கு முதனேரசை யாகாது,
விட்டிசைத்தவழி நேரசையாகும். அஃதென்னை.- தொல்காப்பியம். -
"தனிக்குறின்முதலசைமொழிசிதைந்தாகாது." காரிகை. "விட்டிசைத் தல்லான் முதற்கட்
டனிக்குறினேரசையென், றொட்டப்படாததற் குண்ணானு தாரண மோசை குன்றா, நெட்
டளபாய்விடி னேர்நேர்நி ரையொடு நேரசையா, மிட்டத்தினாற்குறில்
சேரினிலக்கியமேர்சிதைவே." யாப்பருங்கலம். - "குறிப்பே யேவறற்சுட்டல்வழித்,
தனிக்குறின்மொழிமு தறனியசையிலவே." என்றார்பலரும். (வ-று.) நாலடியார். -
"உண்ணானொளி நிறனோங்குபுகழ்செய்யான், றுன்னருங்கேளீர் துயர்களையான் -
கொன்னே, வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ, விழந்தானென்
றெண்ணப்படும்." இதனுள் அஆவென்புழி, அருளின்கட்குறிப்பாய் விட்டிசைத்துவந்த
குற்றெழுத்து மொழிமுதற்கண் ணேரசை யாயிற்று "அ அவனும், இ இவனும்,
	


144


	உ உவனுங் கூடியக்கால் எ எவனை வெல்லாரிகல்." எ-ம். வரும். - மயேச்சுரர்யாப்பு. -
"ஏவல்குறிப்பே தற்சுட்டல்வழி, யாவையுந் தனிக்குறின்முத லசை யாகா, சுட்டினும்
வினாவினு முயிர்வருங் காலை, யொட்டிவரூஉமொருசாரு முளவே." இதுமேற்கோள்.
குறிலிணைந்துவரினும், குறினெடி லிணை ந்துவரினும், குறிலிணைந் தொற்றடுத்துவரினும்,
குறினெடிலிணைந் தொற்றடு த்துவரினும், இந்நால்வகையா னிரையசை வருமெனக்
கொள்க. (வ-று.) வெறி, சுறா, இம்மொழிகள் குறி லிணைந்தும் குறினெடி லிணைந்தும்,
நிரையசை யாயின. நிறம், விளாம், இம்மொழிகள் குறி லிணைந்தொற்றடுத்தும் குறினெடி
லிணைந்தொற்றடுத்தும், நிரையசையாயின. - யாப்பருங்கலம். - "குறிலிணை குறினெடி
றனித்து மொற்றடுத்து, நெறிமை யினான்காய் வருநிரை யசையே" தொல்காப்பியம். -
"குறிலே நெடிலே குறிலிணை குறினெடி, லொற்றொடு வருத லொடு மெய்ப் பட நாடி,
நேரு நிரையு மென்றிசி னோரே." இவை மேற்கோள். எ-று. (3)
 

சீரிலக்கணம் வருமாறு:-
Metrical Feet.
 

205.
	நேரே நிரையே யசைச்சீ ரிரண்டென
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
யீரசை யியற்சீ ரீரிரண் டிவற்றோ
டீற்றுறு நேர்நிரை யிருநான் குரிச்சீர்
நேரிறும் வெண்சீர் நிரையிறும் வஞ்சிச்சீர்
நாலசை பொதுச்சீர் நானான் கென்ப.
 
     (இ-ள்.) நிறுத்தமுறையானே சீரிலக்கண மாமாறுணர்த்துதும். கூறிய விருவகை
யசையே சிறுபான்மை தனித்தும் பெரும்பான்மை யிணைந்துஞ் சீராம். இவையே,
அசைச்சீர், இயற்சீர், உரிச்சீர், பொதுச்சீர், என நால்வகைப்படும். இவற்றுளசைச்சீ
ரோரசைச்சீராய் நேரசைச்சீரு நிரையசைச் சீருமென விரண்டாகும். இவற்றிற்
குதாரணவாய்பாடு. நேர், நாள், நிரை, மலர். இவை பெரும்பாலும் வெண்பா
வினீற்றிலுஞ் சிறுபான்மை யொழிந்தவற் றுள்ளும் வரும். (வ-று.) "மலர்மிசையேகினான்
மாணடிசேர்ந்தார், நிலமிசை நீடு வாழ்வார். - கற்றதனா லாயபய னென்கொல் வாலறிவ,
னற்றா டொழா அரெனின்." இக்குறள் வெண்பாக்களி னிறுதியில், வார், நாள், எ-ம்.
ரெனில், மலர், எ-ம். ஓரசைச் சீரிரண்டும் வந்தன காண்க. - யாப்பருங்கலம் -
"ஓரசைச்சீரு மஃதோ ரிருவகைத்தே." என்றார்; அன்றியும் இயற்சீரீரசைச் சீராய்,
நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை, எனநான்காகும். இவற்றிற்
குதாரணவாய்பாடு, நேர்நேர், தேமா; நிரைநேர், புளிமா; நிரைநிரை, கருவிளம்;
நேர்நிரை, கூவிளம்; இவை யகவலுக்கே யுரியவாகி இயற் சீரெனவு
	


145


	மகவற்சீரெனவும் பெயர்பெறும். (வ-று.) "குன்றக் குறவன் காதன் மடமகள் வரையர
மகளிர் புரையுஞ் சாயல ளைய ளரும்பிய முலையள் செய்ய வாயினண் மார்பினள்
சுணங்கே." இவ்வகவலுள், குன்றத் - தேமா, குறவன் - புளிமா, காதன் - தேமா,
மடமகள் - கருவிளம், வரையர - கருவிளம், மகளிர் - புளிமா, புரையுஞ் - புளிமா,
சாயல - கூவிளம், ஈரசைச்சீர் நான்கும் வந்தன காண்க. யாப் பருங்கலம். - "ஈரசை
கூடியசீ ரியற்சீ ரிவை, யீரிரண் டென்ப வியல்புணர்ந்தோரே." என்றார். அன்றியும்,
உரிச்சீர் மூவசைச் சீராய் நேரீற்றுரிச்சீர் நிரையீற்றுரிச்சீரென விருவகையவாகி யிரு
நான்காகும். இவற்றுணேரீற் றுரிச்சீர் நான்கும் வெண்பாவிற் குரியவாதலின் வெண்சீ
ரெனப்படும். நிரையீற் றுரிச்சீர் நான்கும் வஞ்சிப்பாவிற்குரிய வாதலின் வஞ்சிச்சீ
ரெனப்படும். நேரீற் றுரிச்சீர்க் குதாரண வாய்பாடு. நேர் நேர் நேர் - தேமாங்காய்,
நிரைநேர்நேர் - புளிமாங்காய், நிரைநிரைநேர் - கருவிளங்காய், நேர்நிரை நேர் -
கூவிளங்காய், இவை வெண்பாவிற்குரிய வெண்சீ ரெனப்படும். (வ-று.) "நாய்க்காற்
சிறுவிரல்போ னன்கணிய ராயினு, மீக்காற் றுணையு முதவாதார் - நட் பென்னாஞ்,
சேய்த்தானுஞ் சென்றுகொளல் வேண்டுஞ் செய்விளைக்கும், வாய்க்கா லனையார்
தொடர்பு." இவ்வெண்பாவினுள் நாய்க்காற் - தேமா, சிறுவிரல்போ - கருவிளங்காய்,
னன்கணிய - கூவிளங்காய், ராயினு - கூவிளம், மீக்காற் - தேமா, றுணையு - புளிமா,
முதவாதார் - புளிமாங்காய், நட்பென்னாஞ் - தேமாங்காய், காய்ச்சீ ரிறுதியாகிய
மூவசைச்சீர் நான்கும் வந்தன காண்க. - சூத்திரம். - "காய்முன் னேரும் விளமுன்
னேரு, மாமுன் னிரையும் வருமெனமொழிப." என்றா ரொருசா ராசிரிய ரவ்வாறு
வருதலறிக. அன்றியும், நிரையீற்றுரிச்சீர்க் குதாரண வாய்பாடு. நேர்நேர்நிரை -
தேமாங்கனி, நிரைநேர்நிரை - புளிமாங்கனி, நிரைநிரைநிரை - கருவிளங்கனி,
நேர்நிரைநிரை - கூவிளங்கனி, இவைவஞ்சிப் பாவிற்குரிய வஞ்சிச்சீ ரெனப்படும்.(வ-று.)
"பூந்தாமரைப் போதலமரத், தேம்புனலிடை மீன்றிரிதரும், வளவயலிடைக்
களவயின்மகிழ், வினைக்கம்பலை மனைச்சிலம்பவு, மனைச்சிலம்பிய மணமுரசொலி,
வயற்கம்பலைக் கயலார்ப்பவு, நாளு மகிழு மகிழ்தூங்குரன், புகழ்தலானாப்
பெருவண்மையனே." இவ்வஞ்சிப் பாவினுள், பூந்தாமரைப் - தேமாங்கனி, போதலமரத்
- கூவிளங்கனி, தேம்புனலிடை - கூவிளங்கனி, மீன்றிரிதரும் - கூவிளங்கனி, வளவய
லிடைக் - கருவிளங்கனி, களவயின்மகிழ் - கருவிளங்கனி, வினைக்கம் பலை -
புளிமாங்கனி, கனிச்சீ ரிறுதியாகிய மூவசைச்சீர் நான்கும் வந்தன காண்க.-யாப்பருங்கலம்.
- "மூவசைச் சீருரிச் சீரிரு நான்கனு, ணேரிறு நான்கும் வெள்ளை யல்லன, பாவினுள்
வஞ்சியின் பாற்பட் டனவே." என்றார். அன்றியும், பொதுச்சீர் நாலசைச்சீராய்
நானான்காகும். இவையே இயற்சீர் நான்கிற்கு மிறுதியின் கண்ணே தண்ணிழலென
நேர்நிரையும், தண் பூவென நேர்நேரும், நறும்பூவென நிரைநேரும், நறுநிழலென நிரை
நிரையுங், கூட்டிற் பதினாறாகும். இவற்றிற் குதாரண வாய்பாடு. தேமாந்
	


146


	தண்ணிழல், புளிமாந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல் கூவிளந்தண்ணிழல்,
தேமாந்தண்பூ, புளிமாந்தண்பூ, கருவிளந்தண்பூ, கூவிளந்தண்பூ; தேமா நறும்பூ,
புளிமாநறும்பூ, கருவிளநறும்பூ, கூவிளநறும்பூ; தேமாநறுநிழல், புளிமாநறுநிழல்,
கருவிளநறுநிழல், கூவிளநறுநிழல்; இவை வெண்பாவினுள் வருவனவல்ல. கலியினுள்ளு
மகவலுள்ளும் பெரும்பாலுங் குற்றியலுகரம் வந்தவிடத் தன்றி வாரா. வஞ்சிப்பாவினுட்
பெரும்பாலும் வரவு மோரடியு ளிரண்டு நாலசைச்சீர்க் கண்ணுற்று நிற்கவும் பெறும்.
(வ-று.) "அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு, வேங்கைவாயின் வியன்குன்றூரன்."
இவ்வஞ்சியடி யிலிரண்டு நாலசைச்சீர் வந்தன காண்க. - யாப்பருங்கலம். -
"நாலசைச்சீர் பொதுச்சீர் பதினாறே." என்றார். - காரிகை. - "ஈரசை நராற்சீ ரகவற்
குரிய வெண்பா வினவா, நேரசை யாலிற்ற மூவசைச்சீர் நிரையா லிறுப,
வாரசைமென்முலை மாதே வருப வஞ்சிக் குரிச்சீ, ரோரசையே நின்றுஞ் சீராம்
பொதுவொரு நாலசையே. - தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற், காமாங்
கடைகா யடையின் வெண்பாவிற் கந்தங் கனியாய், வாமாண்கலை யல்குன்மாதே வருப
வஞ்சிக் குரிச்சீர், நாமாண் புரைத்த வசைச்சீர்க் குதாரண நாண்மலரே." இவை
மேற்கோள். எ-று. (4)
 

206.
	பொதுச்சீ ரிறுதியு முரிச்சீ ரிறுதியுந்
தளைக்கொக்கு மசைச்சீ ரியற்சீ ரனைத்தே
பொதுச்சீர் வெள்ளையுட் புணரா வுக்குற
ளல்லன கலியு மகவலுஞ் சேரா
வஞ்சியு ளனைத்தும் வரினு மோரடி
யெல்லையு ளொன்றுமே லிணையிற் றொடரா.
 
     (இ-ள்.) சீரிலக்கணத்துக் கோர் சிறப்பிலக்கண மாமாறுணர்த்துதும்.
தளைமுறையானே பூவெனும் நேரீற்றுப் பொதுச்சீ ரெட்டும் வெண்சீர் போலக்
கொள்ளவும். நிழலெனு நிரையீற்றுப் பொதுச்சீ ரெட்டும் வஞ்சிச்சீர் போலக்
கொள்ளவும். அசைச்சீ ரிரண்டும் இயற்சீர் போலக் கொள்ளவு முறையென் றுணர்க.
ஆகையி லினிக்கூறும்படி வெண்சீர்வந்து நேர்வரின் வெண்டளையாவது போலவும்,
நிரைவரின் கலித்தளையாவது போலவும், நேரீற்றுப் பொதுச்சீ ரொன்றலு
மொன்றாமையும் வெண்டளை கலித்தளை யெனப்படும். அங்ஙனம் வஞ்சிச்சீர்
முன்னிரைவரி னொன்றிய வஞ்சித்தளையு, நேர்வரி னொன்றா வஞ்சித்தளையு,
மென்பதுபோல நிரையீற்றுப் பொதுச் சீர்த்தளையும் வழங்கும். அவ்வா றியற்சீ
ரொன்றலு மசைச்சீ ரொன்றலு மாசிரியத் தளையெனவு, மியற்சீர் விகற்பமும் வெண்டளை
யெனவுங் கொள்க. அன்றியும், பொதுச்சீ ரென்றும் வெண்பாவினுள் வாரா.
ஆசிரியத்துள்ளுங் கலியுள்ளுங் குற்றுகரம் வந்துழியன்றி வாரா, வஞ்சியுட் குற்றுகரம்
வாராதேயு மெல்லாம் வரப்பெறு மாயினும் பெரும்பான்மையா லோ
	


147


	ரடியுள் ளொன்றன்றி வாரா. இரண்டு வரினுந் தொடர்ந்து நில்லா வெனக் கண்டுணர்க. -
காரிகை. - "தண்ணிழ றண்பூ நறும்பூ நறுநிழ றந்துறழ்ந்தா, லெண்ணிரு நாலசைச்
சீர்வந் தருகுமினி யவற்றுட், கண்ணிய பூவினங் காய்ச்சீ ரனைய கனியோ டொக்கு,
மொண்ணிழற் சீரசைச் சீரியற் சீரொக்கு மொண்டளைக்கே. - தன்சீர் தனதொன்றிற்
றன்றளையாந் தணவாத வஞ்சி, வண்சீர் விகற்பமும் வஞ்சிக்குரித்து வல்லோர்வகுத்த,
வெண்சீர் விகற்பங் கலித்தளை யாய்விடும் வெண்டளையா, மொண்சீ ரகவ லுரிச்சீர்
விகற்பமு மொண்ணுதலே." இவை மேற்கோள். எ-று. (5)
 

தளையிலக்கணம் வருமாறு. -
Metrical Connexion.
 

207.
	தளையாஞ் சீர்தம்முட் டலைப்படுங் கட்டே
யவையேழ் வகைய வாகு மவற்று
ளாசிரியத் தளையா மியற்சீ ரொன்றல்.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே தளையிலக்கண மாமாறுணர்த்துதும். கூறிய
பலவகைச்சீரு மொன்றோடொன்று பிணிக்கப்பட்டுத் தொடர்ந்து வருமுறையே தளை
யெனப் படும். இவையே நேரொன் றாசிரியத்தளையும், நிரையொன்றாசிரியத்தளையும்,
இயற்சீர்வெண்டளையும், வெண்சீர்வெண்டளையும், கலித்தளையும், ஒன்றிய
வஞ்சித்தளையும், ஒன்றா வஞ்சித்தளையும், என தளை யெழுவகைப் படும். - "சீரொடு
சீர்தலைப் பெய்வது தளையவை, யேழென மொழிப வியல்புணர்ந் தோரே."
என்பதியாப்பருங்கலம். ஆகையி லிவற்று ளியற்சீர் வந்து நின்றசீ ரீற்றசையும் வருஞ்சீர்
முதலசையு மொன்றிவரி னாசிரியத் தளையாம். ஆகையிற் றேமா புளிமா வரவே
தேமாவுங் கூவிளமும் வரப்பெறி னேர் நேரோ டொன்றிய வதனா னேரோன் றாசிரி
யத்தளையாம். கருவிளம் கூவிளம் வரவே கருவிளமும் புளிமாவும் வரப் பெறி னிரை
நிரையோ டொன்றியவதனா னிரையொன் றாசிரியத் தளையாம். - "ஈரசைச் சீர்நின்
றினிவருஞ் சீரொடு, நேரசை யொன்ற னிரையசை யொன்றலென், றாயிரு வகைத்தே
யாசிரியத்தளை." என்பதியாப் பருங்கலம். (வ-று.) "திருமழை தலைஇய விருணிற
விசும்பின் விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத் தவர்தேர் சென்ற வாறே." என
விருவகை யாசிரியத்தளை வந்தவாறு காண்க. எ-று. (6)
 

208.
	வெண்டளை யென்பது வெண்சீ ரொன்றலு
மியற்சீர் விகற்பமு மெனவிரு வகைத்தே.
 
     (இ-ள்.) வெண்டளை யாமாறுணர்த்துதும். ஆகையி லியற்சீர் வந்து நின்ற
சீரிறுதியும் வருஞ்சீர் முதலுமொன்றாது நேர்முன்னிரையு நிரைமுன்
	


148


	னேரும் வரப்பெறி னியற்சீர் வெண்டளையாம். காயீற்ற வெண்சீர் வந்து நின்றசீ
ரீற்றசையும் வருஞ்சீர் முதலசையுமொன்றி நேர்முன்னேரும் வரப் பெறின்
றன்றளையாகிய வெண்சீர்வெண்டளையாம். ஆகையின் வெண்டளையு மிருவகைத்தே.
இவ்விரு வகைக்குப் பொதுவிதியாக மாமுன்னிரையும் விளமுன்னேருங் காய்முன்னேரும்
வருவது வெண்டளை யெனவே கொள்க. - "வெண்சீரொன்றலு மியற்சீர்விகற்பமு,
மென்றிரண்டென்ப வெண்டளைக் கியல்பே." என்பதியாப்பருங்கலம். (வ-று.) "வெய்யகுர
றோன்றி வெஞ்சின வேறுட் கொளினும், பெய்யுமழை முகிலைப் பேணுவரால் - வையத்,
திருள்பொழியுங் குற்றம் பலவெனினும்யார்க்கும், பொருள்பொழிவார் மேற்றே புகழ்."
என விருவகை வெண்டளை வந்தவாறு காண்க. அன்றியும், வெண்பா முதலியவற்றிற்
கெழுத்தெண்ணி யசைபிரித்துச் சீர்சிக்கறுத்துத் தளைநோக்குங் காலையிற்
சிற்சிலவிடத்துச் சீருந்தளையுஞ் சிதைந்து வருமாயின் குற்றியலிகரங் குற்றியலுகர
முயிரளபெடை யிவை யலகு பெறாது ஐகாரக்குறுக்கமும் ஒற்றளபெடையு மொவ்வொரு
மாத்திரையாக வலகிடவும் பெறுமெனக்கொள்க. என்னை. - காரிகை. - "சீருந் தளையுஞ்
சிதையிற் சிறிய இ உ அளபோ, டாருமறிவ ரலகுபெறாமை யைகாரநைவே, லோரு
ங்குறிலிய லொற்றளபாய்விடி னோரகாம், வரும் வடமுந் திகழு முகிண் முலை
வாணுதலே." என்றரகலின். (வ-று.) குறள். - "அருளல்ல தியாதெனிற் கொல்லாமை
கோறல், பொருளல்ல தவ்வூன்றினல்." இதனுள் குற்றிய லிகர மலகின்றி வந்தது காண்க.
- இருசீரடிவஞ்சிப்பா. - "குன்றுகோடுநீடு குருதிபாயவுஞ், சென்றுகோடு நீடுசெழுமலை
பொருவன, வென்றுகோடு நீடு விறல்வேழ, மென்று மூடு நீடு பிடியுள போலு,
மதனாலீண்டிடையிரவிவணெ றிவரின், வண்டுண் கோதை யுயிர்வாழாளே." இதனுள்
குற்றியலுகர மலகின்றி வந்ததுகாண்க. - வெண்பா. - "பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை
பைங்கிளிகள், சொல்லுக்குந் தோற்றின்னந் தோற்றினவா - னெல்லுக்கு, நூறோ
ஒநூறென் பாணுடங்கிடைக்கு மென்முலைக்கு, மாறோஒமா லன்றளந்த மண்." -
"இடைநுடங்க வீர்ங்கோதைப் பின்றாழவாட்கண், புடைபெயரப் பேழ்வாய்திறந்து -
கடைகடைபோ, யுப்போஒவென வுரைத்து மீள்வா ளொளிமுறுவற், கொப்போஒ
நீர்வேலியுலகு." இவற்று ளுயிரளபெடை யலகின்றி வந்ததுகாண்க. - "அன்னையை
யானோவதவமா லணியிழாய், புன்னையை யானோவன் புலந்து. - கெண்டையை வென்ற
கிளரொளியுண்கணாள் பண்டைய லல்லள்படி." இவற்று ளைகாரங் குற்றெழுத்தைப்போ
லலகு பெற்று வந்தவாறு காண்க. - "கண்ண்கரு விளைகார் முல்லைகூரெயிறு, பொன்ன்
பொறிசுணங்கு பேழ்வாயிலவம்பூ, மின்ன்னுழை மருங்குன் மேத குசாயலா, ளென்ன்பிற
மகளாமாறு." இதனு ளொற்றளபோ ரலகு பெற் றவாறு காண்க. யாப்பருங் கலம். -
"தளைசீர் வண்ணந் தாங்கெட வரினே, குறுகியவிகரமுங் குறியலுகரமு,
மளபெடையாவியு மலகியல்பிலவே.- ஆய்தமு மொற்று மளபெழநிற்புழி, வேறலகெய்தும்
விதியினவாகும்." என்றார் காக்கைப் பாடினியார்.
	


149


	"ஒற்றள பெழாவழி பெற்ற வலகிலவே. - தனிநிலை யொற்றிவை தாமல கிலவே,
யளபெடை யல்லாக் காலை யா யின். - ஈரொற் றாயினு மூவொற் றாயினு, மோரொற்
றியல வென்மனார் புலவர்." என்றார் பலரும். இவை மேற்கோள். எ-று. (7)
 

209.
	கலித்தளை வெண்சீர் கலந்த விகற்பமே.
 
     (இ-ள்.) கலித்தளை யாமாறுணர்த்துதும். வெண்சீர்வந்து நின்றசீ
ரீற்றசையும் வருஞ்சீர் முதலசையு மொன்றாது காயாகியநேர் முன்னிரை வரப் பெறின்
கலித்தளையாம். - "நிரையீ றல்லாவுரிச்சீர் முன்னர், நிரைவரு காலை கலித்தளை
யாகும்." என்பதியாப்பருங்கலம். (வ-று.) "செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்
தெறிந்த சினவாளி, முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போ,
யெல்லைநீர் வியங்கொண்மூ விடைநுழையு மதியம்போன், மல்லலோங்கெழில் யானை
மருமம்பாய்ந் தொளித்ததே." என வெண்சீருங் கலித்தளையும் வந்தவாறு காண்க.
எ-று. (8)
 

210.
	வஞ்சித் தளையாம் வஞ்சிக் குரிச்சீ
ரொன்றலு மொன்றா தொழுகலு மென்ப.
 
     (இ-ள்.) வஞ்சித்தளை யாமாறுணர்த்துதும். கனியீற்ற வுரிச்சீர் வந்து நின்றசீ
ரீற்றசையும் வருஞ்சீர் முதலசையு மொன்றி நிரைமுன் னிரையே வரப்பெறி னொன்றிய
வஞ்சித்தளையாம். அவ்விரண்டொன்றாது நிரைமுன் னேர்வரி னொன்றா
வஞ்சித்தளையாம். ஆகையின் வஞ்சித்தளையு மிருவகைத் தெனப்படும். - "தன் சீரிறுதி
நிரையோ டொன்றலு, மஃதே நேரோ டொன்றா தொழுகலும், வஞ்சித் தளையின்
வகையிரண் டாகும்." என்பதியாப்பருங் கலம். (வ-று.) "விரைவாய் மலர்நக் குவப்பன
மிடை வண் டினம்யா ழொலிப்பன, கரைவா யெழுமுகைத் தாழைகள் கடி கமழ் வனகா
வெங்கணு, மிரைவாய் விரியிள வேனிலீண் டின்புற் றிரு நிலத் துலா வவே." என
வஞ்சிச்சீர் வந்தொன்றியு மொன்றாது மிருவகை வஞ்சித்தளை வந்தவாறு காண்க.
 எ-று. (9)
 

அடியிலக்கணம் வருமாறு:-
Metrical Lines.
 

211.
	அடியென்ப தளைத்த வஞ்சீரா நடையவை
குறளடி யிருசீர் சிந்தடி முச்சீ
ரளவடி நாற்சீ ரைஞ்சீர் நெடிலடி
கழிநெடிலடி யைந்தே கடந்த சீரிவற்று
ளெண்சீர் மிக்கடி யெனிற்சிறப் பன்றே.
	


150


	(இ-ள்.) நிறுத்த முறையானே யடியிலக்கண மாமாறுணர்த்துதும். கூறிய தளையாற்
பிணிக்கப்பட்ட சீரொடு வருவன வடியெனப்படும். இவற்றுள் இருசீரான் வந்தவடியே -
குறளடி, எ-ம். முச்சீரான் வந்தவடி யே - சிந்தடி, எ-ம். நாற்சீரான் வந்தவடியே -
அளவடி, எ-ம். ஐஞ்சீரான் வந்த வடியே - நெடிலடி, எ-ம். ஐஞ்சீரின் மிக்கசீரான்
வந்தவடியே - கழிநெடிலடி யெனவும் படும். இதையே யெண்சீரின் மிக்க சீரான்வரின்
சிறப்பில் லாயின. - "குறளொரு பந்த மிருதளை சிந்தா, முத்தளை யளவடி நாற்றளை
நெடிலே, மிக்கன கழிநெடி லென்றிசி னோரே என்மரு முளரே." அன்றியும், -
"இரண்டுமுதலா வெட்டீறாகத், திரண்டசீரா லடிமுடிவுடைய, விறந்து வரினு மடிமுடி
வுடைய, சிறந்த வல்ல செய்யு ளுள்ளே." என்றார் காக்கைப் பாடினியார். இவற்றிற்
குதாரணம். - "மாதுமாண்பெழக், கோது கொன்றுநோய்க், காதுகாத்தனை,
பாதுபாவையே." எனக் குறளடியால் வந்தசெய்யுள். - "குயின்மருட்டிய கோண்மொழி,
யயின்மருட்டிய வம்பக, மயின்மருட்டிய மாண்புடைக், குயின்மருட்டிய கூந்தலாள்."
எனச் சிந்தடியால் வந்தசெய்யுள். - "பருவிலார் மனமெனமுகில் பரந்துநூற், கருவிலார்
மனமெனக் கருக வந்தரந், திருவிலார் மனமெனத் தேம்ப மாங்குயின், மருவிலார்
மனமென மஞ்ஞை யாடுமால்." என வளவடியால் வந்த செய்யுள். - "இன்றே யுள்ளார்
நாளை யிறப்பா ரிதுவல்லாற், பொன்றா ருண்டோ பூதலத் தெங்கும் புகழ்விஞ்சிக்,
குன்றா மின்னார் காசொளி கொண்மா முடிகொண்டே, நின்றா ருள்ளும் பொன்றுயிர்
நீங்கா நிலையார் யார்." என நெடிலடியால் வந்தசெய்யுள். - "நூல்வழிப் புகழேபோன்று
நொடிப்பினிற் பரந்தமேகம், வேல்வழி யொளியேபோன்று மின்னியார்த் திறைவ
னன்பின், பால்வழிப் பயனேபோன்று பகலிரா வளவிற்றூவிக், கோல்வழிப்
படமேபோன்று கூவெலாங் கொழித்த தன்றே." என வறு சீர்க் கழிநெடிலடியால்
வந்தசெய்யுள். - "கணிகொண் டலர்ந்த நறை வேங்கையோடு கமழ்கின்ற காந்தளிதழா,
லணிகொண்டலர்ந்த வனமாலை சூடி யகிலாவிகுஞ்சிகமழ, மணிகுண்டலங்க ளிருபாலும்
வந்து வரை யாகமீதுதிவளத், துணிகொண்டிலங்கு சுடர்வேலினோடு வருவா னிதென்
கொ றுணிவே." - என வெழுசீர்க் கழிநெடி லடியால் வந்த செய்யுள். -
"மூவடிவினாலிரண்டு சூழ்சுடருநாண் முழுதுலகுமூடியே முளைவயிரநா றித்,
தூவடிவினாலிலங்கு வெண்குடையினீழற் சுடரொளியை யடிபோற்றிச்
சொல்லுவதொன்றுண்டாற், சேவடிகடாமரையின் சேயிதழ்கடீண்டச் சிவந்தனவோ
சேவடியின் செங்கதிர்கள்பாயப், பூவடிவுகொண்ட னவோ பொங்கொளிகள் சூழ்ந்து
பொலங்கொளாவா லெமக்கெம் விண் ணியர்தங்கோவே." - என வெண்சீர்க்கழி
நெடிலடியால் வந்தசெய்யுள். - "இடங்கை வெஞ்சிலை வலங்கைவாளியி னெதிர்ந்த
தானையை யிலங்கும ழியின் விலங்கியோன், முடங்குவாலுளை மடங்கன்மீமிசை முனிந்து
சென்றுடன் முரண்டராசனை முருக்கியோன், வடங்கொண் மென்முலை
	


151


	நுடங்கு நுண்ணிடை மடந்தை சுந்தரி வளங்கொள் பூண்முலை மகிழ்ந்த கோன்,
றடங்கொடாமரை யிடங்கொள்சேவடி தலைக்குவைப்பவர் தமக்கு வெந்துயர்
தவிர்க்குமே." - என வொன்பதின் சீர்க்கழிநெடிலடியால் வந்தசெய்யுள். -
"கைத்தலத்தழற் கணிச்சி வைத்திடப் புறத்தொருத்தி கட்கடைப்படைக்
கிளைத்ததிறலோரா, முத்தலைப் படைக்கரத் தெமத்தர்சிற் சபைக்குணிற்கு
முக்கணக்கருக்கொருத்தர் மொழியாரோ, நித்திலத் தினைப்பதித்த கச்சறுத்தடிக்கனத்து
நிற்குமற்புதத் தனத்தினிடையேவே, ளத்திரத்தினிற்றொடுத்து விட்டு நெட்டயிற்கணித்தி
லக்கணுற்றிடச் செய்விக்கு மதுதானே" - என வொன்பதின்சீர் மிக்க கழிநெடிலடியால்
வந்த செய்யுள். - யாப்பருங்கலம். - "குறளடி சிந்தடி யளவடி நெடிலடி, கழிநெடி
லடியெனக் கட்டுரைத் தனரே. - குறளடி சிந்தடி யிருசீர் முச்சீ, ரளவடி நெடிலடி நாற்சீ
ரைஞ்சீர், நிரனிரை வகையா னிறுத்தனர் கொளலே. - கழிநெடி லடியே கசடறக்கிளப்பி,
னறுசீர் முதலா வையிரண்டீறா, வருவன பிறவும் வகுத்தனர் கொளலே." -
தொல்காப்பியம். - "நாலெழுத் தாதி யாக வாறெழுத், தேறிய நிலைத்தே குறளடி
யென்ப. - எழெழுத் தென்ப சிந்தடிக் களவே, யீரெழுத் தேற்ற மல்வழி யான. -
பத்தெழுத் தென்ப நேரடிக் களவே, யொத்த நாலெழுத் தொற்றலங் கடையே. - மூவைந்
தெழுத்தே நெடிலடிக் களவே, யீரெழுத்து மிகுதலு மியல்பென மொழிப. -
மூவாறெழுத்தே கழிநெடிற் களவே,யீரெழுத்துமிகுதலு மியல்பென மொழிப. - உயிரில்
லெழுத்து மெண்ணப்படாஅ, வுயிர்த்திற மயக்க மின்மையான.' - காரிகை. - "குறளிரு
சீரடி சிந்துமுச் சீரடிநாலொருசீர றை தருகாலை யளவொடு நேரடி யையொருசீர்,
நிறைதரு பாத நெடிலடியா நெடுமென் பணைத்தோட், கறைகெழு வெற்க ணல்லாய்
மிக்க பாதங் கழிநெடிலே." இவைமேற்கோள். எ-று. (10)

............................

தொடையிலக்கணம் வருமாறு:-

Rhyme.
212. 	தொடையென்ப தீரடி தொடுப்ப தாமவை
யடைமுதன் மோனை யந்த மியைபே
யிடையே யெதுகை யெதிர்மொழி முரணள
பெடையே யளபா மெனவை வகையே.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே தொடையுந் தொடைவிகற்பமு மாமா றுணர்த்துதும்.
மேற்கூறிய பலவகையடிக டம்முள் ளிரண்டா யிணைந்து தொடுப்பது
தொடையெனப்படும். இவையே மோனைத்தொடையும் - இயைபுத் தொடையும் -
எதுகைத்தொடையும் - முரண்தொடையும் - அளபுத்தொடையும் - என வைவகைப்
படும். இவற்றுண் முதலெழுத்மோனைத்தொடை.
	


152


	எ-ம், ஈற்றெழுத்தொன்றி வரத் தொடுப்பது இயைபுத்தொடை, எ-ம். இரண்டா மெழுத்
தொன்றி வரத் தொடுப்பது எதுகைத்தொடை, எ-ம். மொழியானும் பொருளானு
மறுதலைப் படத்தொடுப்பது முரண்டொடை, எ-ம். உயிரளபெடையும் ஒற்றளபெடையும்
ஒன்றிவரத் தொடுப்பது அளபெடைத்தொடை, எ-ம். கொள்ளல்வேண்டும். இவற்றின்
வகையும் விகற்பமும் 216-ம் சூத்திரத் தில் விளக்குதும். - யாப்பருங்கலம். -
"தொடையே யடியிரண் டியை யத் தோன்றும். - ஆதி யெழுத்தே யடிதொறும் வரினடி,
மோனைத் தொடையென மொழிமனார் புலவர். - இறுவா யொப்பினஃதியை
பெனப்படுமே. - இரண்டா மெழுத்தொன் றியைவதே யெதுகை. - மொழியினும்
பொருளினு முரணுதன் முரணே. - அளபெடை யொன்றுவ தளபெடைத் தொடையே."
இவை மேற்கோள். எ-று. (11)
 
213. 	மோனைக் கினமே அஆ ஐஒளவும்
இஈ எஏவும் உஊ ஒஓவும்
சதவும் ஞநவும் மவவுமெனவே.
 
     (இ-ள்.) மோனைத் தொடைக் கோர் சிறப்பிலக்கண மாமாறுணர்த் துதும்.
மோனையாவதற் கடிமுதற்கண்ணே வந்த முதலுயிரெழுத்து முயிர் மெய்யெழுத்து
மீண்டுவரத் தொடுப்பது மோனையாம். அவ்வவ் வெழுத்துத்தானே வரினும் அவற்றவற்
றினுவெழுத்து வரினு மிழுக்கா. மோனை யாவதற் கெழுத்தினமாவன:- அ, ஆ, ஐ, ஒள,
என்னு மிந்நான்கு மொன்றற்கொன்று மோனையாம். இ, ஈ, எ, ஏ, என்னு மிந்நான்கு
மொன்றற் கொன்று மோனையாம். உ, ஊ, ஒ, ஓ, என்னு மிந்நான்கு மொன்றற்கொன்று
மோனையாம். இவை யுயிரழுத்தினம். அன்றியும், சதவும், ஞநவும், மவவும்,
ஒன்றற்கொன்று மோனையாம். இவை யுயிர்மெய் யெழுத்தினம். (வ-று.) ஒளவைக்குறள்.
- "அண்ணாக்குத் தன்னையடைத்தங் கமுதுண்ணில், விண்ணோர்க்கு வேந்தாய் விடும்.
- ஆதி யொளியாகி யாள்வானுந் தானாகி, யாதி யவனுருவமாம். - ஐயைந்து மாயா
லகத்தி லொளிநோக்கிற், பொய்யைந்தும் போகும்புறம்." - நிகண்டு. -
"ஒளவையம்மனை பயந்தாளம்மையே யாயே யன்னை - இராப்பக லன்றி யிருசுடரைச்
சிந்திக்கில், பராபரத் தோடொன்றலுமாம். - ஈசனோ டொன்றி லிசையாப்
பொருளில்லைத், தேச விளக்கொளியே யாம். - எள்ளகத்தி லெண்ணெ யிருந்தவா
றொக்குமே, யுள்ள கத்தி லீசனிலை. - ஏறு மதிய மிறங்கி லுறங்கிடுங், கூஉறும் பூரணை
யாங்கோள். - உடம்பினாற் பெற்றபய னாவதெல்லா, முடம்பினி லுத்தமனைக் காண். -
ஊறு மமுதத்தை யுண்டங்குறப் பார்க்கின், மாறும் பிறப்பறுக்கலாம். - ஒருவற்
கொருவனே யாகு முயிர்க்கெல்லா, மொருவனே பல்குண முமாம். - ஓசை யுணர்வுக
ளெல்லாந் தருவிக்கு, நேசத்தா லாய வுடம்பு." இவைமுறையே வுயிரெழுத் தினமோனை
வந்தவாறறிக. அன்றியும், (வ-று.)
	


153


	"சங்கு நிறம்போற் றவளவொளிகாணி, லங்கையி னெல்லிய தேயாம். - ஞான மாசார
நயவா ரிடைப்புகலு, மேனை நூல்வேத மிருக்கு நெறி. - மதியொடு காலும்
வன்னியொன் றாகவே, கதிரவனா மெனவே காண்." இவை யுயிர்மெய் யெழுத்தின்
மோனைவந்த வாறறிக. அவ்வவ் வுயிரெழுத்திற்குக் கூறிய மோனையே அவ்வவ்
வுயிரேறிய அவ்வவ் வுயிர்மெய் யெழுத்திற்கு மாமெனக் கொள்க. மோனை - அனு -
என்பன வொருபொருள். இம்மோனையே வருக்கமோனை, நெடின்மோனை,
வல்லினமோனை, மெல்லினமோனை, இடையின மோனை, தலையாகுமோனை,
இடையாகுமோனை கடையாகுமோனை, இரண்டாமடிமோனை, விட்டிசை மோனை, எனப்
பலவகைப்படும். (வ-று.) பகலே பல்பூங் கானற் கிள்ளை யோப்பியும், பாசிலைக் குழவி
யொடு கூதாளம்விரைஇப்,பின்னும் பிணியவிழ்ந்த நன்னெடுங் கூந்தல், பீர்ங்கப் பெய்து
தேம்படத் திருத்திப், புனையி ரோதி செய்குறி நசைஇப், பூந்தார் மார்ப்புனத்துட்
டோன்றிப்,பெருவரை யடுக்கத் தொருவே லேந்திப், பேயு மறியாமா வழங்கு
பெருங்காட்டுப்,பைங்க ணுழுவைப் படுபகை வெரீஇப்,பொருது சினந்தணிந்த பூணுத
லொருத்தல், போது தரவழங்கு மாரிருண் டுநாட், பௌவத் தன்ன பாயிரு
ணீந்தி,யிப்பொழுது வருகுவை யாயி, னற்றார் மார்பதிணடலங்கதுப்பே."
இஃது,பகரமெய்வருக்கமோனை. - "ஆர் கலியுலகத்து மக்கட் கெல்லா, மோதலிற்
சிறந்ததன் றொழுக்கமுடைமை." இஃது நெடின்மோனை. - "கயலே
ருண்கண்கலுழநாளுஞ், சுடர்புரைதிருநுதல் பசலை பாயத், திருந்திழை யமைதோ
ளரும்பட ருழப்பப், போகல்வாழியைப் பூத்த கொழுங்கொடி யணிமலர் தயங்கப்,
பெருந்தண்வாடை வரூஉம் பொழுதே." இஃது வல்லினமோனை. இவ்வாறே மெல்லின
மோனையும் இடையினமோனையும் வருவதறிக. - "பற்றுக பற்றற்றான் பற்றினையப்
பற்றைப், பற்றுக பற்று விடற்கு." - இஃது தலையாகுமோனை. - "மாவும் புள்ளும்
வதிவயிற் படர, மானீர்விரிந்த பூவுங்கூம்ப, மாலைதொடுத்த வாடை, மாயோ
ளின்னுயிர்ப் புறத்திறுத் தற்றே." இஃதிடையாகுமோனை. "பகலே பல்பூங் கானல்."
இஃது கடையாகுமோனை. - உபதேசகாண்டம். - "ஊறு மாமறை யோதிய
தத்தையே,யூறு மாமறை யோதிய தத்தையே,நாறு பூமலர் நந்தவனங்களே, நாறுபூமலர்
நந்தவனங்களே." இஃதிரண்டடிமோனை. "அஅவனும் இஇவனுங் கூடியக்கால் எஎவனை
வெல்லா ரிகல்." இஃது விட்டிசைமோனை. பிறவுமன்ன. (12)
 
214. 	எதுகை யென்ப வியைபன மொழிகண்
முதலெழுத் தளவொத்து முதலொழித் தொன்றுத
மூன்றா மெழுத்தொன்ற லாசினந் தலையா
கிடைகடை யாறு மெதுகை வகையே.
 
     (இ-ள்.) எதுகைத் தொடைக்கோர் சிறப்பிலக்கண மாமாறுணர்த்துதும். இரண்டா
மெழுத்தொன்றி வரத்தொடுப்ப தெதுகை யெனப்படும். ஆயினு
	


154


	முதலெழுத்துத் தானே வாராமன் முதலெழுத் தெல்லாந் தம்முண் மாத்திரை யளவோ
டொத்தனவாதல் வேண்டும். - "முதலெழுத்தளவோ டொத்தது முதலா, வஃதொழித்
தொன்றி னாகு மெதுகை" - என்றார் பல்காயனார். ஆகையிற் கட்டென்பதற்குப்
பட்டென்ப தெதுகை யல்லது, பாட்டென்ப தெதுகை யாகாது. ஆகலின் ஐகார
ஒளகாரங்க ணெட்டெழுத் தாயினு மடிமுதல் வருங்கால், ய, வ, என்னு மொற்றடுத்து
வந்த குற்றெழுத்தாக வெண்ணப் படும். (வ-று.) ஒளவைக்குறள். - மெய்யகத் துள்ளே
விளங்கச் சுடர்காணிற், கையகத்து ணெல்லிக் கனி.' - குறள். - "அவ்வித் தழுக்கா
றுடையானைச்செய்யவ, டௌவையைக் காட்டி விடும்." - கையிரண் டென்பதற்கு
மெய்யிரண்டு, எ-ம். ஒளவிய மென்பதற்குச் செவ்வியல், எ-ம். எதுகையாம். அன்றியும்,
இரண்டாமெழுத் தொன்றுவ தெதுகை யென்புழி யொற்றெழுத் தெனக்கொள்க.
உயிரில்லா வொற்றாக வரினும் உயிரேறிய வுயிர்மெய்யாக வரினும் அவ்வொற்றெழுத்து
வருவதே யெதுகை யாயினும், ய, ர, ழ, என்னு மூன் றொற்றின்கீழ் மற்றோ ரொற்று
வரினு மெதுகையாம். (வ-று.) குறள். - "ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை
கடைமுறை, தான்சாந் துயரந்தரும்." - ஒளவைக்குறள். - "மெய்ப்பா லறியாத மூடர்தந்
நெஞ்சத்து, ளப்பா லதாகுஞ் சிவம். - யார்க்குந் தெரியா தருவந்தனை
நோக்கிப்,பார்க்கப் பராபரமேயாம்." - பாழ்ங்கிணறு. என வரும். ஆர்ந்தன, சேர்ந்தன,
எதுகையல்லது சேர்ந்தா னென்பதற்குப் பார்ப்பா னென்பதில், ரகரவொற்று நிற்பினு
மதன்கீழ்வந்த வொற்று மாறினவதனா லெதுகை யாகாது. பிறவுமன்ன. அன்றியு
மூன்றாமெழுத் தொன்றெதுகையும், ஆசெதுகையும், இனவெதுகையும்,
தலையாகெதுகையும், இடையாகெதுகையும், கடையாகெதுகையும், என வறுவகைப் படும்.
இவ ற்றுளிரண்டா, மெழுத்தாகவந்த வொற்றுமாறி யொற்றின்கீழ் வருமுயிர் மெய்
வரப்பெறின், மூன்றாமெழுத் தொன்றுமெதுகை யெனப்படு மாயினு மிது சிறப்பன்று.
(வ-று.) குறள். - "பொய்ம்மையும் வாய்மை யிடத்தே புரை தீர்ந்த, நன்மை பயக்கு
மெனின்," இஃது மூன்றாமெழுத் தொன்றெதுகை. அன்றியும், ய,ர,ல,ழ, என்னு நான்கொற்
றொழியினு மவற்றின்கீழ் வருமெழுத் தொன்றுவதா செதுகை யெனப்படும். - "ய ர ல ழ
வென்னு மீரிரண் டொற்றும், வரன்முறை பிறழாது வருவ திடையுயிர்ப்பி, னாசிடை
யெதுகையென் றறிந்தனர் கொளலே." (வ-று.) "காய்மாண்டதெங்கின் பழம்வீழக் கமுகி
னெற்றிப், பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து, தேமாங் கனிசிதற
வாழைப் பழங்கள் சிந்து, மேமாங் கதமென் றிசை யாற் றிசைபோ யதன்றே." இஃது
யகரவொற்றிடை வந்தவாசெதுகை. - "மாக்கொடியானையு மௌவற் பந்தருங்,
கார்க்கொடி முல்லையங் கலந்த மல்லிகைப், பூக்கொடிப் பொதும்பருங் கான
ஞாழலுந்,தூக்கொடிகமழ்ந்து தான்றுறக்க மொக்குமே." இஃது ரகரவொற்றிடை வந்தவா
செதுகை. - "ஆவேறுருவின வாயினு மாபயந்த,பால்வே றுருவின வல்லவாம்.பால்போ,
	


155


	லொருதன்மைத் தாகுமறநெறியாபோ, லுருவு பலகொளலீங்கு." இஃது
லகரவொற்றிடைவந்தவாசெதுகை. - "அந்தரத்துள்ளே யகங்கைபுறங்கையா, மந்தரமே
போலு மனைவாழ்க்கை - யந்தரத்து, வாழ்கின்றே மென்று மகிழன்மின், வாழ்நாளும்
போகின்ற பூளையே போன்று." இஃது ழகரவொற்றிடை வந்தவா செதுகை. அன்றியும்
வல்லின முதன் மூவினமுந் தன்முண் மயங்கி னினவெதுகை யெனப்படும். (வ-று.)
"தக்கார் தகவில ரென்ப தவரவ, ரெச்சத்தாற் காணப்படும்." இஃது வல்லினவெதுகை. -
"அன்பீனு மார்வ முடைமை யதுவீனு, நண்பென்னு நாடாச் சிறப்பு." இஃது மெல்லின
வெதுகை. - "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப், பொய்யா விளக்கே
விளக்கு." இஃது இடையினவெதுகை. அன்றியு முதற்சீர் முழுதுமொன்றி வருவது
சிறப்பாயதலையா கெதுகை யெனவும், இரண்டா மெழுத் தொன்றே வருவ திடையா
கெதுகை யெனவும், சீரீற்றெழுத் தொன்றே வருவது கடையாகெதுகை யெனவு மாம்./
இவற்றிற் குதாரண மினிவருஞ் சூத்திரத்திற் காண்க. சூத்திரத்தி லாறுமென்ற
வும்மையினால், உயிரெதுகை, நெடிலெதுகை, வருக்கவெதுகை, இடையிட்டெதுகை,
இரண்டடியெதுகை, முதலியவுங் கொள்க. (வ-று.) "துனியொடு மயங்கிய தூங்கி
ருளுண்டுநா, ளணிகிளர் தாரோ யருஞ்சுர நீந்தி, வடிவமை யெஃகம் வலவயி னேந்தித்,
தனியே வருதி நீயெனின், மையிருங் கூந்த லுய்தலோ வரிதே." இஃது இரண்டாமெழுத்
தொன்றாதாயினும் இரண்டா மெழுத்தின்மேலேறியவுயி ரொன்றி வந்தமையால்
உயிரெதுகை யென்று கையனார் காட்டிய செய்யுள். - "ஆவாவென்றே யஞ்சின
ராழ்ந்தா ரொருசாரார், கூகூவென்றே கூவிளி கொண்டா ரொருசாரார்."
இஃதிரண்டாமெழுத் தொன்றாதாயினு மிரண்டாமெழுத்தி னெடிலொப்புமை நோக்கி
நெடிலெதுகை யெனப்படும். - ஒளவைக்குறள். - 'நாடி வழக்க மறிந்து செறிந்தடங்கி,
நீடொளி காண்ப தறிவு.' இஃது டகரமெய் வருக்க வெதுகை. - 'மேலை யமுதை
விலங்காமற் றானுண்ணிற், காலனை வஞ்சிக்கலாம்.' இஃது லகரமெய் வருக்கவெதுகை. -
"தோடாரெல்வளை நெகிழநாளு, நெய்த லுண்கண்பைதலுழப்ப, வாடா வவ்வரி புதைஇப்
பசலையும், வைகறோறும் பையப்பெருகி, நீடா ரிவரென நீண்பணங் கொண்டோர்,
கேளார் கொல்லோ காதலர்தோழி, வாடாப் பௌவ மறமுகந் தெழிலி, பருவஞ்செய்யா
துவலனேர் புவளைஇ, யோடார் மலைய வேலிற், கடிது மின்னுமிக்கார் மழைக் குரலே."
இஃதடியிடையிட்டு வந்தமையா லிடையிட்டெதுகையென்று தொல்காப்பியர் காட்டிய
பாட்டு. நாலடியார். - "புதுப்புனலும் பூங்குழையார் நட்பு மிரண்டும், விதுப்பற நாடின்
வேறல்லப் - புதுப்புனலு, மாரியறவே யறுமேயவ ரன்பும், வாரியறவே யறும்." இஃது
முன்பி லிரண்டடியு மோரெதுகையாய்ப் பின்பிலிரண்டடி மற்றோ ரெதுகையாய்
வந்தமையா லிரண்டடி யெதுகை. - "இழைத்தநா ளெல்லை யிகவாபிழைத் தொரீஇக்,
கூற்றங்குதித்துய்ந்தா ரீங்கில்லை - யாற்றப், பெரும்பொருள் வைத்தீர் வழங்குமி
னாளைத், தழீஇந்தழீஇந் தண்ணம் படும்."
	


156


	இஃதிடை யிரண்டடி யொழிந்தவேனை யிரண்டடியு மோரெதுகை. - "தவலருந்
தொல்கேள்வித் தன்மை யுடையா, ரிகலில ரெஃகுடையார் தம்முட் - குழீஇ, நகலி
னினிதாயிற் காண்பா மகல்வானத், தும்ப ருறைவார் பதி." இஃதீற்றடியு முதலடியு
மொழிந்தவேனை யிரண்டடியுமோ ரெதுகை. - "ஒருநன்றி செய்தவர்க் கொன்றியெழுந்த,
பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் - கயவர்க், கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீதாயி,
னெழுநூறுந் தீதாய் விடும்." இஃது முதலாமடி யொழிந்தவேனை மூன்றடியுமோ ரெதுகை.
- "கொன்னே கழிந்தன் றிளைமையு மின்னே, பிணியொடு மூப்பு வருமாற் -
றுணிவொன்றி, யென்னொடு சூழாதெழுநெஞ்சே பாதியே, நன்னெறிசேர நமக்கு."
இஃதிரண்டாமடி யொழிந்தவேனை மூன்றடியுமோ ரெதுகை. - "மாக்கேழ் மடநல்லா
யென்றரற்றுஞ் சான்றவர், நோக்கார்கொ னொய்யதோர் புக்கில்லை - யாக்கைக்கோ,
ரீச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே, காக்கை கடிவதோர் கோல்." இஃது
மூன்றாமடி யொழிந்தவேனை மூன்றடியுமோ ரெதுகை. "எறிநீர்ப் பெருங்
கடலெய்தியிருந்து, மறுநீர்சிறுகிணற் றுறல்பார்த்துண்பர், மறுமையறியாதா ராக்கத்திற்
சான்றோர், கழிநல் குரவே தலை." இஃதுநான்காமடி யொழிந்த வேனை மூன்றடியுமோ
ரெதுகை. என்றா ரொருசாரார், பரி, திரு, இரை, இரவு, எதுகையாம். இரீ, இரா,
வெதுகையாகா. எ-று. (13)
 
215. 	தலையா கெதுகை தலைச்சீர் முழுதுற
லிடைகடை யவ்வவ் வெழுத்தொன் றுவதே.
 
     (இ-ள்.) இதுவுமது. முதலெழுத் தொன்றல்லாது முதற்சீரெ ழுத் தெல்லாந் தாமே
மீண்டு வருவது தலையாகெதுகை யெனப்படும். அங்ஙனங் கருவி யென்றதற்கு மருவி,
அருவி, உருவி, குருவி. என வந்தொருசீர் முழு தொன்றுவ தரிதாயினும் புகழப்படுஞ்
சிறப்புடைய தலையாகெதுகையாம். (வ-று.) குறள் - "சிற்றின்பம் வெஃகியற னல்ல
செய்யாரே, மற்றின்பம் வேண்டுபவர்." - கலித்துறை. - "கரோருகம் போல்வளரென்
பாவந் தீர்க்க வின்மதிபூண், சரோருகமென் சேவடிகண் டணியெனோ தாரகை சூழ்,
சிரோருகம் பூப்பப் புணர்பவத் தென்றுஞ் செழுங்கருணை, யுரோருகமாக விளைகாவலூ
ரமலோற் பவியே." - விருத்தம். - "துறவினா லுடலி னாக்கை துறந்ததோ ருயிர்க
ளொப்பா, ருறவினா லன்பின் மிக்கோ ருயிர்க்கெலா முடல்க ளொப்பா, ரறவினா
லெழீஇய தன்மைத் தருண்மலி யமர ரொப்பார், நறவினா லலர்ந்த கானுநலத் தில்வா
னுலகொப் பாமே." என்பன பிறவு முதலொருசீர் முழுதொன்றித் தொடுத்த
தலையாகெதுகை வந்தவாறு காண்க. மீளவும் பலசீரொன்றித் தொடுத்துவரி னதின்மிக்க
சிறப்பெனக் கொள்க. (வ-று.) வெண்பா. - நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடிய தன்,
றாணிறத்தாற் பொய்கைத் தலஞ்சிவப்ப - மாணிறத்தான், முன்னப் புட் டோன்று
முளரித் தலைவைகு, மன்னப்புட் டோன்று மருகு." என
	


157


	முதற் றொடைக்கண் ணொருசீரு மிரண்டாந் தொடைக்கண் ணிருசீரு மொன்றித்
தொடுத்தவாறு காண்க. - விருத்தம். - "யானையெழுங்கட லேந்திய தேர் பரிகாற்,
சேனை யெழுங்கடல் சென்றுசெழுங் கடன்மே, லேனை யெழுங்கடன் மோதலெனப்
பகைவர், தானையெழுங்கழ லோடுதலைப்படுமால்.' எனவும், 'காமமே பறவைத்
தேர்மேற் கசடெனும் பாலைச் சேர்ந்தாள், வீமமே பறவைத் தேர்மேல் விளைதவக்
குறிஞ்சி ஞான, வாமமே பறவைத் தேர்மேல் வளரற முல்லை சேர்ந்தென், னாமமே
பறவைத்தேர்மே னயப் பவா னாட்டைச் சேர்வாள்." எனவும், நான்கடிக்கண் ணிருசீரு
முச்சீரு மொன்றித் தொடுத்தவாறு காண்க. பிறவுமன்ன. அன்றியு மிரண்டாமெ
ழுத்தொன்றே மாறாது தொடுத்துவருவ திடையாகெதுகை யெனப்படுவம். (வ-று.) குறள்.
- "அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு." எ-ம். அன்றியு
முதற்சீர்க் கடையெழுத் தொன்றே மாறாது தொடுத்து வருவது கடையாகெதுகை யெனப்
படும். (வ-று.) எச்சத்தா - ரென்றதற்கு - சுற்றத்தா - ரெனவும், பரியா - வென்றதற்கு -
மணியா - லெனவும், பிறவுங் கடையாகெதுகை. ஆயினு மிது சிறப்பன்று. எ-று. (14)
 
216. 	மோனை முதலடி முதல்வரி னடியே
யிணைவ திணையே யிடைவிடல் பொழிப்பே
யிறுவ தோரூஉ வீறொன் றொழிவது
கூழை முதலயல் குன்றன் மேற்கதுவா
யீற்றய லொன்றொன் றாதெனிற் கீழ்க்கதுவா
யெல்லா மொன்று வதெனின் முற்றென்ப.
 
     (இ-ள்.) இனித் தொடைவிகற்ப மாமாறுணர்த்துதும். மேற்கூறிய மோனை, இயைபு,
எதுகை, முரண், அளபு, என வைந்தொகையும் ஒவ்வொன் றெண்வகைப் படுமெனக்
கொள்க. இவற்றை, 218-ஞ் சூத்திரத்திற் காண்க. அவற்றுள் அடிதோறு முதலெழுத்
தொன்றி வரத் தொடுப்பது அடிமோனைத் தொடையும், அடிதோறு மிறுதிக்கண்
ணெழுத் தோன்றி வரத்தொடுப்பது அடியியைபுத் தொடையும், அடி தோறு மிரண்டா
மெழுத்தொன்றி வரத்தொடுப்பது அடியெதுகைத்தொ டையும், அடிதோறு முதற்கண்
மொழியானும் பொருளானு மறுதலைப்ப டத் தொடுப்பது அடிமுரண்டொடையும்,
அடிதோறு முதற்கண் ணுயிர ளபெடையு மொற்றளபெடையு மொன்றிவரத் தொடுப்பது
அடியளபெ டைத் தொடையு மெனப்படும். - 'முதலெழுத் தொன்றின் மோனை யெதுகை
முதலெழுத் தியைபோ டொத்தது முதலா, மஃதொழித் தொன்றினாகு மென்ப." என்றார்
பல்காயனார். - "இறுவா யொப்பி னஃதியைபென மொழிப." என்றார்கையனார். -
"மொழியினும் பொருளினு முரணுதன் முரணே." என்றா ரொல்காப்
பெருமைத்தொல்காப்பியனார். - "அளபெடைத் தொடைக்கே யளபெடை யொன்றும்."
என்றார் நற்றத்தனார். (வ-று.) "மாவும் புள்ளும் வதிவயிற் படர, மானீர் விரிந்த
பூவுங்கூம்ப, மாலைதொடுத்த கோதையுங் கமழ,
	


158


	மாலை வந்த வாடை மாயோ,ளின்னுயிர் புறத்திறுத் தற்றே." இஃதடிதோறு முதலெழுத்
தொன்றிவரத் தொடுத்தமையா லடி மோனைத்தொடை. - "இன்னகைத் துவர்வாய்க்
கிளவியு மணங்கே, நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே, யாடமைத் தோளி கூடலு
மணங்கே, யரி மதர் மழைக் கண்ணு மணங்கே, திருநுதற்பொறித்த திலதமு மணங்கே."
இஃதடிதோறு மிறுதி யெழுத்துஞ் சொல்லு மொன்றிவரத் தொடுத்தமை
யாலடியியைபுத்தொடை. - "வடியேர்க ணீர்மல்க வான்பொருட்கட்சென்றார், கடியார்
கனங்குழாய் காணார்கொல் - காட்டி, னிடியின் முழக்கஞ்சி யீர்ங்கவுள் வேழம்,
பிடியின்புறத் தசைத்த கை." இஃதடிதோறு மிரண் டாமெழுத் தொன்றிவரத்
தொடுத்தமையா லடியெதுகைத்தொடை. - "இருள் பாந்தன்ன மானீர் மருங்கி, னிலவு
குவித்தன்ன வெண்மண லொருசிறை, யிரும்பி னன்னகருங் கோட்டுப் புன்னை,
பொன்னி னன்ன நுண் டாதிறைக்குஞ், சிறுகுடிப் பரதவர் மடமகள் பெருமதர்,
மழைக்கணு முடையவா லணங்கே." இஃதடிதோறுஞ் சொல்லானும் பொருளானு
மறுதலைப்படத் தொடுத்தமையா லடிமுரண்டொடை. - "ஆஅவளி யவலவன்றன்
பார்ப்பினோ, டீஇரிரையுங் கொண்டீரளைப் பள்ளியுட், டூஉந்திரை யலைப்பத் துஞ்சா
திறைவன்றோண், மேஎவலைப் பட்ட நம்பொன்றுநுதர, லோஒவுழக்குந் துயர்."
இஃதடிதோறு முதற்க ணளபெடுத் தொன்றிவரத்தொ டுத்தமையா
லடியளபெடைத்தொடை. அன்றியும் ஒவ்வோ ரடிவரையுள்ளு மோனைமுத லைந்தும்
வரப் பெறும். வருங்கானாற் சீரான்வரு மளவடியைப்பற்றி யெழுவிகற் பாகும்.
ஆகையின் முதலெழுத் திரண்டாஞ் சீர்க்கண் வரின் இணைமோனை, எ-ம். மூன்றாஞ்
சீர்க்கண் வரின் பொழிப்பு மோனை, எ-ம். நான்காஞ்சீர்க்கண் வரின் ஒரூஉமோனை,
எ-ம்.இறுதிச்சீ ரொ ழித்தொழிந்த சீர்க்கண் வரின் கூழை மோனை, எ.ம். இரண்டாஞ்சீ
ரொழித்தொழிந்த சீர்க்கண்வரின் மேற்கதுவாய் மோனை, எ-ம். முன்றாஞ்சீ
ரொழித்தொழிந்த சீர்க்கண்வரின் கீழ்க்கதுவாய் மோனை, எ-ம். எல்லாச்சீர்க்கண் வரின்
முற்றுமோனை, எ.ம். கொள்க. யாப்பருங்கலம். - "இருசீர் மிசைவரத் தொடுப்ப
திணையே. - முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே. - சீரிரண் டிடைவிடத்
தொடுப்ப தொரூஉத்தொடை. - மூவொருசீரு முதல்வரத் தொடுப்பது, கூழை
யென்மனார் குறிப்புணர்ந்தோரே. - முதலயற் சீரொழித் தல்லன மூன்றன், மிசைவரத்
தொடுப்பது மேற்கது வாயே. - ஈற்றயற் சீரொழித் தெல்லாந் தொடுப்பது கீழ்க்கது
வாயின் கிழமைய தாகும். - சீர்தொறுந் தொடுப்பது முற்றெனப் படுமே." என்றா
ராகலின். (வ-று.) - திருக்காவலூர்க் கலம்பகத்தகவல். - "பனிமதுப் பதுமந் தன்னிகன்
மறந்து, குனிமதிப் பிறைமேற் கோங்குமிழ்ந் தலரவுந், தொல்லையந் தற்பகை யொழிந்து
சூட்டொழிந், தெல்லையு மென்னுளத் திளைம்பிறை வீசவுந், தொற்பகைப் பரிதிசெய்
சுடர்மின் றேலா, நற்பக னண்ணிய வுடுவொளி நல்கவு, மவையொருங்கணிதே வருங்
	


159


	கொடி யலரிறாச், சுவை யொருங் கமைகனி சுமந்துயர் நிமிரவும், பெருந்திருக் கலாபப்
பீலிகளாடு, மருந்திருக் காவலூ ரகத்துக் கண்டேன், கண்டுளம் பிணித்துகுங் கனிதே,
னுண்டுளம் பிரிவினி யூழியுமரிதே." இப்பன்னீரடி யகவலுண் முதலேழடிக்கண் முறையே
இணைமோனை, பொழிப்பு மோனை, ஒரூஉமோனை, கூழைமோனை, மேற்கதுவாய்
மோனை, கீழ்க்கதுவாய்மோனை, முற்றுமோனை, என வெழுவகைமோனையும்
வந்தவாறறிக. - "மொய்யுளங் குளிர்க்கு முகிலே பொழிலே, பெய்யுள மயிலே பேர்க்கு
நிழலே, வில்லே யேந்திய விதுவதி கழலே, யெல்லா ரெல்லே யியலே யுடலே, வெயிலே
வயலே மின்றவழ் குழலே,குயிலே நிகராக் குரலே சொல்லே, மயிலே யியலே மயலே,
விகலே, யிவ்வுரு விங்ஙன மெய்தலி, னெவ்வுயி ரனைத்து மின்னுயி ராயவே." இதனு
ளிணை யியைபு முதலாகிய வெழு வகை யியைபும் வந்த வாறறிக. ஈற்றெழுத்தொன்றி
மீண்டு வருவதியை பென்றாகையி லிதற் கடியீற்றின்கண் வந்தசீர் முதற் சீராகக்கொண்டு
வரும் புனற்கெதிரே போவதுபோன் மூன்றாஞ்சீ ரிரண்டாஞ் சீராகவு மிரண்டாஞ்சீர்
மூன்றாஞ்சீராகவு முதற்சீர் நான்காஞ் சீராகவுங் கொள்க. "பொன்னி னன்ன பொறிசுணங்
கேந்தி, பன்னருங் கோங்கி னன்னலங்க வற்றி, மின்னவி ரொளிவடந் தாங்கிமன்னிய,
நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி, யென்னையு மிடுக்கண் டுன்னிவித் தின்னடை,
யன்னமெ ன்பெடைபோ லப்பன்மலர்க் கன்னியம், புன்னையி னீழற் றுன்னிய, மயிலோ
சாயல் வாணுத, லயில்வேலுண்க ணெம்மறிவு துலைத்தனவே." இதனு ளிணையெதுகை
முதலாகிய வெழுவகை யெதுகையும் வந்தவா றறிக. - திருக்காவலூர்க் கலம்பகவிருத்தம்.
- "ஆங்கமலத் தேங்கமலமாய் நிலாத், தாங்கவரு பாங்கவரு தாளெழீஇ, நீங்கவலை
யாங்கவலை நீசவென், றீங்கு வகை நீங்குவகை சேர்ந்ததே". இதுவுமது. - "சீறடிப் பேரக
லல்கு லொல் குபு, சுருங்கிய நுசுப்பிற் பெருவடந் தாங்கிக், குவிந்துசுணங் கரும்பிய
கொங்கை விரிந்து, சிறிய பெரிய நிகர்மலர் கோதைதன், வெள்வளைத் தோளுஞ்
சேயரிக் கருங்கணு, மிருக்கையு நிலையு மேந்தெழி லியக்கமுந், துவர்வாய்த் தீஞ்சொலு
முவந்தெனை முனியா, மென்று மின்னண மாகுமதி, பொன்றிகழ் நெடுவேற்
போர்வல்லோயே." இதனுள் இணைமுரண் முதலாகிய வெழுவகை முரணும் வந்தவா
றறிக. - "தாஅட் டாமரை மலருழக் கிப், பூஉக் குவளைப் போஒதருந்திக், காஅய்ச்
செந்நெற் கறித்துப் போஒய், மாஅத் தாண்மோஒட் டெருமை, தேஎம் புனலிடை
சோஒபான, மீஇனா அர்ந் துகளுஞ், சீஇரோஎராஅர்நீ இணீஇரூரன், செய்தகேண்மை,
யாய் வளைத்தோழிக் கலரா னாவே." - இதனு ளிணையளபெடை முதலாகிய
வெழுவகை யளபெடையும் வந்தவா றறிக. எ-று. (15)
 
217. 	அந்தாதி யடிக்கடை யாதி யாத
லிரட்டை முழுதோ ரிறையடிக் கியவடி
செந்தொடை தொடையொன்றுஞ் சேரா வடியே.
	


160


	(இ-ள்.) அந்தாதித்தொடையு மிரட்டைத்தொடையுஞ் செந்தொடையு
மாமாறுணர்த்துதும். மோனைமுத லைந்தொடையுங் கூறிய வடிமுத லெண்வகை
விகற்பத்தோடு கூட்டிக் குனிக்கச்சொன்ன தொடையுந் தொடைவிகற்பமு நாற்பதெனக்
கண்டுணர்க. அவையு மன்றி அந்தாதித்தொடை,இரட்டைத்தொடை,
செந்தொடை,இம்முத்தொடையு முளவெனக் கொள்க. இவற்றுள் அடிதோறு
மிறுதிக்கணின்ற எழுத்தானு மசையானுஞ் சீரானு மடியானு மற்றையடிக் காதியாகத்
தொடுப்பது அந்தாதித்தொடை யெனப்படும். (வ-று.) "உலகுடன்விளக்கு
மொளிகிளரவிர்மதி,மதிநல னழிக்கும் வளங்கெழு முக்குடை,முக்குடை நீழற் பொற்புடை
யாசன,மாசனத் திருந்ததிருந்தொளி யறிவனை, யறிவுசே ருள்ளமோ டருந்தவம் புரிந்து,
துன்னிய மாந்தரெனப்,பன்னருஞ் சிறப்பின் விண்மிசை யுலகே." எனவெ ழுத்தான
மசையானுஞ் சீரானு மடிதோறு மந்தாதித்தொடை வந்தவாறு காண்க. அன்றியும்,
அளவடிக்கண்ணே யோரடிமுழுது மொருசொல்லே வரத்தொடுப்ப திரட்டைத்தொடை
யெனப்படும். இதனு ளீற்றெழுத் தொன்று குறையினு மிழுக்கா. (வ-று.) "ஒக்குமே
யொக்குமே யொக்குமே யொக்கும், விளக்கினுட் சீறெரி யொக்குமே, யொக்குங்,
குளக்கோட்டிப் பூவினிறம்." என முதலடி யிரட்டைத்தொடையாக வந்தவாறுகாண்க.
அன்றியு மோனைமுதலாகிய தொடையுந் தொடைவிகற்பமு மின்றி வேறுபடத்
தொடுப்பது செந்தொடை யெனப்படும். இதனுண் முதலசையானு முதற் சீரானு
மடிதோறும் வேறுபடத் தொடுத்தமையிற் சிறப்புடைச் செந்தொடையா மெனக் கொள்க.
(வ-று.) அகவல். - "பூத்த சல்லகி வியன்சினைக் காவின் மிகுதிருக் காவலூ ரகத்தின்
பெழுந்தாளும் வான்மதி யாளே." எனத் தொடை விகற்ப மின்றி யசையுஞ் சீருந்
தம்முண் மறுதலைப் படத் தொடுத்தமையாற் சிறப்புடைச் செந்தொடை வந்தவாறு
காண்க. - யாப்பருங்கலம். - "செந்தொடை யிரட்டையோ டந்தாதி யெனவும், வந்த
வகையான் வழங்குமன் பெயரே. - ஈறுமுதலாத் தொடுப்ப தந்தா தியென், றோதினர்
மாதோ வுணர்ந்திசி னோரே. - இரட்டை யடிமுழு தொருசீ ரியற்றே. - செந்தொடை
யொவ்வாத் திறத்தன வாகும்." - காரிகை. - "அந்த முதலாய்த் தொடுப்ப தந்தாதி யடி
முழுதும், வந்த மொழியே வருவ திரட்டை வரன் முறை யான், முந்திய மோனை
முதலா முழுது மொவ்வாது விட்டாற், செந்தொடை நாமம்பெறு நறுமென் குழற்றே
மொழியே." இவை மேற்கோள். எ-று. (16)
 
218. 	அடியினைப் பொழிப்பொரூஉக் கூழை மேற்கீழ்க்
கதுவாய் முற்றென வெட்டொடு மோனை
யியைபே யெதுகை முரணே யளபே
யெனவைந் துறழ வெண்ணைந் தாகி
யடியந் தாதி யிரட்டைச் செந்தொடை
	


161


	யெனவிம் மூன்று மியையத் தொடையும்
விகற்பமு மெண்ணைந் தொருமூன் றென்ப.
 
     (இ-ள்.) மேலே வகுத்துரைத்த நாற்பதின் மூன்று தொடையுந் தொடை விகற்பமு
மீண்டுத்தொகுத்துக் காட்டுதும். அடிமுத லெட்டுடனே மோனைமுத லைந்தினையுங்
கூட்டியுறழ நாற்பதாகும். அவை வருமாறு:- அடிமோனை, இணைமோனை,
பொழிப்புமோனை, ஒரூஉமோனை, கூழைமோனை, மேற்கதுவாய்மோனை,
கீழ்க்கதுவாய்மோனை, முற்றுமோனை, எ-ம். அடியியைபு, இணையியைபு,
பொழிப்பியைபு, ஒரூஉவியைபு, கூழையியைபு, மேற்கதுவாயியைபு, கீழ்க்கதுவாயியைபு,
முற்றியைபு, எ-ம். அடியெதுகை, இணையெதுகை, பொழிப்பெதுகை, ஒரூஉவெதுகை,
கூழையெதுகை, மேற்கதுவாயெதுகை, கீழ்க்கதுவாயெதுகை, முற்றெதுகை, எ-ம்.
அடிமுரண், இணைமுரண், பொழிப்புமுரண், ஒரூஉமுரண், கூழைமுரண்,
மேற்கதுவாய்முரண், கீழ்க்கதுவாய்முரண், முற்றுமுரண், எ-ம். அடியளபெடை,
இணையளபெடை, பொழிப்பளபெடை, ஒரூஉவளபெடை, கூழையளபெடை,
மேற்கதுவாயளபெடை, கீழக்கதுவாயளபெடை, முற்றளபெடை, எ-ம். வரும். அன்றியும்,
அந்தாதித்தொடை, இரட்டைத்தொடை, செந்தொடை, எ-ம். வரும். - யாப்பருங்கலப். -
"மோனை யெதுகை முரணியை யளபெடை, பாத மிணையே பொழிப்போ டொரூஉத்
தொடை, கூழை கதுவாய் மேலதூஉங் கீழதூஉஞ், சீரிய முற்றொடு சிவ ணுமா
ரவையே." இதுமேற்கோள். எ-று. (17)
 

முதலாமோத்துச்செய்யுளுறுப்பு. - முற்றிற்று.

..............................

இரண்டாமோத்துச்செய்யுளியல்.
Chapter II. - The kinds of Metre.

219. 	
வெண்பா வகவல் விரிகலி வஞ்சி
மருட்பா வெனவை வகைப்பா வன்றியுந்
துறைதாழிசை விருத்தந் தூக்கின மூன்றே.
 
     (இ-ள்.) பாவும் பாவினமு மாமாறுணர்த்துதும். மேற்கூறிய வுறுப்பி னாற் பாவும்
பாவினமு மாகும். இவையே வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா,
எனப்பா வைவகையா மெனக்கொள்க. அன்றியும் துறை, தாழிசை, விருத்தம், என
மருட்பா வொழித்தொழிந்த மற்றை நாற்பாவிற் கினமூன்று மெனவுங் கொள்க.
ஆகையி லைவகைப்பாவு முந்நான் கினமுமாகச் செய்யுள்வகை யொருபதினேழென்பர்.
அவையாவன:- வெண்பா, வெண்டுறை, வெண்டாழிசை, வெளிவிருத்தம். எ-ம்.
ஆசிரியப்பா,
	


162


	ஆசிரியத்துறை, ஆசிரியத்தாழிசை, ஆசிரியவிருத்தம், எ-ம். கலிப்பா, கலித்துறை,
கலித்தாழிசை, கலிவிருத்தம், எ-ம். வஞ்சிப்பா, வஞ்சித்துறை, வஞ்சித்தாழிசை,
வஞ்சிவிருத்தம், எ-ம். மருட்பாவோடு பதினேழாம். இவ்வகைச் செய்யு ளெல்லா
மிவ்வோத்தின் கண்ணே விளங்குவ தாகையி லிவ்வோத்துச் செய்யு ளியலெனும்
பெயர்த்தெனக் கொள்க. - யாப்பருங்கலம். - "செய்யுட் டாமே மெய்ப்பெற விரிப்பிற்,
பாவே பாவின மென விரண்டாகும். - வெண்பா வாசிரியங் கலிவஞ்சி, பண்பாய்ந்
துரைத்த பாநான் கும்மே. - தாழிசை துறையே விருத்த மென்றிவை, பாவினம் பாவொடு
பாற்பட் டியலும்." இவை மேற்கோள். எ-று. (1)

........................

வெண்பாவிலக்கணம் வருமாறு:-

Venba.

220. 	
வெள்ளைக் கியற்சீர் வெண்சீர் விரவி
யேற்கு மளவடி யீற்றடி சிந்தடி
யீற்றுச்சீ ரசைச்சீ ருக்குறண் மிகலுமாம்.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே வெண்பா வியல்பும் விகற்பமு மாமாறுணர்த்துதும்.
வெண்பா விடத்துத் தனக்குரிச்சீராகிய நேரீற்ற மூவசைச்சீரும் வெண்சீருமன்றி
யீரசைச்சீராகிய வியற்சீரும் வரப்பெறும். அன்றியும், வெண்பாவெல்லா மளவடியானே
நடக்குமாயினு மீற்றடி சிந்தடியாக வரும். இதனீற்றுச் சீர்நாண் மலரெனு மோரசைச்
சீராம். ஆயினுமிவ் வோரசைக்குக் குற்றயிலுகரங் கூட்டிக் காசு பிறப்பென வெண்பாவிற்
கீற்றுச் சீராகவும் பெறுமே. (வ-று.) குறள். - "சொல்லப் பயன்படுவர் சான்றோர்
கரும்புபோற், கொல்லப் பயன்படுங் கீழ். எ-ம். எனப்பகை யுற்றாரு முய்வர்
வினைப்பகை, வீயாது பின்சென் றடும். எ.ம். அறங்கெட வெஞ் ஞான்றுஞ் செய்யற்க
செய்யிற் றிறங்கெடச் சாதலிற்றீது. எ-ம். சுறுவரை யே யாயினுஞ் செய்த நன்றல்ல,
துறுபயனில்லை யுயிர்க்கு. எனவு மிவை யலகிடுங்கால் வெண்சீரியற்சீர் விரவிமுதற்கண்
ணளவடியாகவு மீற்றின் கண் சிந்தடியாகவு மீற்றுச்சீர் முறையே-நாள்-மலர்-காசு-பிறப்பு-
என நான்கும் வந்தவாறு காண்க. அன்றியு மொரேவிடத்திலக்கிய வழியான்
முற்றியலுகரங் காசு பிறப்பென்னு மீற்றுச்சீராக வரப்பெறும். (வ-று.) "எவ்வ துறைவ
துலக முலகத்தோ, டவ்வ துறைவ தறிவு." என விது முற்றிய லுகரத்தோடு வந்த பிறப்பு
என்னும் வாய்பாடு. பிறவுமன்ன. - யாப்பருங்கலம். - "செப்ப லிசையன வெண்பா
மற்றவை, யந்தடி சிந்தடி யாகலு மவ்வடி, யந்த மசைச்சீ ராகவும் பெறுமே." எ-று. (2)
 
221. 	வெள்ளையுட் பிறதளை விரவா வெண்டளை
யொன்றாய்ச் செப்ப லோசை யாமஃதே
	


163


	யேந்திசை வெண்சீ ரியற்சீர் தூங்கிசை
யொழுகிசை யிரண்டு முளவெனி லாகும்.
 
     (இ-ள்.) வெண்பா வோசையின் விகற்ப முணர்த்துதும். வெண்பா விற்கெல்லா
மாமுன் நிரையும் விளமுன் நேருங் காய்முன் நேரும் வந்து தனக்குரிய
வெண்டளையன்றிப் பிறதளைவாரா. அங்ஙனம் வெண்டளையால் வருமோசை
செப்பலோசை யெனப்படு மாயினும் இவை மூவகைய வாகும். வெண்சீர்
வெண்டளைவருவ தேந்திசைச் செப்ப லெனவும், இயற்சீர் வெண்டளைவருவது
தூங்கிசைச் செப்ப லெனவும், வெண்சீரு மியற்சீரும் விரவி வெண்டளை வருவ
தொழுகிசைச் செப்ப லெனவுங் கொள்க. (வ-று.) "தீயவை மூன்றான் பிறர்க்குச்
செய்யற்க தன்னுயிர்க்கே, நோயவைபின்றான் வேண்டாதான்." என்ப தேந்திசைச்
செப்பலோசை. - "பகையவர்க் கன்பினைக் காட்டலிற் பார்மேற், றகையவை யெங்கு
மில." எ-து. தூங்கிசைச் செப்பலோசை. - "அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது,
பொன்றுங்காற் பொன்றாத் துணை." என்ப தொழுகிசைச் செப்பலோசை. பிறவுமன்ன. (3)
 
222. 	குறள்சிந் தின்னிசை நேரிசை சவலை
பஃறொடை யெனவெண் பாவா றவற்று
ளீரடி குறளே யிருகுறள் சவலை
யிருகுற ளிடைக்கூ னியைநே ரிசையே
நாலடி விகற்ப நடையின் னிசையே
நேரிசை யின்னிசை நேர்மூ வடிசிந்தே
நாலடி மிக்கடி நண்ணிற் பஃறொடை
யெனவறு வெண்பா வேற்கு நடையே.
 
     (இ-ள்.) வெண்பா விகற்ப மாமாறுணர்த்துதும். அவையே, குறள்வெண்பாவும்,
சிந்தியல்வெண்பாவும், இன்னிசைவெண்பாவும், நேரிசைவெண்பாவும்,
வலைவெண்பாவும், பஃறொடைவெண்பாவும், எனவறுவகைப்படும். இவற்றுட்
குறள்வெண்பா. - நாற்சீர் முச்சீரென விரண்டடி யொருவிகற்பத்தானு மிருவிகற்பத்தானும்
வரப் பெறும். முச்சீர் வருவனவு முளவெனக் கொள்க. மேலேகாட்டிய வுதாரணங்களைக்
கண்டுகொள்க. அன்றியும் இரு குறளொரு விகற்பத்தான் வருவது சவலை வெண்பா
வெனப்படும். - "நனி யிரு குறளாம் நான்கடி யுடைத்தாய்த் தனிநிலை யில்லது சவலை
வெண்பாட் டே." என்றா ரொருசா ராசிரியர். (வ-று.) "அட்டாலும் பால்சுவையிற் குன்றா
தளவல்ல, நட்டாலு நண்பல்லார் நண்பல்ல, கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்களே
சங்கு, சுட்டாலும் வெண்மை தரும்." என விது மூதுரைக் கண் வந்தமையான்
மூதுரைவெண்பா வென்பாரு முளரெனக் கொள்க. அன்றியும் இருகுறள் வந்து நடுவே
முதற் றொடைக் கேற்றத் தனிச்சொற்
	


164


	பெற் றொருகுற ளொவ்வொரு விகற்பமாய் வரினும் இருகுறளு மொருவி கற்பமாய்
வரினு நேரிசைவெண்பா வெனப்படும். தனிச்சொல் லெல்லா மொருசீராக நிற்பினுமச்சீ
ரொருவகை யசையானு மிருவகை யசையானும் வரப் பெறும். இவற்றுள் நேர் நேர் நிரை
நிரை நேர் நேர் நேர் என மூன்று மொருவகை யசையான் வந்தசீராய் மற்றைந்து
மிருவகை யசையான் வரப்பெறும். ஆகையி லொருவகை யசையாற் றனிச்சொல்வரின்
ஒராசிடை நேரிசைவெண்பா வெனவும், இருவகை யசையாற் றனிச் சொல் வரின்
ஈராசிடை நேரிசைவெண்பா வெனவுஞ் சொல்லுவர் புலவர். (வ-று.) "பரப்புநீர்
வையகத்துப் பல்லுயிர் கட்கெல்லா, மிரப்பவரின் வள்ளல்க - ளில்லை, யிரப்பவ
ரிம்மைப்பயனு மினிச்சொல் கதிப்பயனுந், தம்மைத் தலைப்படுத்த லான். என்ப திதிலே
தனிச்சொல்லாக விரப்பவராகிய கருவிள மென்னு மொருவகை யசைச்சீர் வந்தமையா
லிது வோராசிடை நேரிசை வெண்பா வெனப் படும். - "எஞ்சினா ரில்லையெனக்
கெதிராயின் னுயிர்கொண், டஞ்சினா ரஞ்சாதுபோ யகல்க - வெஞ்சமத்துப், பேராத
வராகத் தன்றிப் பிறர் முதுகிற், சாரா வென்கையிற் சரம்." என்ப திதிலே
தனிச்சொல்லாக வெஞ்சமத்தாகிய கூவிளங்கா யென்னு மிருவகை யசைச்சீர் வந்தமையா
லிது வீராசிடை நேரிசை வெண்பா வெனப்படும். நேரிசை வெண்பா மிக்குவழங்கு
மென்றமையாற் பொதுப் பெயர் தனக்குரித்தாகி வெண்பா வெனப்படு மென்றறிக.
அன்றியு நாற்சீர் மூவடியு முச்சீ ரீற்றடியும் வருவ தின்னிசை வெண்பா வெனப்படும்.
இதுவு மொரு விகற்பத்தானு மிருவிகற்பத்தானும் வரப் பெறும். (வ-று.) "துகடீர்
பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப், பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க, வகடுற
யார்மாட்டு நில்லாது செல் வஞ், சகடக்கால் போல வரும்." எ-ம். "இன்றுகொ லென்று
கொலென் னாது, பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி, யொருவுமின் றீயவை
யொல்லும் வகையான், மருவுமின் மாண்டா ரறம்." எ-ம். ஒருவிகற்பத் தானும்
இருவிகற்பத்தானு மின்னிசை வெண்பா வந்தவாறுகாண்க. மிக வழங்கு மிவ்வகை
யின்னிசை வெண்பா. அன்றியு நேரிசை வெண்பாப் போல நாற்சீர் முச்சீர் தனிச்சொல்
லொருவிகற்பத்தால் வந்து நாற்சீர் முச்சீர் வேறிரு விகற்பத்தால் வருவதும், நாற்சீர்
முச்சீர் தனிச்சொல் முச்சீரிரு விகற்பத்தால் வருவதும், நாற்சீர் முதன்மூவடியு முச்சீர்
நான்கா மடியு மடிதோறு மொருஉத்தொடை பெற்று வருவதும், இன்னிசை வெண்பா
வெனப்படும். (வ-று.) வெண்பா. - "பேரொளி வேண்டிற் பொருள்பொழிக
பின்றெனக்கே, சேர்பொருள் வேண்டிற் றீதொழிக - பாருலகி, னின்று வப்ப வேண்டி
னெறிநிற்ப துயரின்மை, வேண்டின் வெகுளி விடல்." அன்றியும், - "நீலஞ்
சுனைத்தன்ன நீர்மைதயை நிலைத்தே, ஞாலந் தரினென்னா நட்பில்லாற் - பூமணமும்,
பூண்மணியும் பொன்றா மணியொளியுமா மன்றோ, நாமடைந்த சீர்க்கெல்லா நட்பு."
அன்றியும், "மழையின்றி மாநிலத்தார்க்கில்லை,
	


165


	மழையுந் தவமில்லா ரில்வழி யில்லைத், தவமு மரசில்லா ரில்லழி யில்லை, யரசனு
மில்வாழ்வா னில்வழி யில்." என முறையே மூவகையின் னிசை வெண்பா வந்தவாறு
காண்க. ஆயினு மின்றிவை வழங்கா. அன்றியு நான்கடிமிக்கப் பலவடி நாற்சீ ரடியாய்வந்
தீற்றடி முச்சீராய் வருவன பஃறொடை வெண்பா வெனப்படும். பலதொடையாக
வருமென் றமையாற் பஃறொடையென்னும் பெயர்த்து. (வ-று.) "பேதமை வித்திட் டுடலே
பேதை நிலமரமாய்த், தீதமை வின்னோய் முளையே கண்ணீர் தெளித் துயர்ந்து,
காதல்வேர் வீழ்த்தி மருள்காமங் கவடிரண்டாய், வேதனைபூ நிந்தைகாய் வீதல்
கனியாமென், றெண்ணார்க்கே விளையு மெனத்தேறி, மண்ணார் மயனீத்த மாதவத்தின்
வாளான், மறமரக்கோ டீர்த்துக் கதிக்கனி யைவாய்த், தீன்றமர மாக்கலினிது." என்பதிரு
மொழிமாலைக்கண்ணாற்றொ டையாக வந்த பன்றொடை வெண்பா. ஆயினு மிந்நாளி
லிதுவும் வழங்கா. அன்றியு மூவடியால் வருவது சிந்தியல் வெண்பா. இதுவே
நேரிசைவெண் பாப்போல நாற்சீர் முச்சீர் தனிச்சொல் லொரு விகற்பத்தானு முச்சீர்
மூன்றாமடி யவ்விகற்பத்தானும் வேறே விகற்பத்தானும் வரப்பெறி னேரிசைச் சிந்தியல்
வெண்பா வெனப்படும். (வ-று.) "ஆநிறம் வேறாயினு மந்நிற த்த வாபயந்த, பானிறம்
வேறன்று பல்குலத்தோர் நானிலையின், வேறெ னினுஞ் செய்யறனோ வேறு." எ-ம்.
அன்றியு மின்னிசை வெண்பாப்போல நாற்சீர் முச்சீர் தனிச்சொல் லின்றி யொரு
விகற்பத்தானும் பல விகற்பத்தானு மடிதோறு மொரூஉத்தொடையானும் வருவன
வின்னிசைச் சிந்தியல் வெண்பா வெனப்படும். (வ-று.) "காவா சினத்தென்பேர்
கேட்டலிற் காய்ந்தெள்ளேல், பூவேங்கை பூநாகம் பூங்குட்டமுண் டெளையுங், கோவே
வினையாற் கொளல்." எ-ம். பிறவுமன்ன. ஆயினு மிவையு மிந் நாளில் வழங்கா.
இங்ஙன மறுவகைவெண்பா வந்தவாறு காண்க. அன்றியும், வெண்பாவிற் கெல்லா
நாற்சீரால் வருமளவடி யுரித்தாகையிற் குறளே யோரடி முக்காலெனவும், சிந்திய லீரடி
முக்கா லெனவும், நேரிசையு மின்னிசையு மூவடி முக்காலெனவும், பஃறொடை பலவடி
முக்காலென வும், வழங்குவ ருளரே. ஆகையின் வெண்பாவும் வெண்பாவிகற்பமு
மிந்நடை பெறுவன வாயினுந் தண்டமிழ்ச் சொல்லானும் விழுமிய பொருளானும்
வருவதே வெண்பா வியல்பெனக் கொள்க. இவ்வாறன்றிச் சீருந்தளையும் வழுவா
தொழுகினுஞ் சொல்லும்பொருளு மிழிவாய் வந்த வெண்பாவே வண்புலித் தோலைப்
போர்த்துப் பசும்புன் மேய்ந்த கோவென விழிப்படத் தோன்று மென்றுணர்க. -
யாப்பருங்கலம். - "குறள் சிந் தின்னிசை நேரிசை பஃறொடை, எனவைந் தாகும்
வெண்பாத் தானே. - ஈரடி குறள்சிந் திருதொடை யியற்றே. - நாலோ ரடியாய்த்
தனிச்சொற் பெற்றுட, னீறொரு வாய்முற் றிருவிகற் பொன்றினு, நேரிசை வெண்பா
வெனப்பெய ராகும். - விகற் பொன் றாகியு மிக்குந்தனிச் சொ லியற்றப் படாதன
வின்னிசை வெண்பா. - பாதம் பலவரிற் பஃறொடை வெண்பா."
	


166


	- இலக்கணத் திரட்டு. - "இருகுறள் சவலை யொரு விகற் பாகும்." எ-று. (4)

........................

ஆசிரியப்பா விலக்கணம் வருமாறு:-

Asiriyappa.

223. 	
ஆசிரி யத்தொலி யகவலா யியற்சீர்
தன்றளை பிறவுந் தழுவிய வளவடி
நடையா னடந்து நால்வகைத் தாமவை
நேரிசை யிணைக்குற ணிலமண் டிலமே
யடிமறி மண்டில மாகு மென்ப.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே ஆசிரியப்பா வியல்பும் விகற்பமு
மாமாறுணர்த்துதும். ஆகையி லாசிரியப்பாவிற் கெல்லா மகவலோசை யாகு
மென்றமையா லாசிரிய மெனினு மகவ லெனினு மொக்கும். அகவற் கெல்லாந் தனக்குரிச்
சீராகிய வியற்சீரன்றி யொரோவிடத்து வெண்சீரும், தேமாங்கனி புளிமாங்கனி யென்னு
மிடைநேரிசை வஞ்சிச்சீரும், குற்றியலுகரவீற்றப் பொதுச்சீரும் வரப் பெறும். அங்ஙனந்
தன்றளை யன்றி வெண்டளையும் வஞ்சித்தளையுங் கலித்தளையு மயங்கி வழங்கும்.
அன்றியு மகவலெல்லா மளவடியா னடக்கு மாயினு மினிச்சொல்லும்படி யொரோ
விடத்துக் குறளடியுஞ் சிந்தடியும் வரப்பெறும். அன்றியு நேரிசை யாசிரியப்பாவும்,
இணைக்குற ளாசிரியப்பாவும், நிலமண்டில வாசிரியப் பாவும், அடிமறிமண்டில
வாசிரியப்பாவும், என வாசிரியப்பா விகற்ப நான்காகும். இவற்றிற் குதாரண மினிக்
கூறுவதும். - யாப்பருங்கலம். - "அகவலிசையன வகவன் மற்றவை, ஏ ஓ ஈ ஆ யென
வையென் றிறுமே. - நேரிசை யிணைக்குறண் மண்டில நிலைப்பெய, ராகு மண்டில
மென்றகவ னான்கே." இவை மேற்கோள். எ-று. (5)
 
224. 	நேரிசைச் சிறுமை நேருமூ வடியே
வரையா பெருமையே மற்றடி யளவடி
யீற்றயற் சிந்தடி யியைந்து வருமே.
 
     (இ-ள்.) நேரிசை யாசிரியப்பா வாமாறுணர்த்துதும். மூவடி குறை யாமற் பலவடி
வந்து மற்றடி யளவடியாகி யீற்றய லடியே சிந்தடியாகவரப்பெறு மகவல் நேரிசை
யாசிரியப்பா வெனப்படும். இதுவே பொதுப்பெ யராக விந்நாளி லகவ லென்று வழங்கும்.
இதற் குதாரணமாக இருநூற்றுப் பதினாறாஞ் சூத்திரத்திற் காட்டியவிரண் டகவல்
காண்க. - யாப்பருங்கலம். - "அந்த வடியி னயலடி சிந்தடி, வந்தன நேரிசை யாசிரி
யம்மே." இது மேற்கோள். எ-று. (6)
 
225. 	இணைக்குறண் முதலீற் றீரடி யளவடி
யிடைக்குறள் சிந்தடி யிணையப் பெறுமே.
	


167


	 (இ-ள்.) இணைக்குற ளாசிரியப்பா வாமாறுணர்த்துதும். முதலடியு மீற்றடியு
மளவடியாகி யொழிந்த நடுவிரண்டடியும் பலவடியுங் குறளடி யாகவுஞ் சிந்தடியாகவும்
வருவன விணைக்குற ளாசிரியப்பா வெனப்ப டும். (வ-று.) திருக்காவலூர்க்கலம்பகம். -
"வாழிய வும்பர் வணங்கிய வணங்கே, வாழிவா னொளியே, வாழிபா ருயிரே, யாதியை
யீன்றனை, நீதியை யூன்றினை, பானொளி யணிந்தனை, மீனொளி புனைந்தனை,
குறைமதி மிதித்தனை, மறைமதி விதித்தனை, மேதினி காத்தனை, தீதினை தாற்றினை,
கதிக்கத வாயினை, திதிக்கனி வாயினை, வானோர் களித்தனை, யீனோ ரளித்தனை,
தொழுமுளத் துள்ளுறை சோதியை, யழுமுளத் தாதர வோதியை, நீரகத் தம்புய
நேரினை, யாரகத் தம்பர நீரினை, வானவர் வாழ்த்த வானமாண், டீனவர் வாழலிங்
கெய்தினை, யாவ லூர்வழி யாற்றிருக், காவ லூரருங் காதலே, யன்புணர் நீயிவ
ணமைந்தபின், பொன்புண ருலகொடு பூவுல கொத்ததே." என முதற்கண்ணு
மீற்றின்கண்ணு மளவடிவந் திடைய குறளடி பலவுஞ் சிந்தடி பலவும் வந்தவாறு காண்க.
- யாப்பருங்கலம். - "இணைக்குற ளிடைபல குறைந்திறி லியல்பே." எ-று. (7)
 
226. 	நிலமண்டிலத் தெங்கு நீங்கா வளவடி
யடிமறி மண்டில மந்நடைத் தாகி
யடிமா றினுந்தா னழியா நிலைத்தே.
 
     (இ-ள்.) நிலமண்டில வாசிரியப்பாவு மடிமறி மண்டில வாசிரியப் பாவு
மாமாறுணர்த்துதும். ஆகையி லெல்லாவடியு மளவடியாக வருவன நிலமண்டில
வாசிரியப்பா வெனப்படும். (வ-று.) "சீத மதிக்குடை சேர்ந்தறங் கிடப்பத், தாதவிழ்
தாரான் றனிக்கோ றாங்கப், போதவிழ் நிழற் பொழிற் புலியுட னுழைபகைப், பேதநீத்
துலவும் பெரும்புகழ் நாடே." எ-ம். புறநிலை யன்றியு மெல்லாவடியு மளவடியாக
வருவதல்லாதே முதலடி யீற்றடி யிடையடி பலவுமாறி யுச்சரிப்பினு மோசையும்
பொருளும் வழுவாது வருவன அடிமறி மண்டில வாசிரியப்பா வெனப்படும். (வ-று.)
"நீரிடை நுரையினேர் கெடுமிளை மையே, சாரிடை மின்னற் கடிதிரும் புகழே, தேரிடை
யுருளிற் செல்வ மாறுமே, தாரிடை மதுவினிற் றவிர்ந்தொழி யின்பமே. எ-ம். புறநிலை. -
காரிகை. - "கடையயற் பாதமுச் சீர்வரி னேரி சைக் காமருசீ, ரிடைபல
குன்றினிணைக்குறளெல்லா வடியு மொத்து,நடை பெறு மாயி னிலமண் டிலநடு வாதி
யந்தத், தடைதரு பாதத் தகவ லடிமறி மண்டிலமே." - யாப்பருங்கலம். - "ஒத்த
வடியின தாகியு மொற்றி, நிற்பவு மென்னு நிலமண் டிலமே." இவைமேற்கோள். எ-று. (8)
 
227. 	கலியொலி துள்ளல் கலித்தளை பிறவும்
வெண்சீர் பிறவும் விரவிய வளவடி
தன்னா னடக்குந் தன்மைத் தாகி
	


168


	யொத்தாழிசை மூன்று மோரைங் கொச்சகம்
வெண்கலி கலிவெண்பா விகற்பமீ ரைந்தே.
 
     (இ-ள்.) கலிப்பா வியல்பும் விகற்பமு மாமாறுணர்த்துதும். கலிப் பாவோசை
துள்ளலோசை யெனப்படும். கலிப்பாவிற் கெல்லாச் சீரும் விரவி வரினு நிரையீற்
றியற்சீரு நேரிடை வஞ்சிச்சீரும் வெண்சீரு மேற்பன. இவற்றுண் ணிரைமுதல் வரும்
வெண்சீரு மிகுமெனக் கொள்க. மீளவுந் தன்றளை யன்றிப் பிறதளை வரவும் பெறுமே.
அன்றியுங் கலிப்பா வெல்லா நாற்சீரான்வரு மளவடியா னடக்குமென் றுணர்க. அன்றியு
மொத்தாழிசைக் கலிப்பா மூன்றுங் கொச்சக மைந்தும் வெண்கலிப்பா வொன்றுங்
கலிவெண்பா வொன்றுமாகக் கலிப்பா விகற்பம் பத்தெனக்கொள்க. இவற்றிற் கெல்லாந்
தனித்தனிச் சூத்திரம் வாராமுன்ன ரவற்றிற்கு வேண்டிய வுறுப் பிவை யெனக்
காட்டுதும். - யாப்பருங் கலம். - "துள்ள லிசையன கலியே மற்றவை, வெள்ளையு
மகவலு மாய்விளைந் திறுமே." இது மேற்கோள். எ-று. (9)
 
228. 	கலிமுக லுறுப்பாந் தரவுதா ழிசையே
துணையுறுப் பெனக்கூன் சுரிதகம் வண்ணக
மம்போ தரங்க மாமிவை நான்கே.
 
     (இ-ள்.) கலிப்பா வுறுப்பிவையென வுணர்த்துதும். ஆகையின் முதலுறுப்பெனவுந்
துணையுறுப் பெனவுங் கலிப்பாவுறுப் பிருவகைப் படும். இவற்றுட் டரவுந் தாழிசையு
மெனவிரண்டு முதலுறுப்பாம். கலிப்பாதலை யில்வருதலாற் றரவெனும் பெயர்த்து.
என்னை. தரவெனினு மெருத்தமெனினு மொக்கும். அங்ஙனந் தரவின்கீழே தாழ்ந்திசைப்
படுதலாற் றாழிசை யென்னும் பெயர்த்து. அன்றியுந் தனிச்சொல்லுஞ் சுரிதகமும்
வண்ணகமு மம்போதரங்கமு மெனத் துணையுறுப் பொருநான் கென்ப. இவற்றுட்
கூனெனினுந் தனிச்சொல் லெனினு மொக்கும். இவை யெல்லாவற்றையு மினி விளக்குதும்.
எ-று. (10)
 
229. 	தரவு தாழிசை தன்றளை வெண்டளை
யிரண்டுறழ்ந் தளவடி யிரண்டும் பலவுமாம்.
 
     (இ-ள்.) தரவு தாழிசை யாமாறுணர்த்துதும். தரவுந் தாழிசையுங் கலித்தளை
வெண்டளை யெனவிரண்டும் விரவி யளவடியா யடி யிரண்டும் பலவுமாக நடக்கும்.
இவற்றிற் குதாரண மினிக் காட்டுதும். (11)
 
230. 	வண்ணக மளவடி வரைமுதற் பலவடி
நான்காதி யெட்டீறாய் நடைமுடு கராகமாம்.
 
     (இ-ள்.) வண்ணக மாமாறுணர்த்துதும். வண்ணக மெனினு முடுகிய லெனினு மராக
	


169


	யானும் வந்து நான்கடி குறையா வெட்டடி மிகா வருமெனக் கொள்க. இதற்கு மினிவரு
முதாரணங் காண்க. எ-று. (12)
 
231. 	அம்போ தரங்க மம்பளாந் திரைபோ
லளவடி யீரடி யிரண்டும் பேரெண்
ணளவடி யோரடி நான்கு மளவெண்
சிந்தடி யோரடி யெட்டு மிடையெண்
குறளடி யோரடி நானான்குஞ் சிற்றெண்
ணெட்டு நானான்கு நான்கு மெட்டுமாய்ச்
சுருங்கவு மந்நாற் றுணையுறுப் புடைத்தே.
 
     (இ-ள்.) அம்போதரங்க மாமாறுணர்த்துதும். அம்போதரங்க மென்பது கரைசாரக்
கரைசார வொருகாலைக் கொருகாற் சுருங்கிவரு நீர்த்தரங் கம்போல நாற்சீரடியு
முச்சீரடியு மிருசீரடியுமாகப் பேரெண் ணளவெண் ணிடையெண் சிற்றெண்ணென
நாலுறுப்போடு வருமென் றுணர்க. அவற்றுள்ளே யளவடி யீரடியாக விரண்டு வருவது
பேரெண். அளவடி யோரடியாக நான்கு வருவ தளவெண். சிந்தடி யோரடியாக வெட்டு
வருவதிடையெண். குறளடி யோரடியாகப் பதினாறு வருவது சிற்றெண் ணெனப்படும்.
இவற்றுள் ளெட்டும் பதினாறுமாக வருவன சுருங்கி நான்கு மெட்டுமாய் வரவும் பெறு
மெனக் கொள்க. ஆயினுந் தரவு முதன் மேற் கூறிய வுறுப்பெலாந் தோன்ற
வொவ்வொருதரவு மொவ்வொரு தாழிசையு மொவ்வோ ரெண்ணும் வண்ணக வராகமு
மிவை யொன்றுந் தத்தம் பொருளே முகியத் தருதல் வேண்டு மெனக் கண்டுணர்க.
இனி யிவற்றிற்கு முதாரணங் காண்க. (13)
 
232. 	சுரிதக மென்ப சுரிந்தெனக் கூனின்
பின்னகவல் வெள்ளை யாக முடிவதே.
 
    (இ-ள்.) சுரிதக மாமாறுணர்த்துதும். மேற்கூறிய வுறுப்பினுள் வர வேண்டுவற்றை
வருவித் தொருசீரான் வருந் தனிச்சொல் வந்தபின் மூன்றடி முதலாய்ப் பலவடியான்வரு
மகவலானே சுரிதகம் வந்து கலிப்பா வெல்லா முடியும். ஒரோவிடத்துச் சுரிதகம்
வெண்பாவானும் வரப்பெறும். இனிவரு முதாரணங் காண்க. எ-று. (14)
 
233. 	நேரிசை யம்போ தரங்க வண்ணக
மென்றொத் தாழிசை யிவைமூன் றிவற்றுட்
டரவொன் றொருமுத் தாழிசை தனிநிலை
சுரிதக மெனநாற் றுணைவரு நேரிசை
தாழிசைக் கீழம்போ தரங்கஞ் சாரவு
மம்போ தரங்கமே லராக மணையவு
மம்போ தரங்கமே யாம்வண் ணகமாம்.
	


170


	 (இ-ள்.) ஒத்தாழிசைக் கலிப்பா விகற்ப மாமாறுணர்த்துதும். நேரிசை யென்றும்,
அம்போதரங்க மென்றும், வண்ணக மென்றும், ஒத்தாழிசைக் கலிப்பா மூவகைப் படும்.
இவற்றுட் டரவொன்று தாழிசை மூன்று தனிச் சொற் சுரிதகமென விந்நான்குறுப்பாக
வருவன நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா வெனப்படும். (வ-று.) - "வானிடியோர்
முரசார்ப்ப வண்ணமுகில் வாகனத்தின், மீனெடிதோர் கொடியேந்தி வினையெதிரொப்
பொன்றிலனா, யொருதானு மாய்ப்படைத்த வுலகனைத்தும் புரந்தாளுஞ், சொருதானு
நன்னாடா தொழும்பன்சொல் லருளிக்கேள்." இது நான்கடித்தர வொன்று. - "தேடரிய
பொருணேர்ந்தோர் சீரடிமைக் கொண்டன்பின், வாடரிய துயர்க்குளைய மறப்பவரோ
மாண்புளரே, புலற்கரிய விழுஞ்செல்வம் பொழிந்தடிமை கொண்டன்பிற், சொலற்கரிய
துயர்க்குளையத் தூத்துவரோ தொடர்புளரே, மிடிகாணா வாழ்ந்துவப்ப விழைந்தடிமை
கொண் டன்பின், னடிகாணாத் துயர்க்குளைய வகற்றுவரோ வன்புளரே." என வொரு
பொருண் மேன் மூன்றடுக்கிவந்த வீரடித்தாழிசை மூன்றும். என வாங்கு - தனிச்சொல்.
"கோடிய வென்குறை கொண்டெனை யொருவர, வாடிய வென்னுயிர் வாழ்ந், தோடிய
நின்னடி சேர லருள்தியே." என மூவடியகவற் சுரிதகமாக நேரிசை யொத்தா ழிசைக்
கலிப்பா வந்தவாறு காண்க. அன்றியும் மேற்கூறிய நான்குறுப்பி னடுவே தாழிசையின்
கீழம்போ தரங்கத்தி னால்வகையெண்ணுங் கூட்டி வருவன வம் போதரங்க
வொத்தாழிசைக் கலிப்பா வெனப்படும். (வ-று.) - "இலங் கொளி வடிலினோ யிணையி
னின்றயை, யலங்கொளி மணிகொழித் தமிழ் தவே லையே, சீரளித் தனைத்தையுந்
திளைக்க நின்கொடை, பாரளித் தீறில பனித்த மாரியே." இது பேரெண் - "மூவுல
கனைத்தையு மொழிகொண் டராக்கினை, பூவுலக் குறைத்துளி பொழிந்தழித்தனை,
யைந்நகர் கடுஞ்சினத் தழல நூறினை, முந்நக ரருட்கொடு முகிள நோக்கினை."
இதுவளவெண். - "வான்றோய் நயம்பயந் தோய்நீ, மண்டோய் துயரொழித் தோய்நீ,
தேன்றோ யருட்கட லோய்நீ, செல்தோய் மழைத்தயை யோய்நீ." இது
நான்கடியாகச்சுருக்கிய விடையெண் - "அருவமைந்தனை, யுருவமைந்தனை,
வான்றுறந்தனை, வான்றிறந்தனை, பழிவிலக்கினை, வழிதுலக்கினை, யறத்தினாழியை,
திறத்தினூழியே." இது எட்டியாகச் சுருக்கிய சிற்றெண். ஆகையின் மேற் சொன்ன
செய்யுட் கண்ணே தாழிசைக் கீழிவை சொருகி வைப்புழி யம் போதரங்க
வொத்தாழிசைக் கலிப்பாவா மெனக்கொள்க. அன்றியும், அம்போதரங்க மேலே
தாழிசைக் கீழே யராகங்கூட்டித் தரவு தாழிசை யராகமம் போதரங்கந் தனிச்சொற்
சுரிதகமென வாறுறுப்பாகவருவன வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா வெனப்படும்.
அராகமெனினும் வண்ணகமெ னினு மொக்கும். அசையடி யெனினும் அம்போதரங்க
மெனினுமொக் கும். (வ-று.) "சினவழி யுளியுளி சிதைவுற முனிவினை, மனவழி யருடிரள்,
வழிநனி தயையினை, மருடரு மறுவற மனமுறை யொளியினை, யிருடருவெளிற்ற
	


171


	மிருமறை யருளினை." இது அராகமாகையின் மேல்வந்த வுறுப்புக்களன்றித் தாழிசைக்கு
மம்போ தரங்கத் திற்குநடுவே யிவை யிசைப்புழி வண்ணக வொத்தாழிசையா
மெனக்கொள்க. ஆகையின் முறையே யொத்தாழிசைக் கலிப்பா விகற்ப மூன்றும்
வந்தவாறு காண்க. - யாப்பருங்கலம். - "நேரிசை யம்போ தரங்கம் வண்ணமென்,
றோதிய மூன்றே யொத்தா ழிசைக்கலி. - தரவொன்று தாழிசை மூன்றுஞ் சமனாய்த்,
தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச், சுரிதகஞ் சொன்ன விரண்டினு ளொன்றாய்,
நிகழ்வது நேரிசை யொத்தா ழிசையே. - முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை,
யொன்றினுக் கொன்று சுருங்கு முறுப்பின, தம்போ தரங்க வொத்தா ழிசைக்கலியே. -
அவற்றொடு முடுகிய லடியுடை யராக மடுப் பது வண்ணக வொத்தா ழிசையே." இவை
மேற்கோள். எ-று. (15)
 
234. 	கொச்சகக் கலியைங் கூறு பாடெனத்
தரவே தரவிணை தாழிசை சிலபல
சிலபிறழ்ந் துறழ்ந்துஞ் சிலமயங் கியுமாம்.
 
     (இ-ள்.) கொச்சகக் கலிப்பா விகற்ப முணர்த்துதும். அவையே தரவுக் கொச்சகக்
கலிப்பா, எ-ம். தரவிணைக் கொச்சகக் கலிப்பா, எ-ம். சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா,
எ-ம். பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, எ-ம். மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, எ-ம்.
கொச்சகக் கலிப்பா விகற்ப மைந்தெனக் கொள்க.
 
     இவற்றுள், தரவுக் கொச்சகக் கலிப்பா வருமாறு- நான்கடி தரவு தனிச்சொற் சுரிதக
மென விம்மூன் றுறுப்பாக வருவன தரவு கொச்சகக் கலிப்பா வெனப் படும். இதுவே
தனிச்சொற் சுரிதக மின்றியும் வருமெனக் கொள்க. (வ-று.) "செல்வப் போர்க்கதக்
கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாளி, முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை
முருக்கிப்போ, யெல்லைநீர் வியங்கோண்மு விடைநுழையு மதியம்போன், மல்லலோங்
கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே." எனக் கலித்தளையாய் நான்கடித்தரவு தனிச்
சொற் சுரிதகமின்றி வந்தவாறு காண்க.
 
     அன்றியும், தரவிணைக் கொச்சகக் கலிப்பா வருமாறு:- தரவு தனிச் சொற்றரவு
தனிச்சொற் சுரிதகமாக வருவன தரவிணைக் கொச்சகக் கலிப்பா வெனப் படும். (வ-று.)
"வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய, கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங்
காவலனாங், கொடிபடுவரை மார்பிற் கூடலாற் கோமானே." தரவு. எனவாங்கு -
தனிச்சொல். "துணைவளைத் தோளிவன் மெலியத் தொன்னலந் தொடர்புண்டாங்,
கிணைமலர்த்தா ரருளுமே லிதுவிதற் கோர்மா றென்று, துணைமலர் தடங்கண்
ணார்துணை யாகக் கருதாரே." தரவு. அதனால் - தனிச்சொல். "செவ்வாப் பேதை யிவ
டிறத், தெவ்வா றாங்கொ, லிஃதெண்ணிய வாறே." இஃதுஇடை யிடை யே தனிச்சொற்
பெற்றாசிரியச் சுரிதகத்தான் முடிந்த தென்றறிக.
	


172


	அன்றியும், சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா வருமாறு:- தரவு தாழிசை தனிச்சொற்
றாழிசை தனிச்சொற் சுரிதகமாக வருவன சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா வெனப்
படும். (வ-று.) "பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றிக்,
குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப், படைப்பரிமான்
றோரினொடும் பரந்துலவு மறுகினிடைக், கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார்
கோமானே." இதுதரவு. ஆங்கொருசார், "உச்சியார்க் கிறைவனா யுலக மெல்லாங்
காத்தளிக் கும்,பச்சை யார்மணிப் பைம்பூட் புரந்தரனாப் பாவித்தார், வச்சிரங் காணாத
காரணத்தான் மயங்கினரே, ஆங்கொருசார், அக்கால மணிநிரைகாத்தருவரை யாற்
பனிதவிர்த்து, வக்கிரனை வடிவழித்த மாயவனாய்ப் பாவித்தார், சக்கரங் காணாத
காரணத்தாற் சமழ்த்தனரே, ஆங்கொருசார், மால்கொண்ட பகைதணிப்பான் மாத்தடிந்து
மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார், வேல்கொண்ட
தின்மையால் விம்மிதராய் நின்றனரே." இவை மூன்றுந் தாழிசை. அஃதான்று -
தனிச்சொல். "கொடித்தேர்த்தோன்றல் கொற்கைக்கோமானின் புகழொருவன்
சேம்பூட்சேஎ, யென்று நனியறிந்தனர் பலரேதானு, மைவரு ளொருவனென் றறிய லாகா,
மைவரை, யானை மடங்கா வென்றி மன்னவன் வாழியென் றேத்த, தென்னவன் வாழி
திருவொடும் பொலிந்தே." சுரிதகம். இது தனிச்சொல் இடையிடை பெற்று ஒருதரவும்
மூன்று தாழிசையும் சுரிதகமுங் கொண்டு நேரிசை யொத்தாழிசைக் கலியிற்சிறிது
வேறுபட்டு வந்ததென் றறிக.
 
     அன்றியும், பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா வருமாறு:- தரவு தாழிசைமூன்றின்
மிக்கனபலவுந் தனிச்சொற் சுரிதகமாகவருவன பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா வெனப்
படும். (வ-று.) "தண்மதியோர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங், குண்மதியு
முடனிறையு முடன்றரள முன்னாட் கட், கண்மதியோர்ப் பிவையின்றிக் காரிகையி
னிறைகவர்ந்து, பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ." இதுதரவு.
"இளநலங்கொ ளிவள்வாட விரும்பொருட்குப் பிரிவாயேற், றளவநல முகைவெண்பற்
றாழ்குழற் றளர்வாளோ, தகைநல மிவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல், வகைநல
மிவள்வாடி வருந்தீயி லிருப்பாளோ, அணிநல மிவள் வாட வரும்பொருட்குப்
பிரிவாயேன், மணிநல மகிழ்மேனி மாசோடு மடி வாளோ, நாம்பிரியோ மினியென்று
நன்னுதலைப் பிரிவாயே, லோம்பிரியோ மெனவுரைத்த வுயர்மொழியும் பழுதாமோ,
குன்றளித்த திரடோளாய் கொய்புனத்திற் கூடியநா, ளன்றளித்த வருண்மொழியா
லருளுவது மருளாமோ, சிலபகலு மூடியக்காற், சிலம்பொலிச்சீ றடிப்பரவிப், பலபகலுந்
தலையளித்த பனிமொழியும் பழுதாமோ." இவை யாறுந்தாழிசை. அதனால் -
தனிச்சொல். "அரும்பெற லிவளினுந் தரும்பொருளதனினும், பெரும்பெற லரியள்,
வெறுக்கையுமற்றே, விழுமிய தறிமதிவாழி, கெழுமியகாதலிற் றரும்
	


173


	பொருள் சிறிதே" இது சுரிதகம். நான்கடித்தரவு மீரடித் தாழிசை யாறுந் தனிச்சொல்லு
நான்கடி யகவற் சுரிதகமுமாய் வந்ததென் றறிக.
 
     அன்றியும், மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா வருமாறு:- தரவிரண்டுந் தாழிசையாறு
மராகமு மீண்டு தாழிசையாறு மம்போதரங்கமுந் தனிச்சொல்லுஞ் சுரிதகமுமாக வருவன
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா வெனப் படும். (வ-று.) "மணிகிளர் நெடுமுடி மாயவனுந்
தம்முனும்போன், றணிகிளர் நெடுங்கடலுங் கானலுந் தோன்றுமா, னுரைநிவந்
தவையன்ன நொப்பறை யஞ் சிறையன்ன, மிரைநயந் திறைகூருமே மஞ்சார்
துறைவகேள். - வரையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக், கரையெனக்
காற்றெனக் கடிதுவந் திசைப்பினும் விழுமியோர் வெகுளிபோல் வேலாழி யிறக்கல்லா,
தெழுமுன்னீர்ப் பரந்தொழுகு மேமஞ்சார் துறைவகேள்." இவையிரண்டுந் தரவு. -
"கொடிபுரை நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோ, டொடிநெகிழ்ந்த
தோள்கண்டுந் துறவலனே யென்றியால், கண்கவரு மணிப்பைம்பூட் கயில்கவைய
சிறுபுறத்தோ, டெண்பனிநீ ருகக்கண்டுந் திரியலனே யென்றியா, னீர்பூத்த நிரையிதழ்க்
கண்ணின்றொசிந்த புருவத்தோள், பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே யென்றியால்,
கனைவரல் யாற் றிருகரைபோற் கைந்நில்லாதுண்ணெகிழ்ந்து,நினையுமென் னிலைகண்டு
நீங்கலனே யென்றியால், வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோய் பொறுக்கல்லாந்,
தாழுமென் னிலைகண்டுந் தாங்கலனே யென்றியால் கலன்க விழ்த்த நாயகன்போற்
களைதுணைப் பிறிதின்றிப், புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால்,"
இவையாறுந்தாழிசை. அதனால் - தனிச்சொல். "அடும்பயி லிறும்பின் னெடும்பணை
மிசைதொறுங், கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு, செறிசெரூஉ விடையெறி
தொழிலி ளையவா, நெறிதரு பிறவியின் மறிதருந் தீயில், அரசுடை நிரைபடை
விரைசெறி முரசென, நுரைதரு திரையொடு கரைபொருங்கடல், அலங்கொளி யவிர்சுட
ரிலங்கொளி மனைதொறுங், கலந்தெறிகாலொடும் புலம்பின பொழில்." இவைநான்கு
மராகம். "விடாஅது கழலுமென வெள்வளையுந் தவிர்ப்பாய்மன், கெடாஅது
பெருகுமெனக் கேண்மையு நிறுப்பாயோ, ஒல்லாது கழலுமென் னொளிவளையுஞ்
செறிப்பாய்மன், னில்லாது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ, தாங்காது கழலுமென்
றகைவளையுந் தவிர்ப்பாய்மன், னீங்காது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ, மறவாத
வன்பினென் மன நிற்கு மாறுரையாய், துறவாத தமருடையென் றுயர்தீரு மாறுரையாய்,
காதலார் மார்பின்றிக் காமக்கு மருந்துரையாய், ஏதிலார் தலைசாய யானுய்யு
மாறுரையாய், இணைப்பிரிந்தார் மார்பின்றி யின்பக்கு மருந்துரையாய், துணைப்பிரிந்த
தமருடையென் றுயர்தீரு மாறுரையாய்." இவையாறுந்தா ழிசை. எனவாங்கு -
தனிச்சொல். "பகைபொன்றது துறைபரிவாயின குறி, நகையிழந்தது முகநனிவாடிற்றுடம்பு,
தகையிழந்தது தோடலைசிறந்ததுதுயர்,
	


174


	புகைபரந்தது மெய்பொறையாகிற் றுயிர்." இவையிருசீரோரடி யெட் டம்போதரங்கம்.
அதனால் - தனிச்சொல். "இனையது நினையா லனையது பொழுதா, னினையல வாழி
தோழி துலையாப், பனியொடு கழிகவுண் கண்ணொடு கழிகவித் துன்னிய நோயே."
இதுசுரிதகம். தர விரண்டுந் தாழிசையாறுந் தனிச்சொல்லு மராகமு மீண்டுதாழிசையாறு
மம்போதரங்கமுந் தனிச்சொல்லுஞ் சுரிதகமும் வந்ததென் றறிக. இது மேற்கூறிய
வாறுறுப்பிற் சிற்சிலபிறழ்ந்து முறழ்ந்துங் குறைந்து மிக்கு மயங்கிவருவ தாகையின்
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா வென்னும் பெயர்த்து. மீண் டிதையொரு போ கென்மரு
முளரே. எனவு மிதுவே கலம்பக முதலுறுப்பாக வரப்பெறு மெனவுங் கொள்க. -
யாப்பருங்கலம். - "தரவே தரவிணைத் தாழிசை தாமுஞ், சிலவும் பலவுஞ் சிறந்து
மயங்கியு, மற்றும் விகற்பம் பலவாய்வருநவுங், கொச்சக மென்னுங் குறியின வாகும்."
இது மேற்கோள். எ-று. (16)
 
235. 	வெண்கலிக் களவடி பலதளை பலதொடை
மண்டியீற் றசைச்சீர் வந்துசிந் தடியாங்
கலிவெண் பாவெண் கலியென நடப்பினும்
வலிவெண் டளைதவா வரவும் பலதொடை
நேரிசை வெண்பா நேரவும் பெறுமே.
 
     (இ-ள்.) வெண்கலிப்பாவுங் கலிவெண்பாவு மாமாறுணர்த்துதும். ஆகையிற்
கலித்தளை வெண்டளை யொரோவிடத்துப் பிறதளையாகவும், அளவடி யிரண்டுமோ
ரெதுகையால் வந்தொரு விகற்பமாய்ப் பலதொடையாகவு, மீற்றடிசிந்தடியாகி நாண் -
மலர் - காசு - பிறப்பென வோரசைச்சீரான் வெண்பாப்போல முடிந்தன வாகவும்,
வருவன வெண்கலிப்பா வெனப்படும். (வ-று.) "சென்னாக நீர்பொழிய செல்வநிலைக்
கறமுமிகப், பொன்னாக நகர்புரையப் புவனமெலாம் புரந்தாண்டே. - கருமேவும்
வளைதவழுங் கமழ்வயற் பாய்பூந் தடஞ்சூழ், மருமேவு நிழற்சோலை மயின்மேவிக்
களித்தாடக், கரும்பொப்பச் செஞ்சாலி காய்த்தலர்கைக் கடைசியரே, சுரும்பொப்பச்
சூழிரப்போர் துதித்துவப்ப வியந்தீந்து. - மாலைதாழ் குழலசைய மணக்குரவை
யொலித்தாட, வாலைதாழ் புனலொழுகி யலர்வனமுங் கனி பொழிலு, மல்கிவளர்
சிறப்போங்க வரையாச்சீர் மனம்வெறுப்ப, நல்கிவள ரீத்தல நன் னாடு." என
வைந்தொடையோடு கலித்தளை வெண்டளை விரவி மற்றடி யளவடி யீற்றடிசிந்தடியாக
வெண்பாப்போலக் காசெனு மசைச்சீ ரான் வந்த வெண்கலிப்பா வெனக் காண்க.
அன்றியுங் கலிவெண்பாவும் வெண்டளையன்றிப் பிறதளை விரவாவென்ற
வேற்றுமையல்லது வெண்கலிப்போல நடக்குமென் றுணர்க. ஆயினு நேரிசை
வெண்பாப்போல நாற் சீர்முச்சீர் தனிச்சொல் லெனமூன் றொருவிகற்பமாக வந்து
பலதொடை யிவ்வாறொன்றித் தொடர்ந்து முச்சீரீற்றடி நாண் - மலர் - காசு -
பிறப்பென வோரசைச் சீரானு முடிந்து வருவத சிறப்பெனக் கொள்க. உலா மடல்
	


175


	முதலியு விந்நடை யுடையன வெனக்கண் டுணர்க. (வ-று.) - ``தீயோருரை கேளான்
றீயோர்வழி செல்லான், றீயோர்முறை யோதான் செவ்வோனே - தூயமறைச்,
சொல்லொன்றே தேடகத்தான் சோரா திராப்பகலச், சொல்லொன்றே சூழுணர்வான்
சொல்வோனே - யொல்லெனப்பாய், நீர்முகத்துப் பொய்யா நிறைகனிகொய்
கொம்பொப்பான், கார்முகத்துப் பாசிலையுங் காய்ந்துதிரா - சீர்முகத்து, மாசில்லோர்க்
கெல்லா மயக்கமற வாழ்வாமே, யாசுள்ளோர்க் கப்படியோ வல்லவல்ல - வேசுபெறக்,
காமமுதற் பற்றுதலாற் கால் சுழற்றுந் தூசியெனா, நாமமுத லற்றழிவார் நச்சறிவார் -
வீமமிகத், தீர்வை யிடுநாளிற் சிதைந்தேங்கி நல்லவருட், சோர்வையுறத் தாம்பிரிந்து
சூழ்ந்து ளைவார் - போர்வையில, தூயோர் நெறியறிவான் சூழாள்வான் கேடுகுக்குந்,
தீயோர் நெறியறிவான் சேர்ந்து.ழுழு எனப் பலதொடையாய் நேரிசைவெண்பாப்போல
வந்தகலிவெண்பா வெனக்காண்க. எ-று. (17)
 
236. 	கட்டளைக் கலிப்பாக் காட்டுங் காலை
யொருமாக் கூவிள மொருமூன் றியைய
நேர்பதி னொன்று நிரைபன்னீ ரெழுத்தாய்
நடந்தடிப் பாதியாய் நான்கடி யொத்தவாய்
வருவ தின்று வழங்கு நெறியே.
 
     (இ-ள்.) கட்டளைக்கலிப்பா வாமாறுணர்த்துதும். இன்றைப் புலவர்மற்
றொருவகைக் கலிப்பாவை விதித்துக் கட்டளைக்கலிப்பாவென்றுவழங்குவர்.
அதுவேயிரட்டையடியா யொவ்வொருபாதிசீர் வகையாற் றேமாவாயினும், புளிமா
வாயினும், வந்து மூன்று கூவிளங்கூட்டி நாற்சீராகவு மெழுத்து வகையா
னொவ்வொருபாதி நேரசைமுதலாயிற் பதினொன்றெழுத்தாகவும், நிரையசை முதலாயிற்
பன்னீ ரெழுத்தாகவும், வருமென் றுணர்க. இவற்றிற் கெல்லாஞ் சூத்திரமாகவு
முதாரணமாகவும் வருமிக் கட்டளைக் கலிப்பாக் காண்க. (வ-று.) - ``இட்டசீர் வகையா
னொருமாவின் கீழியை முக்கூவிள மோரடிப் பாதியாய், நெட்டடிக் கெழுத்தெண்ணின
தன்மையா னிரைபன்னீ ரெழுத்தாய்ப் பதினொன்றுநேர், நட்டிரட்டி னஃதோ ரடியாக
விந்நடைய நான்கடி யொப்ப நடந்தபாக், கட்டளைக் கலிப்பா வெனவின்று நற்கலை
வல்லோ ருணர்ந்தோதின ரென்பவே.ழுழு என்ப திலக்கணமு முதாரணமும் வந்தவாறு
காண்க. எ-று. (18)

.......................

வஞ்சிப்பாவிலக்கணம் வருமாறு:-

Vanjippa.

237. 	
வஞ்சிக் கோசை வழங்குந் தூங்கலே
தன்சீர் தன்றளை தவிர்ந்து பிறபெறுங்
குறளடி சிந்தடி கொண்டு மூவடி
	


176


	குறையா மூன்றன் மேற்கூறில் பெருகத்
தனிச்சொல்லு மகவலுந் தழுவலோ டிறுமே.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே வஞ்சிப்பா வாமாறுணர்த்துதும். ஆகையிற்
றூங்கலோசையான் வரும் வஞ்சிப்பாவிற்கெல்லாம் வஞ்சிக்குரிச்சீ ரென நிரையீற்ற
மூவசைச்சீரும், பிறவுந் தனக்குரிய விருவகைத் தளையும், பிறவு மேற்பன. அன்றியும்
வஞ்சியெல்லாங் குறளடியானுஞ் சிந்தடியானு நடக்கும். இங்ஙன நடப்புளி மூவடி சிறுமை
யெனவும் பெருமைக்கோர்வ ரையில்லை யெனவுங் கொள்க. அன்றியு மூவடியானும்
பலவடியானு நடந்து தனிச்சொற் பெற்றுப் பலவடியான் வரு மகவல்கூடி யாசிரியச்
சுரிதகத் தான்முடியும்வஞ்சிப்பாவென் றுணர்க. - "தூங்கலிசையன வஞ்சிமற்றவை
யாய்ந்த தனிச்சொலோ டகவலி னிறுமே." என்பதியாப்பருங்கலம். (வ-று.)
திருக்காவலூர்க் கலம்பகம். - "சீர்விளக்கிய செல்வியாய்ப், பார்விளக்கிய பாவையே,
தென்காவிரி திரண்டொலிப்ப, மன்காவிரி மலர்கமழ்ப், பூந்தாதகி புடைநிழற்றத்,
தீந்தாதகிற் றினைக்குளிர்ப்ப, வருட்காவலூர்ந் தமைந்தளிப்பத், திருக்காவலூர்
சேர்ந்தனளே, சேர்ந்தபின், னானே பூண் பழிநைய வெண்மதி, தானேபூண் பதந்தான்
றாராளோ, திருவடியொளியுளந் தெளிவுறக்கண்டாற், கருவடி யிருளறக் கண்டு, மருவடி
மலரடி வான்கதி யந்தமே." என விது குறளடி வஞ்சியாய் சேர்ந்த பின்னென்னுந்
தனிச்சொற்பெற் றகவற் சுரிதகத்தோடு முடிந்தவாறு காண்க. எ-று. (19)

...................

மருட்பாவிலக்கணம்வருமாறு:-

Marutpa.

238. 	
மருட்பா வெள்ளை வந்தபின் னகவ
லீற்றின் மருளு மியல்புடைத் தென்ப.
 
     (இ-ள்.) நிறுத்தமுறையானே மருட்பா வாமாறுணர்த்துதும். வெண்பா பலவடியாக
முதற்கண் வந்தபின் னகவலிறுதியாக மருண்டுதொடுப்பது மருட்பா வெனப் படும். -
"வெள்ளை முதலா வாசிரிய மிறுதிக், கொள்ளத்தொடுப்பது மருட்பா வாகும்." என்றார்
காக்கைப்பாடினியார். (வ-று.) - திருக் காவலூர்க்கலம்பகம். - "வைக லெனவந்து
மன்னுயிரார் கங்குலறும், வைகலைச் செய்தே யொளியோன் வாய்த் துயிர்த்தே,
வைகினாள், காவலூருறை, காதலார்துறை, யோவலீர்கிளி, யோதியாரொளி, தெளித்தநூலி,
திறத்த சீலி, களித்தமாலை, கயத்தவேலை, மந்திரமறைமொழி, மண்டலகுறை யொழி,
சந்திரவடியினள், சந்துடுமுடியினள், காதனாயகிகதிதரும், வேத
நாயகிமெல்லடிபணிவமே." ஆகையின் வெள்ளையகவல் கலிவஞ்சிமருட்பாவென
வைம்பாவு மவற்றின் விகற்பமும் வந்தவாறு காண்க. எ-று. (20)
	


177


	பாவினம்வெண்டுறையிலக்கணம்வருமாறு:-
Supplemental Metres.

239. 	
துறைதாழிசை விருத்தந் தூக்கின மூன்றனுள்
வெண்செந் துறைகுறள் வெண்பா வினமாய்ச்
சீர்தளை யடியெலாஞ் சேர்ந்து விரவினு
மொத்தடி யிரண்டா யொழுகு மற்ற
வெண்டுறை யன்னவை விரவினு மூன்றடி
யாதி யேழடி யந்தமா யீற்றிற்
சிலவடி தஞ்சீர் சிலகுறைந் திறுமே.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே பாவினத்தியல்பும் விகற்பமுமுண ர்த்துதும். மருட்பா
வொழித் தொழிந்த நால்வகைப் பாவினமாகத் துறை யுந் தாழிசையும் விருத்தமுமென
மும்மூன்றும் வருமென்றுணர்க. அவற்றுட் டுறையே விளங்குமாறு:- குறள் வெண்பா
வினமாக வருந்துறை வெண்செந்துறை யெனவுஞ் செந்துறை வெள்ளை யெனவும்
வழங்கும். இவையே யெச்சீரானு மெத்தளையானு மெவ்வடியானுந் தம்முளொத்த
விரண்டடியாக வரப்பெறும். - "ஒழுகிய வோசையி னொத்தடி யிரண்டாய் விழுமிய
பொருளது வெண்செந் துறையே." என்ப தியாப்பருங்கலம். (வ-று.) "மீனே வேய்ந்த
செல்வி மெல்லடி, நானே யேத்தி நாளுஞ் சூடுவேன்." எ-ம். அன்றியு மற்றவெண்பா
வினமாய் வருந்துறை வெண்டுறையே யெனப்படும். இவையே யெச்சீரானு
மெத்தளையானு மெவ்வடியானு மூன்றடி குறையாமலு மேழடி மிகாமலு மீற்றுச் சிலவடி
சிலசீர் குறைந்து வருமெனக் கொள்க. - "மூன்றடி முதலா வேழடி காறும்வந், தீற்றடி
சில சில சீர்தவ நிற்பினும், வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்." என்ப
தியாப்பருங்கலம். (வ-று.) "மீனாருங் கொடிமுன்ன பின்முர சார்த்தொலி துவப்ப
மிடைந்த வானோர், கானாரு மதுப்பூவும் பூம்புகையுங் காட்டியுளங் களித்து வாழ்த்தப்,
பானாருங் கதிரிமைப்ப பனிமுகிற் றேருந்தி, வானாரு மரசியுன் மகனேறிச் சென்றான்."
என நான்கடியா யீற்றடியிரண்டு மிரண்டுசீர் குறைந்துவந்த வெண்டுறை யிதுவெனக்
காண்க. எ-று. (21)

.......................

ஆசிரியத்துறையிலக்கணம்வருமாறு:-

Asiriyatturei.

240. 	
ஆசிரி யத்துறை யளவி சீர்வரு
மடிநான் கீற்றய லாதி குறைநவு
மிருவழி யிடைமடக் கினவுநால் வகைய.
 
     (இ-ள்.) ஆசிரியத்துறை யாமாறுணர்த்துதும். ஆசிரியப் பாவினமாய் வருந்துறை
சீர்வரையறை யில்லாது நான்கடியாய் வந்து நால்வகைப்படும்.
	


178


	ஆகையிலீற்றயலடி குறைந்து வருவனவு மீற்றயல் குறைந் திடைமடக்காய் வருவனவு
முதலு மீற்றயலு மிடையிடை குறைந்து வருவனவு மிடையிடை குறைந் திடைமடக்காய்
வருவனவு மிந்நால்வகையு மாசிரியத்துறை யெனப் படும். - "கடையத னயலடி கடைதபு
நடையவு, நடுவடி மடக்காய் நான்கடி யாகி, யிடையிடை குறைநவு மகவற் றுறையே."
என்ப தியாப்பருங்கலம். (வ-று.) "பனிக்கால மெக்காலம் பட்டாற்றா யென்றன்றோ,
வினிக்காதல் களித்துவப்ப விளைவேனில் வாராதோ வென்றனை நெஞ்சே, யினிக்காதல்
களித்துவப்ப விளைவேனில் வந்தகன்று, துனிக்கால முதிர்வேனிற் சுடச்சுடவந் துற்றதினி
யென்செய்வாய் நெஞ்சே." எனவிரண்டாமடியு நான்காமடியு மாறுசீரான்வந்து
முதலுமீற்றயலு நாற்சீராகி யிடையிடை குறைந்து மிடைமடக்காகியும் வந்த வாசி
ரியத்துறை. (வ-று.) "வண்டுளர் பூந்தார் வளர்கெழு செம்பூட்சேய் வடிவே போலத்,
தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோர் யாரே, தண்டளிர்ப் பிண்டித்
தழையேந்தி வந்துநம், பண்டைப் பதிவினவிப் பாங்குபட மொழிந்து படர்ந்தோ ரன்றே."
இது நான்கடியா யீற்றய லடிகுறைந் திடைமடக்காய் வந்த வாசிரியத்துறை. (வ-று.) -
"கொன்றார்ந்த மைக்குரு முகத்தெழினிற் குருதிக் கோட்டின விருந்தாட் பெருங்கைக்,
குன்றாமென வன்றாமெனக் குமுறா நின்றன கொடுந்தொழில் வேழம், வென்றார்ந்
தமைந்த விளங்கொளி யிளைம்பிறை துளங்கு வா ளிலங்கயிற் றழலுளைப் பரூஉத்தா
ளதிரும்வா னெனவே திருங்கூற் றெனச் சுழலாநின்றன சுழிகண் யாளி, சென்றார்ந்
தமைந்த சிறுநுதி வள்ளுகிர்ப் பொறியெருத் தெறுழ்வலிப் புலவுநா றழல்வாய்ப்
புனலாமெனக் கனலாமெனப் புகையா நின்றன புலிமா னேற்றை, யென்றாங்
கிவையியங்கலி னெந்திறத் தினிவரல் வேண்டலந் தனிவர லெனத்தலை விலக்கலி
னிறுவரை மிசையெறி குறும்பிடை மிதுவென் னெவதுவெனார் கரவிர விடைக்களவுள
மதுகற்றோ ரதுகற் பன்றே." இது நான்கடியாய் முதல டியு மூன்றாமடியும் பதினாலுசீரா
யல்லாத வடியிரண்டும் பதினாறுசீரா யிடையிடை குறைந்து வந்த வாசிரியத்துறை.
(வ-று.) "இரங்கு குயின் முழவா வின்னிசை யாழ்தேனா, வரங்கமணி பொழிலா வாடும்
போலு மிளை வேனி, லரங்கமணி பொழிலா வாடு மாயின், மரங்கொன் மணந்தகன்றார்
நெஞ்சமென் செய்த திளைவேனில்." இது நான்கடியதா யிடை யிடை குறைந்
திடைமடக்காய் வந்த வாசிரியத்துறை. எ-று. (22)

...................

கலித்துறை யிலக்கணம்வருமாறு:-

Kalitturei.

241. 	
கலித்துறை நெடிலடி நான்கொத் தவற்று
ளிடைநேர் வெண்சீ ரியற்சீர் முதனான்
	


179


	கிடைநிரை வெண்சீ ரிறுதிச்சீர் மோனையாய்க்
கடையே கொண்டிறுங் கட்டளைக் கலித்துறை.
 
     (இ-ள்.) கலித்துறை யாமாறுணர்த்துதும். நெடிலடியாக வொத்த நான்கடியான்
வருஞ் செய்யு ளெல்லாங் கலித்துறை யெனப்படும். - "நெடிலடி நான்காய் நிகழ்வது
கலித்துறை." என்பதியாப்பருங்கலம். (வ-று.) சிந்தாமணி. - "கற்பா லுமிழ்ந்த மறுவுங்
கழுவாது விட்டா, னற் பா லழியு நகைவெண் மதிபோ னிறைந்த, சொற்பா லுமிழ்ந்த
மறுவு மதி யாற் றுடைத்துப், பொற்பா லிழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கார்.
முந்நீர்ப் பிறந்த பவளத்தொடு சங்கு, முத்து, மந்நீ ருவர்க்கு மெனின் யாரவை நீக்கு
கிற்பா, ரிந்நீ ரவென்சொற் பழுதாயினுங் கொள்ப வன்றே, பொய்ந்நீ ரவல்லாப்
பொருளால் விண்புகுது மென்பார்." எ-ம். இராமாயணம். - "பொன்னின் சோதிப்
போதினி னாற்றம் பொலிவேபோ, லின்னுண் டேனிற் றீஞ்சவை யின்சொற் கனியின்பக்,
கன்னிமாடத் தும்பரின் மாடே களிபேடோ, டன்னமாடு முன்றுறை கண்டாங்
கயனின்றார்." எ-ம். தேம்பாவணி. - "பண்டீண்டி யேங்குதல் போலன்பும் பூசல்
பரவுமெனக்,கண்டீண்டி மருட்டிய காரிரவி நாப்பண் கரந்தது போல, விண்டீண்டி யாடு
கொடிமாட நல்லூர் விட்ட கன்று, புண்டீண்டி யாற்று மருந் தொத்த நீரார்
போதலுற்றார்." எனவு மிவையெலா மஞ்சீரடி நான்கொத்து வந்தமையாற் கலித்துறை
யெனப்படும். இவையே காப்பியக் கலித்துறை, எ-ம். விருத்தக் கலித்துறை, எ-ம்.
வழங்கும். இவ்வகை யன்றிக் கட்ட ளைக் கலித்துறை யுளவெனக் கொள்க.
இவையின்றுரிப் பெயராகக் கலி த்துறை யெனப்படும். இவற்றிற் கிலக்கணமாவன:-
ஒவ்வோரடி யெல்லை யுள் ளிவையே நெடிலடியானடந் தடிதோறு முதனாற் சீரியற்சீரு
மிடை நேர் வெண்சீரு மாகவு மிறுதிச் சீரிடை நிரை வெண் சீராகவு மொவ்வோ
ரடியெல்லையுள் வெண்டளை வழுவா தொழுகலும், இவ்வாறொழுகி நேர் முதலாய்வருங்
கலித்துறை யடியொவ்வொன்றிற் கொற்றொழித் தெழுத்துப் பதினாறு நிரைபதினேழுங்
கொள்ளு மென்றுணர்க. சூத்திரம். - "முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையா, கடைச்சீ
ரொன்றும் விளங்காயாகி, நேர்பதினாறே நிரைபதினேழென், றோதினர் கலித்துறை
யோரடிக் கெழுத்தே." அன்றியு மைந்தாஞ் சீர்க்கண்ணே மோனை வருவது மீற்றுச்
சீரீற்றின் கண்ணே யீற்றசை யேகாரம் வருவது முறை யெனக் கொள்க. (வ-று.) புறநிலை.
- "கந்தாரம்பாடிக் களித்தாடும் வண்டினங் காமுறுபூஞ், சந்தாரநாறு நிழற்சோலைக்
காவலூர் தங்கியவா, னிந்தாரம் பூண்ட திருவடி கண்டேத்த வெவ்வுயிரும், வந்தாரக்
காண்பேனோ வானலங் கொண்டார வையகமே." எனமேற்கூறிய விலக்கணத்தோடு
கட்டளைக்கலித்துறை வந்தவாறுகாண்க. அன்றியு மிவற்றுதாரண மாகவுஞ் சூத்திர
மாகவும் வருமிச் செய்யுளைக் கண்டு கொள்க. - "இடையே நோவெண்
	


180


	சீரியற்சீர்வரு முதலீரிருசீர், கடையே யிடைநிரை வெண்சீராய் வெண்டளை காத்தடிநான்,
குடையே கடையாய்க் கடைமோனை நான்கடி யோரெதுகை, நடையே கலித்துறை
யாமெனக் கற்றோர் நவின்றனரே." என்ப தாகையின் முதனாற்சீர் தேமா புளிமா
கருவிளங் கூவிளமென நாலியற்சீராகவு மொரோ விடத்துத் தேமாங்காய்
புளிமாங்காயென விடைநே ரிருவெண் சீராகவும் வருமேயல்லன, கருவிளங்காய்
கூவிளங்கா யென விடைநிரையிரு வெண்சீர் கலித்துறைக் கைந்தாஞ் சீராக வருவது
முறையா மன்றியே முதனாற் சீராகவரா வெனக் கொள்க. எ-று. (23)

...................

வஞ்சித்துறை யிலக்கணம் வருமாறு:-

Vanjitturei.

242. 	
வஞ்சித் துறைகுற ளடிநான் கொத்ததே.

     (இ-ள்.) வஞ்சித்துறை யாமாறுணர்த்துதும். குறளடி நான்கு மொத் துவருவன
வஞ்சித்துறை யெனப்படும். - "குறளடி நான்காய் கூடி யொத்த, முறையான் வருவன
வஞ்சித் துறையே." என்பதியாப்பருங்கலம். இவையும் விருத்த மெனப்படும். (வ-று.) -
திருக்காவலூர்க் கலம்பகம் - "வண்டிமிரும் வாய்மலர்க்காக், கண்டிமிருங் காவலூர்,
பண்டினிதாள் பாவைப்பணிந், தண்டினரே யண்டாரோ." எ-ம். "பேரறி வன்னான், சார
விருந்த, வூரினு மில்லென், றார விகழ்ந்தே." எ-ம். வரும். எ-று. (24)

......................

தாழிசை யிலக்கணம் வருமாறு:-

Tarisei.

243. 	
குறட்டா ழிசையொலி குன்றுங் குறளு
மந்தடி குறைநவுஞ் செந்துறைச் சிதைவுமாம்
வெண்டா ழிசையெனில் வெண்சிந் தியல்போ
லண்டாப் பிறதளை யணைந்து வருமே.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே குறட்டாழிசையும் வெண்டாழிசையு
மாமாறுணர்த்துதும். குறள் வெண்பா வினமாய் வருந் தாழிசைக் குறட் டாழிசை, எ-ம்.
தாழிசைக்குறள், எ-ம். வழங்கும். இவையே கடைகுறை குறட்டாழிசை, எ-ம். செந்துறை
சிதைவுத் தாழிசைக்குறள், எ-ம். குறட்டாழிசை எ-ம். மூவகைப்படு மெனக்கொள்க. -
"அந்தடி குறைநவுஞ் செந்துறைச் சிதைவுஞ், சந்தழி குறளுந் தாழிசைக் குறளே."
என்பதி யாப்பருங்கலம். ஆகையிலிவற்றுட் சீரளவின்றிப் பலசீரான்வரு மீரடி பெற்
றீற்றடியே யளவுகுறைந்து வருவன கடைகுறை குறட்டாழிசை யெனப்படும். (வ-று.)
"தூற்றுவாய் மதுமலர்காச் சூழ்ந்த காவலூர் நாயகி, யேற்றுவார் வினையாற்றி யிவனாள
வெய்தினாளே." என முதலடியைஞ் சீரானு மீற்றடி
	


181


	நாற்சீரானும் வந்தமையாற் கடைகுறை குறட்டாழிசை யாயிற்று. அன்றியுஞ்
செந்துறைபோல வளவடி யிரண்டு மளவிலொ த்துச் சீர்வகையானே தம்முளொவ்வா
தொழுகிய வோசையின்றி வருவன செந்துறைச் சிதைவுத் தாழிசைக் குறளெனப்படும்.
(வ-று.) "கொடிநித்த மலரொப்பார் தாயே கூன்மதியேற், றடியை யேத்தா தன்புணரா
தாரே." என வரும். அன்றியுங் குறள்வெண்பாப் போலவந்து பிறதளை விரவிவருவன
குறட்டாழிசை யெனப்படும். (வ-று.) "விண்ணாரு மொளிமதியே வீழ்ந்தேத்து மடியை,
நண்ணாரை நண்ணா நயன்." என வரும். அன்றியும். (வ-று.) "நண்ணுவார் வினைநைய
நாடோறு நற்றவர்க் கரசாய ஞானநற், கண்ணினா னடியே யடைவார்கள் கற்றவரே."
எ-ம். "அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவந்தி, மறுவ வறுபத்தினி போல வையீரே."
எ-ம். "வண்டார் பூங்கோதை வரிவளைக்கைத் திருநுதலாள், பண்டைய லல்லல் படி."
எ-ம். அன்றியு மற்றை வெண்பா வினமாய் வருந்தாழிசை வெண்டாழிசை, எ-ம்.
வெள்ளைத்தாழிசை, எ-ம். வழங்கும். இவையே யின்னிசைச் சிந்தியல் வெண்பாப்போல
நாற்சீர் நாற்சீர் முச்சீரென மூவடி யான் வந்து வெண்டளை சிதைந்து பிறதளைதட்டு
வருவன வெண்டாழிசை யெனப்படும். "அடியொரு மூன்றும் வந்தந்தடி சிந்தாய்,
விடினது வெள்ளைத் தாழிசை யாகும்." என்பதியாப்பருங்கலம். (வ-று.) "நண்பி தென்று
தீய சொல்லார், முன்பு நின்று முனிவு செய்யா, ரன்பு வேண்டுபவர்." இது மூன்றடியால்
வந்த வெண்டாழிசை. - "அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே, கொம்பே
றுடையான் கழலிறைஞ்சா தென்கொ லியாம், வம்பே பிறந்து விடல்." "வாணேருண்
கண்ணார்க் கழிந்தமடநெஞ்சே, நீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்,
வீணேபிறந்துவிடல்." "கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே, யாளாக
வாண்டான் கழலிறைஞ்சா தென்கொ லியாம், வாளா பிறந்து விடல்." இது சிந்தியல்
வெண்பாவொ ருபொருண்மேன் மூன்றடுக்கிவந்த வெள்ளைத்தாழிசை. எ-று. (25)
 
244. 	அகவற் றாழிசை யடிமூன் றொத்தவா
யடுக்கிய மூன்றுமொன் றாகியும் வருமே.
 
     (இ-ள்.) ஆசிரியத் தாழிசை யாமாறுணர்த்துதும். எவ்வகைச் சீரானும் எவ்வகை
யடியானு மொத்த மூவடியாக வொருபொருண்மேன் மூன்றடுக்கி வருவன வாசிரியத்
தாழிசை யெனப் படும். (வ-று.) "பருதி யுடையாக வினிதுடுத்த நாயகி, மருவி நம்மே
லிரங்குவளே லவள்வாயி, லிருதியந் தீங்குரல் கேளாமோ வென்னெஞ்சே. - வேய்ந்த
முடியாக மீன்புனைந்த நாயகி, வாய்ந்து நம்மே லிரங்குவளே லவள்வாயி, லாய்ந்த
வந்தீங்குரல் கேளாமோ வென்னெஞ்சே. - திங்க ளணியாகச் சேர்த்திய தாணாயகி,
யிங்கணம் மேலிரங்குவளே லவள்வாயின, மங்களந் தீங்குரல் கேளாமோ
வென்னெஞ்சே." - என விவை மூன்று மொரு பொருண்மே லடுக்கி
	


182


	வந்த வாசிரியத் தாழிசை. ஒரோ விடத்திவ்வா றொத்த மூவடியா னொரு செய்யுளாக
நின்று மாசிரியத் தாழிசை யாகும். (வ-று.) "மீனுடை முடியினை வெண்மதி யடியினை,
பானுடை வடிவினை பாரொருங் கோம்பினை, வானுடை யரசிநின் மலரடி தொழுதனம்."
எ-ம். வரும். அன்றியும், (வ-று.) "சத்தமு மாகியச் சத்தத் தாற்பெறு, மத்தமு மாகலி
னனந்தன் கண்களே, யுத்தம னைந்தெழுத் துருவங் காண்பன." இது தனித்துவந்த
வாசிரியத் தாழிசை. - "கன்று குணிலாக் கனியுகுத்த மாயவ, னின்று நம்மானுள் வருமே
லவன்வாயிற், கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி, பாம்பு கயிறாக் கடல்கடைந்த
மாயவ, னீங்கு நம்மானுள் வருமே லவன்வாயி, லாம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி,
கொல்லை யஞ்சாரற் குருந்தொசித்த மாயவ, னெல்லி நம்மானுள் வருமே லவன்வாயின்,
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி." இது ஒரு பொருண்மேன் மூன்றடுக்கி வந்த
வாசிரியத் தாழிசை. "மூவடி யொத்துமூன் றடுக்கியுந் தனியொன், றாகியு மகவற் றாழிசை
யாகும்." என்பதியாப்பருங் கலம். எ-று. (16)
 
245. 	கலித்தா ழிசையே கடையடி மிக்குமற்
றடியெனைத் தாகியு மளவொத் தொவ்வா
தொருமூன் றடுக்கியு மொன்றுமாய் வருமே.
 
     (இ-ள்.) கலித்தாழிசை யாமாறுணர்த்துதும். ஈரடி முதலாய்ப் பல வடியானும்
வந்தீற்றடி சீரான்மிக்கு மற்றடி யளவொத்து மொவ்வாதும் வருவன கலித்தாழிசை
யெனப்படும். இவையு மொரு பொருண்மேன் மூன் றடுக்கிவரிற் சிறப்பாகித் தனியே
யொன்றாய் வரவும் பெறுமே. (வ-று.) "தாயடியே திங்கண்மேற் சாய்வது கண்டேன்,
றீயடியாட் கினியாமோ தீர்ந்ததென் றுன்பங்கா ணெஞ்சே. - பூண்பிறைமேற் கஞ்சத்தாள்
பூப்பது கண்டேன், சேண்பிறைபோன் மலரேனோ தீர்ந்ததென் றுன்ப ங்கா ணெஞ்சே. -
மதிசேர்ந்த தாட்சேர்ந்து மாலையிற் கொண்டேன், றிதி சேர்ந்து வாழேனோ தீர்ந்ததென்
றுன்பங்கா ணெஞ்சே." எனவீரடியா யீற்றடிநீண்டு மூன்றடுக்கிவந்த கலித்தாழிசை.
அன்றியும், - "மூவாசை தவச் சிறையின் முற்றடுக்கியே திரிலவுட், டேவாசை யாளுந்
திருவணங்கே. - தேவாசை யாளுந் திருவணங்கைச் சேர்ந்தக்கான், மேவாசை யாறுமம்
மெல்லடி யேத்தவே றேத்தவே." என விரண்டாமடி குறைந்து முதலடியு மூன்றா மடியு
மொத்துவந் தீற்றடி நீண்டு தனியே வந்த கலித்தாழிசை. அன்றியும், (வ-று.) "இருகூற்
றுருவத் திருந்தண் பொழிற்றில்லை, யொரு கூற்றின் கூத்தை யுணராய் மடநெஞ்சே,
யொருகூற்றின் கூத்தை யுணரா யெனின் மற்றப், பொருகூற்றந் தோற்றப் புலம்பேல்
வாழிமட நெஞ்சே." இது ஈற்றடி மிகுந்து தனித்து வந்த நான்கடிக் கலித்தாழிசை. -
"பூண்ட பறையறையப் பூத மருள, நீண்ட சடையா னாடுமே, நீண்ட சடையானாடு
	


183


	மென்ப, மாண்ட சாயன், மலைமகள் காணவே காணவே." எனச் சிறு
பான்மையேனையடிக ளொவ்வாது வருதலு முண்டு. - "செல்லார் பொழிற் றில்லைச்
சிற்றம்பலத் தெங்கள், பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்,
முத்தேவர் தேவை முகிலூர்தி முன்னான, புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின்
புலவீர்காள், ஆங்கற்பகக் கன்றளித் தருளுந் தில்லை வனப், பூங்கற் பகத்தைப்
புகழ்மினோ வம்மின் புலவீர்காள்." இது ஒரு பொருண்மேன் மூன்றடுக்கி யீற்றடி
மிக்குவந்த கலித்தாழிசை. - "அடியெனைத் தாகியு மொத்தும்வந் தளவின்றிக், கடையடி
மிகுவன கலித்தாழிசையே." என்பதி யாப்பருங்கலம். எ-று. (27)
 
246. 	வஞ்சித் தாழிசை வருங்குற ளடிநான்
காகித்தான் மூன்றா யடுக்குமோர் பொருளே.
 
     (இ-ள்.) வஞ்சித் தாழிசை யாமாறுணர்த்துதும். குறளடி நான்காய் ஒரு பொருண்
மேன் மூன்றடுக்கி வருவன வஞ்சித் தாழிசை யெனப்படும். (வ-று.) "பருந்துலவப்
பார்ப்பினைத் தாய்பரிந் திறகாற் பகைமறைக்கும், பெரும்பழியா னொந்தனமே
லிரங்குந்தாய் மனனே காண். - எரிபகறா யிளைம்பார்ப்பை விரிசிறகால்
வெயின்மறைக்கும், விரகத்தா னொந்தனமேற் பரியுந்தாய் மனனே காண். -
இடித்துழித்தா யிரும்பார்ப்பைக் கடிச்சிற கான் மழைமறைக்கு, மிடுக்கணா னொந்தனமே
லடுக்குந்தாய் மனனே காண்." எ-ம். வரும். "குறளடி நான்கின் கூடின வாயின்,
முறைமையி னவ் வகை மூன்றிணைந்தொன்றி, வருவன தாழிசை வஞ்சியின் பெயரே."
என் பதியாப்பருங்கலம். - இவ்வாறன்றி நாற்குற ளடியா லொன்றாய்த் தனி
வரிற்றாழிசையாகா. மேற்காட்டிய வடிவஞ்சித்துறை யெனப்படு மென்று ணர்க.
அன்றியும், (வ-று.) "பிணியென்று பெயராமே, துணிநின்று தவஞ் செய்வீ, ரணிமன்ற
லுமைபாகன், மணிமன்று பணியீரே, என்னென்று பெயராமே, கன்னின்று தவஞ்செய்வீர்,
நன்மன்ற லுமைபாகன், பொன் மன்று பணியீரே, அரிதென்று பெயராமே, வரைநின்று
தவஞ்செய்வீ, ருரு மன்ற லுமைபாகன், றிருமன்று பணியீரே." இதுவும் வஞ்சித்தாழிசை.
ஆகையினாற் பாவினமாகிய தாழிசை யிலக்கணம் வந்தவாறு காண்க. ஆயினுந் தோடி
ராகத்துக்கேற்ற வடியா னடக்கு மாசிரிய விருத்த மெல்லா மின்று தாழிசை யெனப்படும்.
எ-று. (28)

.............................

விருத்த விலக்கணம் வருமாறு:-

Viruttam.

247. 	
விருத்த மென்ப விரவிய வெல்லாச்
சீரு மடியுஞ் சிதையாக் கொளினு
மவையொத் தனவா யடிநான் கணையுமே
	


184


	மாவிளங் காயே வஞ்சிச்சீ ரிடையும்
பொதுச்சீ ரிடையும் புணர்மா விளமிவை
யொப்ப வரிற்சீ ரொப்புமை யாகும்.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே விருத்தமும் விருத்த விகற்பமு முணர்த்துதும்.
விருத்த மென்பவை யெல்லாச் சீரானு மெல்லாத் தளையானு மெல்லா வடியானு
நடக்கும். நடப்பினு மவை யோரெதுகையா னான்கடி யாக வொத்தசீரானு
மொத்தவடியானும் வரப்பெறும். அங்ஙனம் விருத்தத்தின் கண் வேண்டிய
சீரினொப்புமையாவது மாவீற்ற சீரிரண்டும் விளவீற்ற சீரிரண்டுங் காயீற்ற சீர்நான்குந்
தம்முளொத்த சீரெனப்படும். அன்றியும், வஞ்சிச்சீரும் பொதுச்சீருந் தத்தமிடையி னின்ற
மாவும் விளமும் பற்றி யொப்புமைக் கொள்க. ஆகையினோ ரடிக்கண்ணே தேமா வந்த
விடத்தின் மற்றோ ரடிக்கட் டேமா வாயினும் புளிமா வாயினும் வரப்பெறினோ சை
வழுவா. அங்ஙனங் கருவிளம் வந்த விடத்திற் கூவிளமும், தேமாங்காய் வந்த விடத்தின்
மற்றைக் காயும், தேமாங்கனி வந்த விடத்திற் புளிமாங் கனியும், கருவிளங்கனி வந்த
விடத்திற்கூவிளங்கனியும், வரப்பெறினோசை வழுவா. பொதுச்சீரு மிவ்வா றெனக்
கொள்க. (வ-று.) "வேனேர் நிறுவியும் வேசரிநேர் விரிந்துந் திளைத்தண் மயிர்ச்செவியா,
னூனேரொழுகிய பிணக்குப்பை யுதட்டு நாறிய பேழ்வாயான், கானேர் நெருங்கித்
தெங்கிலை நேர்கழு நீள்சிவந்தன தாடியினான், றானே ரின்றி மாசொருங் கனைத்துந்
தாங்கும் வானரமுக வடிவான்." என மா - விளம் - காய் - மா - விளம் - கா யென
வாறுசீ ரோரடியாய் நடக்கு மிவ்விருத்தத்துண் முதன் மூவடிக் கிரண்டாஞ்சீர்
கருவிளமாய் நான்கா மடிக்கண் கூவிளமெனவும், மூன்றாஞ் சீர்முத லடிக்கண்ணு மூன்றா
மடிக் கண்ணுங் கூவிளங் காயு மிரண்டா மடிக்கண் புளிமாங் காயு நான்கா மடிக்கண்
கருவிளங்காயு மெனவு, நான் கான்சீர் முதன் மூவடிச்சீர்க்கட் புளிமாவு நான்கா மடிக்கட்
டேமாவு மெனவும், ஐந்தாஞ்சீர்முதலடி மூன்றாமடிக் கட்கருவிளமு மற்றிரண்டடிக்
கட்கூவிளமுமெனவும், ஆறாஞ்சீர் முதலடி நான்காமடிக் கண்ணே கருவி ளங்காயு
மிரண்டாமடிக்கட் டேமாங்காயு மூன்றாமடிக்கட் கூவிளங்காயு மெனவும் வரும். வரினுஞ்
சீரொப்புமை மாறாமையா லோசையும் வழுவா தொழுகிய வாறுகாண்க. பிறவுமன்ன.
இவ்வா றன்றி மாவந்த விடத்தில் விளமுங் காயும் வரப்பெறி னோசை வழுவாம்.
பிறவுமன்ன. இவ்வகை வட்டவடிவா லிச்செய்யுள் வருகின்றமையால் விருத்தமென்மனார்
புலவர். என்னையோ வெனில். விருத்த மெனினும் வட்டமெனினுமொக்கும். அங்ஙன
மொருவகை யடியால்வரும் விருத்தங்களுள்ளு மொன்றற் கொன்று வேறுபட - மா -
விளம் - காய் - முதலாயினசீர் தம்முண் மாறி வரப்பெறி னோசையுமாறிச் சந்த பேதகம்
வரைவொன் றின்றிப் பலவா மெனக் கண்டுணர்க. எ-று. (29)
	


185


	248. 	விருத்த விகற்பம் விளக்கிய காலை
வஞ்சி சிந்தடி வருங்கலி யளவடி
யடிதொறுந் தனிச்சொ லணைவது வெள்ளை
யகவல் கழிநெடி லடிகொள் விருத்தமே.
 
     (இ-ள்.) விருத்தவிகற் பமுணர்த்துதும். மேற் றத்த மிடத்துக்காட்டி யபடி
வஞ்சித்துறையென வொத்தநாற் குறளடியால் வரும் விருத்தமுங் கலித்துறையென
நானெடிலடியால் வரும் விருத்தமுமன்றியே யொத்த நாற்சிந்தடியால் வருவன
வஞ்சிவிருத்த மெனவும், அளவடியால்வருவன கலிவிருத்த மெனவும், அளவடியாக
மூன்றடியானு நான் கடியானும் வந்தடிதோறுந் தனிச்சொற் பெற்றுவருவன வெளிவிருத்த
மெனவும், கழி நெடிலடியால் வருவன வாசிரிய விருத்த மெனவும் வழங்கும். - "சிந்தடி
நான்காய் வருவன வஞ்சிய, தெஞ்சா விருத்த மென்மனார் புலவர். - அளவடி நான்கின
கலிவிருத் தம்மே. - நான்கடி யானு நடைபெற் றடிதொறுந், தாந்தனிச் சொற்கொளின்
வெளிவிருத் தம்மே. - கழிநெடி லடிநான் கொத்திறி னெல்லா, மழியா மரபா சிரிய
விருத்தமே." என்பதியாப்பருங்கலம். (வ-று.) - "ஆலைவா யடுங்கழைத் தேனுஞ்,
சோலைவாய்ச் சுவைக்கனித் தேனு, மாலைவாய் வழிமலர்த் தேனும், வேலைவாய்
மடுப்பமீன் மேயும். - சாந்த னோதிய தாழ்மொழி, காய்ந்த வேலிரு காதிலும், போந்த
போன்று புகுந்திட, மாந்த ராகுல மன்னினார்." - இவைவஞ்சிவிருத்தம். "தீய்முகத்
திணங்கிலா தில்லைச் செஞ்சுடர், காய்முகத் திருளிலைக் கழுமுந் நீத்தமே, பாய்
முகத்தணையிலை யன்புபற்றிய, வாய்முகத்தரியதோர் வருத்தமில்லையால். - வேய்தலை
நீடிய வெள்ளி விலங்கலி,னாய்தலி னொண்சுட ராழியி னான்றமர், வாய்தலி னின்றனர்
வந்தென மன்னன்முன்,னீதலை சென்றுரை நீள்கடை காப்போய்." இவைகலிவிருத்தம். -
"அங்கட்கமலத் தலர்கமலமேயீரு - நீரே போலும், வெங்கட் சுடிகை விடவரவின்
மேயீரு - நீரேபோலுந், திங்கட் சடையீருந் தில்லைவனத் துள்ளீரே - நீரேபோலும்."
இது மூன்றடியாலடி தோறுந் தனிச்சொற் பெற்றுவந்த வெளிவிருத்தம். - "துன்னித்
தொன்னோய் தீர்ந்து துதிப்பா ரொருபாலார், சென்னித் தாராய்ச் சீரடி கொள்வா
ரொருபாலா, ருன்னிக் குன்றா வுன்புக ழார்ப்பா ரொருபாலார், கன்னித் தாயுன் காவலில்
வாழ்வா ரொருபாலார்." இது நான்களவடியாலடிதோறுந் தனிச்சொற்பெற்றுவந்த
வெளிவிருத்தம். - "மணிபுரை யரும்பி வான்மீன் வடிவொடு மலர்ந்து வெண்முத்,
தணிபுரை மணங்கொ டேன்பெய் யழகல ரன்று வாடித், துணிபுரை கீழ்வீழ்ந்தாய
தூளினைக் கன்றுஞ் சென்மப், பிணிபுரை பிணித்த யாமோ பேர்கிலா வாழ்துமென்பாம்."
இது அறுசீர் ஆசிரியவிருத்தம். "தூமமேய்ந் திருண்ட குழலினார்மார்பிற் றுளங்கிய
முத்தணி வடமேற், காமனே களிப்புற் றூசலா டியகால் கசடறு மிவர்வரக் கண்டு, வீமமே
யுற்று நடுக்கொடு வழுவி வீழ்ந்துளத் தழற்றழ லாறித், தாமமேயளி
	


186


	போற் குளிர வுட்களித்துத் தயவொடு தீதறப் புகழ்ந்தார்." இது எழுசீர்
ஆசிரியவிருத்தம். "கனிமாலை சினையேந்தத் தீந்தே னேந்துங் காவலூ ராவ
லூர்ந்தணுகிப் போற்றும், பனிமாலை யேந்திரவிக் கதிர்செய்மாலைப் பற்றீண் டாள்
பற்றினர்வாழ் நாளீற்றாகத், துனிமாலை தோன்றியுயிர்க் கந்திமாலை தோன்றா முன்றுதி
மாலை கொண்டு பைம்பொன், னனிமாலைத் திருக்கோயி லிடத்தாடேவ
நங்கைதிருவங்கை தருமாலை சூடீர்." இது எண்சீர் ஆசிரிய விருத்தம். -
"வளங்குலாவரு மணங் கனார்விழி மயக்கிலேமுலை முயக்கிலே விழு மாந்தர்காள்,
களங்குலா முட லிறந்துபோயிடு காடுசேர்முனம் வீடு சேர்வகை கேண்மினோ, துளங்கு
நீள்கழ றளங்க வாடல்செய் சோதியா னனி பூதியானுமை பாதியான், விளங்கு சேவடி
யுளங்கொளீ ரெமன் விடுத்த பாசமு மடுத்த பாசமும் விலக்குமே." இது ஒன்பதின்சீர்
ஆசிரிய விருத்தம். - "கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு கூடி நீடு மோடை
நெற்றி, வெங்கண் யானை வேந்தர் போந்து வேத நீத நாத வென்று நின்று தாழ, வங்க
பூவ மாதி யாய வாதி நூலி னீதி யோது மாதியாய், செங்கண் மாலை மாலை காலை
சேர்நர் சேர்வர் சோதி சேர்ந்த சித்தி தானே." இது பதின்சீர் ஆசிரிய விருத்தம். -
ஆசிரிய நிகண்டு. - "சங்கரன் சம்பு சதாசிவ னுமாபதித் தாணுவே பூத நாதன் சந்திர
சேகர னீலகண்ட னீமத் தாடி தற்பரன் பேயோ டாடி, யங்கணன் பசுபதி யரன்சிவ
னுருத் திர னழலாடி பாண்டரங்க னந்தி வண்ணன் பகவனந்தி நண்பன்சோதி யமல
னானந்த னாதி, மங்கை பாகன் சுடலை யாடி யரவா பரணன் மழு வாளி கைலை யாளி
மாதேவ னிருமலன் மறைமுதலி யோகி மானிட மேந்தி காம தகனன், கங்காதரன்
கறைமிடற் றண்ண லைம்முகன் காலகாலன் கிரீசன் கங்காளன் முத்தனித்தன் பரம
னாலமர் கடவு ணீற ணிக்கடவுளே." இது பன்னிரு சீர் ஆசிரிய விருத்தம். - சீட்டுக்
கவி. - மகபதி நராதிபதி மாதுபதி சேதுபதி வாசற் பிரசண்ட வாக்கி - வடிதமி ழ்ச்
சோமசுந் தரகுரு சுவாமியடி மைக்குமடி மைக்கு மடிமை - மயில் வாகனக் கடவு
ளருளினா லுபையசாய் மரைவிருது கொண்ட துல்லியன் - மலையாள ராச னரு
டந்தபல்லக்கு வெகு மதி பெற்ற சார்வபூமன், யுகமெலா மகிமைபெறு தஞ்சைமக
ராசனையோ ரெட்டடி யழைத்த நிபு ண - னுசிதனச ரதநபா பிருகை யாற்றரும் வரிசை
யொருகையால் வாங்குகவிஞ - னுற்ற சிவகங் கையிற் கவுரி வல்லவ ராச னுதவு
வளநாடு பெற்றோ - னுயரியலங்கைப் பூமி ராசசமுகத் தினிலு மொருகோடி வரிசை
கொண்டோன், ககனமூதண்டவே தண்டபிர மாண்டமுங் கனபுகழ் படைத்த வுரவோன் -
காசி முதலாகரா மேசுரம் வரைக்குங் கவித்துவச நாட்டும் விசையன் - கற்றுச்
சொலிக்கும்வரு தானா பதிக்குமிரு கனக தண்டி கை கொடுத்தோன் - கவிமதக்
குஞ்சரஞ் சரவணப் பெருமாள் கவிச்சக்கரவர்த்தியோலை, புகழ்மேவு சிங்கநகர் வளருங்
குமாரவேல் பூபனெதிர் கொண்டு காண்க - போர்வரா வேங்கைகை பாராத தாதுசெம்
புத்திர மில்லாத
	


187


	சாமி - புவியிலிரு ளாவேம மூரலுண் ணாமாடு பொங்கிவே காதகாணம் - பூண் டொடி
படாவத்த மறுபடா வுடலெழு பொதிதந்து நீவாழியே." இது பன்னிருசீர் இரட்டை
யாசிரிய விருத்தம். எ-று. (30)
 
249. 	சந்த விருத்தந் தம்முளொத் தெழுத்தசை
வந்தொலி பற்றி வருமுள பிறவே.
 
     (இ-ள்.) சந்த விருத்த முணர்த்துதும். மேற்கூறிய விருத்த வகையு மன்றிச் சந்த
விருத்த மென்றும் வண்ண விருத்த மென்று மற் றொருவகை விருத்த மென்று முளவாம்.
இவையே சீரெண்ணாமலுங் குறிப்புச் சந்தம் பற்றி யெழுத்து வகையானு மசை
வகையானும் வேறுபட வரு மாதலா லெழுத்துச் சந்த விருத்தமும் அசைச் சந்த
விருத்தமு மென விருவகைப் படும். ஆகையி லிவற்றுட் சில விருத்த மெழுத்து
மாத்திரையாயினு மொற்றாகவரு மெழுத்தின மாயினு மாறின தன்மையே சந்த வோசையு
மாறும். சில விருத்த மெழுத்து மாறினு மசை மாறா தாயி னோசையு மாறாதெனக்
கொள்க. (வ-று.) தேம்பாவணி. - "அழலெழ வளைத்தசாப விருமுகி லளவில் பனித்த
பாண மழையோடு, நிழலெழ மறைத்த வானம் வெருவுற நிரைநிரை யெதிர்த்த தானை
முரி தரப், புழலெழ வுரைத்த வாளி வழிவழி புனலென விரத்த மோட விரு வருஞ்,
சுழலெழ வுருத்த வாரி யெனவமர் தொடுமுறை யுரைப்ப நூலி னளவதோ." - என
விதிலே நெடிலுங் குறிலு மொற்றினினமு மாறா தெழுத்து வகையாற் சந்த விருத்தம்
வந்தவாறு காண்க. - தேம்பாவணி - "வரையீர் புனலே மழையீர் வரையே, விரையீ
ரமரா விரிபூந் தடமே, சுரையீர் மலரத் தொடைசூழ் பொழிலே, யுரையீ ருயிரின்
னுயிருள் வழியே." - என விதிலே நெடில்குறி லொற்றின மாறியு நிரை நேரினு
மசைமாறா தசைவகையாற் சந்த விருத்தம் வந்தவாறு காண்க. அன்றியுஞ் சில விருத்த
மிவ்வகை யொப்புமை யெல்லாச் சீரினும் வேண்டா தொரோ விடத்து மாத்திரம்
வேண்டுவ துளவெனக் கொள்க. (வ-று.) தேம்பாவணி. - "தொல்லை யிம்மருளி னூழ்த்த
துகள்விடத் துணித லொன்றா, வொல்லையிந் நசைநீங்காதே லூழ்வில வேத லொன்றா,
வெல்லையிவ் விரண்டி லொன்றே யாவருந் தவிரா தென்ன, வல்லையிவ் வுணர்விற்
றேர்தி மாற்றலர் வணங்கும் வேலோய்." என விதிலே மற்றச்சீர் தம்முண் மேற்
சொன்ன வினத்தைப் பற்றி மாறிவரினு மூன்றாஞ் சீராகவு மாறாஞ்சீராகவு மடிதோறும்
வருந் தேமா - மாறி புளிமா வரி னோசை குன்று மென்றமையா லொரோ விடத்தசை
யொப்புமைப் பற்றி வந்த விருத்த மெனக் கொள்க. அன்றியுஞ் சூத்திரத்துள் பிற
வென்றமையாற் சிந்தாமணியுள் ளெழுத்து மசையுஞ் சீருமென்றிவை தம்மு ளொப்புமை
யின்றிவரும் விருத்த முளவே. ஆயினும் வெண்டளை சிதையாவரு மாகையின்
வெண்பாவிற் கேற்ற செப்ப லோசை பெறுமெனக் கொள்க.
	


188


	(வ-று.) "வீங்கோத வண்ணன் விரைததும்பும் பூம்பிண்டித் தேங்கோதை முக்குடைத்
தேவர் பெருமானைத், தேவர் பெருமானைத் தேனார் மலர்சிதறி, நாவி னவிற்றாதார்
வீட்டுலக நண்ணாரே." எ-ம். தேம்பாவணி. - "பாற்கட லென்னுள்ளப் பதுமமல ரரும்ப,
நூற்கடலே யீங்கு தித்தாய் நுண்மலர்க்கண் முத்தரும்ப, நுண்மலர்க்கண் முத்தரும்ப
நோய் செய் வினைசெய்தே, னென்மலர்க்கண் முத்தரும்ப வின்று வினைதீர்த்தாய்."
எ-ம். எழுத்தசை சீர்களு மொவ்வாமல் வெண்டளையாக வந்த விருத்த மிவையெனக்
காண்க. அன்றியும் பாரதத் துள்ளே மற்றொருவகை விருத்தங் காணப்படும்.
அஃதெத்தன்மைத் தோவெனின் முதற்றொடை யடியெதுகை யன்றிப் பொழிப்
பெதுகையும்பெற்ற பின்னிரண்டாந் தொடையு மிவ்வாறே வேறோ ரெதுகைப்
பெறுமென்றறிக. (வ-று.) "பற்பலரு மத்திரதர் விற்பல வணக்கியெதிர், சொற்பொலி
வயப்பகழி சிற்சில தொடுத்தனகாற், பெய்கணை யடங்கவிவ னெய்கணை விலக்கிடவு,
மொய்கணை யனந்தமிவன் மெய்கணைய வுந்தினனே." எ-து. பாரதத்துட் பதிமூன்றாம்
போர், 56-ம் பாட்டெனக் கொள்க. ஆகையில் விருத்தமும் விருத்த விகற்பமும்
வந்தவாறு காண்க. எ-று. (31)
 
250. 	பத்திய மென்ப பாவொடு பாவினங்
கத்திய மமைபோற் கலையல் லனவே
வண்ண மென்ப வலிமெலி யிடையொழு
கெண்ணுருட் டெனமுடு கேந்த றூங்க
லகைப்புப் புறப்பாட் டகப்பாட் டளபு
பாவு நலிபு தரவு வொரூஉக்
குறினெடில் சித்திரங் கூறுபா டிருபதே.
 
     (இ-ள்.) பாப்பாவினங்கட்கும் பொதுவிதி யுணர்த்துதும். மேற் கூறிய விலக்கண
வகையான் வரும் பாவைந்தும் பாவின முன்னான் குமாகப் பதினேழு வகைச் செய்யுளும்
பொதுப் பெயராக வடமொழி யாற் பத்திய மென்று வழங்கும். இலக்கணஞ் சிதையினு
மிலக்கணப் பாவினடையோ டொப்ப வருவன வெல்லாங் கத்திய மெனப்படும்.
ஆகையிற் கொன்றை வேந்த னென்பது முதலாயின கத்திய மெனக் கண்டுணர்க.
அன்றியும் பாவிற்கும் பாவினங்கட்கு மேற்கும் வண்ண மிருபதென்மனார்
தொல்காப்பியனார் முதலாப் பலரே. அவை யிவையென வருமாறு. எதுகை முதலடி
யெல்லாம் வல்லின மிகுவன வல்லிசை வண்ணமும், மெல்லின மிகுவன மெல்லிசை
வண்ணமும், இடையின மிகுவன இடையிசை வண்ணமும், மூவினமும் விரவி வருவன
ஒழுகிசை வண்ணமும், பலவை யெண்ணி வருவன எண்ணுவண்ணமும், அராகத்தோடு
வருவன உருட்டு வண்ணமும், அராகமாய் வருவதன்றி யடியின்
	


189


	முதலு மீறுந் தோன்றாமற் றொடர்ந்து நீண்டவடியால்வருவன முடுக வண்ணமும்,
நேரீற்ற வுரிச்சீர் மிக வந்தேந்திய வோசையின் வருவன ஏந்திசை வண்ணமும்,
நிரையீற்ற வுரிச்சீர் மிக்குத் தூங்கிய வோசையின் வருவன தூங்கிசை வண்ணமும்,
மறுத்தறுத் தியல்வன வகைப்பு வண்ணமும், முகிந்தது போல முகியாதியல்வன
புறப்பாட்டுவண்ணமும், முகியாததுபோல முகிந்து வருவன அகப்பாட்டு வண்ணமும்,
அடிதோறு மளபெடை யெதுகை கொண்டு வருவன அளவு வண்ணமும், நூற்பாலு
ரைத்து வருவன பாவுவண்ணமும், அடிதோறு மெதுகையாக வாய்தங் கொண்டு வருவன
நலிபுவண்ணமும், ஓரடிக் கோரடி யிடை விட்டடி யெதுகை யொன்றிவருவன
தரவுவண்ணமும், அடிதோறு மொன்றாத தொடையோடு வருவன ஒரூஉவண்ணமும்,
குற்றெழுத் தியைந்து வருவன குறுஞ்சீர்வண்ணமும், நெட்டெழுத் தியைந்து மிகுவன
நெடுஞ்சீர்வண்ணமும், நெடிலுங் குறிலும் விரவி வருவன சித்திரவண் ணமு மெனப்
பாவண்ண மிருபதும் விளக்கிய வாறுகாண்க. இவற்றிற் கெல்லா முதாரண மீண்டுக்
கூறிற் பெருகும். வந்த வழியே காண்க. அன்றியு மிவற்றை நூறாக்கிய விநயனார்
விரித்தோதினா ரெனக்கொள்க. அவை வருமாறு. தூங்கிசை வண்ணம், ஏந்திசை
வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம், என்றிவ்
வைந்தினையு முதல் வைத்து, அகவல்வண்ணம், ஒழுகிசைவண்ணம் வல்லிசைவண்ணம்,
மெல்லிசைவண்ணம், என்றிந் நான்கனையு முறழ விருபதாம். இவ்விருபதுடனும்,
குறில்வண்ணம், நெடில்வண்ணம், வல்லிசைவண்ணம், மெல்லிசைவண்ணம்,
இடையிசைவண்ணம், என்றிவ்வைந்தினையுங் கூட்டி யுறழ நூறு வண்ணமும் பிறக்கு
மெனக் கொள்க. இவற்றுள், தூங்கிசை வண்ணம், 20; ஏந்திசை வண்ணம், 20;
அடுக்கிசை வண்ணம், 20; பிரிந்திசை வண்ணம், 20; மயங்கிசை வண்ணம், 20; ஆக
வண்ணம், 100.
 
     தூங்கிசை வண்ண மிருபதாவன:- குறிலகவற் றூங்கிசை வண்ணம், நெடிலகவற்
றூங்கிசை வண்ணம், வலியகவற் றூங்கிசை வண்ணம், மெலியகவற் றூங்கிசை வண்ணம்,
இடை யகவற் றூங்கிசை வண்ணம், 5; குறி லொழுகற் றூங்கிசை வண்ணம், நெடி
லொழுகற் றூங்கிசை வண்ணம், வலி யொழுகற் றூங்கிசை வண்ணம், மெலி யொழுகற்
றூங்கிசை வண்ணம், இடை யொழுகற்றூங்கிசை வண்ணம், 5; குறில் வல்லிசைத்
தூங்கிசை வண்ணம், நெடில் வல்லிசைத் தூங்கிசை வண்ணம், வலி வல்லிசைத்
தூங்கிசை வண்ணம், மெலி வல்லிசைத் தூங்கிசை வண்ணம், இடை வல்லிசைத்
தூங்கிசை வண்ணம், 5; குறின் மெல்லிசைத் தூங்கிசை வண்ணம், நெடின் மெல்லிசைத்
தூங்கிசை வண்ணம், வலி மெல்லிசைத் தூங்கிசை வண்ணம், மெலி மெல்லிசைத்
தூங்கிசை வண்ணம், இடை மெலிசைத் தூங்கிசை வண்ணம், 5; ஆக 20.
	


190


	ஏந்திசை வண்ண மிருபதாவன:- குறிலகவ லேந்திசை வண்ணம், நெடிலகவ
லேந்திசை வண்ணம், வலியகவ லேந்திசை வண்ணம், மெலியகவ லேந்திசை வண்ணம்,
இடையகவ லேந்திசை வண்ணம், 5; குறிலொழுக லேந்திசை வண்ணம், நெடி லொழுக
லேந்திசை வண்ணம், வலி யொழுக லேந்திசை வண்ணம், மெலி யொழுக லேந்திசை
வண்ணம், இடை யொழுக, லேந்திசை வண்ணம், 5; குறில் வல்லிசை யேந்திசை
வண்ணம், நெடில் வல்லிசை யேந்திசை வண்ணம், வலி வல்லிசை யேந்திசை வண்ணம்,
மெலி வல்லிசை யேந்திசை வண்ணம், இடை வல்லிசை யேந்திசை வண்ணம், 5; குறின்
மெல்லிசை யேந்திசை வண்ணம், நெடின் மெல்லிசை யேந்திசை வண்ணம், வலி
மெல்லிசை யேந்திசை வண்ணம், மெலி மெல்லிசை யேந்திசை வண்ணம், இடை
மெல்லிசை யேந்திசை வண்ணம், 5; ஆக 20.
 
     அடுக்கிசை வண்ண மிருபதாவன:- குறிலகவ லடுக்கிசை வண்ணம், நெடிலகவ
லடுக்கிசைவண்ணம், வலியகவ லடுக்கிசைவண்ணம், மெலியகவ லடுக்கிசை வண்ணம்,
இடையகவ லடுக்கிசை வண்ணம், 5; குறிலொழுக லடுக்கிசைவண்ணம், நெடிலொழுக
லடுக்கிசைவண்ணம், வலியொழுக லடுக்கிசைவண்ணம், மெலியொழுக லடுக்கிசை
வண்ணம், இடையொழுக லடு க்கிசைவண்ணம், 5;குறில்வல்லிசை யடுக்கிசைவண்ணம்,
நெடில்வல்லிசை யடுக்கிசைவண்ணம், வலிவல்லிசை யடுக்கிசை வண்ணம்,
மெலிவல்லிசை யடுக்கிசை வண்ணம், இடை வல்லிசை யடுக்கிசை வண்ணம், 5; குறின்
மெல்லிசை யடுக்கிசைவண்ணம், நெடின் மெல்லிசை யடுக்கிசைவண்ணம், வலிமெல்லிசை
யடுக்கிசை வண்ணம், மெலிமெல்லிசை யடுக்கிசை வண்ணம், இடை மெல்லிசை
யடுக்கிசை வண்ணம், 5; ஆக 20.
 
     பிரிந்திசை வண்ண மிருபதாவன:- குறிலகவற் பிரிந்திசை வண்ணம், நெடிலகவற்
பிரிந்திசை வண்ணம், வலியகவற் பிரிந்திசை வண்ணம், மெலியகவற் பிரிந்திசை
வண்ணம், இடையகவற் பிரிந்திசை வண்ணம், 5; குறி லொழுகற் பிரிந்திசை வண்ணம்,
நெடிலொழுகற் பிரிந்திசை வண்ணம், வலியொழுகற் பிரிந்திசை வண்ணம்,
மெலியொழுகற் பிரிந்திசை வண்ணம், இடையொழுகற் பிரிந்திசை வண்ணம், 5;
குறில்வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், நெடில்வல்லிசைப் பிரிந்திசை வண்ணம்,
வலிவல்லிசைப் பிரிந்திசை வண்ணம், மெலிவல்லிசைப் பிரிந்திசைவண்ணம்,
இடைவல்லிசைப் பிரிந்திசை வண்ணம், 5; குறின்மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம்,
நெடின்மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், வலிமெல்லிசைப் பிரிந்திசை வண்ணம்,
மெலிமெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், இடைமெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், 5.
ஆக 20.
 
     மயங்கிசை வண்ண மிருபதாவன:- குறிலகவன் மயங்கிசை வண்ணம், நெடிலகவன்
மயங்கிசை வண்ணம், வலியகவன் மயங்கிசை வண்ணம்,
	


191


	மெலியகவன் மயங்கிசை வண்ணம், இடையகவன் மயங்கிசை வண்ணம், 5;
குறிலொழுகன் மயங்கிசை வண்ணம், நெடிலொழுகன் மயங்கிசை வண்ணம்,
வலியொழுகன் மயங்கிசை வண்ணம், மெலியொழுகன் மயங்கிசை வண்ணம்,
இடையொழுகன் மயங்கிசை வண்ணம், 5; குறில் வல்லிசை மயங்கிசை வண்ணம், நெடில்
வல்லிசை மயங்கிசை வண்ணம், வலி வல்லிசை மயங்கிசை வண்ணம், மெலி வல்லிசை
மயங்கிசை வண்ணம், இடைவல்லிசை மயங்கிசை வண்ணம், 5; குறின் மெல்லிசை
மயங்கிசை வண்ணம், நெடின் மெல்லிசை மயங்கிசை வண்ணம், வலி மெல்லிசை
மயங்கிசை வண்ணம், மெலி மெல்லிசை மயங்கிசை வண்ணம், இடை மெல்லிசை
மயங்கிசை வண்ணம், 5; ஆக 20. ஆக வண்ண நூறும் வந்தவாறு காண்க. வண்ண
மெனத் தொகையா னொன்றும் வகையா னைந்தும் விரியானூறு மெனப் பிரித்துச்
சொன்னார் கையனார் முதலாகிய வொருசா ராசிரியர். - தொல்காப்பியம். - "வண்ணந்
தானே நாலைந் தென்ப. - அவற்றுள் பாஅவண்ணஞ் சொற்சீர்த்தாகி நூற்பாப் பயிலும்.
- தாஅவண்ண மிடையிட்டு வந்த வெதுகை யாகும். - வல்லிசை வண்ணம்
வல்லெழுத்துப் பயிலும். - மெல்லிசைவண்ண மெல்லெழுத்து மிகுமே. - இயைபு வண்ண
மிடை யெழுத்து மிகுமே. - அளபெடை வண்ண மளபெடைபயிலும். - நெடுஞ்சீர்
வண்ண நெட்டெழுத்துப் பயிலும். - குறுஞ்சீர் வண்ணங் குற்றெழுத்துப் பயிலும். -
சித்திரவண்ண நெடியவுங் குறியவு நேர்ந்துவருமே. - நலிபு வண்ண மாய்தம் பயிலும். -
அகப்பாட்டு வண்ண முடியாத் தன்மையின் முடித்ததன் மேற்றே. - புறப்பாட்டு வண்ண
முடிந்தது போன்று முடியா தாகும். - ஒழுகு வண்ண மோசையி னொழுகும். -
ஒரூஉவண்ண மொரீஇத் தொடுக்கும். - எண்ணு வண்ண மெண்ணுப் பயிலும். அகைப்பு
வண்ண மறுத்தறுத் தொழுகும். - தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். - ஏந்தல்
வண்ணஞ் சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும். - உருட்டுவண்ண மராகந்
தொடுக்கும். - முடுகுவண்ண மடியிறந்தோடி யதனோரற்றே. - வண்ணந் தாமே
யிவையென மொழிப." இவைமேற்கோள். எ-று. (32)
 

இரண்டாமோத்துச் செய்யுளியள். - முற்றிற்று.

.........................

மூன்றாமோத்துச் செய்யுண்மரபியல்
Chapter III. - Miscellaneous Verses.
 
251. 	செய்யு டெரிவுற முத்தகங் குளகந்
தொகைதொடர் நிலையெனத் தொகுதி நான்வற்றுண்
முத்தகந் தனித்தாய் முடியுஞ் செய்யுளே.
	


192


	 (இ-ள்.) மேல்விரித் துரைத்த பாவும் பாவினமுந் தனித்து நின்றுந்
தொடுத்துநின்றுந் தன்பொருண் முடியவருவன செய்யுளெனப்படும். இவற்றின்வகையு
மிவற்றிற்கியலுந் தன்மையு மீண்டு விளங்குவ தாகையி லிவ்வோத்துச் செய்யுண்
மரபெனும் பெயர்த்து. இதனைப் பாட்டிய லென்மரு முளரெனக் கொள்க. ஆகையின்
முத்தகமென்றுங் குளகமெ ன்றுந் தொகைநிலையென்றுந் தொடர்நிலையென்றுஞ்
செய்யுளெல்லா நால்வகைப்படுமென்றுணர்க. இவற்றுண் முத்தகச்செய்யு ளென்பது
தனியே நின்றொரு பொருளைப் பயின்று முடியும். (வ-று.) வெண்பா. - "மூவா முதலா
மூவாளோர் முதலோனைத், தாவாதோர் மூவுலகுந் தாழ்ந்தேற்றத் - தூவாத, பாவடியைப்
பாடிப் பரகதி நாஞ்சேரச், சேவடியைச் சேர்ந்துந் தொழுது." எ-ம். - "ஞானமே
நல்லமைச்சாய் நாற்கரண நாற்ப டையாய்த், தானம் விருதாய்த் தவமரணாய்ப் -
பானணியாய்க், காவலூர்த் தாய்க்கண் ணருட்குடைக்கீழ்க் கன்னிமையே, யாவலூர்ந்
தாளு மரசு" எ-ம். பிறவுமன்ன. - தண்டியலங்காரம். - "செய்யுளென்பவை தெரிவுற
விரிப்பின், முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையென, வெத்திறத் தனவு மீரிரண்
டாகும். அவற்றுண், முத்தகச் செய்யுட் டனிநின்று முடியும்." இவை மேற்கோள். எ-று. (1)
 
252. 	குளக மொருவினை கொளும்பல பாட்டே.
 
     (இ-ள்.) குளக மாமாறுணர்த்துதும். ஒவ்வொருபாட்டுத் தன்வினைக் கொள்ளாமற்
பலவேகூடி யொருவினை கொண்டு முடிவன குளகச்செய்யு ளெனப்படும். (வ-று.)
"கோதொழி மெய்ம்மறைக் குன்றுங் கூவெலாந், தீதொழித் தீர்த்தநன் னதியுஞ்
சேர்பொதுப், பாதொழி நாடெனப் பவன மூன்றுமுன், வாதொழி திருவில் வாழ்
வார்சொல் பாழியும் - ஆக்கமே பிணையிலீ ரறத்தின் மாலையு, மூக்கமே புரவியு முலக
தீர்ததடு, நோக்கமே வேழமு நொடிப்பின் யாவையுந், தாக்கமே லதிர்முகின் முரசின்
றன்மையும். - மீயரிதுதித்தமீன் விரிபதாகையு, நோயரிநீதியி னுனித்தகோன்மையுங்,
காயரிதினைந்தபூங் காவிற்காவலூர்த், தாயரி தீன்றகோன் றசாங்க மென்பவே." என
விம்மூன்று மொருவினைகொண்டு முடிந்தமையாற் குளகச் செய்யுளெனப்படும்.
பிறவுமன்ன. - தண்டியலங்காரம். - "குளகம் பலபாட் டொருவினை கொள்ளும்." இது
மேற்கோள். எ-று. (2)
 
253. 	தொகைநிலைச் செய்யு டோன்றக் கூறி
னொருவ னுரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
பொருளிடங் காலந் தொழிலென நான்கினும்
பாட்டினு மளவினும் கூட்டிய தாகும்.
 
     (இ-ள்.) தொகைநிலைச் செய்யு ளாமாறுணர்த்துதும். சூத்திரத்திற்காட்டிய
பலவகைத் தொகைப்பாட்டிணைந்து வருவன தொகைநிலைச்செய்யுளெனப்படும்.
	


193


	ஆகையிற் றிருவள்ளுவப்பயனென்பது:- பல பாட்டாகியு மொருவனா லுரைக்கப்
பட்டவதனாற் றொக்கு நின்று தொகை நிலைச் செய்யு ளாயிற்று. நெடுந்தொகை
யென்பது:- பலரா லுரைக்கப்பட்ட தொகைநிலைச் செய்யுள். புறநானூ றென்பது:-
பொருளாற் றொகுத்த தொகை நிலைச் செய்யுள். களவழி நாற்ப தென்ப:- இடத்தாற்
றொகைநிலைச் செய்யுள். கார்நாற்ப தென்பது:- காலத்தாற் றொகை நிலைச் செய்யுள்.
ஐந்திணை யென்பது: தொழிலாற் றொகை நிலைச் செய்யுள். கலித்தொகை யென்பது:-
பாட்டாற் றொகைநிலைச் செய்யுள். குறுந்தொகை யென்பது:- அளவினாற் றொகைநிலைச்
செய்யுள். பிறவுமன்ன. எ-று. (3)
 
254. 	தொடர்நிலைப் பொருளினுஞ் சொல்லினு மாகும்
பொருட்டொடர் நிலைதற் பொருடரத் தானே
பற்பல பாட்டாய்ப் பயனிற் றொடருஞ்
சொற்றொடர் நிலையெனிற் றூக்கந் தாதியே.
 
     (இ-ள்.) தொடர்நிலைச்செய்யு ளாமாறுணர்த்துதும். பலபாட்டாகிப் பொருளானுஞ்
சொல்லானுந் தொடர்ந் தொருப்பட வருவன தொடர்நிலைச் செய்யு ளெனப்படும்.
இவற்று ளொருபொருளை விளக்கத் தம்முட் டொடர்ந்து வரும் பலபாட்டே
பொருட்டொடர்நிலைச் செய்யு ளென்ப. இராமாயணஞ் சிந்தாமணி பலவு மிந்நடை
யுளவெனக் கொள்க. அன்றியு மொருசெய்யுளிறுதி மற்றொரு செய்யுட் காதியாகச் செய்யு
ளந்தாதியோடு தொடுத்து வருவன சொற்றொடர்நிலைச்செய்யு ளென்ப. கலம்பக முதலிய
விந்நடை யுளவெனக் கொள்க. - தண்டியலங்காரம். - "பொருளினுஞ் சொல்லினு
மிருவகைத் தொடர் நிலை-செய்யு ளந்தாதி சொற்றொடர் நிலையே." இவை மேற்கோள்.
எ-று. (4)
 
255. 	பொருட்டொடர் நிலையே புகலிற் காப்பியம்
பெருங்காப் பியமெனப் பிரிவிரண் டவற்றுட்
காப்பிய மறமுத னான்கிற் குறைநவும்
புராணம் பற்கதை புனைநவு மென்ப.
 
     (இ-ள்.) காப்பியமும் புராணமு மாமாறுணர்த்துதும். கவியாற் பாடப்படுவன
வெல்லாங் காப்பிய மாயினும் பொதுவாய் நின்ற பெயரைச் சிறப்பிற் குறுகிப்
பொருட்டொடர் நிலைச் செய்யுளைக் காப்பிய மென்றார். அங்ஙனஞ் சேற்றுண்
மலர்வன வெல்லாம் பங்கய மெனப்படு மாயினும் பெயர் தாமரை யொன்றின்
மேலாயிற்று. இவை பெருங்காப்பிய மென்றுங் காப்பிய மென்று மிருவகைப் படும்.
இவற்று ளறம் பொரு ளின்பம் வீடென நான்கு மொருப்படத் தோன்ற விரையா தவற்று
ளொன்றும் பலவுங் குறைந்து வருவன காப்பிய மெனப்படும். காப்பியந்தானே
பலகதைகளை விளக்கிவரிற் புராண மெனப்படும். - தண்டியலங்காரம். - "பெருங்காப்
பியமே காப்பிய மென்றாங்,
	


194


	கிரண்டா வியலும் பொருட் டொடர் நிலையே - அறமுத னான்கினுங் குறைபா
டுடையது, காப்பிய மென்று கருதப் படுமே." இவை மேற்கோள். எ-று. (5)
 
256. 	பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வரும்பொரு ளிவற்றினொன்
றேற்புடைத் தாக முன்வர வியன்று
நாற்பொருட் பயக்கு நடைநெறித் தாகித்
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகட னாடு வளர்நகர் பருவ
மிருசுடர் தோற்றமென் றினையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாட
றேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்
றின்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரந் தூது செலவிகல் வென்றி
சந்தியிற் றொடர்ந்து சருக்க மிலம்பகம்
பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய வென்ப
கூறிய வுறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபா டின்றென விளம்பினர் புலவர்.
 
     (இ-ள்.) பெருங் காப்பிய மாமாறுணர்த்துதும். பெருங் காப்பிய மா வதற்குத் தன்
பா நாயக னிகரில்லாத னாகவும், அறம்பொரு ளின்பம் வீடென நாற்பொருள்
விளைவதற் கேதுவாகவும் வேண்டும். அதன்றிப் பெருங் காப்பியத் துறுப்பாவன:-
தெய்வ வணக்கமுஞ் செய்பொரு ளுரைத்தலு மென்றிவ் விருவகைச் சிறப்புப் பாயிரமு
மிவ்விரண்டிற் கேற்புழி வாழ்த்துங் கூட்டவு மலையுங் கடலு நாடு நகரும் பருவங்களும்
பருதி யுதையமு மதியவுதையமு மென்றிவற்றின் வருணைனையும், நன்மண மாதலும்,
பொன்முடி சூடலும், பொழிலினு நீரினும் விளையாடலும், பெற்ற சிறுவரும் புலவியுங்
கலவியு மென்றிவற்றைப் புகழ்தலும், மந்திரமுந் தூதுஞ் செலவும் போரும் வெற்றியு
மென்றிவற்றைத் தொடர்ந்து கூறலும், பெருங்காப்பயித் துறுப்பாம். இவற்றுட் சில
குறையினுங் குறை யன்றன வுரைத்தனர் கற்றோர். சொல்லப்பட்ட வுறுப்பெல்லாம் வேறு
வேறாய்ச் சருக்க மாகவு மிலம்பக மாகவும் பரிச்சேத மாகவும் பிரிந்து முடியும். சருக்க
மெனினும் படல மெனினு மொக்கும். இவற்றுள் தொடுத்த
	


195


	பொருள் பலவாகப் பிரித்துத் தருவன சருக்கம் படல முதலாயின அங்ஙனங் கம்பன்
சீதை மணக்கதை மிதுலைகாண் படலத்திற் றொடங் கிப் பலபிரிவாக வகுத்துப்
பதினைந்தாம் படலத்தின் முடித்தவாறு காண்க. இலம்பகமோ வெனிற் றொடுத்த
பொருள் பிரிவிரிவின்றி யொன்றாய்த் தருமெனக் கொள்க. அங்ஙனஞ் சிந்தாமணியிற்
காந்துருவத்தை முதலெண்மா மணக்கதை யொவ்வோ ரிலம்பகத்திற் றொடுத்து முடித்தது
காண்க. அன்றியுஞ் சுவையும் பாவமும் விரும்ப வென்பது வீரமிழி வச்சம் வியப்
பலங்கார முருத்திர நகையென வெண்மைப் பாடுகள் சுவையெனவு மவற்றைக் காட்டுங்
குறிப்புகள் வடமொழியிற் பாவமெ னவுங் கொள்க. எ-று. (6)
 
257. 	பிள்ளைக் கவியின் பெற்றியைக் கூறச்
சுற்ற வகுப்பொடு தெய்வங் கொலைகாப்ப
வொற்றைப் படமூன் றாதி மூவே
ழீறாய் மதியினு மைந்தே ழாண்டினுங்
காப்புச் செங்கீரை தால்சப் பாணி
முத்தம் வரானை யம்புலி சிறுபறை
சிற்றில் சிறுதே ராடவர்க் கேகடை
மூன்றொழித் தரிவையர்க் காங்கழங் கம்மானை
யூச லென்றிவை யவ்விரு பாற்குப்
பத்துறுப் பாயொவ் வொன்று விருத்தம்
பப்பத் தாகப் பாட லென்ப.
 
     (இ-ள்.) பிள்ளைக்கவியாமாறுணர்த்துதும். பிள்ளை பிறந்த மும்மாத முதற் கொண்
டிருபத் தொன் றெல்லையாக வைத்தவற்று ளொற்றைப் படக் கிடந்த மூன் றைந் தே
ழொன்பது பதினொன்று பதின்மூன்று பதினைந்து பதினேழு பத்தொன்ப திருபத்தொன்
றெனப் பத்துமாதங்களினு மன்றி யைந்தா மாண்டினு மேழா மாண்டினு முரைக்கத் தக்க
பிள்ளைக் கவியிற் சுற்றத்தோடு பாநாயகனைத் தெய்வங் கொலை யகற்றிக் காப்ப
வென்று காப்பே முதலுறுப் பன்றிச் செங்கீரையுந் தாலுஞ் சப்பாணியு முத்தமும்
வாரானையு மம்புலியு மென் றிவ்வேழு மாந்தர்க்கு மாதர்க்கும் பொதுவாய் நிற்ப,
சிறுபறையுஞ் சிற்றில்லுஞ் சிறு தேருமென மூன்றா டவர்க்கும், தீம்புன லம்மானை
யூசலென் றிவை யாடலென மூன் றரிவை யர்க்கும், சிறப்பா யொவ்வொரு பாற்குப்
பத்துறுப்பாக வொவ்வோ ருறுப்புப் பத்து விருதமாகப் பலசந்தமாய் நடக்கும்
பிள்ளைக்கவி யெனக் கொள்க. பிள்ளைக்கவி யெனினும் பிள்ளைத்தமிழெனினு
மொக்கும். அன்றியுங், கழங் கென்பதை யபிடேக மென்மரு முளரே. உதாரணம் வந்த
வழியே காண்க. எ-று. (7)
	


196


	258. 	கலம்பகத் துட்புயங் கைக்கிளைத் தவமே
காலம்வண் டம்மானை காற்றுப் பாணன்
குறஞ்சித் திரங்கல் குளிர்தழை சம்பிரத
மறந்தூ தூசன் மதங்க மடக்கென
விரவிமூ வாறும் வேண்டு முறுப்பா
வொருபோகு வெண்பா வுடன்கலித் துறையிவை
நிரையே முதற்கண் ணின்றுபிற் கலந்தவைம்
பாத்துறை விருத்த மந்தாதி வருமே
வந்தா லீசர்க்கு வருநூறு முனிமெய்யர்க்
கைந்தஃகு மரசர்க் காந்தொண் ணூறு
மமைச்சர்க் கெழுபது மைம்பதும் வணிகர்க்
கமைந்த வேனையோர் காறைந் தளவே.
 
     (இ-ள்.) கலம்பக மாமாறுணர்த்துதும். புய முதலாக மடக்கீறாகக் கிடந்த
மூவாறுறுப்பு முன்னும் பின்னுந் தம்முட் கலந்து வரவே நடக்குங் கலம்பக மெனக்
கண்டுணர்க. அதுவே வழங்கும் பாட்டியாதோ வெனின் முதற்கண் ணொருபோகும் -
வெண்பாவுங் - கலித்துறையு - மிவைமூன் றொழுங்கு மாறாமல் வந்த பின்னர்,
வெண்பா - வகவல் - கலிப்பா - வஞ்சிப்பா - மருட்பா - வென வைவகைப் பாவும்,
வஞ்சித் துறையும், கலித்துறையும், பலவகை விருத்தமுந் தம்முட் கலந்து வரப்பெறும்.
வரினு மொரு செய்யு ளீற்று மொழி மற்றொரு செய்யு ளாதியாகவு மாதிச் செய்யுண்
முதன் மொழி யீற்றுச் செய்யுட் கடை மொழி யாகவும் வந்தந்தாதி வரு மெனக் கொள்க.
இவற்று ளொருபோகென்பது:- மயங்கிசைக் கொச்சகக் கலி ப்பா வென்றுணர்க. ஆகையி
லிது நடக்குந் தன்மையை 234-ஞ் சூத்திரத்துட் காண்க. அன்றியு மிம்மூறை நடக்குங்
கலம்பகத் தளவியாதோ வெனில் வானோர்க்குக் குறையாத வொருநூறு பாட்டாகவும்,
முனிவர்க்கு மந்தணர்க்கு மைந்து குறைத்துத் தொண்ணூற் றைந்தாகவும், அரசர்க்குத்
தொண்ணூறாகவும், மந்திரி தளகருத்தாவுக் கெழுபதாகவும், வணிகர்க் கைம்பதாகவும்,
ஒழிந்த மற்றையவர்க் கொரு முப்பதாகவும் வருமெனக் கொள்க. எ-று. (8)
 
259. 	பரணிக் காயிரம் பகடு கொன்ற
தெரிவருந் தலைவனாய்த் தேவவாழ்த் தாதி
கடைதிறப் புங்கனல் காய்நிலம் பாலையும்
புடையிற் காளி பொலிந்த கோயிலும்
பேயோடு காளி பேய்கள் காளியோ
டோயில வுரைத்தலி லோர்ந்தவன் கீர்த்தி
	


197


	புகறலு மவன்வழி புறப்பொரு டோன்றவு
மிகவெஞ் சமரும் விரும்பலு மென்றிவை
யளவடி முதற்பல வடியா னீரடி
யுளபஃ றாழிசை யுரைப்பது நெறியே.
 
     (இ-ள்.) பரணி யாமாறுணர்த்துதும். போர்முகத் தாயிரம் யானையைக் கொன்ற
வீரனே பாட்டு நாயகனாகக் கொண்டு பரணிக் குறுப்பெனக் கடவுள் வாழ்த்துங்
கடைதிறப்பும் பாலைநிலமுங் காளிகோயிலும் பேய்களோடு காளியுங் காளியோடு
பேய்களுஞ் சொல்ல, சொல்லக் கருதிய நாயகன் கீர்த்தி விளங்கலு மவன் வழியாகப்
புறப்பொரு டோன்ற வெம்போர் வழங்க விரும்பலு மென்றிவையெல்லா மிருசீர் முச்சீரடி
யொழித்தொழிந்த மற்றடியாக வீரடி பஃறாழிசையாய்ப் பாடிய செய்யுளே பரணி
யெனப்படும். எ-று. (9)
 
260. 	உலாவென மலைநதி யுயர்நா டூர்மாலை
குலாவிய பரிகரி கொடிமுர சுயர்கோ
லியைந்த தசாங்கமு மேழ்பருவத்தார்
வியந்து தொழுதலும் வேண்டுறுப் பாயக்
கலிவெண் பாவாற் குலமகற் புகழ்தலே.
 
     (இ-ள்.) உலா வாமாறுணர்த்துதும். மலையும் - யாறு - நாடு - மூரு - மாலையுங்
- குதிரையும் - யானையுங் - கொடியு - முரசுஞ் - செங்கோலு மென வித் தசாங்கம்
பத்துறுப்பாக விரிவாய் விளக்கி, யவை யத்துணையு முடைய வுயர்ந்த குலமக
னெடுந்தெரு வரு கையிலவனைக்கண்ட வயதேழும் - பதினொன்றும் - பதின்மூன்றும் -
பத்தொன்பது - மிருபத்தைந்து - முப்பத்தொன்று - நாற்பது முள பேதை - பெதும்பை
- மங்கை - மடந்தை - யரிவை - தெருவை - பேரிளைம் பெண் ணென வெழுவகைப்
பருவமாத ருளம்வியந் தவனைத்தொழுதலும், மற்றோ ரெழுறுப்பாக விளக்கிக்
கலிவெண்பாவாற் பாடிய செய்யு ளுலா வெனக் கொள்க. கலிவெண்பா வருந்தன்மையை
235-ம். சூத்திரத்துட் காண்க. எ-று. (10)
 
261. 	மடலென்ப துலாப்போல் வழங்கினுங் கண்ட
மடவார் மயலும் வருந்தலை மகன்பெயர்ப்
படமாறா வெதுகையும் பகர்த லுரித்தே.
 
     (இ-ள்.) மடலாமா றுணர்த்துதும். உலாவுறுப் பன்றிப் பாட்டுடைத் தலைவனைக்
கண்ட மாதர்க் கெழும்பின வினிய காதலு மற்றோ ருறுப்பாகக் கூட்டி யவன்பெய
ரெதுகையாகக் கொண்டோ ரெதுகையோடு பாவெல்லாம் வந்துலாப்போல்
கலிவெண்பாவாற் பாடிய செய்யுண் மடலென வழங்கும். எ-று. (11)
	


198


	262. 	அங்க மாலையே யங்க வகுப்பெலாம்
பாதாதி கேசமுங் கேசாதி பாதமுங்
கலிவெண்பா வாதல் வெளிவிருத் தமாதல்
வலிதெனப் புகழ்ந்து வகுத்த செய்யுளே.
 
     (இ-ள்.) அங்கமாலை யாமாறுணர்த்துதும். கலிவெண்பா வாலாயினும்
வெளிவிருத்தத் தாலாயினு முடலிலுள்ள வுறுப்பெலா மொவ்வொன்றாக விரித்துப்
புகழ்ந்துபாடிய செய்யு ளங்கமாலையெனப்படும். அவற்றுட் பாதந்தொட்டு மேலேறி
தலைமயி ரளவும் புகழ்வது பாதாதி கேசமெனவும், சிரந் தொட் டிறங்கிப் பாதத்தளவும்
புகழ்வது கேசாதிபாத மெனவும் வழங்கும். எ-று. (12)
 
263. 	சின்னப்பூ வெனத்தெளி நேரிசை வெண்பா
நூறுதொண்ணூ றெழுப தைம்பதாறைந்துமாய்ப்
பாடித் தசாங்கம் பற்றிப் புகழ்வதே.
 
     (இ-ள்.) சின்னப்பூ வாமாறுணர்த்துதும். மலைமுதற் றசாங்கத் தீரைம் பொருளையு
நேரிசை வெண்பாவாலே சூத்திரத்துட் காட்டிய வளவொடு பாடிய செய்யுளே சின்னப்
பூவென வழங்கும். அன்றியுந் தசாங்கத் தொவ்வொருபொரு ளொவ்வொரு
வெண்பாவாகப் பத்துப்பாடலுமா மங்களம் பாடியசெய்யுள் தசாங்க மெனப்படும்.
எ-று.(13)
 
264. 	ஒருபா வொருபதா முரைப்பரும் வெண்பா
வகவல் கலித்துறை யவற்று ளொன்றாற்
பத்தெனப் பாடிப் பகுத்த செய்யுளே.
 
     (இ-ள்.) ஒருபா வொருபதா மாறுணர்த்துதும். எப்பொருண் மேலும் பத்து
வெண்பாவாயினும், பத்துக்கலித்துறையாயினும், பத்தாசிரியப்பாவாயினும், பாடியசெய்யு
ளொருபா வொருப தெனப்படும். எ-று. (14)
 
265. 	இருபா விருபதா மிணைந்த நாலைந்தாய்
வெள்ளை யகவல் விரவிப் பாடலே.
 
     (இ-ள்.) இருபா விருபதா மாறுணர்த்துதும். வெண்பாவு மகவலு முறையே கலந்
தோரிருபது பாவான் முடித்த செய்யு ளிருபா லிருப தெனப் படும். எ-று. (15)
 
266. 	ஆற்றுப் படையென்ப வாற்றெதிர்ப் படுத்திய
புலவர் பாணர் பொருநர் கூத்தர்
பலபுக ழகவற் பாவொடு பாலே.
 
     (இ-ள்.) ஆற்றுப்படை யாமாறுணர்த்துதும். ஒருவனைப் புகழ்ந்து வாழ்த்தப்
புலவரும் பாடுவரும் பொருநருங் கூத்தரு மென் றிவரடங்கலு
	


199


	மாதலிவரு ளொருவகுப் பாதல் வழியெதிர்ப்பட்டதாகப் புகழ்ந் தாசிரியப் பாவாற் பாடுவ
தாற்றுப்படை யெனக்கொள்க. என்னை. ஆறெனினும் வழி யெனினு மொக்கும்.
படையெனினும் படுத்த லெனினு மொக்கும். எ-று. (16)
 
267. 	வருக்க மாலையாம் வருக்க வெழுத்தென
வுயிரோடு க ச த ந ப ம வ வெனவெண்
வரிமுதல் வந்து வருமெண் ணகவலே.
 
     (இ-ள்.) வருக்கமாலை யாமாறுணர்த்துதும். வருக்க வெழுத்தெனக் கூறிய
வெண்பரி யெழுத்து முதற்கண்வந் தெட்டகவலை யெப்பொருண் மேலும் பாடிய
செய்யுள் வருக்க மாலையெனப்படும். ஆகையி லிங்கண் வருக்க வெழுத்தெனப் படுவன
மொழி முதற்கண் வருமெழுத் தாமாயினு மவற்றுள் ஞவ்வரி யவ்வரி மிக வழங்காமையா
னிங்க ணொழிந்தன. எ-று. (17)
 
268. 	மாலையே யகவலால் வழங்கு மவற்றுட்
டானைபோர் வெற்றி தனித்தனி புகழ்வது
தானை வஞ்சி வாகையென மூன்றாம்.
 
     (இ-ள்.) மூவகைமாலை யாமாறுணர்த்துதும். பலநேரிசை யாசிரியப்பா வொடு
நால்வகை வீரத்தானையைப் புகழ்வது தானைமாலை யெனவும், பகைவரைத்
தாக்கச்செல்லும் வீரத்தைப் புகழ்வதே வஞ்சிமாலையெனவும், பகைவரைச்
செகுத்துக்கொண்ட வெற்றியைப் புகழ்வது வாகைமாலை யெனவும், வழங்கும். ஆகையிற்
சூத்திரத்துண் மாலையென்பது முதனிலைத் தீவகமாக நின்ற தெனக் கண்டுணர்க.
எ-று. (18)
 
269. 	புகழ்ச்சி மாலையாம் பூங்குழ லாரை
யிகழ்ச்சியில் குலமியை வஞ்சி பாட
னாம மாலையா நம்பிகட் புகழ்தலே.
 
     (இ-ள்.) புகழ்ச்சிமாலை நாமமாலையாமாறுணர்த்துதும். தன்னுரிச்சீருந் தளையு
மன்றிப் பிறவற்றையுங் கூட்டிய வடிகள் கலந்து வரும் வஞ்சிப்பா வாற்குலப்பெயர்
விளங்கித் தோன்ற மாதரைப் புகழ்வது புகழ்ச்சிமாலையெனவு மங்கண் மாந்தரைப்
புகழ்வது நாமமாலை யெனவும் வழங்கும். எ-று. (19)
 
270. 	செருக்கள வஞ்சியாஞ் செருமுகத் தாயவை
சுருக்கிய வஞ்சி தொடுத்துப் பாடலே.
 
     (இ-ள்.) செருக்களவஞ்சி யாமாறுணர்த்துதும். தேர் - கரி - பரி - பதாதி - யென
விருபடை நாற்றானை யெதிர்த்துக் கணைக டொடுத்தலு மடுத்துவளைவே லெறிதலுங்
கலந்து கைவாள் வீசலும் வலமிடம் வளைத்ததேரும் வெருவுறச் சினத்த களிறுந்
தூசெழப்பாய்ந்த பரியு மொலிமிகப் பொருதபதாதியு மிவையுமிவற்றோடுபோர்க்களத்
தாயின யாவுந் தோன்றப் பற்பல வஞ்சிப் பாவொடு தொடுத்த செய்யுளே
செருக்களவஞ்சி யெனப்படும். எ-று. (20)
	


200


	271. 	வரலாற்று வஞ்சியாம் வல்லறமுத னான்கும்
வருமா றுரைத்து வஞ்சி பாடலே.
 
     (இ-ள்.) வரலாற்றுவஞ்சி யாமாறுணத்துதும். அறம் பொருளின்பம் வீடென நான்கு
மாமாறுணர்த்தி வஞ்சிப் பாவான் முடிந்த செய்யுளே வரலாற்று வஞ்சி யெனப் படும்.
எ-று. (21)
 
272. 	நான்மணி மாலையே நாற்பதந் தாதியாய்த்
தான்மணிக் கொத்தன தந்தன்மன விருத்தமே.
 
     (இ-ள்.) நான்மணிமாலை யாமாறுணர்த்துதும். கழிநெடிலடியால் வரு மாசிரிய
விருத்த மந்தாதியா யொரு நாற்பது மாகத் தொடுத்த செய்யுளே நான்மணிமாலை
யெனப்படும். மனவிருத்த மெனினு மாசிரிய விருத்த மெனினு மொக்கும். எ-று. (22)
 
273. 	விருத்த விலக்கணம் விளம்புங் காலைக்
குடையூர் நாடுகோல் பரிகரி வில்வடி
வாள்வே லொன்பான் வகுப்புமன விருத்த
மீரைந் தவ்வவற் றியற்பெயர் கொள்ளுமே.
 
     (இ-ள்.) விருத்த விலக்கண மாமாறுணர்த்துதும். பாட்டுடைத் தலை மகனுடைய
குடையு - மூரு - நாடுஞ் - செங்கோலுங் - குதிரையும் - யானையும் - வில்லும் -
வாளும் - வேலு - மென்றிவ் வொன்ப துறுப்பும் விளங்கித் தோன்றப் புகழ்ந்
தொவ்வொரு வகுப்பிற்குப் பத்தாசிரிய விருத்த மாகப் பாடவே விருத்த விலக்கண
மெனும் பெயர்மெற் றொவ்வொரு வகுப்புத் தத்த முறுப்பியற் பெயரைக் கொண்டு
வழங்கும். அங்ஙனங் குடைவிருத்த மூர்விருத்த நாட்டு விருத்தம். பிறவுமன்ன.
எ-று.(23)
 
274. 	இருபா விருபதா மிணைந்த நாலைந்தாய்
வெள்ளை யகவல் விரவிப் பாடலே.
 
     (இ-ள்.) அட்டமங்கல நவமணிமாலை யாமாறுணர்த்துதும். பாட்டு டைத்
தலைவனைக்கவி கவிதோறுந் தெய்வங் காப்பவென் றாசிரிய விருத்த மெட்டாக முடிவ
தட்ட மங்கல மெனவு மொன்பதாக முடிவது நவமணி மாலை யெனவும் வழங்கும்.
எ-று. (24)
 
275. 	பலசந்த மாலை பப்பத் தொருசந்தஞ்
சிலவந் தாதியாய்ச் செப்புமன விருத்தமே.
 
     (இ-ள்.) பலசந்தமாலை யாமாறுணர்த்துதும். அந்தாதியாக நூறாசிரிய விருத்தம்
பாடி பப்பத்தொவ்வொரு சந்தமாகத் தொடுத்த செய்யுளே பல சந்தமாலை யெனப்படும்.
எ-று. (25)
	


201


	276. 	ஊச லென்ப வூசலாய்க் கிளையள
வாசிரிய விருத்த மாகப் பாடலுந்
தன்னொலி வருங்கலித் தாழிசைப் பாடலும்
வண்ணக முதற்கண் வரினு மியல்பே.
 
     (இ-ள்.) ஊச லாமாறுணர்த்துதும். ஊசலைப் பாடிப் பாட்டுடைத் தலைமகனது
சுற்றத்தாரளவாக வாசிரிய விருத்த மாயினுங் கலித்தாழிசை யாயினும் பாடுவ தூச
லெனப்படும். அவற்றின் முதற்கண் வண்ணக மொன்று வரினு மியலு மென்றுணர்க.
வண்ணக மெனினு மராக மெனினு முடுகிய லெனினு மொக்கும். எ-று. (26)
 
277. 	கோவையே யகப்பொருட் கூறுபா டிசைப்பட
நாவலர் கலித்துறை நானூறுரைத்தலே.
 
     (இ-ள்.) கோவை யாமாறுணர்த்துதும். பொருளதிகாரத்தின் கண்ணே காட்டிய
தன்மையிற் களவு, கற்பென விருபா லுடைய வகப்பொருட்டிணைக ளேழும் விளக்கிக்
கலித்துறை நானூறாகப் பாடித் தொடுத்த செய்யுள் கோவை யெனப்படும். எ-று. (27)
 
278. 	இரட்டை மாலையா மிணைந்த பப்பத்தாய்
வெண்பா கலித்துறை விரவிப் பாடலே.
 
     (இ-ள்.) இரட்டை மாலை யாமாறுணர்த்துதும். எப்பொருண்மேலு முறையே கலந்த
பத்து வெண்பாவும், பத்துக் கலித்துறையும் வருவ திர ட்டைமாலை யெனப் படும்.
எ-று. (28)
 
279. 	மணிமாலை வெண்பா வகைநா லைந்துட
னிணையாய்க் கலித்துறை யிரட்டைப் பாடலே.
 
     (இ-ள்.) மணிமாலை யாமாறுணர்த்துதும். எப்பொருண் மேலும் வெண்பா
விருபதும், கலித்துறை நாற்பதுங் கலந்து வருவது மணிமாலை யெனப்படும். எ-று. (29)
 
280. 	பன்மணி மாலை பன்னிற் கலம்பகத்
தொருபோ கம்மானை யூச லிவைநீத்
தகவல் வெள்ளை யருங்கலித் துறையென்
றவைசெறி நூறந் தாதியாய் வருமே.
 
     (இ-ள்.) பன்மணிமாலை யாமாறுணர்த்துதும். மேலே காட்டியகலம் பகத்தின்
முகத்து வரு மொருபோகு மம்மானையு மூசலு மென்றிம்மூன் றொழித் தொழிந்த
கலம்பக வுறுப்புடைத்தாகி வெண்பா வகவல் கலித்துறை யென்றிம்மூவகைப் பாட்டா
னூறாகவு மந்தாதி யாகவு முடிந்த செய்யுள் பன்மணிமாலை யெனப்படும். எ-று. (30)
	


202


	281. 	மும்மணிக் கோவையே முப்பதந் தாதியா
யகவல் வெள்ளை கலித்துறை முறைவரு
மும்மணி மாலையா முறைமாறி வெள்ளை
கலித்துறை யகவல் கதிபெறுஞ் செய்யுளே.
 
     (இ-ள்.) மும்மணிக்கோவையு மும்மணிமாலையுமாறுணர்த்துதும். அந்தாதி யாகவு
முப்பது பாட்டாகவு மகவல் - வெண்பா - கலித்துறை யென விம்மூன்று
மிம்முறையானே தொடுத்து வருவது மும்மணிக் கோவை யெனப்படும். அங்ஙன
மம்மூவகைப் பாட் டொழுங்குமாறி வெண்பா - கலித்துறை - அகவலாக - தொடுத்து
வருவது மும்மணிமாலையெனப்படும். எ-று. (31)
 
282. 	இணைமணி மாலை யிணைவெண்பாக் கலித்துறை
யகவன் மனவிருத்தந் தொடர்நூ றியம்பலே
யலங்கார பஞ்சக மந்நால் வகைப்பாக்
கலந்தவ் வைந்தாய்க் கதிபெறப் பாடலே.
 
     (இ-ள்.) இணைமணிமாலையு மலங்காரபஞ்சகமு மாமாறுணர்த்துதும். வெண்பா -
கலித்துறை - ஆசிரியப்பா - ஆசிரியவிருத்தமென - இந்நான்குங்கலந்து நூறாக வருவ
திணைமணிமாலை யெனவு மந்நால்வகையும் வகைக்கோரைந்து பாட்டாக வருவ
தலங்கார பஞ்சக மெனவும் வழங்கும். எ-று. (32)
 
283. 	பாப்பொரு ளளவாதி பலபெய ருளபிற.
 
     (இ-ள்.) செய்யுட்குப் பொதுவிதி யுணர்த்துதும். மேற்கூறியவற்றை யன்றிப்
பாவானும் பொருளானு மளவானு முதலிய காரணங்களானும் வேறுபடப்
பெயர்பெறுவனவுள வெனக்கொள்க. அங்ஙன மாசிரியமாலை, வெண்பாமாலை, முதலிய
பலவும் பாவாற் பெயரைப் பெற்றன. தாராகிய கொடிப் படையைப் பாடலிற்
றார்மாலையுங் கார்முதலாறு பருவங்களைப் பாடலிற் பருவமாலையு மினியவு மின்னாவும்
பாடலி லிருமொழிமாலையு முதலிய பலவும் பொருளாற் பெயரைப் பெற்றன.
நயனப்பத்தும், பயோதரப்பத்து, மினியநாற்பது மின்னாநாற்பது முதலிய பலவும்
பொருளானு மளவானும் பெயரைப் பெற்றன. சூத்திரத்துட் பிறவென்ற மிகையான்
மற்றைப் பிரபந்தங்கள் வருமாறு.
 
     ஐந்திணைச் செய்யுள்:- புணர்தன் முதலிய வைந்துரிப் பொருளும் விளங்கக்
குறிஞ்சி முதலிய வைந்திணையினையுங் கூறுவது.
 
     வருக்கக் கோவை:- அகர முதலாகிய வெழுத்துவருக்க மொழிக்கு முதலா
மெழுத்து முறையே காரிகைத் துறைப் பாட்டாகப் பாடுவது.
 
     அநுராக மாலை:- தலைவன் கனவின்க ணொருத்தியைக் கண்டு கேட்டுண் டுயிர்த்
தினிமையுறப் புணர்ந்ததைத் தன்னுயிர்ப் பாங்கற் குரைத்ததா கநேரிசைக்
கலிவெண்பாவாற் கூறுவது.
	



	


203


	பெருமகிழ்ச்சி மாலை:- தலைவியி னழகு குண மாக்கஞ் சிறப் பினைக் கூறுவது.
 
     மெய்க்கீர்த்திமாலை:- சொற் சீரடி யென்னுங் கட்டுரைச் செய்யுளாற் குலமுறையிற்
செய்த கீர்த்தியைக் கூறுவது.
 
     காப்பு மாலை:- தெய்வங் காத்தலாக மூன்று செய்யுளானும் ஐந்து செய்யுளானும்
ஏழ்செய்யுளானும் பாடுவது.
 
     வேனின் மாலை:- வேனிலையு முதிர் வேனிலையுஞ் சிறப்பித்துப் பாடுவது.
 
     வசந்த மாலை:- தென்றலை வருணித்துப் பாடுவது.
 
     தாரகை மாலை:- அருந்ததிக் கற்பின் மகளிர்க்குள்ள வியற்கைக் குணங்களை
வகுப்பாற் கூறுவது. தூசிப்படையி னணியைப் புகழ்ந்த வகுப் பென்பாரு முளர்.
 
     உற்பவ மாலை:- திருமால் பிறப்புப் பத்தனையு மாசிரிய விருத்தத்தாற் கூறுவது.
 
     தண்டக மாலை:- வெண்பாவான் முந்நூறு செய்யுட் கூறுவது. இதுவே
புணர்ச்சிமாலை யெனவும் படும்.
 
     வீரவெட்சிமாலை:- சுத்த வீரன் மாற்றாரூரிற் சென்ற பசுநிரைகோடற்கு வெட்சிப்
பூமாலை சூடி யவ்வண்ணம் போய் நிரைகவர்ந்துவரி லவனுக்கு முன்பு தசாங்கம்
வைத்துப் போய் வந்த வெற்றிப் பாடுவது.
 
     வெற்றிக்கரந்தை மஞ்சரி:- பகைவர் கொண்ட தந்நிரை மீட்போர் கரந்தைப்
பூமாலை சூடிப் போய் மீட்பதைக் கூறுவது.
 
     போர்க்கெழுவஞ்சி:- மாற்றார்மேற் போர் குறித்துப் போகின்ற வய வேந்தர்
வஞ்சிப் பூமாலை சூடிப் புறப்படும் படையெழுச்சிச் சிறப்பை யாசிரியப்பாவாற் கூறுவது.
 
     காஞ்சி மாலை:- மாற்றா ரூர்ப்புறத்துக் காஞ்சிப்பூமாலை குடியூன்றலைக் கூறுவது.
 
     நொச்சிமாலை:- புறத்தூன்றிய மாற்றார்க் கோடலின்றி நொச்சிப் பூ மாலைசூடித்
தன் மதில்காக்குந் திறங்கூறுவது.
 
     உழிஞைமாலை:- மாற்றார தூர்ப்புறஞ்சூழ வுழிஞைப் பூமாலை சூடிப் படை
வளைப்பதைக் கூறுவது.
 
     தும்பை மாலை:- மாற்றாரொடு தும்பைப் பூமாலை சூடிப் பொருதுவதைக்கூறுவது.
 
     வாதோரணமஞ்சரி:- கொலைபுரி மதயானையை வயப்படுத்தி யடக்கின வர்கட்கும்,
எதிர்பொரு களிற்றை வெட்டி யடக்கினவர்கட்கும், பற்றிப் பிடித்துச் சேர்த்தவர்கட்கும்,
வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப் பாவாற் றொடுத்துப் பாடுவது.
	


204


	எண் செய்யுள்:- பாட்டுடைத்தலைவன் தூரினையும் பெயரினையும் பத்துமுத
லாயிர மளவும்பாடி யெண்ணாற் பெயர் பெறுவது.
 
     ஒலியலந்தாதி:- பதினாறுகலை யோரடியாக வைத்திங்ஙன நாலடிக் கறுபத்து
நாலுகலை வகுத்துப் பல சந்தமாக வண்ணமுங் கலைவைப்புந் தவறாம லந்தாதித்து
முப்பது செய்யுட் பாடுவது. சிறுபான்மை யெட்டுக் கலையானும் வரப் பெறும். அன்றியும்,
வெண்பா - அகவல் - கலித்துறை - ஆகிய விம்மூன்றையும் பப்பத்தாக வந்தாதித்துப்
பாடுவதுமாம்.
 
     பதிற்றந்தாதி:- பத்துவெண்பா பத்துக்கலித்துறைப் பொருட்டன் மை தோன்ற
வந்தாதித்துப் பாடுவது.
 
     நூற்றந்தாதி:- நூறுவெண்பாவினாலேனு நூறுகலித்துறையினாலேனு மந்தாதித்
தொடையாற் கூறுவது.
 
     வளமடல்:- அறம்பொரு ளின்பமாகிய வம்முக் கூறுபாட்டின் பய னை யெள்ளி,
மங்கையர் திறத்துறுங் காமவின்பத்தினையே பயனெனக் கொண்டு, பாட்டுடைத்
தலைமகனியற் பெயர்க்குத் தக்கதை யெதுகையாக நாட்டி யுரைத் தவ்வெதுகை படத்
தனிச் சொல்லின்றி யின்னிசைக் கலி வெண்பாவாற் றலைமக னிரந்து குறைபெறாது
மடலேறுவதா யீரடி யெதுகை வரப்பாடுவது.
 
     கண்படைநிலை:- அரசரு மரசரைப்போல்வாரு மவைக்கணெடிது வைகியவழி
மருத்துவரு மமைச்சரு முதலியோ ரவர்க்குக் கண்டுயில் கோ டலைக் கருதிக் கூறுவது.
 
     துயிலெடை நிலை:- தன் வலியாற் பாசறைக் கண்ணொரு மனக்கவற்சி யின்றித்
துயின்ற வரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் துயி லெழுப்புத லாகப்
பாடுவது.
 
     பெயரின்னிசை:- பாட்டுடைத் தலைவன் பெயரினைச் சார இன்னி சை
வெண்பாவாற் றொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுவது.
 
     ஊரின்னிசை:- பாட்டுடைத் தலைவனூரினைச்சார வின்னிசை வெ ண்பாவாற்
றொண்ணூறேனு மெழுபதேனு மைம்பதேனும் பாடுவது.
 
     பெயர் நேரிசை:- பாட்டுடைத் தலைவன் பெயரினைச்சார நேரிசை வெண்பாவாற்
றொண்ணூறேனு மெழுபதேனு மைம்பதேனும் பாடுவது.
 
     ஊர் நேரிசை: பாட்டுடைத் தலைவ னூரினைச்சார நேரிசை வெண்பாவாற்
றொண்ணூறேனு மெழுபதேனு மைம்பதேனும் பாடுவது.
 
     ஊர் வெண்பா:- வெண்பாவாலூரைச் சிறப்பித்துப் பத்துச்செய்யுட் கூறுவது.
 
     விளக்குநிலை:- வேலும் வேற்றலையும் விலங்கா தோங்கியவாறு போலக்
கோலொடு விளக்கு மொன்றுபட் டோங்குமா றோங்குவதாகக் கூறுவது.
	


205


	 புறநிலை:- நீவணங்குந் தெய்வ நின்னைப் பாதுகாப்ப நின்வழி வழிமிகுவதாக
வெனக் கூறுவது.
 
     கடைநிலை:- சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந் தீர வாயில்
காக்கின்றவனுக் கென் வரவினைத் தலைவர்க் கிசையெனக் கடைக்கணின்று கூறுவது.
 
     கையறு நிலை:- கணவனொடு மனைவி கழிந்துழி யவர்கட்பட்ட வழிவுப்
பொருளெல்லாம் பிறர்க்கறிவுறுத்தித் தாமிறந்து படாதொழிந்த வாயத்தாரும் பரிசில்
பெறும் விறலியருந் தனிப் படருழந்த செயலறுநிலையைக் கூறுவது.
 
     தசாங்கப்பத்து:- நேரிசை வெண்பாவாலரசன் படைத்த தசாங்க த்தினைப் பத்துச்
செய்யுளாற் கூறுவது.
 
     தசாங்கத்தயல்:- அரசன் றசாங்கத்தினை யாசிரிய விருத்தம் பத்தி னாற்பாடுவது.
 
     அரசன் விருத்தம்:- பத்துக் கலித்துறையு முப்பது விருத்தமுங் கலித்தாழிசையு
மாக மலை - கடல் - நாட்டு - வருணனையும், நில - வருணனையும், வாண்மங்கலமும்,
தோண் மங்கலமும் பாடிமுடிப்பது. இது முடிபுனைந்த வேந்தற்காம.
 
     நயனப்பத்து:- கண்ணினைப் பத்துச் செய்யுளாற் கூறுவது.
 
     பயோதரப் பத்து:- முலையினைப் பத்துச் செய்யுளாற் கூறுவது.
 
     கைக்கிளை:- ஒருதலைக்காமத்தினை யைந்து விருத்தத்தாற் கூறுவது. அன்றி
வெண்பா முப்பத்திரண்டு செய்யுளாற் கூறுவதுமாம்.
     மங்கலவள்ளை:- உயர்குலத் துதித்த மடவரலை வெண்பா வொன்பதாலும்
வகுப்பொன்பதாலும் பாடுவது.
     தூது:- ஆண்பாலும் பெண்பாலு மவரவர் காதல் பாணன் முதலிய வுயர்திணை
யோடுங் கிள்ளை முதலிய வஃறிணை யோடுஞ் சொல்லித் தூது போய் வாவெனக்
கலிவெண்பாவாற் கூறுவது.
 
     நாற்பது:- காலமு மிடமும் பொருளுமாகிய விவற்று ளொன்றனை நாற்பது
வெண்பாவாற் கூறுவது.
 
     குழமகன்:- கலிவெண்பாவான் மாதர்கடங்கையிற் கண்ட விளைமைத்தன்மையுடைய
குழமகனைப் புகழ்ந்து கூறுவது.
 
     தாண்டகம்:- இருபத்தேழெழுத்து முதலாக வுயர்ந்த வெழுத்தடி யினவா
யெழுத்துங் குருவு மிலகுவு மொத்து வந்தன. அளவியற் றாண் டக மெனவும்,
எழுத்தொவ்வாது மெழுத்தல கொவ்வாதும் வந்தன அள வழித்தாண்டக மெனவும் படும்.
 
     பதிகம்: ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுளாற் கூறுவது.
	


206


	 சதகம்:- அகப்பொரு ளொன்றன் மேலாதல் புறப்பொரு ளொன்
றன் மேலாதல் கற்பித்து நூறு செய்யுட் கூறுவது.
 
     செவியறிவுறூஉ:- பொங்குத லின்றிப் புரையோர் நாப்பணவிதல் கடனென
வவையடக் கியற் பொருளுற வெண்பா முதலு மாசிரிய மிறு தியுமாகக் கூறுவது.
 
     பவனிக்காதல்:- உலாக்காட்சியா லெய்திய காமமிக்கா லவை பிற ரொடு முரைத்து
வருந்துவது.
 
     குறத்திப்பாட்டு:- தலைவன் பவனி வரவு, மகளிர் காமுநுதல் மோகினி வரவு,
உலாப்போந்த தலைவனைக் கண்டு மயங்கல், திங்கள் தென்றன் முதலியவுவாலம்பனம்
பாங்கியுற்ற தென்னென வினவல், தலைவி பாங்கியோ டுற்றது கூறல், பாங்கி
தலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி
பாங்கியைத் தூது வேண்டல், தலைவி பாங்கியொடு தலைவனடையாளங் கூறல்,
குறத்திவரவு, தலைவி குறத்தியை மலைவள முதலிய வினவல், குறத்தி மலைவள
நாட்டுவள முதலிய கூறல், தலைவன் றலவளங் கிளைவள முதலிய கூறல், குறி சொல்லி
வந்தமை கூறல், தலைவி குறி வினவல், குறத்தி தெய்வம் பராவல், குறி தேர்ந்து
நல்வரவு கூறல், தலைவி பரிசிலுதவி விடுத்தல், குறவன் வரவு புள்வரவு கூறல், கண்ணி
குத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடு குறத்தி
யடையாளங் கூறல், குறவன் குறத்தியைக் கண்ணுறல், குறவனணி முதலிய கண்டையுற்று
வினவலு மாண்டாண்டு குறத்தி விடை கூறலுமாகக் கூறல், பெரும்பான்மையு மிவ்வகை
யுறுப்புக்களால் அகவல் - வெண்பா - தரவு - கொச்சகம் - கலித்துறை - கழிநெடில்
விருத்தம் - கலி விருத்தம் - இச்செய்யு ளிடைக்கிடை கூறிச் சிந்து முதலிய நாடகத்
தமிழாற் பாடுவது.
 
     உழத்திப் பாட்டு:- கடவுள் வணக்க முறையே மூத்த பள்ளி யிளையபள்ளி
குடும்பன் வரவோ டவன்பெருமை கூறல், முறையே யவர் வரலாறு, நாட்டுவளன்,
குயிற்கூக்கேட்டல், மழை வேண்டிக் கடவுட் பரவல், மழைக்குறியோர்தல், ஆற்றின்வரவு,
அதன் சிறப்புக் காண்டல், இவற்றிற் கிடையிடை யகப்பொருட் டுறையுங் கூறிப்
பண்ணைத் தலைவன் வரவு, பள்ளிக ளிருவர் முறையீடு, இளையாளை யவனுரப்பல்,
பள்ளன் வெளிப்படல், பண்ணைச் செயல் வினவல், அவனது கூறல், ஆயரை
வருவித்தல், அவர் வரவல், அவர் பெருமை கூறல், மூத்த பள்ளி முறையீடு, குடும்பன்
கிடையி லிருந்தான்போல வரல், அவனைத் தொழுவின் மாட்டல், அவன் புலம்பல்,
மூத்த பள்ளி யடிசிற்கொடுவரல், அவனவ ளொடு கூறல், அவனவளை மன்னித்தல்
கேட்க வேண்டல், அவண் மறுத்தல், அவன் சூளுறல், அவளவனை மீட்கவேண்டிப்
பண்ணித்தலைவனைப் பரவல், விதை முதலிய வளங்கூறல், உழவருழல், காளை
வெருளல்
	


207


	அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவனெழுந்துவித்தல், அதைப்
பண்ணைத் தலைவர்க் கறிவித்தல், நாற்று நடல், விளைந்தபிற்செப்பஞ் செயல்,
நெல்லளத்தல், மூத்தபள்ளி முறையீடு, பள்ளிகளுளொருவர்க் கொருவ ரேசலன
விவ்வுறுப்புக்களுறப் பாட்டுடைத் தலைவன் பெருமை யாங் காங்கு தோன்றச் சிந்தும் -
விருத்தமும் - விரவிவர விவற்றாற் பாடுவது.
 
     கடிகை வெண்பா:- தேவரிடத்து மரசரிடத்து நிகழுங் காரியம் கடிகை யளவிற்
றோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசைவெண்பா வாற் கூறுவது.
 
     முதுகாஞ்சி:- இளமை கழிந்தறிவு மிக்கோ ரிளைமை கழியாத வறிவின் மாக்கட்குக்
கூறுவதாம்.
 
     இயன்மொழி வாழ்த்து:- இக்குடிப் பிறந்தோர்க் கெல்லா மிக்குணமியல் பென்று
மவற்றை நீயு மியல்பாக வுடையையென்று மின்னோர்போல நீயுமியல்பாக வீயென்று
முயர்ந்தோ ரவனை வாழ்த்துவதாகக் கூறுவது.
 
     பெருமங்கலம்:- நாடோறுந் தான் மேற்கொள்கின்ற சிறை செய் தன் முதலிய
செற்றங்களைக் கைவிட்டுச் சிறைவிடுதன் முதலிய சிறந்த தொழில்கள் பிறத்தற்குக்
காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணி யைக் கூறுவது. எ-று. (33)
 
284. 	முதன்மொழிப் பொருத்தந் தந்திடுங் காலை
மங்கலஞ் சொல்லெழுத்துத் தானம் பாலுணாக்
கங்கில் வருணநாட் கதிகண மீரைந்தே.
 
     (இ-ள்.) செய்யுட் கெல்லாம் பொதுவாய்ச் சில விலக்கணங்களை யுணர்த்தத்
தொடங்கினோம். செய்யுட் கெல்லா முதன் மொழியிடத்துப் பலவகைப் பொருத்தம்
வேண்டுவதாக விதித்தார் முன்னோர். அவையே மங்கலம், சொல், எழுத்து, தானம்,
பால், உணா, வருணம், நாள், கதி, கணம், எனப் பத்து வகைப் படும். இவற்றைத்
தனித்தனி விளக்குதும். பொருத்தவியல். - "பகர்செய்யுண் மங்கலஞ் சொல்லெழுத்துத்
தானம் பாலுண்டி வருணநாட் கதியே யென்றாப், புகரில் கணமெனப் பத்தும் பிறங்கு
கேள்விப் புலவர் புகழ்முன் மொழிக்குப் புகல்வர் செம்பொற், சிகர கிரியெனப்
பணைத்துப் புடைத்து விம்மித் திரண்டெழுந்து வளர்ந்திளகிச் செறிந்த கொங்கைத், தகர
மலர்க்குழற் கருங்கட் குமுதச் செவ்வாய்ச் சரிவளைக் கைக்கொடி யன்னத் தயங்கு
மாதே." இதுமேற்கோள். எ-று. (34)
 
285. 	மங்கலப் பொருத்தமே கங்கை மலைநிலங்
கார்புயல் பொன்மணி கடல்சொல் கரிபரி
சீர்புக ழெழுத்தலர் திங்க டினகரன்
றேர்வய லமுதந் திருவுல காரண
நீர்பிற வருமுத னிலைச்சொல் லியல்பே.
	


208


	 (இ-ள்.) மங்கலச் சொற்பொருத்தமாமாறுணர்த்துதும். மங்கலப் பொருத்தம்:-
கங்கை, மலை, நிலம், கார், புயல், பொன், மணி, கடல், சொல், கரி, பரி, சீர், புகழ்,
எழுத்து, அலர், திங்கள், தினகரன், தேர், வயல், அமிழ்தம், திரு, உலகு, ஆரணம், நீர்,
என்று சொல்லப் பட்ட விருபத்தினாற்சொல்லு மித்தொடக்கத்தன பிறவு மங்கலச்சொல்,
எ-ம். செய்யுண் முதற்சொல், எ-ம். பெறும். பிறவென்ற மிகையாற் சொன்ன வற்றின்
பயனுள மற்றைத் திரிசொல் லெல்லா மேற்கு மென்றுணர்க. காரென்பதற்கு:-முகில்,
மழை, குயின், செல், கனம், மஞ்சு, எனினு மொக்கும். இவ்வகைச் சொல்லி னொன்றே
முதற் சொல்லாக விணையா தாயின் மங்கலச் சொல்வழு வெனப்படும். அங்ஙனங்
கம்பர் "உலகம் யாவையுந் தாமுள வாக்கலு" மென்றார். திருவள்ளுவர் 'அகர முதல
வெழுத் தெல்லா' மென்றார். பிறவுமன்ன. ஆயினு மச்சொற்றாமே முதல் வாராமையு
மவற்றவற் றடுக்கிய பலவடைமொழியே வரினு மேற்கு மென்றுணர்க. நன்னூலி
லுலகமுதல் வாராமல் 'மலர்தலை யுலக' மென்ற தாகவும், சிந்தாமணியின் 'மூவா முதலா
வுலக மொரு மூன்று' மென்றதாகவும், நைடதத் துண் மழை முதல் வாராமற் 'கருவி
மாமழை' யென்றதாகவும், காரிகையின் மலர்முதல் வாராமற் 'கந்தமடிவிற் கடிமல' ரென்ற
தாகவுங் கண்டு முதற் சொல்லாக மங்கலச்சொற் கடைமொழியே வந்தவாறு காண்க. -
பொருத்த வியல். - "மாமணி தேர்புக ழமுத மெழுத்துக் கங்கை மதிபரிதி களிறு பரி
யுலகஞ் சீர்நாட்,பூமலை கார்திருக் கடனீர் பழனம் பார்சொற் பொன்றிகிரி பிறவு
முதன்மொழிச் சீர்க்காகு, நாம வகையுளி சேர்தல் பொருளதின்மை நலமிலதாய் வைத்தல்
பலபொருளாய்த் தோன்ற, லாமினிய சொல்லீறு திரிதல்போலு மாதி மொழிக் காகாவா
நந்த மாமே." இது மேற்கோள். எ-று, (35)
 
286. 	சொல்லின் பொருத்தஞ் சொல்லுங் காலை
யரிதுணர் சொல்லு மருந்திரி சொல்லுந்
திரிபுடைச் சீருந் தீதா முதற்கே.
 
     (இ-ள்.) சொற்பொருத்தமாமாறுணர்த்துதும். செய்யுண் முதற்கண் மங்கலச்
சொல்லே வரினுங் கற்றோராலு மெளிதிற் புலப்படாச் சொல்லு மையமாகப் பலபொருள்
குறித்த வரி பயன்றிரி சொல்லு முதற்சீ ரீற்றெழுத்தே சந்திவகையாற் றிரிந்த
சொல்லுமுடையசீரு முதற்கண்வரின் வழுவா மெனக் கொள்க. ஆகையிற் 'கடற வழுலக'
மெனினும், 'தேருரு டிரிதரு' மெனினு மீற்றுத் திரிபினா லாகா. 'சீரரி மருவுந் திருநிழற்
சோலை' யெனிலரி யென்பது சிங்கமோ, வண்டோ, பன்றியோ, யாதோ வென்று
தோன்று மையத் தாலாகா. - பாட்டியல். - வெண்பா. "வகையுளி சேர்தல் வனப்பின்
றாயநிற்ற, றொகையார் பொருள் பலவாய்த் தோன்ற, றகைவில், பொரு ளின்மையீறு
திரிதலே போல்வ, தருமுதற் சீர்ச் சொற்காகுந் தப்பு." இது மேற்கோள். பிறவுமன்ன.
எ-று. (36)
	


209


287. 	எழுத்தின் பொருத்தமே யெழுவாய்ச் சீர்க்கண்மூன்
றைந்தே ழொன்பது வியநிலை நன்றா
மிரண்டுநான் காறெட்டுச் சமநிலை வழுவாம்.
 
     (இ-ள்.) எழுத்தின் பொருத்த மாமாறுணர்த்துதும். முதற்சீராக வொற்று முயிரு
முயிர்மெய்யு மொற்றைப்பட மூன்று மைந்து மேழுமாக வரி னதுவியநிலையாகி
நல்லதென்ப. இரண்டு நான்கு மாறு மெட்டு மாக வரி னது சமநிலையாகி வழுவா
மென்ப. ஆயினுஞ் சிந்தாமணியின் மூவா வென்றிரண் டெழுத்து வந்தவாறுகாண்க.
ஒற்றுமுட்படக்கொண்ட காரணம் யாதோ வெனின் முதற்கண் மூவசை மிக்கனசீர் வாரா
வென்றமை யானு மூவசைச்சீரு மொற்றொழித் தொன்பதெழுத்தாக வாராவென்றமை
யானு மொற்று முட்படக்கொண்டவாறுகாண்க. - பாட்டியல். - "தப்பாத மூன்றைந்
தேழொன்பான் றவறில்வென், றொப்பா முதற்சீர்க் குரைசெய்வர் - செப்புங்காற்,
றண்டாத நாலாறெட் டாகா தவிர்கென்று, கொண்டா ரெழுத்தின் குறி." இது மேற்கோள்.
எ-று. (37)
 
288. 	தானமே,
குறினெடி றம்முனி னைந்துஇ உவ்வுடன்
ஐ ஒளவுஞ் சேர்புழி யைந்தா மவற்றுட்
டலைமக னியற்பெயர் தான முதலாப்
பாலன் குமர னிராசன் மூப்பு
மரண முறையெண்ணி வருமுத லெழுத்தின்
றானமீற் றிரண்டெனிற் றவிர்க வென்ப.
 
     (இ-ள்.) தானப் பொருத்த மாமாறுணர்த்துதும். குற்றெழுத் தைந் தையு மவற்றவற்
றொத்த நெடிலையுங் கூட்டி இவ்வருந் தானத்தில் ஐயும் உவ்வருந் தானத்தில் ஒளவுஞ்
சேர்த்தால், ஐந்தானமாகும். அவையே அ - ஆவும், இ-ஈ-ஐயும், உ-ஊ-ஒளவும்,
எ-ஏயும், ஒ-ஓவு மென் றிவை யுயிராக வரினு முயிர் மெய்யாக வரினு மெழித்தின்றான
மைந்தெனக் காண்க. இவற்றைக் கொள்ளுமாறு பாட்டு நாயக னியற்பெயர்
முதலெழுத்தின் றான முதற்கொண் டெண்ணி, முறையே யைந்து தானங்களுக்குப்
பாலன், குமரன், இராசன், மூப்பு, மரண, மெனு மைம்பெய ரிட்டு, மங்கலச் சொன்
முதலெழுத்து மூப்பெனுந் தானத்திலு, மரணமெனுந் தானத்திலும் வரின் தகா தென்று
தவிர்தல் வேண்டு மென்மனார் புலவர். அங்ஙன மிராமாயண நாயக னிராம னாகையில்
இ-வருந் தானம் பாலதானமாகக் கொண்டு கம்ப ரெடுத்த மங்கலச் சொல்லெனு
முலகத்தின் முதலெழுத்துக் குமரதான மாயிற்றெனக் கொள்க. - தேம்பாவணி. - நாயகன்
வள னாகையில் அ-வருந் தானம் பால தானமாகிச் சீரிய வெனு முதற் சொற் பார்க்கிற்
குமரதான மாகவும், உலக மெனு மங்கலச் சொற் பார்க்கி லிராச தானமாகவும்
	
	


210


	வந்த வாறு காண்க. - பாட்டியல். - "குறிலைந்துந் தன்னெடில்கொண் டி உ ஐ ஒள
சேர்த், தறிபால னாதியா வைந்து மிறைவன்பேர், முன்னெழுத்துப் பாலனில்
வைத்தெண்ணி மூப்பே மரண, மென்னுமிவை தீதென்றே யெண்." இது மேற்கோள்.
எ-று. (38)
 
289. 	பாலெனக்,
குறிலா ணெடில்பெண் மற்றுயி ராணுயிர்
மெய்பெண் ணென்மரு முளரே யவைதம்
பாவியல் கெடினுமா மற்றவை யலியே.
 
     (இ-ள்.) பாற்பொருத்த மாமாறுணர்த்துதும். குற்றெழுத் தெல்லா மாண்பாலெனவு
நெட்டெழுத்தெல்லாம் பெண்பாலெனவுங் கொள்க. அன்றியு முயிரெலா மாண்பாலெனவு
முயிர்மெய்யெல்லாம் பெண்பாலெனவுங் கொள்வார் பிங்கலந்தை முதலிய நூலார்.
அவற்றுண் மாந்தரைப்புகழ வாண்பாலெழுத்து மாதரைப்புகழப் பெண்பாலெழுத்து
முதற்கண்வரிற் பாலொன்றிச் சிறப்பாமாயினு மவையே மயங்கிவரினு மிழுக்கா.
ஒற்றெழுத்து மாய்தமு முதற்கண்வாரா. அவை யலியெனப்படும். - பாட்டியல். -
"எண்ணுங் குறிலா ணியைந்த நெடிலெல்லாம், பெண்ணாகு மொற்றாய்தம் பேடாகும் -
பெண்ணினோ, டாண்புணர்ச்சிக் கவ்வ வெழுத்தே மயங்கினுமா, மாண்பில் பேடென்றார்
மதித்து." இது மேற்கோள் எ-று. (39)
 
290. 	உணவெண்,
அ இ உ எ க ச த ந ப ம வ வென்
றமுதெழுத் தாகி யாதிச் சீர்க்குந்
தசாங்கத் தயற்குந் தகுவன வென்ப
யா யோ ரா ரோ லா லோ வவற்றொற்று
மளபெடை மக்குற ளாய்தநஞ் செழுத்தே.
 
     (இ-ள்.) உணவுப் பொருத்த மாமாறுணர்த்துதும். கூறிய நாலுயிரு மேழொற்றும்
அமுதெழுத் தெனப்படும். இவை முதற்சீர்க்கு மலைமுதன் மேற்காட்டிய
தசாங்கத்தினயற்குமாகும். அன்றியும், யா, யோ, ரா, ரோ, லா, லோ, ய, ர, ல, என்னு
மூவொற் றெழுத்து மிரண்டளபெடையு மகரக் குறுக்கமு மாய்தமு மெனவிவை
நஞ்செழுத் தாகி முதற்சீர்க் கண்ணுந் தசாங்கத்தி னயற்கு மாகா வென்மனார் புலவர். -
பாட்டியல். - "மதித்த க ச த ந ப மவ்வொடு வவ்வு, முதித்தமைந்த நாற்குற் றுயிருந் -
துதித் தமுதென், றாதி மொழிக்குந் தசாங்கத் தயலுக்குந், தீதிலவே யென்றார் தெரிந்து."
இது மேற்கோள். எ-று. (40)
 
291. 	வருணப் பொருத்தமே வருமுயி ரடங்கலும்
கம்முத லாறுங் கைசிகர்க் காகுந்
	


211


	தம்முத லாறுந் தகுமன் னவர்க்கே
ல வ ற ன வணிகர்க் காம்ழளச் சூத்திரர்க்கே
யிம்முறை நஞ்செழுத் தியலினு மிழுக்கா.
 
     (இ-ள்.) வருணப் பொருத்த மாமாறுணர்த்துதும். பன்னீருயிரும் க்-ங்-ச்-ஞ்-ட்-ண்-
என்னு மாறொற்று மந்தணர்க்கெனவும், த்-ந்-ப்-ம்-ய்-ர்- என்னு மாறொற்று
மரசர்க்கெனவும், ல் - வ் - ற் - ன் என்னு நான்கொற்றும் வணிகர்க்கெனவும், ழ் - ள்
- என்னு மீரொற்றுஞ் சூத்திரர்க்கெனவுங் குறித்தார் புலவர். இம்முறை யோடு நஞ்சென
விலகிய வெழுத்து வரினும் வழுவன்றெனக் கொள்க. - பொருத்தவியல். - "தீதி லுயி
ரீராறு முதலொற் றாறுந் திருமறையோர்க் கடைவே யோராறும் வேந்தர்க், கேதி ல வ ற
னக்கள் வணிகர்க்குமற்றை யெழுத்துளவை சூத்திரர்க்கா மியன்ற சாதி, யோதி மன்றன்
படைப்புயிரே யரன்மால் செவ்வே ளும்பர்கோன் பரிதிமதி மறலி நீர்க்கோன், காத
லளகேச னிவரிவ் விரண்டாய்க் கம்மு தன் மூவா றொற்றுங் கருதிச் செய்தார்."
இதுமேற்கோள். எ-று. (41)
 
292. 	நாளின் பொருத்த நவிலுங் காலை
நான்கு மைந்து மூன்றுமாய்ப் பிரியுயிர்
கார்த்திகை பூராட முத்திரா டம்மே
கவ்வரி நான்கிரண் டிருமுறை மூன்றிவை
யோண மாதிரை முறையிரு பூசமே
சவ்வரி நான்கைந்துந் தகுங்கடை மூன்றென
வவ்வவை யிரேவதி யசுவதி பரணியே
ஞவ்வரி ஞாஞே ஞொவ்வா மவிட்டமே
தவ்வரி யிரண்டேழு தற்கடை மூன்று
சோதி விசாகந் தூயோனிச் சதையமே
நவ்வரி யாறு நண்ணு மிருமூன்றும்
பொற்பனை கேட்டை பூரட் டாதியே
பவ்வரி நான்கும் பிற்பக ரிரண்டா
றெனவுத்திர மத்த மொளிசித் திரையே
மவ்வரி யாறு மற்றிரு மூன்று
மகமா யிலிய மகந்தொடர் பூரமே
யயாவுத் திரட்டாதி யூயோ மூலமே
வவ்வரி நந்நான்கு ரோகணி யிந்திர
னவ்வவ் வெழித்திற் கவ்வவை குறித்தபின்
னாண்மூ வொன்பதா நாயக னியற்பெயர்
நாண்முதன் மங்கல நவில்சொல் லீறா
	


212


	வெண்ணி யிரண்டு நான்காறெட் டொன்பதா
மன்றி யொன்றுமூன் றைந்தே ழாகா.
 
     (இ-ள்.) நாட்பொருத்தமாமாறுணர்த்துதும். மொழி முதற்கண் வரு மெழுத்திற்
கசுவதிமுத லிருபத்தேழு நட்சத்திரங்களைப் பகுத்தார் புலவர். அவற்றுள் அ, ஆ, இ,
ஈ, கார்த்திகையன; உ, ஊ, எ, ஏ, ஐ, பூராடத்தன; ஒ, ஓ, ஒள, உத்திராடத்தன; க கா,
கி, கீ, திருவோணத்தன; கு, கூ, திருவாதிரையன; கெ, கே, கை, புனர்பூசத்தன; கொ,
கோ, கௌ,பூசத்தன; ச, சா, சி, சீ, இரேவதியன; சு, சூ, செ, சே, சை, அசுவதியன; சொ,
சோ, சௌ, பரணியன; ஞ, ஞா, ஞெ, ஞொ, அவிட்டத்தன; த, தா, சோதியன; தி, தீ,
து, தூ, தெ, தே, தை, விசாகத்தன; தொ, தோ, தௌ, சதையத்தன; ந, நா, நி, நீ, நு, நூ,
அனுடத்தன; நெ, நே, நை, கேட்டையன; நொ, நோ, நௌ, பூரட்டாதியன; ப, பா, பி,
பீ, உத்திரத்தன; பு, பூ, அத்தத்தன; பெ, பே, பை, பொ, போ, பௌ, சித்திரையன; ம,
மா, மி, மீ, மு, மூ, மகத்தன; மெ, மே, மை, ஆயிலியத்தன; மொ, மோ, மௌ,
பூரத்தன; ய, யா, உத்திரட்டாதியன; யு, யோ, மூலத்தன; வ, வா, வி, வீ, உரோ
கணியன; வெ, வே, வை, வௌ, மிருகசீரிடத்தன; இங்ஙனம் பகுத்தவற்றைக் கொள்ளு
மாறுபாட்டு நாயக னியற்பெய ராதி யெழுத்தினாளே முதற்கொண் டொன்ப தொன்பதாக
வெடுத்த மங்கலச் சொன் முதலெ ழுத்து நாளளவு மெண்ணி யிரண்டு நான்குமாறு
மெட்டு மொன்பதுங்கண் டா னல்லன வெனவு, மொன்று மூன்று மைந்து
மேழுங்கண்டாற்றீயன வெனவுங் கூறினார் புலவர். - விருத்தப் பாட்டியல் - "கருதுமுயி
ரடைவே நான் கைந்து மூன்றுங் கார்த்திகையே பூராட முத்திராட, முரணறு கவ்
வரியினான் கிரண்டு மூன்று மூன்றோண மாதிரையே புணர்தம் பூச, மிருமைகொள் சவ்
வரியினான்கைந்து மூன்று மிரேவதி யாம்பரி பரணி ஞகர மைந்தும், வருமவிட் டந்தகர
மிரண் டேழு மூன்றும் வளர்சோதி விசாகமே சதைய மன்னும். - சதிர்திகழ்
நவ்வினிலாறு மூன்று மூன்றுந் தரு மனுடங் கேட்டையே பூரட்டாதி, திதமிகு பவ்வரியி
னான்கிரண் டோடா றுத்திரமுதன் மூன்றா மவ்விலாறு மூன்று, மிதின்மூன்று மகமா
மாயிலியம் பூரம் ய யா வுத்திரட்டாதி யு யூ மூல, முதலிய வம்முத னான்கு மொழிந்த
நான்கு முரோகணியா மிருகசீ ரிடமாம் பேர் நாள்." இவை மேற்கோள். எ-று. (42)
 
293. 	கதியின் பொருத்த விதியைக் கூறில்
ஒவ்வொழி குறிலே றவ்வொழி வலியே
செவ்வி தாகுந் தேவர் கதியே
னவ்வொழி மெலியே நெடின்முத னான்கும்
வவ்வி லஃதாகு மக்கட் கதியே
ஒஓய ர ல ழ ற வும் விலங்கின் கதியே
ன வ ள ஐ ஒளவு நரகர் கதியே.
	


213


	 (இ-ள்.) கதிப்பொருத்த மாமாறுணர்த்துதும். அ, இ, உ, எ, க, ச, ட, த, ப, என
வொன்பதெழுத்துந் தேவர்கதி யெனவும்; ஆ, ஈ, ஊ, ஏ, ங, ஞ, ண, ந, ம, என
வொன்பது மக்கட்கதியெனவும்; ஒ, ஓ, ய, ர, ல, ழ, ற, என வேழும் விலங்கின்
கதியெனவும், ஐ, ஒள, வ, ள, ன, என வையந்து நரகர்கதி யெனவும் வழங்கும்.
இவற்றுட் டேவர்கதியு மக்கட் கதியு நல்லன வெனவு மற்ற விருகதி தீயன வெனவுங்
கொள்க. - வெண்பா. பாட்டியல். - "வேண்டுங் குறில்வன்மை யீறொழித்தால்
விண்ணோர்க்கா, மாண்டுநெடின் முதனான் கந்தமொழித் - தீண்டிய, மென்மையா
மக்கட் கிவையிரண்டு மெய்க்கதிக்கு, நன்மையா முன்மொழிக்கு நாட்டு. - நாட்டிய ஒ ஓ
ய ர ல ள நல்வன்மைக், கீட்டிய வந்தமிவை விலங்காங் - காட்டா, தொழித்த நரகர்க்
கென்றோதி னாரின்ன, வெழுத்தாகா வாதி யிடத்து." இவை மேற்கோள். எ-று. (43)
 
294. 	கணமியல் பொருத்தமே கணமெனுஞ் சீரினுண்
முன்ன ரிந்திரன் முன்னிரை நிலனே
நிரைநேர் நேர்மதி நேர்நிரை நிரைநீ
ரிந்நாற் கணநன் றாமிவை முதற்சீர்க்கே
யிருவிளங் காய்முறை யந்தரஞ் சூரிய
னிருமாங் கனிமுறை வாயு தீயிவை
வருமுதற் சீர்க்கு வழுக்கண மென்ப.
 
     (இ-ள்.) கணப்பொருத்த மாமாறுணர்த்துதும். வடமொழியாற் கண மெனினந்
தென்மொழியாற் சீரெனினுமொக்கும். இவற்றுண் முதற்கண் வருஞ்சீர் தேமாங்காயாயி
னிந்திரகணமெனவும், கருவிளங் கனியாயி னிலக்கணமெனவும், புளிமாங்காயாயின்
சந்திரகணமெனவும், கூவிளங்க னியாயி னீர்க்கணமெனவும் வழங்கும். இந்நாற்கணமு
நல்லனவென்ப. அன்றியு முதற்கண்வருஞ்சீர் கருவிளங்காயாயி னந்தரகணமெனவுங்,
கூவிளங்காயாயிற் சூரியகணமெனவுந், தேமாங்கனியாயின் வாயுகணமெனவும்,
புளிமாங்கனியாயின் றீக்கணமெனவும் வழங்கும். இவை முதற்சீராகவ ரின்றீதென்பந்,
என்னை. "அந்தர கணமே வாழ்நாட் குன்றும். - சூரியகணமே வீரிய மகற்றும். -
வாயுகணமே செல்வ மழிக்கும். - தீயின் கணமே நோயை விளைக்கு மென்மனார்
சிலரே." ஆயினு மிவற்றை யிருள்வழி மதமென விதித்தார் வேதவழித் தெளிந்தா
ரெனக் கண்டுணர்க. அன்றியு மிலக்க ணமுறையே வடமொழி நூலில் வழங்கு
நடையாமொழியத் தென்மொழி நூலார் முதற்சீரா வியற்சீர்மிகவே வழங்குவா ரெனவுங்
கொள்க. விருத் தப்பாட்டியல். - "துறக்க மதிவான் பரிதி காய்ச்சீர் முன்னுஞ்சூழ்
காற்றுத்தீ நிலநீர் கனிச்சீர் பின்னு, நிறுத்துகண மிவையுமா மகவற் சீரி னேரிறும்
வெள்ளைச் சீர்நிரை வஞ்சிச்சீர், சிறப்புடை யவ்விரண்டுமாங் கணப்
	


214


	பேர் மற்றுந் திகழ யற்சீர்க் கயன்றிருக் கொக்கருடன் முன்னும், வெறு த்த பின்னுமா
மென்ப விறைவனாட்கு மேவு கணநாட் பொருத்தம் வே ண்டு மாலே. - ஆவது
மங்கலத் தேற்ற பரியாயச் சொல் லடை கொடுத்து முதற்சீருக் கெடுத்தல் செய்யுண்,
மேவு முதலிடை மங்கலச்சொல் வைத்தல் விதி யெழுத்துப் பால்வருண மயங்கு
மென்பர், வாவு மிருந்தியான முன்னோர் நூலின் மங்கலத் தானஞ்சு சிலவமுத மாகுந்,
தூவமுத மெனக் கதியிற் பழுது போமேற் றொடர்கலப் பாமிம்மரபின் றொடக்கஞ்
சொல்வாம்." - இவை மேற்கோள். எ-று. (44)
 
295. 	சாதி நிலநிறத் தகுநா ளிராசிகோ
ளோதின ராறு மொவ்வொரு பாவிற்கே
வெண்பா முதற்குல முல்லை வெண்மை
கார்த்திகை முதலேழுங் கடகம் விரிச்சிக
மயிலை மதிகுரு வழங்கு மியல்பே.
 
     (இ-ள்.) நாற்பாவிற்குச் சில விலக்கணங்களை யுணர்த்தத் தொடங்கினோம்.
மேற்கூறிய செய்யுளனைத்து மவற்றைப்போல்வன பிறவு மெல்லாம் வெள்ளை -
யாசிரியங் - கலி - வஞ்சி - யென நாற்பாவாலாயினு மவற்றினத் தாலாயினும் வழங்கு
மாகையின் முதற்பாவாகிய நான்கிற்குஞ் சிலவிலக்கணங்களை யுரைத்தார் முன்னோர்.
அவை யொருபயனு மொருகாரணமு மின்றி முன்னர் நிறுத்திய மதத்தி
லூன்றினவாயினும் பிறன்மதங்கூறவே தந்திரயுத்தியாகையி லவற்றைக்காட்டுதும்.
ஆகையில் வெண்பாமுதற் கொண் டவ்வவபாவிற்குரிய சாதியு - நிலமு - நிறமு - நாளு
- மிராசியுங் - கிரகமு - மென வாறிலக்கணப்பகுதி குறித்தார் முன்னுணர்ந்தோரெனக்
கொள்க. அவற்று ளந்தணர்சாதியு முல்லைநிலமும் வெள்ளைநிறமுங் கார்த்திகை
விருச்சிக மீனமென மூன்றிராசியுந் திங்கள் வியாழமென விருகிரகமும் வெண்
பாவிற்கியல்பெனக் கொள்க. எ-று. (45)
 
296. 	அகவற் கரச ரருங்குலங் குறிஞ்சி
குருதிமக முதற் கொண்டெழு மேட
மரிதனுச் செவ்வா யாதவ னியல்பே.
 
     (இ-ள்.) ஆசிரியப்பா வியல்புணர்த்துதும். அரசர்சாதியுங் குறிஞ்சிநிலமுஞ்
சிவப்புநிறமு மகம் பூர முத்திர மத்தஞ் சித்திரை சோதி விசாகமென வேழுநாளு
மேடஞ் சிங்கந் தனு வென மூன்றிராசியு ஞாயிறு செவ்வா யென விருகிரகமு மகவற்
கியல்பெனக் கொள்க. எ-று. (46)
 
297. 	கலிக்கே வணிகங் கழனி பொன்மை
குலாம்பனை முதலாறுங் குடமொடு மிதுனந்
துலாம்புதன் சனியெனத் தொக்கிவை யேற்கும்.
	


215


	 (இ-ள்.) கலிக்கியல் புணர்த்துதும். வணிகர்சாதியு மருதநிலமும் பொன்னினிறமு
மனுடங் கேட்டை மூலம் பூராட முத்திராடந் திருவோண மென வறுநாளு மிதுனந்
துலாங் கும்ப மென மூன்றிராசியும் புதன் சனி யென விருகிரகமுங் கலிப்பாவிற்
கியல்பெனக் கொள்க. எ-று. (47)
 
298. 	வஞ்சிக் கீறதியல் வருண நெய்த
லஞ்சன மவிட்ட மாதி யேழும்
விடைபெண் கலைபுகர் விடதர மியலுமே.
 
     (இ-ள்.) வஞ்சிக்கியல்பினை யுணர்த்துதும். சூத்திரர்சாதியு நெய்தநிலமுங்
கரியநிறமு மவிட்டஞ் சதையம் பூரட்டாதி யுத்திரட்டாதி யிரேவதி யசுவதி
பரணியெனவேழுநாளு மிடபங் கன்னி மகரமென மூன்றிராசியுஞ் சுக்கிரன் பாம்பென
விருகிரகமும் வஞ்சிக் கியல்பெனக் கொள்க. ஆகையின் முதற்பாநான்கிற்கு
மிலக்கணமாறும் வந்தவாறு காண்க. எ-று. (48)
 
299. 	ஆசு மதுரஞ் சித்திர வித்தார
மேசில் கவிநான் கிவையென் பவற்று
ளெடுத்த பொருளிற் றொடுத்த வின்பத்தி
லடுத்த பொழுதிற் பாடுவ தாசே
யுடைப்பொருட் பொலிவு முரிச்சொற் செல்வமுந்
தொடைப்பொலி விகற்பமுந் தொடரணிச் சிறப்பு
மிசைபெற வோசையு மியலப் பாடி
வசையில் வருங்கவி மதுர மாமே
கோமூத் திரிமுதற் கூறிய மிறைகவி
சித்திர மென்பர் சிறுபான்மை யவையெனப்
பத்திர முதனுண் பத்தியிற் பாடிச்
சித்திரம் போல்வன சித்திரக் கவியே
தொடர்நிலை தொகைநிலை தொடுத்த பல்பாவுந்
தொடைபல வாகத் தொடுத்த வொருபாவும்
வித்தாரக் கவியென விளம்பினர் புலவர்.
 
     (இ-ள்.) நாற்கவி யியல்பினை யுணர்த்துதும். எவ்வகைச் செய்யுளைப் பாடினும்
பாடியதிறத்தால் வேறுபடாமன் மற்றொருநால்வகைக் கவிவ குத்தார்புலவர். அவையே
ஆசு-மதுரஞ்-சித்திர-வித்தார-மென நாற்கவியா மன்றியே யவற்றைப் பாடுவார்க்கும்
பெயர் செல்லுமென் றுணர்க. அங்ஙனம் ஆசுகவியைப்பாடும் புலவனு மாசுகவி
யெனப்படுவன். பிறருமன்ன. ஆகையி லவற்றுட்பொருளு மடியும் பாவு மணியு
முதலியவற்றை மற்றொருவன் குறித்துப் பாடுக வென்ற வுடனே பாடுவ தாசெனப்படும்.
அன்றியும் பொருட்பொலிவாதி சூத்திரத்துட் கூறிய விலக்கண முறையாற்றொடுத்
	


216


	தமுதூட்டினாற் போலக் கேட்போருவப்ப வின்பமிகுத்து வருங் கவி மதுரமெனப்படும்.
(வ-று) கலித்துறை. "கந்தாரம் பாடிக் களித்தாடும் வண்டினங் காமுறுபூஞ், சந்தார நாறு
நிழற்சோலைக் காவலூர்த் தங்கியவா, னிந்தாரம் பூண்ட திருவடிகண் டேத்த
வெவ்வுயிரும், வந்தாரக் கண்பேனோ வானலங் கொண்டார் வையகமே." எ-ம்.
பிறவுமன்ன. அன்றியுங் கோமுத்திரி முதலினி யணியதிகாரத்துட் காட்டும்படியே வழங்கு
மிருபது மிறைக்கவியைச் சித்திரக்கவி யென்மருமுள ராயினு மவை சிறுபான்மையென்று
மதியார் புலமையின் மிக்கோர். ஆகையி லோரிலைமுதலா நுணுக்கத்தனைத்து
மொழுங்கொடுதோன்ற வெழுதிய சித்திரப்படத்தைக் காட்டின தன்மையிற் பாடிய
கவியைச் சித்திர மென்பார். (வ-று) நைடதம். - "விழைவுறு கலவியின் மெலிந்தோர்
தாளினின், றெழிறிகழ் பொன்னிற வெருத்தங் கோட்டுபு, தழைவுறு சிறகரான் மூடித்
தண்ணறா, வழிமலர் சேக்கையி னன்னந் துஞ்சுமால்.' எ-ம். சித்திரவணியாவன. -
யாப்பருங்கலம் முடிவுச் சூத்திரம். - "மாலைமாற்றே சக்கரஞ்சுழிகுள, மேக பாத
மெழுகூற் றிருக்கை, காதை காப்பே கரந்துறைப் பாட்டே, தூசங் கொளலே வாவன
ஞாற்றிக், கூட சதுக்கங் கோமூத் திரியே, யோரெழுத் தினத்தா லுயர்ந்த பாட்டே, பாத
மயக்கே பாவிற் புணர்ப்பே, யொற்றுப் பெயர்த்த லொரு பொருட் பாட்டே, சித்திரக்
காவே விசித்திரக் காவே, விகற்ப நடையே வினா வுத்தரமே, சருப்பதோ பத்திரஞ்
சார்ந்த வெழுத்தும், வருக்கமு மற்றும் வடநூற் கடலு, மொருங்குடன் வைத்த வுதாரண
நோக்கி, விரித்து முடிப்ப மிறைகவிப் பாட்டே, யுருவக மாதி விரவிய லீறாய், வருமலங்
காரமும் வாழ்த்தும் வசையுங், கவியே கமகன் வாதி வாக்கியென், றவர்க டன்மையு
மவ்வயி னமைதியும், பாடுதன் மரபுந் தாரணைப் பகுதியு, மானந்த முதலிய வூனச்
செய்யுளும், விளம்பினத் தியற்சையு நரம்பின் விகற்பமும், பண்ணுந் திறனும் பாலையுங்
கூட்டமு, மெண்ணிய திணையு மிருதுவுங் காலமு, மெண்வகை மணமு மெழுத்துஞ்
சொல்லுஞ், செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும், தந்திர யுத்தியுந் தருக்கமு
நடமு, முந்துநூன் முடிந்த முறைமையின் வழாமை, வந்தன பிறவும் வயினறிந்
துரைப்போ, னந்தமில் கேள்வி யாசிரியன்னே." என்றா ரமுத சாகர வாசிரியர். -
மாலைமாற்றாவது:- மீள வாசித்தாலு மதுவே வரப்பாடுவது. சக்கரமாவது:- நான்காரைச்
சக்கரமும் எட்டாரைச் சக்கரமும், ஆறாரைச் சக்கரமும் வரப்பாடுவது. சுழிகுளமாவது:-
நெட்டெழுத் தியன்ற நால்வரி யாக வெழுதி சுழித்து வாசிக்கச் செய்வது.
ஏகபாதமாவது:- நான்கடியு மோரடியாகப் பாடி யடிகடோறும் வேறு பொருள்
விளக்குவது. எழு கூற்றிருக்கையாவது:- ஏழறை யாக்கிக் குறுமக்கண் முன்னின்றும்
புக்கும் போந்தும் விளையாடும் பெற்றியால் வழுவாமை யொன்று முதலாக
வேழிறுதியாக முறையானே பாடுவது. காதை காப்பாவது:- அணியதிகாரத்துட் காண்க.
கரந்துறைப் பாட்டாவது.- ஒரு பாட்டைச்செவ்வையே யதனா
	


217


	லீற்று மாதிக்கு முதலா மெழுத்துத் தொடங்கி யொன்று விட்டு வாசிக்க மற்றொரு
பாட்டாவதாம். தூசங் கொளலாவது:- ஒருவ னொருவெண்பாச் சொன்னா லதனீறே
யீறாக வதன் முதலே முதலாக மற்றொரு வெண்பாப் பாடுவது. ஞாற்றியாவது:- முந்துறக்
கொடுத்த வெழுத்துக் கீறு பாடிப் பின்னைக் கொடுத்த வெழுத்துக் கீற்றயல் பாடி யதன்
பின்பு கொடுத்த வெழுத்துக் கிரண்டாமடிபாடி யதன்பின்பு கொடுத்த வெழுத்திற் பாடி
முடிப்பது. கூடசதுக்கமாவது:- நாலா மடியு முன்னின்ற மூன்றடியும் பெருக்கிக் கொள்வது.
கோமூத்திரி யாவது:- இரண்டு வரியாக வெழுதி கோ மூத்திரம் விட்டது தோன்றும்
வளைவுபோல வாசிக்கப் பாடுவது. ஓ ரெழுத்தாலு மோரினத்தாலு முயர்ந்த
பாட்டாவன:- ஓ ரெழுத்தாலே முடியப் பாடுவது. மூவினத் தாலே முடியப் பாடுதல்
செய்வது. மூவினமாவன: - வலி மெலி இடை. பாதமயக்காவது:- மூவர் மூன்றாசிரிய
மூவடச் சொன்னாற் றானோரடி சொல்லிக் கிரியைக் கொடுப்பது. பாவிற் புணர்ப்பாவது:-
நால்வர் நான்கு பாவிற் பாட்டுரை சொன்னா லிவனடிக்கு முதலாகப் பாடி பொருண்
முடிப்பது. ஒற்றுப் பெயர்த்தலாவது:-ஒரு மொழியைப் பாடி நிறுத் திறுத்தி வைத்துப் பிறி
தொரு பொருள் பாடுவது. ஒரு பொருட் பாட்டாவது:-ஒன்றனையே யணித்துப் பாடுவது.
சித்திரக் காவாவது:- நான்கு கூடிய வெல்லாம் பத்தாகவு மூன்று கூடின வெல்லாம்
பதினைந்தாகவும் பிறவாற்றானு மெண் வழுவாமற் பாடுவது. விசித்திரக்காவாவது:-எங்கு
மேழறை யாகக் கீறி மேலே யொழுகி நுண்மொழி முதலாகிய வெழுத்தொரு பொருள்
பயக்க நிறுவி யவ்வெழுத்துக்களே யெங்கு மொழுகுங் கண்ணறைவும் பாடமே நிறுவி
யோரெழுத்துக் கோரடிவர யாதானு மொரு சீராகவானும் பாடுவது. விகற்ப நடை
யாவது:-வேறுபட்ட நடையுடைத்தாகப் பாடுவது. வினாவுத்தரமாவது:- வினாவிற்கு விடை
யளிக்கப் பாடுவது. சருப்பதோ பத்திரமாவது:- எட்டெழுத் தீன்ற நான்குமா யவை
மாலைமாற்றுஞ் சுழிகுளமு மொருங்கு வரப் பாடுவது. சார்ந்தவெழுத்தாவது:- ஓ
ரெழுத்து முதலாக கலை சிறந்தேறிய வெழுத்தின் முறையே பொருள் பயக்கப் பாடுவது.
வருக்கமாவது:- மொழிக்கு முதலாம் வருக்க வெழுத்தினுக் கொவ்வோர் செய்யுட்
கூறுவது. உருவக முதலாகிய வணிகளை யலங்காரத்திற் கண்டு கொள்க.
வாழ்த்திருவகைப்படும். - வாயுறை வாழ்த்தும், புறநிலைவாழ்த்தும். வாயுறை
வாழ்த்தாவது:-வேம்புங் கடுவும் போல்வ னவாகிய வெஞ்சொற்கண் முன்னர்த்தாங்கக்
கூடா வாயினும் பின்னர்ப் பெரிதும் பயன்றருமென மெய்ப்பொருளுற வெண்பா முதலு
மாசிரிய மிறுதியாகக் கூறுவது. புறநிலைவாழ்த்தாவது:- வழிபடு தெய்வ நிற்புறங்காப்பப்
பழிதீர செல்வமோ டொருகாலைக் கொருகாற் சிறந்து பொலிவாயென வெண்பா முதலு
மாசிரிய மிறுதியு மாகப்பாடுவது. அன்றியும். - வெண்பா. - "கார்நறு நீலங் கடியகத்து
வைகலு, நீர்நிலை நின்ற
	


218


	பயன்கொலோ-கூர்நுனை வேல், வண்டிருக்குந் தக்கத்தார் வாமன் வழுதியாற்,
கொண்டிருக்கப் பெற்ற குணம்." இது மெய் வாழ்த்து. "பண்டு மொருகாற்றன்
பைந்தொடியைக் கோட்பட்டு, வெண்கடம் வில்லேற்றிக் கொண்டுழந்தான் -
றெண்களந்தைப், பூமான் றிருமகளுக் கின்னும் புலம்புமால், வாமான்றேர் வைகையார்
கோன்." இது இருபுற வாழ்த்து. வசையாவது:- மெய்வசையும் இருபுறவசையுமாம்.
மெய்வசையாவது:- வெண்பா - "தந்தை யிலைச்சு மடன்றாய் தொழிலிதான் பார்ப்பா,
னெந்தைக் கிதெங்ஙனம் பட்டதுகொல் - முந்தை, யவியுணவி னார் தெரியின் யாவர்
தாங்கொல்லோ, கவிகண் ணனார்தம் பிறப்பு." இது மெய்வசை. இரு புறவசையாவது:-
வெண்பா. - "படையொடு போகாது நின்றெரிந்தா னென்றங், கொடையொடு நல்லார்கட்
டாழ்ந்தான் - படை யொடு, வாடி வழங்குந் தெருவெல்லாந் தான்சென்று, கோடி
வழங்கு மகன்." - இது இருபுறவசை. கவி - கமகன் - வாதி - வாக்கி -
இந்நால்வர்தன்மையாவது:- ஆசுகவியும் - மதுரக்கவியும் - சித்திரக்கவியும் -
வித்தாரக்கவியும் - என வமையும். பாடுதன்மரபாவது:- இலக்கணமுறை பிறழாது
பாடுதல். தாரணைப் பகுதி யாவது:- சதுரங்க தாரணை யோடும் பாடுதலாம்.
ஆனந்தமாவது:- ஆனந்தம் பயக்கச் செய்யுள் சொல்வது. செய்யுளாவன:- தனி
நிலைச்செய்யுள், தொடர் நிலைச்செய்யுளென விரண்டாம். விளம்பின தியற்கையாவது:-
சூத்திரம். "விளம்பின தியற்கை விரிக்குங் காலை, யாரியத் தமிழினொடு தெரிகிடைக்கி,
னுலகின் றோற்றமு மூழி னிறுதியு, மலகிற் றொண் ணூறறுவா றியற்கையும், வேத நாலும்
வேதிய ரொழுக்கமு, மாதி காலத் தரசு செயற்கையு, மப்பா நாட்டா ரறியும் வகையா,
லாடியும் பாடியு மைவாக் கிளர்த்தல்." நரம்பாவன:- சூத்திரம். - "குரலே துத்தங்
கைக்கிளை யுழையுளி, விளரி தார மெனவெழு நரம்பே." பண்ணாவன:- பாலையாழ்,
சூறிஞ்சியாழ், மருதயாழ், செவ்வழியாழ், என நான்காம். திறனாவன:- அராகம்,
நோதிறம், வறட்டு, குறுங்கலி, என நான்காம். பாலையாவன:- செம் பாலை, மடுமலைப்
பாலை, செவ்வழிப் பாலை, உரும்பாலை, கொடிப்பாலை, இனப்பாலை, விளரிப்பாலை,
என வேழாம். கூடமாவன:- எழுவகை யகத்திற்கண்டுகொள்க. திணையாவன:- அகமே -
யகப்புறமே - புறமே - புறப்புறமே - என நான்காம். இருதுவாவன:- கார், கூதிர்,
முன்பனி, பின்பனி, இளைவேனில், முதுவேனில், என வாறுமாம். காலமாவன:- இறப்பு -
எதிர்வு - நிகழ்வு - என மூன்றாம். மணமெட்டாவன:- பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம்,
தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம். இவற்றுள்:- பிரமசாரிக்குக்
கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பது பிரம மணம். தலைமக னினத்தார் வேண்டத்
தலைமக ளினத்தா ருட்பட் டவளைத் தீமுன்னர்க் கொடுப்பது பிரசாபத்திய மணம்.
ஒன்றிரண்டு பசுவு மெருதும் வாங்கிக் கொண்டு கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்ப
தாரிட மணம். வேள்வியால் வந்த கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பது தெய்வ மணம்.
கொடுப்பாருங் கேட்பாரு
	


219


	மின்றி யிருவருந் தனியிடத் தெதிர்ப்பட்டுத் தாமே கூடுவது காந்தருவ மணம்.
பெண்ணுக்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்குப் பொன் வேண்டு வன கொடுத்துக் கொள்வ
தசுரமணம். பெண்ணும் பெண்ணினத்தாரு முடன்படாமல் வலிதிற் கொள்வ திராக்கத
மணம். துயின்றாண்மாட்டுச் சென்று கூடுவது பைசாச மணம். எழுத்துஞ் சொல்லு
மாவன:- தத்தமதி காரத்துட்காண்க. செந்துறை மார்க்கமும், வெண்டுறை
மார்க்கமுமாவன:- நாற்பெரும் பண்ணு மேழெழுத்தினுந் தோற்றி னின்னிசைச்
செந்துறையாகும். ஒன்பதின்மேற் பதினொன்று மென்பன வெல்லாம் வெண்டுறையாகும்.
தந்திரயுத்தியாவது:- நன்னூல்.- "நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி, யேற்புழி
யறிந்திதற் கிவ்வகை யாமெனத் தகும்வகை செலுத்துத றந்திரவுத்தி." தருக்கமாவது:-
நியாய சூடாமணி, புதியநுட்ப முதலான வற்றுட் கண்டு கொள்க. - வீரசோழியம். -
"ஏறிய மாலை மாற்றே சக்கர மினத்தா லெழுத்தாற், கூறிய பாட்டு வினாவுத்தர மேக
பாத மன்றித், தேறிய காதை காப்புச் சுழிகுளஞ் சித்திரக்கா, வீறியல் கோமூத் திரியும்
பிறவும் விரித்துரையே." இவை மேற்கோள். இனி மற்றைச் சித்திரக்கவி களை 364-ஞ்
சூத்திரத்தில் விரிவாக வுரையிற் கூறுகின்றாம். அன்றியும், பலபாட்டாக வந்து
மேற்காட்டிய தொகைநிலைச் செய்யுளுமன்றி யொரு பாட்டாக வரினும் பலதொடையாகத்
தொடுத்து நடக்குஞ் செய்யு ளெல்லாம் வித்தாரக்கவியென வழங்கும். இவையே
யகலக்கவியெனினு மொக்கும். ஆகையாற் பெருங்காப்பிய முதலியவன்றி யுலாமுதலாயின
வித்தாரக் கவியெனக் கண்டுணர்க. - பிங்கலம். - "கவியே கமகன் வாதி வாக்கி யென்,
றிவை யொரு நான்கும் புலமைக் கியல்பே. - அவைதாம், ஆசு மதுரஞ் சித்திர வித்தார
மென்ப,பாவகைப் பாடுவோன் கவியெனப்படுமே. - ஞாபகஞ் செம்பொரு ணடையினெப்
பொருளுங், காசின் றுரைப்போன் கமக னாகும். - ஏதுவு மேற்கோளு மெடுத்துக்
காட்டித், தன்கோணிறீஇப் பிறன்கோண் மறுப்போன், மன்பதை வதிகத வாதி யாகும். -
அறம் பொரு ளின்பம் வீடெனுந் திறங்கள், கேட்போர் வேட்ப வினியன கூறு, மாற்ற
லுடையான் வாக்கி யாகும். - அவற்றுள், கொடுத்த பொருளிற் றொடுத்த வினத்தி,
லடுத்த பொருளிற் பாடுவ தாசுகவி. - பொருளின் பொலிவுஞ் சொல்லின் றிறனாலுந்,
தொடையுந் தொடைக்கண் விகற்பமுந்துதைந்து, முருவக முதலா வலங்கா ரங்க,
ளுடன்கொண் டோசை பொலிவுடைத் தாகி, யுய்த்துணர் வோர்கடம் முள்ளங் கட்கு,
மாகட லமுதம் போல் பாடுவோன் மதுரகவி. - மாலை மாற்றே சக்கரஞ் சுழிகுள, மேக
பாத மெழுகூற் றிருக்கை, காதை காப்பே கரந்துறைப் பாட்டே, தூசங் கொளலே லாவல
நாற்றே, பாத மயக்கே பாவின் புணர்ப்பே, கூட சதுக்கங் கோமூத் திரியே, யோரெழுத்
தினத்தா லுயர்ந்த பாட்டே, யொற்றுப் பெயர்த்த லொருபொருட் பாட்டே, சித்திரப்
பாவே விசித்திரப் பாவே, விகற்ப நடையே வினாவுத் தரமே, சருப்பதோ பத்திரஞ்
சார்ந்த வெழுத்தும், வருக்கமு மற்றும் வடநூற் கடலு,
	


220


	மொருக்குடன் வைத்த வுதாரண நோக்கி, விரித்து நிறைத்து மிறைக்கவி பாட்டுந்,
தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியே. - மும்மணிக் கோவையும் பன்மணி மாலையு,
மறமுங் கலிவெண் பாவு மடலூ ருதலுங், கிரீடையுங் கூத்தும் பாசாண்டத் துறை யும்,
வகுத்த வகுப்பும் விருத்தக் கவியும், விரித்துப் பாடுவோன் வித்தாரக் கவியே."
எ-று. (49)
 
300. 	ஈரசை யைஞ்சீ ரெழுதளை யையடி
யாறே ழொருதொடை யைம்பா மூவினஞ்
செய்யு ணான்குஞ் செய்யுள் விகற்பமு
மையிரு பொருத்தமு மாக
மெய்யுரை யாப்பை விளக்கிய தொகையே.
 
     (இ-ள்.) ஆதியி னிறுத்த முறையானே யாப்பதிகாரத்துள் விளக்கிய பொருளெலா
மொன்று படுத்திய தொகைச் சூத்திரம் வந்த வாறு காண்க. எ-று. (50)
 

மூன்றாமோத்துச் செய்யுண்மரபியல். - முற்றிற்று.

...........................

அதிகார மொன்றிற்கு, ஓத்து மூன்றிற்கு, ஆக சூத்திரம். 100.
மேற்கோள். சூ. 164. ஆக சூ. 264.

அதிகார நான்கிற்கு மேற்கோளோடு கூடிய ஆக சூ. 703.

.......................

நான்காவது:-யாப்பதிகாரம்.-முற்றிற்று.
	


221


	ஐந்தாவது:-

அணியதிகாரம்.
PART V.- RHETORICAL EMBELLISHMENT.
 
301. 	கலையணிச் செல்வன் கமலச் சேவடி
தலையணி புனைந்து சாற்றுது மணியே.
 
     (இ-ள்.) அணியிலக்கணமாமாறுணர்த்துதும். வேதநூன்முத லெந் நூலு நலம்பெறக்
காரணமாக நிற்கு மெய்க்கடவுடன் றிருக்கமலபாதமெ னறலை யணியாகக்கொண் டேத்தி
யணிய திலக்கணநூலை விளக்குது மென்பதா யீற்றாகையின் முதலிடை யொப்பக்
கடையும் வழுவா திறைவன் காப்பதுவேண்டி யீண்டுந் தெய்வவணக்கம்
வந்தவாறுகாண்க. இவ்வதிகாரநூலைப் புலமையின் மிக்க தண்டியென்பவர்
விதித்துரைத்தமையா லவர் பெயர்கொண்டு தண்டியலங்காரமென்று வழங்கும். என்னை
- "மணமக ளணிநறு மாலை போலவுங், கனமிக மார்புறை கலனணி போலவு, மணி
சுவர்க் கெழுதிய வடிவுருப் போலவு, மற்புதத் தனுவுறுப் படைமரப் பாவை, பொற்புறத்
தீர்ந்த பொற்சுதை போலவுங், கற்றோ ருரைக்குங் கருத ரும் பொருட்கே, மற்றோ
ரணிதான் வழங்குமென் றுணர்க." அன்றியு மேனிறுத்த முறையான் முன்னோர்தந்
தவற்றுட் சிலவொழித்து மிகவுணர வேண்டியபலவற்றை விளக்கிச் செந்தமிழுணர்ந்தோர்
நூலிலொழிந்த சிற் சிலகூட்டி யுணர்த்துதும். இஃது சிறப்புப்பாயிரம். எ-று. (1)
 
302. 	அணியெனச் சொல்பொரு ளாமிரண் டவற்றுள்
வேற்றுரை வரக்கெடு மணிசொல் லணியுரை
மாற்றினுந் தோன்றிய வணிபொரு ளணியே.
 
     (இ-ள்.) இய - லிசை - நாடக - மென்னு முத்தமிழ்க் கலங்காரமாக வரு மணி
சொல்லானும் பொருளானும் வழங்குவதாகையிற் சொல்லணியென்றும் பொருளணியென்று
மணி யிருவகைப்படும். அவற்று ளோரணிவந்த சொல்லே மாறின தன்மையா லவ்வணி
கெடு மெனிற் சொல்லணி யெனப்படும். சொல்லேமாறினு மச்சொல்லால்
வழங்கியபொருளேமாறாதாயி னணியுங்கெடாதெனிற் பொருளணி யெனப்படும். (வ-று.)
முல்லை நகைத்தன - வென்றதற்கு, முல்லை பூத்தன - வெனிற் சொன்மாறவே யணி
நில்லாமையா லிது சொல்லணி யெனவும், பவளவா - யென்றதற்குச் சொன்மாறித்,
துகிற்போற் செவ்வா - யெனிற் சொன்மாறினு மதன் பொருண் மாறாமையா லணி நின்ற
தாகையி லிது பொருளணி யெனவுங் கண்டு கொள்க. ஆகையி லிவ்விருவகையணிபற்றி
யீரோத்தாக விவ்வதிகார முகியு மென்றுணர்க. எ-று. (2)
	


222


	முதலோத்துச் சொல்லணியியல்.
Chapter I. - Word Embellishment.
 
303. 	சொல்லணி மறிநிலை மிகலெஞ்ச லொப்பென்
றொல்லணித் தொகுதி யொருநான் கென்ப.
 
     (இ-ள்.) சொல்லணி யிலக்கணமாமாறுணர்த்துதும். சொல்லால்வழ ங்கு
மலங்காரங்க ணால்வகைப்படும். அவையே, மறிநிலையணியுஞ் - சொன் மிக்கணியுஞ் -
சொல்லெஞ்சணியுஞ் - சொல்லொப்பணியு - மெனவே வழங்கும். இவற்றைத் தனித்தனி
விளக்குதும். எ-று. (1)
 

முதலாவது: - மறிநிலையணி.

1. Play on Words.
 
304. 	மறிநிலை யுரிமை மாறணி யாயவை
குணமுதல் காரணங் குறிப்பொழுக் கமைந்தே.
 

     (இ-ள்.) நிறுத்த முறையானே மறிநிலையணி யாமாறுணர்த்துதும்.
பொருட்பெயர்மாறி யொன்றன்பெயர் பிறிதொன்றற்குரைப்பது மறிநிலை யெனப்படும்.
இவற்று ளொன்றன்குண மற்றொன்றற்குரைப்பது பண்பு மறிநிலை, எ-ம். சினைப்பெயர்
முதற்கும், முதற்பெயர் சினைக்குஞ் செல்ல வுரைப்பது முதன்மறிநிலை, எ-ம். இவ்வாறே
காரணமுங் காரியமுந் தம் முண்மாறவுரைப்பது காரணமறிநிலை, எ-ம்.
சொல்வேறுணர்ந்த குறிப்பு வேறாகத் தோன்றவுரைப்பது குறிப்புமறிநிலை, எ-ம்.
உலகினொழுக்க மாற வுரைப்ப தொழுக்கமறிநிலை, எ-ம். வழங்கும். (வ-று.)
சினத்திற்காய்ந்தான் - உளத்தில்வெந்தான் - முல்லைநகைப்பன் - குவளைவிழிப்பன -
அள்ளருடுஞ்சு மார்பன் - நள்ளிருடுஞ்சுங்கூந்தல் - `நெட்டொளி வேங்கையா னிசிப்பட
நீத்தீங்குயிராக், கட்டொளியைக் காட்டுங் கதிர்வேந்தன்.ழு - என்பனவற்று
ளொன்றன்குணம் பிறிதொன்றற் குரைப்பது குணவழுவென்று தோன்றினு மவையே
சிறந்தவுவமையாற் பிறிதிற்பொருந்தப் புனைந்துரைத்தமையாற் பண்புமறி நிலையலங்கார
மாயிற்றெனக் கொள்க. இதனைச் சாமாதி யென்மரு முளரென்றுணர்க. அன்றியும்,
பூநிழற்சோலை - யென மரமாகிய முதற் பொருள் செய்நிழல் மலராகிய சினைப்
பொருண்மேலுரைப் பவும், நறும்பொழி - லென மலராகிய சினைப்பொருளால்
வரும்வாசனை பொழிலாகிய முதற் பொருண்மே லுரைப்பவும், முதலுஞ் சினையுமாறி
முதன்மன்றிநிலை யலங்காரமாயின. அன்றியும், "ஏரினு நன்றா மெருவிடுதல் கட்ட பின்,
னீரினு நன்றதன் காப்பு." என உழுந்தொழிலைக் காட்ட வதற்குக் காரணமாகிய
வேரினையுரைப்பவும், `ஒளியெழுந் தொரெழீஇ யுலகம்வாழ்ந்ததே.ழு - என வொளியாகிய
காரியத்தால் ஞாயிறென்னுங் காரணத்தைக்காட்டியுரைப்பவும்,
	


223


	இருவகைக்காரணமறிநிலை   யலங்காரமாயின.   அன்றியு   மாறுமாத -
மென்பதற்காறுதிங்களெனவும், ஆறுவருடமாயிற் - றென்பதற் கறுபயிராயிற் - றெனவும்,
இரவடுத்துறங்கால் வந்தானென்பதற்கு - "கஞ்சமே சினந்தெனக் கமழ்கத வடைப்பவும்,
பஞ்சிறைக் கிளியொடு பறவையார்த் தொடுங்கவும், பிரிநிலைக் கண்டுணர் பெற்றம்வந்
தேங்கவும், விரிநிலைத் தோளினான் விரும்பி யெய்தினான்." என்பன விவற்றுட் சொல்
வேறாகிக் குறித்தபொருள் வேறாகையிற் குறிப்புமறிநிலை யலங்காரமாயின. அன்றியும். -
"வண்டிசைக்குங் கூந்தன் மதர்விழிகள் சென்றுலவ, வெண்டிசைக்கும் போதா திடம்.'
எ-ம். "கெழுஞ்சுனை வரம்பில் வைகிக் கிளைத்தநோ யழன்ற நெஞ்சா, னழுஞ்சுனைப்
பெருகுங் கண்ணீ ரகல்கடல் வெள்ள மாற்றா." எ-ம். "சேட்டிளம் பரிதிமார்பன்." எ-ம்.
'முகிற்கை அயிற்கண் வரைத்தோள்.' எ-ம். பலவுமுலகி லொழுகுந்தன்மையைக் கடந்த
வாயினுஞ் சிறந்தபுகழ்வழியாகப் புனைந்துரைத்தமையா லொழுக்கமலை வாகாம
லொழுக்க மறிநிலை யலங்காரமாயின. இவற்றுட் பலவை பொருளைப்பற்றிவரினு
மொருசொல்லெல்லையின் முகியுமென்றமையாற் சொல்லணியாக வைக்கப்பட்டன.
எ-று. (1)
 
305. 	பொருள்கோளு மறிநிலை போல்வன வாமவை
யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட்
டடிமறி மாற்றென வாகுமெட் டென்ப.
 
     (இ-ள்.) முன்னோர்வகுத்த வெண்பொருள்கோளு மறிநிலையணி யென வழங்கும்.
அவையே யாற்று நீர்ப் பொருள்கோளும் - மொழிமாற்றுப் பொருள்கோளும் -
நிரனிறைப் பொருள்கோளும் - பூட்டுவிற் பொருள்கோளும் - தாப்பிசைப்
பொருள்கோளும் - அளைமறிபாப்புப் பொருள் கோளும் - கொண்டுகூட்டுப்
பொருள்கோளும் - அடிமறிமாற்றுப் பொருள் கோளும் - எனப்படும். இவற்றை யினி
யொவ்வொன்றாக விளக்குதும். - நன்னூல். - "யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை
விற்பூண், டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட், டடிமறி மாற்றெனப் பொருள்கோ
ளெட்டே." இது மேற்கோள். எ-று. (2)
 
306. 	யாற்றுப் புனலே யடிதொறும் பொருளற
வேற்றடி நோக்கா விளம்பலி னாகும்.
 
     (இ-ள்.) யாற்றுநீர்ப் பொருள்கோளா மாறுணர்த்துதும். மற்றடிநோ க்கா
தடிதோறும் பொருளற்று வருவதியாற்றுநீர்ப் பொருள்கோ ளெனப் படும். (வ-று.)
'விலைப்பாலி னீர்கலந்து விற்றாலுங் குற்ற, மலைப்பாரைப் பேணா மறுத்தலுங் குற்ற,
நிலைப்பாரைத் தூக்கி நெகிழ்தலுங் குற்றங், கொலைப்பால குற்றமே யாம்." எ-ம்.
பிறவுமன்ன. - நன்னூல். - "மற்றயனோக்கா தடிதொறும் வான்பொருள்,
	


224


	அற்றற் றொழுகுமஃ தியாற்றுப் புனலே." இது மேறகோள். எ-று. (3)
 
307. 	மொழிமாற் றென்ப மொழிகடம் பயன்படும்
வழிபெயர்த் தோரடி வரையுட் கொளலே.
 

     (இ-ள்.) மொழிமாற்றப் பொருள்கோளாமாறுணர்த்துதும். ஓரடி யெல்லையுட்
டத்தம்பொருளுக் கேற்றமொழிக டன்னிலைதப்பி யொழுங்குமாறச் சொல்லுவது
மொழிமாற்றுப் பொருள் கோளெனப்படும். (வ-று.) கரையாடக் கெண்டை கயத்தாட
மஞ்ஞை, சுரையாழ வம்மி மிதப்ப - வரையனைய, யானைக்கு நீத்து முயற்குநிலை
யென்ப, கானக நாடன் சுனை." எ-ம். இதனுட் கெண்டை கயத்தாட - மஞ்ஞை
கரையாட வெனவும், சுரை மிதப்ப - வம்மி யாழ வெனவும், யானைக்குநிலை -
முயற்குநீத் தெனவும், கொள்ளவே ண்டலி னோரடியுண் மொழிகளை மாற்றினவாறு
காண்க. - நன்னூல். - "ஏற்ற பொருளுக் கியைபு மொழிகளை, மாற்றியோ ரடியுள்
வழங்கன்மொ ழிமாற்றே." இது மேற்கோள். எ-று. (4)
 
308. 	நிரனிறை யாநிரை நிறீஇய பெயர்வினை
யிரண்டும் வேறடுக்கி யெதிரினும் வைத்த
நிரையினும் பொருளே நேர்த லென்ப.
 
     (இ-ள்.) நிரனிறைப் பொருள்கோ ளாமாறுணர்த்துதும். பலபெயர்ச் சொல்லையும்,
பலவினைச்சொல்லையும், வேறாயடுக்கிய பின்னரவற்றிற்குப் பொருளாய்
வருஞ்சொற்களை முறையேயாயினு மீறுமுதலாக வெதிரே யாயினு மடுக்கிவைப்பது
நிரனிறைப்பொருள் கோளெனப்படும். (வ-று.) "கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண்
மேனி, மதிபவள முத்த முகம் வாய் முறுவல், பிடிபிணை மஞ்ஞை நடைநோக்கஞ்
சாயல், வடிவினளே வஞ்சி மகள்." இது பெயர்நிரனிறை. - "காதுசேர் தாழ்குழையாய்க்
கன்னித் துறைசேர்ப்ப, போதுசேர் தார்மார்ப போர்ச்செழிய - நீதியான், மண்ணமிர்த
மங்கையர்தோண் மாற்றாரை யேற்றார்க்கு, நுண்ணிய வாய பொருள்." இது வினை
நிரனிறை. - "காதமரு கவினுதி துனிகண் புருவஞ், சீதமுகங் கொங்கை திரண்டவா -
யோதக், கரும்பா ரமழ்பாடிக் காங்கேயன் பட்டத், தரும்பார் குழலளகத் தார்க்கு." இது
எழுத்து நிரனிறை. - "கூற்றுவனை வின்மதனை யரக்கர் கோவைக் கூனிலவைக்
குஞ்சரத்தை யிஞ்சி மூன்றை, யேற்றுவன புறவுருவ மாளத் தோள்க ளிறவெறிப்ப வி
மயப்பெண் வெருவ வேவக், காற்றொழிலா னயனத்தால் விரலாற் கற்றைக் கதிர்முடியாற்
கரதலத்தாற் கணையாற் பின்னு, மூற்றழிய வுதைத்து ரித்து நெரித்துச் சூடி யுரித்தெரித்தா
னவனெம்மை யுடைய கோவே." இது முறை நிரனிறை. - நன்னூல். - "பெயரும்
வினையுமாஞ் சொல்லையும் பொருளையும், வேறு நிரனிறீஇ முறையினு மெதிரினு,
நேரும் பொருள் கோ ணிரனிறை நெறியே." இது மேற்கோள். எ-று. (5)
	


225


	309. 	பூட்டுவில் லென்ப பூட்டிய விற்போற்
பாட்டிரு தலையொரு பாற்பொருள் கொளலே.
 
     (இ-ள்.) பூட்டுவிற்பொருள்கோ ளாமாறுணர்த்துதும். பொருளைக் கொள்ளும்படி
பாவின் முதலினு மீற்றினு நின்ற விருமொழி கூட்டவே ண்டுழி யது பூட்டுவிற்
பொருள்கோ ளெனப்படும். (வ-று.) "திறந்திடு மின் மீன்முடியுஞ் செங்கதிரோன் றன்சூட்,
டிறந்திடு வில்லாடை யெழிலுஞ் - சிறந்திடுமின், றண்ணாரமாய் மதியந்தாங் கடியும்
பூண்டாளைக், கண்ணாரக் காணக் கதவு." எனத் திறந்திடுமின் கதவென்பது பொரு
ளாகையிற் பூட்டுவிற் பொருள்கோளா மெனக் கொள்க. - நன்னூல். - "எழுவா யிறுதி
நிலைமொழி தம்முட், பெருணோக் குடையது பூட்டுவில்லாகும்." இது மேற்கோள்.
எ-று. (6)
 
310. 	தாப்பிசை முதற்கடைத் தன்பொரு டருமொழி
யாப்பிசை யிடையே யியம்புத லென்ப.
 
     (இ-ள்.) தாப்பிசைப்பொருள்கோளாமாறுணர்த்துதும். பாவினடுவே நின்ற மொழி
முதலினு மீற்றினுங் கூட்டிய பொருளைக் கொள்வது தாப்பிசைப் பொருள்கோ
ளெனப்படும். (வ-று.) "நோயிடு மென்றஞ்சிநுதலற் கத்தியவையே, நோயிலதாஞ்
செய்யாத கால்." என இதனுட்டீயவையென விடைநின்ற மொழியே முதலினு மீற்றினுங்
கூட்டிய பொருளைக்கொள்ளுமாறு காண்க. - நன்னூல். - "இடைநிலை மொழியே
யேனையீ ரிடத்தும், நடந்து பொருளை நண்ணுத றாப்பிசை." இது மேற்கோள். எ-று. (7)
 
311. 	அளைமறி பாப்பே யந்த மொழிமற்
றுளவிடத் துய்த்துத்தன் னுரைப்பொருள் கொளலே.
 
     (இ-ள்.) அளைமறிபாப்புப் பொருள்கோளாமாறுணர்த்துதும். செய் யுளீற்றினின்ற
மொழியே யிடையினு முதலினுங் கூட்டிப் பொருளைக் கொள்வதே யளைமறிபாப்புப்
பொருள்கோளெனப்படும். (வ-று.) விருத்தம். - "தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து
தண்டூன்றித் தளர்வார் தாமுஞ், சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து தீநரகிற் சூழ்வார்
தாமு, மூழ்ந்த பிணி நலிய முன்செய்த வினையன்றே முனிவார் தாமும், வாழ்ந்த
பொழுதின்னே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே." என முயலாதாரென் றீற்று
நின்ற மொழியே யிடையினு முதலினுங் கூட்டிப் பொருளைக் கொள்ளுமாறு காண்க.
அன்றியு மொருசொல் லோரிடத்து நின்று செய்யுட் பல விடத்து நின்ற சொற்களோடு
பொருந்திய பொருளை விளைப்பது தீவக மென்பார். அது, முத - லிடை - கடை -
வரப்பெறும். வரின் முதனிலைத் தீவக - மிடைநிலைத்தீவகங் - கடைநிலைத்தீவக -
மெனப்படும். - "நன்னூல். - செய்யு ளிறுதி மொழியிடை முதலினு, மெய்திய
பொருள்கோ ளளைமறி பாப்பே." இது மேற்கோள். எ-று. (8)
	


226


	312. 	கொண்டுகூட் டென்ப கொள்பொருட் கேற்ப
விண்டடி பலவினும் வினைகொண் மொழியே.
 

     (இ-ள்.) கொண்டுகூட்டுப் பொருள் கோளாமாறுணர்த்துதும். பா
வின்பலவடிக்குள்ளு நின்றமொழிகளைப் பொருளேற்கு மிடத்துக்கொ ண்டு கூட்டுப்
பொருள்கோளெனப்படும். (வ-று.) "ஆலின்மேற் பாயுங் குவளைகுளத் தலரும், வாலி
னெடிய குரங்கு." என்பதாலின் மேற்குரங்கு பாயும், குளத்தினுளலருங் குவளை, யென
வீரடியுட்கலந்து வந்த மொழிகளைப் பொருள்வேண்டுழிக்கொண்டு கூட்டிப்
பொருளைக்கொள்ளுமாறு காண்க. இதுவே யோரடி யெல்லையுள்வரின் மொழிமாற்றென
வழங்கும். - நன்னூல். - "யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை, யேற்புழி
யிசைப்பது கொண்டு கூட்டே." இது மேற்கோள். எ-று. (9)
 
313. 	அடிமறி மாற்றே யடிபெயர் பொருளவு
மடியிட மாறினு மழியாப் பொருளவும்.
 
     (இ-ள்.) அடிமறிமாற்றுப் பொருள்கோளாமாறுணர்த்துதும். பொ ருள்கொள்ளும்படி
யோரடி யெடுத்தேற்புழிக் கொண்டு கூட்டவேண்டிய தாகவுஞ் செய்யுளடியெலாந்
தன்னிலைமாறி முதலினு மிடையினு மீற்றினு முச்சரிப்பினு மோசையும் பொருளும்
வழுவாதாகவும் வருவதடி மறிமாற்றுப் பொருள்கோ ளெனப்படும்.
(வ-று.) "கற்ற கழிநூலுங் கைகூடா முற்றிற்கு, முற்றபொருளு மொழிந்தகலு - நற்சுருதி,
யோதலும் பொய்ப் பெற்ற வொளிநீத் திகழ்வாங்கு, காதலுளத் தழன்றக் கால்." என
இதனு ளீற்றடியேனை யடியிடத்து மெடுத்துக்கூட்டிப் பொருளைக் கொள்ளு மாறு
காண்க. "மீனே தவழ்வில் விரிமா முடியாள், பானே யுடையாய்ப் பனிவீ சுடலாள்,
பானேர் மதியே பணிபூ வடியாள், தானே ரிலவான் றலமா ளர சாள்." என
விக்கலிவிருத்தவடி நான்குந் தம்முண் முன்னும் பின்னுமாக மாறி யுச்சரிப்பினு
மோசையும் பொருளும் வழுவாதியலுமாறு காண்க. இவ்வகை யணிடோடளவடியாக வந்த
நான்கடி யாசிரியப்பாவு மடிமறி மண்டிலவாசிரியப்பா வெனப்படு மென்று
செய்யுளியல்தந்த விடத்துச் சொன்ன தாகவுங் கண்டுகொள்க. - நன்னூல். - 'ஏற்புழி
யெடுத்துடன் கூட்டுறு மடியவும், யாப்பீ றிடைமுத லாக்கினும் பொருளிசை, மாட்சியு
மாறா வடியவு மடிமறி." இது மேற்கோள். எ-று. (10)
 

..............................

இரண்டாவது:-சொன்மிக்கணி.

2. Repetition.
 
314. 	சொன்மிக் கணியென்ப சொன்மறி தரலவை
மடக்கிசை யந்தாதி யடுக்கென மூன்றே.
	


227


	 (இ-ள்.) நிறுத்தமுறையானே சொன்மிக்கணி யிலக்கணமாமாறுண ர்த்துதும்.
வந்தசொல்மீண்டு மீண்டுவருவது சொன்மிக்கணி யெனப்படும். அவையே மடக்கும்,
இசையந்தாதியும், அடுக்கு, மென மூவகையவாகு மிவற்றைத் தனித்தனி விளக்குதும்.
எ-று. (1)
 
315. 	மடக்கணி யோர்மொழி மடங்கி வரலவை
யிடையிடு முதல்கடை யிருவழி மடக்கு
மிடையிடா மடக்கு மெனநால் வகையே.
 
     (இ-ள்.) மடக்காமாறுணர்த்துதும். அடியானுஞ் சொல்லானு மெழு த்தானும் வரு
மடக்காயினு மிங்கண் சொல்லணியாக வருகையிற் சொல் லாலாயின மடக்குவருமெனக்
கொள்க. ஆகையி லொரு சொல்பெயர்ந்து மீண்டுவருவது மடக்கணியெனப்படும்.
இதுவே யிடையிடாவரவு மிடை யிட்டுவரவும் பெறுமே. அன்றியு மிடையிட்டு வருங்கான்
முதலினு மீற்றினு மிருவழியினும் வரப்பெறும். வரின்முதன் மடக்கெனவுங்
கடைமடக்கெனவு மிருவழி மடக்கெனவும் வழங்கும். விதியை விளக்குதும். (வ-று.)
'இனியாரினியாரெனைக்காப்ப,' ரெனவு 'நீயே நீயே முன்காத்தும் பின்காப்பது
நாளுநாளுமே." எனவு மிவையிடை யிடாமடக் கெனக்கொள்க. பிறவு மன்ன. 'இனியா
ரெனைத்தாங்கி யென்றுயரை நீப்பா, ரினியார் மறைநூலா லென்னைத் தெளிப்பா,
ரினியா ரென்னோய்க் கமுதா யாற்றுவா ரென்றா, யினியாருன் னல்லா லெனக்கு."
என்பதிடையிடு முதல்மடக்காயிற்று. - விருத்தம். - "வரைவா யல்கா மெய்ம்மறை
யெங்கும் வளர்காலம், விரை வாய்ப் பைம்பூ வொத்தற மெல்லாம் விளைகாலந்,
திரைவா யொவ்வாச் சீர் நல மல்கித் திளைகால, மரைவாய்த் திங்க டாங்கடி நாமே
யணிகாலம்." என்பதிடையிடு கடைமடக்காயிற்று. "ஆரென்னைத் தேற்றி யருள்புரிந்தார்
நீயன்றோ, வாரென்னோ யாற்றி யமுதானார் நீயன்றோ." என்பதிடையிடு வழி
மடக்காயிற்று. இவையெலா மியற்ற மிழிடத்துஞ் சிறப்போடு வருமென்றுணர்க.
அன்றியுஞ் சூத்திரத்திலே நால்வகையென்னாது என நால்வகை யென்ற மிகையால்.
மற்றைமடக்குகள் வருமாறு:- தண்டியலங்காரம்:- "ஆதியிடை கடையாதியோ டிடைகடை,
யிடையொடு கடைமுழு தெனவெழு வகை த்தே." என்றாராகலின், ஆதிமடக்கும் -
இடைமடக்கும் - கடைமடக்கும் - ஆதியோ டிடைமடக்கும் - ஆதியோடு கடை
மடக்கும் - இடையோடு கடை மடக்கும் - மூன்றிடத்து முற்றுமடக்கும் - என
வெழுவகைப்படும் - அன்றியும். - "ஓரடி யொழிந்தன தேருங் காலை, யிணைமுதல்
விகற்ப மேழு நான்கு, மடைவுறும் பெற்றியி னறியத் தோன்றும்." - என்றா ராகலின்,
முதலடிக்கண்ணு மிரண்டா மடிக்கண்ணு மடக்குதலும், முதலடிக்கண்ணு மூன்றா
மடிக்கண்ணு மடக்குதலும், முதலடிக்கண்ணு நான்காமடிக் கண்ணு மடக்குதலும், இரண்டா
மடிக் கண்ணு நான்காமடிக் கண்ணுமடக்குதலும்,
	


228


	இடையீரடிக்கண்ணு மடக்குதலும், இரண்டா மடிக் கண்ணு மீற்றடிக்கண்ணு மடக்குதலும்,
என்னு மாறு மீரடிமடக்கும், ஈற் றடியொழித்தேனை மூன்றடிக்கண்ணு மடக்குதலும்,
ஈற்றயலடி யொழித் தேனை மூன்றடிக்கண்ணு மடக்குதலும், முதலயலடி யொழித்தேனை
மூன்றடிக்கண்ணு மடக்குதலும், முதலடி யொழித்தேனை மூன்றடிக்கண்ணு மடக்குதலும்,
என்னு நான்கு மூன்றடிமடக்கும், நான்கடியு மடக்குதன் முற்றுமடக்கும், இவை
பதினைந்தும் மேற்கூறிய வேழு கூறுபாட்டோடு முறழ நூற்றைந்து வகைப்படும். அவை
இடையிடாதனவும், இடையிட் டனவும், இடையிட்டு மிடையிடாதனவும், என்னு
மூவகையோடு முறழ முந்நூற்றொருபத்தைந்து வகைப்படும். அவற்றுள் சிலவருமாறு:-
(வ-று.) "துறைவா துறைவா பொழிற்றுணைவா நீங்க, வுறைவார்க்கு முண்டாங் கொல்
செல்வஞ் - சிறைவாங்கிப், பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள் வாய், வாடைக்
குருகார் மனம்." எ-து. முதலடி முதன்மடக்கு. "கனிவா யிவள் புலம்பக் காவனீ னீங்கி,
லினியாரினியா ரெமக்குப் - பனிநா, ளிரு வராய்த் தாங்கு முயிரின்றி யெங்குண்,
டொருவராய்த் தாங்கு முயிர்." எ-து. இரண்டாமடி முதற்கண்மடக்கு. "தேங்கானன்
முத்தலைக்குந் தில்லைத் திருநடஞ்செய், யோங்காரத்துட் பொருளா மொண்சுடர்க்கு -
நீங்கா, மருளா மருளாதரித் துரைக்கு மாற்றம், பொருளாம் புனைமாலை யாம்." எ-து.
மூன்றாமடி முதன்மடக்கு. "இவளளவுந் தீயுமிழ்வ தென்கொலோ தோயுங், கவள
மதமான் கடமுந் - திவளு, மலையார் புனலருவி நீயணுகா நாளின், மலையா மலையா
னிலம்." எ-து. ஈற்றடி முதன்மடக்கு. இவை நான்கு மோரடி மடக்கு. "நினையா
நினையா நிறைபோயகலா, வினையாவினையா மிலமா - நனையார், குரவாருங் கூந்தற்
குமுதவாய்க் கொம்பின், புரவா ளரிபிரிந்த போது.' எ-து. முதலீரடிமடக்கு. "அடையா
ரடையா ரரணழித்தற் கின்ன, லிடையாடு நெஞ்சமே யேழை - யுடைய, மயிலா
மயிலாமதர் நெடுங்கண் மாற்றங், குயிலாமென் றெண்ணல் குழைந்து." எ-து. முதலடியு
மூன்றா மடியு மடக்கு. "மானவா மானவா நோக்கின் மதுகரஞ்சூழ், கானவாங் கூந் தலங்
காரிகைக்குத் - தேனெ, பொழியாரந் தார்மேலு நின்புயத்து மேலுங், கழியா கழியா
தரவு." எ-து. முதலடியு மீற்றடியு மடக்கு. "மாத ருயிர்தாங்க வள்ளல்வரு நெறியிற்,
பேதுநோய் செய்யும் பெரும்பாந்தள் - யாதும், வரையா வரையா வெனுமா மதமா,
விரையா விரையா வெழும்." எ-து. கடையீரடிமடக்கு. "குரவார் குழலாள் குயின்மென்
மொழிதாம், விரவாவிரவா மென்றென்ற - லுரவா, வரவா வரவாமென நினையார்
வையம், புரவா ளர்க் கீதோ புகழ்." எ-து. இடையீரடிமடக்கு. "மழையார்
கொடைத்தடக்கை வாள்கைய னெங்கோன், விழையார் விழையார் மெல்லாடை -
குழையா, விழையா முணவுங் கனியா மினமு, முழையா முழையா முறை." எ-து.
இரண்டாமடியு மீற்றடியு மடக்கு. இவையாறு மீரடிமடக்கு. "இறைவா விறைவால்
வளைகாத் திருநதியா, ருறைவா ருறைவார் புயலா - னறைவாய்,
	


229


	வண்டளவு வண்டளவு நாளின் மயிலாலக், கண்டளவு நீர்பொழியுங் கண்." எ-து.
ஈற்றடியொழித்தேனை மூன்றடிமடக்கு. "மலையு மலையு மகிழ்ந்துறையும் வேயுங்,
கலையுங் கலையுங் கடவுந் - தொலைவி, னமரி யெமக்கா மென்னு முன்னிற், குமரி
குமரிமேற் கொண்டு." எ-து. ஈற்ற யலடியொழித்தேனை மூன்றடியுமடக்கு. "கொடியார்
கொடியார் மதின்மூன்றுங் கொன்று, படியார் பணைத்தடக்கை நால்வாய்க் - கடியா,
ருரியா ருரியாரெனை யாள வோதற், கரியார் கரியார் களம்." எ-து. முதலயலடி
யொழித்தேனை மூன்றடியு மடக்கு. "பாலையாழ் தன்னிற் பதிற்றிரட்டி வேய்ந்தன்றே,
மாலைவாய்மாலைவா யின்னிசை - மேலுரையே, மேவலர் மேவலர் மெல்லாவி
வாட்டார், காவலர் காவலாங் கால்." எ-து. முதலடியொழித்தேனை மூன்றடியுமடக்கு.
இவை நான்கு மூன்றடி மடக்கு. "வரைய வரைய சுரஞ்சென்றார் மாற்றம், புரைய
புரையவெனப் பொன்னே - யுரைய, னனையா யனையாதொடை நம்மை வேய,
வினையா வினையா விரைந்து." எ-து. முற்றுமடக்கு. இவை நான்கு மூன்றடி மடக்கு.
இவை பதினைந்து மடிமுதன்மடக்கு. "மனமுங் குழைய குழைய வாமாந்த, ரினநீங் கரிய
கரிய - புனைவனத், துளவாவி வாவிகயல் வாட்டு மென்னுள்ளங், களவாள வாளவாங்
கண்." எ-து. இடைமுற்றுமடக்கு. ஒழிந்த விடைமடக்கும் வந்துழிக்காண்க. "மாலை
மருளாது வஞ்சியான் வஞ் சியான், மேலை யமரர் கடைவேலை - வேலை, வளையார்
திரைமேல் வருமன்ன மன்ன, விளையா ளிவளை வளை." எ-து. இறுதிமுற்றுமடக்கு.
ஒழிந்தவிறு திமடக்கும் வந்துழிக்காண்க. "கொண்டல் கொண்டலா பொழிறொறும்
பண்ணையாய்ப் பண்ணையாய்த் துள்ளார, வண்டல் வண்டலாய்த் தாது
கொண்டியற்றலான் வருமணன் மணன்முன்றிற், கண்டல் கண்டனர் மகிழ்செய்ய|
வோதிமங் கலந்துறை துறைவெள்ள, மண்டன் மண்டல முழுதுடன் வளைதரு வளைதரு
மணிவேலை." எ-து. முதலு மிடையு மடக்கிய முற்றுமடக்கு. ஒழிந்தவாதியோ
டிடைமடக்கும் வந்துழிக்காண்க. "நிரையார் நிரையா மணுபோ னிறைகோடல் கோடல்,
வரையார் வரையா ரிரு ண்முன் வருமாலை மாலை, விரையா விரையா வெழுமின்
னொளிர்மேக மேக, முரையா ருரையா ரினுமொல் லெனுமுல்லை முல்லை." எ-து.
முதலுங்கடையு மடக்கிய முற்றுமடக்கு. ஒழிந்தவாதியொடு கடைமடக்கும்
வந்துழிக்காண்க. "வருகம் புளினம் புளினம் பயில்வேலை வேலை, யொருகா லுலாவா
வுலவாரு மோத மோதம்,வருகே தகைகே தகைசேர் தருமன் னமன்ன, பெருகா தனகா
தனவேசை மாதர் மாதர்." எ-து. இடையுங்க டையுமடக்கிய முற்றுமடக்கு. ஒழிந்த
விடையொடு கடைமடக்கும் வந்துழிக்காண்க. "களைகளைய முளரியரு கடைகடைய
மகளிர் கதிர்மணியு மணியும், வளைவளைய கரதலமு மடைமடைய மதுமலரு
மலையமலைய, விளைவிளையர் கிளைவிரவி யரியரியின்மிசை குவளைமலரு மலருங்,
கிளைகிளை கொ ளிசையளிகண் மகிழ்மகிழ்செய் கெழுதகைய மருதமருதம்." எ-து.
மூன்றிடத்துமடக்கிய முற்றுமடக்கு. ஒழிந்த முழுமடக்கும் வந்துழிக்கா
	


230


	இனியிடையிட்டு வந்தமடக்கு மிடையிடாது வந்தமடக்கு மிவ்வா றேகொள்க. அவற்றுள்
சிலவருமாறு. - "தோடுகொண் டளிமுரன்றெழக் குடைபவர் துறைசேர், தோடுகொண்ட
தேமலர் சுமந்தகில் கமழ்ந்தவர்தந், தோடுதைந்த செஞ்சாந் தணிந்திளை
முலையிடைதோய்ந்த, தோடுதண் புன னித்திலந் துறைதொறுஞ் சொரியும்." எ-து.
இடையிடாதன முற்றுமடக்கு. "பரவி நாடொறும் படிய வாம்பல் புகழ்பரப்பு, மிரவி சீறிய
படிய வாம்பதி யெரிகவர, விரவி மாண்பயில் படியவாம் வேய்தலை பிணங்கு, மருவி
வாரணம் படியவாம் பல்பணை மருதம்." எ-து. இடையிட்டிடைமுற்று மடக்கு. "சொன்ன
நாளிது சுரும்பிம ரிதழிபோன்கால, மின்னு வாள்விட வில்வ ளைத் தூன்றிய கால,
மின்ன கார்முகி லினமிருண் டெழுதரு கால, மன்னர் வாரலா தாம்வரு மயிலினம்
வருகாலம்." எ-து. இடையிட்டிறுதி முற்றுமடக்கு. இவை யிடையிட்டு வந்தன விவற்றது
விகற்பம்வந்துழிக்காண்க. இனி யிடையிட்டு மிடையிடாதும் வருவனவற்றுள்
சிலவருமாறு:- "வாமானமான மழைபோன் மதமான மான,நாமான மான முகிறாழ்ந்
ததமான மான, தீமான மானவர் புகழ்த்திற மானமான, காமான மான கற்சுரங்கன்
மானமான." எ-து. இடையிட்டு மிடையிடாதும் வந்து மிடையு மிறுதியுமடக்கிய மடக்கு.
பிறவும்வந்துழிக்காண்க. "வருமறை பலமுறை வசையறப் பணிந்தே, மதியொடு சடைமுடி
மருவுமப் பணிந்தே, யருநட நவில்வது மழகுபெற் றன்றே, யருளொடு கடவுவ
தணிகொள் பெற் றன்றே,திருவடி மலர்வன திகழொளிச் சிலம்பே, தெளிவுட னுறைவது
திருமறைச் சிலம்பே, யிருவினை தடிப்பவ ரடைபதத் தன்றே, யிமையவர் முதலவ னென
நினைத் தன்றே." என வருவனவற்றுள் வேறுபாடுமறிக. அன்றியும்,
 
     அம்மடக்கலங்காரங்கள் வேறுபாடு வருமாறு:- தண்டியலங்காரம். - "அடிமுழுது
மடக்குத லாங்கதன் சிறப்பே." என்றாராகலின், இரண்டடிமடக்கும், மூன்றடி மடக்கும்,
நான்கடி மடக்கும், என மூவகைப்படும். அவற்றுள் சிலவருமாறு:- "விரைமேவு மதமாய
விடர்கூடு கடுநாக, விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக, வரைமேவு நெறியூடு
தனிவாரன் மலைவாண, நிரைமேவு வளைசோர விவளாவி நிலைசோரும்." எ-து.
முதலீரடிமடக்கு. "கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்க, ளுடன்மேவு நிறைசோர
மெலிவார்தம் முயிர்நோவுங், கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்க, ளுடன்மேவு
பெடைகூடு முறுகாலு முரையார் கொல்." எ-து. முதலடியு மூன்றாமடியு மடக்கு.
"கருமாலை தொறுகாதல் கழியாது தொழுதாலு, முருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்,
னுருமாய மதனாக மருமாறு புரிவார்முன், வருமாய வினைதீர வொருநாளு
மருளார்கொல்.' எ-து. இடையீரடி மடக்கு. "மறை நுவல் கங்கை தாங்கினார், நிறைதவ
மங்கை காந்தனார்,குறையென வண்டர் வேண்டவே, மறைநுவல் கங்கை தாங்கினார்"
எ-து. முதலடியு மீற்றடியு மடக்கு, "கொல்லியம் பொருப்பனை மேவார் கோனக,
ரில்லெரி மேவுவ தி யம்பல் வேண்டுமோ, வல்லியந் தாமரை வனங்களாயின,
வல்லியந்தாமரை வனங்க ளாயின."
	


231


	எ-து. கடையீரடி மடக்கு. "நலத்தகை பிறவிரு சரண மேத்துநங், குலத்தகை பணிகொ
ளேகம் பரத்தனே, நலத்தகை மக ளொரு பாக நண்ணுமெங், குலத்தகை பணிகொ
ளேகம் பரத்தனே." எ-து. இரண்டாமடியு மீற்றடியு மடக்கு. இவையாறு மீரடி மடக்கு.
"காமரம் பயினீர் மதுகரங், காமரம் பயினீர் மதுகரங், காமரம் பயினீர் மதுகர, நாமர
நதையுற நிலையார் நமர்." எ-து. ஈற்றடி யொழித்தேனை மூன்றடியு மடக்கு. "கடிய
வாயின காமரு வண்டின, மடிய வாமகன்றாருழை வாரலா, கடிய வாயின காமரு
வண்டினங், கடிய வாயின காமரு வண்டினம்." எ-து. இரண்டாமடி யொழித்தேனை
மூன்றடியு மடக்கு. "கோவளர்ப்பன கோனகரங்களே, கோவளர்ப்பன கோனகரங்களே,
மேவளக்கர்வியன் றிரைவேலைசூழ், கோ வளர்ப்பன கோனகரங்களே." எ-து. ஈற்றய
லடியொழித்தேனை மூன்றடியு மடக்கு. "வரியவாங்குழன் மாதரிளைங்கொடி,
யரியவாங்கயத் தானவ னங்களே, யரியவாங்கயத் தானவனங்களே, யரிவாங்கயத்
தானவனங்களே." எ-து. முதலடி யொழித்தேனை மூன்றடியு மடக்கு. இவை நான்கு
மூன்றடி மடக்கு. "வானகந்தரு மிசையவாயின, வானகந்தரு மிசையவா யின, வானகந்தரு
மிசையவாயின, வானகந்தரு மிசையவாயின." எ-து. நான்கடிமடக்கு. இதனையே
யேகபாதமென்க. அன்றியும், ஒருசொல்லே நான்கடியாய் மடக்குமென்பார். (வ-று.)
"மாதானு மாதானு, மாதானு மா தானு, மாதானு மாதானு, மாதானு மாதானு.' எ-து.
முற்றுமடக்கு. "பணி பவ னந்தமதாக மன்னுவார், பணிபவ னந்தமதாக மன்னுவா,
ரணியன மேயதுமன் பராகமே, யணியன மேயதுமன் பராகமே." எ-ம். "கலைநிலா
வருமாலை மணங்கொள்வான், மலையமாருத மாறலமாதர்கண், கலைநிலாவரு மாலை
மணங்கொள்வான், மலையமாருத மாறலமாதர்கண்." எ-ம். "ஓதநின் றுலவா
வரும்வேலைவாய், மாதரங்க மலைக்குநிகரவே, யோதநின்றுல வாவ ரும் வேலைவாய்,
மாதரங்க மலைக்குநிகரவே." எ-ம். வரும். பிறவுமன்ன. "மாலை மாலை யாகவே
யனங்கவேள் பயிறரு, மாலை மாலை வேட்டவர் மனங்கலே றவன்றுழாய், மாலை
மாலை யோவுடைத் ததுநினைந் தெழுதரு, மாலை மாலை யாவுடை யவரைவந்
திடர்செயும்." எ-து. இடையிட் டிறுதி முதன்மடக்கு. "கயலே தாவருங் கடிபுனற் காவிரி,
காவிரி மலருங் கரைபொரு மரபு, மரவம் பூஞ்சினை வண்டொடு சிலம்புஞ், சிலம்பு
சூழ்தருந் தளிரடி மனைக் கயலே." எ-து. அந்தாதிமடக்கு. அன்றியும். தண்டியலங்காரம்.
- "ஓரெழுத்து மடக்கலு முரித்தென மொழிப." என்றார். (வ-று.) "நாநா நாதங் கூடிசை
நாதந்தொழி லோவாய், தாதா தார மாக விரைத்தண் மலர் மீதே, வாவா வார்தண்
சோலையில் வாழும் வரிவண்டே, யாயா யானிற் சேர்த்துவ தன்பர்க் குரையாயால்.'
ஓரெழுத்து மடக்கு. (2)
 
316. 	இசையந் தாதியே யீற்றுச் சொன்மீண்
டிசைபெற வுருபுவே றெனினு மியைதலே.
	


232


	  (இ-ள்.) இசையந்தாதியாமாறுணர்த்துதும். ஒருவசனத்தீறாக நின்ற மொழிமற்
றொருவசனத்தாதியாக வருவ திசையந்தாதி யெனப்படும். அவற்றிற்குருபு வேறெனினு
மென்றமையால் வேறுருபுபெற்றும் பெறாமையு மாமெனக்கொள்க. இதுவே யோரடி
யீற்றினின்றது மற்றோரடி முதலாக வரினந்தாதித் தொடையெனச்செய்யு ளிலக்கணத்துட்
சொன்னார்புலவர். இயற்றமிழுதாரணம்:- "மாந்தர்க்கெல்லாங் கேள்வியாலறிவு
மறிவினாற்கல் வியுங் கல்வியாற்புகழும் புகழாற் பெருமையும் விளைந்துவளரு மன்றோ."
எ-ம். பிறவுமன்ன. எ-று. (3)
 
317. 	அடுக்கணி யொருபொருட் கடுக்கிய திரிசொ
லடுக்கி வைப்ப தடுக்கணி யெனப்படும்.
 

     (இ-ள்.) அடுக்கணி யாமாறுணர்த்துதும். சிறப்புக் காட்டவும், அன்புதுயர்
களிப்பிவற்றை மிக்கெனத் தோற்றவு, மொருபொருளைத்தரும் பல திரிசொல் லடுக்கி
வைப்ப தடுக்கணி யெனப்படும். (வ-று.) "இகழ்ந்தொ ளித்தானோ வென்னை
யிகழ்ந்தகன் றானோ கொடிய நெஞ்சான்." எ-ம். - வெண்பா. - "என்னுயிர் காத்துப்
புரந்தாண்ட வென்னிறைவன், றன்னுயிர் பட்டிறந்து சாய்ந்தொழிந்தான் - பின்னுயிராய்,
மீண்டென்னைக் காத்தோம்ப மேவிப்புரந் தளிப்ப, யாண்டையும் யார்யா ரெனக்கு."
என்பன விவற்றுட் டுயரின் மிகுதியைக் காட்டப் பலதிரி சொல் சிறப்பி லடுக்கி
வந்தவாறு காண்க. எ-று. (4)

..................................

மூன்றாவது:-சொல்லெஞ்சணி.

3. Ellipsis.
 
318. 	எஞ்சணி யென்ப வெளிதுணர் பலமொழி
துஞ்சில் சிறப்பிற் றோன்றா தொழித்தலே.
 
     (இ-ள்.) சொல்லெஞ்சணி யிலக்கணமாமாறுணர்த்துதும். உணர்தற்
கெளிதாயவிடத்துப் பெயர் வினைமுதலிய சொல்லொழித்துரைப்பது சொல்லெஞ்சணி
யெனப்படும். இவையே யைந்திருவகையவாகி யீரைந்தெச்ச மென்மனார் முன்னோர்.
எ-று. (1)
 
319. 	பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழியிசை
யெதிர்மறை யிசைக்குறிப் பெஞ்சணி பத்தே.
 
     (இ-ள்.) எஞ்சணியாமாறுணர்த்துதும். பெயரெஞ்சணியும், வினை யெஞ்சணியும்,
உம்மையெஞ் சணியும், சொல்லெஞ்சணியும், பிரிநிலையெஞ் சணியும், எனவெஞ்சணியும்,
ஒழியிசையெஞ்சணியும், எதிர்மறை யெஞ்சணியும், இசையெஞ்சணியும், குறிப்பெஞ்சணியு,
மெனச் சொல்லெஞ்சணி யொருபஃதாம். அவை. (வ-று.) "கொன்றன்ன வின்னாசெயினு
மவர்செய்த, வொன்று நன்றுள்ளக் கெடும்."
	


233


	எ-து. பிறரின்னாசெயினு மவர்செய்த நன்றுதா னுள்ளக் கெடுமென்று பிறருந் தானுமென
வெஞ்சிய விருபெ யர்கொண்டு முடிக்கவேண்டலிற் பெயரெஞ்சணி யாயிற்று.
வினைச்சொல் லாயினும் வினையைப்பற்றிவரு முருபு சொற்களாயினு மெஞ்சவரின்
வினை யெஞ்சணி யெனப்படும். - "நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்,
கினத்தியல் பதாகு மறிவு." எ-து. நீர்சேருநிலத்தியல்பானது திரிவதுபோல
மாந்தர்சேருமினத்தியல்பானே தமக்காகு மறிவென்று முகிக்கவேண்டலிற் சேருமென்றும்
வினைச்சொல் லெஞ்சியவாறு. - "சிறுவரையே யாயினுஞ் செய்த நன்றல்ல, துறுபய
னில்லை யுயிர்க்கு." எ-து. தன்னாற் செய்யப்பட்ட நன்றென்று முடிக்க வேண்டலி
லாலெனும் வேற்றுமை யுருபுசொல்லெ ஞ்சியவாறு. ஆகையி லீரிடத்தும்
வினையெஞ்சணி யாயிற்று. - "இலங்குவா ளிரண்டினா லிருகைவீசி." எ-து.
இருகையுமென்று முடிக்கவேண்டலி னும்மை யெஞ்சணி யாயிற்று. ஆகையி லும்மை
யெஞ்சணியு மும்மைத் தொ கையுமொக்கும். - "இசையா வொருபொரு ளில்லென்றல்
யார்க்கும், வ சையாவ தெங்கு மில்." எ-து. இல்லென்று சொல்லுத லெனமுடிக்க
வேண்டலிற் சொல்லெஞ்சணி யாயிற்று. - ஒரு சொல் தன்னிலையன்றிப் பிரிந்து
மற்றவிடத்துங் கூட்டல் வேண்டுழிப் பிரிநிலை யெஞ்சணி யெனப்படும். - வெண்பா. -
"அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம், பொறுமின் பிறர்கடுஞ் சொற் போற்றுமின் வஞ்சம்,
வெறுமின் வினைதியார் கேண்மை யெஞ்ஞான்றும், பெறுமின் பெரியார்வாய்ச் சொல்."
என்ப திதிலே யெஞ்ஞான்று மெனுஞ்சொல் மற்றவழியும்கூட்டி யறிமினெஞ்ஞான்று
முதலிய வந்து முடிக்கவேண்டலிற் பிரிநிலை யெஞ்சணி யாயிற்று. இதுவே முத-லிடை-
கடைப்-பற்றிவரின் மேற்காட்டிய தாப்பிசையாயினு மளைமறி பாப்பாயினு மென்று
வழங்கும். - "உண்ணலு மீதலு மாயிரண் டல்லது, முண்டோ பொருட்கட் பயன்." எ-து.
உண்ணலு மீதலுமெனவென்று முகிக்கவேண்டலி லெனவே யெஞ்சணி யாயிற்று. -
சொன்னவையன்றி மற்றொன்று தோன்றக்கூற லொழியிசை யெஞ்சணி யெனப்படும்.
"கற்றோருங் காணலரிது' என்றாற் கல்லாதவர்க் கெளிதல்லதெனத் தோன்றலி
லொழியிசை யெஞ்சணி யாயிற்று. - ஓகார வெதிர்மறையு மும்மையெதிர்மறையு மென
வெதிர்மறையெஞ்சணி யிருவகைப்படும். ஆகையி லொன்றை மறுக்க வெதிர்
மறைச்சொல்லின்றி யோகாரம்வரினு மும்மைவரினு மவ்வலங்காரமாகும். செய்யே
னென்பதற்கு - யானோ செய்வே, னென வோகார வெதிர்மறை யெஞ்சணி யாயிற்று.
இவ்வெழுத் திவ்வழி திரியவும் பெறுமென்றாற் றிரியாமையும் வருமெனத் தொன்றலி
லும்மை யெதிர்மறை யெஞ்சணி யாயிற்று. - 'ஒல்லென நதிவந்தோடு,' மென்புழி
ஒல்லென வொலித்தென முடிக்கவேண்டலி னிசையெஞ்சணி யாயிற்று. அங்ஙனம்
அம்மென லிம்மெனல் வந்தொலி வினையெஞ்ச வருவன வெல்லா மிவ்வலங்கார மாகும்.
என்னை. ஒலி யெனினு மிசை யெனினு மொக்கும். அன்றியு மிருபயன்
	


234


	றிரிசொல்வந்தொன்று சொல்ல மற்றொன்று பொருளிசைத்தற் கிதமாக வரி
னிசையெஞ்சணியென் மருமுளரே. ஆயினு மினிவரும்படி யிது சிலேடை யென்று
பொருளணி யாகும். அச்சத்தின் குறிப்புச் சொல்லும், சீக்கிரத்தின் குறிப்புச் சொல்லும்,
முதலிய வந்தவற் றவற்றிற்குரிய வினைச் சொல்லெஞ்ச வருவன குறிப்பெஞ்சணி
யெனப்படும். 'துண்ணென நின்றான்.' 'ஐயெனப்போனான்.' என்பன துண்ணென
வெருவி-யையயென விரைந்தெனக் - கூட்டி யவ்வவச் சொல் குறித்த வினையோடு
முகிக்க வேண்டலிற் குறிப்பெஞ் சணியாயின. அன்றியுமொன்று சொல்லிக் குறித்த
மற்றொரு பொருளைத் தோற்றுவித்தல் குறிப்பெஞ்சணி யென்மரு முளரே. ஆயினு
மினிவரும்படி யிது நுட்ப மென்று பொருளணி யாகும். ஆகையிற் சொல்லெஞ்சணி
யீரைந்தும் வந்தவாறு காண்க. - நன்னூல். - "பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென
வொழியிசை, யெதிர்மறை யிசையெனுஞ் சொல்லொழி பொன்பதுங், குறிப்புத் தந்த
மெச்சங் கொள்ளும்." - தொல்காப்பியம். - "அவற்றுட் பிரிநிலை யெச்சம் பிரிநிலை
முடிபின. - வினை யெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு, நினையத் தோன்றி முடிபா
கும்மே. யாவயிற் குறிப்பே யாக்கமொடுவருமே. - பெயரெஞ்ச கிளவி பெயரொடு
முடிமே. - ஒழியிசை யெச்ச மொழியிசை முடியின. - எதிர்மறை யெச்ச மெதிர்மறை
முடிபின. - உம்மை யெச்ச மிருவீற் றானுந், தன்வினை யொன்றிய முடிபா கும்மே. -
தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை, நிகழுங்கால மொடு வாராக் காலமு, மிறந்த
காலமொடு வாராக் காலமு, மயங்குதல் வரையார் முறை நிலையான. - எனவெ னெச்சம்
வினையொடு முடிமே. - எஞ்சிய மூன்றின் மேல்வந்து முடிக்கு, மெஞ்சு பொருட்கிளவி
யிலவென மொழிப. - அவைதாந், தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும். - சொல்லெ
னெச்ச முன்னும் பின்னுஞ், சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே. - அவை யல கிளவி
மறைத்தனர் கிளத்தல்." - இவை மேற்கோள். எ-று. (2)

..................................

நான்காவது:-சொல்லொப்பணி.

4. Comparison.
 
320. 	ஒப்பணி திரிபியை பொழுகிசை யியைபிசை
தப்பில் சமமெனத் தகுநால் வகையே.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே சொல்லொப்பணி யிலக்கணமாமா றுணர்த்துதும்.
இவை யொப்புமையைப்பற்றி வருவன வாகையில் சொல் லொப்பணி யெனவழங்கும்.
இவையே திரிபியைபு - மொழுகிசையு - மியை பிசையுஞ் - சமமு - மென
நால்வகையாகும். இவற்றைத் தனித்தனி விளக்குதும். எ-று. (1)
 
321. 	திரிபியை பொருமொழி சேர்பல் லுருபு
முருபொன் றணைபல வுரையு மென்ப.
	


235


	(இ-ள்.) திரிபியைபணியாமாறுணர்த்துதும். ஒருபெயரு மொருவினையும்
பலவேறுருபுபெற்றும், பலபெயர் பலவினை யோருருபுபெற்றும், பல வழிவரத்தொடுப்ப
தியைபு திரிபாகித் திரிபியைபெனப்படும். (வ-று.) - தேம்பாவணி. - "மாண்டகையா
ரறஞ்சார்பா ரல்லதின மனுச்சாரா, ராண் டகையா ரருட்சாரார்க் கல்லதொரு துயர்சாரா,
சேண்டகையா ரிவன்சார்பாற் செல்லுதுநா மெனவானார், பூண்டகையா லறஞ்சார்ந்தாள்
புரசாரப் புகல்செய்தாள்." எ-ம். இதனுளியைந்த வொரு சொல் லாறுதிரிபாக வந்தவாறு
காண்க. - தாழிசை. - "வழுவார்க்கு நீநிலையே மருள்வார்க்கு நீதெளிவே, யழுவார்க்கு
நீகளியே யயர்வார்க்கு நீதிதியே, கல்லார்க்குக் கலைக்கடனீ கடவார்க்கு நிலைத்திறநீ,
யில்லார்க்கு மிரணியநீ யெல்லார்க்கு மெல்லாநீ." எ-ம். "விரைவினாற் காற்றெனவு
முழக்கத்தாற் கடலெனவு மச்சத்தா லிடியெனவுஞ் செய்குலையாற் கூற்றெனவு மதகரிவந்
தெதிர்த்த படை முருக்கினதே." எ-ம். இவற்றுட் பலபெயரோருருபு பெற்றுத் திரி
பியைபாயினவாறு காண்க. எ-று. (2)
 
322. 	ஒழுகிசைச் சீரொத் தொழுகிய செய்யுள்போல்
வழுவில வியற்றமிழ் வருதலு மாகும்.
 
     (இ-ள்.) ஒழுகிசையணியாமாறுணர்த்துதும். மேற்காட்டிய செய்யு யிலக்கணத்தா
லொத்தசீரொடு வருவதொழுகிய வோசை யென்பது போல வியற்றமிழிடத்தும் பெயரு
மீரெச்சமு முரிச்சொல்லு மிடைச் சொல்லும் பலபல வசனத்தி லொப்பவந்து வருமெழுத்
தெண்ணு மொன்றுவ தொழுகிசை யலங்கார மெனப்படும். (வ-று.) 'விடாது நறுநெய் பூசி
நீங்கா தொளி மணிசேர்த்தி மங்கா மதுமலர் சூடி யொழுங்கிட வகுத்து
வனப்புறவளைத்துப் புடைப்பெழச் சொருகித் தமக்கழகாகவும் பிறர்க் கிழிவாகவும்
நள்ளிருட் கூந்தலை யளகமாக சேர்த்துவ ரிழிவிலை மாதரன்றோ.' எ-று. (3)
 
323. 	இயைபிசை சொல்லுரு பீற்றிலொத் தாதலே.
 
     (இ-ள்.) இயைபிசையணியாமாறுணர்த்துதும். பற்பல வசனத்திறுதி
மொழிகடம்மு ளுருபினொப்புமையா லியைந்துவருவ தியைபிசை யலங் காரமெனப்படும்.
இதுவே செய்யுளிலக்கணத் தியைபுத் தொடையென் றெண் விகற்பமாக வழங்குவ தெனக்
கண்டுணர்க. (வ-று.) 'செங்கதிர் நெடுங்கை நீட்டி மல்கிருட் கங்குலோட்டிப் படரொளி
முகத்தைக்காட்டிப் பருதியே கடன்மேலெழுந்துழிச் செவ்விதட்டாமரை பூப்பச்
சோலைவாய்ப் பறவைகளார்ப்ப வம்புவி யிராவிருணீப்ப வணியழகொப்பொன் றிலதே.'
என வியற்றமிழ். இனிச் செய்யு ளியைபிற் குதாரணந் தொடை விகற்பத்துடன் காண்க.
எ-று. (4)
 
324. 	சமமென்ப மாத்திரை தவுதல் வேற்றெழுத்
தொன்றுற லன்றி யொன்றிய சொல்லே
	


236


	320. 	மற்றவற் றினமா மாத்திரைச் சுருக்கந்
திரிப தாதி சேர்ந்தன பிறவே.
 
     (இ-ள்.) சமவணியாமாறுணர்த்துதும். இருமொழி பலமொழி தம்
முண்மாத்திரையானு மோரெழுத்தானும் வேறுபாடுடைய வாதலன்றித் தம்மு ளொப்ப
வருவது சமவணியெனப்படும். (வ-று.) எரியோ வெரியோ வங்கண் டொன்றுவதெனவும்,
பாடவோ பாடவோ வந்தாயெனவும், கந்தரக் கந்தாரத்தின்புகுக்குங் காந்தாரமெனவு,
மிவை மாத்திரை யொன்று வேறுபட வந்த சமவணி. பிறவுமன்ன. -
திருக்காவலூர்க்கலம்பகத் தாழிசை. - "வீதி மந்திர நூலியே, யாதி தந்திர வேலியே,
வென்றி தந்த மடங்கலே, நன்றி தந்த வடங்கலே, நீதி சுந்தர கோலியே, கோதி லந்தர
சீலியே, நிந்தை நீங்கு மனந்தமே, யெந்தை யீங்கரு ளந்தமே, பாதி யிந்தணி பாதியே,
சோதி வந்தணி சோதியே, பங்க நீத்தலர் கஞ்சமே, பங்க நீத்தமர் தஞ்சமே, யோதி
யம்பர ஞானமே, யேதி லும்பர மானமே, யோவ லீரென தன்பளே, காவ லுரர
சென்பளே." என்பதிதனு ளோவ்வொரேழுத்தே மாறி வேறுபடுவதன்றி யொன்றிய
பலசொல்லிணைந்து வந்த சமவணி. பிறவுமன்ன. அன்றியு மாத்திரை வேறுபட வருஞ்
சம மறைத்துரைப்பது மாத்திரைச் சுருக்க மெனப்படும். (வ-று.) - வெண்பா. -
"நேரிழையார் கூந்தலினோர் புள்ளி பெற நீண்மரமா, நீர்நிலையோ புள்ளிபெற
நெருப்பாஞ் - சீரளவு, பாட்டொ ன்றொழிப்ப விசையா மதனளவு, மீட்டொன் றொழிப்ப
மிடறு." என்பதி தனுள், ஓதி - கூந்தல், ஒதி - மரம், ஏரி - நீர்நிலை, எரி - நெருப்பு,
காந்தாரம் - பாட்டு - காந்தாரம் - இசை, கந்தரம் - மிடறு. பிறவுமன்ன. அன்றியு
மெழுத்துவே றுபடவருஞ் சமவணி வகையி னடுவுயிரெழுத்துளமொழியே யொரு
பொருளாகவு, மவற்றுண் முதலொழித்தொழிந்த மற்றீரெழுத்து, மிடையெ
ழுத்தொழிந்தமற்றீரெழுத்தும், வேறிரு மொழியாய் வேறிருபொருளைத்தர வரினது
வெதிர்ப்பதாதி யெனப்படும். (வ-று.) கவரி-கரி, வரி; கவலை-கலை, வலை; கமலம் -
கலம், மலம்; புவனம் - புனம், வனம்; பாசடை - பாடை, சடை; பூபதி - பூதி, பதி;
எ-ம். - வெண்பா. - "மூன்றெழுத்து மென்கோன் முதலீ றொருவள்ள, லீன்றுலகங்
காப்ப திடைகடை - யான் றுரைப்பிற், பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்தேற்றுங்,
காமாரி காரிமாரி." எ-ம். வெண்பா. - "கவரி கரிவரி சேர்ந்தார்த்துக் களிப்பத், தவமேத
வா வாழ மலையா - யுவமையைப்பின், வைத்தெரியை வானவழி யாமெனச் சேர்ந்தேன்.
கிந்தேரிதெரிக் கிரி." எ-ம். பிறவுமன்ன. அன்றியுஞ் சூத்திரத்துட் பிறவென்ற மிகையான்,
மிறைகவியென்றுஞ் சித்திரக்கவியென்று மொருவகைச்சமம் பற்றிய விருபதுவகைக்கவி
தண்டியலங்காரத்துட் காணப்படும். அவையாவன:- மேற்கூறிய மாத்திரைச் சுருக்கமுந்
திரிபதாதியுமன்றிக் கோமுத்திரியுங் கூடசதுக்கமு மாலைமாற்று மெழுத்துவ ருத்தனமு
நாகபந்தனமும் வினாவுத்தரமுங் காதைகாப்புங் கரந்துறைச் செய்யுளுஞ் சக்கரமுஞ்
சுழிகுளமுஞ் சருப்பதோப் பத்திரமு மக்கரச்சுத்தமு
	


237


	நீரோட்டமு மொற்றுப்பெயர்த்தலு மாத்திரைவருத்தனமு மு ரசபந்தனமுந் திரிபங்கியும்
பிறிதுபதரிபாட்டு மென்றிவை யிருபது மிறை கவி யென்பராயினு மிவை சிறுபான்மை
யாகையி லிங்கண் விரிவுக்கஞ்சி யொழித்தனம். எ-று. (5)
 
325. 	சொல்லணி மறிநிலை யைந்துங்கோ ளெட்டுஞ்
சொன்மிக் கணிமூன்றுஞ் சொல்லெஞ் சணிபத்துஞ்
சொல்லொப் பணிநான்குந் தொகையா றைந்தே.
 
     (இ-ள்.) முறையே சொல்லணி யோத்தினுள் விளக்கியவற்றின் றொகைச் சூத்திரம்
வந்தவாறு காண்க. எ-று. (6)
 

முதலோத்துச் சொல்லணியியன். - முற்றிற்று.

...........................

இரண்டாமோத்துப் பொருளணியியல்.
Chapter II. - Rhetorical figures.
 
326. 	பொருளணி யாறைம் புணர்ப்பெனத் தன்மை
யுரியபல விகற்ப வுவமை யுருவகம்
வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை தானே
யொட்டணி யவநுதி யூகாஞ் சிதமே
நுட்பம் புகழ்மாற்றே தன்மேம்பாட் டுரையே
பின்வரு நிலையே முன்ன விலக்கே
சொல்விலக் கிலேசஞ் சுவையே யுதாத்த
மொப்புமைக் கூட்ட மொப்புமை யேற்றம்
விபாவனை விசேடம் விரோதப் பிறிதுரை
விடையில் வினாவே வினவில் விடையே
சித்திர மொழிபமைவு சிலேடை சங்கீரண
மித்திறத் தனையவு மியம்பினர் கற்றோர்.
 
     (இ-ள்.) பொருளணி யிலக்கணமாமாறுணர்த்துதும். ஆதியி னிறு த்த முறையானே
சொல்லால் வருமணி யியல்பினை விளக்கிய பின்னர் பொருளால் வருமணி யியல்பினை
விளக்கலால் பொருளணி யெனும் பெயர்த்து. இதனுள் செந்தமிழ் நன்குணர்ந்தோர்
முன்றந்தவற்றுள் வேண்டாதன சிலவொழித்து வேண்டிய சிற்சில கூட்டித் தன்மை
முதற்கொண் டுரைத்த வணிக ளாறைந்தையுந் தனித்தனி விளக்குதும். சூத்திரத்தி
லனையவு வென்ற மிகையா லிவ்வாசிரியர் சொல்லாதவற்றை யிந்நூற் கண்ணே சொல்ல
வேண்டிய விடத்திற் பன்னூலினுஞ் சிற்சில வெடுத்துக் கூறுதும்.
	


238


	- தண்டி யலங்காரம். - "தன்மை யுவமை யுருவகந் தீவகம், பின்வரு நிலையே முன்ன
விலக்கே, வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை விபாவனை, யொட்டே யதிசயந்
தற்குறிப் பேற்ற, மேது நுட்ப மிலேச நிரனிறை, யார்வ மொழிசுவை தன்மேம்
பாட்டுரை, பரியா யம்மே சமாயித முதாத்த, மரிதுண ரவநுதி சிலேடை விசேட,
மொப்புமைக் கூட்ட மெய்ப்படு விரோத, மாறுபடு புகழ்நிலை புகழாப் புகழ்ச்சி,
நிதரிசனம் புணர்நிலை பரிவருத் தனையே, வாழ்த்தொடு சங்கீ ரணம்பா விகமிவை,
யேற்ற செய்யுட் கணியே ழைந்தே." இது மேற்கோள். எ-று. (1)
 
327. 	தன்மை யணியே தன்பொருட் குரிய
வன்மை பலவும் வழுவா துரைத்தலே.
 
     (இ-ள்.) தன்மை யலங்காரமாமாறுணத்துதும். பொருளதிகாரத்தி லுரிமை யெனும்
பெயரிட்டு வழங்கினதீண்டுத் தன்மை யணி யெனக் கொள்க. பொருளானுங்
குணத்தானுஞ் சாதியானுந் தொழிலானு முரி மையுந் தன்மையும் வழங்கு மென்றுணர்க.
(வ-று.) "மீனே தலையரும்ப வெண்மதியே தாளரும்பப், பானே யுடலரும்பப்
பாங்குருவே - தானே, ருடைத்தா டிருக்காவலூ ரகத்து வைத்தா, டுடைத்தாள்
வினைத்துயரே தொக்கு." - இது பொருட்டன்மையணி. - "உள்ளங் குளிர வுரோமஞ்
சிலிர்த்துறையுந், தள்ளவிழி நீர்த்ததும்பத் தன்மறந்தாள் - புள்ளொலிக்குஞ், சேந்தாமரை
வயல்சூழ்த் தில்லைத் திருநடஞ்செய், பூந்தாமரை தொழுத பொன்." - இது
குணத்தன்மையணி. - "பத்தித்த கட்டகறை மிடற்ற பைவிரியந், துத்திக்க வைந்ததுளை
யெயிற்ற - மெய்த்தவத்தோ, ராகத் தானம்ப லத்தா னாராவமிழ் தணங்கின், பாகத்தான்
சாத்தும் பணி." - இது சாதித்தன்மையணி. - "சூழ்ந்து முரண்டணவி வாசந்
துதைந்தாடித், தாழ்ந்து மது நுகர்ந்து தாதருந்தும் - வீழ்ந்தவிழ்ந்த, பாசத்தார் நீங்காப்
பரஞ்சுடரின் பைங்கொன்றை, வாசத்தார் நீங்காத வண்டு." - இது தொழிற்றன்மையணி.
தண்டியலங்காரம். - "எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ், சொன்முறை
தொடுப்பது தன்மையாகும். - அதுவே, பொருள்குணஞ் சாதி தொழிலொடு புலனாம்."
இவை மேற்கோள். எ-று. (2)
 
328. 	உவமை யென்ப துரிக்குணத் தொழிற்பய
னிவற்றொன்றும் பலவு மிணைந்து தம்மு
ளொப்புமை தோன்றச் செப்பிய வணியே.
 
     (இ-ள்.) உவமை யென்னு மலங்காரப் பொது விலக்கணமாமாறுண ர்த்துதும்.
இருபொருடம்முட் குணத்தானுந் தொழிலானும் பயனானு மொத்தன வாகக் காட்ட
லுவமை யலங்கார மெனப்படும். இவற்று ளொரு பொருட் கொரு பொரு ளுவமையும்,
ஒரு பொருட்குப் பலபொரு ளுவமையும், பலபொருட் கொருபொரு ளுவமையும்,
பலபொருட்குப் பலபொருளுவமையும்,
	


239


	வருமெனக் கொள்க. (வ-று.) 'பவளத் தன்ன செவ்வாய்.' இது பண்புவமை.
'அரிமாவன்ன போர்முகத் துப்பகை செகுத்தான்.' இது தொழிலுவமை. 'மாரியன்ன
பொழிவண் கையான்.' இது பயனுவமை. அன்றியும், 'பிறைபோலும் வாணுதல்.' இது ஒரு
பொருட் கொரு பொருளுவமை. 'பிறைபோலுங் கூனெயிறு.' இது பலபொருட் கொரு
பொருளுவமை. 'சோனை யம்புத்திர ளொப்பக் கணைதொடு வில்லான்.' இது ஒரு
பொருட்குப் பலபொரு ளுவமை. 'தேனணி கோதையார் சென்றணு கத்தா னடுவே,
மீனணி திங்கணேர்வேய்ந் துற்றாள்.' இது பலபொருட்குப் பல பொருளுவமை. -
தண்டியலங்காரம். - "பண்புத் தொழிலும் பயனுமென் றிவற்றி, னொன்றும் பலவும்
பொருளொடு பொருள்புணர்ந், தொப்புமை தோன்றச் செப்புவ துவமை." இது
மேற்கோள். எ-று. (3)
 
329. 	உவமை விகற்பித் துரைக்குங் காலை
விரிவே தொகையித ரேதரம் விபரித
மறுபொரு ணியம மைய மின்சொல்
கூடா வுவமை கோத்த மாலை
யுண்மை யெனவிவை யுவமை வகையே.
 
     (இ-ள்.) உவமை யலங்காரமாமாறுணர்த்துதும். எல்லா வலங்காரத் துள்ள முவமை
யலங்காரஞ் சிறப்புடைத் தென்பார். என்னை. பல நிற மதுமலர் சேர்த்திய
படலைமாலை போலவு நால்வகைச் சாந்துங் கூட்டி நனி கமழ் கலவை போலவு
மிவ்வலங் காரத்தானும் பலவகைப் பொருளை யொருப்படத் தோற்றித் தருதலாற்
கேட்பார்க் கிதுவே சிறந்த வின்பம் பயக்கு மென்றுணர்க. உவமித்த பொருளு முவமைப்
பொருளு முவமித்தற்குக் காரணமாகி யவ்விரண்டிற்கும் பொதுவாய் நிற்குங் குணமுந்
தொழிலும் பயனுங் கூடக் காட்டி தண்டி யலங்காரத்தில். - "போல மானப் புரையப்
பொருவ, நேரக் கடுப்ப நிகர்ப்ப நிகர, வேர வேய மலைய வியைய, வேற்ப வெள்ள
வுறழ வொப்ப, வன்ன வனைய வமர வாங்க, வென்ன விகல விளைய வெதிரத்,
துணைதூக் குண்டார் நகைமிகு தகைவீ, றனைகே ழற்றுச் செத்தொடு பிறவு, நவைதீர்
பான்மை யுவமைச் சொல்லே." என் னுமுருபுகளா லவற்றைப் பணிந்து வருவதுவமை
யியல்பெனக் கொள்க. இவ்வலங்காரத்தைப் பிரித்துப் பல விகற்பமாக வகுத்தார் புலவர்.
அவற்று ளீண்டு விரிவு முதற்கொண் டுண்மை யீறாகப் பதினொரு விகற்பங்களுந்
தொகுத் துரைத்தவாறு காண்க. சூத்திரத்துள் ளெனவிவை யென்ற மிகையால், சமுச்சயம்
- புகழ்தல் - நிந்தை - தெரிதரு தேற்றம் - இயம்புதல் வேட்கை - பலபொருள் -
விகாரம் - மோகம் - அபூதம் - பலவயிற்போலி - ஒருவயிற் போலி - பொது நீங்கு -
அநியம - முதலிய வுவமை யலங்காரங்களும் வரும். சமுச்சயவுவமை யாவது:-
அதனானேயன் றிதனையீதொப்பதினாலு மொக்குமென்பது. (வ-று.) "அளவேய்
வடிவொப் பதன்றியே பச்சை, யிளவேறு
	


240


	நிறுத்தானு மேய்க்குந் - துளவே, கலைக்குமரி போர்துளக்குங் காரவுணர் வீரந்,
தொலைக்குமரி யேறுகைப்பா டோள்." என வரும். புகழுவமையாவது:- உவமையைப்
புகழ்ந்துவமிப்பது. (வ-று.) "இறையோன் சடைமுடி மே லெந்நாளுந் தாங்கும், பிறையோ
திருநுதலும் பெற்ற - தறைபுனல்சூழ், பூவலையந் தாங்கு மரவின் படம்புரையும், பாவை
நின்னல்குற் பரப்பு." என வரும். நிந்தையுவமை யாவது:- உவமையைப் பழித்துவ
மிப்பது. (வ-று.) "மறுப்பயின்ற வாண்மதியும் மதிக்குத் தோற்கு, நிறத்தலரு
நேரொப்பதேனுஞ் - சிறப்புடைத்துத், தில்லைப் பெருமா னருள்போற் றிருமேனி,
முல்லைப் பூங்கோதை முகம்." என வரும். தெரிதருதேற்றவுவமை யாவது:- ஐயுற்
றதனைத் தெரிந்து துணிவது. (வ-று.) "தாமரை நாண்மலருந் தண்மதியால் வீறழியுங்,
காமர் மதியுங் கறையிரவு - மாமிதனாற், பொன்னை மயக்கும் பொறிசுணங்கினார்
முகமே, யென்னை மயக்கு மிது." எனவரும். இயம்புதல் வேட்கையுவமை யாவது:-
பொருளை யின்னதுபோலு மென்று சொல்ல வேட்கின்ற தென்னுள்ள மென்பது. (வ-று.)
"நன்று தீதென் றுணரா தென்னுடைய நன்னெஞ்சம், பொன்றுதைந்த பொற்சுணங்கிற்
பூங்கொடியே - மன்றன், மடுத்துதைந்த தாமரைநின் வாண்முகத்துக் கொடுப்பென்,
றெடுத்தியம்பல் வேண்டுகின்ற தின்று." என வரும். பலபொரு ளுவமையாவது:- ஒரு
பொருளுக்குப் பலபொருளைக் காட்டுவது. (வ-று.) "வேலுங் கருவிளையு மென்மானுங்
காவியுஞ், சேலும் வடுவகிருஞ் செஞ்சரமும் - போலுமாற், றேமருவி யுண்டு சிறைவண்
டிறைகூந்தற், காமருவு பூங்கோதை கண்." என வரும். விகாரவுவமை யாவது:-
உவமையை விகாரம் பண்ணி யுவமிப்பது. (வ-று.) "சீத மதியி னொளியுஞ் செழுங்கமலப்,
போதின் புதுமலர்ச்சியுங் கொண்டு - வேதாத்தன், கைம்மலரா லன்றிக் கருத்தால்
வகுத்தமைத்தான், மொய்ம்மலர்ப் பூங்கோதை முகம்." என வரும். மோகவுவமை
யாவது:- ஒரு பொருண்மே லெழுந்த வேட்கையான் வந்த வுள்ள மயக்கந் தோன்ற
வுரைப்பது. (வ-று.) "கயல்போலு மென்று நின்கண் பழிப்பக் கண்ணில், செயல்போற்
பிறழுந் திறத்தாற் - கயல்புகழ்வ, லாரத்தா னேர்மருங்குலந் தரளவான் முறுவ,
லீரத்தாலுள வெதும்பும் யான்." என வரும். அபூதவுவமையாவது:- முன் பில்லாத தனை
யுவமை யாக்கி யுரைப்பது. (வ-று.) "எல்லாக்கமலத் தெழிலுந் திரண் டொன்றில்,
வில்லேர் புருவத்து வேனெடுங்கண் - ணல்லார், முகம்போலு மென்ன முறுவலித்தார்
வாழு, மகம்போலு மென்ற னறிவு." என வரும். பலவயிற்போலி யுவமையாவது:- ஒரு
தொடர் மொழிக்கட் பலவுவமை வந்தா லவ்வுவமைதோறு முவமைச் சொற்புணர்ப்பது.
(வ-று.) "மலர்வாவி போல்வரான் மாதர் கமல, மலர்போலு மாதர் வதன - மலர்சூ,
ழளிக்கு லங்கள்போலு மளக மதனுட், களிக்குங் கடல்போலுங் கண்." எனவரும். ஒரு
வயிற்போலியாவது:- ஒரு தொடர்மொழிக்கட் பல வுவமை வந்தா லவ்வுவமை தோறு
முவமைச் சொற் புணரா வொரு வுவமைச் சொற்புணர்ப்பது.
	


241


	(வ-று.) "நிழற்கோப மல்க நிறைமலர்ப்பூங் காயாச், சுழற்கலவ மேல்விரித்த தோகை -
யழற்குலவுந், தீம்புகை யாடுஞ் செறிகுழலார் போலுங்கார், யாம்பிரிந்தார்க் கென்னா
மினி." என வரும். பொதுநீங்குவமை யாவது:- உவமையைக் கூறி மறுத்துப்
பொருடன்னையே யுவமையாக்கி யுரைப்பது. (வ-று.) "திருமருவுந் தண்மதிக்குஞ் செந்தா
மரையின், விரை மலர்க்கு மேலாந் தகையார் - கருநெடுங்கண், மானே யிருளளகஞ்
சூழ்ந்த நின் வாண்முகந், தானே யுவமை தனக்கு." என வரும். அநியம வுவமை
யாவது:- நியமித்த வுவமையை நீக்கிப் பிறிது பொருணேர்வது. (வ-று.) "கவ்வை
விரிதிரை சூழ்காவிரி நீர்நாட்டு, மௌவல் கமழுங் குழன்மடவாய்-செவ்வி, மதுவாய்
கவிரேநின் வாய்போல் வதன்றி, யதுபோல்வ துண் டெனு மாம்." என வரும். - தண்டி
யலங்காரம். - "அதுவே, விரியே தொ கையே யிதரவிதர, முரைபெறு சமுச்சய முண்மை
மறுபொருள், புகழ்த னிந்தை நியம மநியம, மையந் தெரிதரு தேற்ற மின்சொ, லெய்திய
விபரித மியம்புதல் வேட்கை, பலபொருள் விகார மோக மபூதம், பலவயிற் போலி
யொருவயிற் போலி, கூடா வுவமை பொதுநீங் குவமை, மாலை யென்னும் பால தாகும்."
என்றா ரன்றியும்,
 
     அவ்வுவமையணி பிறவணியோடு வருமாறு:- தண்டி யலங்காரம். - "அற்புதஞ்
சிலேடை யதிசயம் விரோத, மொப்புமைக் கூட்டந் தற்குறிப் பேற்றம், விலக்கே
யேதுவென வேண்டவும் பெறுமே." என்றாராகலின் அற்புதவுவமை, சிலேடையுவமை,
அதிசயவுவமை, விரோதவுவமை, ஒப்புமைக்கூட்டவுவமை, தற்குறிப்பேற்றவுவமை,
விலக்குவமை, ஏதுவுவமை என்று வழங்கப்படு மவைவருமாறு:- (வ-று.) "குழையருகு
தாழக் குனிபுருவந் தாங்கி,யுழைய ருயிர்பருகி நீண்ட - விழியுடைத்தாய், வண்டே
றிருளளகஞ் சூழவருமதியொன், றுண்டே லிவண்முகத்துக் கொப்பு." இது அற்புதவுவமை.
- "செந்திருவுந் திங்களும் பூவுந் தலைசிறப்பச், சந்தத் தொடையோ டணிதழுவிச் -
செந்தமிழ்நூல், கற்றோர் புனையுங் கவிபோன் மனங்கவரு, முற்றா முலையாண் முகம்."
இது செம்மொழிச் சிலேடை யுவமை. "நளிதடத்த வல்லியின் கண்ணெகிழஞாலத், தளவு
நிறைகடாஞ் சிந்தக் - களி றகலுங், கந்த மலையா னிலவுங் கவடசைய, வந்த மலையா
நிலம்." இது பிரி மொழிச் சிலேடை யுவமை. இதனைச் சந்தான வுவமை யென்பர்.
"நின்னு ழையே நின்முகங் காண்டு நெடுந்தடந், தன்னுழையே தன்னையுங் காண்குவ -
மென்னு, மிதுவொன்றுமே யன்றி வேற்றுமை யொன்றுண்டோ, மதுவொன்று செந்தா
மரைக்கு." இது அதிசய வுவமை. "செம்மை மரை மலருந் திங்களு நும்முகமுந், தம்முட்
பகைவிளங்குந் தன்மையவே - யெம்முடைய, வைப்பாகுஞ் சென்னிவளம் புகரா
போலினியீ, ரொப்பாகு மென்பா ருளர்." இது விரோதவுவமை. "விண்ணின்மேற்
காவல்புரிந் துறங்கான் விண்ணவர்கோன், மண்ணின்மே லன்ன வயவேந்தே -
தண்ணளியாற், சேரா வவுணர்குலங் களையுந் தேவர்கோ, னேரார்மே லத்தகையே நீ."
இது
	


242


	ஒப்புமைக் கூட்ட வுவமை. "உண்ணீர்மை தாங்கி யுயர்ந்த நெறியொழுகி, வெண்ணீர்மை
நீங்கி விளங்குமாற் - றண்ணீர்த், தரம்போலு மென்னத்தரு கடம்பை மாறன், கரம்போற்
கொடைபயில்வான் கார்." இது தற்குறிப்பே ற்றவுவமை. "குழைபொருது நீண்டு
குமிழ்மேன் மறியா, வுழைபொரு தென்னுள்ளங் கவரா - மழைபோற், றருநெடுங்கைச்
சென்னித் தமிழ்நா டனை யார், கருநெடுங்கண் போலுங் கயல்." இது விலக்குவமை. -
"வாளரவின் செம்மணியும் வன்னியிளைம் பாசிலையு, நாளிளைய திங்கணகை நிலவு -
நீளொளியாற், றேனிலவு பூங்கொன்றைத் தேவர்கோன் செஞ்சடைமேல், வானிலவு
விற்போல் வரும்." இது ஏதுவுவமை. பிறவுமன்ன. எ-று. (4)
 
330. 	விரிவென விருபொருள் விதித்திற முருபிவை
தெரிவுற விரித்துச் செப்புதன் மற்றுந்
தொகையொப் பாங்குணந் தொழில்பயன் றொகவே.
 
     (இ-ள்.) விரிவுவமை யலங்காரமுந் தொகையுவமை யலங்காரமு
மாமாறுணர்த்துதும். மேற்கூறிய வுவமைப்பொருளு முவமித்தபொருளுங் குண
முதலுவமைக்காரண மூன்று முவமையுருபுமென விவையெல்லாந் தோன் றவரின்
விரிவுவமையெனவும், மற்றவைதோன்றி யுவமைக்காரண மூன்றுந் தோன்றா துரைப்பி
னதுதொகை யுவமை யெனவும் வழங்கும். (வ-று.) 'பவளம்போலுஞ் செவ்வாய்.
என்பதிதனுள் வாயே யுவமித்தபொருளும் பவளமே யுவமைப் பொருளுஞ் செம்மையே
யுவமைக் காரணமாங் குணப்பொருளும் போலுமே யிடைச் சொல்லாகிய வுவமை
யுருபுமெனக் கண்டுணர்க. வெண்பா. - "பால்போலு மின்சொற் பவளம்போற்
செந்துவர்வாய்ச், சேல்போற் பிறழுந் திருநெடுங்கண் - மேலாம், புயல்போற்
கொடைக்கைப் புனனாடன் கொல்லி, யயல்போலும் வாழ்வ தவர்." என்பதிதனுட்
குணத்தானுந் தொழிலானும் பயனானும் விரிவுவமை வந்தவாறு காண்க. அன்றியும்.
"தாமரைபோன் முகத்துத் தண்டரளம் போன்முறுவற், காமருவு வேய்புரைதோட்
காரிகையீர் - தேமருவு, பூங்குழலின் வாசப்பொறை சுமந்து நொந்தாற், பாங்குழலுந்
தென்றற் பரிசு." எ-ம். பவளம் போலும் வாய், சிங்கம்போலுஞ் சேவகன்,
முகில்போலுங்கை, இவை குணத்தொழிற் பயனுவமைக் காரண மூன்று முறையே தொக்கு
நின்றவாறு காண்க. இவை தொகை யுவமை. எ-று. (5)
 
331. 	இதரேதர மென்ப விருபொருண் மாறலே.
 
     (இ-ள்.) இதரேதர வுவமையலங்காரமாமாறுணர்த்துதும். உவமைப் பொருளு
முவமித்த பொருளுந் தம்முண் மாறிப் பொருளே யொருகாலுவ மையாகவு முவமை
யொருகாற் பொருளே யாகவும் வேறுவேறாய்த் தொடர்ந்து வருவதிதரேதர வுவமை
யெனப்படும். என்னை. இதரமெனினும் வேற்றுமை யெனினு மொக்கும். (வ-று.)
"களிக்குங் கயல்போல நின்கண்ணின் கண்போற்,
	


243


	களிக்குங் கயலுங் கனிவாய்த் - தளிர்க்கொடியே, தாமரைபோன் மலரு நின்முக
நின்முகம்போற், றாமரையுஞ் செவ்வி தரும்." எ-ம். - வெண்பா. - "தளிர்பெற்று
வைகிய தண்சுனை நீல, மளிபெற்றார் கண்போ லலரு - மிளிபெற்ற, நல்லார்
திருமுகத்தி னாற்றத் தளிபெற்றக், கல்லாரம் போன்மலருங் கண்." எ-ம். பிறவுமன்ன
எ-று. (6)
 
332. 	விபரீத பொருளா விளம்பிய வுவமையே.

 
     (இ-ள்.) விபரீத வுவமையலங்காரமாமாறுணர்த்துதும். காட்டவெடுத்த பொருளை
யுவமைப் பொருட்கோ ருவமையாக மாறுபாடா வுரைப்பது விபரீதவுவமை யெனப்படும்.
(வ-று.) "திருமுகம்போன் மலருஞ் செய்ய கமலங், கருநெடுங்கண் போலுங் கயல்." எ-ம்.
வெண்பா. - "தாயேநின் னானனம்போற் சந்திரனே முற்றியபின், மேயாநின்
றுன்னுதல்போற் சீர்த்ததுவே - நோயாக, வீரெதிரிற் றோற்றாரா தேங்கி வரங்கேட்டுன்,
சீரடியைப் பூண்டிறைஞ்சுஞ் சேர்ந்து." எ-ம். பிறவுமன்ன. எ-று. (7)
 
333. 	மறுபொரு ளாம்பொருள் வந்தொப் புரைத்தலே.
 
     (இ-ள்.) மறுபொருளுவமை யலங்காரமாமாறுணர்த்துதும். பொரு ளைக்கூறிய
பின்னதற்குவமை கூறுவது மறுபொருளுவமை யெனப்படும். (வ-று.) வெண்பா. -
"அன்னையா யெவ்வுயிர்க்கு மாதரவா யன்பருளு, நின்னையா ரொப்பார் நிலவேந்த-
ரன்னதே, பாரிடையே தோன்றிப் பயன்றருதற் கில்லையாஞ், சூரியனேபோலுஞ் சுடர்."
எ-ம். பிறவுமன்ன. எ-று. (8)
 
334. 	நியமமாம் பிரிநிலை யேகா ரம்வந்
தியனிக ரொன்றுரைத் தேனைய நீக்கலே.
 
     (இ-ள்.) நியமவுவமை யலங்காரமாமாறுணர்த்துதும். எடுத்தபொரு ளுக்
கின்னதுவமையன்றி மற்றொன்றில்லை யென்று காட்டிக் கூறியவுவ மைப்பொருண்மேற்
பிரிநிலை யேகாரந் தந்து முடிப்பது நியமவுவமையெனப்படும். என்னை. நியமமெனினு
மிணையின்மை யெனினு மொக்கும். (வ-று.) "செங்கமல வாயொழுகுந் தேனே யுன்சொற்
கிணையாம்." எ-ம். 'சுடுமூழித் தீயே நிகருஞ் சொற்சொன்னான்' எ-ம். - வெண்பா. -
"தேன் மலரே வாடுமெனச் செங்கதிரோன் காயுமெனப், பான்மதியே தேயுமெனப்
பாங்கினையா - நான்மருவுந், தாயே திருக்காவலூ ரரசே தாரணிமே, னீயே நினக்கு
நிகர்." எனவே நினக்கு நிகரில்லை யென்பது கருத்து. இதனைப் பொதுநீங்குவமை
யென்மருமுள ரெனக்கொள்க. எ-று. (9)
 
ஐயங் கொண்டன விருபொரு ளறைத
லைய வுவமை யாகு மென்ப.
 
335.
     (இ-ள்.) ஐயவுவமையலங்காரமாமாறுணர்த்துதும். உவமையோ பொருளோ
வென்றுளத் தையந் தோன்றினதாகக் கூறுவ தைய வுவமையெனப்படும்.
	


244


	(வ-று.) ``தாதளவி வண்டு தடுமாறுந் தாமரைகொன், மாதர் விழியுலவும் வாண்முகங்கொ
- லேதென், றிருபாற் கவாவுற் றிடையூ சலாடு, மொருபாற் படாதென் னுளம்.ழுழு எ-ம்.
வெண்பா. - ``வெஞ்சினவே றின் றுலவும் விண்முகிலோ செய்கொலையா, லெஞ்சினபோ
ரீற்றுலவுங் குஞ்சரமோ-நெஞ்சி, லொருபாற்குந் தேறா வுளந்தேற் றினெனீண், டிருபாற்கு
மோடனன் றென்று.ழுழு எ-ம். பிறவுமன்ன. எ-று. (10)
 
336. 	இன்சொல் லுரிமையா மிணையிவை யென்ற
பின்சொல் லியபொருட் பெற்றிமி யுரைத்தலே.
 
     (இ-ள்.) இன் சொல்லுவமை யலங்காரமாமாறுணர்த்துதும். ஒன் றை யுவமித்தபின்பு
பொருளின் சிறப்பெலா முவமைக்கில்லை யென்று காட்டுவதின்சொல்லுவமை
யெனப்படும். (வ-று.) ``மான்விழி தாங்கு மடக் கொடியே நின்வதன, மான்முழுதுந்
தாங்கி வருமதிய - மானாலு, முற்றிழை நல்லாய் முகமொப்ப தன்றியே, மற்றுயர்ச்சி
யுண்டோ மதிக்கு.ழுழு எ-ம். வெண்பா. - ``சூழுடுவும் பாற்கதிருந் தோன்றி
மறுத்தொன்றாக், காழுரு வுந் தேயாது கன்னித்தாய் - வாழுந், தளராவா
றொண்முகங்கண் டேங்கிற்றோ தாட்கீழ், வளராவா றென்னோ மதி.ழுழு எ-ம். பிறவுமன்ன.
எ-று. (11)
 
337. 	கூடா வுவமையே கூறிய நிகர்க்கண்
ணூடா தவைபொருட் குரியன வெனலே.
 
     (இ-ள்.) கூடாவுவமை யலங்காரமாமாறுணர்த்துதும். உவமைப்பொ ருட்கட்
கூடாதவை தானெடுத்த பொருட்கட் கூடுமென்று காட்டல் கூ டாவுவமை யெனப்படும்.
(வ-று.) ``சுடுமதிபோ லுன்முகம், இருபொழு தும் வாய்மலருந் தாமரையே நின்முகம்.ழுழு -
விருத்தம். - ``மருட்கொள்ளா வுவாக்கொள்ளா மணிக்கடல்போல் கன்மனமே,
யிருட்கொள்ளா நிழற் கொள்ளு மிணர்ப்பொழில்போ லருந்தயையே, வெருட்கொள்ளா
விடியாப்பெய் வியன்முகிற்போற் கைக்கொடையே, கருட்கொள்ளா நிழற் சோலைக்
காவனலூர்த் தாயியல்பே.ழுழு எ-ம். ``சந்தனத்திற் செந்தழலுந் தண்மதியில் வெவ்விடமும்,
வந்தனவே போலுமா னின்மாற்றம் - பைந்தொடியாய், வாவிக் கமலமலர் முகங்கண்
டெக்கறுவா, ராவிக் கிவையோ வரண்.ழுழு எ-ம். பிறவுமன்ன. எ-று. (12)
 
338. 	மாலை யுவமையா மருவிய பலநிகர்
மாலையாக் கோத்தபின் வனைபொரு ளியம்பலே.
 
     (இ-ள்.) மாலையுவமையலங்காரமாமாறுணர்த்துதும். படலைமாலை போலொரு
பொருட்குப் பலபல வுவமை தொடர்ந்து கூறிக் கடையிற் பொருளை யுரைப்பது
மாலையுவமை யெனப்படும். (வ-று.) தேம்பாவணி. - ``நிறைதவிர்ந் துணர்ந்த காம
நெறியிற் கைப்பொருளே போன்று, முறைதவிர்ந் தடைசீர் போன்று
	


245


	முனிகடம் முனிவு போன்றும், பொறைதவிர்ந் திழித் தீண் டோடும் புனலினை
யெதிர்கொண் டாங்கத், துறைதவிர்ந் திடத்திட் டேகித் துளித்ததேன் முல்லை
சேர்ந்தார்." என வரும். "நீரெழுங் குமுழிபோன்று நெடியதேர் நேமி போன்றுங்,
காரெழு மின்னுப் போன்றுங் கடலெழுந் திரைகள் போன்றும், பாரெழுஞ் செல்வத்
தில்லைப் பதியு மோர் நிலையு மென்றார், சீரெழு ஞானத் திற்குந் திரைதிரண் டலைவ
துண்டோ." எ-ம். "மலையத்து மாதவனே போன்று மவன்பா, லலைகடலே போன்று
மதனுட் - குலவு, நிலவலையமே போன்று நெறியன்பா னிற்குஞ், சிலை கெழு
தோள்வேந்தர் திரு." பிறவுமன்ன. (13)
 
339. 	உண்மை யுவமையா முவமை மறுத்தென
நுண்மையிற் பொருடிற நுவன்று விளக்கலே.
 
     (இ-ள்.) உண்மையுவமை யலங்காரமாமாறுணர்த்துதும். உவமை மறுத்துப்
பொருளைக் கூறுவ துண்மை யுவமை யெனப்படும். (வ-று.) 'தாமரை யன்று முகம்.'
'வண்டல்ல கருங்கண்.' எ-ம். வெண்பா. - "அஞ்சன்மின் மாங்குயில்கா ளங்கண்வா
னொத்திருளு, மஞ்சன்றே மஞ்சிடித்த வார்பன் றே-யெஞ்சாது, காய்ந்தெழுந்தேம்
பூம்புகையாய்க் காவனலூ ராளரசாள், வேந்தெழுந் தேரோடும் விரைவு." எ-ம்.
"தாமரையன் றுமுகமே யீதிங் கிவையுங், காமருவண் டல்லகரு நெடுங்கண் - டேமருவு,
வல்லியி னல்ல ளிவ ளென்மனங்கவரு, மல்லிமலர்க் கோதை யாள்." பிறவுமன்ன.
எ-று. (14)
 
340. 	உவமை வழுவென்ப வுரியபான் மாற
றவன்மிக லுயர்த றாழ்தலென் றைந்தே.
 
     (இ-ள்.) உவமை வழுவலங்காரமாமாறுணர்த்துதும். ஒன்றனை யுவ மித் துரைக்குங்
காலை வழுவுறாமை வேண்டி யவற்றை யறிந்து காத்தல் கல்வி வல்லோர் கடன்.
அவையாவன:- ஆண்பான் முதற்பா லைந்துந் தம் முண்மாறி வருதலும்,
பொருட்கண்ணுள்ளத்தின் குறைந்தது மிக்கது முவமைக் கண்வருதலு, முயர்ந்த
வுவமையோ டிழிந்த பொருளு வமித்தலு, மிழிந்த வுவமையோ டுயர்ந்த பொருளு
வமித்தலு, மென் றிவ்வைந்து மோரோ விடத்தோர் சிறப்புக் காட்டுதற் கொழிய
வழுவாம். (வ-று.) வெண்பா. - "மன்னவர்க்கு நாய்போல் வனப்புடையா வாள்வயவர்,
மின்மினி வெஞ் சுடரேபோல் விளங்கு - மன்னப், பெடைபோலுஞ் சந்திரன்
பைந் தடங்கள் போலு, மிடைமா சொன்றில்லா விசும்பு." என விதனுள் வீரரை
நாய்போல வனப்புடையா ரென்ற திழிந்த வுவமையோ டுயர்ந்த பொருளுவ மித்ததும்,
வெஞ்சுடர்போல மின்மினி விளங்கு மென்ற துயர்ந்த வுவமையோ டிழிந்த பொருளு
வமித்ததும், சந்திரனுக் குவமையாகப் பேடை யன்னம் வைத்த தாண்பாற்குப் பெண்பா
லுவமித்ததும், ஒன்றாம் விசும்பிறகுப் பயனில்லாமற் பன்மையிற்றடங்க ளென்ற
தொருமைக்குப்பன்மை
	


246


	யுவமித்ததும், என்றிவை யெல்லாங்குற்றமாயிற்று. - வெண்பா. - "நீலப் புருவங் குனிய
விழிமதர்ப்ப, மாலைக்குழல் சூழ்ந்த நின்வதனம் - போலுங், கயல்பாய வாசங் கவருங்
களிவண், டயல்பாயு மம்போ ருதம்." என்பதிதனுட் புருவமெனும் பொருட் குவமைக்
கண்ணொன் றில்லாமையா லுவமை குறைந்து குற்றமாயிற்று. - வெண்பா. - "நாட்டந்
தடுமாறச் செவ்வாய் நலந்திகழத், தீட்டரிய பாவை திருமுகங் - காட்டுமாற், கெண்டை
மீதாட நறுஞ்செயிதழ் கவர, வண்டுசூழ் செந்தா மரை." என்பதித னுண் முகத்திற்குத்
தாமரை, விழிக்குக் கெண்டை, வாய்க்குச் செவ்விதழ், உவமையாகி மீண்டுவமைக்
கண்வந்த வண்டுக்குப் பொருட்கண் ணொன்றில் லாமையா லுவமை மிக்குக்
குற்றமாயிற்று. பிறவுமன்ன. ஆயினு மொரோ விடத்திவை சிறப்புக் காட்ட வழுவே
யின்றிப் பயன்பட வரவும் பெறு மெனக் கொள்க. எ-று. (15)
 
341. 	உருவக மென்ப வுவமை வேறு
பொருள்வே றின்றிப் புணரத் தொடுத்தலே.
 
     (இ-ள்.) உருவக வலங்காரமாமாறுணர்த்துதும். உவமையும் பொரு ளும்
வேறுபடாமற் குணந்தொழிற் பயனென முக்காரணந் தோன்றாமலு முவமை
யுருபில்லாமலு மொன்றுபட வருமுவமை யுருவக மெனப்படும். இவ்வுருவகமே
பதினைந்து வகைப்படும். - தண்டியலங்காரம். - "தொகையே விரியே தொகைவிரி
யெனாஅ, வியைபே யியைபின்மை யியனிலை யெனாஅ, சிறப்பே விருப்பஞ் சமாதான
மெனாஅ, வுருவக மேக மநேகாங்க மெனாஅ, முற்றே யவையவ மவையவி யெனாஅ,
சொற்ற வைம்மூன்று மாங்கதன் விரியே." என்றா ராகலின் - தொகையுருவகமாவது:-
மாட்டேற்றுச் சொற்றொகுத்துக் கூறுவது. (வ-று.) "அங்கை மலருமடித் தளிருங்கண்
வண்டுங், கொங்கை முகிழுங் குழற்காருந் - தங்கியதோர், மாதர்க் கொடியுளதா
னண்பாவதற் கெழுந்த, காதற்குளதோ கரை." என வரும். விரியுருவகமாவது:- அச்சொல்
விரிந்து நிற்பது. (வ-று.) "கொங்கை மு கையாக மென்மருங்குல் கொம்பாக, வங்கை
மலரா வடித்தளிரா - தங்க, ளளிநின்ற மூர லணங்கா மெனக்கு, வெளிநின்ற
வேனிற்றிரு." எனவரும். தொகைவிரி யுருவகமாவது:- அச்சொற் றொக்கும் விரிந்து
நிற்பது. (வ-று.) "வையந் தகழியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காகச்
- செய்ய, சுடராழி யானடிக்கே சூட்டுவன் சொன்மாலை, யிடராழி நீங்குகவே யென்று."
எனவரும். இயைபுருவக மாவது:- பல பொருளை யுருவகஞ் செய்யுங்காற் றம்மு
ளியைபுடைத்தாக வைத்துருவகஞ் செய்வது. (வ-று.) "செவ்வாய்த் தளிரு நகைமுகிழுங்
கண்மலரு, மைவா ரளக மது கரமுஞ் - செவ்வி,யுடைத்தாந் திருமுகமென் னுள்ளத்து
வைத்தார், துடைத்தாரே யன்றோ துயர்." என வரும். இயைபின்மை யுருவகமாவது:- பல
பொருளுந் தம்முளியையாமலுருவகஞ் செய்வது. (வ-று.) "தேனக்கலர்கொன்றைப்
	


247


	பொன்னாகச் செஞ்சடையே, கூன்ற பவளக் கொடியாகத் - தான், மழையாகக் கொண்டு
மதியாகத் தோன்றும், புழையார் தடக்கைப் பொருப்பு." எனவரும்.
இயனிலையுருவகமாவது:- ஒன்றனங்கம் பலவற்றையு முருவித்து முருவியாது முரைத்
தங்கியைய வருவித்துரைப்பது. (வ-று.) "செவ்வாய் நகையரும்பச் செங்கைத்
தளிர்விளங்க, மைவார் நெடுங்கண் மதர்த்துலவச் - செவ்வி, நறவலருஞ் சோலைவாய்
நின்றதே நண்பா, குறவர் மடமகளாங் கொம்பு." என வரும். சிறப்புருவகமாவது:- ஒரு
பொருளை யடுத்தலிற் சிறந்த வடைகளை யுருவித் தவற்றானே யுருவகமாவுரைப்பது.
(வ-று) "விரிகடல்சூழ் மேதினி நான்முகன் மீகானாச், சுரநதிபா யுச்சி தொ டுத்த -
வரிதிருத்தாள், கூம்பாக வெப்பொருளுங் கொண்டு பெருநாவா, யாம்பொலிவற்
றாயினதா லன்று." எனவரும். விருப்பவுருவகமாவது:- ஒருபொருட் கூடாத தன்மை
பலவுங் கூட்டி யுருவகஞ் செய்வது. (வ-று.) "தண்மதிக்குத் தோலாது தாழ்த்தடத்து
வைகாது,முண்மருவுந் தாண்மேன் முகிழாது-நண்ணி, யிருபோ துஞ்செவ் வியல்பாய்
மலரு, மருவை வதனாம் புயம்." எனவரும். சமாதான வுருவக மாவது:- ஒருபொரு
ணன்றாக வுவமித்து வைத்ததனைத் தீங்கு தருவதாகக் கூறி யத்தீங் கிதனான் வருகின்ற
தன்றென்ற தற்குப் பிறிதோர் காரணங் கூறுவது. (வ-று.) "கைகாந்தள் வாய்குமுதங்
கண்ணெய்தல் காரிகையீர், மெய்கார் மயில்கொங்கை மென் கோங்க - மிவ்வனைத்தும்,
வன்மைசேர்ந் தாவி வருத்துவது மாதவமொன், றின்மையே யன்றோ வெனக்கு." என
வரும். உருவக வுருவகமாவது:- ஒன்றனை யுருவகஞ் செய்ததனையேபோலும்
பிறிதொன்றாக வுருவகஞ்செய்வது. (வ-று.) "கன்னிதன் கொங்கைக் குவடாங்
கடாக்களிற்றைப், பொன்னெடுந் தோட்குன்றே புனைகந்தா - மன்னவநின், னாகத்தடஞ்
சேவக மாகயா னணைப்பல், சோகத் தருளேறு வண்டு." எனவரும். ஏகாங்க வுரு
வகமாவது:- ஒருபொரு ளதங்கம் பலவற்றுள் ளோரங்கமே யுருவகஞ்செய்து
ஒழிந்தவங்கம் வாராதே கூறுவது. (வ-று.) "காதலனைத் தாவென் றுலாவுங் கருநெடுங்க,
ணேதிலனா ளென்னென்னு மின்மொழித்தேன் - மாதர், மருண்ட மனமகிழ்ச்சி
வாழ்முகத்தில் வந்த, விரண்டினு மென்செய் கோ வியான்." என வரும்.
அநேகாங்கவுருவகமாவது:- ஒன்றனங்கம் பலவற்றை யுருவகஞ் செய்துரைப்பது. (வ-று.)
"கைத்தளிராற் கொங்கை முகிழ்தாங்கிக் கண்ணென்னு, மைத்தடஞ்சேன் மைந்தர்
மனங்கலங்க - வைத்ததோர், மின்னுளதா மேகமிசை யுளதா மற்றதூஉ, மென்னுளதா
நண்பா வினி." எனவரும். முற்றுருவகமாவது:- அவையவ வவையவிகளை யேற்
றவிடத்தோடும் பிறவற்றோடு முற்றவுருவகஞ் செய்வது. (வ-று.) "விழியே கிளிவண்
டுமென் னகையே தாது, மொழியே முருகுலாந் தேறல் - பொழிகின்ற, தேமருவு
கோதைத் தெரிவை திருமுகமே, தாமரை யென்னுள்ளத் தடத்து." எனவரும். அவையவ
வுருவகமாவது:- அவையவமே யுருவித்தவையவியே வாராதே கூறுவது. (வ-று.) "புருவச்
சிலைகுனித்துக் கண்ணம்பாலுள்ள,
	


248


	முருவத் துறந்தா ரொருவ - ரருவி, பொருங்கற் சிலம்பிற் புனையல்குற் றேர்மேன்,
மருங்குற் கொடி நுடங்க வந்து." எனவரும். அவை யவி யுருவகமாவது:- அவையவியை
யுருவகஞ் செய்வது. (வ-று.) "வார் புருவங் கூத்தாடி வாய்மழலைச் சேர்ந்தசைய,
வேர்மருவச் செந்துவிழி மதர்ப்ப - மூர, லவிக்குந் தெரிவை வதனாம் புயத்திற்,
களிக்குந் தவமுடையோன் கண்." என வரும். அன்றியும்,
 
     அவ்வுருவக வலங்காரங்க ளோடு பிறவலங்காரங் கூடிவருமாறு:- தண்டி
யலங்காரம். - "உவமை யேது வேற்றுமை விலக்கே, யவநுதி சிலேடையென்
றவற்றொடும் வருமே." என்றாராகலின், உவமவுருவகமாவது:- (வ-று.) மதிமகிழ்ந்த மாதர்
வதனமதிய, முதைய மதியமே யொக்கு - மதிதளர் வென், வெம்மை தணியு மதராகமே
மிகுக்குஞ், செம்மை யொளியாக் றிகழ்ந்து." என வரும். ஏது வுருவகமாவது:- (வ-று.)
"மாற்றத்தாற் கிள்ளை நடையான் மடவன்னந், தோற்றத்தாற் றண்ணென் சுடர்விளக்குப்
- போற்று, மியலான் மயிலெம்மை யின்னீர்மை யாக்கு, மயலார் மதர்நெடுங்கண் வாள்."
என வரும். வேற்றுமையுருவகமாவது:- (வ-று.) "வையம் புரக்குமன மன்னவநின்
கைக்காரும், பொய்யின்றி வானிற் பொழிகாருங் - கையா, மிருகார்க்கு மில்லைப் பருவ
மிடிக்கு, மொருகார்ப் பருவ முடைத்து." என வரும். விலக்குருவகமாவது:- (வ-று.)
"வல்லி வதன மதிக்கு மதித்தன்மை, யில்லை யுளதே லிரவின்றி - யெல்லை,
விளக்குமொளி வளர்த்து வெம்மையா னெம்மைத், துளக்கு மியல்புடைத்தோ சொல்."
என வரும். அவநுதியுருவகமாவது:- (வ-று.) "பொங்களக மல்ல புயலேயிவை யிவையுங்,
கொங்கையிணை யல்ல கோங்கரும்பு - மங்கைநின், மையரிக் கண்ணல்ல
மதர்வண்டிவை யிவையுங், கையல்ல காந்தண் மலர்." எனவரும். சிலேடை
யுருவகமாவது:- (வ-று.) "உண் ணெகிழ்ந்த செவ்வித்தாய்ப் பொற்றோட் டொளிவளரத்,
தண்ணளிசூ ழின்பந் தரமலர்ந்து - கண்ணெகிழ்ந்து, காதல் கரையிறப்ப வாவி கடவாது,
மாதர் வதனாம் புயம்." என வரும். அன்றியும்,
 
     அவ்வுருவக வுவமை யென்னு மிரண்டிற்கும் புறனடைவருமாறு:- தண்டியலங்காரம்.
- "உருவக வுவமை யெனவிரு திறத்தவு,நிரம்ப வுணர்த்தும் வரம்பு தமக்கின் மையிற்,
கூறின நெறியில் வேறுபட வருபவை, தேறினர் கோட றெள்ளியோர் கடனே."
என்றாராகலின். (வ-று.) "வில்லே ருழ வர்பகை கொளிநுங் கொள்ளற்க, சொல்லே
ருழவர் பகை." எனவரும். "ஏரி யிரண்டு சிறகா வெயில்வயினாக், காருடைய பீலிகடி
காவா-நீர் வண்ண, னத்தியூர் வாயா வணிமயிலே போன்றதே, பொற்றேரான் கச்சிப்
பொலிவு." எனவரும். இவையேதுவுருவகம். "மலையிற் பிறவா மடமஞ்ஞைவாரி,
யலையிற் பிறவா வமிர்தம் - விலையிட், டளவாத நித்தில மாராத தேறல், வளவாண்
மதர் நெடுங்கண் மான்." எ-ம். "மழலைவாய் நவ்விமதர் நெடுங்கண் மஞ்ஞை,
	


249


	குழலின் புறமலிந்த கொம்பர் - சுருளளகந், தாங்கிய வன்னந் தடங்கொங்கையார் மாதந்,
தேங்கொள் கமலத் திரு." எ-ம். இவை சிறப்புருவகம். "மன்றற்குழ லாருயிர் மேன்மதன்
கடவுந், தென்றற் கிரிதடுக்குந் திண்கணைய - மன்றவரைக், கங்குற் கடலின் கரையேற்று
நீள்புணையாம், பொங்கு நீர்நாடன் புயம்." இது அற்புதவுருவகம். "நல்லார்கட் பட்ட
வறுமையி னின்னாதே, கல்லார்கட் பட்ட திரு." இது தேற்றவுவமை. "அடிநோக்கி
னாழ்கடல் வண்ண னவன்றன், படிநோக்கிற் பைங்கொன்றைத் தாரோன் - முடிநோக்கிற்,
றேர்வள்வ னாத றெளிந்தே னவன்முடிமே, லாரலங்க லோங்கியது கண்டு." இது
பலவயிற்போலி. "முத்துக் கோத்தன்ன முறுவன் முறுவலே, யொத்தரும்பு
முல்லைக்கொடி மருங்குன் - மற்றதன்மேன், மின்னளிக்குங் கார்போன்ம் விரைக்கூந்தன்
மெல்லியலி, தண்ணளிக்கு முண்டோ தரம்" இது மெய்யுவமை. பிறவுமன்ன எ-று. (16)
 
342. 	வேற்றுப்பொருள் வைப்பே விளங்கினது தொடங்கி
யீற்றி னுதலிய வேற்றி யுரைத்தலே.
 
     (இ-ள்.) வேற்றுப்பொருள்வைப்பலங்காரமாமாறுணர்த்துதும். எவ ருமறிந்த
வொன்றைக் கூறிய பின்ன ரெடுத் ததன்பொரு ளத்தன்மைத் தாகுமெனக் கூறுவது
வேற்றுப்பொருள்வைப்பெனப்படும். இதுவு முவ மை விகற்பத்து ளடங்கவும் பெறும்.
(வ-று.) "நெட்டொளி வேங்கையா னிசிப்பட நீத்தீங் குயிராய்க், கட்டொளியைக் காட்டுங்
கதிர்வேந்தன் - பட்டொளிநீ, ராங்கொழியக் கண்டன்பின் னாசையுட்கொள் வாரோவீங்,
கோங்கழியாச் செல்வமுண் டென்று." எ-ம். "வெய்யகுர றோன்றி வெஞ் சினவேறுட்
கொளினும், பெய்யு மழை முகிலைப் பேணுவரால் - வையத், திருள்பொழியுங் குற்றம்
பலவெனினும் யார்க்கும், பொருள் பொழிவார் மேற்றே புகழ்." என வரும். அன்றியும்,

      அவ்வலங்கார விரிவு வருமாறு:- தண்டியலங்காரம். - முழுவதூஉஞ் சேற
லொருவழிச்சேறன், முரணிற் றோன்றல் சிலேடையின் முடித்தல், கூடா வியற்கை கூடு
மியற்கை,யிருமை விபரித மெனவத னியல்பே." என்றாராகலின், முழுவதுஞ் சேறலாவது:-
ஒருதிறமுரைத்தா லத்திற மெல்லா வற்றுமேலுமுற்றச்செல்லவுரைப்பது. (வ-று.) "புறந்தந்
திருளிரியப் பொன்னேமி யுய்த்துச், சிறந்த வொளிவளர்க்குந் தேரோன் - மறந்தாற்,
புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி, யிறவாது வாழ்கின்றார் யார்." எனவரும். ஒரு
வழிச்சேறலாவது:- ஒரு திறமுரைத்தாலத்திற மெல்லாவற்றுமேலு முற்றச்செல்லாது
சிலவற்றின்மேலே சென்றொழிவது. (வ-று.) "எண்ணும் பயன்றூக்கா தியார்க்கும்
வரையாது, மண்ணுலகில் வாமனருள் வார்க்குந், தண்ணுறுந்தேன், பூத்தளிக்குந் தாராய்
புகழாளர்க் கெவ்வுயிருங், காத்தளிக் கையன்றோ கடன்." என வரும்.
முரணிற்றோன்றலாவது:- தம்முண் மாறுபட்டிருக்கு மியல்புடைத்தாயப் பொருள்வைத்தல்.
(வ-று.) "வெய்யகுரற் றோன்றி வெஞ்சினவே றுட்கொளினும்,
	


250


	பெய்யுமழை முகிலைப்பேணுவரால்-வையத், திருள்பொழியுங் குற்றம் பலவெனினும்
யார்க்கும், பொருள் பொழிவார் மேற்றேபுகழ்." எனவரும். சிலேடையின் முடித்தலாவது:-
முன்னர்வைத்த பொருளையும் பின்னதனையு மொருசொற்றொடர்பாற் சொல்லுவது.
(வ-று.) "எற்றே கொடிமுல்லை தன்னைவளர்த் தெடுத்த, முற்றிழையாள் வாட
முறுவலிக்கு - முற்று, முடியாப் பரவைமுழங்குலத் தேதன்றுங், கொடியார்க்கு முண்டோ
குணம்." என வரும். கூடாவியற்கையாவது:- கூடாததனைக் கூடுவதாகக் கூறுவது. (வ-று.)
"ஆர வடமு மதிசீத சந்தனமு, மீர நிலவு மெரிவிரியும் - பாரிற், றுதிவகையான்
மேம்பட்ட துப்புரவுந் தத்தம், விதிவகையான் வேறு படும்." எனவரும்.
கூடுமியற்கையாவது:- கூடுமதனைக் கூடுவதாகக் கூறுவது. (வ-று.) "பொய்யுரையா நண்பா
புனைதேர் நெறிநோக்கிக், கைவளைசோர்ந் தாவி கரைகுவார் - மெய்வெதும்பப், பூத்த
கையுஞ் செங்காந்தாள் பொங்கொலிநீர் ஞாலத்துத், தீத்தகையார்க் கீதோ செயல்."
எனவரும். இருமையியற்கையாவது:- கூடாததனையுங் கூட்டுவ ததனையுங்
கூடுவதாகக்கூறுவது. (வ-று.) "கோவலர்வாய் வேய்ங்குழலே யன்றிக் குரைகடலுங், கூவித்
தமியோரைக் கொல்லுமாற் - பாவாய், பெரி யோரும் பேணாது செய்வரே போலுஞ்,
சிறியோர் பிறர்க்கியற்றுந் தீங்கு." என வரும். விபரீதமாவது:- விபரீதப்படச்
சொல்லுவது. (வ-று.) "தலை யிழந்தா னெவ்வுயிருந் தந்தான் பிதாவைக்,
கொலைபுரிந்தான் குற்றங்கடிந்தா - னுலகிற், றனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவ
ரேற்றப்பா, வினையும் விபரீதமாம். என வரும். எ-று. (17)
 
343. 	வேற்றுமை யென்ப முன்னாற்றிய விருபொருள்
சாற்றிய வுவமையில் வேற்றுமைப் படுத்தலே.
 
     (இ-ள்.) வேற்றுமை யலங்காரமாமாறுணர்த்துதும். இருபொருளைத் தம்முள்
ளுவமித்துப் பின்னரவற்றுள் வேற்றுமை தோன்றக் கூறுதல் வேற்றுமை யலங்கார
மெனப்படும். ஆகையி லிதுவுமுவமை விகற்பத்து ளடங்கும். (வ-று.) "மீனணியும்
பாற்கதிரும் வெண்மதிக்கு மம்மதியைத், தானணியு நாய்க்குஞ் சரல்பூண்டு-வானணியுந்,
திங்கட் குண்டல்லா தோர் தேய்வு மிருண்மறுவு, மெங்கட்குண் டாளரசாட்கில்." எ-ம்.
அன்றியும். - தண்டி யலங்காரம். - "கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள்,
வேற்றுமை படவரின் வேற்றுமை யதுவே." என்றாராதலின். (வ-று.) "அனைத்துலகுஞ்
சூழ்போ யரும்பொருள் கைக்கொண், டினைத்தளவைத் தோற்ற கரிதாம் - பனிக்கடன்,
மன்னவநின் சேனைபோன் மற்றதுநீர் வடிவிற், றென்னுமிது வன்றே வேறு." எ-து.
ஒருபொருள். "சென்று செவி யளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுளே, நின்றளவி
யின்பநிறை பவற்று - ளொன்று, மணலிவருங் கூந்தலார் மாதர்நோக் கொன்று,
மணலிவருங் கூந்தறன் வாக்கு." எ-து. இருபொருள். "மலிதேரான் கச்சியு மாகடலுந்
தம்மு,
	


251


	ளொலியும் பெருமையு மொக்கு - மலிதேரான், கச்சி படுவ கடல்படா கச்சி, கடல்படுவ
தெல்லாம் படும்." எ-து. கூற்று. "கார்க்குலமும் பாய்திரையுங் காட்டுங் கடல்படையும்,
போர்க்களிறும் பாய்மாவும் பொங்குமா - லேற்ற, கலமுடைத்து முந்நீர் கதிராழித்
தீண்டோர், பலவுடைத்து வேந்தன்படை." எ-து. சமம். "பதுமங் களிக்கு மளியுடைத்துப்
பாவை, வதன மதர்நோக்கு டைத்துப் - புதையிருள்சூ, ழப்போ தியல்பழியு மம்போருகம்
வதன, மெப்போது நீங்கா தியல்பு." எ-து. உயர்ச்சி. இவை குறிப்பு. அன்றியும்,

     அவ்வேற்றுமை யலங்காரம் பிறவலங்காரங்க ளோடும் வருமாறு. -
தண்டியலங்காரம். - "அதுவே, குணம்பொருள் சாதி தொழிலொடு புணரும்."
என்றாராகலின். (வ-று.) "சுற்றுவிற் காமனுஞ் சோழர் பெருமானாங், கொற்றப்
போர்க்கிள்ளியுங் கோளொவ்வார் - பொற்றொடி, யாழி யுடையான் மகன்மாரன்
மாயனே, கோழி யுடையான் மகன்." எ-து. குணவேற்றுமை. "ஓங்க லிடைவந்
துயர்ந்தோர் தொழவிளங்கி, யேங் கொலிநீர் ஞாலத்திரு ளகற்று - மாங்கவற்றுண்,
மின்னேர் தனியாழி வெங் கதிரொன் றேனையது, தன்னே ரில்லாத் தமிழ்." எ-து.
பொருள் வேற்றுமை. "வெங்கதிர்க்குஞ் செந்தீ விரிசுடர்க்கு நீங்காது, பொங்குமதி
யொளிக்கும். போகாது - தங்கும், வளமையான் வந்தநெறி மயக்க மாந்தர்க்,
கிளைமையான் வந்த விருள்." எ-து. சாதி வேற்றுமை. "புனனாடர் கோமானும்
பூந்துழாய் மாலும், வினைவகையான் வேறு படுவர் - புனனாட, னேற் றெரிந்து
மாற்றலர்பா லெய்தியபார் மாயவனு மேற்றிரந்து கொண்டமையா லின்று." எ-து. தொழில்
வேற்றுமை. எ-று. (18)
 

344.
	ஒட்டெனத் தன்பொரு ளுரையா துவமை
சுட்டலி லப்பொரு டோன்ற வியம்பலே.
     (இ-ள்.) ஒட்டலங்காரமாமாறுணர்த்துதும். தான் கருதிய பொருளை
வெளிப்படுத்துதற் கதனைச் சொல்லாததற்குத்தக்க மற்றோருவகைப் பொருளைச்
சொல்வதே யொட்டலங்கார மெனப்படும். ஆகையிலிதுவு முவமை விகற்பத்து ளடங்கும்.
(வ-று.) "ஒண்ணிலவு நீர்மைத்தா யோயாப் பயஞ் சுரந்து, தண்ணளி தாங்கு
மலர்முகத்துக் - கண்ணெகிழ்ந்து, நீங்க வரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கே,
யோங்கியதோர் சோலை யுடைத்து." எ-து. இதனுட் டன்னையாதரிக்கும்
வள்ளலைக்கருதி யவனையொழித் தவட்கேற்ற வுவமைப் பொருளைக் கூறியவாறு
காண்க. அன்றியும். "பனிமதுப்பதுமம் - ஊழியுமரிதே" யென்று, 216-ம். சூத்திரத்தில்
வந்த வகவலி லொட்ட லங்காரமாகத் திருக்காவலூர் நாயகி வெளிப்படா தொழித் தவட்
கேற்ற வுவமைப் பொருளைக் கூறியவாறு காண்க. அன்றியும்,

அவ்வலங்காரவிரிவுவருமாறு:- தண்டியலங்காரம். - "அடையும் பொருளு மயல்பட
மொழிதலு, மடைபொது வாக்கியாங்ஙன மொழிதலும், விரவததொடுத்தலும்
	


252


	விபரீதப் படுத்தலு, மெனநால் வகையினு மியலுமென்ப." என்றாராகலின். (வ-று.)
"வெறிகொ ளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவிற், குறைபடு தென்றெட்டுங் குறுகு -
நிறைமதுச்சேர்ந், துண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதோர், வண்டாமரை பிரிந்த
வண்டு." எ-து. அடையும் பொருளுமயல்படமொழிந்தது. "ஒண்ணிலவு நீர்மைத்தா"
யென்ற செய்யுள் அடைபொதுவாய் பொருள் வேறுபட்டது. "தண்ணளிசேர்ந் தின்சொன்
மருவுந் தகைமைத்தா, யெண்ணிய மெப்பொருளு மெந்நாளு - மண்ணுலகில், வந்து
நமக்களித்து வாழு முகிலொன்று, தந்ததான் முன்னைத் தவம்." எ-து. அடைவிரவிப்
பொருள் வேறுபட்டது. "கடைகோ லுலகியற்கை காலத்தின் றீங்கா, லடைய வறிதாயிற்
றன்றே - யடைவோர்க், கருமை யுடைத்தன்றி யந்தேன் சுவைத்தாய்க், கருமை விரவாக்
கடல்." எ-து. விரவத்தொடுத்தல். பிறவுமன்ன. எ-று. (19)
 
345. 	அவநுதி யென்ப வாய்மெய் மறுத்துமற்
றிவறிய வொன்றனை யேற்றி யியம்பலே
யுருவகங் கூட்டி னொண்சிறப் பாகும்.
 
     (இ-ள்.) அவநுதியலங்காரமாமாறுணர்த்துதும். எடுத்தபொருள் மிக த்தோன்ற
வதற்குள்ள சிறப்பியல்குண முதலா யவற்றினுண்மை மறுத் தெதிர்மறையாக
மற்றொன்றனை யுரைப்ப தவநுதியலங்கார மெனப்படும். தண்டியலங்காரம். -
"சிறப்பினும் பொருளினுங் குணத்தினு முண்மை, மறுத்துப் பிறிதுரைப்ப தவநுதி யாகும்."
என்றார். (வ-று.) "நறைகமழ் தார் வொட்டார் நலனளித்து நாணு, நிறையு நிலைதளரா
நீர்மை - யறநெறிகுழ், செங்கோல னல்லன் கொடுங்கோலன் றெவ்வடுபோர், வெங்கோப
மால் யானை வேந்து." எ-து. சிறப்பவநுதி. "நிலனாம் விசும்பா நிமிர்காலாந் தீயா,
மலர்கதிராம் வானா மதியா - மலர்கொன்றை, யொண்ணறுந் தாரா னொருவ னுயிர்க்
குயிரா, யெண்ணிறந்தா னெப்பொருளுமாம்." எ-து. பொருளவ நுதி.
"மனுப்புவிமேல்வாழ மறைவளர்க்கு மார்ப, பனித்தொடையற் பார்த்திவர்கோ
னெங்கோன் - றனிக்கவிகை, தண்மைநிழற் றன்று தற்றொழுத பேதையர்க்கு, வெண்மை
நிழற்றாவி விடும்." எ-து. குணவவநுதி. அன்றியும், இதனோ டுருவகங் கூட்டிற்
சிறப்பாம். (வ-று.) "பொங்களக மல்ல புயலே யிவையிவையுங், கொங்கை யிணையல்ல
கோங்கரும்பு - மங்கைநின், மையரிக் கண்ணல்ல மதர்வண்டிவை யிவையுங், கையல்ல
காந்தண் மலர்." எ-து. வண்டல்ல கருங்கண்ணென் றுவமை மறுப்ப துண்மை யுவமை
யெனவும், கண்ணல்ல வண்டென்று பொருளைமறுப்ப தவநுதி யுருவக மெனவுங் கண்டு
கொள்க. எ-று. (20)
 
346. 	ஊகாஞ் சிதமென்ப வுரிமை யொழித்துமற்
றாகோர் குறிப்பொரு ளறைந்து பொருத்தலே.
	


253


	(இ-ள்.) ஊகாஞ்சித வலங்காரமாமாறுணர்த்துதும். எடுத்த பொரு ட்கண்
ணியல்பாயின வற்றைக் கூறினு மவற்றிற்குரிய காரணத்தையொ ழித்து மற்றொன்றன்
சிறப்புத் தோன்றக் கவி தான் கருதிய மற்றொரு காரணத்தைக் கூறுவது ஊகாஞ்சித
மெனப்படும். இதனைத் தற்குறிப் பேற்ற மென்பாரு முளர். என்னை. ஊகாஞ்சித
மெனினுந் தற்குறிப் பெ னினு மொக்கும். அஞ்சித மெனினும் பொருத்த மெனினு
மொக்கும். (வ-று.) "மண்படிதோட் கிள்ளி மதயானை மாற்றரசர், வெண்குடைக்கே
வைத்த வெகுளியான் - விண்படர்ந்து, பாயுங்கொ லென்று பனிமதியம் போல்வதூஉந்,
தேயுந் தெளிவிசும்பி னின்று." எ-து. பெயர் பொருள். "வேனில் வெயிற்குலர்ந்த
மெய்வெறுமை கண்டிரங்கி, வானில் வளஞ் சுரந்த வண்புயற்குத் - தானுடைய, தாதுமே
தக்க மதுவந் தடஞ்சினை யாற், போதுமீ தேத்தும் பொழில்." எ-து. அல்பொருள். -
தண்டியலங் காரம். - "பெயர்பொரு ளல்பொரு ளெனவிரு பொருளினு, மியல்பின்
விளைத்திற னன்றி யயலொன்று, தான்குறித் தேற்றுத றற்குறிப் பேற்றம்." இது
மேற்கோள். எ-று. (21)
 
347. 	நுட்பமாந் தெளிவுற நுவலாத வற்றையு
முட்படுத் திடுங்குறிப் புரையரி துணர்த்தலே.
 
     (இ-ள்.) நுட்பவலங்காரமாமாறுணர்த்துதும். எடுத்த பொருளை வெளிப்படக்
கூறாததுவே தோன்ற வுவமை யாலாயினு முன்பின் வருவதைக் கொண்டாயினு மதனைக்
காட்டுங் குறிப்பினை யுரைப்பது நுட்பமெனப்படும். (வ-று.) வெண்பா. - "வற்றிய
நீர்ப்பொய்கை மலர்கண் டறிந்தணுகப், பற்றியமாண் பற்றிலர்தம் பாலுறவே - மற்றுவரி,
சேர்ந்தகல வெய்யோன் செழும்பொய்கைத் தாமரைகண், டோர்ந்தகல்க நீச ருறவு."
என்பதிதனுட் சான்றோ ருறவு துன்பம் வரினு மெந்நாளு மாறாதெனவு நீசருறவு நில்லா
தொரு பொழு தெல்லையுண் மாறு மெனவுங் குறிப்பிற் காட்டியவாறு காண்க. "பாடல்
பயிலும் பனிமொழிதன் பணைத்தோள், கூடலவாறிற் குறிப் புணர்த்து - மாடவர்க்கு,
மென்றீந்தொடை யாழின் மெல்லவே தைவந்தா, ளின்றீங் குறிஞ்சி யிசை." எ-து.|
தொழில். - தண்டியலங்காரம். - "தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினு,
மரிதுணர் வினைத்திற நுட்ப மாகும்." இது மேற்கோள். எ-று. (22)
 
348. 	புகழ்மாற் றென்ப புகழ்வது போலிகழ்ந்
திகழ்வது போற்புகழ்ந் தியம்பிய நிலையே.
 
     (இ-ள்.) புகழ்மாற் றலங்காரமாமாறுணர்த்துதும். ஒன்றனைப் புகழ்ந்தாற்போல
வதனைப் பழித்தலும் பழித்தாற்போல வதனைப் புகழ்தலுமென விருவகையும்
புகழ்மாற்றெனப்படும். (வ-று.) வெண்பா. - "உள்ளலும் பின்னுறச்சீ ருய்த்திரவுதீர்
மழைபெய், வள்ளலுனை யென்பார் வாழ்த்தறியார்-வெள்வேலோய்,
	


254


	பொய்வல்லா ரென்று பொதுமாதர் மார்பீயாய், மொய்வல்லார்க் கீயாய் முதுகு." எ-து.
பழித்தாய் போலப் புகழ்ந்தது. - வெண்பா. - "ஏனையோர் கைப்பொருட்கொண்
டேற்றல்லா லுன்பொருளைத், தானிடா யென்றார்பொய் தாமுரைத்தார் - வேனெவர்க்கு,
மண்டா திரவா தளவின்றி யெந்நாளு, நுண்டாதர வீவாய் நோய்." என்பது புகழ்ந்தாற்
போலப் பழித்தது. - குறள். - "எற்றிற் குரியர் கயவ ரொன் றுற்றக்கால், விற்றற் குரியர்
விரைந்து." என்பதிதுவும் புகழ்ந்தாற்போலப் பழித்தது. பிறவுமன்ன. - தண்டியலங்காரம்
- "பழிப்பது போலும் பான்மையின் மேன்மை, புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி".
இது மேற்கோள். எ-று.
 
349. 	தன்மேம் பாட்டுரை தான்றற் புகழ்தலே.
 
     (இ-ள்.) தம் மேம்பாட்டுரை யலங்காரமாமாறுணர்த்துதும். ஒரு வன் றனக்கு
மேம்பாட்டாகத் தோன்றத் தன்னைத்தானே புகழ்வது தன் மேம்பாட்டுரை யெனப்படும்.
(வ-று.) - வெண்பா. - "எஞ்சினா ரில்லையெனக் கெதிரா யின்னுயிர்கொண், டஞ்சினா
ரஞ்சாதுபோ யகல்க - வெஞ்சமத்துப், பேராத வராகத் தன்றிப் பிறர்முதுகிற், சாரா
வென்கையிற் சரம்." எ-ம். "யானு மென்னெஃகமுஞ் சாலு மவனுடை, யானைக்குஞ்
சேனைக்கு நேர்." எ-ம். பிறவுமன்ன. - தண்டியலங்காரம். - "தான்றற் புகழ்வது தன்
மேம் பாட்டுரை." இது மேற்கோள். எ-று. (24)
 
350. 	பின்வரு நிலையே பிறழ்ந்தெனப் பலவயின்
முன்வருஞ் சொல்பொருள் பின்னும் வருவதே.
 
     (இ-ள்.) பின்வரு நிலையலங்காரமாமாறுணர்த்துதும். மேற்சொன்ன
மடக்கணிபற்றிய வொழுங்கில்லாமையு முன்னர்வந்த சொல்லாயினும் பொருளாயினும்
பின்னர் பலவிடத் தலைவரிற் பின்வரு நிலையலங்கார மெனப்படும். (வ-று.) வெண்பா. -
"மலர்விழியே வாய்மலரே வாய்ந்த வதன, மலரேகை கண்மலரே வாடா - மலர்மாலை,
யானா ளிருண்மாலை யற்றா ளருண்மாலை, தானாந் தனிக்கன்னித் தாய்." எ-து.
சொற்பின் வருநிலையாகையின் சொல்லணியாமாயினும் பொருளானும்
வழங்குமிதுவென்றமை யாலிங்கண் வைக்கப்பட்டது. அன்றியும். - வெண்பா. -
"அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா, நெகிழ்ந்தன நேர்முகை முல்லை -
மகிழ்ந்திதழ், விண்டன, கொன்றை விரிந்த கருவிளை, கொண்டன காந்தள் குலை."
எ-து. பொருட்பின்வருநிலையலங்காரம். - "வைகலும் வைகல் வரக் கண்டு மஃது
ணரார், வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர், வைகலும் வைகற் றம்
வாழ்நாண்மேல் வைகுதல், வைகலைவைத் துணரா தார்." எ-து. சொற்
பொருட்பின்வருநிலை. "செங்கமல நாட்டஞ் செழுந்தாமரை வதனம், பங்கயமென்
செவ்வாய்ப் பதுமம்போற்-செங்கரங்க, ளம்போருகந் தாள ரவி ந்த மாரனார்,
தம்போருகந் தாடனம்." எ-து. பொருட்பின் வருநிலை. "மால் கரி காத்தளித்த
மாலுடைய மாலைசூழ், மால்வரைத்தோ ளாதரித்த மாலையார் - மாலிருள் கூர்,
	


255


	மாலையின் மால்கட லார்ப்ப மதன்றொடுக்கு, மாலையின் வாளி மலர்." எ-து.
சொற்பின்வருநிலை. - தண்டி யலங்காரம். - "முன்வருஞ் சொல்லும் பொருளும்
பலவயிற், பின்வரு மென்னிற் பின்வரு நிலையே." இது மேற்கோள். எ-று. (25)
 
351. 	முன்ன விலக்கென்ப முன்னத்தின் மறுத்தலே.
 
     (இ-ள்.) முன்னவிலக்கலங்காரமாமாறுணர்த்துதும். ஒன்றைச்சொல்லி மற்றதைக்
காட்டிய குறிப்பினான் மறுத்துவிலக்கல் முன்னவிலக்கலங்கார மெனப்படும். (வ-று.)
வெண்பா. - "இன்னுயிர்காத் தளிப்பாய் நீயே விளைவேனின், மன்னவனுங் கூற்றுவனும்
வந்தக்கா - லன்னோர், தமக்கெம்மைத் தோன்றா தகைமைத்தோர் விஞ்சை, யெமக்கின்
றருள்புரிந்தே யேகு." என்பதிதனுளுயிர்க்காவலனைப் போகச்சொன்னாற் போலாகிக்
காட்டி னகுறிப்பினாற் போதல்விலக்கினவாறு காண்க. - தேம்பாவணி. - "அளைவீ
ரவூழல் வைகி யாவி னஞ்சயிர்ந் தெஞ்ஞான்றுங், கொலைவீர வூழிச்செந்தீக் குளித்தலே
யின்பமாயின், வலைவீர வணியிற் பின்னி மலர்தவிழ் கூந்தல் வெஃகிப், புலைவீர
வுணர்ந்த தாமப் புணரியிற் குளிப்பாய் நெஞ்சே." எ-ம். "பாலன்றன துருவாயேழுலகுண்
டாலிலையின், மேலன்று நீகிடந்தாய்மெய் யென்ப - ராலன்று, வேலைசூழ் நீரதோ
விண்ணதோ மண்ணதோ, சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்." எ-து.
இறந்தகாலவினை விலக்கு. "முல்லைக் கொடி நடுங்க மொய்காந்தாள் கைகுலைப்ப,
வெல்லையின் வண்டெழுந் திரங்கவே - மெல்லியன் மேற், றீவாய் நெடுவாடை வந்தாற்
செயலறியேன், போவா யொழிவாய் பொருட்கு." எ-து. எதிர்காலவினை விலக்கு. "மாதர்
நுழை நுசுப்பு நோவ மணிக்குழைசேர், காதின்மிசை நீலங் கைபுனைவீர் - மீதுலவு,
நீணீல வாட்க ணிமிர்கடையே செய்யாவோ, நாணீலஞ் செய்யு நலம்." எ-து. நிகழ்கால
வினை விலக்கு. அன்றியும்.
 
     அவ்வலங்கார வேறுபாடு வருமாறு:- தண்டியலங்காரம். - "பொருள்குணங்
காரணங் காரியம் புணரும்." என்றாராகலின். (வ-று.) "கண்ணு மனமுங் கவர்ந்தவ
ளாடிடமென், றண்ண லருள மடையாளந் - தண்ணிழலின், சுற்றெல்லை கொண்டுலவுஞ்
சோதித் திரளல்லான், மற்றில்லைகாணும் வடிவு." எ-து. பொருள் விலக்கு. 'மாதர்
துவரிதழ்வாய் வந்தென் னுயிர் கவருஞ், சீத முறுவ லறிவழிக்கு - மீதுலவு, நீண்ட
மதர்விழியு நெஞ்சங்கிழித் துலவும், யாண்டையதோ மேன்மை யவர்க்கு." எ-து.
குணவிலக்கு. "மதரரிக்கண் சிவப்ப வார்புருவங் கோட, வதரந் துடிப்ப வணிசேர் -
நுதர் வியர்ப்ப, நின்பா னிகழ்வனகண் டஞ்சாதா லென்னெஞ்ச, மென்பாற் றவறின்மை
யான்." எ-து. காரணவிலக்கு. "மன்னவர் சேயா மயில் கவி யாடலுறும், பொன்னலருங்
கொன்றையும் பூந்தளவின் - மென்மலரு, மின்னுயிரா நீண்முகிலு மெய்யென்று
கொள்வதே, யென்னுயிரே பின்னு முளது." எ-து. காரியவிலக்கு. அன்றியும்,
	


256


	அவ்வலங்காரவிரிவுவருமாறு:- தண்டியலங்காரம். - "வன்சொல்வாழ்த்துத்
தலைமை யிகழ்ச்சி, துணைசெயன் முயற்சி பரவத முபாயங், கையற லுடன்படல் வெகுளி
யிரங்க, லைய மென்றாங் கறிந்தனர் கொளலே." என்றாராகலின், வன்சொல்
விலக்கென்பது வன்சொற் சொல்லிவிலக்குவது. (வ-று.) "மெய்யே பொருண்மேற்
பிரிதியேல் வேறொரு, தையலை நாடத்தகு நினக்கு - நெய்யிலைவேல், வள்ளல்பிரி
வற்றம்பார்த் தெங்கள் வாழ்நாளைக், கொள்ளா வுழலுமாங் கூற்று." எனவரும். வாழ்த்து
விலக் கென்பது. "செல்லுநெறி யனைத்துஞ் செந்நெறி யாக, மல்கு நிதியும் வளஞ்சிறக்க
- வெல்லு, மடற்றேர் விடலையகன் றுறைவதாங்கோ, ரிடத்தே பிறக்கவே யாம்."
எனவரும். தலைமைவிலக்கென்பது:- தன்பாற்றலைமை தோன்றக் கூறிவிலக்குவது.
(வ-று.) "பொய்மை நெறிநீர் பொருளுமிகப் பயக்கு, மெம்முயிர்க்கும் யாது மிடரில்லை -
வெம்மைதீர்ந், தேக லினியநெறி யணிய வென்றாலும், போக லொழிதி பொருட்கு."
எனவரும். இகழ்ச்சி விலக்கென்பது:- எதுவிகழ்ந்து விலக்குவது. (வ-று.) "ஆசை
பெரிதுடையே மாருயிர்மே லப்பொருண்மே,லாசை சிறிது மடைநிலமாற் - றேசு, வழுவா
நெறியின் வருபொருண்மே லண்ண, லெழுவா யொழிவா யினி." எனவரும்.
துணைசெயல் விலக்கென்பது:- துணை செய்வார்போலக் கூறிவிலக்குவது. (வ-று.)
"விளைபொருண்மே லண்ணல் விரும்பினையே லின்றெங், கிளையழுகை கேட்பதற்கு
முன்னே - விளைதேன், புடையூறு பூந்தார்ப் பொலங்கழலோய் போக்கிற், கிடையூறு
தோன்றாமு னேகு." என வரும். முயற்சி விலக் கென்பது:- முயற்சி தோன்றக் கூறி
விலக்குவது. (வ-று.) "மல்லணிந்த தோளா யிதென்கொலோ வான்பொருண்மேற்,
செல்கவிரைந் தென்றனுளந் தெளிந்து - சொல்லுதற்கே, யென்று முயல்வல்யா னேகனீ
யென்றிடையே, தொன்றுகின்ற தென்வாயிற் சொல்." எனவரும். பரவச விலக்கென்பது:
தன்வசமல்லாமை கூறி விலக்குவது. (வ-று.) "செல்கை திருவுளமேல் யானறியேன்
றேங்கமழ்தார், மல்லகலந் தங்கு மதர்விழியின்-மெல்லிமைகண், ணோக்கம் விலக்குமென
நோமிவள் காதல், போக்கி யகல்வாய் பொருட்கு" என வரும். உபாய விலக்கென்பது:-
விலக்கு மதனை யுபாயங் காரணமாக விலக்குவது. (வ-று.) "இன்னுயிர் காத்தளிப்பாய்
நீயே யிளைவேனின், மன்னவனுங் கூற்றுவனும் வந்தணைந்தா - லன்னோர்,
தமக்கெம்மைத் தோன்றா தகைமைத்தோர் விஞ்சை, யெமக்கின் றருள்புரிந்தே யேகு."
எனவரும். கையறல் விலக்கென்பது:- வேண்டிய பொருண்மேன் முயலு மொழுக்க
மின்மை தோன்றக் கூறுவது. (வ-று.) "வாய்த்தபொருள் விளைத்த தொன்றில்லை
மாதவமே, யார்த்த வறிவில்லை யம்பலத்தே - கூத்துடையான், சீல மறிந்தேயுஞ்
சிந்தியேன் சென்றொழிந்த, காலம் வறிதே கழித்து." எனவரும்.
உடம்படல்விலக்கென்பது:- உடம் பட்டாரைப்போல விலக்கிக்கூறுவது. (வ-று.) "அப்போ
தடுப்ப தறியே னருள்செய்ய, விப்போ திவளு மிசைக்கின்றா - டப்பில், பொருளோ
புகழோ
	


257


	தரப்போ வாமாலை, யிருளோ நிலவோ வெழும்." எனவரும். வெகுளிவிலக் கென்பது:-
வெகுளிதோன்றக் கூறிவிலக்குவது. (வ-று.) "வண்ணங் கருக வளைசரிய வாய்புலர,
வெண்ணந் தளர வெதிர்நின்று - கண்ணின்றிப், போதல் புரிந்து பொருள்காதல்
செய்வீரால், யாதும் பயமிலேம் யாம்." என வரும். இரங்கல் விலக்கென்பது:- இரங்க
றோன்றக் கூறி விலக்குவது. (வ-று.) "ஊச றொழிலிழக்கு மொப்புமயிலிழக்கும்,வாசஞ்
சுனையிழக்கும் வள்ளலே தேசு, பொழிலிழக்கு நாளையெம் பூங்குழல் விட்டேகி,
லெழிலிழக்கு மந்தோ விதண்." எனவரும். ஐயவிலக்கென்பது:- ஐயுற்றதனை விலக்குவது.
(வ-று.) "மின்னோ பொழிலின் விளையாடு மிவ்வுருவம், பொன்னோ வெனுஞ்சுணங்கிற்,
பொற்கொடியோ - வென்னோ, திசையுலவுங் கண்ணுந் திரண முலையுந் தோளு,
மிசையிருளுந் தாங்குமோ மின்.' எனவரும். எ-று. (26)
 
352. 	சொல்விலக் கொன்றனைச் சொல்லிய பின்னஃக
தல்லென மறுத்தல்போ லதுமிக விளக்கலே.
 
     (இ-ள்.) சொல்விலக்கலங்காரமாமாறுணர்த்தும். புகழினு மிகழினுந் தானே
யுரைத்தசொல் லாராயா துரைத்தன்மறுத்து மற்றதின்மிக்க பிறிதொன் றுரைப்பது
சொல்விலக் கலங்கார மெனப்படும். (வ-று.) - வெண்பா. - "தானைவேந் தென்பான்றான்
றானமா யொன்றீயான், யானென் றொன் றீயா னவனென்றே - னேனையவர்,
கொள்பொருள் கொள்வான் குடியலைத்து நோயீவான், றெள்பொரு டேற்றாச் சினத்து."
எ-ம். - விருத்தம். - "பண்முலை சுரந்த கீதப் பாலொடு வளர்ந்தேன் காமன்,
பெண்மொழி தவறிற் றன்றோ பெரிதுடன் றுயிரை யுண்ட, திண்மனக் கொடிய கூற்றன்
சிதையநான் வளர்த்தேன் பட்ட, புண்மனத் தழுந்தி யாற்றாப் புலம்பு வே
னாளுமென்றான்." எ-ம். பிறவுமன்ன. எ-று. (27)
 
353. 	இலேசமே கருத்தொளித் திடவதைக் காட்டுஞ்
சத்துவம் பிறிதிற் சாற்றி மறைத்தலே.
 
     (இ-ள்.) இலேசவலங்காரமாமாறுணர்த்துதும். மனத்திற் கருதிய வற்றை
வெளிப்படுக்கும் புறத்தடையாளங்கள் பிறிதொன்றால் வந்தன வாகக்கூறித்
தன்கருத்தினை மறைப்ப திலேச மெனப்படும். (வ-று.) - வெண்பா. - "மதுப்பொழிதார்
மன்னவனை மால்கரிமேற் கண்டு, விதுப்பு மயிரரும்பு மெய்யும் - புதைத்தாள், வளர்வா
ரணநெடுங்கை வண்டுவலை வாய்த்த, விளைவாடை வந்ததே னின்று." எ-ம்.
மனவேட்டையா லாயது மறைத்தவாறு காண்க. அங்ஙனம், புகழ்வதுபோலப் பழித்தலும்
பழிப்பதுபோலப் புகழ்தலு மிலேச மென்மனார் சிலரே. - தண்டியலங்காரம். - "குறிப்பு
வெளிப்படுக்குஞ் சத்துவம் பிறிதின், மறைத்துரை யாட லிலேச மாகும்." இது
மேற்கோள்.
 
     அவ்விலேசத்தின் பாற்படுஞ் சிலவலங்காரங்கள் வருமாறு:- தண்டி யலங்காரம். -
"புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும், பழிப்பது போலப்
	


258


	புகழ்புலப் படுதலு, மவையு மன்னவென் றறைந்தன ருளரே." என்றாராகலின். (வ-று.) "மேய கலவி விளைபோழ்து மெல்லென்னுஞ், சாய றளராமற் றாங்குமாற் - சேயிழையாய், போர்வேட்ட மேன்மைப் புகழாளன் யான் விரும்புந், தார்வேட்ட தோள்விடலை தான்." இது புகழ்வது போலப் பழித்தது. - "ஆடன் மயிலியலி யன்பனணி யாகங், கூடுங்கான் மெல்லென் குறி யறியா-ளூட, லிளிவந்த செய்கை யீர்வாளன் யாண்டும், விளிவந்த வேட்கை யிலன்." இது பழிப்பதுபோலப் புகழ்ந்தது. எ-று. (28)
 

354.
	சுவையணி யென்ப சுடுஞ்சினங் காமம்
வியப்ப வலமிழிவச் சம்வீர நகையென
வெண்மெய்ப் பாட்டி னியைவன கூறி
யுண்மெய்ப் பாட்டை யுணர்த்தித் தோற்றலே.
 
     (இ-ள்.) சுவையலங்காரமாமாறுணர்த்துதும். நெஞ்சங் கடுத்த வற் றைக்காட்டும் புறக்குறி விரித்துக் கூறல் சுவை யலங்கார மெனப்படும். அவையே சினமுதலாக நகையீறாகவைத்த வெண்மெய்ப்பாட்டெனக் கொள்க. அவற்றிற்கு வடமொழி நூலார் சாந்தங்கூட்டி யிவ்வலங்காரத்தை நவ ரசபாவமென்மனா ரென்றுணர்க. அன்றியுஞ் சினமெனினு முருத்திர மெனினுமொக்கும். (வ-று.) "கைபிசையா வாய்மடியா கண்சிவவா வெய்துயிரா, மெய்குலையா வேறாய் வெகுண்டெழுந்தான் - வெய்யபோர்த், தார்வேய்ந்த தோளான் மகளைத் தருகென்று, போர்வேந்தன் றூதிசைத்த போது." இது சினம். "திங்கணுதல் வெயர்க்கும் வாய்துடிக்குங் கண்சிவக்கு, மங்கைத்தளிர் நடுங்குஞ் சொல்லலையுங் - கொங்கைப், பொருகாலு மூடிப் புடைபெ யருங்காலு, மிருகாலு மொக்கு மிவட்கு." இது காமம். "முத்தரும்பிச் செம்பொன் முறித்தைந்து பைந்துகிரின், றொத்தலர்ந்து பல்கலனுஞ் சூழ்ந் தொளிருங் - கொத்தினதாம், பொன்னேர் மணிகொழிக்கும் பூங்கா விரிநா டன், றன்னேர் மொழியுந் தரு." இது வியப்பு. "கழல்சேர்ந்த கால்விடலை காதலிமீ தீண்டு, மழல்சேர்ந்து தன்னெஞ் சயர்ந்தான் - குழல்சேர்ந்த, தாமந் தரியா தசையுந் தளிர்மேனி, யீமம் பொறுக்குமோ வென்று." இது அவலம். "முடைதலையு மூளையு மூன்றடியு மென்புங், குடருங் கொழுங்குருதியும் மீர்ப்ப - மிடைபெய், பெருநடஞ்செய் பெற்றித்தே கொற்றப் போர்க்கிள்ளி, கருடரைச் சீறுங் களம்." இது இழிவு. "கைந்நெரித்து வெய்துயிர்த்துக் காறளர்ந்து மெய்பனிப்ப, மையரிக்கண் ணீர்ததும்ப வாய்புலர்ந்தா - டையல், சினவேல் விடலையாற் கையிழந்த செங்கட், புனவேழ மேல்வந்த போது." இது அச்சம். "சேர்ந்த புறவி னிறைதன் றிருமேனி, யீர்ந்திட் டுயர்துலைதா னேறினா - னேர்ந்த, கொடைவீர மோமென் னிறைகுறையா வன்கட், படைவீர மோசென்னி பண்பு." இது வீரம். "நாண்போலுந் தம் மனைக்குத் தான்சேற லென்னீன்ற, பாண்போலும் வெவ்வழலிற் பாய்வதூஉங் - காண்டோழி, கைத்தலங்கண் ணாகக் கனவுகாண் பானொருவன், பொய்த்தலைமுன் னீட்டி யற்று." இது நகை. எ-று. (29)
	


259


	355. 	உதாத்தம் பொருளிற் பதார்த்த மிகலே.
 
     (இ-ள்.) உதாத்த வலங்காரமாமாறுணர்த்துதும். கேட்போர் வியப்புறத்தன்
பொருட்டன்மையின் மேலுஞ் சொற்பயன் மிக்கக் கடந்துரைப்ப துதாத்த வலங்கார
மெனப்படும். (வ-று.) "முன்னி னாரெலாம் பின்னுறக் காதலினு முடுகி.' எ-ம்.
'பேதைநொந் தழுதகண்ணீர் பெருங்கடல்வெள் ளமாற்றா.' எ-ம். 'வச்சிர மலையினு
மனத்தி னாண்மையான்.' எ-ம். வரும். அன்றியும், "கன்றும் வயவேந்தர் செல்வம்
பலகவர்ந்து, மென்றும் வறியோரிடர் கவர்ந்து - மொன்று, மறிவரிதாய் நிற்கு மளவினதா
லந்தோ, செறிகதிர்வேற் சென்னி திரு." இது செல்வமிகுதி. "மண்ணன்று தன்கி ளையி
னீங்கி வனம்புகுந்து, பண்ணுந் தவத்தியைந்த பாத்தனா - ரெண்ணி றந்த, மீதண்டர்
கோன்குலையும் வெவ்வசுரர் வேரறுத்தான், கோதண்ட மே துணையாய்க் கொண்டு."
இது உள்ளமிகுதி. - தண்டி யலங்காரம். - "வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமு,
முயற்சிபுனைந் துரைப்ப துதாத்த மாகும்." இது மேற்கோள். எ-று. (30)
 
356. 	ஒப்புமைக் கூட்ட மொத்த குணத்தவை
செப்பித் தன்பொரு டெளிவுறக் கூறலே.
 
     (இ-ள்.) ஒப்புமைக் கூட்ட வலங்கார மாமாறுணர்த்துதும். எடுத்த பொருளை
விளக்கவதனோடு நற்குணத்தானுந் தீக்குணத்தானு மொத்தபலவற்றைக் கூட்டி
யொருப்படக் கூறுவ தொப்புமைக் கூட்ட மெனப்படும். (வ-று.) திரிகடுகம். - வெண்பா.
- "கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனு, முள்பொருள் சொல்லாச்
சலமொழி - மாந்தரு, மில்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர், வல்லே மழைவிலக்குங்
கோள்." எ-து. தீயகுண வொப்புமைக் கூட்டம். - காசிகாண்டம். - "வேத மோதிய
வேதியர்க் கோர்மழை, நீதி மன்னர் நெறிதனக் கோர்மழை, காதன் மங்கையர் கற்பினுக்
கோர்மழை, மாத மூன்று மழையெனப் பெய்யுமே." எ-து. நற்குண வொப்புமைக்
கூட்டம். இருமொழி மாலை. - வெண்பா. - "ஓதல் சடை நீட்ட லூண்மறுத்த னீராடல்,
கோதுளத்துக் கொண்டக்கா லின்னாதே - யேதின், மனத்தூய்மை கையீகை
வாய்வாய்மை மூன்றுந், தவத்தூய்மை சாரி னினிது." என்பதிருகுண ஒப்புமைக் கூட்டம்
பிறவுமன்ன. - தண்டியலங்காரம். - "கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத்,
தொருபொருள் வைப்ப தொப்புமைக் கூட்டம்." இது மேற்கோள். அன்றியும்,
 
     அவ்வலங்கார விரிவு வருமாறு:- தண்டி யலங்காரம். - "புகழினும் பழிப்பினும்
புலப்படு மதுவே." என்றாராகலின், (வ-று.) "பூண்டாங்கு கொங்கைப்போர் வெற்குழை
பொருப்புந், தூண்டாத தெய்வச் சுடர்விளக்கு - நாண்டாங்கும், வண்மைசால்
சான்றவருங் காஞ்சி வளம்பதியு, முண்மையா லுண்டிவ் வுலகு." இது புகழ்.
"கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனு, முள்பொருள் சொல்லாச் சலமொழி
- மாந்தரு,
	


260


	மில்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர், வல்லே மழைவிலக்குங் கோள்." இது பழிப்பு.
எ-று. (31)
 
357. 	ஒப்புமை யேற்ற மொன்றற்கொன் றுமிகச்
செப்பிய பலவின்மேற் செய்பொரு ளேற்றலே.
 
     (இ-ள்.) ஒப்புமை யேற்ற வலங்காரமாமாறுணர்த்துதும். வைத்த பலவடி யேறினாற்
போல நற்குணத்தானுந் தீக்குணத்தானு மொன்றற்கொன்று மிக்கதாகப் பலவற்றைக்கூறி
யெல்லாவற்றிலு மேற் றானெடுத்த பொருளே நிற்பதாகக் கூறுவ தொப்புமை யேற்ற
மெனப்படும். ஆகையிற் செய்த வுருவ முயர்ந்த குறட்டி லேற்றிக் காட்டினாற் போல
வாகு மென்றறிக. (வ-று.) - வெண்பா. - "பயனில் சொல்லின்னா மிக்கின்னா
மெய்ப்பாட்டி, னயனில்சொன் னன்னாடா தன்னை - வியந்தனசொல், லாங்கின்னா
பின்னின்றே யம்புற்சொல் லம்மூன்றி, னூங்கின்னா வாழு முயிர்க்கு." பிறவுமன்ன.
எ-று. (32)
 
358. 	விபாவனை யென்ப விளங்கிய வுலக
சுபாவனை யலத்திறந் தோற்றி யியம்பலே.
 
     (இ-ள்.) விபாவனை யலங்காரமாமாறுணர்த்துதும். உலகினி னொ ழுக்கத்தேற்ற
காரணமொழிய நீக்கி யியல்பினானுங் குறிப்பினானும் பிறி தொரு காரணந் தோன்ற
வுரைப்பது விபாவனை யெனப்படும். என்னை, விபாவனை யெனின மொழுக்கவின்மை
யெனினு மொக்கும். (வ-று.) "பூட்டாத விற்குனித்துப் பொங்குமுகி லெங்குந், தீட்டாத
வம்பு சிதறுமால்." - தேம்பாவணி. "பாயா வேங்கை யையென்புழிப் பைம்பூ, வீயாப்
புண்டரீக மெனவெண்ண, லாயாப் பேதமையாம் பகைகொ, லோயாக் கோல்வழு வோகட
னென்றான்." எ-ம். "தீயின்றிவேந் தமியோர் சிந்தை செழுந்தேன்றல், வாயின்றி
மஞ்ஞை மகிழ்தூங்கும் - வாயிலா, ரென்றிச்சிலரூட றீர்ந்தா ரமரின்றிக், கன்றிச்
சிலைவளைத்த கார்." எ-து. காரண விபாவனை. "கடையாமே கூர்த்த கருநெடுங்கண்
டேடிப், படையாமே போந்தன பாவாய் - கடைஞெமியக், கோட்டாமே கோடும்புருவங்
குலிகச்செப், பாட்டாமே சேந்த வடி." எ-து. இயல்புவிபாவனை. "பூட்டாத விற்குனித்துப்
பொங்க முகி லெங்குந், தீட்டாத வம்பு சிதறுமா - லாட்டமாய்க், காணாத கண்பரப்புந்
தோகை கடும்பழிக்கு, நாணாத யாத்தார் நமர்." எ-து. வினையெதிர்மறுத்துப் பொருள்
புலப்படுத்த விபாவனை. "காரண மின்றி மலையா னிலங்க னலு, மீரமதி வெதும்ப
லென்னிமித்தங் - காரிகையார்க், கியாமே தளர வியல்பாக நீண்டனகண், டாமே
திரண்ட தனம்." எ-து. பொதுவகையாற் காரணம் விலக்கிக் காரியம் புலப்படுத்த
விபாவனை. "பாயாத வேங்கை மலரப் படுமதமாப், பூவாத புண்டரிக மென்றெண்ணி -
மேவும், பிடிதழுவி மாறதிருங் கானிற் பிழையால், வடிதழுவு வேலோன் வரவு." எ-து.
வேறுபாட்டு விபாவனை. - தண்டி யலங்காரம். - "உலகறி காரண
	


261


	மொழித்தொன் றுரைப்புழி, வேறொரு காரண மியல்பு குறிப்பின், வெளிப்பட
வுரைப்பது விபாவனை யாகும்." இது மேற்கோள். எ-று. (33)
 
359. 	விசேட மெனக்குறை விளம்பி யவற்றான்
மேன்மை படப்பொருள் விளக்கிய நெறியே.
 
     (இ-ள்.) விசேட வலங்காரமாமாறுணர்த்துதும். எடுத்த பொருட் குக் குணத்தானுந்
தொழிலானும் பொருளானு முறுப்பினானுங் குறைபா டுள்ளதாகக் காட்டி யக்குறை
காரணமாக வதற்கு மேன்மை தோன்ற வுரைப்பது விசேட மெனப்படும். (வ-று.)
வெண்பா. - "யானை யிரதம் பரியா னிவையில்லைத், தானு மனங்கன் றனுக்கரும்புந் -
தேனார், மலரு மம்பாயினு மார னமர்செய், துலகு கைக்கொண்டா னொருங்கு." எனப்
பொருட் குறையு முறுப்புக் குறையுஞ் சொல்லி மேம்பாட்டுரைத்தவாறு காண்க.
பிறவுமன்ன. எ-று. (34)
 
360. 	விரோத மென்ப விகற்ப முரண்படு
மன்னிய சொற்பொரு ளுன்னிய மாக்கலே.
 
     (இ-ள்.) விரோத வலங்காரமாமாறுணர்த்துதும். மாறுபட்ட சொ ல்லும் பொருளு
மொன்று பட்டியலும்படி வைத்துரைப்பது விரோதவல ங்கார மெனப்படும். இதுவே
செய்யுளிலக்கணத்துண் முரண்டொடை யென்று வழங்கு மென்றுணர்க. (வ-று.)
"உருவில்லா னுருவாகி யுலகிலொரு மகனுதிப்பக், கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தா
யாயினையே." எ-ம். வெண்பா. - "தந்தையை யீன்றதாய் தான்றாயுங் கன்னியுமாய்,
வந்தியையுங் காவலூர் வந்தேத்திச் - சிந்தையெழக், காலையு மாலையுங் கைகூப்பிக்
காறொழுதான், மேலை வினையெல்லாங் கீழ்." எ-ம். "சோலை பயிலுங் குயின் மழலை
சோர்ந்தடங்க, வாலு மயிற்கணங்க ளார்த்தெழுந்த - ஞாலங், குளிர்ந்த முகில்கறுத்த
கோபஞ் சிவந்த, விளர்ந்த துணைப்பிரிந்தார் மெய்." எ-ம். "காலையு மாலையுங்
கைகூப்பிக் காறொழுதான், மேலை வினையெல்லாங் கீழ வாங் - கோலக்,
கருமான்றோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப், பெருமானைச் சிற்றம் பலத்து."
எ-ம். வரும். "இனமா னிகல வெளியவே யென்னும், வனமேவு புண்டரிகம் வாட்டும் -
வனமார், கரியுருவங்கொண்டு மரிசிதறக் காயும், விரிமலர்மென் கூந்தல் விழி." இது
சிலேடை விரோதம். தண்டிலங்காரம். - "மாறுபடு சொற்பொருண் மாறுபாட் டியற்கை,
விளை வுதர வுரைப்பது விரோத மாகும்." இது மேற்கோள். எ-று. (35)
 
361. 	பிறிதுரை யணியே பெருந்துயர் முதற்காட்ட
முன்னிலை யாரொடு மொழித லொழித்துப்
பன்னிலை யாரொடு பகர்த லென்ப.
 
     (இ-ள்.) பிரிதுரை யலங்கார மாமாறுணர்த்துதும். ஒருவரை முன் னிலையாகப்
பேசுங்காலை யவர்களை நீக்கி யகன்றவராயினு நல்லறிவில்லா
	


262


	விலங்கு - பறவை - மலை - மர - முதலியவாயினு முன்னிலையாகப் பேசுவது
பிறிதுரை யலங்கார மெனப்படும். (வ-று.) - விருத்தம். - "மின்னென மிளிர்ந்து நீங்கி
வீய்ந்தவான் சொல்லீர் சொன்மின், பொன்னென மலிசீ ரென்னப் புகழென வுலகிற்
பன்னாட், கொன்னெனத் தேடி வைத்த கொழும் பொரு ளொடுவாழ் நாளு, மன்னென
வீங்கொன் றுண்டோ மருண்டநாந் தெளிய வென்றான்." - என்பதிதனு ளுயிரிறந்
தாரைப் பேசினவாறு. - தேம்பாவணி. - "துள்ளிவா ழுழைகாள் கொம்பிற் றுன்னிவாழ்
குயில்கா டூய்தே, னள்ளிவா ழளிகா டேன்கா ளழனிறக் கமலப் பைம்பூம், பள்ளிவா
ழோதி மங்காள் பறித்துவாழ் கொடிகாள் கோற, லுள்ளிவாழ் வரிகாள்சொ ன்மின்
னுயிர்தரித் தலிற்றீ துண்டோ." என்பதிதனுள் விலங்கும் பறவையு மென் றிவற்றோடு
பேசினவாறு. - தேம்பாவணி. - "என்னெஞ் சொப்ப விருபொழுதும் விருட்பொழிலே,
புன்னெஞ் சொப்ப வுயிரெல்லா நிழற் றுயருட், டன்னெஞ் சொப்பத் தந்தோம்
புந்தயைப் பெருமா, னின்னெ ஞ்சொப்ப நிறுத்தினையேக் காடென்றான்." என்பதிதனுட்
டிருமக னக ன்றுதுயராற் சூசை நொந்தொரு சோலையைப் பேசினவாறு:- அங்ஙனந்
தன்னெஞ்சாயினுந் தன் கண் முதலிய வுறுப்புகளாயினு முன்னிலையா கப்பேசுவ திவ்
வலங்கார மாகும். அங்கேதானே யகன்றமகற்குத் தாயும் வருந்திச் சொன்னதாவது:-
"கயலரம் விழியே கடலரமவனை, யயலா டலிலா கியகன் றன்னே, யியலாத விடுக்க
ணியைந் தினிநா, னுயலாம் விழியொன் றுளதே லுரையீர்." என்பதிதனுட்டன்
கண்ணோக்கிப் பேசி னவாறு. பிறவுமன்ன. எ-று. (34)
 
362. 	விடையில் வினாவே விடைவேண் டாமையு
மடைய லாரையு மஃறிணை யவ்றையு
மனவியப் பாதி வழங்கப் பலகுணம்
வினவினாற் போல விளம்பிய நிலையே.
 
     (இ-ள்.) விடையில் வினாவலங்காரமாமாறுணர்த்துதும். மறுமொழி வேண்டாமையு
முன்னிலை யல்லாரையு மறிவில வற்றையும் வினாவினாற் போல வுரைப்பது விடையில்
வினாவணி யெனப்படும். இதுவே யதிசயமு மையமு மகிழ்ச்சியுஞ் சினமு
முதலியவற்றைக் காட்டவு மொன்றனை மறுப்பவு நொந்து புலம்பவு முதவு மென்றுணர்க.
(வ-று.) விருத்தம். - "கண் பட் டுறங்கவென் னிறையோன் கண்டேனோ கண்டணைத்
தேனோ, பண்பட் டினிய மழலைச்சொற் பகர வினிதிற் கேட்டேனோ, புண்பட் டுளை
யென் னெஞ்சுவப்பப் பூங்கண் ணென்மேன் மலர்ந்தனவோ, வெண்புட் டிறப்ப
வுயிர்செலவோ வென்மே லிரங்குந்தயை யிதுவோ." என்பது மகிழ்ச்சி வினாவணி. -
விருத்தம். - "கெட்டோ நாமோ மின்னென வொல்கிக் கெடுநன்றி, யிட்டோ நாமோ
விட்டதி னிஃதோ பயனந்தோ, பட்டோ நாமோ புன்னய நக்கிப் பரவீட்டை, விட்டோ
நாமோ வேகு துரைமோ வெனவேவார்." என்பதிதனுண் ணணுகி நொந்தார் புலம்பிய
வினாவணி.
	


263


	"களிப்பனோ வழுவனோ கனிய தானெனை, விளிப்பனோ சுளிப்பனோ விழைந்த
வாண்முக, மொளிப்பனோ தழுவிய வுவப்பின் முத்தமு, மளிப்பனோ வுலகெலா மளித்த
நாதனே." என்பதைய வினாவணி. பிறவுமன்ன. எ-று. (37)
 
363. 	வினவில் விடையே வினவினா லெனப்பிறர்
மனவுணர் வுரைத்து மறுவுரை கூறலே.
 
     (இ-ள்.) வினவில்விடை யலங்காரமாமாறுணர்த்துதும். ஒன்றை யு ரைக்குங்காற்
பிறரெதிர் பிறிதொன்றை யுணர்ந்து வினாவினதாகச் சொல்லித் தன்பொருள் விளங்க
மறுமொழி யுரைப்பது வினவில் விடையணி யெனப்படும். (வ-று.) தேம்பாவணி. -
"காதலே பாசமாய்க் கால்கை வீக்குத, லாதலே பிரிவுனக் கரியதா மென்பாய், காதலே
பாசமாய்க் காதன் மிக்குளத், தாதலே நாடொறு மிறுக்க லாவதேன். - கொந்திய
விரகநோய் கொழுந்து விட்டெரிந், தந்தில வழலவிப் பரியதா மென்பாய், கொந்தியதீ
யுலை தூண்டிக் கொண்டுநீ, யந்தில நசைக்கற லீட்ட லாவதேன். - நெடிதுநா
ளுற்றநோய் மருந்தி னீர்மையாற், கடிதுநீர் தரலருங் கருமமா மென்பாய், நெடிதுநா
ளுற்றநோய் நீள மீண்டுயிர், கடிதுமாய்ந் தொழிதரக் கடுவுண் பாவதேன்." எ-ம்.
பிறவுமன்ன. எ-று. (38)
 
364. 	சித்திர வணியே தீட்டிய படவடி
வத்திறத் தனைத்தையு மையென வகுத்தலே.
 
     (இ-ள்.) சித்திர வலங்காரமாமாறுணர்த்துதும். காதலுணர்ந்தவை கண்ணாற்
கண்டாற் போலப் பிறர் தெளிந்துணர்வுற நுட்பவிபரத் தெடு த்தபொருளை விரித்துக்
காட்டல் சித்திர வலங்கார மெனப்படும். - நைடதம். - "அவிர்பூ ணொலியா மலடக்
கினளாய்க், கவர்வான் வரல்கண் டும கன் றிலதாற், றுவர்வாய் மயிறொட் டிடலாகு
மென, நவைதீ ரனமெல்ல நடந் ததுவே." எ-ம். - தேம்பாவணி. - "புலம்பு மோதையி
னொந்தெனப் பொன்னிடச், சிலம்பு மேல்வலச் சீறடி யூன்றிவிற், கலம்புனைந்த
பொற்காலயற் பொன்மலைத், தலம்புனைந்த மின் சாயலொத் தாளரோ. - துகிற் கலாபமூ
டொன்ற விளிம்பெடுத், துகிற்கொ டாலயர் கிள்ளி யுதிர்த்தடு, மகிற்கு லாம்புகை
தூதுவிட் டங்குழன், முகிற்கு லாமினின் மின்முகங் கோட்டுவாள்." எ-ம். பிறவுமன்ன.
இதற்கு மீண்டுச் சித்திர வணியைக் காண்க. அன்றியும், இதற்கு மிதன்மேற் கூறிய
சுவையலங்காரத்திற்கும் வேற்றுமை யாதெனி லது மனத்தினிகழ்ந்த பற்றினை மாத்திரம்
புறத்துத் தோன்றுங் குறிகளால் விரித்துக் காட்டலியல்பாம். அச்சித்திரமோவெனி
லெவ்வகைப் பொருளுங் கண்முன் வைத்தாற்போல நுட்பமாகக் காட்டு
மியல்புடைத்தாகுமென்றுணர்க. - தண்டியலங்காரம். - "கோமூத் திரியே கூட சதுக்க,
மாலை மாற்றே யெழுத்து வருத்தனை, நாக பந்தம் வினாவுத் தரமே, காதை காப்பே
கரந்துறைச் செய்யுள், சக்கரஞ் சுழிகுளஞ் சருப்பதோ பத்திர, மக்கரச் சுத்தமு மவற்றின்
பால." இது மேற்கோள். எ-று. (39)
	


264


	365. 	ஒழிபணி பலவற்றை யொழித்தன வுரைத்தலே.
 
     (இ-ள்.) ஒழிபலங்கார மாமாறுணர்த்துதும். தன் பொருள் விளக்க
ற்குரிய பற்பலவற்றை யுரைக்க மாட்டா தொழித்தாற் போல வவற்றைச் சுருங்கக்காட்ட
லொழிபணி யெனப்படும். (வ-று.) - வெண்பா. - "நூன லமுஞ் சீர்நலமு நொந்தொன்னா
ரேற்றியதன், வேனலமு மாற்றா விளம்பனே - தேனலமுண், டீன்ற வருண்முகிற்கை
யெங்கோன் கொடையொன்றே, தோன்ற வுரைப்பேன் றொழுது." எனப் புகழொழிபணி.
- வெண்பா. - "உள்பொருள் சொல்லா யுளைவார்கண் டொன்றீயாய், கொள்பொருள்
வெஃகிக் குடியலைப்பா - யெள்பொரு, ளின்னா வினிதென்பா யிஃசிறிய மெய்க்கடவு, டுன்னாப் பகைப்பானென் சொல்." என விகழ்பொழி பணி. பிறவுமன்ன. எ-று. (40)
 
366. 	அமைவணி யல்லவு மாமென் றதுபோற்
சமைந்து மற்றொன்றன் றகவெழ வியம்பலே.
 
     (இ-ள்.) அமை வலங்கார மாமாறுணர்த்துதும். நன்மை யல்லனவு மெய்யல்லனவும்
பிறர்க் குபகாரமாய் நல்லவாகவு முள்ளவாகவு மொப்பித்தாற்போலமைந்து
பிறதொன்றனை மிக்குரைத் தொறுத்த லமைவணி யெனப்படும். (வ-று.) - வெண்பா. -
"பொய்யுங் களவும் புறக்காமத் தீதி ழிவு, நையு முயிர்க்கே நவையன்றோ - செய்யுன்,
குலத்துரிமை யென்றா யுள தெனினுஞ் செந்தீத், தலத்துரிமை தானோ வுனக்கு." எ-ம்.
பிறவுமன்ன. எ-று. (41)
 
367. 	சிலேடை யென்ப திரிசொல் பலவிணைந்
திருபய னாக வொருதொடர் புரைத்தலே.
 
     (இ-ள்.) சிலேடை யலங்காரமாமாறுணர்த்துதும். பல பொருள்குறி த்த வொரு
சொல்லாகிய திரிசொற் கொண்டிருபயனைக் கொள்ளும்பா ட்டை முடிப்பது சிலேடை
யெனப்படும். (வ-று.) - வெண்பா. - "பாடல மேறிப் பகைக்கிள்ளை யார்த்தோட்டிச்,
சேடலர்தன் பூத்த தினைகாத்தா - னாட்க, மார்ந்த கவிகையால் யாதனையு மாங்கோட்டி,
யோர்ந்துறைமே லுற்றா னொளி." என்பதிதனிற் பாடல மரத்திலேறிக் கிளிகளைக்
கூப்பிட் டோட்டிப் பூத்த தினைப் புனங்காத்தா னெனவுந் துவரங்காட்டி னிறைந்த
குரங்குகள் யாவையுங் கையா லோட்டினா னெனவு மொரு பயனாகக் கொண்டு
பின்னையுங் குதிரையேறி பகைவர் பரிப்படையைப் பொருதோட்டித் தன்னாட்டுச்
சிறுமை காத்தா னெனவு மளித்த பொன்னிறைந்த கொடையாலாங் கில்லாம்படி
துன்பங்களையு மோட்டினானெனவும் வேறொ ருபயனாகக் கொள்ளவும் பெறுமெனக்
காண்க. அன்றியும். - விருத்தம் - "கனிநிழல்பூத் தருந்தருநான் கடுத்தும் மூன்றுங்
கழித்துக்காய் தளிர் மேய்ந்து சவலை யோடைக், கினிதவழ்தே னாண்மலர்பஃ
றொடையே சூடி யியைவெள் ளித்தளைக் குறட்கொம் பிடைத்தூண் வைத்த,
	


265


	தளிநிலை நேரிசைச் சிந்துமூம் மதத்தாற் சாயளி யின்னிசை பாட வெள்ளை யானை,
நனிவளர் மாபுக ழேந்தி வீரபா கடைத்த வுயர்தென் மலையக் கோட்டிற் கண்டேன்."
என்பதிதனுட் சொன்ன பொருளெலா மொரு பயனாகக் கொண்டாலியானைக்
குரியவாகவு மவை மற்றொரு பயனாகக் கொண்டா லுவமைச் சிறப்பின் வெண்பாவிற்
குரியவாகவும் பயன்படு மெனக் கண்டுணர்க. இதுவே சிலேடை யுவமை யெனப்படும். -
"ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி, தெரிவுதர வருவது சிலேடை யாகும்."
என்றா ரன்றியும்,
 
     அச்சிலேடை யலங்கார விரிவுவருமாறு. - தண்டி யலங்காரம் - "அதுவே,
செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்." என்றார். செம்மொழிச் சிலேடையாவது:-
ஒருவகையா னின்று பலபொருள் படுவது. (வ-று.) "செங்கரங்களா லிரவு நீக்குந்
திறம்புரிந்து, பங்கைய மாதர் நலம்பயிலப் - பொங்குதையத், தோராழி வெய்யோ
னுயர்ந்த நெறியொழுகு, நீராழி சூழ்ந்த நிலத்து." எனவரும். பிரிமொழிச் சிலேடை
யாவது:- ஒருவகையானின்ற சொல்லைப் பிரித்துத் தொகை வேறுபடுத்தும் பலபொருள்
கொள்ளப்படுவது. (வ-று.) "தள்ளா விடத்தோ தடந்தாமரை யடைய, வெள்ளாவரி
மானிடர் மிகுப்ப - வுள்வாழ்தேஞ், சிந்துந் தகைமைத்தே யெங்கோன்றிருவுள்ள,
நந்துந்தொழில் புரிந்தார் நாடு." என வரும். அன்றியும், - தண்டி யலங்காரம். -
"ஒருவினை பலவினை முரண்வினை நியம, மநியம விலக்கு விரோத மவிரோ தமென,
வெழுவகை யானு மியலுமென்ப." என்றாராகலின், ஒருவினைச்சிலேடையாவது:-
ஒருவினையான் வருவது. (வ-று.) "அம்பொற் பணைமுகத்துத் திண்கோட் டணிநாகம்,
வம்புற்ற வோடை மலர்ந்திலங்க - வும்பர், நவம்புரியும் வானதியு நாண்மதியு நண்ணித்,
தவம்புரிவார்க் கின்பந் தரும்." என வரும். பலவினைச்சிலேடையாவது:- பலவினையான்
வருவது. (வ-று.) "தவிர்வின் மதுவுண்களி தளிர்ப்ப நீண்டு, செவிமருவிச் செந்நீர்மை
தாங்கிக் - குயிலிசையு, மின்னுயிரார் நுண்ணிடையார் மென்னோக்கு மேவிலா,
ரின்னயிரை யீர்க்கின் றன." என வரும். முரண்வினைச் சிலேடையாவது:- மாறுபட்ட
வினையான் வருவது. (வ-று.) "மாலை மருவி மதிதிரிய மாமணஞ்செய், காலத்துணை
மேவலார் கடிய - வேலைமேன், மிக்கார்கலி யடங்கா தார்க்கும்வியன் பொழில்கள்,
புக்கார்கலி யடங்கும் புள்." எனவரும். நியமச் சிலேடையாவது:- சிலேடித்த வற்றை
நியமஞ் செய்வது. (வ-று.) "வெண்ணீர்மை தாங்கு வனமுத்தே வெறியவாய்க்,
கண்ணீர்மை சோர்வ கடிபொழிலே - பண்ணீர்மை, மென்கொ லியாழே யிரங்குவன
வேல்வேந்தே, நின்கொ லுலாவு நிலத்து." என வரும். நியமவிலக்குச் சிலேடையாவது:-
சிலேடித்த பொருளை நியமஞ்செய்த நியமத்தை விலக்குவது. (வ-று.) "சிறைபடுவ
புட்குலமுந் தீம்புனலு மன்ன, விறைவனீ காத்தளிக்கு மெல்லை - முறையிற், கொடியன
மாளிகையுங் குன்றமுமே யன்றிக், கடிகமழ்பூங் காவு முள." எனவரும். விரோதச்
சிலேடையாவது:- சிலேடித்த வற்றைப்
	


266


	பின்னரும் விரோதிப்பச் சிலேடிப்பது. (வ-று.) "விச்சாதர னெனினு மந்தரத்தின்
மேவானா, லச்சுதன் வண்ணத்தின் மாயனா - னிச்ச, நிறைவான் கலையான களங்கநீதி,
யிறையா னனகனெங் கோன்." என வரும். அவிரோதச் சிலேடையாவது:-
முன்னர்ச் சிலேடித்த பொருளைப் பின்னரும் விரோதியாமற் சிலேடிப்பது.
"சோதி யிரவி கரத்தா னிரவொழிக்கு, மாதிடத் தான் மன்மதனை மாற்றழிக்கு - மீதா,
மனக மதிதோற்றிக் குமுதளிக்குந், தனத னிருநிதிக்கொன் றான்." எனவரும்.
பிறவுமன்ன. எ-று. (42)
 
368. 	சங்கீரண மென்ப தகும்பல வணிவகை
கொங்கீரத் தொடையெனக் கூட்டிக் கூறலே.
 
     (இ-ள்.) சங்கீரண வலங்கார மாமாறுணர்த்துதும். மேற்கூறிய வல ங்காரங்களிற்
பலவுந் தம்முட்கலந்து கூடிவரத் தாமுரைப்பது சங்கீரண வணி யெனப்படும். (வ-று.)
திருக்காவலூர்க்    கலம்பகம்.   -   வெண்பா.  -   'காந்தடகை கஞ்சத்தாள்
காவிக்கண்ணாம்பல்வாய், வேய்ந்தலர்ந்த காவலூர் மென்கொடையே - யீந்தமது,
வுண்ணளிகாள் சொன்மினீ ரொத்து ளதோ பூவுலகிற், பண்ணளிப்பூத் தீந்தேன்
பனித்து." என்பதிதனு ளுருவகமு மொட்டும் விடையில் வினாவும் பிறிதுரையுமென
விவ்வலங்காரங்கள் கலந்து கூடி வந்தவாறு காண்க. அன்றியும், "தண்டுறை நீர்நின்ற
தவத்தா லளிமருவும், புண்டரிக நின்வதனம் போன்றதா - லுண்டோ,
பயின்றா ருளம்பருமே பான்மொழியாய் பார்மேன், முயன்றான் முடியாப் பொருள்"
எனவரும் - தண்டி யலங்காரம். - "மொழியப் பட்ட வணிபல தம்முட்,டழுவ வுரைப்பது
சங்கீ ரணமே." இது மேற்கோள். எ-று. (43)
 
369. 	சொல்லணி யாறைந்தும் பொருளணி யையாறும்
புல்லணி யிருவகை புணர்ந்த தொகையென
முத்தமிழ்க் கிவையெலா முகமறை சிகைபொறை
யத்தகைத் தாகா வணிகல னாகக்கொண்
டெந்நூற்கு முதலாம் யுத்தி யஃதில்லா
லந்நூல் பித்த னகங்கை வாளென்ப.
 
     (இ-ள்.) இவ்வதிகாரத்துள் விளக்கிய சொல்லணி முப்பதும் பொரு ளணி முப்பது
மியலிசை நாடக மென்னு முத்தமி ழழகுறப் புனைதற்குரி யன. ஆயினு மொளிதரு
மின்மணி குயிற்றிய வணிகலன் றாமு மிருளுற விருகண் மூடிவரின் மாசென
வகற்றல்போல விவ்வணி வகையானுந் தானுரைக்கும் பொருட்கிரு ளுறாமைபேணி
யின்னதற் கின்ன துரிய தெனவு மின்னதற்குரிய விடமின்ன தெனவு முணர்ந்து கூருதல்
சான்றோர் கடனெனக் கொள்க. அன்றியுந் திருமணி யணிகல னாயினு மொழுங்கு மின்றி
மட்டு மின்றித் திரளாய்த் திரட்டிக் குவித்தது தலைச்சுமையாக வெடுத் தல் சிங்கார
மன்றதுபோல விவ்வகைய வணிகளும் பொருட்குப் பாரமாக்குவிந் தேற்றாம லணிகலனா
யலங்காரந்தோன்ற வரைவு மிகாமலு மொழுங்
	


267


	கு கெடாமலு மவற்றை வகுத்துப் பூணல் வேண்டும். இவற்றிற் கெல்லாம் யுத்தியே
முதற் காரணமாக வேண்டிற் றென்றஃ தில்லாதாயிற் கற்றநூலெலாந் தன்னைக்
கொல்வதற் கேதுவாக நிற்கும் பித்தன்கைப் பிடித்தவாளே யொக்கு மென்மனார்
புலமையின் மிக்கோரெனக் கண்டுணர்க. எ-று. (44)
 
370. 	எந்நூ னிலையினு மியைபெலா முணர்த்துது
மந்நூ லரியதென வஃ கினு மொறு நூல்
காட்டிய பலநடைக் கடைப்பிடித் தவற்றொடு
கூட்டிய மற்றவை கொள்ப நல்லோரென
வெழுத்துச் சொற்பொருள் யாப்பணி யென்றிவண்
வழுத்திய வைம்பொருள் வழக்கஞ் சுருக்கித்
தொன்னூ னடையொடு சிறந்த புறநிலைப்
பன்னூ னடையிற் பழையன கழிதலும்
புதியன புகுதலும் புலமையின் மிக்கோர்
விதியென விம்முறை விரும்பி வழுவில
முந்நூல் விளக்கிய முத்தமிழ்த்
தொன்னூல் விளக்கந் துலங்கிய வாறே.
 
     (இ-ள்.) எவ்வகைநூலினு மவ்வவற்றுரியன வெல்லாவற்றையு முழுதுரைத் திறுவது
முற்றுணர்ந் தோர்க்கு மேலாவருமையாகையி லிங்கணு ரைத்தவைப் பற்றுக்கோடாகக்
கொண்டுரையா தனவு முணர்வ தறிவோர் தொழிலெனக் கொள்க. அன்றியுந்
தொன்னூலை விளக்கிய புதுநூலாக வீண்டுச் சொல்லப்பட்ட வைந்திலக் கணவழியே
தொன்மையிற் செந்தமிழ் நூலில் வழங்கிய சிற்சில வொழிப்பினு மின்று மந்நூலிற்
புதியன சிற்சில விதிப்பினு மவையெலாங் காலவேற்றுமையானும் புறநிலை நூலின் வழி
வந்தமையானும் வழுவென் றிகழப்படாவென நன்னூற் கலைவல்லோன் முதற் றொன்னூற்
புலவருள்ளும் பலரென்றுணர்க. எ-று. (45)
 

இரண்டாமோத்துப் பொருளணியியல். - முற்றிற்று.

.................................

அதிகார மொன்றிற்கு ஓத்திரண்டிற்கு ஆக சூத்திரம். 70.
மேற்கோள் சூத்திரம். 56. ஆக சூ. 126.
அதிகார மைந்திற்கு மேற்கோளோடு கூடிய ஆக சூத்திரம். 829.

.................................

ஐந்தாவது:-அணியதிகாரம்.-முற்றிற்று.
	


268


	மாணாக்கன் றொழுதுரைத்த வாறுகாண்க.
 
  	மெய்ப்பொரு ளொருபொருண் மேவி யேத்தவுஞ்
செப்பரு மறைப்பொரு டிசையெலாம் வழங்கவும்
வேதப் பயன்றரும் வெளிறில வாயா
லோதித் தொன்னூ லுடைப்பயன் பொதுப்படச்
செந்தமி ழுணர்ந்து தெளிந்த முன்னோர்
தந்த நடையொடு சிலபுற நடையியைந்
தெண்ணைந் தெழுத்துஞ் சொன்னூற் றிரண்டு
மெண்ணே ழிரண்டு பொருள்யாப் பொருநூறு
மெண்ணெட் டாறணி யெனச்சூத் திரத்தொகை
யெண்ணாற் பத்தைந்து மீரைந்து மாக
வருந்தமி ழிலக்கண மைந்தையும்
விரித்து விளக்கினன் வீரமா முனியே.
 

வெண்பா.
 
  	ஆதி நூலோதிய வோராதிப் பொருடேரா
னோதி நூலாய்ந்து முணர்வானோ - கோதினூற்
கற்றாலுங் கற்றபய னுண்டோ வக்கடவு
ளெற்றாலு மேத்தாக் கடை.

.............................

இந்நூற்குக் கலைவல்லவர் தெருட்குரு வென்னுஞ் சிறந்தநாமஞ்
சூட்டினர். அஃதென்னையோவெனின்:-
 

கட்டளைக்கலித்துறை.
 
  	அருட்கலைஞோர் முத்தமிழ் நூலுரைத்த வறமுதனாற்
பொருட்களை யாய்ந்துழி வல்லோர்தெரித்த புதைபொருளின்
மருட்களை நூக்கிப் பொருட்பயன் சூட்டி வழுத்துதலாற்
றெருட்குரு நாமந் தொன்னூல் விளக்கிற்குச் சிறந்ததுவே.

..............................

முன்னூற்றுளக்கிய வைந்திலங்கணத் தொன்னூல் விளக்கம்

முற்றிற்று.
	



 
	
சூத்திரம்.
	பக்கம்.

அ
அ இ உம்முதல் 	

70
அஇஉஎகசதநபமவவென் 	

210
அகவற்கரசர் 	

214
அகத்திணை யியல்பே 	

103
அகப்பொருள் 	

137
அகவற்றாழிசை 	

181
அங்கமாலையே 	

198
அசைநிலை பொருணிலை 	

136
அசையே நேர்நிரை 	

143
அடியென்பதளைத்த 	

149
அடியினைப்பொழிப் 	

160
அடிமறி மாற்றே 	

226
அடுக்கணி 	

232
அடைமொழி 	

21
அடைசினை 	

66
அட்டமங்கலம் 	

200
அணியெனச்சொல் 	

221
அண்மையினியல்பு 	

56
அதனோடைம்முதல் 	

50
அத்தந்திலன்றம்ம 	

93
அந்தாதியடிக்கடை 	

159
அமைவணியல்லவு 	

264
அம்முதலீராறு 	

7
அம்ஆம் என்பன 	

75
அம்போதரங்கம் 	

169
அருட்கலைஞோர் 	

268
அல்வழி 	

16
அவநுதியென்வாய்மெய் 	

252
அளவின்றொகையா 	

69
அளைமறி பாப்பே 	

225
அறப்புறங்காவலனைவார்க்கு 	

126
அறிவருளாசை 	

96
அன்ஆன்அள்ஆள் 	

60
அன்மை வினை 	

86